Friday, November 27, 2015

கேலண்டர் இல்லாட்டி என்ன? சாங்கிக்குப் போனால் தெரிஞ்சுறாதா ! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 97. கடைசிப் பகுதி )

அடுத்து வரப்போகும் பண்டிகை என்னன்னு தெரிஞ்சுக்கணுமுன்னா....  சிங்கை, சாங்கி விமானநிலையத்துக்குப் போனால் போதும்! இப்ப என்ன வரப்போகுது?  கிறிஸ்மஸ். தீபாவளி முடிஞ்ச கையோட அதுக்கான  அலங்காரங்களை எடுத்துட்டு ஏசுப்பாப்பா பர்த் டே கொண்டாட ரெடி ஆகிட்டாங்க.
 விழாக்கால வாழ்த்துகள் என்பதை ஏதுக்கு  ஜெர்மன் மொழியில் சொல்லி வச்சுருக்காங்கன்னுதான் புரியலை :-)

 ச்சும்மாச் சொல்லக்கூடாது....  அலங்காரங்கள் அத்தனையும் அருமை! ஏனோதானோன்னு செஞ்சு வைக்கிறதெல்லாம் இங்கே இல்லை. பார்த்ததும் நமக்கும் உற்சாகம் தொத்திக்குது!  மக்கள்ஸ் கூட்டம் இங்கேதான் நிறைய.  குட்டிப் பசங்களுக்கு லட்டு கொடுத்தாப்லெ ஒரு கொண்டாட்டம் :-)கொஞ்சநேரம் ரசிச்சு, க்ளிக்கிட்டு உள்ளே போயிட்டோம். மகளுக்கான சில அலங்காரப்பொருட்கள் வாங்கிக்கணும். சென்னைக்கிளையில் கிடைக்கலையேன்னு ரெண்டாவது டெர்மினலுக்குப்போய் வாங்கிக்கிட்டு, அங்கேயும் கொஞ்சமாச் சுத்திப் பார்த்துட்டு மூணாவதுக்குப் போனோம். ஸ்கை ட்ரெயின் தான் இருக்கே! நமக்கென்ன கவலை!


 போகும்போது கையில் இருந்த சிங்கைச் சில்லறைகளை  (பல பயணங்களில் சேர்ந்துபோனவை) நோட்டாக மாற்றியதில் கொஞ்சம்  எடுத்து  ஒரு கிளி வாங்கினேன்:-)   நெஞ்சிலும் , தலையிலும் கல்லு வச்ச து! கொலுவுக்கு ஆகுமுல்லே :-)


மூணாவது டெர்மினலில் இருக்கும் லவுஞ்சுப் போய் ஒரு கப்புச்சீனோ குடிச்சுட்டு  தூங்கிட்டார் நம்மவர். நான் வலை மேய்ஞ்சுக்கிட்டு இருந்தேன்.

  'போதும் தூங்குனது. கிளம்பி கொஞ்சம் ஆறுமணி வரை சரியான தூக்கம்.வேடிக்கை பார்த்துட்டுக் கேட்டுக்குப் போனால் சரியா இருக்கும்' என்றதால் ஃப்ரெஷப் பண்ணிக்கிட்டுக் கிளம்பிப்போய் குறித்த நேரத்தில்  விமானத்துக்குள் போயாச். வழித்துணைக்கு மோகமுள் கையில்.

சாப்பாடு வரும்வரை நேரம் போக்கிட்டுத் தூங்குனவள்தான் பொழுது விடியும் போதுதான் எழுந்தேன். நியூஸியை நெருங்குது விமானம்.  சதர்ன் ஆல்ப்ஸ் பார்த்ததும்  இன்னும் கொஞ்ச நேரம்தான்னு  மகிழ்ச்சி வரும். ராத்திரி ஃப்ளைட் என்பதால்  வேடிக்கை ஒன்னும் இல்லாமல் போரிங்காத்தான் இருக்கும் எப்பவும்.

இன்னும்  ரெண்டே வாரத்தில் சம்மர் எங்களுக்கு. ஆனாலும்  மலைகள் இன்னும் பனிப்போர்வைக்குள்ளேதான். இது ஒரு பயங்கர அழகு!

 அப்புறம் கேன்டர்பரி ப்ளெய்ன்ஸ், சதுரவயல்கள்... ஊரு வந்தே வந்துருச்சு.ஸ்மார்ட்கேட் வழியாப் போவது சுலபமா இருக்கு. பெட்டிகளுக்குத்தான் கொஞ்சநேரம் காத்திருக்க வேண்டியதாப் போச்சு. டிக்ளேர் பண்ண வேண்டிய ஐட்டங்களைத் தனிப்பையில் வச்சுக்குவார் நம்மவர் என்பதால் மற்ற பொட்டிகளைக் குடைய வேண்டிய வேலை நமக்கில்லை.


போனமுறை நாட்டுக்குள்ளேயும் வீட்டுக்குள்ளேயும்  வந்த  நார்த்தங்காய் உப்பு ஊறுகாய்க்கு, இந்தமுறை  நாட்டுக்குள் வர அனுமதி கிடைக்கலை. ப்ச்.....


டாக்ஸி பிடிச்சு வீட்டுக்கு வந்தோம். பெருமாள்  காத்திருந்தார்.  இப்ப மணி காலை பத்தே முக்கால். மாலை 4 மணி ஆனதும் போய் ஹாஸ்ட்டலில் இருந்து  நம்ம ரஜ்ஜூவைக் கூட்டி வந்தோம். மகள் 6 மணிக்கு வர்றேன்னு சொன்னாள்.
போனவருசம் போய்வந்த  இந்தியப்பயணம் 97 பகுதிகளா நீண்டுதான் போச்சு. இனி  ஒரு ரெண்டு மாசத்துக்கு  வெளியூர் பயணம் இல்லையாக்கும், கேட்டோ!


அப்ப அதுவரை?  உள்ளூர் சமாச்சாரம் ஏராளமா இருக்குல்லே :-))))

உடல் அலுப்பு இருந்தாலும் ஊர் போய் வந்தது  மனசுக்கு மகிழ்ச்சிதான்.

பொறுமையாக தொடர்ந்துவந்த வாசகப் பெருமக்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்! 


எத்தனை மனிதர்கள்! எத்தனை சம்பவங்கள்! எத்தனைஅனுபவங்கள்! எத்தனை கோவில்கள்!


பயணம் உள்ளத்துக்கு நல்லது. ஆதலினால் பயணம் செய்வீர்!!!


20 comments:

said...

ஒவ்வொரு பதிவிலும் அழகான புகைப்படங்களையும் அழகான செய்திகளையும் தந்து எங்களை வெவ்வேறு உலகிற்கு அழைத்துச் சென்று வருவதற்கு நன்றி. பயணத்தில் கிடைக்கும் சுகம் ஈடுஇணையற்றது. பல புதிய மனிதர்கள், இடங்கள், சூழல்கள், நிகழ்வுகள், பண்பாடு என பல நிலைகளில் பல புதியனவற்றை அறியவும் நம்மை மேம்படுத்திக்கொள்ளவும் நல்வாய்ப்பு. அத்தகைய ஓர் அமைப்பு தங்களுக்கு அமைந்ததறிந்து மகிழ்ச்சி. அதை நீங்கள் எங்களுடன் பகிர்ந்துகொள்வது மகிழ்வினைத் தருகிறது.

said...

அருமையான படங்களுடன் பயணம் வெகு சிறப்பு அம்மா...

said...

குடுத்து வச்சவங்க, ஹூம், நாம பெருமூச்சு உட்டுக்கவேண்டியதுதான்.

said...

துளசி மா
உங்களோட 4 வாரப் பயணத்தை இவ்வளவு விவரமாக ஒரு வருஷமா சொல்லி, படங்களாப் போட்டு நாங்களே கூட வந்த மாதிரி உணர வச்சிட்டீங்க, நன்றி மா
நாங்கள் மலைநாட்டுக் கோவில்களுக்குப் போகும் போது ரொம்ப உதவியாக இருக்கும் [நாங்கள் இது வரை 68 திவ்ய தேசங்களைத் தரிசித்து விட்டோம் ]
சீக்கிரமே சீர்காழி திவ்ய தேசங்களைத் தரிசித்து விட்டு வந்து விவரமாக எழுதுங்கள் மா
நாங்க காத்துக்கிட்டு இருக்கோம்

said...

வாவ் !! அழகான படங்கள்க்கா ..போட்டோ எடுத்த கைக்கு ரெண்டு வைர மோதிரம் தருமாறு ..கோரிக்கை கோபால் அண்ணாவிடம் வைக்கப்படுகிறது :))))

சிங்கப்பூரில் ஜெர்மன் எழுத்து ??ஒருவேளை காண்ட்ராக்ட் எடுத்திருக்கணும் ..willkommen //welcome கூட அங்கு ஜெர்மன் மொழியில் தானே இருக்கு ! ஜெர்மனியும் நெதர்லாந்தும் ஸ்பான்சர் செஞ்சிருப்பாங்க .
கிறிஸ்மஸ் முன்னாடியே ஜெர்மன்ஸ் தாய்லாந்துக்கும் சிங்கப்பூருக்கும் போயிருவாங்க நியூ இயற் முடிஞ்சிதான் த்திரும்புவாங்க

said...

http://www.mynewsdesk.com/sg/singapore-changi-airport/pressreleases/changi-airport-transforms-into-an-around-the-world-winter-wonderland-this-christmas-1083804


அது country-themed decorations அக்கா ..thats why its in deutsch

said...

அருமையான பயணம் நன்றாக முடிந்தது. யானை ஊஞ்சலும் ரஜ்ஜுவும் ரொம்பவே அழகு.
ஏஞ்சல் கொடுத்திருக்கும் விவரமும் நல்லா இருக்கு. படங்கள் சிங்கப்பூர் போக ஆசை வருது.
நன்றி துளசி.

said...

பயணம் உடலுக்கு நல்லது பர்ஸுக்கு பணத்துக்கு....?

said...

சிங்கப்பூர் விமான நிலையம் மூன்றாவது கட்டத்தில் இருக்கிறது. படிப்படியான முன்னேற்றம் மற்றும் காலத்திற்கேற்ப விரிவாக்கம் முக்கியமாக நவீன தொழில் நுட்பங்களுடன். இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் மூன்று கட்டத்திலும் நீங்க ரசித்துப் பார்த்த விசயங்கள் உள்ளது. இடைவிடாத உங்கள் எழுத்துப் பணிக்கு என் வாழ்த்துகள்.

said...

பயணம் பயணம்னு எம்.எஸ்.வி பாடுற பாட்டு ஒன்னு நினைவுக்கு வருது. நம்ம வாழ்க்கையே ஒரு பயணம் தானே. :)

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க என்ன செய்யமுன்னு சிங்கப்பூர் நல்லாவே தெரிஞ்சு வெச்சிருக்கு. ஒரு வாட்டி பாத்தது அடுத்த வாட்டி இருக்காது. சிங்கப்பூர்ல மாறாம இருக்குறது டைகர்பாம் கார்டன் தான். உலகம் சுற்றும் வாலிபன்ல சிக்குமங்கு சிக்குமங்கு பாட்டில் இருந்த மாதிரியேதான் இன்னைக்கும் இருக்கு. நல்லா பெயிண்ட் அடிச்சு மெயிண்டெய்ன் பண்றாங்க.

இரவு விமானப் பயணங்கள்ள தூங்குறதுதான் நல்லது. தூக்கம் வரலைன்னா சினிமா எதாச்சும் பாக்குறது.

நார்த்தங்கா ஊறுகா மேல அவங்களுக்கு என்ன கோவமோ...

ஊரெல்லாம் சுத்தினாலும் வீட்டுக்கு வரும்போது ஒரு நிம்மதி இருக்கத்தான் செய்யுது. Home Sweet Home.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

நீங்க சொல்வது அத்தனையும் ரொம்பச்சரி.
கூடவே வந்து பயணத்தை ரசித்தமைக்கு மனம் நிறைந்த நன்றிகள்.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

வாசித்து ரசித்தமைக்கு மனம் நிறைந்த நன்றீஸ்.

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

எதுக்குப் பெருமூச்சு? ஒவ்வொருவருக்கும் ஒரு விதப் பயணம் வாய்க்காமலா இருக்கு?

said...

வாங்க க்ருபாஸ்,

ஒவ்வொரு பயணத்திலும் கொஞ்சம் என்று ஏற்படுத்திக்கிட்டதால் இப்பெல்லாம் திவ்யதேச தரிசனம் போக முடியுது. இதை முந்தியே ஆரம்பிச்சு இருக்கலாம். ஆனால் எதுக்கும் வேளை வர வேணாமோ?
நமக்கும் இன்னும் நிறைய பாக்கி இருக்கு. பார்க்கலாம். பெருமாள் மனசு வைப்பாரான்னு!

said...

வாங்க ஏஞ்சலீன்,

சுட்டிக்கு நன்றீஸ்.

வைர மோதிரத்துக்குப் பதிலா ஒரு வைர ஒட்டியாணம் கேக்கலாமா? :-)

said...

வாங்க வல்லி.

சிங்கைக்கு ரெண்டு பேருமா சேர்ந்து போகலாமா?

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

செலவே செய்யாமல் வாழமுடியுமா? அதுலே பயணங்களுக்கும் கொஞ்சம் ஒதுக்கி வச்சுக்கணும். பெரிசா இருக்கணுமுன்னு அவசியமில்லை. சின்னச்சின்னப் பயணங்கள் எல்லோருக்கும் எப்போதும் கிடைச்சுக்கிட்டுத்தானே இருக்கு. அப்ப, கண்களையும் காதுகளையும் திறந்து வச்சாலே அனுபவங்கள் ஏராளமாக் கொட்டுமே! அனுபவங்களின் தொகுப்புதானே வாழ்க்கை.

said...

வாங்க ஜோதிஜி.

காலத்துக்கேற்ப மாறிவரும் நாடுகளில் ஒன்னு சிங்கை.

நம்ம நாட்டுலெ ச்சும்மாப் பழம்பெருமை பேசிக்கிட்டு இருக்காமல், அதையே சுற்றுலாப் பயணிகளுக்கான சொர்க்கமா மாத்திக்க நமக்குத் தெரியலை :-( கொஞ்சம் முயன்றால் நாட்டுக்குப் பணவரவு ஏராளம் என்பதை எப்போப் புரிஞ்சுக்கப் போறாங்களோ?

said...

வாங்க ஜிரா.

டைகர் பாம் கார்டனும் கூட 1985 இல் பார்த்ததுக்கும், 1991 இல் பார்த்ததுக்கும் நிறைய மாற்றங்கள் இருந்தது. அதுக்கப்புறம் போகவே இல்லை. ஒரு பயணத்தில் எட்டிப் பார்க்கணும். நல்லபடி பராமரிக்கிறாங்க என்பதே உண்மை.

இங்கே நியூஸியில் கூட வீடுகளை நல்லமுறையில் பராமரிப்பாங்க. அம்பது அறுபது வருச வீடுகள் கூட பளிச்ன்னு இருக்கும். நம்மூர்லே கிரகப்ரவேச சமயம் பெயிண்ட் அடிப்பதோடு சரி. அப்புறம் .... ப்ச் :-(

இரவுப் பயணங்களில் கூடுமானவரை தூங்குவதே வழக்கம். விமானத்துலேயும் விளக்கையெல்லாம் அணைச்சுடறாங்க. சுமாராத் தூங்கமுடியுது.

ஊர்சுத்தும் தேர் நிலைக்கு வர்றதைப்போலத்தான் நாமும், இல்லையா :-)

said...

பெருமாள் மனசு வைப்பார் துளசி மா
நாங்களும் மே 2௦13 இல் இருந்து தொடங்கி சென்ற மாதம் வரை 68 திவ்யதேசங்கள் முடிச்சிருக்கோம். 2௦13 தொடக்கத்தில் கூட இப்படித் தேடிச் சென்று தரிசிப்போம்னு நினைத்தது இல்லை. எல்லாமே பெருமாள் மனசு வச்சதால் தான் மா
நீங்க இப்ப சீர்காழி வரும் போது 18 திவ்யதேசங்கள் பார்க்க முடியும். நாங்க 17 தான் பார்த்தோம். ஒன்று சொதப்பிடுச்சி.