Wednesday, November 18, 2015

இன்னிக்கு முழுசும் 'இனி எப்போ?' ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 95)

அதென்னமோ வழக்கத்தைவிட சீக்கிரமாவே முழிப்பு வந்தது. இட்ஸ் கோயிங் டுபீ அ லாங் டே. அவசரப்படாம நிதானமா எதிர்கொள்ளணும் என்பதால்  படுக்கையில் கிடந்தபடியே காலையில் வரும் பக்தி நிகழ்ச்சிகளை கவனிக்க ஆரம்பிச்சேன். பெருமாள் நமக்கு சுப்ரபாதம் பாடிண்டு இருக்கார். இன்றே இப்படம் கடைசி, இல்லே?
அன்றைக்கு வேண்டிய துணிமணிகளையும், அடுத்த ரெண்டு நாட்களுக்கானவைகளையும் கேபின் பேகில் நேத்தே வச்சுருந்தாலும் கூட  ஒருமுறை பெட்டிகளை சரி பார்த்துட்டு 'யஹாங் ஸே வஹாங், வஹாங் ஸே யஹாங்'னு   நம்மவர் மாத்திக்கிட்டு இருக்கார். பிடிச்ச வேலையை செஞ்சுக்கிட்டுப் போகட்டும்!  சீனிவாசனையும் ஒன்பதரைக்குத்தான் வரச்சொல்லி இருக்கோம்.

கடமைகளை முடிச்சு, ப்ரேக்ஃபாஸ்ட் எடுத்துக்கிட்டுக் கிளம்பறோம்.
எப்பவும் கடைசி நாள் என்னும்போதே தலை சுத்த ஆரம்பிச்சுரும். முக்கியமானவர்களுக்கு,  போயிட்டு வாரேன் சொல்லணுமே!  முதலில்  நம்ம அனந்தபத்மநாபன்.  'சலோ அடையார்'ன்னு  போய், கும்பிட்டு  'விடை கொடு என் தோழா'ன்னு சொல்லுபோதே மளுக்....  கண்ணுலே  தூசி விழுந்துருச்சு.  இன்னிக்குப்பூராவும் இப்படித்தான் கண் நிறைய தூசிகளா இருக்கப்போகுது :-(


விலைவாசி உயர்வு ,கோவில் நோட்டீஸ் போர்டில் பளிச்ன்னு தெரிஞ்சது.  ஸேவை கட்டணங்கள்  (!) ஏறி இருக்கு. திருவோணத்தேர் அஞ்சு வருசத்துக்கு முந்தி ( நாம் ஒருமுறை இழுத்துருக்கோம்) ஆறாயிரம்தான். இப்போ பத்து!  தங்கத்தேரும்  ஆயிரம் என்பது ஆயிரத்து ஐநூற்றியொன்னு.(சாஸ்த்திரப்படி  பூஜ்ஜியமான எண் தரப்டாது இல்லையோ?)


பதிவை வெளியிடும் இன்று, திருவோண நக்ஷத்திரம்!   மாலையில் தேர் புறப்பாடு உண்டு.  உற்சவர் ரொம்பவே ஜொலிப்பார்! அலுங்காமல் நலுங்காமல் அவரைத் தேரில் ஏற்ற  சின்னதா ஒரு லிஃப்ட் கூட உண்டு!  காணக் கண் கோடி வேண்டும்! 

ஆனால் ஒன்னு, கோவில் நிர்வாகம் ரொம்பவே நல்ல முறையில் நடக்குது. சேரும் காணிக்கைகள், அரசு அறநிலையத்தார் கொள்ளையடிச்சது போக மீதி எல்லாம் கோவில் அபிவிருத்திக்கே செலவு செய்யப்படுவதால்  நல்ல முன்னேற்றங்கள்தான். ஒவ்வொரு  பயணத்திலும் நல்லதா நாலு சமாச்சாரம் கண்ணில் படுது இங்கே!

மேலே.... சித்தி, புத்தியுடன் புள்ளையார்!


இப்பப் புதுசா துலாபாரம் வச்சுருக்காங்க. ஒரு காலத்தில் துலாபாரம் என்றாலே அது குருவாயூர் கோவிலில் மட்டுமேன்னு இருந்துருக்கு!  நாங்களும்  மகளுக்காக வெண்ணெய் கொடுத்துருக்கோம்!

கடவுளுக்கு வேண்டிக்கிட்டு நாம் மனம் உவந்து காணிக்கை தர்றதில் பிரச்சனை இல்லை. ஆனால்  இதுக்கு இது, அதுக்கு அதுன்னு  லிஸ்ட் போட்டு வைப்பதுதான்  கொஞ்சம் மனக்குடைச்சல் எனக்கு. என்னமோ போங்க.....   இதுக்கு என்னன்னு தெரிஞ்சால்  எடைக்கு எடை அதைக் கொடுத்துருப்பேன்!
தற்சமய நிலவரத்தில் வியாபார அபிவிருத்தி  வேணாமுன்னு மக்கள்ஸ் இருப்பாங்கன்னு நினைக்கிறேன். போகட்டும்..... சாமியே இப்போ வியாபாரத்தில் இருப்பதால் அவருக்குப் பிரச்சனை  இருக்காது!

 அங்கிருந்து புறப்பட்டுப் பதிவர் நைன்வெஸ்ட் நானானி வீட்டுக்கு ஒரு விஸிட். வழக்கம்போல் இனிய வரவேற்பு. நம்மவரும், நானானியின் ரங்க்ஸும் ஒரே கல்லூரி, நாங்க ரெண்டுபேரும் பதிவர்கள் இப்படி ரெண்டு பக்கமும் சொந்தம் :-)

ஒவ்வொரு முறை போகும்போதும் சுவர் அலங்காரங்கள் ஒவ்வொருவிதம். இப்போ படங்களால் நிரம்பி இருக்கு!  என்ன இருந்தாலும் கைவேலைகளின் ரசிகையாச்சே அவுங்க!
ஆச்சுன்னு சொல்லிக்கிட்டுக் கிளம்புனோம். அடுத்த ஸ்டாப்...  நம்ம வல்லியம்மா வீடு! அவுங்களும் மறுநாள் கிளம்பறாங்க. மகர்களுடனும், தம்பியுடனும் கொஞ்சம் பேச்சு முடிஞ்சதும் எனக்கான கலெக்‌ஷன். மலர்மஞ்சம் அண்ட் முத்துமாலை ! கழுத்துலே இருக்கே பாருங்க:-)  இனி எப்போ? இனி எப்போ? ஹூம்.........

மயிலை  கபாலி கூப்புடராறோ இல்லையோ... சரவணபவன் கூப்புட்டுடுது:-) அதே... இனி எப்போ? வுடன் அங்கே போய்ச் சேர்ந்தோம் பகல் சாப்பாட்டுக்கு. மணியும் ஒன்னரை ஆச்சே!  இது காம்போவில் என்ன மீல்?  பெயர் நினைவில்லை...... போகட்டும். படம் பார்க்க:-)
பக்கத்துலே விஜயா ஸ்டோர்ஸ் வாவான்னு கூப்பிட்டாலும்,  'பொட்டியை மூடியாச்' என்பதால் நேரா அறைக்கு வந்தாச்சு.  நம்ம சீனிவாசனிடம்,  ட்ராவல்ஸ்க்குப்போய்  பெரிய வண்டி கொண்டு வரச் சொல்லிட்டோம். அப்படியே இன்று  இரவுவரை  வண்டிக்கு ஆன மொத்த செலவுக்கும்  பில் கொண்டு வரச் சொல்லியாச். நாலுமணிக்கு  ஸ்கார்ப்பியோவுடன் வந்தார்.

லோட்டஸுக்குக் கணக்கை செட்டில் பண்ணிட்டு, ட்யூட்டியில் இருக்கும் ப்ரியாவுடன் ஒரு க்ளிக்:-) சில வருசங்களா இவுங்களைத் தெரியுமே! ரங்கநாதன் ஊருக்குப் போயிருக்காராம்.

நேரா முகலிவாக்கம். நம்ம உறவினர்கள், நண்பர்கள் வீடெல்லாம் நம்ம சீனிவாசனுக்கு அத்துபடி!  அண்ணன் வீடுன்னதும் கரெக்ட்டாக் கொண்டு போயிருவார். ட்ராவல்ஸ், ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நல்ல விவரம்தான், இல்லே?

முந்தி (ஒரு பத்துபனிரெண்டு வருசங்களுக்கு முன்னே)   நான் தனியாகப் போகும் போதெல்லாம் ஸில்வர் பார்க், தி நகரில் தங்குவேன்.   வாசலில் எப்போதும் இருக்கும் ஒரு குறிப்பிட்ட ஆட்டோக்காரர் நமக்கு. காலை முதல்  மாலை  வீடு திரும்பும்வரை நமக்காக மட்டுமே வெளியே காத்துருப்பார்.  தினம் மாலை  ஒரு  தொகை  கொடுத்து செட்டில் செஞ்சுருவேன். அவர் பெயர் கணேஷ். அங்கே இருக்கும் மற்ற ஆட்டோக்காரர்கள் கூட, நம்ம தலையைப் பார்த்ததும் அவருக்குத் தகவல் சொல்லிருவாங்க:-)

  ஒருமுறை வண்டியில் ஏறி உக்கார்ந்து சாலிக்ராமம் என்றதும், 'மாமா வீட்டுக்குத் தானேங்க?'ன்னார் :-)))) நல்ல  மனுஷர். பத்திரமாக் கொண்டுபோய் பத்திரமாக் கூட்டி வருவது முக்கியம் இல்லீங்களா?  அவர் வீடு தாம்பரம். ஆனாலும்  காலை 9 மணிக்கு டான்னு ஸில்வர்பார்க் வாசலுக்கு வந்துருவார். 


 நானும் அண்ணியும்.  அண்ணின்னு சொன்னாலும், அவுங்க என்னைவிட ரொம்பவே சின்னவங்க,  வயசில். ஆனால் ரொம்பப் பெரியவங்க பொறுமையில்!

அண்ணன் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தோம். அன்றைக்கு  அண்ணனுக்குப் பிறந்தநாள். குழந்தைகள் தினம் :-)  காஃபி, பலகாரங்கள்னு உள்ளே தள்ளிக்கிட்டே  பாக்கி வச்சுருந்த பேச்சுகளை  பேசி முடிக்கப் பார்த்தோம். ஊஹூம்.... அப்பவும் பாக்கி இருக்கு!  ராத்திரி டின்னரும் அங்கேதான்.  இனி எப்போ? இனி எப்போன்னு  கண்ணில் விழுந்த தூசிகளைத் துடைச்சுக்கிட்டு ஒன்பது மணிக்குக் கிளம்பி  ஏர்ப்போர்ட். அண்ணன் கண்ணில் தூசி அதிகமா விழுந்தாப்ல ஒரு தோணல். குழந்தைகள் தினத்தில் பிறந்தவருக்குக் குழந்தை மனம்தான்!சீனிவாசனிடம் பில்லுக்கான காசோலை,  அவருக்கான அன்பளிப்பு எல்லாம்  கொடுத்துட்டு 'அடுத்த முறை எப்போ?'ன்னு அவர் கேட்டதுக்கு, 'தெரியலை. பெருமாள் கூப்பிடுவார்'னு சொன்னேன்.

உள்ளே போய் 'செக்கின்' ஆச்சு. நம்மவருக்கு  பிபிஎஸ் கார்ட் இருப்பதால்  கூடுதல் எடை கிடைக்கும். அதென்னமோ சொல்லி வச்சாப்லெ ஒரு அரைக்கிலோ நமக்குக் கம்மி!  அடடா... அரைக் கிலோவை விடலாமா? ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸில் அதே அரைக்கிலோ இனிப்பு வாங்கினதும்தான் எனக்கு நிம்மதி ஆச்சு:-)   உள்ளே லவுஞ்சுக்குப் போயிட்டோம்.
சரியான நேரத்துக்கு (இரவு 11.15 )  விமானம் கிளம்பி  அதிகாலை 5.55க்கு  சிங்கையில் போய் இறங்கியாச்சு.

 தொடரும்...........:-)


18 comments:

said...

இனிமையான சந்திப்புகள் அம்மா...

said...

அரசு அறநிலையத்தார் கொள்ளையடிச்சது போக ///சுத்தி சுத்தி அடிக்கிறீஙளேம்மா?
சென்னையின் சில ஓட்டுனர்கள் மனிதர்களாகவே இருக்கிறார்கள்....நானும் உங்கள் கூடவே பிரயாணிக்கும் உணர்வு....கொஞ்சம் கேலி....வலி மறைத்த சிரிப்பு...அசத்துறீங்கம்மா....அருமை

said...

அருமையான பயண அனுபவங்கள், வல்லி அக்கா, நானானி இவர்களை பார்த்தது மகிழ்ச்சி. சொந்தங்கள், நட்புகள் , இவர்களை விட்டு பிரியும் போது கண்ணில் தூசு விழும் தான்.

said...

அருமை அருமை ....

said...

கட்டி வைச்ச பெட்டிகளைப் பார்க்கும்போது மனம் கனத்துப்போகிறது. பயண நினைவுகள் வந்து என் கண்ணிலும் தூசி விழுந்துவிட்டது!
:( :)

said...

சீக்கிரமே அடுத்த இந்தியப்பயணம் வாய்க்கட்டும் :-)

said...

நன்றி துளசி. என் வாழ்க்கையில் உறுதியான நட்பாக உங்களைக் கொண்ட நாளை நன்றியோடு நினைக்கிறேன். அனந்தன்,கோவில், சரவணபவன் எல்லாம் இந்த நமழையில் எப்படி இருக்கோ.
மிக மிக நன்றி மா. பத்திரமக இருங்கோ

said...

துவரம்பருப்பு - வியாபார அபிவிருத்திக்காம்.. இன்னைக்குத் துவரம்பருப்பு விக்கிற விலைல.. விக்கிறவங்களுக்கு நல்ல வியாபார அபிவிருத்தி. வாங்கிக்கிறவங்களுக்கும் அபிவிருத்தி.

நானும் உங்க கட்சிதான். கடவுளுக்கு நம்மளா விரும்பிக் கொடுக்குறதுதான் பிடிக்கும். அன்பு முதற்கொண்டு.

அரைக்கிலோன்னா சாதாரணமா.. விடமுடியுமா..
தெரிஞ்சிருந்தா.. ரெண்டு புக் வாங்கிருக்கலாம். அல்லது ஒரு பட்டுச்சேலை எடுத்திருக்கலாம். அல்லது ரெண்டு பொம்மை வாங்கிருக்கலாம். அட.. கண்ல பட்ட எதையாச்சும் எடுத்துப் போட்டுட்டாச்சும் வந்திருக்கலாம். அதுனால நீங்க சுவீட் வாங்கி நிரப்புனதுதான் சரி.

கண்ல நிறைய தூசி விழுந்துருச்சு இந்தப் பதிவுல. கண்ணீர் கழுவி விட்டுரும் :)

said...

இந்த இந்தியப் பயணம் முடிவுக்கு வரப் போகிறது.... உங்களது அடுத்த பயணம் எப்போது என இப்போதே எங்களுக்கும் கேட்க மனது துடிக்கிறது!

பயணத்தில் நீங்கள் கண்ட, கேட்ட, ரசித்த அனைத்தையும் எழுதிச் செல்லும் உங்களுக்கு எனது வாழ்த்துகள்....

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.


சந்திப்புகள் இனிமை என்றால் பதிவுலக நட்புகளின் சந்திப்பு இன்னும் கூடுதல் இனிமை!

said...

வாங்க, நான் ஒன்று சொல்வேன்.


அழுதுகொண்டே சிரிக்கின்றேனோ!!!!

said...

வாங்க கோமதி அரசு.


நாட்டுலே ரொம்ப தூசியா இருக்கு இப்பெல்லாம் !

said...

வாங்க செந்தில்குமார்.

ரசித்தமைக்கு நன்றீஸ்.

said...

வாங்க மஹி.

தூசிகள் நிறைந்த உலகமப்பா.....

said...

வாங்க சாந்தி.

உங்க வாயிலே முட்டாய் போடணும். ஜனவரியில் பயணம் வாய்ச்சுருக்கு:-)

said...

வாங்க வல்லி.

என்னப்பா இது வரலாறு காணாத மழை சென்னையில் :-(
அந்த வானம் அழுதாக்கா... இந்த பூமி தாங்குமா?

said...

வாங்க ஜிரா.

கண்ணீர் அந்த தூசியை விரட்டலையேப்பா.... ஆனா ஒன்னு செக்கின் செஞ்சு உள்ளே போனதும், வீட்டுக்குப்போனதும் செய்ய வேண்டிய அடுத்த வேலைகள் மனசுலே வந்துருது.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.


ஃபிப்ரவரியில் ரெங்கன், தரிசனத்துக்கு வான்னுட்டான்!