Friday, November 13, 2015

கட்டக் கடைசியா ஒரு முக்கியமான ஒரு எடைகூடிய ஷாப்பிங். ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 94)

ராமராஜ்யத்தில் இருந்து  மன நிறைவோடு கிளம்பி மச்சினர் வீட்டுக்குப் போனோம். எல்லாம் மறுநாள் நாட்டை விட்டுக் கிளம்புவதால்  ஒரு 'பைபை' சொல்லிக்கத்தான்:-)
 (மச்சினர் ) மகனுடன் சில க்ளிக்ஸ்

இவர் நம்ம சின்னு :-)


உறவினர்களோடு பேச்சும் சிரிப்புமாக் கொஞ்சநேரம். ராமராஜ்யம் பற்றிச் சொன்னதும் கண்களில் வியப்பு. இப்படி ஒரு இடமும் கோவிலும் கெள்விப்பட்டதில்லையேன்னாங்க. குடும்பத்தில் எல்லோரிடமும் சின்னு உட்படச் சொல்லிட்டுக் கிளம்பி, வேளச்சேரி விநாயகருக்குப் போறபோக்கில் ஒரு கும்பிடு போட்டுட்டு கிண்டி வந்தால் சாலையில் குளங்கட்டி நிக்குது மழைத் தண்ணீர்.







தி.நகர் வந்து நம்ம டெய்லர் முஸ்தாஃபாவிடம் இருந்து  மகளுக்குத் தைக்கக் கொடுத்துருந்த  துணிகளை வாங்கிக்கிட்டு அப்படியே நியூ புக் லேண்ட்.  இவர் நமக்கு 21 வருஷமாத் தைச்சுக் கொடுக்கறார்.  அந்தக் கதை? அப்புறம்  ஒருநாள்,ஆகட்டும்:-)

அலமாரிகளில் புத்தகங்களைத் தேடிக்கிட்டு இருக்கும்போது.......  :-)

கொற்றவை இருக்கான்னு பார்த்ததில் கிடைச்சது. அன்னைக்கு  ஜெயமோகனின் வெண்முரசு விழாவில் நம்ம கமல்ஹாஸன் பேசும்போது.... கொற்றவை.....ஒரு பத்து பக்கத்துக்கு மேலே படிக்க முடியலைன்னார். நல்லா இல்லேன்னு சொல்லாமல்.... ரொம்ப உள்ளே இழுக்கும் கதை என்பதைப்போல கண்களை அகல விரிச்சு, முகத்தை வியப்பாக்கி,  கைகளையும் உடலையும்  சிலுப்பி ஒரு  கைண்ட் ஆஃப் ஆக்ட். (நடிப்புன்னு சொல்லலைப்பா....  செய்கை!)  'அப்படி என்னா புக்கு'ன்னு   மனசு கேட்டுச்சு. பக்கத்தில் இருந்த  எழுத்தாளினி ஏகாம்பரி, 'அய்ய அது கண்ணகி கதைப்பா. நல்லா இல்லை.  வாங்காதே. நான் தரேன்னு சொல்லி இருந்து அன்று வரை தரலை .  இங்கே கண்ணில் பட்டதும் சரின்னு வாங்கிக்கிட்டேன்.

(தினம் பெட் டைம் ஸ்டோரின்னு  படிச்சும் முடிச்சுட்டேன்,ஆமா! கோவலன் கண்ணகி கதை கொஞ்சூண்டு வருது. அதிலும் கோவலன் சட்னு கொலை ஆனான். பலவிதமான நிலங்களையும், காடுகளையும் மனசில் கொண்டு வந்து நிறுத்தும் லேண்ட்ஸ்கேப் விஸ்தாரமும் விளக்கமுமா அங்கங்கே புனைவுகள்,  மனசில் தோன்றும் மயக்கங்களுமா இருக்கு! கண்ணகி கதையைக் கேட்ட இளங்கோ  இன்னும்  விவரம்  தேடக்கிளம்பிப்போய் பலதும் பார்த்து, பின்னரே சிலப்பதிகாரம் எழுதி இருக்கார்! )

அங்கெ இங்கேன்னு தேடியதில் வாங்கினவையின் பெயர்கள் கீழே!

கொற்றவை   ஜெ.மோ

கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி  நாகரத்தினம் கிருஷ்ணா

சன்னலொட்டி அமரும் குருவிகள்      நாகரத்தினம் கிருஷ்ணா

புத்ர  லா ச ர

கல் சிரிக்கிறது  லா ச ர

ஓநாய் குலச்சின்னம் (மொழிபெயர்ப்பு) சி. மோகன்

விந்தைக் கலைஞனின் உருவச்சித்திரம்  சி மோகன் (சுஜாதா விருது 2014)

ஆரண்யநிவாஸ்   ஆர் ராமமூர்த்தி

சோளகர் தொட்டி  பாலமுருகன்

பிரதாப முதலியார் சரித்திரம் : மாயூரம் வேதநாயகம் பிள்ளை

கள்ளம்   தஞ்சை பிரகாஷ்

நம்மவரின்  செலக்‌ஷன் கீழே! 



ஒரு நடுப்பகல் மரணம்  சுஜாதா

கரையெல்லாம் செண்பகப்பூ சுஜாதா

ஆதலினால் காதல் செய்வீர்  சுஜாதா

சாப்பாட்டுக் கடை  கேபிள் சங்கர்.

அப்புறம் கொஞ்சம் (வேண்டாத) சினிமா, ஆடியோ சிடி, டிவிடின்னு ஒரு குப்பை.


ஏற்கெனவே இருப்பதோடு இதையும் சேர்த்தால் கனம் அதிகமாத்தான் இருக்கும் என்றார் நம்மவர்.  கனமானவைகளைக் கையில் ரீடிங் மெட்டீரியல்ஸாக் கையிலே வச்சுக்குவேன். அது  அந்த 7 கிலோவில் வராதுன்னேன்:-)

புத்தகங்கள்னு பார்த்தால்  கொஞ்சம் ஏற்கெனவே சேர்ந்துருக்குதான்.

சரிதாயணம்  பாலகணேஷ் (மதுரை பதிவர் மாநாட்டில் வாங்கியது)
காற்றின் சிற்பங்கள்  ( இது மதுரை மாநாட்டில் இலவசமாக் கிடைச்சது)
நல்லா எழுதுங்க நல்லதையே எழுதுங்க . ஜெயராஜன்.


இது போக நமக்குப் பரிசாகக் கிடைச்சவைகள் ஏழு.

வாழ்வின் விளிம்பில் ஜி எம் பாலசுப்ரமணியம்

அடைமழை  ராமலக்ஷ்மி

இலைகள் பழுக்காத உலகம்  ராமலக்ஷ்மி

துலக்கம்  பாலபாரதி

ஆவி தீபாவளிமலர் (2014) உஷா

காலம்  மதுமிதா


மலர்மஞ்சம்  தி.ஜானகிராமன்  ( வல்லி)

நாளைக்குக் கிளம்பறோமுன்னதும் அப்பாடா... நம்ம வீட்டுக்குப் போறோம். ரஜ்ஜு பாவம், குழந்தை இப்படி  மகிழ்ச்சி வந்தாலும்  மனசின் மூலையில் ஒரு சோகம் வந்து எட்டிப்பார்த்தது நிஜம். ரெண்டுங்கெட்டானா எப்பவும் இப்படி ஒரு கலந்துகட்டி மனநிலைதான்.

 இனி எப்பவோ....  வாங்க போய் சரவணபவனில் ஒரு காஃபி குடிச்சுக்கலாமுன்னு  போனால், என்  வழக்கமான மரத்தடி இருக்கை எனக்காகவே காத்திருந்துச்சு. இனி எப்பவோன்னு  இவர்  பஜ்ஜிக்குச் சொன்னார். வாழைக்காய், வெங்காயம் :-)

முடிச்சுக்கிட்டு நேரா கவிதாயினி வீடு! மணி அஞ்சரை. ராஜபாளையம் ஸ்பெஷல் வறுத்த நிலக்கடலை!  பூனாவில் இதுக்குப்பெயர் டைம் பாஸ். இப்படிச் சொல்லித்தான் பஸ் ஸ்டாண்டில் விப்பாங்க. பஸ்ஸுக்குக் காத்திருக்கும் நேரத்தை  கடத்த ஒரு உபாயம் இந்த டைம் பாஸ்.
கவிஞர் மதுமிதாவின் கணவரும் நம்ம கோபாலும் நல்ல நண்பர்கள். அவுங்க ஒரு பக்கமும் நாங்கஒரு பக்கமுமா கச்சேரியை வச்சுக்கிட்டோம்:-)



காலம் கிடைச்சது அப்போதான்.


 இப்பவே கவுண்ட் டவுன் ஆரம்பிக்குது. இன்னும் 25 மணி நேரம்தான் இருக்கு  விமானநிலையம் கிளம்ப. போயிட்டு வாறோமுன்னு  பிரியாவிடை  ஆகிக் கிளம்பும் போது மணி ஆறே கால்.

அறைக்குப்போகும் வழியில்  இருந்த பழமுதிர்ச்சோலையில் ஒரு சின்ன ஸ்டாப். எங்கூர் கிவி, எங்களை நினைவிருக்கான்னது. இருக்கு . ரெண்டு நாளில் மீட் பண்ணலாமுன்னு சொல்லிட்டு,  அங்கே கிடைக்காத  வகைகளைத் தேடினேன். சப்போட்டா, கொய்யா, வாழைப்பழம் (இது  நமக்குக் கிடைக்காத வகை) கொஞ்சம் ஒல்லியா இருக்கும் வெள்ளரின்னு வாங்கியாச்சு. இன்றைக்கு ஃப்ரூட் டின்னர். ஓக்கேவா?



ஆறேமுக்காலுக்கு  லோட்டஸ் போய்ச் சேர்ந்ததும், மறுநாள் காலை ஒன்பதரைக்கு  சீனிவாசனை வரச்சொல்லிட்டு மேலே போய் பொட்டிகளை அடுக்க ஆரம்பிச்சார் கோபால்.  அவருக்கு ரொம்பப் பிடிச்ச வேலை இது. இடத்தை அட்ஜஸ்ட் பண்ணறேன்னு  நாம ஒரு மாதிரி அழகா அடுக்கி வச்சுருப்பதைக் கலைச்சு அங்கே இங்கேன்னு திணிச்சு வச்சாத்தான் திருப்தி :-)))))

 அப்பப்ப இனிமே ஒன்னுமே வாங்காதேம்மா. இடமே இல்லை பார்த்துக்கோ....  எக்ஸ்ட்ரா லக்கேஜுக்குக் காசு கட்டும்படியாத்தான் இருக்கப்போகுதுன்னு  புலம்பலும் மிரட்டலுமா பொழுது போச்சு.


தொடரும்...........:-)

PIN குறிப்பு :  பயணத்தை எழுதிக்கிட்டே வரும்போது, போனவருசம் இதே நவம்பர் 13 நிகழ்ச்சிகள் சரியா இந்த வருசம் நவம்பர் 13 இல் பதிவாக வந்துருக்கு பாருங்க!!!!

அன்றும் கனத்த மழை, சாலைகளில் வெள்ளம். இன்றும் அதே நிலை! 

17 comments:

said...

சோளகர் தொட்டி படித்து முடித்தவுடன் அதன் விமர்சனத்தை எனக்கு மின் அஞ்சல் வழியே தரவும். என் கருத்து உங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க.

said...

தொடரட்டும், தொடர்கிறேன்.

said...

எத்தனை புத்தகங்கள்...!

said...

ஆஹா...அத்தனை புத்தகங்கள்...நீங்கள் கொடுத்துவைத்தவர்கள்...

said...

பயணத்தை எழுதிக்கிட்டே வரும்போது, போனவருசம் இதே நவம்பர் 13 நிகழ்ச்சிகள் சரியா இந்த வருசம் நவம்பர் 13 இல் பதிவாக வந்துருக்கு பாருங்க!!!!

அன்றும் கனத்த மழை, சாலைகளில் வெள்ளம். இன்றும் அதே நிலை!

said...

hey..
கண்டேன் மதுமிதா அக்கா!
கண்டேன் கொய்யாப்பழம்:))

/பழமுதிர்ச்சோலையில்/ பழமுதிர்சோலை= ச் குடுக்கக் கூடாது டீச்சர்:)

*திருச்செந்தூர் = ச் குடுக்கணும் | பண்புத்தொகை
*பழமுதிர்சோலை= ச் கூடாது | வினைத்தொகை

ஆளும், திருச்செந்தூரில் தான் அழகா இருப்பான்:)
பழமுதிர்சோலை= சுமார் மூஞ்சி குமார் தான்:)))

ஒங்க புத்தகம் ஒன்னு கூட என் கிட்ட இல்ல, very sad:(
அடுத்த முறை வாங்கீறணும்; எங்கே? -ன்னு சொல்லுங்க டீச்சர்!

கொற்றவை= சிறு வரலாறு + பெரும் புனைவே!
மிக அழகிய நாவல்
மிகுந்த ஆய்வு செய்யப்பட்டு, பின்பு புனைவு ஆகிய நாவல்!

said...

you told on 13th nov 2014, velacheri flooded but today after 1 year on same day total chennai flooded like anything. i travel to office for 1.30 mts and wait for cab for 3 hrs
great day today.

said...

அப்பாடி.. எத்தன விதவிதமாப் படிக்கிறீங்க. உங்களுக்கும் கோபால்சாருக்கும் வெவ்வேறு எழுத்து ரசனை. ஆனா ரெண்டுமே நல்ல ரசனைதான்.

விமானப் பயணம்னாலே லக்கேஜ் பிரச்சனை வந்துருது. சரியா எடுத்து வெச்சோமா இல்லையான்னு ஒரு துணுக்கம் இருந்துக்கிட்டே இருக்கும். செக்கின் பண்ண பிறகு ஒரு நிம்மதி வருமே.. அடேங்கப்பா...

said...

ஆஹா பயணத்தின் முடிவுக்கு வந்து சேர்ந்தாச்சா....

தொடர்கிறேன்.

said...

வாங்க ஜோதிஜி.

வீட்டுக்கு வந்ததும் முதலில் வாசிச்சது சோளகர் தொட்டிதான். ரொம்பநாளுக்கு ஒரு அதிர்ச்சி மனசில் இருந்துச்சு. போலீஸ் என்றாலே மகா வெறுப்பை உண்டாக்குச்சு என்பதே நிஜம். அதுவும் இங்கத்துக் காவல்துறையினரைப் பார்த்து பழகிய மனசுக்கு முதலில் இதை ஏத்துக்கவே முடியலை. 'உண்மையை' வரவழைக்க எவ்வளவு கீழ்த்தரமாகவும் நடந்துக்கலாம் என்பது போல் செயல் பட்டவங்களை நினைச்சு மனசுக்குச் சீன்னு போச்சு. விமரிசனம் எழுதணுமுன்னா இன்னொருமுறை கொஞ்சம் ஆழ்ந்து வாசிக்கணும். அதுக்கு இப்போ நான் மனத்தளவில் தயாரில்லை :-(

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

தொடர்வது மகிழ்ச்சியே!

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

எத்தனை வாங்கினால்தான் என்ன.... தற்சமயம் வாசிக்க ஒன்னும் இல்லையே! என் புத்தக அலமாரியில் உள்ள அனைத்துப் புத்தகங்களையும் ஒருமுறை வாசிச்சு முடிச்சாச்சு. அடுத்த செட் இனி அடுத்த வருசம்தான்.

said...

வாங்க, நான் ஒன்று சொல்வேன்.


இவைகளை எனக்குப் பின்னால் வாசிக்க யாரும் இல்லைன்னு நினைக்கும்போது இனி வாங்கவேணாமுன்னும் தோணுவது உண்மையே :-(

said...

வாங்க கேஆரெஸ்.

பழமுதிர்ச்சோலையில் ஒரு காலத்தில் வேல் மட்டும்தான் இருந்தது. எப்போ கோவில் வந்ததுன்னு தெரியாது. சிலவருசங்களுக்கு முன்னால் போன பயணத்துலேதான் அந்தக் கோவிலைப் பார்த்தேன்.
புக் பிரமாதமா என்ன? நியூ புக்லேண்டிலும், ஹிக்கின்பாதம்ஸ்லேயும் பார்த்த நினைவு. வெறும் நாலே புத்தகங்கள்தான்.

said...

வாங்க அனந்து.

அப்ப ஆரம்பிச்ச மழை இன்னும் சக்கைப்போடு போடுதே :-(
எல்லோரும் கவனமாக இருங்க.

said...

வாங்க ஜிரா.

நம்ம கோபாலுக்கு ஜஸ்ட் படிக்கணும். எனக்கோ.... வாசிக்கணும். கொஞ்சம் ஆழ்ந்த வாசிப்புதான். சில நல்ல கதைகளை இவருக்கு சிபாரிசு செஞ்சேன்னு வச்சுக்குங்க... ஆள் அதிர்ந்து போயிருவார். அதுக்குப்பின்... அந்தப்பக்கம் தலை வச்சுப் படுப்பாரா என்ன? ஆனா ஒன்னு ....புத்தக விஷயத்தில் மட்டும் நான் வாங்கும் எதுக்கும் வாயையே திறக்கமாட்டார். இன்னும் வாங்கிக்கோன்னு கூட பலமுறை சொல்லி இருக்கார். நாந்தான் ஏர்லைன்ஸ் வெயிட்டை நினைச்சுக்கிட்டே கவனமா இருப்பேன்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

தொடர்வது மகிழ்ச்சியே!