போலீஸ்காரர் அமைத்த சங்கத்தில் இன்றைக்குத் தீபாவளித் திருவிழா!
விழுப்புரம் பக்கத்துலே ஒரு கிராமத்துலே (கோனூர்னு பெயராம்)இருந்த கோவிந்தசாமி நாயுடு மகன் குப்புசாமிக்கு அப்போ போலீஸ் வேலை. காலம் 1912 ஆம் ஆண்டு. ஃபிஜித்தீவுக்கு வேலைக்கு (!) ஆள் எடுக்கும் ஏஜண்டு மூலம் சமாச்சாரம் கேள்விப்பட்ட குப்புசாமி, போலீஸ் வேலையை சட்னு உதறிட்டு கப்பல் ஏறிட்டார். அப்ப எல்லாம் போலீஸா இருந்தா சல்லிக் காசுக்குப் பிரயோஜனமில்லையாக்கும் :-) இப்ப என்னன்னா போலீஸ் வேலைக்குச் சேர பலமான போட்டா போட்டி. இதுக்கும் லஞ்சம் கொடுத்தாத்தான் வேலையே கிடைக்கும் என்ற காலம். கலி ரொம்பதான் முத்திப்போச்சு!
Sri Murugan Temple, Fiji Islands. (Now)
ஃபிஜித்தீவுலே கரும்புக்காட்டுலே வேலை செய்ய இந்தியாவில் இருந்து ஆட்களைப் பிடிச்சுக்கிட்டுப் போனாங்க வெள்ளைக்காரங்க. முதலில் அங்கே காலு குத்துனவுங்க வடக்கர்கள். தென்னிந்திய மக்கள் போனது 1903 இல்தான். கடைசி கோஷ்டி போனது 1917 இல். அதுக்குப்பிறகு ஆள் பிடிச்சுக்கிட்டுப்போறது நின்னு போச்சு. இதைப் பத்தி நம்ம ஃபிஜித்தீவு புத்தகத்தில் எழுதி இருக்கேன். பதிவில் வந்ததை இங்கே பாருங்க. அக்ரிமென்ட்டில் வந்தவங்க. அது கிர்மிட்ன்னு ஆகிப் போச்சு. கிர்மிட் பாட்டி!
இப்படி கிர்மிட்லே அஞ்சு வருசத்துக்குன்னு ஃபிஜி வந்து சேர்ந்தார் நம்ம குப்புசாமி. வயசு 22. இங்கே கிடைச்ச வேலை கரும்புக்காட்டுக் கூலி. படிப்பறிவு இருந்ததால் ஊர் ஞாபகங்கள், ஃபிஜிக்கு வந்து மாட்டிக்கிட்டுக் கஷ்டப்படும் நம்ம மக்களைப்பத்தியெல்லாம் எழுதி வச்சுருந்தாராம். பாரதியாரின் 'கரும்புத் தோட்டத்திலே' நினைவு படுத்திக்குங்க.
ஏற்கெனவே இங்கே வந்துருந்த வடக்கர்கள் மூலம் ஹிந்தி ஓரளவுக்குப் பரிச்சயமான வெள்ளைக்காரர்கள் இங்கே அரசு சார்ந்த சமாச்சாரங்களுக்கு இங்லீஷின் கூடவே ஹிந்தியையும் சேர்த்துக்கிட்டுருந்தாங்க. இது வடக்கர்களுக்கு சாதகமாப் போச்சு. நம்மாட்களுக்குத் தமிழைவிட்டா வேற மொழியறிவே இல்லாததால் கஷ்டமாப் போயிருக்கு.
நமக்குத் தெரிஞ்ச சாமிகளைக் கும்பிட்டுக்கவும் நம்ம பண்டிகைகளைக் கொண்டாடவும் கூட முடியலை. வெள்ளைக்காரன் ரெண்டு பண்டிகைகளைக் கொண்டாட அனுமதிச்சு இருந்தான். இஸ்லாமியர்களுக்கு மொஹரம், இந்துக்களுக்கு Phagua என்ற ஹோலிப்பண்டிகை.
அதுவுமில்லாமல் அப்ப ஏது அங்கே காலண்டர், பஞ்சாங்கம் எல்லாம்? எதுன்னாலும் இந்தியாவில் இருந்துதானே போயாகணும்? அவுங்களுக்குத்தான் இந்தியாவில் உள்ள அவுங்க குடும்பங்களோடு தொடர்பெல்லாம் விட்டுப் போச்சே :-(
(வியாபாரத்துக்கு குஜராத்திகள் அங்கே போனபிறகுதான் மத சம்பந்தமான விவரம், அறிவு வளர்ச்சியெல்லாம் வந்ததுன்றதையும் ஒத்துக்கத்தான் வேணும்! பள்ளிக்கூடம் எல்லாம் ஆரம்பிச்சாங்க. இப்பவும் நல்லாவே நடக்குது)
கிர்மிட் படி அஞ்சு வருச வேலைக்குப்பின் அவரை ஒப்பந்ததில் இருந்து விடுவிச்சாங்க. பிடிச்சுக்கிட்டுப்போன எல்லா மக்களையும் அவுங்கவுங்க ஒப்பந்தம் முடிஞ்சதும் விட்டுருவாங்க. இதுலே வெள்ளைக்காரனை மிஞ்ச முடியாது. ரூல்ன்னா ரூல். ஆனால்.... பிடிச்சுக்கிட்டுப்போனதுபோல், கொண்டு வந்து ஊர்லே விட்டுடணும் என்ற ஒப்பந்தம் இல்லாததால் எல்லோரும் அங்கேயே இருக்க வேண்டியதாப் போச்சு. வேற வேலை தேடிக்கணும். இல்லைன்னா அங்கேயே விவசாய வேலைகளைத் தனியார் தோட்டங்களில் செய்யலாம்.
ஃபிஜியில் எல்லா நிலங்களும் நேடிவ் ஃபிஜியன்களுக்கே சொந்தம் என்பதால்... நிலங்களைக் குத்தகைக்கு எடுத்து பயிரிட்டுக்குவாங்க நம்ம மக்கள்ஸ். 99 வருச குத்தகை என்பதால் நாலைஞ்சு தலைமுறைக்குப் பிரச்சனை இல்லை.
நம்ம குப்புசாமியும் கொஞ்ச நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் பார்க்க ஆரம்பிச்சார். அது சரிப்படலை. அப்போ அவருக்கு இன்னொரு வெள்ளைக்காரக் கம்பெனியில் வேலை கிடைச்சது. இதுவும் விவசாயம் சம்பந்தப்பட்டதுதான். ரெட்டைக்குதிரை பூட்டி ஏர் பிடிச்சு நிலத்தை உழுதல். அதையும் செஞ்சுக்கிட்டே மக்கள் நன்மைக்கு என்ன செய்யலாமுன்னு யோசிச்சுக்கிட்டு இருந்தார்.
அப்போதான் 'பிள்ளை' என்பவர் நம்ம தெக்கத்தி மக்களுக்கு நம்ம முறையில் சாமி கும்பிட்டுக்க, கூட்டமா ஒன்னு சேர்ந்து பஜனைப்பாடல்கள் பாடிக்கன்னு தைரியம் கொடுத்து, நாமே நடத்திக்கலாமுன்னு சொன்னதும், ஆரம்பிச்சது சைவ,வைஷ்ணவ சண்டை. அவுங்கவுங்கசாமி அவுங்கவுங்களுக்கு ஒஸ்த்தி.
கதிர்வேலு முதலியார் சைவம். கோபால் முதலியார் வைஷ்ணவம்.
எல்லாரும் இங்கே தங்கள் சாதிகளைச் 'சர் நேம்' ஆக வச்சுக்கிட்டாலும் ஒன்னுமண்ணாத்தான் இருக்காங்க. ஜாதிச் சண்டைகள் ஒன்னும் இதுவரை இல்லை. கலியாணம் காட்சின்னு எல்லாரும் எல்லாச் சாதிகளிலும் பொண்ணு எடுத்துக்கறாங்க. உசத்தி, மட்டமுன்னு ஒன்னும் கிடையாது. ஆனா தென்னிந்தியா, வட இந்தியான்னு பிரிவுகள் சம்பந்தம் வச்சுக்கறதில்லை. அதிலும் காதல் கல்யாணங்கள் சில நடந்துருது. 'வோ (த்) தோ ஹிந்துஸ்தானி. மகர் ஹம் மந்த்ராஜி' னு பொண்ணுங்க சொல்றதைக் கேட்டுருக்கேன்:-)
பிள்ளை என்ன செஞ்சாருன்னா, 1922 லே ஒரு மண்டலம் சிவபுராணம் கதை சொல்றதுன்னு ஒரு கூட்டத்தைக் கூட்டினார். எல்லோருமா சேர்ந்தே வந்து கலந்துக்கிட்டாங்க. இதுலே படிப்பறிவுள்ள குப்புசாமியும் கலந்துக்கிட்டாருன்னு தனியாச் சொல்லவேண்டியதே இல்லை. இவர் இங்கே வந்து பத்து வருசம் ஆகி இருந்துச்சு அப்போ. ரமணமகரிஷி, ராமலிங்க அடிகள், ராமகிருஷ்ண பரமஹம்ஸர் இப்படியானவர்களை இவர் மனசில் குருவாக ஏத்துக்கிட்டு வணங்கிக்கிட்டு இருந்தார். ரமண மகரிஷிக்கும் நம்ம குப்புசாமிக்கும் வயசு வித்தியாசம் கூட அதிகம் இல்லை. வெறும் 11 வருசங்கள்தான்!
48 நாள் கதை சொல்லி அன்னதானம் செஞ்சு முடிச்சதும், கட்டாயம் தென்னிந்திய மக்களுக்குன்னு ஒரு சங்கம் வேணுமுன்னு தீர்மானம் எடுத்தாங்க. ஒரு மண்டலம் எல்லோரும் ஒண்ணுமண்ணாக் கூடி இருந்தது அவுங்களுக்குள்ளே ஒரு ஒத்துமையை வளர்த்திருக்கு .
இது நடந்து ஒரு நாலு வருசம்கழிச்சு ராமகிருஷ்ணபரமஹம்ஸரின் பொறந்தநாளைக் கொண்டாடலாமுன்னு(1926) ஒரு கூட்டத்தைக் கூட்டினார் குப்புசாமி. அன்றைக்குப் பொறந்தது சங்கம். தென்னிந்திய சன்மார்க்க ஐக்கிய சங்கம் ஃபிஜி . T I S I Sangam. சாதி, மதம் இப்படி ஒன்னும் பிரச்சனையே இல்லை. தென்னிந்தியனா இருந்தால் போதும். விந்திய மலைக்கு அப்பால் ஸப் ஜன் மத்ராஸி ஹை!
சங்கம் ஆரம்பிச்சதும் மறுவருசமே முருகன் வந்துட்டார்! சின்ன அளவில் கோவில் வந்துருச்சு. இப்போ கோவில் ரொம்பப்பெருசா கட்டியாச். படம் பதிவின் ஆரம்பத்தில் இருக்கு, பாருங்க.
அதன் முதல் தலைவர் நம்ம சாது குப்புசாமி அவர்கள்தான். எல்லோரையும் ஆன்மிகப் பாதையில் கூட்டிப்போகும் வகையில் இவர் மக்களுக்கு சேவை செய்வதிலும், அவுங்க முன்னேற்றத்திற்கு வழி காண கல்வி, அதிலும் நம்ம மொழியை அப்படியே விட்டுறாமத் தக்க வச்சுகுவது ரொம்ப அவசியம் என்ற உணர்வும் வேணும் என்றபடிக்கு சங்கம் பள்ளிக்கூடத்தை ஆரம்பிச்சு அங்கே தமிழ் மொழியில் கல்வி கற்க ஏற்பாடும் செஞ்சார். அங்கே பாடம் சொல்லிக் கொடுக்க வாத்திமார்கள் எல்லாம் தமிழ்நாட்டுலே இருந்தே போனாங்க. அப்படிப் போனவங்களும் பெரும்பாலும் அங்கேயே தங்கிவிட்டதும் உண்டு.
பாருங்க ... சரித்திரத்துக்குள்ளே நுழைஞ்சால் அவ்ளோதான்...நம்மை உள்ளே இழுத்துக்கிட்டே போயிரும். அதைக் கொஞ்சம் இப்போதைக்கு விட்டுட்டு தீபாவளி பற்றிச் சொல்ல வந்ததைச் சொல்றேன்.
அதுக்கு முந்தி குப்புசாமி பூஜை படிச்சீங்கன்னா இன்னும் கொஞ்சம் விவரம் கிடைக்கும்.
ஃபிஜியில் இருந்து கனடா, அஸ்ட்ராலியா, நியூஸின்னு புலம்பெயர்ந்த தென்னிந்திய மக்கள்ஸ் போன இடத்துலேயும் சங்கம் கிளைகளை உண்டாக்கினாங்க. நம்மைப் போலவே நினைக்கும், நடக்கும் மக்களுக்கு இப்படி ஒரு அமைப்புத் தேவையாத்தானே இருக்கு. நம்ம கலை, கலாச்சாரத்தை நூல் அறுந்துடாமல் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு போகணும்தானே?
நியூஸியின் பெரிய நகரங்களில் (ஆக்லாந்து, கிறைஸ்ட்சர்ச் )சங்கம் கிளைகள் இருக்கு. நம்மூரில் இருக்கும் கிளை இப்போ அதுலே இருந்து துளிர்த்து இன்னுமொரு சின்னக்கிளையாக் கிடப்பதையும் சொல்லிக்கறேன்.
வீக்கெண்ட் தீபாவளியா போனவாரம் (அக்டோபர் 31) சங்கம் போய் வந்தோம். டிக்கெட்டு விவரம் கேட்டப்ப, 'சங்கம் எப்ப இதுக்கெல்லாம் டிக்கெட் போட்டுருக்கு? பேசாமக் கிளம்பி வாரும்'னு சொன்னாங்க.
ஏழுமணிக்கு ஆரம்பம். அங்கே போனதும்கண்ணில் பட்டவர் நம்ம அவிநாஷ் Bபைய்யா. ரொம்ப இசை ஆர்வம். ஹார்மோனியம், சிதார் எல்லாம் வாசிப்பார். இவருக்குன்னு ஒரு சின்ன சங்கீதக்குழு கூட இருக்கு. இந்திய சுதந்திர பொன்விழாக் கொண்டாட்டத்தில் இந்தக் குழுவில் மகளும் சேர்ந்து ஃப்ளூட் வாசிச்சாள். நம்ம கோபால் ஆரம்பிச்ச இண்டியன் க்ளப்பின் முதல் கொண்டாட்டமா அது இருந்துச்சு. உடம்பு சரி இல்லையாம். ரொம்பவே இளைச்சுப்போயிருந்தார் :-( காலமும் முதுமையும் சேர்ந்து எப்படி ஆட்களை அடிச்சுப் போட்டுருது பாருங்க.
தெருக்கூத்துக்குத் திரை கட்டிக்கிட்டு இருந்தாங்க. சங்கத்தின் பேனர் டிஸைன் மாறி இருக்கு இப்போ. பூஜைக்கான ஒருக்கங்கள் ஒரு பக்கம். நம்ம சாது குப்புசாமி படத்தைக் கொண்டுவந்து இடதுபக்கம் வச்சாங்க. நம்ம சன்னி எல்லோரையும் வரவேற்று, ஆக்லாந்து நகரில் இருந்து விழாவுக்குன்னே வந்திருக்கும் பண்டிட் பூஜை செய்வார்னு இங்கிலிஷில் சொன்னார்.
விசேஷ விருந்தினர்களா வெள்ளையர்கள் சில பேர் வந்துருந்தாங்க. ஏர்நியூஸிலாந்து முக்கியஸ்த்தர்கள். சன்னி வேலை செய்வது ஏர்நியூஸிலாந்துலேதான்:-)
பறை அடித்துக்கொண்டே ரெண்டுபேர் மேடை ஏறி தமிழரின் கலையைக் கோடி காமிச்சாங்க. ஆரத்தி பாட்டு ஆரம்பிச்சதது. ஜெய்லச்சுமி மா(த்)தா..... ஓம் ஜெய்லச்சுமி மா(த்)தா..... மேடையில் பக்திப்பாடல் ஒலிக்க தீபாராதனை. உடம்பு சரி இல்லாத நிலையிலும் அவிநாஷ் Bபைய்யா ஹார்மோனியம் வாசித்துக்கொண்டே பாடினார் அந்தக் குழுவில்.
ஆரத்தி எடுத்து முடிச்சதும் இன்னும் கொஞ்சம் பக்திப்பாடல்கள். அதைக் கேட்டுக்கிட்டே தீபாவளிப் பலகாரங்களை உள்ளே தள்ளிக்கிட்டு இருந்துச்சு சனம்.
சிறப்பு விருந்தினரின் பேச்சுக்குப்பின் ரெண்டு நடனம். நேபாளிப்பெண் ஒருவரும் ஃபிஜி இண்டியன் பெண் ஒருவருமா ஆடினதும், லைட் மூஜிக் குழு ஒன்னு மேடை ஏறினாங்க. என்னென்னவோ ஹிந்திப் பாட்டுகள். (மந்த்ராஜி நை ஜானே!)
இடைவேளை. டின்னர் டைம். சோறு, பருப்பு, தக்காளிச்சட்டினி, ஆலு பைங்கன் கறின்னு சிம்பிளான சாப்பாடு. ஆனால் அருமை. ஊதுபத்தியோ என்னமோ.... ஸ்மோக் அலார்ம் அலறினதும் எல்லோரும் வெளியே போய் நின்னோம். பத்து நிமிட்டில் ஆபத்து விலகியது. உள்ளே போனதும் ஆரம்பம் தெர்க்கூத்.
சங்க நிர்வாகி ரெட்டியிடம் ஒரு தொகையை டொனேஷனாக் கொடுத்தார் நம்மவர். இத்தனை பேருக்குச் சாப்பாடும் போட்டு கலைநிகழ்ச்சிகளும் நடத்துவதில் எவ்ளோ கஷ்டம் இருக்குமுன்னு நமக்குத் தெரியாதா?
வழக்கத்துக்கு மாறா, என்ன சம்பவத்தைக் கூத்துக் கட்டறாங்கன்னு பண்டிட் விளக்கினார். ராமாயணக்கதையில் வாலி சுக்ரீவ யுத்தம். ராமன் சுக்ரீவனுக்கு உதவுதல். ஆஹா.... வாலியும் சுக்ரீவனும் அண்ணன் தம்பிகள், ராமனுக்கே அடையாளம் கண்டு பிடிக்கமுடியாதபடி ஐடென்ட்டிகல் ட்வின்ஸ். எப்படின்னு பார்க்கலாமுன்னு மூவி செட்டிங்கில் போட்டுக் கொடுத்தேன் கேனனை நம்ம கோபாலுக்கு.
எனக்கு வழக்கம்போல் சின்னது. ஸோனி.
கதையை நடத்திக்கொண்டுபோகும் ஜோக்கர் வந்து ஆடோ ஆடுன்னு ஆடினார். அப்புறம் வாலி எண்ட்ரி. தெருக்கூத்துக்குன்னு ஒரு நடை இருக்கு போல! வாலியின் மனைவியும், சுக்ரீவனின் மனைவியும் அடுத்து வந்து ஆடுனாங்க. பெண் வேசம் பொருத்தமாத்தான் இருந்துச்சு. அண்ணன் மனைவியை இப்படி 'சேர்த்து வச்சுக்கிட்டீங்களே'ன்னு வாலி மனைவி கேட்க, 'என் இஷ்டம், அவனுடையதெல்லாம் இனி என்னுடையதே அதைக் கேட்கும் உரிமை உனக்கில்லை'ன்னு தன் மனைவியை காலால் எட்டி உதைக்கும் ஆணாதிக்கம் கொண்ட கல்நெஞ்சுக்காரன் வாலி! கையில் பெரிய லாலிப்பாப் போல ஒரு Gகதை:-)
அடுத்த எண்ட்ரி நம்ம சுக்ரீவன். அசல் தம்பி :-)))))) மனைவி, பதவி, நாடு எல்லாம் பறிபோன சோகத்தில், வாலியைக் கொல்லாமல் விடறதில்லைன்னு ஆடுனார். அப்போதான் ஏற்கெனவே சொல்லிக் கூப்ட்டுப்போயிருந்தாலும், நிபந்தனையை மீறி , 'கிளம்பலாமா, கிளம்பலாமா'ன்னு ஆரம்பிச்சார் நம்மவர். வீடியோ எடுக்கறாரான்னு பார்த்தால் கேமெரா பக்கத்து இருக்கை மேல் கிடக்கு. (உங்களுக்கு அதிர்ஷடமில்லை, போங்க!!!)
மணி பதினொன்னு ஆச்சு. பாவம் ரஜ்ஜு, வீட்டுலே பசியோடு இருப்பான்னு பின்பாட்டு வேற!
அடுத்த ஸீனில் ராமன், லக்ஷ்மணன், ஹனுமன் ஆஜர். 'அவ்ளோதான். எல்லா கேரக்டரும் வந்தாச்சு. ரெண்டு பேருக்கும் சண்டை ஆரம்பிச்சுரும். ராமன் அம்பெய்து வாலியைக் கொல்வான்'னு நம்மவர் ராமாயணத்தை முடிச்சு வச்சார் என்னிடம். இனி தாங்காதுன்னு கிளம்பி மெம்பர்ஷிப் ஃபாரத்தில் எழுதிக் கொடுத்துட்டு, அதற்கான கட்டணத்தையும் கட்டிட்டுக் கிளம்பினோம். சௌத் இண்டியனுக்கு டபுள் சார்ஜ். மற்றவர்களுக்கு வெறும் பத்து :-)
ஹனுமன் செல்லம்போல இருந்தார் ! சுமார் 200 பேர் விழாவுக்கு வந்துருந்தாங்கன்னு பக்கத்தூர் செய்தித்தாளில் போட்டுருந்தாங்க. நம்மூர்? கப்சுப்!
போகட்டும்.......பொழுது விடிஞ்சால் தீபாவளி!
அன்பர்கள், நண்பர்கள் அனைவருக்கும் துளசிதளத்தின் இனிய தீபாவளி வாழ்த்து(க்)கள்!
PINகுறிப்பு: சின்னச்சின்னதா மூணு வீடியோ க்ளிப்ஸ் இருக்கு. முடிஞ்சால் ஃபேஸ்புக்கில் வலை ஏத்திட்டு லிங்குகளைத் தனியா இன்றோ. நாளையோ போடறேன்.

21 comments:
படங்களும் பகிர்வும் அருமை. ஆம், லாலிபாப் போலதான் உள்ளது gகதை:). வேடங்கள் அருமையாக உள்ளன.
ஃபேஸ்புக்கில் பகிர்ந்த பறை வீடியோவில் ஆடியோ ரசிக்க முடிந்தது. நன்றாகவே உள்ளது.
ஒன்று சொல்லியே ஆக வேண்டும் ...உங்கள் பதிவுகளில் நான் படங்களின் ரசிகன்..வார்த்தைகளில் இனிப்பு தடவாமல்....கண்ணுக்கும் விருந்தளிக்கும் உங்கள் பதிவுகள் யாவும் அருமை...
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்...
டீச்சர் நலமா? தலைப்பு வைப்பதில் நீங்க சமத்து! காணும் போது எப்பொழுதும் ஒரு மெல்லிய புன்னகை வந்து விடும்:)
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
தீபாவளி வாழ்த்துக்கள்.
subbu thatha
meenakshi paatti.
www.subbuthathacomments.blogspot.com
www.vazhvuneri.blogspot.com
தங்களுக்கும் குடும்பத்தினருக்கும்
துளசி தளம் வாசகர்களுக்கும்
இனிய தீபத் திருநாள் வாழ்த்துகள்!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்!
நன்றி! தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
லாலி பாப் கதை! :))))
உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.
நம்மாளுங்க எங்க போனாலும் எப்படியாவது முருகனும் கூடவே போயிர்ரான். அவர் போட்ட சிறுவிதை இன்னைக்குப் பெரிய மரமாயிருக்கு. எல்லாரும் வாழ்க.
வாங்க ராமலக்ஷ்மி.
அயல்நாட்டில் 136 வருசங்களா , தங்களுக்குத் தெரிஞ்ச வகையில் பாரம்பரியத்தைக் கட்டிக் காப்பாத்துவதே பெரிய விஷயம் இல்லையா?
இந்த பறை கூட ஃபிஜி தமிழ்ச்சங்கத்தில் மட்டும்தான். வட இந்தியர்கள் விழாக்களில் இல்லை!
ரசித்தமைக்கு நன்றிப்பா.
உங்களுக்கும் எங்கள் விழாக்கால வாழ்த்து(க்)கள்.
வாங்க, நான் ஒன்று சொல்வேன்.
நம்ம துளசிதளம் ஒரு சரித்திர வகுப்பு. நான்ஃபிக்ஷன் என்பதால் பதிவில் துல்லியம் வேணும். இனிப்பெல்லாம் தடவ முடியாது. அப்படி இனிப்புத் தடவியதால்தான் நாட்டின் பழைய சரித்திரங்களில் பல உண்மைகள் மறைக்கப்பட்டுவிட்டன, டைம் கேப்ஸ்யூல் புதைச்சு வச்சதைப் போல!
அவ்வளவு என்னத்துக்கு? சமீபகாலங்களில் தமிழ்நாட்டுப் பள்ளிகளில் பாடத்துக்கு வச்சுருக்கும் சரித்திரப் புத்தகங்களை சந்தர்ப்பம் கிடைச்சால் பாருங்க. அவரவர் ஆட்சிக்கு வந்ததும், சரித்திரத்தை மாற்றி அமைப்பாங்க. தேன் தடவன்னே ஆட்களும் இருக்காங்களே :-(
வாங்க ராஜ நடராஜன்.
ரொம்பநாளா ஆளையே காணோமே! நலமா?
தலைப்பு வச்சுத்தான் உங்களையெல்லாம் இழுக்கவேண்டி இருக்கு:-)
வாங்க இராஜராஜேஸ்வரி.
உங்களுக்கும் எங்கள் விழாக்கால வாழ்த்து(க்)கள்.
வாங்க மீனாட்சி அக்கா & சுப்புரத்தினம் மாமா.
உங்களுக்கும் எங்கள் விழாக்கால வாழ்த்து(க்)கள்.
வாங்க மனோ சாமிநாதன்.
உங்களுக்கும் எங்கள் விழாக்கால வாழ்த்து(க்)கள்.
வாங்க தமிழ் இளங்கோ
உங்களுக்கும் எங்கள் விழாக்கால வாழ்த்து(க்)கள்.
வாங்க வெங்கட் நாகராஜ்
அசப்புலே அசல் லாலி பாப்தான்:-)
உங்களுக்கும் எங்கள் விழாக்கால வாழ்த்து(க்)கள்.
வாங்க ஜிரா.
தமிழன் போன இடத்துக்கு முருகன் போகாமல் இருப்பானா? அதைவிட வேறென்ன வேலையாம்?
ரெண்டு நாளைக்கு முந்தி, முருகன் கூப்புட்டுட்டான்னு பினாங்கு பயணத்தில் 513 படிகள் ஏறி பாலதண்டாயுதபாணியை தரிசனம் செஞ்சுருக்கார் நம்ம கோபால்.
அவர் போட்டது ஆல் விதை! இன்றைக்குக் கப்பும் கிளையுமா இருக்கு!
வாங்க திண்டுக்கல் தனபாலன்.

Post a Comment