Tuesday, April 14, 2015

மன்மதன் வந்தானடி.........


இந்த வருசத் தமிழ்ப் புத்தாண்டுக்கு மன்மதன் வந்துருக்கான்.  ஒரு வருச ராஜாங்கம்!  நம்ம கேரளா அசோஸியேஷனில்  மூணு நாளைக்குமுன்னே  சனிக்கிழமை  கடந்துபோன ஈஸ்ட்டருக்கும், வரப்போகும் விஷுவுக்கும் சேர்த்து விழா கொண்டாடினோம்.எப்பவும் இது ரெண்டையும் சேர்த்தே கொண்டாடும் வகைதான். அடுத்தடுத்து  வரும் பண்டிகைகளுக்குத் தனித்தனிக் கொண்டாட்டம் செஞ்சுக்க முடியாது, பாருங்க. அதனால் கூடி இருந்து கொண்டாட வீக்கெண்டா வரும்  ஒரு நாளும்,  அவரவர் வீட்டுச் சொந்தக் கொண்டாட்டங்களுக்கு  பண்டிகை வரும் அதே நாளுமா வச்சுக்கிட்டோம். இதுவும் சௌகரியமாத்தான் இருக்கு!
 ஐஸ்வரியம் உள்ள விஷுக்கணி ஒருக்கி வச்சுருந்தாங்க. எல்லாப் பொறுப்புகளையும்  சிறுப்பக்கார் வசம் கொடுத்தாச்சு.  அவுங்களும் நல்லாவே செய்யறாங்க. நாங்க முதியோர்  வழிகாட்டுனாப் போதும்!

சங்கத்துக்குப் பெயர் சூட்டி  ரெஜிஸ்ட்டர் செஞ்சு ஆச்சு  வருசம் பத்து! அதற்கான  விழாவையும் இதுலே சேர்த்துக்கிட்டோம். சங்கம் நிறுவனர்  என்ற கணக்கில் ஒரு பதினைஞ்சு பேருக்கு  மரியாதை செய்யணும். அதுலே  எண்மர் நாட்டைவிட்டு வேறு நாடுகளுக்குப் போயாச்சு. பாக்கி இருக்கும் எழுவருக்குப் பூங்கொத்தும்,  சேவை பிழிஞ்சதுக்கான பாராட்டுப் பத்திரமும் கிடைச்சது. நமக்கும்தான்னு  தனியாச் சொல்லணுமாக்கும்:-))))


புதுசா இங்கே ஆரம்பிச்சுருக்கும் இண்டியன்  ரெஸ்ட்டாரண்டில் சாப்பாட்டுக்கு ஆர்டர் கொடுத்தாச்சு.  வெஜிட்டேரியன்களை காயப்போடாதீங்க மக்களேன்னு  உரப்பிச்சுச் சொன்னேன். எப்பவும் எனக்கு ஒரு ச்சன்னா கறிதான்  கிடைக்கும்  வேறே ஏற்பாடு செய்யறேன்ன  இளைஞர் ஜஸ்ட்டின். வீட்டுக்கு வந்து மெனு சொல்லிட்டுப் போனார்,


வெஜிட்டபிள் ப்ரைடு ரைஸ்,  சிக்கன் கறி, மலாய் பனீர்,  பப்படம், ஊறுகாய்  இவைகளோடு விஷூ என்பதால் ஒரு பாயஸம்.

பிங்க் சட்டை செயலாளர், நீலம் தலைவர் (இந்த ஆண்டுக்கு)

ஹாலில் குடி இருக்கும்  Fan Tail பறவை ஒன்னு பயந்து போயிருக்குக் கூட்டத்தைப் பார்த்து:(  படபடன்னு பயத்துடன்  மேலேசுத்தி சுத்தி வந்ததைப் பார்த்துக்கிட்டே இருந்தேன். கதவைத் திறந்து வச்சாலும் வெளியே போகலை. பாவமா இருந்துச்சு.கலைநிகழ்ச்சிகள்  அதிகம் இல்லாமல்  இருந்தது  அருமை. ஜஸ்ட் ஒரு டான்ஸ், ரெண்டு பாட்டு. போதும் யதேஷ்டம்!

ஆச்சு.... இன்றைக்கு மன்மதன்  வந்தே வந்துட்டான். ச்சும்மா வரப்டாதா? ஏகத்துக்கும்  ஜில்லுன்னு குளிரைக் கூடவே கூட்டி வந்துருக்கான். வெறும் 10 டிகிரி. கூடவே மழை!   சாமிப் பாட்டுகள் ஒலிக்க  குளிருக்கு இதமா  ஹீட்டர் போட்டுக்கிட்டு,  வலையில்  மேயோ மேய்ன்னு மேய்ஞ்சுக்கிட்டு   சித்திரை திருநாளைக் கொண்டாடிக்கிட்டு இருக்கேன்!

வருசப்பிறப்பு ஸ்பெஷலா நம்ம வீட்டுக்கு  ஃபைபர்  ஆப்டிக் அல்ட்ரா ப்ராட்பேண்ட் வந்தாச்! வந்த விவரம் இன்னொரு பதிவில்:-))))

இதுதான் நமக்குப் புதுவருசப் பரிசு.

டௌன்லோட் ஸ்பீடு 31.40 Mbps
அப்லோட் ஸ்பீடு  11.06 Mbps.

நம்ம வீட்டு வருசப்பிறப்பு மெனு:  கேஸரி,  வடை,  நம்மாத்து மாங்காய்ப் பச்சடி,  சுரைக்காய் கூட்டு, பருப்பு  ரஸம், தயிர்.சாயங்காலம் கோவிலுக்குப் போய் வரணும்.

நண்பர்கள் அனைவருக்கும்  தமிழ்ப்புத்தாண்டுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.  நல்லா இருங்க!

விஷூ ஆசம்ஸகள்.  பகவானோடு ப்ரார்த்திக்குந்நு.  ஈ கொல்லம் நன்னாயி வரட்டே!  மங்கலம்  அனுக்ரஹிக்குனே!28 comments:

said...

//விஷூ ஆசம்ஸகள். பகவானோடு ப்ரார்த்திக்குந்நு. ஈ கொல்லம் நன்னாயி வரட்டே! மங்கலம் அனுக்ரஹிக்குனே!//

யானும் அதுதன்னே இஷ்டயிக்குனு.

said...

//டௌன்லோட் ஸ்பீடு 31.40 Mbps//
ஹூம், பெருமூச்சுதான் விடவேண்டும்.
சரி, அது எப்படியிருக்குன்னாவது விரிவா எழுதுங்கோ.

said...

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அம்மா...

said...

விஷு நாளைக்கு தானே? இன்றைக்கு தமிழ் வருஷ பிறப்பு. இரண்டிற்கும் சேர்த்தும் மற்றும் அம்பேத்கார் ஜெயந்திக்கும் சேர்த்து நல்வாழ்த்துக்கள்.

--

Jayakumar

said...


சிலநேரங்களில் தமிழ் வருடப்பிறப்பு தையிலா சித்திரையிலா எனும் சந்தேகம் வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன் தமிழ் அற்ஞர்கள் தையே தமிழனின் வருடன் பிறக்கும் மாதம் என்று கூறியதால் ஒரு அரசாணை பிறப்பிக்கப்பட்டதாகவும் லேசானநினைவு. அயல் நாடுகளில அயலவரோடு பண்டிகை தினங்கள் கொண்டாடுவது இதமே.

said...

இனிய விஷு திருநாள் வாழ்த்துகள்.

எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

said...

மகிழ்ச்சியான தருணங்கள். உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும், எனது உளங்கனிந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! படங்கள் அனைத்தும் வழக்கம்போல் சிறப்பாக உள்ளன.

said...

இப்படி பொது விழாக்களில் கலந்து கொள்வதும் ஒரு கொடுப்பினை......

தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

said...

அட்டகாசம் அசத்துறேள் போங்கோ துள்ஸ்.

எனக்குப் பிடிச்ச பனீர் க்ரேவியையும் பாயாஸத்தையும் சேவிச்சுண்டேன். ஹாஹா கோவிச்சுக்காதேள். சின்னப் புள்ளயில கணபதி விலாஸ் அப்பிடிங்கிற ப்ராமின் ஸ்கூல்ப படிச்சேனாக்கும். எனக்கு அந்த பாஷை நெம்ப இஷ்டமாயிட்டு.

இங்க பையனும் நானும்தான் அதுனால பாயாசம் வடை எல்லாம் பண்ணல. சார் தமிழ்நாட்டுல. சின்னவர் அயல்நாட்டுல. பெரியவரும் ஆஃபீஸ் போயிட்டார். யாருக்காக பாயாசம் . நானே குடிச்சு குடிச்சு கும்முன்னு ஆயிடுறேன். ஹ்ம்ம்

சரி அடுத்த புக் ரெடியாயிட்டு இருக்கா. அட்வான்ஸ் வாழ்த்துகள். :)

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் :)

said...

இனிய கொண்டாட்டம்.

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துகள் !

said...

புது வருஷ வாழ்த்துக்கள் துளசிக்கும் குடும்பத்தாருக்கும் !!!

said...

உங்களுக்கும், கோபால் ஸாருக்கும் புது வருட நல்வாழ்த்துக்கள்!

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

உங்கள் இஷ்டம் எங்கள் பாக்யம்!

விரிவா எழுதும் வாய்ப்பை அப்படித் தவற விடுவேனோ:-)))

said...

வாங்க யாழ்பாவாணன்.

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

நன்றிகள். மூணுநாளைக்கப்புறமும் சொல்லலாம்தானே!

said...

வாங்க ஜயகுமார்.

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

நாட்டில் எத்தனையோ தீர்க்கப்பட வேண்டிய சமாச்சாரங்கள் காத்து இருக்க,

வருசப்பிறப்பு என்றைக்கு என்பதை மட்டும் முக்கியமாக நினைத்து மாறிமாறி சண்டை போட்டுக்கறதை என்னன்னு சொல்றது?

எப்படி இருந்தாலும் இந்த ரெண்டு நாட்களுமே விடுமுறைதான். டாஸ்மாக் ஸ்டாக் பண்ணுவதிலும், விற்பனை டார்கெட் நிர்ணயிப்பதிலும் கவனம் செலுத்தினால் போதாதா என்ன?

said...

வாங்க ஜிரா.

உங்களுக்கும் எங்கள் அன்பான வாழ்த்து(க்)கள். நல்லா இருங்க.

said...

வாங்க தமிழ் இளங்கோ.

வணக்கம் நலம்தானே?

வருகைக்கும், வாழ்த்துகளுக்கும், ரசனைக்கும் நன்றிகள்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

இப்ப எல்லாமே இங்கே பொதுவிழாவாதான் போச்சு. கூடி இருந்து கொண்டாடுவதும் நன்மைக்கே!

said...

வாங்க தேனே!

என்ன இப்படிச் சொல்லிப்புட்டேள்? இதுவும் நன்னாத்தானே இருக்கு!

பாயாஸம் வச்சால்.....ஐயா குடி அம்மா குடின்னு பாடணும். பெருமாளோ,கண்ணால் பார்ப்பதோடு சரி. அதான் நம்மாத்து சாமிக்கும் பாயாஸம் என்றால் கேஸரி என்று பொருள் மாற்றம் செஞ்சேன். அவரும் சரின்னுட்டர்!

வாழ்த்துகளுக்கு நன்றீஸ்.

said...

வாங்க ராமலக்ஷ்மி.

நன்றி.

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எங்க்ள் இனிய வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க சசி கலா.

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க ரஞ்ஜனி.

வணக்கம். நலம்தானே?

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.

நன்றீஸ்.

said...

சாப்பாடு டிஸ்ப்ளே கண்ணைக் கட்டுதே!!!

said...

அந்தக் குட்டிப்பாப்பா கொள்ளை அழகு!

said...

வாங்க துளசிதரன்.

பாப்பா, இப்போதைய தலைவரின் மகள்.

அழாம இருக்குன்னது ஸ்பெஷல்:-)

எங்க ஓணம் விருந்து டிஸ்ப்ளே இன்னும் அருமையாக்கும், கேட்டோ:-)