Thursday, April 16, 2015

டௌன்லோட் ஸ்பீடு 31.40 Mbps . அப்லோட் ஸ்பீடு 11.06 Mbps.

வருசப்பிறப்பு ஸ்பெஷலா நம்ம வீட்டுக்கு  ஃபைபர்  ஆப்டிக் அல்ட்ரா  ஸ்பீடு ப்ராட்பேண்ட் வந்தாச்!  நாடு முழுசுக்கும்  தெருத்தெருவா வீட்டு வாசல்கள் வரை  அரசாங்கம்  லைன் போட்டுக் கொடுத்துக்கிட்டு இருக்கு.

 போன டிசம்பர்  நம்ம தெருவில் வாசல் வேலைகள் முடிஞ்சது. நடைபாதையில் நம்ம காம்பவுண்டு எல்லைக்கு அருகில்  ரெண்டு வீடுகளுக்கு இடைப்பட்ட இடத்தில்  சின்னதா  பள்ளம்தோண்டி அதுவழியா டைரக்‌ஷனல் ட்ரில்லிங் மெஷீனை அனுப்பி தரைக்கடியில் பூமியை ஒரு அஞ்சு செமீ  விட்டம் இருக்கும் குழாயைப் புதைத்து இழுத்துக்கொண்டு போனாங்க.  இந்தவகை ட்ரில்லிங் மெஷீனில் சின்ன Sensor  இருக்காம். அது போறபோக்கில் குறுக்கே  வரும் தண்ணீர்க்குழாய், பவர் லைன்  இதையெல்லாம் காமிச்சு அவற்றை சேதப்படுத்தாமல்  மேலேறித் தாண்டியும் போகுமாம். தகவல் உதவி: நம்ம கோபால். நன்றிகள்.

வேலை முடிந்த அடுத்தநாளே தோண்டியவைகளை நிரப்பிவிட்டு, தார் ஸீல் போட்டு,  புல்லிருக்க வேண்டிய இடமானால், புல்விதைகளைத் தூவி, தினமும் வந்து தண்ணீர்  ஊற்றின்னு எல்லா வேலைகளையும் ஒரு குற்றம்குறை இல்லாமல் நிறைவாச் செஞ்சு முடிச்சுட்டுப்போனாங்க.







இங்கே எனக்கு ரொம்பவே பிடிச்ச விஷயமுன்னா....  தெருவில்  வேலை செய்யவரும் தொழிலாளிகளுக்கான  வசதிகள் முதலில்  செஞ்சுருவாங்க.  கெமிக்கல் டாய்லெட்  கொண்டு வந்து வச்சுட்டுத்தான் மற்ற வேலைகள்.  தெருவையோ நடைபாதைகளையோ அசிங்கப்படுத்துவதில்லை. எதுக்காவது பள்ளம் தோண்டினால்  வேலைமுடிஞ்ச உடனே  அதை நிரப்பிருவாங்க.






 ஒருநாளைக்கு மேற்பட்டு நடக்கும் வேலைகள் என்றால்  அதைச் சுற்றி போதிய தடுப்புகள்,  இரவு நேரப்போக்குவரத்துக்கான எச்சரிக்கை ரிஃப்லெக்டர்கள் , ட்ராஃபிக் கோன்கள் எல்லாம்  வச்சு ஒரு  பூனைகூட  குழிக்குள்ளே விழாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள்  எடுப்பாங்க. எடுக்கணும்.

இப்பப் பாருங்க எதிர்வரிசையில் குடிநீர் மெயின் குழாயை அகலப்படுத்திக்கிட்டு இருக்காங்க. அங்கே கட்டிமுடிச்ச ஒரு புதுவீட்டுக்கு  தண்ணீர் இணைப்பு  ரெண்டு நாளைக்குப்பின் கொடுக்கப்போறாங்களாம். அதனால்  இந்தத் தேதியில்   இந்த மணிமுதல்  இந்த மணிவரை உங்க வீட்டுக்கு தண்ணீர் சப்ளை மூணு மணிநேரத்துக்கு நிறுத்தப்படும். தேவையான தண்ணீரைப் பிடிச்சு வச்சுக்குங்கன்னு சொல்லி தபால்பெட்டியில் தகவல் போட்டுட்டுப் போயிருக்காங்க. காஃபி டீ குடிப்பதுதான் தலையான சமாச்சாரம் போல்!  ஃபில் த கெட்டில்னு போட்டுருக்கு!

அந்த நாள் இந்த நாள்!  தண்ணி இல்லைன்னு சமைக்கலைன்னு  கோபாலுக்கு மெயிலனுப்பிட்டு  உக்கார்ந்து எழுதறேன்:-)

மெயின் எக்ஸ்சேஞ்சு பாக்ஸில்  தொடர்பு பூர்த்தியானதும், நம்ம வீட்டுக்கு  ஒரு மடல். உங்க வீட்டாண்டை வேலை முடிஞ்சு  வீட்டுக்குள் தொடர்பை அனுப்ப நாங்கள் ரெடி. அதை வாங்கிக்க நீங்க ரெடியா?  கரும்புத் தின்னக் கசக்குதா? நாங்கள்  டபுள் ரெடின்னோம்.

"இணைக்கும் வேலைகள் முழுவதும் இலவசம்! ஆனால் மோடம் மட்டும் காசு கொடுத்து வாங்கிக்கணும். பத்து டாலர் காசு தந்தால் உடனே மோடத்தை அனுப்பிடுவோம், மேடம்"

"ஏம்ப்பா ,அதை கனெக்ட் செய்ய ஆள்வருமே அவராண்டை தரப்டாதா?"

"அய்ய....   அது வேற ஆளுங்க. மோடம் சப்ளை வேற ஆளுங்க மேடம்.
அதுக்குக்  காசு வாங்கிக்கும் நாங்க வேற ஆளுங்க. கூரியர்லே மோடம் வந்துரும் மேடம். ஓக்கேவா?"

"ம்...அனுப்புங்க."

மூணாம் நாளிலேயே வந்துருச்சு. அடுத்த வாரத்தில் ஒருநாள் தொலைபேசியில் கூப்புட்டு,  இந்தவாரம் இன்னின்ன நாளிலே இன்னின்ன நேரம் இருக்கு. எது  வசதிப்படும் என்றொரு கேள்வி. இந்த நாள், இந்த நேரம் என்றேன்.  அன்றைக்கு  பூர்வாங்க வேலைக்கான திட்டம் தீட்ட  ஆள் வரும். நீங்க வீட்டுலே இருப்பீங்கதானே?  இருக்கேன். ஒருத்தர் வந்து பார்ப்பார்.

இது  விஸிட் நம்பர் ஒன். அதன்பின் அடுத்த வாரம்   ஈஸ்டர் ஹாலிடே முடியும் வாரம் என்பதால் அதுக்கு அடுத்த வாரம் ஏப்ரல் 13  விஸிட் நம்பர் 2 ஓக்கேவான்னார்.  அப்போ என்ன வேலையாம்?  மொத்த வேலையும் அன்றைக்குத்தான். நாலுமணி நேரம் எடுக்கும். காலை எட்டரையா இல்லை பகல் பனிரெண்டரையான்னு  கேட்டு பனிரெண்டரைன்னு சொன்னேன். இன்னொரு வேலையும் இதுக்கிடையில் இருக்கு. அதுக்கு நீங்கள் வீட்டில் கட்டாயம் இருக்கணும் என்றில்லை. வெளிவேலைதான். செஞ்சுட்டுப்போயிருவாங்கன்னார். ஸோ மூணு  விஸிட் உண்டு.

சொன்னபடி ஒருத்தர் வந்தார்.  எந்த இடத்தில் போடலாமுன்னு பார்த்தார். இப்ப இருக்கும் லைனுக்கு நேரெதிரா அடுத்த கேட்டுக்குப் பக்கம். அங்கேதான் Bப்ளோன்  ஃபைபர்   ட்யூப்  வச்சுட்டுப்போயிருக்காங்களாம்.  அதுக்குண்டான  ரோட் சைட் கேபினட் 200 மீட்டர் தூரத்தில் இருக்காம். அங்கிருந்து  வந்து நம்ம வீட்டுக்குள் வரணும். வெளிப்புறத்தில் ஒரு  ஹௌஸ் என்ட்ரி பாய்ண்ட்க்கு  சுவரில் ஒரு பெட்டி வச்சு அதன் மூலம் கூரைக்குள் வந்து   வீட்டு உட்புறத்துக்கு வரும்  தொலைபேசி லைனுக்குக் கொண்டு வந்துருவாங்களாம். அதன்பின் மோடம், ரௌட்டர் எல்லாம்  வீட்டுக்குள்  ஃபோன் ஜாக் ,பவர் பாய்ண்ட் இருக்குமிடத்தில் வச்சுருவோமுன்னு சொல்லி  விளக்கினார். நாங்களும் வீட்டுக்குள் வரும் இடம்  எங்கிருக்கணும் என்று சொன்னோம். எதாவது வீட்டுக்கு டேமேஜ் ஆனால் ரிப்பேர் செலவு  அவுங்களுதுன்னார்.  அதுக்காக ஒன்னயும் உடைச்சுடாதீங்கன்னேன். ஒப்பந்ததில்  கையெழுத்தாச்சு.







எதாவது  கேள்வி இருக்கா?ன்னார்.  உடனே கேட்டுட்டேன். "ஏற்கனவே ப்ராட்பேண்ட் கனெக்‌ஷன் போட்டுருக்கோமே... அதுலேயே இதையும் சேர்க்கப்டாதா?  நூறு இடத்துலே தோண்டணுமா? அதுவும் நம்மூட்டு எல்லைக்குள்!"

"முடியாதுங்களே. அது காப்பர். இது ஃபைபர் க்ளாஸ். "


ஏப்ரல் பத்து, வெள்ளி  காலை ஒருத்தர் வந்து வாசல் கேட் பக்கம்  ட்யூப் வச்சுருக்கும் இடத்தில் இருந்து  வீட்டின் வெளிப்புற சுவரில்  வைக்கப்போகும்  ஹௌஸ் எண்ட்ரி பாக்ஸ் வரை இருக்கும் இடத்தில் ஒரு ட்ரெஞ்ச் வெட்ட ஆரம்பிச்சார். எவ்ளோ ஆழம் என்றேன்.  300  எம் எம். ஓக்கே ஒரு அடின்னேன்.  நியர்லி ஒரு  அடி இருக்கலாமென்றார்.   ஹாஹா..... 300  ஒரு அடிதான் என்றதும்  ஒரு பத்துவிநாடி யோசிச்சவர் இருக்கலாம் என்றார்!





பள்ளம்தோண்டி ட்யூப் ஒன்றை புதைச்சு வச்சுட்டுப்போனார். இங்கெல்லாம் வேலையை செஞ்சு முடிச்சு  அந்த இடத்தை முன்பிருந்தது போலவே வச்சுட்டுப்போகணும். போனார்.



கடைசி விஸிட்  ஏப்ரல் 13..  காலை ஒரு பத்துமணி அளவில் ட்ராஃபிக் மேனேஜ்மெண்ட் ஆட்கள் வந்து  தெருவெங்கும்  ட்ராஃபிக் கோன்களை வச்சுட்டு  ஸ்டாப், கோ  சிக்னல் வச்சு  வண்டிகளை ஒழுங்குபடுத்த ஆரம்பிச்சாங்க. ஒரு நாலைஞ்சு ட்ரக், டிக்கர்  எல்லாம் வந்து நின்னதும்  ஒரு ப்ராட்பேண்ட் போடவா இவ்ளோ  அமர்க்களமுன்னு ஆயிருச்சு. வெளியே போய் விசாரிச்சால்.....  எதிர்சாரிக்குப்போகும்  தண்ணீர் பைப்லைன் சின்னதா இருக்குன்னு பெரிய குழாய் மாத்தறாங்களாம்.

பனிரெண்டே காலுக்கு  ஒரு வண்டி வந்து வீட்டின் முன் நின்னது.  உள்ளே இருக்கறவர் நிதானமா  ஸாண்ட்விச் மென்னுக்கிட்டு உக்கார்ந்துருக்கார்.  தெருவில்200 மீடர் தாண்டி  இருக்கும்  ரோடு ஸைட் கேபினெட்ட்டில் இருந்து  ஒயர் ஊதும் Bப்ளோயராம்.  லஞ்சு டைமுன்னு  சொன்னார்.


கோபாலுக்கு ஃபோன் செஞ்சு  வந்தாச்சுன்னேன். கிளம்பி வந்தார்.  அதுக்குள்ளே இன்னொரு வண்டியும் வந்தது.  இவர்தான்  நம்ம வேலை செய்யப்போறார்.  அவரிடம் போய் பேசிய கோபால் உள்ளே வந்து,  வந்தவர்  ஒரு தமிழ்க்காரர் என்றார்!  பேர் என்னவாம்? 'ஜே'ன்னார்.


அப்ப சாட் லைனில் நம்ம கொத்தனாரோடு பேசிக்கிட்டு  இருந்தேன். வேலை நடக்குது. வந்தது  தமிழ்க்காரர் என்றதும்.... 'உங்களுக்குன்னு  வர்றாங்க பாருங்க. இன்ட்டர்வ்யூ எடுக்கலையா'ன்னார். தோ....போறேன். பதிவுக்கான மேட்டர் இல்லையோ!

உடனே போய்ப் பார்த்தேன்.விவரம் எல்லாம் சேகரிச்சாச்சு.  பெயர் பூவண்ணன் . அப்பா பெயர் ஜெயராமன்.  வெள்ளைக்காரனுக்கு  பெயர் சொல்லக் கஷ்டம் என்பதால்  ஜே ஆகிட்டார்!   நல்ல வேளை 'பூ' ன்னு வச்சுக்கலை:-))))))  தப்பிச்சார்!
 சிங்காரச் சென்னையில் சாலிகிராமம் வீடு. ஆக்லாந்தில்  சிலவருசம் வேலை செஞ்சுட்டு (அக்கா இருக்காங்களாம்)  இப்போ ஃபைபர் போடும் கம்பெனியில் ஒப்பந்தம் கிடைச்சுருக்கு.  மனைவியும் மகளும் வந்து எட்டு மாசமாறது.12 வயசு  மகளை இங்கே பள்ளிக்கூடத்தில் சேர்த்தாச்சு.  ஒருநாள் கூட்டிட்டு வரச்சொன்னேன்.

ரோடு சைடில் இருக்கும்  டிஸ்ட்ரிப்யூஷன் கேபினெட்டில் இருந்து  ஃபைபர் ஆப்டிக் ஒயரை  Bப்ளோ பண்ணி நம்மூட்டு கேட்டுக்கருகே வச்சுருக்கும்  சின்ன ட்யூப் மூலம்  வீட்டு எல்லைக்குள் அனுப்புனாங்க. அங்கிருந்த ஊதுனது மெதுவா....இங்கே  அடுத்த முனையில்  இணைச்சுருந்த ஒரு சாஃப்ட் ட்ரிங்க் பாட்டிலுக்குள் முளைச்சு வந்துச்சு:-)  தூசி தும்பு படக்கூடாதோ?







இதுதான் அந்த ஃபைபர்னு காமிச்சார் கோபால். பூவண்ணனோடு பேசிக்கிட்டே சித்தாள் வேலை செய்வதைப் பார்த்தேன்:-)   உபகாரி! அப்புறம் நம்ம  கூரைக்குள்  போய்  ஒயரை இழுத்து  வூட்டுக்குள்ளே அனுப்பி, மறுபடி வீட்டுக்குள் வந்து  இணைப்பு கொடுத்தாச்சு. முந்தி ஒரே  ஒரு மோடம் மட்டுமே. இப்ப  ஒட்டைக்கூத்தனுக்கு ரெட்டைத்தாப்பாள் என்றமாதிரி ரெண்டு  சமாச்சாரம் . 24 மணி நேரமும் மினுக்மினுக்ன்னு பச்சை விளக்குகளின்  ஆட்டம்.  நைட் லேம்ப் !




எல்லாம் முடிஞ்சதும்  செக் பண்ணிப்பார்த்து ஓக்கே சொன்னார் பூவண்ணன்.
டௌன்லோட் ஸ்பீடு 31.40 Mbps
அப்லோட் ஸ்பீடு  11.06 Mbps.

அப்பதான் இன்னொரு இளைஞரும்  வந்து சேர்ந்தார். நம்ம  பூவண்ணனிடம் வேலை கற்றுக்கொள்ளும் அப்ரண்டீஸாம். வேலை முடியும் சமயம் டான்னு கரீட்ட்டா வந்தால்....வெளங்கிரும். பெயர்  மைக். அயர்லாந்துக்காரர். எங்கூரில் நகர நிர்மாணம் நடப்பதால்  ஸ்கில்டு ஆட்களுக்கு வேலை வாய்ப்பு  இப்போ அதிகம்.  வேலை கத்துக்க வந்தாலும்  வரவேற்புதான்.

சாயா குடிக்கிறீங்களான்னா.... மைக் பயந்த முகத்தோடு வேணாமுன்னார்:-) இங்கெல்லாம் வீட்டுலே எதாவது வேலைக்கு வரும் நபர்களுக்கு நாம் ஒரு உபசாரமும் பண்ணத்தேவை இல்லை. எங்கும் எதுக்கும் டிப்ஸ் கூட கொடுக்க வேணாம். Tips இல்லாத நாடுகள் நியூஸியும் ஆஸியும். அதனால் யாரும் தலையைச் சொறியக்கூட மாட்டாங்க.

நம்ம  ப்ரேயர் ரூமைப் பற்றி முதலில் வந்து பேசிட்டுப் போனவர் பூவண்ணனுக்கு இங்கே அஸைன்மெண்ட் ஆனதும்,  'மைண்ட் ப்ளோயிங் ப்ளேஸ். யூ வில் லவ் இட் ' என்று சொன்னாராம். கூட்டிப்போய் காமிச்சேன்.  பெருமாளுக்கு  தண்டனிட்டு வணக்கம் செஞ்சார்.

'தமிழ்க்காரர் வீட்டுக்குத் தமிழ்க்காரர்தான்  அல்ட்ரா ப்ராட்பேண்ட் போட்டுத்தரட்டுமுன்னு ஆளை அனுப்பினேன்'னு  பெருமாள் சொன்னமாதிரி இருந்துச்சு.

இனி மொத்த நாட்டுக்கும் போட்டுமுடிக்கணும். 2017 இல் முடிஞ்சுருமாம். அதுவரை  வேலை உறைப்பு!  வேறெந்த நாட்டில் ஃபைபர் ஆப்டிக் அல்ட்ரா ப்ராட்பேண்ட் , நாடு முழுசும் போட்டுருக்காங்கன்னு பார்த்தால்  முதலிடம் சிங்கைக்கு! நம்பர் ஒன்!

சரி...போய் தண்ணி வருதான்னு பார்த்துட்டு எதாவது ஆக்கி வைக்கிறேன்.

PIN குறிப்பு:  தொழில்நுட்ப சமாச்சாரமெல்லாம் புரியற மாதிரி
 எனக்குச் சரியா எழுதவரலை. முடிஞ்சவரை செஞ்ச முயற்சி. 

29 comments:

said...

hearty congrats! :)

said...

நல்லா வயித்தெரிச்சல் கிளப்பறீங்க. நாங்க 512 Kbps ல விழி பிதுங்கறோம். விண்டோஸ் 8 ரீஇன்ஸ்டால் பண்ணறதுக்கு 2 நாள் முழுசா ஆச்சு.

said...

யம்மாடி...! எத்தனை வேலைகள்...!

said...

உண்மையா கந்தசாமி அய்யா சொன்னது போல் வயித்தெரிச்சலாதான் இருக்கு. இங்க நாங்க டவுன்லோட் பண்ணின சக்கரம் சுத்திக் கிட்டே இருக்கு.
நல்ல அனுபவ பதிவு.

said...

அந்த நாள் எங்களுக்கும் வந்திடாதோ என்று இந்தியாவில் ஏக்கத்துடன் காத்திருக்கிறோம்.
something tells me எங்களுக்கும் விரைவில் வந்து விடும் என்று. டவுன் லோட் ஸ்பீட் 31.40 mbps aஆ.......திறந்த வாய் மூட சில நிமிடங்கள் ஆனது.

said...

உண்மையிலேயே முன்னேறிய நாட்டில், ஒரு well-governed நாட்டில், organized society-யில் வாழ்கிறீர்கள். அதிர்ஷ்டக்காரர்!
20 வருடங்கள் வெளிநாடுகளில் (ஜப்பான், ஸ்விஸ் உட்பட) வாழ்ந்து நான் இந்தியா திரும்பி இரண்டு வருடம் ஆகப் போகிறது. நீங்கள் சொல்வது புரிகிறது. இந்தியாவிலும் வளர்ச்சியின் பல தளங்களைப் பார்க்கலாம். இருந்தும், சுத்தம், சுகாதாரம், செய்யப்படும் வேலைகளில், அரசுப்பணிகளில் நேர்த்தி போன்றவை இங்கு வந்தடைய இன்னும் எத்தனை வருஷமாகுமோ தெரியவில்லை.
-ஏகாந்தன் http://aekaanthan.wordpress.com

said...

வாங்க கீதா.

நன்றீஸ்ப்பா!

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

நீங்கதானே விரிவா எழுதச்சொன்னீங்க? அதுதான்.....

இந்த ஸ்பீடை விட இன்னும் அதிக ஸ்பீடும் இருக்கு. 100 டௌன்லோடு 50 அப்லோடுன்னு! இதுக்கு இன்னும் 20 டாலர் கூடுதலா அழணும்:-)

எல்லாம் மாவுக்கேத்த பணியாரம்தான்!

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

நான் கூட நினைச்சுப் பார்க்கலை இதுக்குப்பின்னே இவ்ளோ வேலைகள் இருக்குன்னு!

அதான் ஒரு இடத்தில் இருக்கட்டுமேன்னு இங்கே போட்டு வச்சேன்:-)

said...

வாங்க செந்தில் குமார்.


சக்கரம் சில இடங்களில் சுத்தத்தானே வேணும்! சுழற்சி நின்னுபோனால் கஷ்டமில்லையோ!

ஆனா இது வலையில் சுத்த வேணாமேன்னுதான் இருக்கு:-(

said...

வாங்க ராஜலக்ஷ்மி.

இன்னும் இருபது டாலர் கூடுதல் கட்டுனா இன்னும் ரெண்டு மடங்கு அதிக ஸ்பீடு வேற கிடைக்குதே! நாம எழுதும் லக்ஷணத்துக்கு இதுவே போதுமுன்னு இருக்கேன், இப்போதைக்கு:-)

said...

வாங்க விஜய் சாரதி.

அரசுப்பணிகளில் நேர்த்தி இருந்த காலங்கள் போயே போச். இப்ப கடமையைச் செய்யவே கையூட்டு :(

அரசு ஒதுக்கும் நிதிகளில் ஒரு 10% முழுங்கிட்டு, மீதியை அந்த சேவைகளுக்குப் போட்டால் ஓரளவாவது நல்லவை நடக்கும்.

ஆனால் 90 % முழுங்கிட்டு பாக்கியை போனால் போகட்டுமுன்னு பணிகளில் போடுவதால்தான் இந்த கதி:(

இதுலே முதலில் இருந்த அரசு செய்ய ஆரம்பித்த பணிகளை, புதிதாகப் பதவிக்கு வந்த அரசு தொடர்ந்து செய்வதை விடுத்து, அதைக் கிடப்பில் போட்டு வச்சுடறாங்க. இதெல்லாம் ஏதோ அவரவர் சொந்தக் காசில் செய்வதைப்போல. பொதுமக்கள் கொடுக்கும் வரிப்பணம், பொது சொத்து என்ற எண்ணம் துளியாவது உண்டா?

இப்படி இருக்கே என்ற ஆதங்கம்தான். வேறெங்கே போய்ச் சொல்லி அழ?

said...

கிரேட் நியூஸ் துளசி கேக்கவே சந்தோஷமா இருக்கு. அப்பாடி எவ்வளவு வேலைப்பா. என்ன கச்சிதமாச செஞ்சு முடிச்சிருக்காங்க.. ரொம்ப நல்லா இருக்கு. விண்டர் ரொம்பத் தெரியுதோ. எல்லாரும் ஜாக்கெட் ச்வேட்டர்லாம் போட்டு இருக்காங்க? ஒன்னும் புரியலை. இருந்தாலும் நல்ல வேலைன்னு புரியுது. நம்ம ஊருக்கு வர இன்னும் 10 வருஷம் ஆகலாம். இப்பதாநே 1700 ஆயிரம் கோடி போனது தெரியும். அப்புறமா என்ன நடக்கப் போகுதுன்னு பொறுத்திருந்து பார்க்கணும்.
பி.கு. கொத்தனார் நலமா.

said...


ஒரே வரியில் சொல்வதானால் கொடுத்து வைத்தவர்கள் எங்கள் வீட்டு முன்னாலும் இந்த மாதிரி ஃபைபர் ஆப்டிக்ஸ் கேபிளுக்காக தோண்டினார்கள் கேபிள் என்னவோ சாலையின் அடியில்தான் போகிறது ஆனால் கொடுமை என்னவென்றால் தோண்டிய பள்ளம் நிரப்பவும் சாலையை சரி செய்யவும் ( அதுவும் சரியாகச் செய்யவில்லை) ஒரு வார காலத்துக்கும் மேல் ஆயிற்று, அங்கு நான்கு மணிநேரப் பணி செய்ய எத்தனை திட்டமிடல். அது சரி no lunch is free என்பார்களே . உங்கள் கையைக் கடித்தது எவ்வளவு?

said...

நீங்களும் பைபருக்கு மாறிட்டீங்களா? நாங்க மாறி ஏழெட்டு மாசம் ஆச்சு. 40MBPS டவுண்லோடு லைன். ஆனா இங்க மோடம் வேண்டாம்னு சொன்னாங்க. Wifi மோடம் மட்டும் வாங்கி கணெக்ட் பண்ணிருக்கோம். அதுவரைக்கும் Airtel broadband வெச்சிருந்தோம். ஒரே அச்சலாத்தி. நெறைய ஏமாத்தல்கள். Cheaters. சரியான நேரத்துல ACT Fibernet வந்தது. மாறிட்டோம்.

அப்போ பூவண்ணன் அடுத்த மூனு வருடத்துக்கு பிசின்னு சொல்லுங்க.

said...

இங்கன ஒவ்வொரு சைட்டுக்கும் காசு வாங்கப்போறாங்களாம்... இலசவம்னா கொஞ்சம், இன்னும் வேணும்னா நிறைய... :(

said...

நியூசிலாந்து - கோபால் சாரும் நீங்களும் கொடுத்து வைத்தவர்கள். படங்களைத் திரும்பத் திரும்ப பார்த்தேன். இந்தியாவில் இதுபோல் வர வாய்ப்பில்லை. உழன்று கொண்டே எங்கள் காலம் ஓடிவிடும்.

said...

வாங்க வல்லி.

இந்த வருசம் ஏர்லி விண்ட்டராம். ஏப்ரலிலேயே ஆரம்பிச்சுருச்சு. நேத்து கோபாலுக்குத்துணையா அவரோட வழக்கமான செக்கப்புக்கு டாக்டராண்டை போனா.... என்னைப் பார்த்ததும் உனக்கு முதல்லே ஃப்ளூ ஊசிபோடணுமுன்னு கையோட கொண்டு வந்து போட்டுவிட்டுட்டாங்க. முட்டை தின்னுருக்கேன் என்று சொல்லியும் தப்பிக்கமுடியலை. அது சாக்லேட் ஈஸ்ட்டர் எக்ன்னு கோபால் உண்மையைச் சொல்லிட்டார்:-)

இதுக்குக் கடைசியில் சார்ஜும் வாங்கிக்கலை. அரசு இலவசமாக் கொடுக்குதாம், ஆஸ்த்மாக்காரிக்கு!

said...

வாங்க ஜி எம்பி ஐயா.

மோடத்துக்கு 10 டாலர். மத்தபடி எல்லா சேவையும் இலவசம். டெலிஃபோன் கம்பெனியில் அவுங்ககூடவே ஒரு வருசம் இருப்போமுன்னு ஒரு ஒப்பந்தம். அவ்ளோதான்.

said...

//Tips இல்லாத நாடுகள் நியூஸியும் ஆஸியும். அதனால் யாரும் தலையைச் சொறியக்கூட மாட்டாங்க.// இதுக்குப் பழகிப் போனதால முதல் தடவை இந்தியா போனப்ப ரொம்பவே திண்டாடிப் போய்ட்டோம். :-) டிப்ஸ் பரவாயில்லை அக்கா. காசு வைச்சாத்தான் காரியம் ஆகும்கறது தெரியாம ஒரு பார்சலை அனுப்பக் கொடுத்துட்டு மக்குகள் போல மூணு மணி நேரம் காத்திட்டு இருந்திருக்கோம். :D

said...

வாங்க ஜிரா.

என்ன....அங்கே 40 டவுன்லோடா? ஆஹா ஆஹா.... மிஞ்சிட்டாங்களே!

இங்கே என்னவோ ரெண்டு ஃபோன் லைனுக்கும் Wifi க்கும் தனித்தனியாகவோ என்னவோ ரெண்டு கருப்புப் பொட்டி வீட்டுக்குள்ளே!

ஏர்ட்டெல்....நாங்க இந்தியாவை விட்டு வந்தபின்னும் பில் அனுப்பிக்கிட்டே இருந்தாங்க. அந்த பீரியடில் நாங்க அங்கே இருந்தோமுன்னு ப்ரூவ் பண்ணச்சொல்லி, பண்ணலைன்னா ஸ்யூ பண்ணுவேன்னதும் கப்சுப்.

said...

வாங்க கார்த்திக் சரவணன்.

நானும் பார்த்தேன். ஸ்கூல்பையனை டார்கெட் பண்ணி இருப்பாங்களோன்னு!

காசு மேக்கிங் சமாச்சாரம்தான் இது!

said...

வாங்க தமிழ் இளங்கோ.

ஊழல் ஒழிஞ்சால் இது சாத்தியப்படும். ஆனால் எங்கே? ப்ச்.....

said...

வாங்க இமா.

அதே அதே!

முதல்முறை அமெரிகா போனபோது அறைக்குப் பெட்டிகளைக் கொண்டுவந்து கொடுத்த ஹொட்டேல் பணியாளருக்கு தேங்க்ஸ், தேங்க் யூ, தேங்க்யூ வெரி மச்ன்னு சொல்லிக்கிட்டே இருக்கேன். ஆள் தலையாட்டிக்கிட்டே நிக்கிறாரே தவிர இடத்தை விட்டு நகரலை!

அப்புறம்தான் கோபாலுக்குச் சட்னு நினைவுக்கு வந்து 2 டாலர் (1994லே) எடுத்துக் கொடுத்ததும் அவர் தேங்க்யூ சொல்லிட்டுப் போனார்!

அதுக்குப்பின் சுதாரிச்சுக்கிட்டோம்:-)

said...

வாழ்த்துகள்......

இங்கே இப்படியெல்லாம் வருமா... கனவு காணத் தான் வேண்டும் போல!

டெலிஃபோன் கேபிள் கட் ஆகி முறையிட ஒரு வாரம் கழிச்சு தான் சரி செய்யறாங்க இங்கே! :(

said...

ம்ம்ம்ம் எஞ்சாய்!!! அப்ப இங்கிட்டு வந்தா உங்களுக்கு கஷ்டமா இருக்குமோ...அங்கிட்டு ஸ்பீடுக்குப் பழகிட்டு....

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

இங்கே இதுவரை எல்லாமே நல்லாத்தான் இருக்கு. (டச் வுட்)

said...

வாங்க துளசிதரன்.

முந்தியெல்லாம் சென்னை வரும்போது ஒரு ப்ரௌஸிங் செண்ட்டர் (நம்ம பில்டிங்லேயே இருந்தது) போய்தான் மெயில் பார்ப்பேன். அரை மணி நேரத்துக்கு 10 ரூ. அதில் 25 நிமிசம் ஸ்டார்ட் செஞ்சு லோட் ஆகவே எடுக்கும்:(

இப்ப ஹொட்டேலில் Wifi இருப்பதால் பரவாயில்லை. ஜஸ்ட் மெயில் பார்த்துக்கத்தான் பெரும்பாலும்.

said...

அட.. அருமை. அனுபவத்தை அழகாய் உரைத்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள்.

http://newsigaram.blogspot.com/2015/06/oru-naadum-225-poiyuraignargalum.html#.VY65OEbSlm4