Wednesday, April 15, 2015

கஞ்சி ஊத்துனவரை, இப்படிக் கழுவித் துரத்துனா எப்படி? ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 40)

அற்புத நாராயணரின் தரிசனம் முடிச்சுச் சரியா எட்டேகாலுக்கு  மரியாவுக்குத் திரும்பி இருந்தோம்.  எட்டரை  வரை கொஞ்சம் க்ளிக்ஸ். அப்புறம் பெட்டிகளை  ரெடி பண்ணி வச்சுட்டு  இருக்குபோது   காலை உணவு தயார்ன்னு ரெமா வந்து சொன்னாங்க.  சாப்பிட்டதும் கிளம்பறோமுன்னு  சொன்னேன்.

 கொன்னை பூத்துக்குலுங்குது.  அதுலே  முருங்கைக்காய் போல ஒரு காய் வருதே!

புட்டு வந்தது.  இத்திரி நெய் உண்டோன்னதும் இன்னொரு வெலவெல! பட்டர் இருக்குன்னாங்க. சரி போகட்டும் அதையே கொண்டு வாங்கன்னேன்.  ஏத்தப்பழம் கூட வாங்கிக்கலையாம். சாப்பாட்டு மேஜையில் இருந்த பழக்கூடை வாழைப்பழம்  எடுத்துக்கிட்டேன்.  பஞ்சஸார வேணுமுன்னதும் ஓடிப்போய்க் கொண்டு வந்தாங்க.  புட்டு, பழம், பட்டர் , சீனி சேர்த்து சாப்பிட்டு முடிச்சோம். அடுப்பில் வச்சு சுட்ட நேந்திரம்பழம் புட்டுக்குச் சரியான கூட்டு!  கடைக்குப் போய்வர  ஆளில்லையோ என்னவோ?

உண்மையைச் சொன்னால்....புட்டுகூட ரொம்ப சுமாராத்தான் இருந்தது. ம்ருதுவாக இல்லை. இதைவிட நானே அட்டகாசமா மென்புட்டு செய்வேன்,கேட்டோ! எப்பவாவது  சமோவாத்தீவில்  இருந்து இங்கே வரும் நேந்திரங்காயைப் பழுக்க வச்சு  அதை மைக்ரோவேவ் அவனில் மூணு நிமிசம் வச்சு எடுத்தால் புட்டும் பழமும் காம்பினேஷன் சூப்பரா அமைஞ்சுரும் நம்ம வீட்டில்.  பழம் பழுத்த மறுநாள் புட்டுன்றது  நம்ம வீட்டு சமாச்சாரம்.

மரியாவை விட்டுக்கிளம்பும்போது இன்னும் ரெண்டுநாள் தங்கலையே என்ற ஏக்கமும்,   நல்லவேளை  ஒருநாள் மட்டும் தங்கினோம். ரெண்டுமூணு நாளுன்னால்...சாப்பாட்டுக்குக் கஷ்டமாகி இருக்குமோன்னும்  ஒரே சமயம் இரு வேறு தோணல்கள்! (மனுச மனசு! )


இந்த ஏரியாவில் இருக்கும் 108 களில் ஆறு  இதுவரை பார்த்தாச்சு. இனி  அடுத்த  அஞ்சுக்கு போகவேணாமா?  பம்பா நதிக்கு பைபை சொல்லிட்டுக் குருசடிவரை வந்து ரைட் எடுத்தோம்.  ஆலப்புழா வழிதான் போகணும். அதுக்குமுன்னே படகு வீட்டை ஒரு தடவை கண்ணாலாவது பார்த்துக்கலாமேன்னு காயல்வரை போனோம்.

சாலையில் வரும்பெரிய பாலத்தைக் கடந்து   சைடில்  கீழே  இறங்கும் பாதையில் போனால் படகுவீடுகள் ஏராளமா  இருக்கு. இங்கிருந்துதான்   போட்ஹவுஸ் புக் பண்ணிக்கணும். இது ஒரு பெரிய வியாபாரமா வளர்ந்துருக்கு!  பயங்கர டிமாண்ட் இருப்பதால் எல்லா சீசனிலும்  படகுவீடுகள்  வியாபாரம்  ஓஹோன்னு நடக்குதாம்!  அங்கிருந்த ஆஃபீஸில் ச்சும்மாக் கேட்டு வச்சோம்.  ரெண்டு நாளுக்குப்பிறகு தான் கிடைக்குமுன்னு சொன்னாங்க. பள்ளத்துருத்தின்னு பெயர் இந்த ஏரியாவுக்கு.



இதுலேயும் வெஜிடேரியன் என்றால்  கொஞ்சம் கஷ்டம்தான் போல:( போறபோக்குலே மீன் பிடிச்சு சமைச்சுத் தர்றதா  ஒரு பதிவில் வாசிச்ச நினைவு இருக்கே!  ஆனா ஒன்னு பார்க்கவே அட்டகாசமா இருக்கு!  மாடி வச்ச வீடு கூட இருக்கு!  சின்னதும் பெருசுமா வகைவகையா!   சூப்பர்!


ஆசைக்கு  ஒரு வீடு வாங்கிக்கலாமுன்னு  லேசா கோடி காமிச்சேன். பத்தாயிரம் டாலர்(வரை) என்றார் கோபால். கப்சுப்! படகு செஞ்சுருக்கும் மரமும், ஓலை முடைஞ்சு போட்டுருக்கும் கூரையும்  நாட்டுக்குள்ளே  விடமாட்டாங்க. இல்லைன்னா  100 டாலர்கள் அழுது ஃப்யூமிகேட் பண்ணிக்கணும்.  போகட்டும் போ....  சீச்சீ.... ரொம்பப் புளிக்குது!


ஒன்னரை மணி நேரப்பயணத்தில்  (78 கிமீ)  எரணாகுளம் வந்துருந்தோம். ஊருக்குள் நுழையுமுன் ஒரு  டோல் கேட்.  அப்பதான் கேரளாவில் நுழைஞ்சதில் இருந்து  இதுவரை எங்கேயும் டோல் கட்டலையேன்னு  நினைவுக்கு வந்தது.  கேரள அரசே நல்ல சாலைகளாத்தான் போட்டு வச்சுருக்கு போல!  இது கொச்சி  துறைமுகத்துக்குப் போகும் ரோடு. இங்கே இன்னும் ஒரு நாலு கிலோ மீட்டர்  போனால் இன்னொரு கோவில் இருக்கு. ஆனால் இப்போ மணி  பதினொன்னரை. கோவில் மூடி இருக்கும். மாலையில் வரணும்.  அதுக்குள்ளே இன்றையத் தங்கலுக்கு அறையைத் தேடிக்கணும்.
 சாலையோரக் காந்தி எதுக்கு இந்த முழி முழிக்கிறார்?

நேற்று இரவே  ஆலுவா என்ற ஊரில் தங்கலாமுன்னு முடிவு செஞ்சதுதான்.  எரணாகுளம்  பரபரப்பான பெரிய நகரம். இங்கே நம்ம நோக்கம்  ஒரே ஒரு கோவில்தான். அதனால் ஆலுவா என்றால் பயணம் தொடர எளிதுன்னு நினைச்சோம்.  வலையில் பார்த்து வச்ச ஒரு ஹொட்டேலுக்கு ஃபோன் செஞ்சு  அறை இருக்குன்னு உறுதிப் படுத்திக்கிட்டார் கோபால்.

நாலுகிலோ மீட்டர்தானே.... எதுக்கும் கோவில் திறந்திருக்கான்னு ஒரு பார்வை பார்த்துக்கிட்டே போகலாமுன்னு கோபால் சொன்னதால்  கோவிலைத் தேடிப்போனோம். கவனமாப்போயும்  வழியைத் தவற விட்டுருந்தோம்.  நாங்க போன சின்ன ரோடு கடைசியில் மெயின் ரோடில் போய் சேருது. சாலை முனையில் இருந்த கடையில், கோவிலுக்கு வழி கேட்டால், நீங்கள் வந்த வழியிலேயே 2 கிமீ திரும்பிப்போகணும். ஆனால் கோவில் 11 மணிக்கு நடை சாத்திருவாங்கன்னார்.

சரி. போகட்டும் . சாயங்காலம் வரலாமுன்னு   அதே மெயின் ரோடில் சேர்ந்துக்கிட்டோம். 'சேலம், கொச்சி, கன்யாகுமரி ஹைவே ' இது. நமக்கு ஒரு பத்து கிமீ இதில் பயணம் செய்தால் போதும் ஆலுவா.  ஊருக்குள் நுழைஞ்சு  வலையில்  பார்த்த ஹொட்டேலைத் தேடிக்கிட்டே போகும்போது  வலப்பக்கம் இன்னொரு பெரிய வெள்ளைக் கட்டிடம் அன்னப்பறவை போலக் கண்ணில் பட்டது.

ஹொட்டேல் ஏர்லிங்க் காஸில்.   இடப்பக்கம்  கொஞ்சதூரத்தில் நாம் வலையில் பார்த்தது  இருக்கு.  பார்வைக்கே நல்லா இல்லை. ஏர்லிங்கில்  அறை இருக்கான்னு கேட்கலாமுன்னு  யூ டர்ன் எடுத்து அங்கே போனோம்.
அறை இருக்கு. கடந்த சிலநாட்களில்  இதுக்கு  அஞ்சு நட்சத்திர அந்தஸ்த்து கிடைச்சிருக்குன்னு  உள் அலங்காரம் மாற்றுதல், இன்னும் சில வேலைகள்ன்னு பரபரப்பாக வேலை நடக்குது.  பெஸ்ட் ப்ரைஸ் என்னன்னு சொல்லுங்கன்னு கேட்டுக்கிட்டு இருக்கும்போதே... அங்கே வந்த  இளைஞரை பார்த்த வரவேற்பாளர், மேனேஜரே வந்துட்டார்ன்னு எழுந்து நின்னார்.

சிரிச்ச முகத்தோடு நம்மைப் பார்த்த மேனேஜர், நாம் சென்னையில் இருந்து வந்துருக்கோமுன்னதும்  சரளமாத் தமிழில் பேச ஆரம்பிச்சுட்டார்.  கல்பாக்கத்தில் வளர்ந்தவராம். அப்பாவுக்கு  அங்கே  வேலை. எஞ்சீனியர் ஆக தொழிலை ஆரம்பித்த அப்பா,  இப்போ ஒரு பகுதிக்கு மேலதிகாரியாக இருக்காராம். மகனுக்கு வீடு, படிப்பு எல்லாம் சென்னைதான்.  இவர் இப்போ இங்கே மேனேஜரா வந்து ஒரு மாசம்தான் ஆச்சுன்னார்.   பெயர் அபிமன்யூ!

 அடடா..... இப்பதானே மஹாபாரதம் தொடரில்  பார்த்துக்கிட்டு இருந்தோம்!
எத்தனை நாள் தங்க உத்தேசமென்றார். ஒருநாள்தான் என்றோம். வேறு எந்த உதவி வேணுமானாலும் செஞ்சு தரேன்னார். 38 வருசங்களுக்கு முன் இங்கே இந்த ஏரியாவில்தான் ஒன்னரை வருசம் குப்பை கொட்டினோம் என்றேன்.   நல்ல டிஸ்கவுண்ட்டுடன்   அட்டகாசமான அறை  கிடைச்சது!

பகல் சாப்பாட்டுக்கு  வெளியே எங்காவது போய் சாப்பிடும் சாக்கில் ஊரைப் பார்க்கலாம் என்று கிளம்பினோம். சரியா 38 வருசங்களுக்குப்பிறகு வந்துருக்கோம். முதலில் ஆலுவா ஊரே அடையாளம் தெரியாமத்தானே கிடக்கு!  எங்கே பார்த்தாலும் புதுசு புதுசா சர்ச்சுகள்! ஒவ்வொன்னும் பெரிய பாஸிலிக்கா போலல்லே  நிக்குது!


எக்கச்சக்கமான கடைகளும், ஏகப்பட்ட  வாகனங்களும் அகலமான சாலைகளுமால்லே கிடக்கு! கொஞ்ச தூரத்தில் கார்னிவல் கோர்ட்ன்னு ஒரு கட்டிடம்.  உள்ளே ஃபுட் கோர்ட்.  போய்ப் பார்க்கலாமுன்னு  போனால்.... வரிசையா ஏழெட்டுக் கடைகள். சிம்Bப்ளி சௌத் அய்க்கோட்டே!


கோபாலுக்கும் சீனிவாசனுக்கும் தாலி மீல். எனக்கு ஆப்பம், தேங்காய்ப்பால்.
அறைக்கு வந்து அடுத்த திட்டம் என்னன்னு  யோசித்தால்....


 சாலக்குடிக்குப்போயிட்டு வந்துடலாமுன்னு கோபால் சொன்னார். நாளைக்கு அந்த வழியாத்தானே போகணும் என்றால்,  கோவில் திறக்க  மாலை அஞ்சு ஆகிருமே.  அதுவரை என்ன  செய்ய?

38 வருசங்களுக்குப்பிறகு  நாங்க சுற்றித் திரிஞ்ச ஏரியாவுக்குப் போறோம்.  அங்கமாலி, கருகுட்டி, கொரட்டி, முரிங்கூர், சாலக்குடி!

அங்கமாலியில் மெயின் ரோடுக்குப் பக்கத்திலேயே ஃபிஜித் தோழி வீடு கட்டி இருக்காங்கன்னு தெரியும். அடையாளம்  சொல்லி படமும் அனுப்பி இருந்தாங்க. அதைப் பார்க்கணுமுன்னு கேமெராவும் கையுமா கண்ணை நட்டு வச்சேன் வலப்பக்கம்.கண் பூத்தது மிச்சம். சாலை ஓரங்கள் பூராவும் ஏகப்பட்ட கட்டிடங்களும் கடைகளும்.

அடுத்து  கருகுட்டி என்னும் ஊரைச் சமீபிக்கிறோம்.  கோபால் பரபரப்பா இருக்கார்! கருகுட்டி கேபிள்ஸ் என்று மக்கள்ஸ் செல்லமாச் சொல்லும் ப்ரீமியர் கேபிள் கம்பெனி வரப்போகுது. இங்கேதான்  எலக்ட்ரிக்கல் கேபிள் & ஒயர் செய்யும்  ஃபேக்டரியில் இவர் பயிற்சி எடுத்தார்.  ஆச்சு அது ஒரு 38 கொல்லங்களுக்கு முன்பு. இப்பவும் நமக்குச்  சோறு போடும் அன்னதாதா இந்தத் தொழில்தானே!



கம்பெனி இருந்த இடம் இருக்கே தவிர   தொழிற்சாலையைக் காணோம்! நாங்க  அந்த ஊரைவிட்டு வந்த ஒரு பத்து வருசத்துக்குள்ளே தொழிற்சங்கப் பிரச்சனைகளால்  இழுத்து மூடிட்டாங்கன்னு தெரியும்தான்.  ஆனா அடையாளமே இல்லாமப்போயிருமுன்னு கொஞ்சம்கூட  எதிர்பார்க்கலை:(

 ராஜஸ்தான் முதலாளியால் தாக்குப்பிடிக்க முடியலை. முன்னூறுபேருக்கு வேலை போச்:( செங்கொடி பிடிச்சே, வயித்துலே ஈரத்துணி போட்டுக்க வச்சுட்டாங்க. இப்பெல்லாம் கேரளாவில் எதாவது தொழில் தொடங்கணும் என்ற நினைப்பே யாருக்கும் வராமப் பார்த்துக் கிடறாங்க.:(

இப்ப அங்கே வேறெதோ ஷாப்பிங் செண்ட்டர் வரப்போகுதாம்!

தொடரும்..........:-)



27 comments:

said...


"கஞ்சி ஊத்துனவரை, இப்படிக் கழுவித் துரத்துனா எப்படி? ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 40)"= துளசிதளம் = எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி மேடம் Tulsi Gopal.

said...

ஒரே ஒரு டோல்கேட்... என்ன ஒரு அரசு...!

படகு வீடுகள் அட்டகாசம்...!

said...

கேரளாவில் தொழில் செய்வதற்கு பணம் இருந்தால் மட்டும் போதாதுதான். மேடம், அது உண்மையிலேயே முருங்கைக்காய் தான் போல இருக்கே!

said...

சுட்ட வாழைபழம் !! எப்பிடி காஸ்ல directaa சுடலாமா எவ்ளோ நேரம் ? .

said...

அந்த முதல் படம் ,பூ என்ன ஒரு கலர் !!!!!!
பறவை கூ(வீ)டு மிதக்கும் வீடு ,ஆப்பம் ,சூப்பர் !

said...

புட்டுக்கு சுட்ட ஏத்தம்பழத்தைவிட சாதா வாழைப்பழம் எங்கள்பக்கம் இருக்கும் ஏலக்கி ருசியாய் இருக்கும். ஆலுவா போய் இருக்கிறேன் சிவன் கோவில் பிரசித்தம் தொடருகிறேன்

said...

துளசி நம்ம வீட்டில இந்தப்பூவும் மரமும் சிங்கம் நட்டது இருக்கே. காஷியா FISTULA என்ற பெயர் சாலக்குடி இன்னும் வரலியா. எனக்கே படபடப்பா இருந்தது உங்க ஊரைப் பார்க்க. அழகுப் படகு வீடுகல்மா. 10000 டாலர்தானே. நாம எல்லோரும் பூல் செய்து வாங்கிடலாமா:) அப்படியே சிந்து நதியின் மிசைன்னு பாடிக் கொண்டே போகலாம். மரியா அழகுதான். சாப்பாடு இல்லைன்னால் என்ன செய்யறது. அபிமன்யு படு ஸ்மார்ட் கூடு சூப்பர். குருவி எட்டிப் பார்த்திருந்தால் அழகா இருந்திருக்கும். கோபால் நல்ல விச்ராந்தியா உட்கார்ந்திருக்கார்.வெயிட்டிங் FOR சாலக்குடி.

said...

படகுவீடுகள் பார்க்க ஆசையாகத்தான் உள்ளன. பழகிய இடங்களை பல வருடங்களுக்குப் பின் பார்க்குமுன் ஏற்படும் கிளர்ச்சி அவற்றின் இன்றைய நிலையைப் பார்த்து புஸ்வாணமாகிவிடுவது உண்மை. பழம் நினைவுகளிலேயே வாழ்ந்திருக்கலாம் என்றுகூட சில சமயங்களில் தோன்றும்.

கொன்றைக்காய்களை சிறிய வயதில் பார்த்தது. குரங்கின் வால் போல் நீண்டிருக்கும் என்று ஏதோ ஒரு செய்யுளில் வரும்.

said...

படகு வீடுகளும் தங்களின் படங்களும் அற்புதம்.

said...

நீண்ட நாளைக்குப் பிறகு உங்கள் பதிவைப் படித்து உற்சாகமானேன். கேரளாவே அழகுதான். படகு வீடுகள் அழகோ அழகு. வல்லி சொல்வதுபோல எல்லோருமாக வாங்கிப் போட்டு பாடிக் கொண்டே காலம் கழிக்கலாம், கேட்டோ?

said...

வாங்க ரத்னவேல்.

பகிர்ந்தமைக்கு நன்றி.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

இதுவுமே துறைமுகத்துக்குப் போகும் சாலை என்பதால்தான். அவ்ளோ சரக்கு ஏற்றுமதிக்கான வண்டிகளின் நடமாட்டம் இருக்கே!

படகுவீடுகள் ஒவ்வொன்னும் ஒரு அழகுதான். பெரியவைகள் ரொம்பவே அட்டகாசம்!

said...

வாங்க ஆறுமுகம் அய்யாசாமி.

40, 50 வருசங்களுக்கு முன்னே கூட கொஞ்சம் பரவாயில்லை. இப்பதான் எதுக்கெடுத்தாலும் போராட்டமுன்னு கிளம்பிட்டாங்க:(

வெளிநாட்டு அந்நியச்செலாவணி கூடுதலா வரும் மாநிலம் என்பதால் சமாளிக்கிறாங்க போல! அங்கத்து சில சட்டங்களும் விதிகளும் பார்த்து வாய் பிளந்து நின்னுருக்கோம். அநியாயமா இருக்கு ஒவ்வொன்னும்!

அது கொன்னைக்காய்தான். கீதமஞ்சரி சொல்லி இருக்காங்க பாருங்க.

said...

வாங்க சசி கலா.

நான் மைக்ரோவேவில் வச்சுருவேன்.
காஸ் அடுப்பில் இதுவரை முயற்சிக்கலை. அடுத்தமுறை பார்க்கலாம்!

அவன் இருந்தால் பேக் பண்ணிக்கலாம். ஆனால் ஒரு பழத்துக்கு இதெல்லாம் வேணுமான்னுதான் . இன்னொரு எளிய வழி நீராவியில் வேகவைப்பது. குக்கர் ஓக்கேன்னு நினைக்கிறேன். ரெண்டு விஸில்வரை வச்சுப் பார்க்கலாம்.

முதல்படம் ஒரு வகை கள்ளிச்செடிதான்.

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

ஆலுவா சிவன் கோவில் ரொம்ப ப்ரசித்தி பெற்றதே! சிவராத்ரி இங்கே விசேஷம். மூணுநாள் பெரியாறின் மணல் புறத்தில் திருவிழா நடக்கும்.

அக்கம்பக்கத்து ஊர்ஜனங்கள் சமையலுக்கு வேண்டிய மாக்கல் சட்டிகளை திருவிழா வரும்வரை காத்திருந்து வாங்குவார்கள்.

நாங்களும் போயிருக்கோம். தாஜ்மஹாலின் முன்னால் நின்னு ஃபோட்டோ எடுத்துக்கிட்டது அப்போதுதான்! என்ன ஒன்னு....தாஜ் கொஞ்சம் கோணலா இருந்துச்சு:-))))

said...

வாங்க வல்லி.

இதைத்தான் கோல்டன்ஷவர் என்றும் சொல்றாங்க. கொன்னை மரம். உங்க வீட்டு மரத்தை நான் பார்க்கலையேப்பா:(

நெவர் மைண்ட். நெக்ஸ்ட் டைம்:-)

அந்தப் படகு வீடு ஒரு இருவது முப்பது லக்ஷம் ஆகும்ப்பா. நான் பத்தாயிரமுன்னு சொன்னது அந்த பொம்மைப்படகு வீட்டை இங்கே கொண்டுவந்தால் நியூஸி அரசு போடும் ஃபைன் தொகை.

படத்தை நல்லாப்பாருங்க.... பகயிறால் கட்டி விட்டுருக்காங்க. பொம்மைக் குருவியை வச்சுருக்கலாம் இல்லே:-))))

சாலக்குடிக்கு திங்களன்று போகலாம்.

said...

வாங்க கீத மஞ்சரி.

சொன்னது ரொம்பச் சரி. சிறுவயதில் இருந்த ஊரைப் பார்க்க ஆசைஆசையாப் போய், அங்கே என் ஊரைக் காணவில்லைன்னு புலம்பி இருக்கேன்!

"எங்கே போச்சு என் வத்தலகுண்டு?"

கொன்னைக்காயை இதுவரை பார்த்ததே இல்லைப்பா. செய்யுளில் வந்ததா? அப்ப இலக்கிய மதிப்பு இருக்குன்னு சொல்லுங்க!!!!

said...

வாங்க செந்தில் குமார்.

உங்கள் ரசிப்புக்கு நன்றிகள்.

said...

வாங்க ரஞ்ஜனி.

வருகைக்கு நன்றி.

படகு வீட்டில் போய்க்கொண்டே இருந்தால் புவ்வாவுக்கு என்ன செய்வது? அங்கே போயும் சமையலா!!!!

said...

wHEN YOU WENT THERE WAS IT SUMMER TIME. iT USUALLY BLOOMS IN sUMMER. hAIYO antha maram irukkaa illaiyaanu kooda theriyavillai Thulasima.

said...

இத்திரி நெய்னா என்னது? சாதா நெய்க்கும் அதுக்கும் என்ன வேறுபாடு.

நீங்க விவரிச்சதைப் பாத்ததும் புட்டு சாப்பிடனும்னு தோணுது. கடந்த ஒருவாரமாவே பிரியாணி சாப்பிடனும்னு தோணல். அத மொதல்ல முடிச்சிட்டு அடுத்து புட்டுக்கு வர்ரேன்.

நீங்க பாத்த படகு வீடுகளுக்குத்தான் நான் நண்பர்களோட போனேன்னு நெனைக்கிறேன். போட் ஹவுசில் பெரும்பாலும் சைவம் தான். எத்தனை அசைவம் எத்தனை சைவம்னு கேட்டுத்தான் சமைக்கிறாங்க.

வழியில மீன் பிடிக்கிறதெல்லாம் இல்ல. அவங்களுக்குன்னு தெரிஞ்ச கடைகள் வழியில் இருக்கும். அங்க ஒன்னுக்கு நாலா விலை இருக்கும். அதுவும் பிரெஷ்ஷா இருக்காது. சுமாராத்தான் இருக்கும்.

யாதும் ஊரே யாவரும் கேளிர்னு உங்க பதிவுகளைப் படிக்கிறப்போதான் தெரியுது. போகுமிடங்களில் எல்லாம் நண்பர்களை உருவாக்கிக்கிறீங்க. அருமை.

said...

வல்லி,

சம்மருக்கு இந்தியா நோ நோ. அதான் மரத்தைப் பார்க்கலை!
வரும் பயணத்தில் போய்ப்பார்க்கிறேன் மரம் இருக்கான்னு!

said...

வாங்க ஜிரா.

இத்திரி = இத்துனூண்டு கொஞ்சூண்டு. கொஞ்சமே கொஞ்சம்.

தூண்டிலோடு ஒருத்தர் படகுலே நின்னதைப் பார்த்துட்டு 'புடிச்சு' சமைப்பாங்கன்னு நினைச்சுக்கிட்டேன்:-)

வெஜ் சமைச்சாலும், அது வீட்டு சமையல் போல இருக்குமான்னு சந்தேகமா இருக்கே!

நண்பர்கள் உருவாக்கிக்க என்னப்பா செலவு? இத்திரி புஞ்சிரி மதியல்லே!

said...

தூக்கணாங்குருவிக் கூடு! :) வாவ்.....

புட்டு - சாப்பிட்டு நிறைய மாதம்/வருடங்கள் ஆகி விட்டது!

படங்கள் அனைத்தையும் ரசித்தேன்.

said...

குழாய்ப் புட்டும் கவர்ந்ததில்லை; கேரளாவும்! இது வரை கேரளப்பக்கமே போகலை. குருவாயூருக்கு ஒரு தரம் போனதைத் தவிர. பார்க்கலாம். இனி எப்படினு! :)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

அது கெட்டித் தூக்கிய கூடாக்கும்!

இப்ப இங்கே புட்டுமாவு கிடைக்குது. சுவந்நரிசிப் பொடியும்கூடி!

said...

வாங்க கீதா.

புட்டும் கடலையும் என்றால் எனக்கும் பிடிக்காது!

கேரளம் அத்தனை மோசமில்லை. அங்கே நாங்க இருந்திருப்பதால் ஒரு பாசம்:-)