எங்களைப் பார்த்ததும் காருக்குள் இருந்த கிவியனின் தங்க்ஸ் ஓடி வந்து என் கையைப் பிடிச்சுக்கிட்டாங்க. ஆள் கொஞ்சம் கூட மாறலை. உருவம், உள்ளம் எல்லாமே முன்பிருந்ததைப்போல! ஒன்பதரை வருசத்தைத் தூக்கிக் கடாசிட்டு, அப்போ விட்டுப்போன எங்கள் பேச்சைத் தொடந்தோம்.
சாப்பிட்டீங்களா என்பதே முதல் கேள்வி! ஆச்சு ஆச்சு. இந்தியாவின் விசேஷமே இதுதான்! விருந்தோம்பல்! ஒரே பார்வையில் ஊர் முச்சூடும் பார்க்கக் கூட்டிப் போனாங்க. அதே மவுண்ட் விக்டோரியாதான். உச்சிவரை போகக் கார்ப்பாதை இருக்கு. நான் ஒரு 22 வருசங்களுக்கு முன் வந்துருக்கேன். நம்ம விஜயா அக்கா வீட்டுக்கு விருந்தாளியாப் போயிருக்கோம் நானும், மகளும். அப்போ மாமா கொண்டுபோய் காமிச்சார். ஸோ எனக்கு இது இரண்டாம்முறை. நம்ம கோபாலுக்கு இது முதல்:-)
பயணிகள் தவறாமல் வந்து போகும் இடம். காசிக்குப்போய் கங்கையைப் பார்க்காமல் வருவார் உண்டோ? ரொம்பப் பெரிய மலை இல்லைன்னாலுமே ஊரைப் பறவைப் பார்வை பார்க்க இதைவிட வேற ஒரு சிறந்த இடம் கிடையாது. 196 மீட்டர் உயரம்தான். அடிகளில் மாத்தினால் நிறைய உசரமாப்போயிரும்:-)
என்ன ஒன்னு.... இங்கே வருமுன் கால்களில் பாறாங்கல்லைக் கட்டிக்கணும். கொஞ்சம் ஏமாந்தால் பறந்துருவோம். ' விண்டி வெலிங்டன் ' என்றும் சொல்லலாம். ஏற்கெனவே பயங்கர காத்தடிக்கும் ஊர். இதுலே கொஞ்சமே கொஞ்சம் உசரமான இடமுன்னாலும் கேக்கவா வேணும்?
உச்சிக்குப்போய்ச் சேர்ந்தோம்.கார்பார்க்கில் வண்டியை நிறுத்திட்டு இறங்கலாமுன்னு பார்த்தால் கார்க்கதவைத் திறக்க முடியாமல் காத்து தள்ளுது. கண்ணுக்கு முன் ஒரு டைல்ஸ் பதிச்ச கூடாரம். இந்தவகைக் கூடாரங்கள் அன்ட்டார்க்டிக் பகுதிகளில் பயன்படுத்துவது. அங்கேயும் பனிப்புயல் கடுமையா வீசுமே!
Byrd Memorial என்று சொல்லும் இது ஏன் இங்கே? இவர்தான் Richard E. Byrd.அமெரிக்கர். முதன்முதலில் தென் துருவத்துக்கு விமானத்தில் போய்ப் பார்த்தவர். செல்ஃப் ட்ரைவிங்! இதுக்கு முன்னாலும் ரெண்டு முறை கப்பலில் தென்துருவம் போய் வந்தவர். அமெரிகக் கடற்படை உத்தியோகஸ்தர். ரியர் அட்மிரல் பதவி! நியூஸியை அடித்தளமா வச்சுக்கிட்டு தென் துருவத்தை ஆராய்ஞ்சவர்.
தென் துருவத்துக்கு மிகவும் அருகில் இருக்கும் நாடு இது என்பதால் இப்பவும் அன்டார்க்டிக் ஆராய்ச்சிக்கும், அங்கு போய்வரவும், தங்கி இருப்பவர்களுக்கு தேவையான உணவு,மருந்து, உடைகள், கருவிகள் இப்படி சப்ளைகள் செய்யவும் நியூஸிதான் பெஸ்ட் ப்ளேஸ். அதிலும் எங்க ஊர் கிறைஸ்ட்சர்ச் (தெற்குத்தீவு) விமான நிலையத்தில்தான் இதுக்கான விசேஷ ஏற்பாடுகள் இருக்கு. எங்கூர் துறைமுகத்தில் இருந்துதான் தென் துருவ ஆராய்ச்சிக்குக் கப்பல்களும் போய் வருது. ஏற்கெனவே சொல்லி இருக்கேனோ? அப்படியெல்லாம் விட்டு வச்சிருப்பேனா என்ன:-)
கூடார நினைவுச் சின்னத்தில், தென் துருவத்தில் இருந்து கொண்டு வந்த கற்களையும் பதிச்சு வச்சுருக்காங்க. பக்கத்துலேயே அந்தக் காலக்கட்டத்துலே இங்கிருந்த மவோரியர்களின் சமூக அமைப்பைக் கோடிகாட்டும் சில குறிப்புகள். சரித்திரம் முக்கியம் அமைச்சரே!
நியூஸியின் வடக்குத்தீவு முடிவில் இருக்கும் வெலிங்டனுக்கும், தெற்குத்தீவின் ஆரம்பத்தில் இருக்கும் பிக்டன் என்ற ஊருக்கும் இடையில்தான் வடக்கு தெற்கு போய் வரும் கடல்பாதை! குக் ஸ்டெர்ய்ட். முப்பது கிமீ இடைவெளிதான் . ஆனால் கொந்தளித்துப் பொங்கும் கடல்பகுதி. அதனால் எப்பவும் வெலிங்டனில் வீசும் கொடும்காற்றுக்கு இதுதான் காரணமுன்னு சொல்லலாம். 40 knot காற்றே போதுமாம் ஆளைத் தூக்க!
அக்கம்பக்கம் எல்லாம் கொஞ்சம் க்ளிக்கிட்டு அருகில் இருக்கும் லுக்கவுட் மேட்டுக்கு ஏறினோம். ஒரு அம்பதறுவது படிகள் இருக்கு. என் தடுமாற்றம் பார்த்த கிவியன், இங்கிருந்தே பார்க்கலாமா இல்லை மேலே போகலாமான்னார். அஞ்சாநெஞ்சள் சும்மா இருந்ததா சரித்திரம் உண்டோ?
முதல் செட் ஆஃப் படிகள் ஏறுனதும் பீரங்கி ஒன்னு ரெடியா இருக்கு! உலகப்போர் நடந்த சமயம் எங்கே எதிரி இங்கே இந்த நாட்டுக்கு வந்துருவானோ என்ற பதற்றத்தில் வருபவனை ஓட்ட அங்கங்கே பீரங்கிகளைக் கொணாந்து நிப்பாட்டி வச்சவங்க நாங்க. இதைவிட பெரிய சைஸ் பீரங்கி தளம் கூட தென்கோடிப் பயணத்துலே பார்த்தது நினைவிருக்கோ?
எதிரியும் வந்து, போர்க்கைதிகளை ஒருவேளை பிடிச்சுட்டோமுன்னா அவுங்களை அடைச்சு வைக்க முன்னேற்பாடா சிறைச்சாலை கூட கட்டி வச்சொம்லெ:-) கடைசியில் வராம ஏமாத்திப்பிட்டானே!!!!
அட... இதுதான் பிக்டனில் இருந்து ஃபெர்ரி வரும் வழி. தூரக்கப்பாரு....ஒன்னு வந்துக்கிட்டு இருக்கு!
அதுதான் பழைய க்ரிக்கெட் ஸ்டேடியம். விளையாடிக்கிட்டு இருக்காங்க பாருங்க. ஸ்லிப்புலே நாலுபேர் என்றார் கிவியன்.
இந்தப்பக்கம் இருக்கே இதுதான் வெஸ்ட்பாக் ஸ்டேடியம். உலகக்கோப்பையில் பார்த்தீங்கதானே?
ஆமாம். இது புத்தம் புதுசாச்சே!
அதையொட்டுனாப்போல போர்ட்.கண்டெய்னர் டெர்மினல் போல இருக்கே!
360 டிகிரி வ்யூ! எதுவும் மறைக்காது. இங்கிருந்து பவுர்ணமி நிலா, முக்கியமாக க்ரஹணக் காலங்களில் சந்திரனை பாம்பு விழுங்குவதை பார்க்கவே கூட்டம் வருதாம்!
தூரக்கே வெல்லிவுட் என்று ஒரு ஸைன் போர்டு வச்சாக் கொள்ளாம் என்ற பேச்சு எழும்புது. நாட்டின் புகழை உலகநாடுகளில் பரப்பிய சினிமாத் தொழிலால் இங்கே வருசத்துக்கு 285 மில்லியன் டாலர்கள் தலைநகரத்துக்குள் வந்துக்கிட்டுருக்கு! சினிமா எடுத்ததோடு நிற்காமல், படப்பிடிப்பு நடந்த இடங்களையே ஒரு ஷோவா ஆக்கிட்ட திறமையை என்ன சொல்றது! அந்த இடங்களைப் பார்க்கணுமுன்னே உலக மக்கள் பலர் சுற்றுலா வர்றாங்க. வந்திறங்கும் விமான நிலையத்தில் ஊரின் முக்கியத்துவம் காமிக்க இப்படி ஒரு விளம்பரப்பலகை வைக்கணும். விமானத்துலே வந்து இறங்கும்போதே கண்ணில் பளிச்ன்னு படணும் என்பதுதான் ஐடியா.
நகரமக்களும் நாட்டு மக்களுமா இதுக்கு ஆதரவையும் எதிர்ப்பையும் காமிச்சாங்க. விமான நிலையத்துக்கு பெரிய பாகஸ்த்தர் வெலிங்டன் சிடிக்கவுன்ஸில்தான். ஊருக்கு வரும் வருமானத்தை வேணாமுன்னு தள்ள மனசு வருமா? பொதுமக்களிடம் வாக்கெடுப்பு நடத்தினாங்க. வெல்லிவுட் தோத்துப்போச்சு.
மேலே தோல்வி , கீழே வெற்றி:-)
கடைசியில் 2012 ஜூலை மாசம், 'அடிக்கும் காத்து ஊரையேத் தூக்கிட்டுப் போயிரும் என்ற உண்மை நிலையை உரப்பிக்கும் விதமா வெலிங்டன் ப்ளோன் அவே' ன்னு குறிப்பால் சொல்லும் விதம் இப்படி ஒன்னு வச்சாங்க. வேட்டா தான் தயாரிச்சுக்கொடுத்துச்சு. செலவு எம்பதினாயிரம் டாலர்:( இப்பக் காத்துலே உண்மையாவே பிய்ச்சுக்கிச்சுன்னு சொன்னாங்க.
இன்னொரு பக்க மலை அடிவாரத்தைக் காமிச்சு அங்கேதான் ஃபால்ட் லைன் ஓடுதுன்னார் கிவியன். பெருமாளே.... ஆபத்து ஒன்னும் இல்லாமக் காப்பாத்துன்னு வேண்டிக்கிட்டேன். ரொம்பவே நெருக்கமான கட்டிடங்கள் அதுவும் ஒவ்வொன்னும் 20, 25 மாடிகள்! அழிவைக் கண்ட கண்ணுக்கு இதையெல்லாம் நினைச்சாவே நடுக்கம்தான்:(
எங்கூர்லே ரெண்டே ரெண்டுதான் ஒரு ஆசைக்குக் கட்டுனோம். அதில் ஒன்னு நிலநடுக்கத்தில் போயிருச்சு. இப்ப கண்ணே கண்ணு ஒன்னே ஒன்னுதான்.
நம்மைப்போல் வந்த பயணிகள் கூட்டம் இங்கே அதிகம்தான். ஒரு இருபது ஆட்களுக்கு மேலேயே!
சுற்றுலாப்பயணிகளைச்சுமந்து வந்த பஸ் ஒன்னு வந்து நின்னதும் வெள்ளை உடுப்பு மக்கள்ஸ் இறங்கினாங்க. ப்ரம்மகுமாரிகள் சங்கமாம்.
சுத்துமுத்தும் பரந்து விரிஞ்சு போகும் ஊர். மலைகளிலும் குன்றுகளிலும் ஏகப்பட்ட வீடுகளும் கட்டிடங்களும். இரவு நேரத்தில் பார்த்தால் கார்த்திகை தீபம் ஏத்துனாப்போல வெளிச்சம் மின்னும், இல்லே?
மேலே இருந்து பார்க்கும்போது ஒரு சர்ச்சின் தலை தெரிஞ்சது. அப்புறமா கீழே இறங்கி அதே சர்ச் 'பார்த்துக்கிட்டு' இருக்கும் பீச்சுக்குப் போனோம். குட்டியூண்டு பீச்!
பிய்ச்சுக்கிட்டுப்போகும் கடற்காற்றில் எதிர்நீச்சல்போட்டு சிறகுகள் ஓய்ஞ்சு போன நிலையில் கடற்காக்கைகள் எனும் ஸீகல்ஸ் எல்லாம் சொல்லி வச்சமாதிரி வரிசையில் அடங்கி உக்கார்ந்து இருந்தது சூப்பர்! கண்ணு முழிச்சுருக்கே தவிர அசைவொன்றுமில்லை!
ஹொட்டேலில் நம்மை சந்திக்க வந்தவரிடம் மாலையில் கோவிலுக்குப் போகணும் என்றதோடு எங்களை முழுசுமா கிவியன் தம்பதிகள் வசம் ஒப்புக்கொடுத்துட்டதால் கவலை இல்லாமல் இருந்தோம். அடுத்த திட்டத்தைச் சொன்னாங்க.
நேரா கிவியனின் பெற்றோர்களைப்போய்ப் பார்த்துட்டு அப்படியே கோவிலுக்குப் போறோமாம். அறைக்கு வந்து விஷ்ணு சகஸ்ரநாமம் புத்தகங்களை எடுத்துக்கலாமுன்னு ஹொட்டேலுக்கு வந்தோம். கூட வந்தா எங்கே நடக்க வச்சுருவாரோன்னு கிவியனை வண்டியிலேயே விட்டுட்டு நாங்க மூணுபேர் மட்டும் வழி தேடிப்போறோம்:-) முதலில் கண்ணில்பட்ட ஒரு லிஃப்ட்க்குள் போய் 19 அமுக்கிட்டு ஒரு வெற்றிப்பார்வை பார்த்தார் கோபால். லிஃப்ட் கிளம்பவே இல்லை! 26 மாடின்னு காமிக்குதே தவிர எந்த எண்ணைத் தொட்டாலும் அசையலையே!
சரிதான். இது ஆஃபீஸ்களுக்கு மட்டும் இருக்கும். இப்போ வீக் எண்டில்லையோன்னு அடுத்த பக்கம் எதாவது இருக்கான்னு எட்டிப் பார்த்தால் எட்டாவது மாடி ஹொட்டேல் லாபிக்குப்போகும் கண்ணாடிக்கதவு! அதன்வழியாப்போய் இன்னொரு லிஃப்ட்லே 19க்கு ஏறியாச். புத்தகங்களை எடுத்துக்கிட்டுப் போனவழியாகவே கார்பார்க் பக்கம் வந்துட்டோம். அஞ்சே நிமிசம்! ஆச்சரியப்பட்ட கிவியனிடம் ...... அதெல்லாம் ஈஸி வழி கண்டுபுடிச்சுருவொம்லெ !
தன்னுடைய வலைத்தலைப்பை மட்டும் அனுசரிக்கிறாரேன்னு 'ஏன் இப்பெல்லாம் எழுதறதில்லை?' ன்னு கேட்டதுக்கு, எழுதணுமுன்னு தோணலைங்கறார். பத்து வருசமா பதிவர். கடைசிப்பதிவு போட்டு ஒரு வருசமாகுது ! மௌனம் காத்தால் எப்படி? ட்விட்டர், ஃபேஸ் புக் இப்படி அடிச்சு ஆடிக்கிட்டு இருப்பதுகூட காரணமா இருக்கலாம்!
வாசகர்கள் சந்திப்பு நடக்கப்போகுதுன்னு அப்ப எனக்குத் தெரியாது!
தொடரும்............:-)

15 comments:
அருமையான புகைப்படங்கள். வழக்கம்போல தங்கள் நடையில் அருமையான பதிவு. உங்களால் பல இடங்களைக் காணும் வாய்ப்பு கிடைக்கிறது. நன்றி.
அருமையான படங்கள் அம்மா...
விபரீதங்கள் எதுவும் நடக்காமல் இருக்கட்டும்...
அருமை !அருமை ! படங்கள் விவரங்கள் அனைத்தும் அருமை!
அந்த seagulls வரிசையாக உட்கார்ந்திருக்கும் போட்டோ இருந்தால் பதிவில் போடுங்களேன் please.
வழக்கம் போல அருமையான பயணக் கட்டுரை. படங்கள் நச்..! அதைவிட சந்திரோதயம் வீடியோ செம சூப்பர்..!
படங்கள் அத்துனையும் அருமை. தங்கள் பயணம் பற்றிய பதிவு அருமை.
அடடா! எவ்வளவு அழகான இடங்கள்.
அந்த ஊர்ல வருடம் முழுக்க ஆடி மாசம்னு சொல்லுங்க. ஆடிக்காத்துல அம்மியும் பறக்கும்னு சொல்வாங்கள்ள.
தென் துருவம் வட துருவம்னு படிச்சதோட சரி. அங்கல்லாம் ரொம்பக் குளிரும்னு சொல்வாங்க. பாதுகாப்பான சுற்றுலா ஏற்பாடு செஞ்சாப் போகலாம். ஆனா ரொம்பச் செலவாகும்.
நிலநடுக்கத்தைப் பத்தி நீங்க பயந்து எழுதியிருக்கீங்க. நேத்து நேபாளத்துல நிலநடுக்கம். :(
பதிவர் சந்திப்பா... ஆகா. விவரங்களுக்குக் காத்திருக்கிறோம்.
Sir,
Our friends visiting Australia one week from tomorrow. What is cheaper to buy in Australia? I'm from Tamilnadu reading ur blog for the past 20 days.
வாங்க ஜம்புலிங்கம் ஐயா.
ரசிப்புக்கு நன்றி.
வாங்க திண்டுக்கல் தனபாலன்.
அப்படி நடக்க விட்டுருவோமா? கவனமாத்தான் இருப்பொம்ல:-)
வாங்க சசி கலா.
வரிசைன்னா இது இடுக்குப்புள்ளி வரிசையாக்கும், கேட்டோ!
எங்கூரில் கட்டை சுவத்தில் இப்படி உட்காரும்.கேமெராவை ஃபோகஸ் செய்வதற்குள்.... கார் 100 மீட்டர் கடந்துருக்கும்:(
வாங்க செந்தில் குமார்.
வீடியோ படம் எடுத்தவருக்கு நன்றி சொன்னேன்.
சூப்பர் மூன் சூப்பரா இருக்குல்லே!
வாங்க மகேஸ்வரி.
ரசனைக்கு நன்றீஸ்!
வாங்க ஜிரா.
நிலநடுக்கம் கேட்டு மனசுக்குக் கஷ்டமாப்போச்சு:( மூவாயிரமாமே! ஐயோ:(
தென்துருவம்போக ஆசை இருக்குன்னாலும்.... மெடிக்கல் டெஸ்ட்லே ஃபெயில் ஆகிருவேன்:( ஃபிட்னஸ் கொஞ்சம்கூட இல்லை!
வாங்க சிவா.
உண்மையைச் சொல்லணுமுன்னா.... நத்திங் இஸ் ச்சீப்ப்பர் நௌவ்வடேஸ்!
இந்தியாவிலேயே விலை எப்படி தாறுமாறா எகிறிக்கிடக்கு பாருங்க!
நான் வசிப்பது அஸ்ட்ரேலியாவின் அண்டை நாடு. நியூஸிலாந்து.
அஸ்ட்ராலியாவில் ஓப்பல் சுரங்கம் இருப்பதால் அழகான ஓப்பல்கற்கள் கிடைக்கும். கற்கள் வாங்கிப்போய் ஊரில் நகைகளில் பதிக்கலாம்.
படங்கள் மனதைக் கொள்ளை கொண்டன!
அட வாசகர் சந்திப்பா? களை கட்டியது எனச் சொல்லுங்க!
Post a Comment