கடந்த பல வருசங்களாக இந்த சீஸனுக்கு இவர்தான் சூப்பர் ஸ்டார் உலகம் முழுசுக்கும். இவர் வரவை ஆவலோடு எதிர்பார்க்கும் இளமனசுகளின் எண்ணிக்கைகளுக்குக் குறைவில்லைதானே!
Have you been a good girl/boy this year ?
ஸாண்ட்டா கேட்ட கேள்விக்கு என் பதில்......
ஆமாம் ,ஸாண்ட்டா. இந்த வருசம் மட்டுமில்லை கடந்த நாப்பது வருசத்துக்கும் மேலேயே ஒவ்வொரு வருசமும், ஒவ்வொரு மாசமும், ஒவ்வொரு நாளுமே வெரிகுட் கேர்ளாத்தான் இருக்கறேன்!!!!
ரொம்ப மகிழ்ச்சி. இந்தா உனக்கான கிறிஸ்மஸ் பரிசுன்னு சொல்லி சின்னப் பொட்டலம் ஒன்றைக் கொடுத்தார். குட் திங்ஸ் கம் இன் அ ஸ்மால் பேக் என்பதால் ஒன்னும்சொல்லாம வாங்கிக்கிட்டேன்.
பிரிச்சுப் பார்த்தால்...... ஒரு கணையாழி ! அதுவும் வைரம்!!
தேங்க்ஸ்ன்னு சொல்றதுக்குள் வாயுவேகத்தில் கிளம்பிப் போயிருந்தார்!
நம்ம ரஜ்ஜு, ஜூபிட்டர் பசங்களுக்கெல்லாம், அவுங்க ஸாண்ட்டா ஆற அமர வந்து நம்ம வீட்டுலே இடம்பிடிச்சு உக்கார்ந்தாரா.... ஏராளமான பரிசுப்பொதிகள் அவருடன்!
ரஜ்ஜுவிடமும், சூப்பர் ஸ்டார் இதே கேள்வியை மியாவ் மொழியில் கேட்டுருப்பார் என்பது நிச்சயம்:-) ஆமாம்னு சொல்றதுமாதிரி தலையை லேசா ஆட்டிட்டுக் கள்ளமா சிரிச்சான்:-)))) அவனுக்கு ஒரு புது ப்ரஷ். சீவிச் சிங்காரிச்சுக்க முடியும்,இன்னும் அழகாக!
கிறிஸ்மஸ் ஈவுக்கு ராத்திரி பத்துக்குக் கிளம்பி சர்ச்சு எதாவது திறந்துருந்தா போயிட்டு வரலாமுன்னு போனோம். சொல்லி வச்ச மாதிரி அனக்கமே இல்லாத நகரமும், மூடிக் கிடக்கும் சர்ச்சுகளும்தான்:( கடைசியில் நம்மூர் அட்டைக்கோவிலுக்குப் போனோம். அது ஒன்னுதான் திறந்திருக்கு. இரவு 11.45க்கு சர்வீஸ் ஆரம்பமாம்.
அப்போ மணி பத்தரைதான். இன்னும் ஒன்னேகால் மணி நேரம் தேவுடு காக்கமுடியாதுன்னு கோபால் சொன்னதால்.... கொஞ்சூண்டு க்ளிக்கிட்டு எதிரில் கண்ணில்பட்டவர்களுக்கு மெர்ரி க்றிஸ்மஸ் சொல்லிட்டு வீட்டுக்கு வந்துட்டோம்.
நம்ம தெருவின் ஆரம்பத்தில் ஒரு வீட்டில் கிறிஸ்மஸ் அலங்கார விளக்குகளாப் போட்டு ஜமாய்ச்சுருக்காங்க. கராஜில் பக்காவா ஒரு பார் வசதி! இதை விட்டால் நம்ம வீட்டில் சாமி அறை ஜன்னலில் கொஞ்சூண்டு விளக்கு அலங்காரம்! மத்தபடி தெருவில் வேறெங்கும் அலங்காரம் ஒன்னுமே இல்லை:(
நம்ம வீட்டு எவர்க்ரீன் க்றிஸ்மஸ் மரத்துக்கு (இது நம்ம கப்பு மரம்!) கொஞ்சம் அலங்காரம் செஞ்சேன். பழசெல்லாம் அடிக்கும் காத்துலே கீழே விழுந்து உடைஞ்சு போயிருச்சு:(
எங்க சம்மர் கடைசியில் வந்தே வந்துச்சு!!! ரெண்டு மூணு நாட்களா 23 டிகிரி!!! அதுவும் பகல் பனிரெண்டரை முதல். இன்றைக்கும் அதே 23 தான். ஆனால் அதிசயமாக காலை பத்து முதலே சூடு கிளம்பியிருக்கு. சதர்லீ இல்லை. அதுதான் காரணம். நம்ம ரஜ்ஜுவுக்கு சூடு தாங்காது,கேட்டோ! நேற்று கிறிஸ்மஸ் தினம், காலையில் எட்டுமணிக்குக் காணாமப் போனவன் சாயந்திரம் ஆறுமணிக்குத்தான் வீடு திரும்பினான்!
அவனை எங்கே காணோமுன்னு துடிச்சுச்சுட்டாங்க நம்ம வீட்டுக்கு வந்திருந்த விருந்தாளிகள். நியூஸியை அதிலும் எங்க தெற்குத்தீவை மட்டுமே சுற்றிப் பார்க்கன்னு ஒரு தம்பதிகள் அமெரிக்க நாட்டிலே இருந்து வந்துருக்காங்க. லாஸ் ஏஞ்சலீஸ் யூனியில் வேலை. இப்படிச் சொன்னாப் போதாது. நம்ம துளசிதளத்தின் தீவிர வாசகர்கள். செவ்வாய் மாலை வந்து சேர்ந்தாங்க. மறுநாள் புதனன்று முழுநாள் அக்கரோவா என்னும் கடற்கரை நகரச் சுற்றுலா. வியாழன்,கிறிஸ்மஸ் நாளுக்கு நம்ம வீட்டில் மதிய உணவு.
மெனு: அரைச்சுவிட்ட சாம்பார். தான்கள் கத்தரிக்காய், முருங்கைக்காய், பீன்ஸ். சன்னா, நூக்கோல், ப்ராட் பீன்ஸ் சேர்த்து ஒரு கறி கொஞ்சம் க்ரேவியாக. தக்காளி ரசம், தயிர், உருளைக்கிழங்கு காரக்கறி, காலிஃப்ளவர் & சிகப்புக்குடை மிளகாய் , பச்சைப்பருப்பு, தேங்காய்த்துருவல் சேர்த்த ஒரு கறி. நம்ம வீட்டு லெட்டூஸ், வெள்ளரிக்காய் , தக்காளி ஸாலட். இனிப்புக்கு பூந்திலாடு, எள்ளு ஹல்வா!!!
உள்ளூர் நண்பர் ஒருவரையும் கூப்பிட்டு இருந்தோம். அவர் மெதுவா சமையல் பரிசோதனைகள் செஞ்சுக்கிட்டு இருக்கார். மனைவி ஊருக்குப்போயிருக்காங்க. புதுவித கத்தரிக்காய் கறி, தால் மக்கானி செஞ்சு கொண்டு வந்து எங்களை அசத்திப்புட்டார்:-)
பாவம். விருந்தினருக்குக் கடைசி வரை , ரஜ்ஜு முகம் காமிக்கலை! சாப்பாட்டுக்கு அப்புறம் அவுங்களை நம்ம ஹேக்ளி பார்க் வரைகொண்டு போய் விட்டோம். தோட்டத்தைச் சுற்றிப் பார்த்துக்கிட்டே போனால் தோட்டத்தின் மறு பக்கம் அவுங்க தங்கி இருக்கும் ஹொட்டேல் வந்துரும்.
போற வழியிலே க்ரிக்கெட் மேட்சுக்கு தாற்காலிக ஏற்பாடாகக் கட்டிய ஸ்டேடியம் இருக்கு. அங்கே போய் எட்டிப்பார்த்தோம். இலங்கைக் குழு நெட் ப்ராக்டீஸ் செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. புதுவருசத்தில் உலகக்கோப்பை போட்டிகள் நியூஸியில்தான் நடக்கப்போகுதுன்னு தெரியும்தானே?
மைதானத்தின் ப்ரிவ்யூ உங்களுக்கு:-) எப்படியும் டிவியில் பார்ப்பீங்கதானே!
விருந்தினர் அவுங்க அறைக்குப் போய்ச் சேர்ந்தபிறகும் கூட ரெண்டு முறை செல்லில் கூப்பிட்டு ரஜ்ஜு வந்தானா, வந்தானான்னு கேட்டுக்கிட்டே இருந்தாங்க. அப்புறம் இவன் வந்து சேர்ந்ததும், வந்துட்டான்னு செல்லில் கூப்பிட்டுச் சொன்னேன். அப்பதான் நிம்மதி ஆச்சாம்!
கோபாலுக்கு என்ன கொடுக்கணுமுன்னு ஸாண்ட்டாவுக்கு நல்லாவே தெரியுது பாருங்களேன். ஹோம் இம்ப்ரூவ்மெண்ட் செஞ்சுக்கோன்னு எலெக்ட்ரிக் ட்ரில், பெயிண்ட் செஞ்சுக்கும் ஸ்ப்ரே கன். (இவர் அவ்ளோ நல்ல பையரா இல்லையோ என்னவோ!!!!)
கிடைச்ச பரிசுகளை எல்லாம் பயன்படுத்திப் பார்க்கணுமாம், நம்ம கோபாலுக்கு. விழாக்கால விடுமுறையா பதினோரு நாட்கள் கிடைச்சிருக்கு. கூடமாட ஒத்தாசையா இருக்கணுமேன்னு நம்ம தளத்துக்கும் லீவு நாளை முதல். நீங்களும் விழாக்கால விடுமுறையை நல்லா அனுபவிச்சுட்டு அடுத்த வருசம் வகுப்புக்கு நல்லபடியா வந்து சேருங்க.
இண்டியன் கல்ச்சுரல் க்ரூப்பின் விழாவில் நம்ம கோபாலுக்கு லைஃப் டைம் சர்வீஸ் அவார்ட் கிடைச்சது.
கூட்டிக்கழிச்சுப் பார்த்தால் ஒன்றிரண்டு மைனஸ் பாய்ண்டுகள் இருந்தாலுமே 2014 நல்லபடியாத்தான் போச்சு. இந்த இடுகையைச் சேர்த்தால் இந்த வருசத்துக்கு 108. போகட்டும் நூத்தியெட்டுன்றது கூட நல்ல நம்பர்தான்:-)))))
ஹோம் இம்ப்ரூவ்மெண்ட் எப்படின்னு அடுத்த வருசம் எழுதுவேன்:-)
அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.
டேக் கேர்!

இந்த வருசம் புதுசா நம்ம சென்னையில் இருந்து சில மாணவர்கள் இங்கே படிக்க வந்துருக்காங்க. அதிசயம்தான்!
இடமிருந்து வலம்: அருண்குமார், ரவிசங்கர், துளசி கோபால் , தர்மநாராயணன், ராம். துளசிதளத்தை வாசிங்கோன்னு சொல்லிட்டு வந்தேன்:-))))
Kumar Sangakkara ன்னு கோபால் சொல்றார்.
விருந்தினர் அவுங்க அறைக்குப் போய்ச் சேர்ந்தபிறகும் கூட ரெண்டு முறை செல்லில் கூப்பிட்டு ரஜ்ஜு வந்தானா, வந்தானான்னு கேட்டுக்கிட்டே இருந்தாங்க. அப்புறம் இவன் வந்து சேர்ந்ததும், வந்துட்டான்னு செல்லில் கூப்பிட்டுச் சொன்னேன். அப்பதான் நிம்மதி ஆச்சாம்!
கோபாலுக்கு என்ன கொடுக்கணுமுன்னு ஸாண்ட்டாவுக்கு நல்லாவே தெரியுது பாருங்களேன். ஹோம் இம்ப்ரூவ்மெண்ட் செஞ்சுக்கோன்னு எலெக்ட்ரிக் ட்ரில், பெயிண்ட் செஞ்சுக்கும் ஸ்ப்ரே கன். (இவர் அவ்ளோ நல்ல பையரா இல்லையோ என்னவோ!!!!)
கிடைச்ச பரிசுகளை எல்லாம் பயன்படுத்திப் பார்க்கணுமாம், நம்ம கோபாலுக்கு. விழாக்கால விடுமுறையா பதினோரு நாட்கள் கிடைச்சிருக்கு. கூடமாட ஒத்தாசையா இருக்கணுமேன்னு நம்ம தளத்துக்கும் லீவு நாளை முதல். நீங்களும் விழாக்கால விடுமுறையை நல்லா அனுபவிச்சுட்டு அடுத்த வருசம் வகுப்புக்கு நல்லபடியா வந்து சேருங்க.
இண்டியன் கல்ச்சுரல் க்ரூப்பின் விழாவில் நம்ம கோபாலுக்கு லைஃப் டைம் சர்வீஸ் அவார்ட் கிடைச்சது.
கூட்டிக்கழிச்சுப் பார்த்தால் ஒன்றிரண்டு மைனஸ் பாய்ண்டுகள் இருந்தாலுமே 2014 நல்லபடியாத்தான் போச்சு. இந்த இடுகையைச் சேர்த்தால் இந்த வருசத்துக்கு 108. போகட்டும் நூத்தியெட்டுன்றது கூட நல்ல நம்பர்தான்:-)))))
ஹோம் இம்ப்ரூவ்மெண்ட் எப்படின்னு அடுத்த வருசம் எழுதுவேன்:-)
அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.
டேக் கேர்!
31 comments:
ஊரைக் சொல்லி பெரிஸ் பெரிஸ் சொல்லாமல் விட்டு விட்டீர்கள்.நண்பர்குஜாமோடு நீடு வாழ ஆசிகள். .அருமையான படங்கள் இனிய புத்தாண்டு நல்லதே கொண்டுவரட்டும். கூபாளுக்கு எத்தனை அவார்டு கொடுத்தாலும் தகும்
சாருக்கு லைஃப் டைம் சர்வீஸ் அவார்ட் கிடைச்சது மகிழ்ச்சி.
உங்கள் கணையாழி அழகு.
படங்கள் எல்லாம் அருமை.
விழாக்கால விடுமுறையை நன்றாக கொண்டாடி மகிழுங்கள்.
உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ரஜ்ஜு யார்? (நான் லேட் கமர்! எனக்குத் தெரியாது கேட்டோ!)
கோபால் சாரின் விருதுக்கு வாழ்த்துகள்.
கிரிக்கெட் கிரவுண்ட் புல்வெளியில் அமர்ந்து பார்ப்பது போன்ற ஏற்பாடு கவர்கிறது.
நீங்கள் சொல்லியிருக்கும் சமையலை வெளிநாட்டுக்காரர்கள் காரம் என்று சொல்லாமல் ரசிக்கிறார்களா?
அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துகள்.
கணையாழிக்கும் மோதிரத்துக்கும் வி உண்டா?
படங்கள் டாப். பனியில்லாத ஸேன்டா - கற்பனை செய்வது சிரமம்.
வாங்க வல்லி.
தட்டச்சு படுத்துது போல:-))))
ஆனாலும் புரிஞ்சுக்கிட்டேன், கேட்டோ!!!
வாங்க கோமதி அரசு.
வாழ்த்துகளுக்கு நன்றி.
உங்களுக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.
வாங்க ஸ்ரீராம்.
ரஜ்ஜு.... ஓ... அவன் எங்க ராஜலக்ஷ்மி. செல்லமாக் கூப்பிடுவது ரஜ்ஜூ.
அவனைப் பற்றி நிறைய எழுதியாச்சு. நீங்க பார்க்கலைனா ஒரு சாம்பிள் இங்கே:-)
http://thulasidhalam.blogspot.co.nz/2014/12/blog-post.html
காரமா? அந்த அமெரிக்கர்களும், நியூஸிக்காரரும் பக்கா சென்னை வாசிகள்தான்:-)
வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் எங்கள் வாழ்த்து(க்)கள்.
வாங்க துரை.
//கணையாழிக்கும் மோதிரத்துக்கும் வி உண்டா?//
உண்டே! அனுமன் கொடுத்தால் அது கணையாழி. மனுஷன் கொடுத்தால் அது மோதிரம்:-)))
நம்மூரில் இப்ப சம்மர் சீஸன். உலகின் தென்கோளம் இல்லையா!
அதான் எங்களுக்குக் கோடை க்றிஸ்மஸ்.
ஒயிட் க்றிஸ்மஸ்தான் அழகு. அது எமக்கில்லை:(
அதுக்காக சும்மா இருக்கமாட்டோம். எங்க பனிகாலத்தில் ஜூன் 25 அன்று விண்ட்டர் க்றிஸ்மஸ் என்று சிறிய அளவில் கொண்டாடிக்குவோம்:-)
லைஃப் டைம் சர்வீஸ் அவார்ட் கிடைத்ததற்கு வாழ்த்துக்கள் அம்மா...
அட்வான்ஸ் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
Home Improvement பதிவுக்களுக்காக காத்திருக்கோம்.
என்னது வைர மோதிரமாஆஆ ..?
உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் ...
விருது வாங்கிய அப்பாவிற்கும் எனது வாழ்த்துகளை தெரிய படுத்தவும்
கூட்டி கழிச்சு பார்த்தால் – அட நம்ம ராதாரவி அண்ணாமலை படத்தில் அடிக்கடி சொல்லும் வசனம்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
i got the old gopal,tulasi photo frame in one the photos. nice excellent u only changed lot - always gopal sir gopal only... unchanged beauty....
கோபால் சாருக்கு லைஃப் டைம் சர்வீஸ் விருது கிடைத்ததற்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
கணையாழி கண்ணைப் பறிக்கிறதே!
உங்கள் மெனு நாவில் நீர் ஊற வைக்கிறது.
விடுமுறையை கொண்டாடிவிட்டு வாருங்கள்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
உங்கள் கணவருக்கு விருது கிடைத்ததற்கு வாழ்த்துக்கள் உங்களிருவருக்கும் .
கிரிகெட் மைதானம் போட்டோஸ் மிக மிக .அருமை !!
விருந்தினரின் வருகைக்கு மெனு அட்டகாசம் .
உங்கள் குடும்பத்தாருக்கும் உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் .
புகைப்படங்கள் அருமை மேடம்
எனது பதிவு
என் நூல் அகம் 2
காண அன்புடன் அழைக்கிறேன்
கில்லர்ஜி
கோபால் ஐயாவுக்கு பாராட்டுக்கள்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் அம்மா.
தங்களுக்கும், குடும்பத்தாருக்கும், இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மேடம்!
வாங்க திண்டுக்கல் தனபாலன்.
ரெண்டு வகை வாழ்த்துகளுக்கும் நன்றி.
வாங்க குமார்.
வீடு கட்டி முடிச்ச அடுத்த வருசமே இது சரியில்லை, அது சரியில்லைன்னு ஹோம் இம்ப்ரூவ்மெண்ட் நடக்கத் தொடங்கியாச்சுன்னாலும், மேஜர் ஐட்டமா ரெண்டு சமாச்சாரம் அதற்குரிய ஆட்களைக் கொண்டே செஞ்சுக்கிட்டோம்.
இப்போ மத்த தேவைகளை (!!?) அனுசரிச்சு:-)))))
எல்லாத்தையும் எழுதத்தான் வேணும். ரொம்ப வருசமாக் கிடப்பில் கிடக்கு!
வாங்க ஆனந்த்.
அங்கங்கே மொச்சைக்கொட்டை சைஸ் வைரம் வாங்கறாங்க. நம்மதோ...கடுகு சைஸ். அதுக்கே 'ஆ ஆ ஆ 'வா:-)))
வாழ்த்துகளுக்கு நன்றி. கோபாலும் சொல்லச் சொன்னார்!
வாங்க தமிழ் இளங்கோ.
சினிமாவின் தாக்கம் அதிகமாத்தான் கிடக்கு தமிழன் வாழ்க்கையில்:-))))
வாங்க அனந்து.
அதுதான் எனக்கும் ஆச்சரியம்.... எப்படி கோபால் முகம்மாறவே இல்லைன்னு.
அதுக்கு நேர்மாறா.... ரெண்டு வருசத்துக்கு ஒருமுறை என் முகம் மாறிக்கிட்டே இருக்கும். இத்தனைக்கும் ப்ளாஸ்ட்டிக் சர்ஜரி ஒன்னுமில்லை கேட்டோ:-)))
ரொம்பப் பழைய ஃபோட்டோப் பார்த்து யாருன்னு கேக்கறவங்களிடம் , அது நான் தான்னு துப்பட்டாவைப் போட்டுத் தாண்டினால் கூட நம்புவது கஷ்டம்:-)
கோபாலுக்கு ஜாலியோ ஜாலி. விதவிதமான மனைவி முகம் அலுக்கவே அலுக்காது பாருங்க!!!
வாங்க ரஞ்ஜனி.
இப்பெல்லாம் மெனு கொஞ்சம் சின்ன அளவுதான். வயசாகுதே!
வாழ்த்துகளுக்கு நன்றி.
வாங்க சசி கலா.
க்ரிக்கெட் மைதானம்,பார்க்கைப் பாழாக்குதுன்னு ஒரு கோஷ்டியின் புலம்பல் உண்டு. (அதுலே நானும் இருக்கேன்)
போட்டிமுடிஞ்சாட்டு, முன்னைப் போலவே சீர் செஞ்சு தர்றதா வாக்குக் கொடுத்துருக்காங்க.
வாழ்த்துகளுக்கு நன்றிப்பா.
வாங்க கில்லர்ஜி.
ரசிப்புக்கு நன்றி.
உங்க நூல் அகத்தை வந்து பார்க்கணும். 11 நாள் விடுமுறையில் வீட்டுவேலை ஆளை அடிச்சுப்போட்டுருச்சு.
கோபாலும், இனிமேல்தான் ரெஸ்ட் எடுக்கணுமுன்னு ஆஃபீஸுக்குக் கிளம்பிப்போயிட்டார், இன்று:-)
வாங்க வேல்.
வாழ்த்துகளுக்கு நன்றி.
உங்களுக்கும் ஆங்கிலப் புத்தாண்டுக்கான எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.
வாங்க ஆறுமுகம் அய்யாசாமி.
வாழ்த்துகளுக்கு நன்றி.
உங்களுக்கும் ஆங்கிலப் புத்தாண்டுக்கான எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.
கோபால் சாருக்கு கிடைத்த பரிசு குறித்து மிக்க மகிழ்ச்சி. உங்கள் கணையாழியும் வெகு அழகு.
கிரிக்கெட் மைதானம் சூப்பரா இருக்கு. பார்க்கும் போது உங்களைப் பற்றியும் பேசுவோம்ல...:)
ஹை உங்களுக்கு பிடித்த பரிசு கிடைச்சிருக்கு போல!
தாமதமா வந்தாலும் வந்துட்டோம்ல! :)
Thagavaluku Nandri
Post a Comment