Friday, December 12, 2014

இருவர் உக்காந்து யோசித்தால்.......

நம்ம வகுப்பு  டைம்டேபிளில்  சின்னதா ஒரு மாற்றம் கொண்டு வர்றேன்.  பயணத்தொடர் எழுதுவதால்  இங்கே   உள்ளுர் நாட்டுநடப்பு சொல்ல விட்டுப்போயிருது:(

அதனால்  வாரம் மூன்று என்னும் வகுப்பில்   ரெண்டு பதிவுகள் (திங்கள், புதன்) பயணத்துக்கும், ஒன்று   (வெள்ளி) கனம் குறைந்த உள்நாட்டு சமாச்சாரத்துக்குமுன்னு ஒதுக்கி இருக்கேன். சின்ன சின்ன சுவாரசியமான சங்கதிகள் ஏராளமா இருக்கு:-)

ஏன் எனக்கு மட்டும் உக்காந்து யோசிக்கத்தெரியாதான்னு கேட்கும் ரஜ்ஜூ:-)







இது என்னடா....  எங்கெ உக்காந்து யோசித்தாலும் ஐடியா ஒன்னும் வரமாட்டேங்குதே!

பொறுப்பை அம்மாவிடமே  விட்டுறலாம்,இல்லே?


ஆரம்பம் ஒரு சின்னப் புதிராக இருக்கட்டுமே!



இது என்னவாக  இருக்கும்?


துடைப்பக்கட்டைக்குப் பட்டுக் குஞ்சலமாம்!!!!

21 comments:

said...

//Your Blog http://www.thulasidhalam.blogspot.com is not listed in Tamilmanam. Please submit your blog to Tamilmanam//

நான் இல்லவே இல்லையாமே! இந்த அநியாயத்தை எங்கெ போய்ச் சொல்வது?

யாராவது அங்கே இணைச்சு விடுங்கப்பா.

said...

கடிகாரம்...?

said...

முதலில் தளத்தை .com என்று மாற்றி விட்டால் எண்ணம் நினைவேறும்...!

dindiguldhanabalan@yahoo.com

said...

ரஜ்ஜூ போஸ் கொடுத்தால் போதும். மற்றதைப் பார்த்துக் கொள்ளதான் அம்மா இருக்கிறாரே:).

புதிர் விடை: மூடியுடனான முறம் போலத் தெரிகிறது.

பதிவு இப்போது தமிழ்மணத்தில் இணைந்திருப்பதாகக் காட்டுகிறது.

said...

கொஞ்ச நேரம் இங்கே சென்று வாருங்களேன் : ---> http://swamysmusings.blogspot.com/2014/12/2.html

கருத்துரையில் எனது பதில் உள்ளது...

விளக்கமாக எனது முந்தைய பதிவு : http://dindiguldhanabalan.blogspot.com/2014/03/Speed-Wisom-3.html(இனி நீங்கள் மா(ற்)ற வேண்டும்...!)

said...

ஏனக்கு ரஜ்ஜு படம் மட்டும் போதும் . புதிரெல்லாம் வேண்டாம். ராஜா மாதிரி இருக்கான். திருஷ்டி திருஷ்டி. கன்சர்வேடரி பியூட்டிஃபுல். நான் தமிழ்மணத்தில இல்லைன்னு சொல்லி ரொம்பநாளாச்சுதே. என்ன செய்யணும்னும் தெரியலை.ஆளைவிடு,.

said...

ரசனைக்காரி என்பது தான் சரியான வார்த்தை. ஆனால் ரசனைகாரம்மா என்பது தான் பொருத்தமான மரியாதையான வார்த்தை. சரிதானே?

said...

ம்ம்ம்ம்... மேல வளையம் இருப்பதை பாத்தால் key செயின்....
ரஜ்ஜூவின் யோசனை ஆழ்ந்த போஸ் சூப்பர் . diningtable அருகே உள்ள கண்ணன் படம் முழுதுமாக தெரியும்படி அடுத்த பதிவில் போட முடியுமா ?

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

கடிகாரமா????

ஊஹூம்.....

said...

வாங்க ராமலக்ஷ்மி.

அப்புறம் இன்னொருமுறை முயன்று பார்த்தேன். தமிழ்மணத்தில் இணைக்கமுடிஞ்சது:-)

மூடியுடன் கூடிய முறமா?

கொஞ்சூண்டு பக்கத்துலே வர்றீங்க போல:-)

said...

வாங்க வல்லி.

தமிழ்மணம் வேணாமுன்னா வேறெங்கே போவதாம்?

புதிருக்கு பதிலா இப்பவே ஒரு படம் அதுலே சேர்க்கப்போறேன்.

அது என்னன்னு கண்டு பிடிச்சுடலாம்:-)

said...

வாங்க ஜோதிஜி.

டீச்சரம்மா நல்ல ரசனைக்காரி என்றால் போதுமே!

said...

வாங்க சசி கலா.

கீ செயின் இல்லையாக்கும்.

கண்ணன் படம் இங்கே!

http://thulasidhalam.blogspot.co.nz/2006/08/blog-post_16.html

said...

ரஜ்ஜூ ரொம்பவும் செல்லம்தான் போலிருக்கிறது. கொடுத்து வத்தவள்.

said...

ரஜ்ஜூ கலக்கலா போஸ் எல்லாம் கொடுக்குறான்....:)

நான் முறம் மட்டும் தான் நினைத்தேன். பிரஷ் வேறயா?

said...

முதலில் ஒரு சந்தேகம் ரஜ்ஜூ 'ள்' ஆ? 'ன்' ஆ?
அதிலேயே போட்டிருக்கிறதே, dust pan and brush என்று. அப்படியா? இல்லை வேறெதாவதா?

said...

வாங்க தமிழ் இளங்கோ.

ரஜ்ஜு உண்மையிலேயே செல்லம்தான். 2011 ஆண்டு நிலநடுக்க சமயத்தில் சொந்த வீட்டை விட்டு வழிதவறி ஓடி வந்து நம்மிடம் அடைக்கலமான உயிர்.

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

எல்லாமெ செட்டுதான்:-)))

said...

வாங்க ரஞ்ஜனி.

ள் தான். ஆனால் எதுவானாலும் நம் மீட்டுக்கு வந்துட்டால் ன் ஆகிரும். அந்தக் கணக்கில் ராஜலக்ஷ்மி என்னும் அவன்:-))))

டஸ்ட் பேன் அன்ட் ப்ரஷ் என்று புதிருக்கான விடைச் சொல்ல போட்ட படம் அது:-)

said...

புதிரை முதல்படத்திலேயே கண்டுபிடித்துவிட்டேன்.

said...

வாங்க மாதேவி.

வருகைக்கு நன்றி.