Wednesday, December 17, 2014

அஷ்டாவதானியுடன் ...... ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 7)

கண்ணில் தொட்டு ஒத்திக்கலாம் போல அப்படி ஒரு அழகான உள் அலங்காரம்,  அந்த வீட்டம்மாவின் ரசனையைக் கோடி காமிச்சது!  பளிச் என்று இருந்த  சிட்டிங் ஏரியாவைப் பார்த்ததும்,  கோபால் என்னை பொருள் பதிந்த (!!) பார்வை  பார்த்தார்.

 'நீயும் இருக்கறயே....  வீடு முழுக்க கன்னாபின்னான்னு ஏகப்பட்ட ஜங்க் வாங்கிவச்சுக்கிட்டு!'

இதுக்கெல்லாம் மனசாட்சி உடனே சமாதானம் சொல்லிரும்.  ஆமாமா....   எங்கோ தொலை தூரத்தில் இருக்கும் நமக்கு,  நம்மூர் அலங்காரங்களை குறைந்த பட்சம் நம்ம வீட்டிலாவது பார்த்துக்க வேற வழி என்ன?  எனக்கு ,  வீடு  ஒரு லிட்டில் இண்டியாவா இருந்துதான் ஆகணும்:-)))

இங்கே வரும் வழியிலேயே   செல்லில்  இன்னொருக்கா வழிகேட்டுக்கிட்டோம்.  மைத்துனருக்கு இடம் தெரியும் என்பதால் பிரச்சனையே இல்லை.  அதுக்குள்ளே நம்ம  சீனிவாசன் ( சென்னை ஸ்ரீராம்  ட்ராவல்ஸ் ட்ரைவர்) வந்து சேர்ந்துட்டதாக சொன்னார்.  செல்பேசியின் உபகாரங்களில் இது ஒன்னு.  தகவல் சட்னு கிடைச்சிரும்.  நாளைக்குச் சென்னைக்குப் போயிடறோம். பெட்டிகள் அதிகம்  (!) இருப்பதால்  பெரிய வண்டியுடன் சீனிவாசனை  பெங்களூருக்கு அனுப்பி வைக்கும்படி  ஏற்கெனவே  ட்ராவல்ஸ் ஓனரிடம்  சொல்லி வச்சுருந்தோம்.

'சிட்ரஸில் சொல்லி இருக்கோம்.   நமக்கான பார்க்கிங்  அங்கே இருக்கு. சாப்டுட்டு நல்லா ஓய்வெடுத்துக்குங்க.  காலையில் பார்க்கலாமு'ன்னு  சொன்னார் கோபால்.

முதல்முதலாப் பார்க்கும் எண்ணமும், வியப்பும் ஒன்னுமே இல்லை.  தினம் தினம் பார்க்கும் சிநேகிதியை இன்றைக்கும் பார்த்துப்பேசுவது போலதான் இருந்துச்சு.

நல்ல பண்பட்ட எழுத்துக்குச் சொந்தக்காரர்.  புகைப்படக் கலைஞர்.  கவிதாயினி,  எழுத்தாளர்,  வீட்டு உள் அலங்கார நிபுணர், அருமையான பேட்டி எடுக்கும் நிருபர், குரல் எழும்பாமல் இனிமையாகப் பேசுபவர், விருந்தினரை உபசரிக்கும் பாங்கு இப்படிப் பன்முகம் கொண்ட திறமைசாலி  நம்ம ராமலக்ஷ்மி. ( இன்னும் என்னென்ன திறமைகள்  ஒளிஞ்சுருக்கோ!  அதான் எட்டுன்னு சொல்லிட்டேன்:-)

இந்த வருச கல்கி  தீபாவளி மலரில் இவுங்க எடுத்த படங்கள் வந்துருக்கு என்பது கொசுறுத் தகவல்:-)

அன்றைக்கு நடந்தது என்னன்னு அவுங்க சொற்கள் மூலமாகவே  பார்க்கலாம் நீங்க.   தன்னுடைய  இரண்டு புத்தகங்களை   ( அடைமழை,  இலைகள் பழுக்காத உலகம் ) அன்பளிப்பாக தந்தாங்க.  சென்னையில் நான் வல்லியம்மாவை சந்திக்கப்போறேன் என்பதால் அவுங்களுக்கும் இந்த இரண்டு புத்தகங்களைக்  கொடுத்தனுப்பிய  அன்பு,   என் மனசுக்கு மகிழ்ச்சியாக இருந்துச்சு.

இது போதாதுன்னு நினைவுப்பரிசா ஒரு அழகான வெள்ளிக்குத்துவிளக்கு எனக்கு!   நம்ம சாந்திக்கும் ஒரு நினைவுப்பரிசு.

 கோபாலும், ராமலக்ஷ்மியின் கணவரும்  என்னவோ    ஆழ்ந்து உரையாடிக்கிட்டு இருந்தாங்க.  உலகம் சுற்றும் வாலிபர்கள்!  என் கவனம் அங்கே இல்லை:-)  ஆனால்.... ஒன்னு மட்டும் என் காதில் விழுந்தது.

கோபால்:  " அவுங்க எழுதுவதற்கு நீங்கள் என்ன மாதிரி உதவி செய்யறீங்க?"

"அது எதுக்கு, இது எதுக்குன்னு  எல்லாத்துலேயும் தலையை நுழைக்காம  சுதந்திரமா செயல்பட விட்டால் போதாதா?"

சட்னு சொன்னது நாந்தான்:-)))

படங்கள் எல்லாம் குடும்பப்படங்களாகிப் போனதால்  வெளியிடவில்லை. மன்னிக்கணும்.  கண்ணைக் கட்டி இழுத்தது புத்தக அலமாரி!  ஹைய்யோ!!!!

கைநிறைய பரிசுப்பொருட்களுடனும் மனம் நிறைய மகிழ்ச்சியுடனும் அங்கிருந்து கிளம்பினோம். வாசல் கேட்வரை வந்து வழியனுப்பினார்கள்.
எங்களுக்கு தீபாவளிப் பரிசாக புதுத்துணிகள் எடுத்துத் தரணும் என்று சாந்திக்கு   ஒரு பிடிவாதம். 'அதெல்லாம் வேண்டாம். எதாவது பொம்மை வாங்கித் தாங்க. கொலுவில் வைக்கலாம்'  என்று சொன்னதும்  ஒரு  கடைத்தெருவுக்கு (எந்தப்பகுதின்னு இருட்டில் தெரியலை.  மல்லேஸ்வரமாகவும் இருக்கலாம்) கூட்டிப்போனார்கள்.

 அழகழகான  பொம்மைகள்.  அப்பதான் நினைவுக்கு வந்துச்சு எனக்கு கலசத்தில் வைக்க ஒரு முகம் வேணும் என்பது.

" பக்கத்துலேதான் நகைக்கடை இருக்கு. வெள்ளியில் வாங்கலாம்"  சாந்தி சொன்னதைக் கேட்டதும்,  கோபாலின் ரீயாக்‌ஷன் எப்படி இருக்குன்னு பார்க்கலாமேன்னா.....  வழக்கம்போல் முன்னால் ஓடிக்கிட்டு இருந்தார்:-)

'அதெல்லாம் வேணாம்.  நான் வீட்டுலே வரலக்ஷ்மி நோம்பெல்லாம் செய்யறதில்லை.  இது ஜஸ்ட் அலங்காரத்துக்கு மட்டும்தான்'  என்று சொல்லி வாய் மூடலை.....  இதைப் பாருங்கன்னு  கொண்டு வந்து கையில் கொடுத்தாங்க விற்பனையாளர். அட! ஆமாம். இதுதான் !  அவுங்க  காமிச்ச ஒரு  அட்டைப்பெட்டியில் இன்னும் ஒரு பத்துப்பனிரெண்டு முகங்கள்.  மரமுகமோன்னு இருந்த சந்தேகம் ,   வெள்ளை உலோகம் என்றதும் தீர்ந்துச்சு:-) அப்பாடா.....

கண் சரியில்லை, நகையிலே கல் விழுந்துருக்கு,  மூக்கு கொஞ்சம் கோணையா இருக்கோ?  காதுக்கம்மல் நல்லா இல்லையே இப்படி நோணாவட்டம் பார்த்தபின் சின்னதும், கொஞ்சம் பெருசுமா ரெண்டு முகங்கள் தேறுச்சு.  இப்ப.... இதுலே எதுன்னு இன்னொரு முக்கியமான  தீர்மானம் எடுக்கணும்.  நம்ம கிட்டேதான் ரெண்டு குடம்  இருக்கே. அதனால் ரெண்டாவே இருக்கட்டும்.


"ஏம்மா....  ஒன்னு சின்னது ஒன்னு பெருசா இருக்கே?"

நம்மூட்டுக் குடங்களும்  சின்னதும் பெரியதுமாத்தான் இருக்கு:-)

வெளியே கடைத்தெருவில்  கலகலன்னு தீபாவளிப் பர்ச்சேஸ் கூட்டம்.  சந்தடியைப் பொருட்படுத்தாமல்  நல்ல உறக்கத்தில் இருக்கார் சிண்ட்டு.


பழவகைகள் வண்டியில் விற்பனை. கண்ணை  இழுத்தது கொய்யா. எங்கூர்லே கிடைக்காதே.  நல்ல பெரிய பழங்களாப் பொறுக்கி வாங்கினேன்.  அதில் நல்லாக் கனிஞ்சது ஒன்னு எனக்கு!கடை வரிசைகளுக்கு எதிரே  ஒரு பார்க்.  கடையின் பெயரை அப்பதான் பார்த்தேன்.  தேவி ப்ரஸாத் சூப்பர் பஸார்.  மல்லேஸ்வரம்தானாம்.

வீட்டில் சாப்பிடலைன்னு சாந்திக்கு ஒரே குறை.  மணி எட்டாகப்போகுது. ராத்திரி டிஃபனுக்கு இட்லி செஞ்சு தரேன்னு  இழுத்துக்கிட்டுப் போனாங்க.   மைத்துனரின் இரண்டு மக்களும் ஜெர்மனியில் மேற்படிப்பு.  அவுங்களுடன் ஸ்கைப்பில்  பேசிக்கிட்டு இருந்தோம் இட்லி  வேகும்வரை:-)

பெரியம்மா பெரியப்பாவை வீட்டில் பார்த்தது அவுங்களுக்கும் மகிழ்ச்சி. மகன் சமையல் நிபுணரா மாறிக்கிட்டு இருக்கார். பேசாம  ஜெர்மனியில் ஒரு இண்டியன் ரெஸ்ட்டரண்ட்  ஆரம்பிக்கணும். அதென்டிக் சவுத் இண்டியன் மெனு.  சுருக்கமாச் சொன்னா....  இப்ப இண்டியன் உணவகங்களில்  இருக்கும் ஐட்டங்கள் ஒன்னுமிங்கே தலை காட்டக்கூடாது,ஆமாம்:-)

மறுநாள் காலை எங்களோடு ப்ரேக்ஃபாஸ்ட்  சாப்பிடவரச் சொல்லிட்டு  அறைக்கு வந்து சேர்ந்தோம்."ஏங்க  கொய்யாப்பழம்   எங்கே?"

ஙே....

தொடரும்......:-)


PIN குறிப்பு:  கோபால் அடைமழையை வாசித்துவிட்டார்!  சின்னச்சின்னக் கதைகளாக தன்னைப்போன்ற பாமரனுக்கும்  புரியும்படியாக எளிமையாக இருக்காம்!!!!

31 comments:

said...

ரசித்தேன்.

said...

கொய்யாபழம் எங்கே??/

said...

பன்முகம் கொண்ட திறமைசாலி - இருவர்...

வாழ்த்துக்கள்...

said...

வழக்கம் போல இந்த பதிவையும் ரசித்துப் படித்தேன். சகோதரி ராமலட்சுமி மட்டுமல்ல, அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த வெடிவால், நானானி, இன்னுமொருவர் (பெயர் சட்டென்று நினைவுக்கு வரவில்லை) - எல்லோருமே சிறந்த பதிவர்கள்.
அடுத்த பதிவை ஆவலோடு எதிர் பார்க்கிறேன். நன்றி

said...

சென்னையில் நடைபெற்ற சஷ்டியப்த பூர்த்தி விழாவுக்கு நீங்கள் மடலிலும் ஃபோனிலும் அழைத்தபோது வர இயலாது போனது. இரண்டே நாள் பயணமாக பெங்களூர் வந்திருந்த போது நேரம் ஒதுங்கி எங்களைச் சந்திக்க வந்ததில் அளவற்ற மகிழ்ச்சி.

அன்பினால் தந்திருக்கும் தலைப்புக்கு நன்றி! எல்லாவற்றிலும் காலை வைத்து எதிலும் முழுமையான கவனம் செலுத்த முடியாமல் போகிறதோ என அடிக்கடித் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை:)!

கோபால் sir 'அடை மழை’ யை வாசித்து விட்டது அறிந்து மகிழ்ச்சி.

அம்மன் முகங்கள் மிக மிக அழகு! குறிப்பாக முதலில் இருக்கிற சின்ன முகம். கடை மல்லேஸ்வரத்தில் எந்த இடத்தில் இருக்கிறதென்பதை திருமதி.சாந்தியிடம் கேட்டுத் தெரிந்து கொள்கிறேன். அலைபேசி எண் இருக்கிறது.

said...

@ தி.தமிழ் இளங்கோ,

மற்றுமொரு பதிவராக நீங்கள் குறிப்பிட்டிருப்பவர், சமீபத்தில் இறைவனடி சேர்ந்த கோமா எனும் திருமதி. கோமதி நடராஜன்.

said...

ராமலக்ஷ்மியும் வீடும் அவங்களும் அருமை.எளிமை. கொய்யாப் பழம் மறந்துட்டீங்களா. அடப் பாவமே. நானும் அடை மழையில் பாதி முன்னேறிவிட்டேன்.எல்லாம் சகஜமான நிகழ்வுகளோடு ஆழமான கருத்துகளோடு சிறப்பா இருக்கு,. லைப்ரரி படத்தைக் காணோமே.

said...

ராமலஷ்மி அவர்களை சந்தித்த நிகழ்வுகள் அருமை. பன்முக வித்தகி.

அம்மன் முகங்கள் அழகாக உள்ளது.

தொடர்கின்றேன்.

said...

அன்பின் டீச்சர்,

சகோதரி ராமலக்‌ஷ்மியைச் சந்தித்தது குறித்து மகிழ்ச்சி டீச்சர். அவரது உள்வீட்டு அலங்கார புகைப்படங்களைப் பதிவிட்டிருக்கலாம்.

அப்புறம் வீதியோரக் கடைகளில் பழங்கள் வாங்கக் கூடாது. ஆரோக்யத்துக்கு ஹானிகரமானு கேட்டோ ! :)

said...

நானும் போனவாரம் திருமதி ராமலக்ஷ்மியை சந்தித்தேன். மிகவும் எளிமையாகப் பழகுகிறார். அவரைப்பற்றி நீங்கள் மிக அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள். அவருக்கும், உங்களுக்கும் பாராட்டுக்கள்.

said...

ராமலக்ஷ்மியை பற்றி நீங்கள் சொன்னது எல்லாம் உண்மை.
அம்மன் முகம் மிக அழகாய் இருக்கிறது. கர்நாடகாவில் கெளரி பண்டிகைக்கு இந்த முகம் வைத்து கும்பிடுவார்கள்.

said...

இனிமையான சந்திப்பு .
அந்த முகங்கள் அழகு , அதுவும் அந்த சிறிய முகம் very sweet .

உங்கள் அக்கா புத்தகமாக வெளியிடுவது பற்றி மிக மகிழ்ச்சி !!! வாழ்த்துக்கள் . மிக அருமையான புத்தகமாக இருக்கும் . ஆவலுடன் காத்துருக்கிறேன்

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

நன்றி.

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

அது சாந்தி வீட்டு மேஜையின் மேல் இருக்காம்:-)

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

அப்டீங்கறீங்க!!!!

நன்றி.

said...

வாங்க தமிழ் இளங்கோ.

சிறந்த பதிவர் மட்டுமா?

உபசரிக்கும் குணத்தை எப்படிச் சொல்ல?

2009 ஆண்டு. முதல்முதலா திருநெல்வேலி போறோம்.
நானானியின் ஏற்பாட்டில் தங்கும் இடம், ஊர் சுற்றிப்பார்க்க கார், ட்ரைவர் எல்லாமும் அங்கே ரெடி!

போதாக்குறைக்கு ஒரு பூங்கொத்தோடு வரவேற்பு!

இத்தனைக்கும் நானானி அவர்களை நான் அப்போது நேரில் சந்திச்சது கூட இல்லை!

http://thulasidhalam.blogspot.com/2009/04/2009-13.html

said...

வாங்க ராமலக்ஷ்மி.

//எல்லாவற்றிலும் காலை வைத்து எதிலும் முழுமையான கவனம் செலுத்த முடியாமல் போகிறதோ என அடிக்கடித் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை:)!//

அப்படி இல்லை. எல்லாத்திலும் புகுந்து பார்த்து, அப்புறம் எது நமக்குத் தோதோ, எது நன்றாக வருகிறதோ, எதில் நமக்கு முழு திருப்தி தோன்றுகிறதோ அதில் நம்மை முழுமையா ஈடுபடுத்திக்கலாம்.

இங்கே நியூஸியில், ஆரம்பப்பள்ளியில் சொல்வது இதைத்தான். பாலே, பாட்டு, பியானோ, வயலின், நீச்சல், நெட்பால், கராத்தே , ரெக்காடர் (பின்னாளில் ஃப்ளூட்) இப்படி அஞ்சு வயசிலேயே எல்லாத்திலும் சேர்த்துவிடச் சொல்லுவாங்க.

வாரம் ஆறுநாளும் ஸ்கூல் ஆயா போல பள்ளிநேரம் முடிஞ்சு இங்கே அங்கேன்னு கூட்டிப்போய் திரும்பக் கூட்டிவரவே நேரம் சரியா இருக்கும்.

பள்ளி வாழ்க்கை முடிஞ்சதும்தான் எனக்கு ஓய்வே கிடைச்சது.
மகளும் பாட்டு,நெட்பால் என்று கால் பதிச்சுட்டாள்.

எட்டாவது க்ராஸில் பார்க் ரோடு இருக்கு பாருங்க. அங்கேதான் இந்தக் கடை தேவிப்ரஸாத் சூப்பர் பஸார் இருக்கு.

சாந்தியே கூடக் கூட்டிப் போவாங்க.

said...

ராமலக்ஷ்மி,

கோமாவை நினைச்சால் இன்னும்கூட மனதுக்குக் கஷ்டமா இருக்குப்பா:(

said...

வாங்க வல்லி.

பேச்சு சுவாரஸியத்தில் படம் எடுக்க விட்டுப்போச்சு.

பேசாம நம்ம ராமலக்ஷ்மியிடமே புத்தக அலமாரி படம் அனுப்பச் சொல்லிக் கேக்கலாம்:-)

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

ஒரே நாளில் நாம் இருவருமே அவுங்களைப் பற்றி எழுதுனதுதான் வியப்பாவும் சிறப்பாவும் இருக்கு!

said...

வாங்க ரிஷான்.

கேமெரா கையில் இருப்பதை மறந்தே போனேன்!!!!

ரோட்டோரமுன்னு அப்படி தள்ளிவிட முடியாது இந்தியத் திரு நாட்டில்!

வெட்டாத முழுப் பழங்களாக இருப்பவைகளை நல்லா கழுவிட்டு, மேல் தோலை லேசா சீவிட்டுச் சாப்பிடலாம்.

கடைகளுக்கு மட்டும் வேறெங்கேயிருந்து வருதுங்கறீங்க?

said...

வாங்க ரஞ்ஜனி.

ஆஹா.... அத்தாட்சி கிடைச்சிருச்சு:-)

said...

வாங்க கோமதி அரசு.

உண்மையைச் சொல்லிட்டேன், பாருங்க!!!

கௌரி பூஜைக்கான முகங்களா இவை!!!

அட! எனக்குப் புதிய தகவல். நன்றி.

said...

வாங்க சசி கலா.

அருமையான முகங்கள் என்றதும் மகிழ்ச்சி ரெட்டிப்பாச்சு:-)

அக்கா விற்பனைக்கு வந்துட்டாங்களாம். சந்தியா பதிப்பகம் முகநூலில் போட்டுருக்காங்க.

தவிர அவர்கள் தளத்திலும் பார்க்கலாம்

http://sandhyapublications.com/

https://www.facebook.com/pages/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/1444862499070850?fref=ts

said...

பின்னூட்டம் போட முடியலையே தவிர உங்க பின்னாடியே வந்துட்டிருக்கேன் துள்சிக்கா :-)

ஒரு அல்ப சந்தோஷம்.. உங்களால என்னை மறக்கவே முடியாது :-)

said...

8th cross, பழக்கமான இடம். சாந்தி அவர்களிடமும் பேசுகிறேன். நன்றி.

உண்மைதான். அதிக ஆர்வம் கொண்டிருக்கும் ஃபோட்டோகிராஃபியில் தொடர்ந்து கற்கவும், பரீட்சித்துப் பார்க்கவும் நிறைய இருப்பதால் மற்றவற்றிற்கு நேரம் போதவில்லை.

வல்லிம்மா, படங்கள் அனுப்புகிறேன்:).

அனைவரின் அன்புக்கும் நன்றி.

said...

திருமதி ராமலக்ஷ்மியை பெங்களூருவில் பதிவர் சந்திப்பு ஒன்றில் பார்த்துப்பழகி இருக்கிறேன். இனிமையானவர்.

said...

வாங்க சாந்தி.

உங்கள் அன்புக்கு நான் அடிமை!

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

உண்மைதான்! இனிய மனுஷி!

said...

ராமலக்‌ஷ்மியைச் சந்தித்தது மகிழ்ச்சி. இனிய தருணம்கண்டு நானும் மகிழ்ந்தேன்.

said...

வாங்க மாதேவி.

வருகைக்கு நன்றி.