Friday, December 05, 2014

மெய்யாலுமா ஏழாயிரம் வருசம்? ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 3)

வெளியே வந்து கோவிலின் படி இறங்கும்போது  கண்ணெதிரே   பிரமாண்டமான பெரிய நந்தி ஸார் , காலை மடிச்சு உட்கார்ந்துருக்கார் எதிர்கோவில் மதில்சுவரின் நுழைவு வாசலின் மேலே!

என்ன கோவிலுன்னு  தெரியலை . எல்லாமே  (எங்கண்ணன் சொல்வது போல) ஜிலேபி ஜிலேபியா  கன்னடத்தில் 'மட்டுமே' எழுதி வச்சுருக்கு.  என்னுடைய தெலுகு எழுத்து அறிவை வச்சு வாசிக்கப் பார்த்தேன்.(கன்னடா,  தெலுகு ரெண்டுக்கும்  அநேகமா ஒரே எழுத்துருக்கள்தான்) எழுத்து கூட்டறதுக்குள்ளே ஒரு ஜென்மா போயிரும் போல!   பெங்களூரு வாசியான மச்சினரிடம்  கேட்டால்........  " ஹிஹி.... படிக்கத் தெரியாது....   நந்தி தீர்த்தக்கோவிலுன்னு  இருக்கும்" ! அப்புறம்  விசாரிச்சுத் தெரிஞ்சுக்கிட்டது  தக்ஷிண முக நந்தி தீர்த்த கல்யாணி க்ஷேத்ரம் (Dakshina Mukha Nandi Teertha Kalyani Kshetra)

இப்பெல்லாம் வெளிமாநிலப் பயணிகள் கோவில்கோவிலா வர்றாங்களே... அவுங்களுக்காகவாவது  ஆங்கிலத்திலோ, வேணாம் அது அந்நிய பாஷைன்னா... ஹிந்தியிலோ எழுதி வைக்கக்கூடாதா?  இந்திய ஒருமைப்பாடுன்னு ஒருபக்கம் சொல்லிக்கிட்டே, அந்தந்த மாநிலங்கள் தங்களுக்கான மொழியை மட்டுமே  கையாள்வது ...   தகவல் பரிமாற்றதுக்கு  ஏற்றதா?   என்னமோ  சரியாத் தெரியலை எனக்கு:(


எதிர்வளாகத்துக்குள்ளே  நுழைஞ்சோம்.  நிறைய மரங்கள் அடர்ந்த  வனம். அழகாக  கடப்பைக் கற்கள்  பாவிய பாதைகளுடன்.  நல்லா சுத்தமாவும் இருக்கு. சூப்பர்!  அதுக்குள்ளே போய் இடப்பக்கம் திரும்பினதும்,  நம்ம பரமசிவன், பார்வதி குடும்பத்தினர்   மேல்வரிசையில்  இருக்கும்  ஒரு நுழைவு வாயில்.  கொஞ்ச தூரத்தில்  நம் கண்ணுக்கெதிரா பளபளன்னு  தங்கம் பின்புலமா இருக்க கரும்பளிங்கு நந்தி தென்திசை நோக்கி  உக்கார்ந்துருக்கார்.



ஏழெட்டு படிகள் இறங்கிப்போனால்.... நடுவில் சதுரமான ஒரு குளமும், அதுக்கு அந்தாண்டை ரெண்டு நிலையா  சாமிகளும்.  மேலே சுற்றிவர அகலமான வெராந்தாவுடன் அட்டகாசமா இருக்கு கோவில்.





படி இறங்கி முதல்மாடி நந்தியை  ஸேவிச்சுக்கிட்டு இன்னும் நாலு படி இறங்கிப்போனால்...  கீழ்தளத்தில் ஒரு சிவன், லிங்க ரூபத்தில்.  மேல் மாடியில் இருக்கும் நந்தியின் வாயில் இருந்து ஒழுகும் நீர்தாரை, நேரா கீழே இருக்கும் சிவலிங்கத்தின் மேல்  பொழிஞ்சு  சதா அபிஷேகம் நடந்துக்கிட்டு இருக்கு.


(நந்தி வாய் நீர்  சிவன் தலைக்கு மேல் இருக்கும் பெரிய  கலசத்தில் சேர்ந்து  அங்கிருந்து சிறு தாரையாகப் பொழிகிறது!)

அபிஷேகம் ஆன தண்ணீர் வழிந்தோடி இன்னும் சில அடிகள் கீழே இருக்கும்  குட்டித்தடாகத்தில் போய்ச் சேருது. அதில்  ரெண்டொரு ஆமைகளும், மீன்களுமா சுத்திச் சுத்தி வர்றாங்க. குளத்தின் ஆழம் 15 அடியாம்!

அர்ச்சகர் தீபாராதனை காமிச்சதும்,  பக்கத்துலே இருந்த இன்னொரு குருக்கள் தீர்த்தப்ரஸாதம் தர்றாம். பாட்டில்களில் தீர்த்தம் நிரப்பி அடுக்கி வச்சுருக்கு, அவர் முன்னால். பக்தர்கள் வீடுகளுக்கு வாங்கிப்போறாங்க. எங்கிருந்து நந்திக்குத் தண்ணீர் சப்ளை என்பது இதுவரை புரியாத புதிர்தானாம்.  மூலிகை சத்து நிரம்பிய தண்ணீர் என்று மக்களுக்கு ஒரு நம்பிக்கை!

படம் எடுத்துக்க தடை ஒன்னும் இல்லை என்பதே  ரொம்ப மகிழ்ச்சியாப் போச்சு எனக்கு!   ஃபோகஸ் செஞ்சப்போ ,கோவிலுக்குப்பின்னால் இருக்கும் ஓவர்ஹெட் வாட்டர் டேங்க், கேமெராக் கண்ணில் பட்டுருக்கு.  நானே விதண்டாவாதம் செய்யும் இடும்பி. எனக்கும் இப்படி எதாவது கண்ணில் மாட்டுது பாருங்களேன்:-)   மனசே... அடங்கு. நம்பிக்கைதான் ஸ்வாமின்னு எத்தனைவாட்டி சொல்றதுன்னு அடக்கி வச்சேன். ஆனாலும்...குரங்கு.... ஆட்டம்போடாமல் அடங்குனதா சரித்திரம் உண்டோ? 



இந்தக்கோவிலுக்கு வயசு ஏழாயிரமுன்னு  கார்பன் டேட்டிங் முறையில் கண்டுபிடிச்சு இருக்காங்களாம்.  ஆனால் இந்தக் கோவிலைக் கண்டுபிடிச்சே  இப்ப வருசம் பதிமூணுதான் ஆகுது!

எங்க பாட்டி ஒரு விடுகதை போடுவாங்க. தெலுகு விடுகதை.  தமிழில் சொல்றேன்.
 நேற்று செத்த  ஒரு முயல் இன்றைக்குக் கறி ஆனது. ஆனால் அந்த முயலைக் கொன்றவன் இறந்து ஆறுமாசமானது!
எப்படி எப்படின்னு நாங்க (பேரப்பிள்ளைகள்) எல்லோரும் மண்டையை உடைச்சுக்குவோம். யோசிக்கிறோமுல்லெ:-)

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மன் கோவிலுக்கு எதிரே  காடுபோல இருந்த  இடத்தை, ஒரு அரசியல்வாதி சும்மாக் கிடக்கும் இடத்தை வித்துட்டால் காசு வருமேன்னு  நிலத்தை சமன் செய்ய ஆட்களை ஏவி இருக்கார்.  அப்போ தோண்டும்போது  கருங்கல் தூண் தட்டுப்படவே  சமாச்சாரம் தொல்லியல் துறைக்குப் போயிருச்சு.   அவுங்க வந்து பொறுப்பேற்று முழுசும் தோண்டிப் பார்க்க,  அருமையான பழங்காலக்கோவில் பழுதுபடாமல் இத்தனைகாலம் மண்ணுக்குள்ளெ புதைஞ்சு கிடந்தது,  ஊருலகத்துக்குத் தெரிஞ்சது.

உண்மையில் கோவில் சமாச்சாரம் கண்டு பிடிச்சது, 1999 ஆண்டு என்றும்,  கோவிலை  மக்களுக்காகத் திறந்து வச்சு  நித்தியப்படி பூஜை புனஸ்காரம் எல்லாம் ஆரம்பிக்க ஒரு  மூணு வருசம் ஆகி இருக்குன்னும்  (டைம்ஸ் ஆஃப் இண்டியா ,பெங்களூர்)2001 இல்  ஒரு சேதி. இதுதான் சரியா இருக்கணும், இல்லே?

ஏழாயிரம் வருசத்துக்கு முன்னேன்னா......  ஒருவேளை  தூண் செதுக்கப்பட்ட கல்லுக்கு  மட்டும் வயசு ஏழாயிரமோ?  இன்னும் குழப்பம் எனக்குத் தீரவே இல்லை:(  போனோமா, பார்த்தோமா வந்தோமான்னு இல்லாம  இது என்ன  வெட்டி எண்ணம்!

இதுலே  ஒரு சிலர், இந்தக் கோவிலைக் கட்டினது  ஷிவாஜி, நம்ம   மராட்டி சத்ரபதி ஷிவாஜின்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க.  அவர்  பிறந்தே இன்னும் நானூறு வருசம்  கூட நிறைவாகலையே!

மனசே அடங்குன்னு மிரட்டிட்டு வளாகத்தை விட்டு வெளியே வந்தேன்.

சும்மாச் சொல்லக்கூடாது, வளாக முகப்பில் இருக்கும்  வாசல் நந்தி, சூப்பர். கண்ணுக்கு இனிமை!

'நகலைப் பார்த்த கண்ணோடு அசலையும் பாரு'ன்னு அங்கே வந்து  நின்னது ஒரு பூம்பூம் மாடு!


தொடரும்........ :-)

35 comments:

said...

ஆட்டம் போடுவதால் தான் இப்படி அற்புதமான படங்களோடு விளக்கங்களும் கிடைக்கிறதே அம்மா...

said...

தமிழ்மணத்துக்கு என்ன ஆச்சு?

இடுகையைச் சேர்க்க முடியலையே:(

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

நீங்களாவது வந்தீங்களேன்னு...

said...

ஆகா! இந்தக் கோயிலா! நான் பெங்களூர் போன புதுசுல ஒவ்வொரு சனிக்கிழமையும் வீட்டிலிருந்து இந்தக் கோயிலுக்குப் பக்கத்துல இருக்கும் காடு மல்லேஷ்வர கோயிலுக்கு விடியக்காலைல நடந்தே வருவேன். அங்க ஒரு சின்ன முருகன் கோயில் இருக்கும். நீங்க சொன்ன அதே 1999.

அப்போ நீங்க சொல்ற கோயில் இருந்த எடத்துல ஒரு பிளேகிரவுண்ட் இருந்தது. அந்த ஏரியாவுக்கான பிளேகிரவுண்ட். நரசிம்மர் கோயிலுக்கு நேர் எதுக்க. பசங்க அங்க வெளையாண்டுட்டே இருப்பாங்க. ஆனா கிரவுண்டுக்கு நடுவுல எப்பவும் சகதியா இருக்கும்.

அந்த வருடமோ அதுக்கு அடுத்த வருடமோ.. விளையாண்டுக்கிட்டிருந்த ஒரு பையன் கால்ல எதோ இடிச்சிருக்கு. பாத்தா ஏதோ சிலையோட ஒரு பகுதி. அதுக்கப்புறம் தோண்டிப் பாத்து கண்டுபிடிச்சதுதான் இந்தக் கோயில் இப்ப இருக்கும் வண்ணவண்ன வாசல்.. மேல இருக்கும் பெரிய நந்தி செலைன்னு எதுவுமே அப்ப கெடையாது. உள்ள இருந்த கோயில் மட்டுந்தான் இருந்தது. யாரும் போகக்கூட மாட்டாங்க. நான் காடு மல்லேஷ்வரர் கோயிலுக்குப் போயிட்டு.. அப்படியே நரசிம்மரையும்.. எதுக்க இந்த நந்தியையும் பாத்துட்டு இருந்தேன்.

போகப் போக கோயில் கலர்புல்லா மாறிடுச்சு. மொதல்ல இருந்த இயற்கையான அழகு போயே போச்சு. இப்போ நீங்க போட்டிருக்கும் போட்டோல செம கிளாமரா இருக்குது இந்தக் கோயில். கூட்டமும் கலெக்‌ஷனும் அள்ளுது போல.

அந்த டேங்கெல்லாம் பின்னாடி வந்தது. எந்த டேங்கும் இல்லாம நந்தி வாய் வழியா தண்ணி வந்ததை நான் பலமுறை பாத்திருக்கேன். இப்பக் கூட்டத்துக்கு ஏத்த அளவுக்குத் தண்ணி வேணும்ல. நிலத்தடி நீரும் பெங்களூர்ல ரொம்பக் கொறஞ்சிருச்சு.

அந்த நரசிம்மர் கோயில் ரொம்ப அருமையா இருக்கும்.

said...


வணக்கம். மெய்யாலுமா ஏழாயிரம் வருஷம்.இதையெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது. உலகம் தோன்றிய முதலே இருந்த கல்தானே அது. not man made. ஏழாயிரம் வருஷம் என்பது மிகவும் குறைச்சல். பதிவில் படங்கள் கொள்ளை போகிறது. வாழ்த்துக்கள்.

said...

நந்தி பகவானுக்கும் சிவனுக்கும் வணக்கம். படங்களும் பதிவும் பலவிஷயங்களைத் தெளிவு படுத்துது. பங்களூரு மக்களுக்குப் பக்தி ஜாஸ்திப்பா. அதனாலதான் இதெல்லாம் நடக்குது.எத்தனை வருஷம் ஆனா என்ன. நமக்குச் சாமி போதும். இன்னிக்குக் கார்த்திகைக்கு சிவபெருமான் தரிசனம் ஆச்சு.

said...

நாங்களும் இந்த கோவில் போய் வந்தோம். அழகான கோவில்.

said...

\நேற்று செத்த ஒரு முயல் இன்றைக்குக் கறி ஆனது. ஆனால் அந்த முயலைக் கொன்றவன் இறந்து ஆறுமாசமானது!
எப்படி எப்படின்னு நாங்க (பேரப்பிள்ளைகள்) எல்லோரும் மண்டையை உடைச்சுக்குவோம். யோசிக்கிறோமுல்லெ:-)\\

எங்களையும் மண்டையை உடைச்சுக்க சொல்லாதிங்க. விடுகதைக்கு பதில் சொல்லுங்க.

said...

நந்தியை அழகாக எடுத்துள்ளீர்கள். படம் எடுக்க அனுமதி என்பதை அறிந்து கொண்டேன்:).

said...

படங்கள் அழகு...

தகவல்களுக்கு நன்றி.

said...

நேரில் பார்க்கமுடியாத பல இடங்களையும் உங்கள் தயவால் தரிசனம் பண்ணக் கொடுத்துவைத்திருக்கிறது எங்களுக்கு. நன்றி டீச்சர். படங்கள் பிரமாதம். அடங்கா மனத்தின் கேள்விகள் இன்னும் பிரமாதம்.

said...

முயல் விடுகதைக்கு பதில் ப்ளீஸ் ....
அருமை . நந்தி வாயில் தண்ணீர் , லிங்க அபிஷேகம் ,overheadtank அத்தனை படங்களும் அருமை !!!
சிவனாருக்கு நித்ய அபிஷேகம் ,பின்னணி கதை சொல்ல முடியுமா ? சென்னை பத்மனாபன் கோவிலில் பார்த்தப்பவே கேட்கனும்னு இருந்தேன் . விவரம் சொல்லுங்கள் please

said...

நந்தி தீர்த்த கோயில் தரிசனம் கண்டேன். நீங்கள் போட்ட தெலுங்கு விடுகதை ... ... யோசித்து ... யோசித்து ... முடியவில்லை.

said...

கோவில் தகவல்களும், படங்களும் அருமை. விடுகதைக்கு விடையை தெரிந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்...:)

said...

முதலில் கதையை விடுவிக்கலாம்.
ஒரு ஆறுமாசத்துக்கு முந்தி ஒரு ஆள் காட்டுக்குள்ளே வந்து தூக்குப்போட்டு இறந்துட்டான். அந்த சவம் ஊசலாடிக்கிட்டே இருந்துருக்கு. கயிறும் காலப்போக்கில் லேசா இற்றுப்போக ஆரம்பிச்சு ஒரு நூலிழையில் தொங்கும் சமயம். அன்று வேறொரு மனிதன் அந்தப் பக்கம் வர்றான். வேடன்னு வச்சுக்கலாம்.
கீழே தரையில் முயல் ஒன்னு மேய்ஞ்சுக்கிட்டு இருந்துருக்கு. அவன் வரவும், சவம் பொத்துன்னு முயல் மேல் விழவும் சரியா இருந்துருக்கு. வேடன் பார்க்கிறான் . முயல் ப்ராணனை விட்டது. அதைக் கொண்டு போய் மறுநாள் தன் வீட்டில் சமைக்கிறான்.
நிறைய லாஜிக் ஓட்டை இதுலே. நாங்க அப்ப ரொம்பவே சின்னப்பசங்களா இருந்ததாலும், விதண்டாவாதம் செய்யக் கத்துக்காததாலும்.... அம்மம்மா சொன்னதை அப்படியே நம்பிட்டோம்:-)))))
பெரியவங்க சொன்னால் கேட்டுக்கணும். ஆராயக்கூடாதுன்னு சொல்லி வளர்க்கப்பட்ட காலக்கட்டம் வேற !
இப்பத்துப் பொடிகள் என்றால் ஆயிரம் கேள்விகள் கேட்டு அம்மம்மாவை படுத்தி இருக்கும், இல்லையா!!!

said...

வாங்க ஜிரா.

பசங்க கிரிக்கெட் கதை வெர்ஷனும் அப்பக் கேள்விப்பட்டேன். ஆனால்.... அரசியல் வியாதிகள் இடத்தை அமுக்கிக்கறதுதான் ரொம்ப பொருத்தமா இயல்பா நம்புறமாதிரி இருக்குன்னு அதை மட்டும் எழுதினேன்:-))))) லாஜிக் சரியா இருக்கு பாருங்க!!!

இப்ப அந்த ஏரியாவே... எதோ பிக்னிக் ஸ்பாட் போல ஒரே கலகலன்னு இருக்கு.

அந்த டேங்க், கோவிலுக்குப் பின்புறம் இருக்கும் வீடுகளின் டேங்க்தான்.

said...

வாங்க ஜி எம் பி ஐயா.

கல் பழசுதான். ஆனால் கோவில் அவ்ளோ பழசான்னுதான்......
சரி. நம்பினால் ஆச்சு. நதி மூலம், நிதி மூலம், ரிஷி மூலத்தோடு கோவில் மூலத்தையும் சேர்த்துக்கொண்டால் தீர்ந்தது மனக்குடைச்சல்:-)

படங்களை ரசித்தமைக்கு நன்றி.

said...

வாங்க வல்லி.

நல்லாச் சொன்னீங்க!!!!

நன்றீஸ்ப்பா.

said...

வாங்க கோமதி அரசு.

ரொம்ப அழகான நந்தி, இல்லே!

நீங்களும் நேரில் பார்த்தது எனக்கு சாட்சி போல! எழுதுனதில் (தகவல்) பிழை ஏதும் இல்லைதானே?

said...

வாங்க குறும்பன்.

விடுகதையை விடுவிச்சாச்சு.

லாஜிக் பார்க்காமல், பாருங்க:-)

said...

வாங்க ராமலக்ஷ்மி.

அங்கே அலுவலகம் ஏதும் இல்லை. எல்லோரும் செல்லில் சுட்டுக்கிட்டு இருந்தாங்க. நானும் கெமெராவில் சுட்டுட்டேன்:-)

அர்ர்ச்சகர்களும் ஒன்னும் சொல்லலை:-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

ரசிப்புக்கு நன்றி.

said...

வாங்க கீத மஞ்சரி.

ரசனைக்கு நன்றீஸ்.

மனக்குரங்கு, அடங்குவதில்லையேப்பா:(

said...

சிவன் அபிஷேகப் பிரியனாம். விஷ்ணு அலங்காரப் பிரியனாம்.

இன்னொரு கதையும் கேள்விப்பட்டு இருக்கேன். தக்ஷயாகத்தில் தாக்ஷாயிணி இறந்துபோனதும், கோபம் கொண்ட சிவன்,அவளுடம்பைக் கையில் எடுத்துக்கிட்டு ஆவேசமாக மூவுலகிலும் சுத்திக்கிட்டு இருந்தான்.

இது விவரம் இங்கே:-))))

http://thulasidhalam.blogspot.in/2010/03/blog-post_27.html

எல்லாம் முடிஞ்சபிறகும் அடங்காத கோபத்தால் உடம்பு கொதிக்குது. அதைக் குளிர்விக்கத்தான் சதா அபிஷேகம் என்றும் சொல்றாங்க.

ஏற்கெனவே தலையில் கங்கை வேற இருக்கறாளேப்பா.

வட இந்தியக்கோவில்களில் தாரா அபிஷேகம் செய்ய ஊசிமுனையளவு துவாரம் உள்ள செப்புப் பாத்திரம் ஒன்னு சிவலிங்கத்துக்கு மேலே தொங்கும்.

பக்தர்கள் செம்பு நிறைய தண்ணீர் எடுத்து அதில் நிரப்பிக்கிட்டே இருப்பாங்க. இதுக்குன்னு கோவில்களிலேயே செப்புச் செம்புகள் நிறைய இருக்கும். நாம் வீட்டுலே இருந்து சுமந்துக்கிட்டுப்போக வேணாம்.

அடையாறு பத்மனாபன் கோவிலில் இருக்கும் லிங்கத்துக்கும் இப்படித்தான் அபிஷேகம் நடந்துக்கிட்டு இருக்கு.

இன்னும் வேறெதாவது 'புராணக்கதை'யும் இருக்கலாம்ப்பா. தெரிஞ்சவுங்க சொல்வாங்கன்னு காத்திருப்போம்.

said...

வாங்க தமிழ் இளங்கோ.

அடுத்தமுறை பெங்களூரு செல்ல நேர்ந்தால், தவறாமல் நந்திகோவில் போயிட்டு வாங்க. ரொம்ப அழகாவும் சுத்தமாவும் இருக்கு.

கதையை விடுவிச்சாச்சு.

லாஜிக் பார்க்காதீங்க:-)

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

காத்திருப்புக்கு முடிவு கட்டிட்டேன்:-)))

said...

oh! ippadiyaa kadhai....:)

word verification kekkuthe.....:((

said...

Teacher..there is circle mariamman temple in malleshwarm...was it thr in yr plan.veena stores idli..janatha hotel masala dosa.adiga`s bisibele bath..etc....

said...

வாங்க சிந்து.

பெங்களூரை ரொம்பவே மிஸ் பண்ணறீங்க போல!

கோவில் ப்ளான் ஒன்னும் கிளம்பும்போது இல்லைப்பா. ஊருக்கு வெளியில் ஒரே ஒரு கோவில்தான் போகலாமுன்னு இருந்தேன்.

எப்படியோ அஞ்சு கோவில் மல்லேஸ்வரத்திலேயே அமைஞ்சு போச்சு.

said...

இந்தக் கோவில் பத்தி நீங்க எழுதியிருக்கறது, விடுகதை, எல்லாமா சேர்ந்து ஒரு த்ரில்லர் பார்த்த மாதிரி இருக்கு. சுவாரஸ்யமோ சுவாரஸ்யம்!

said...

அழகானநந்தி அருமையான தர்சனம்.

said...

வாங்க ரஞ்ஜனி.

ரசிப்புக்கு நன்றி.

உங்களை சந்திக்கலையேன்னு இருக்குப்பா:(

said...

வாங்க மாதேவி.

வருகைக்கு நன்றி.

said...

அக்கா அவரே.. தும்பா சென்னாகிதே. ராமலக்ஷ்மி சொல்லிப் புரியாத சிலது இதுல புரிஞ்சுது. யக்கா எய்தறதுல க்வீன் ஆச்சே! பா(ஹ)ள டேங்க்ஸ்.. (அந்தப் பின்னணில தெரியற அடுத்த வூட்டு டேங்க்ஸ் இல்ல!)

said...

வாங்க ஹரி(யண்ணா) தம்பி.

அக்கா வீட்டுக்கு இப்படி திடுதிப்னு வந்ததும் மனம் கூத்தாடத்தான் செஞ்சது:-)

அதுக்கே இன்னும் நாலைஞ்சு டேங்கீஸ் சொல்லிக்கறேன்.