மார்கழியை நீயே வச்சுக்கோ. ஐப்பசி எனக்கு! மாதங்களில் நான் மார்கழி என்றவன், அந்தக்குளிரிலும் தைலக்காப்பு போட்டுக்கிட்டு, திரைமறைவில் உட்கார்ந்துக்கறானே! ஒவ்வொரு பயணத்திலும் கண்ணுலே படுவானான்னு ஏக்கம்தான். யோசிச்சுப் பார்த்தேன்..... மார்கழியை நீயே வச்சுக்கோ. எனக்கு ஆகாதுன்னு ஐப்பசியைக் கையில் எடுத்தேன்.
பாவம் கோபால்.... அந்த சமயத்துக்கு வேலையில் இருந்து விடுப்பு எடுக்கக் கொஞ்சம் சிரமப் பட்டுவிட்டார். எங்களுக்கு அக்டோபரில் ஒரு லாங்க் வீக் எண்ட் (லேபர் டே) நவம்பரில் ஒரு லாங்க் வீ எண்ட் ( கேண்டர்பரி ஷோ டே) வரப்போகுதேன்னு அதற்கிடையில் இருக்கும் நாட்களைக் கணக்குப்பண்ணி ஒரு வழியாக நாலுவாரங்கள் கிடைத்தன.
முதலில் நம்ம ராஜலக்ஷ்மிக்கு இடம் தேடணுமே. நல்லவேளையாக நம்ம கோகி போகும் ஹாஸ்டலில் இடம் கிடைச்சது. பிஸினெஸ் கை மாறியதால் புது ஓனர். நமக்கு அக்டோபர் என்பதால் பிரச்சனை இல்லை. கிறிஸ்மஸ் சமயம் என்றால் குதிரைக்கொம்பு. சுமார் ஒரு வருசத்துக்கு முன்னே இடம் பதிவு செஞ்சுக்கணும். (எதுக்கும் இருக்கட்டுமுன்னு 2015க்கு பதிவு செஞ்சு வச்சுருக்கோம்)
அக்டோபர் 17 மாலை, ரஜ்ஜுவைக் கொண்டு போனோம். அறைகளை வேறு முறையில் மாற்றி அலங்கரிச்சு இருந்தாங்க. கணவர் ஹேண்டி மேனாம். வீக் எண்ட் வேலை எல்லாம் கேட்டரியில்!
மேலே அன்றும்
கீழே இன்றும்!
உள் அலங்காரம் முந்தி இருந்ததுபோல் இல்லாமல் எல்லாம் அப்க்ரேடு செஞ்சுருந்தாங்க. சிம்பிள் அண்ட் ஸ்வீட்! பசங்க மிட்நைட் மசாலா பார்க்கச் சான்ஸே இல்லாமல் போச்சு இப்போ:-) அதானே... பொழுதன்னிக்கும் டிவி என்ன வேண்டிக்கிடக்கு? லீவில் இருக்கும்போதாவது கொஞ்சம் இந்த டிவி சனியனை ஒழிச்சுக் கட்டிட்டு, அக்கம்பக்கம் பார்த்துப் பேசலாமில்லையா?
ரஜ்ஜுவின் ரூம் ரெடியா இருந்துச்சு. கதவைத் திறந்து வச்சு, பூனைக்கூண்டின் மேல்மூடியைத் திறந்ததும், டக்ன்னு தாவிக்குதிச்சு வெளியே வந்தவன், சட்னு உள்ளே போய் பலகை இருக்கை மேல் ஏறிக்கிட்டான். எனக்கு 'ஐயோ'ன்னு போச்சு. ஒரு எதிர்ப்பு காட்டி இருக்கலாமுல்லே?கைகால் நகங்களை கூர் செஞ்சு பிராண்டிக்கும் ஸ்க்ராச் போஸ்ட், மற்றும் வீட்டில் அவனுக்குப் பழக்கமான குதிரை ப்ளாங்கெட்டும் கொண்டு போயிருந்தோம். வீட்டு வாசனையும் வேண்டித்தானே இருக்கு!
உள்ளே போய் மேல்பலகையில் உக்கார்ந்துக்கிட்டான். எதோ காலங்காலமா வாழ்ந்து படகிய இடம் என்னும் நினைப்பு. புது ஓனர் (பெயர் லிஸா) நல்லாப் பார்த்துக்கறேன்னு உறுதிமொழி கொடுத்தாங்க. எங்க கூடவே மகளையும் கூட்டிக்கொண்டு போயிருந்தோம். அவளும் இடத்தைப் பார்த்து வச்சுக்கிட்டால் நல்லதுதானே? எதாவது பிரச்சனை(!) என்றால் மகளைத் தொடர்பு கொள்ளச் சொன்னோம். மகளும் அவ்வப்போது வந்து பார்த்துவிட்டுப்போவதாகச் சொன்னாள். எல்லா சமாச்சாரங்களையும் போல, கேட்டரி சார்ஜும் விலை ஏறி இருந்துச்சு.
போயிட்டு வர்றோமுன்னு சொல்லும்போது, எங்கள் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்காம (சட்டையே செய்யாம) வேறெங்கோ பார்த்துக்கிட்டு உக்கார்ந்து இருந்தான் நம்ம ரஜ்ஜு. (நம்ம வீட்டில் ஆணானாலும் பெண்ணானாலும் 'ன்'தான் குடும்பப்பழக்கம்)
மறுநாள் காலை லிஸாவுக்கு தொலைபேசினேன். 'ரஜ்ஜு எப்படி இருக்கான்? அதெல்லாம் நல்லா செட்டில் ஆகிட்டாள். நீங்க கவலைப்படாமல் ஹாலிடேவை எஞ்சாய் செஞ்சுட்டு வாங்க'ன்னு சொன்னாங்க.
ஒரு பத்தேகாலுக்கு விமானநிலையம் போய்ச் சேர்ந்தோம்.(எங்க நாட்டில் டே லைட் ஸேவிங்ஸ் ஆரம்பிச்சுட்டாங்க ) ப்ளேன், பதினொன்னே முக்காலுக்கு கிளம்பும்.
எங்கூர் விமானதளத்தில் 'யூ. எஸ். அன்டார்க்டிக் ப்ரோக்ராம்' (உணவு சப்ளை, ஆராய்ச்சி, மெடிக்கல் டீம்,இன்னபிற ) சமாச்சாரத்துக்கு ஒரு இடம் ஒதுக்கி இருக்காங்க. எங்க சம்மர் வரும்போது ஏகப்பட்ட விமான 'நடமாட்டம் 'இருக்கும் இங்கே :-) நாம் போகும் விமானத்துப் பின்னாடி அவுங்களுது ஒன்னு நின்னு இருந்தது.
இந்தப் பதிவு எழுதும் இன்று (டிசம்பர் 1) எங்கள் நாட்டுக் கோடை ஆரம்பம். கூகுள்காரன் கொண்டாடிக்கிட்டு இருக்கான். சம்மர் முதல் நாளாம். வெயில்? சொல்லவே வேணாம். வெறும் 12 டிகிரி செல்ஸியஸ்:( வெளங்கிரும்!
சிங்கைக்குப் பத்தரை மணி நேரப் பயணம் மகா Bபோரிங். பகல் நேரப்பயணம் என்பதால் இன்னும் மோசம். அதிலும் கடல்தாண்டி அஸ்ட்ராலியா கண்ணில்படும்போதே மூணு மணி நேரம் ஆகி இருக்கும். அண்டைநாடான அஸ்ட்ராலியாவைக் கடந்து போகவே அஞ்சு மணி நேரமாகுது. எவ்ளோ பெரிய (தனி) கண்டம்! கொடுத்து வச்ச நாடு!
தமிழ்ப்படங்களின் எண்ணிக்கை குறைஞ்சு இப்போ மலையாளம், கன்னடம், தெலுங்குன்னு வகைக்கு ஒன்னு இருக்கு. தமிழில் 'நீ எங்கே என் அன்பே ' இருக்கு. ஏற்கெனவே ஹிந்தியில் பார்த்துட்டதால் இது சுவாரசியப்படலை. எனக்கு ஃப்ளைட் பாத் போதும். வரவர சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் சேவைகள் தரம் குறைஞ்சுக்கிட்டே வருது. இருக்கைகளின் அகலமும் குறைவுதான். நாம் கட்டாயம் மெலிய வேண்டிய அவசியத்தைச் சொல்லாமல் சொல்றாங்க! எங்களுக்கும் கிறைஸ்ட்சர்ச் நகரில் இருந்து சிங்கை போகணும் என்றால் இதைவிட்டால் வேற கதி இல்லை. தனிக்காட்டு ராஜாவாக அநியாயம் செஞ்சுக்கிட்டு இருக்கு SIA.
சாங்கியின் மூணாவது டெர்மினலில் கொண்டு இறக்கினாங்க. மழை அடிச்சுப் பெய்ஞ்சுக்கிட்டு இருக்கு. நமக்கு அடுத்த ஃப்ளைட்டுக்கு இன்னும் 2 மணி நேரம் பாக்கி. ரெண்டாவது டெர்மினல் போகணும். ஸ்கை ட்ரெய்ன் நல்லவசதி. இந்தமுறை வழக்கமான சென்னைக்குப் பதிலா சிங்கையிலிருந்து முதல்முறையாப் பெண்களூருக்குப் போறோம். இன்னுமொரு நாலரை மணி நேரப்பயணம்.
"அங்கெ பாருங்க, தீபாவளிக்கு நகை ரொம்ப முக்கியமாம்."
கோபாலின் முகத்தில் கலவரம்:-)
சிங்கை சாங்கி விமான நிலையம், ஏகப்பட்ட புது அலங்காரங்களுடன், தீபாவளி கொண்டாடும் மும்முரத்தில் இருக்கு. கொஞ்ச நேரம் லவுஞ்சுப்போய் ஓய்வெடுத்துட்டு, நம்ம கேட்டுக்குப் போகும் போதே கொஞ்சூண்டு சுத்திப் பார்த்துட்டு அடுத்த விமானம் ஏறினோம்.
பெங்களூரு குடியுரிமை வரிசை அநியாயத்துக்கு ரொம்பவே நீளம். மூணே மூணு கவுண்ட்டர்கள் மட்டும் திறந்து வச்சுருக்காங்க. புது விமானநிலையம் கட்டுனபிறகு முதல்முறையா வந்துருக்கோம். நல்லாத்தான் இருக்குன்னு நினைப்பு. சரியாப் பார்க்க நேரமில்லை. இதில் செக்யூரிட்டிகளின் முகத்தில் ஒரே கடுகடுப்பு. தலையைத் திருப்பினாலும் முறைப்புதான்:( நாட்டுக்குள் புகும்போது, நல்ல வரவேற்புதான் போங்க!
நம்ம பாஸ்போர்ட்டையும், ஓ ஸி. ஐ.யும் ரெண்டுதரம் திருப்பித்திருப்பிப் பார்த்த 'ஆப்பீஸர் ' எதுக்கு வந்தீங்க?ன்னு கேட்டார். 'அம்மாவைப் பார்க்க' ன்னு சொல்ல எனக்கு ஆசை. அதுக்குள்ளே நம்ம கோபால், 'தம்பியைப் பார்க்க'ன்னுட்டார். (அன்றைக்குக் காலையில் தான் அம்மா , சிறைவாசம் முடிச்சு சென்னை திரும்பி இருந்தாங்க)
ப்ரீபெய்ட் டாக்ஸி ஒன்னு எடுத்துக்கிட்டோம். 1500 ரூ சார்ஜ். ரொம்பதூரத்துலே சிட்டி இருக்கே! அதென்னவோ நமக்குக் கிடைக்கும் டாக்ஸி ஓட்டுனருக்கு மட்டும் சிட்டிக்குள்ளே ராஸ்தா தெரிவதே இல்லை.
வலையில் பார்த்து புக் பண்ணிய கன்னிங்ஹாம் ரோடு, சிட்ரஸ் ஹொட்டேலுக்குப் போய்ச் சேர்ந்தப்ப சரியா மணி நள்ளிரவு பனிரெண்டரை. படுக்கையில் அன்னம் உட்கார்ந்திருந்தது!
தொடரும்.......:-)
28 comments:
12 டிகிரி செல்ஸியஸ் வெயில்...! நல்லது...!
அன்னத்தையும் ரசித்தேன்...
நயன்தாரா புகழ் சிங்கப்பூர்காரர்கள் வரை பரவிவிட்டது போலிருக்கிறது மேடம்!
பதிவின் ஆரம்பம் புரியவே நிறைய மெனக்கெட வேண்டி இருந்தது. ராஜலக்ஷ்மி, ரஜ்ஜு காட்டரி ஹூம். ஓரளவு கெஸ் செய்து படித்தேன் என்னவாய் இருந்து போகட்டும் படங்கள் அருமை இருந்தாலும் ரூ.1500/- அதிகம்தான். சம்பாதிச்சதை செலவு செய்யத்தானே பிரயாணம் எல்லாம். regards.
வாங்க திண்டுக்கல் தனபாலன்.
கோடையே இந்த அழகுன்னா.... குளிர் காலம் எப்படி இருக்கும் பாருங்க:(
வாங்க ஆறுமுகம் அய்யாசாமி.
முந்தி எல்லாம் விஜய் படங்களா போட்டு அறுத்துருவாங்க.
எல்லாம் தமிழ்ப்படம் தேர்வு செய்யும் நபரைப் பொறுத்ததுதான்:(
வாங்க ஜி எம் பி ஐயா.
நம்ம தளத்தின் நெடுநாள் வாசகர்களுக்கு கப்பு, கோகி, ரஜ்ஜு எல்லாம் அத்துபடிதான்:-)))
நம்ம வீட்டுச் செல்லங்களைப்பற்றி ஒரு புத்தகம் கூட வெளிவந்திருக்கே!
நம்ம கோபாலகிருஷ்ணனுக்கு கோகி என்ற செல்லப்பெயர் வைத்ததும் நம் சகபதிவர் கொத்ஸ் தான்.
http://thulasidhalam.blogspot.com/2010/01/blog-post_23.html
http://thulasidhalam.blogspot.com/2009/12/blog-post_22.html
நேரமிருந்தால் சுட்டிகளைப் பாருங்க.
யானை வளர்க்க முடியாததால் பூனை வளர்க்கும் ஆள் நான்!
நம்ம வீட்டுப் பூனைகளுக்கு எப்பவும் தமிழ்ப் பெயர்கள்தானாக்கும்:-)
செலவின்கூடவே போனஸா அனுபவங்களும் கிடைச்சுருது, இல்லையா!
பயணம் சுவாரசியமா ஆரம்பிச்சிருக்கு. படங்கள் ஒவ்வொன்றும் கண்களைக் கவர்கின்றன. 12 டிகிரி வெய்யிலா??? சூப்பர்.
அன்னத்தை ரசித்தேன். எப்படி செய்யறாங்கன்னு தெரியலையே? முயற்சி பண்ணி பார்க்கிறேன்...:)
ரஜ்ஜுக்கு தெரிந்து விட்டது, எப்படியும் நாம் நான்கு வாரங்கள் இங்கு தான் இருக்க வேண்டும் என்று, எதற்கு திரும்பி பார்த்து தன் வருத்தமுகத்தை காட்டி உங்களை வருத்தபட வைக்க வேண்டும் என்று திரும்பவில்லை போலும்.
பயண அனுபவம் அருமை.
தொடர்கிறேன்.
வெய்யில் ஆரம்பிச்சாச்சா எஞ்சாய்.ரஜ்ஜு முகம் திருப்பி இருப்பதே அழகாத்தான் இருக்கு. சிங்கப்பூர் பயணம் எப்படியோ. சாங்கி ஏர்போர்ட் அழகாகவே இருக்கு. சந்தோஷம் மிகு சவாரி போக நான் ரெடி.
வழக்கம் போல, உங்கள் பயணக் கட்டுரை படிக்கப் படிக்க சுவாரஸ்யம். உங்கள் பதிவைப் படித்து முடித்ததும் பாரதி சொன்ன “உயிர்களிடத்தில் அன்பு வேணும்” – என்ற பாரதி வரி நினைவுக்கு வந்தது. உங்களோடு நானும் தொடர்கின்றேன். நன்றி.
அனுபவங்கள் மிக அழகாக இருக்கிறது.
படங்கள் மிக்க அருமை.
நம்ம பெங்களூரு வரவேற்பு, நம்நாடு இப்படித்தான் என்று சொல்லாமல்ச் சொல்லுகிரது. 12 டிகிரி ஸெல்லியஸ்
வெயிலென்றே உணர்ந்திருக்க முடியாதே. டர்க்கிடவல் அன்னம் வெகுஜோர். நக்ஷத்திர ஹோட்டல்களின் வரவேற்பு. அற்புதம்,அருமை என்று சொல்ல வைக்கிறது உங்கள் நடை.அன்புடன்
இனிதாய் தொடங்கிய பயணம். அவனுக்கு பழகி விட்டது போலும் - ஒவ்வொரு விடுமுறையிலும் இப்படி விட்டுப்போவது!
இம்முறை ஒண்ணா வரல - நானும் ஆதியும்! :)
படங்கள் அழகு!
வாங்க ரோஷ்ணியம்மா.
ஐயோ.... வெயில் வந்தாச்சு இனி ஸ்வெட்டரைத் தூக்கிப்போடலாமுன்னு இருக்க முடியலையேப்பா.
வேளை பாளை இல்லாம,தென் துருவத்திலிருந்து சில்லுன்னு ஒரு கொடும் குளிர்காற்று வேற.
என்னத்தை சம்மரோ:(
ரசனைக்கு நன்றி. அன்னம் செஞ்சு பார்த்தீங்களா?
வாங்க கோமதி அரசு.
ரஜ்ஜுவுக்கு மன வருத்தம் கூடாதேன்னுதான் பொட்டி அடுக்குவது கூட அவனை கேட்டரியில் விட்ட பிறகே.
ஊருக்குக் கொண்டு போக நினைக்கும் சாமான்களைச் சும்மா ஒரு கட்டில் மேலே போட்டு வைப்போம்.
ஆனாலும் அவன் ரொம்ப உஷார் பார்ட்டி. அந்தக் கட்டில்கிட்டே அடிக்கடி போய்ப்பார்த்துட்டு வருவான். பாவம்...குழந்தை:-(
தொடரும் ஆதரவுக்கு நன்றி.
வாங்க வல்லி.
அவனே அழகுதான்ப்பா:-)
என்ன வெயிலோ? அடிச்சுக்க ரெண்டுகைகள் போதாது:(
சாங்கியில் பயணிகளுக்கு போரடிக்காமப் பார்த்துக்கறாங்க.
இந்த வருசம் ஆ.வி. தீபாவளி மலரில்
'அழகுக்குப் பெயர்தான் ஷாங்கி'ன்னு ஒரு கட்டுரை வந்துருக்கு. ஷாங்கி ஷாங்கின்னு... போதுண்டா ஷாமி:-)
தீ,மலர், நம்ம எழுத்தாளர் ஏகாம்பரியின் அன்பளிப்பு என்பதையும் சொல்லிக்கறேன்!
வாங்க தமிழ் இளங்கோ.
தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி.
வாங்க காமாட்சி.
அருமையான பின்னூட்டத்திற்கு நன்றிகள்.
மீண்டும் வருக.
வாங்க வெங்கட் நாகராஜ்,
அட! ஆமாம்.... ரெண்டு பேரும் தனித்தனியா வந்துருக்கீங்க:-)
ரஜ்ஜுவுக்கு இது ரெண்டாம் முறைதான் நம்மிடம் வந்த பிறகு.
அதுக்கு முந்தி பழைய ஒரிஜினல் ஓனர் ஹாஸ்டலில் விட்டு இருக்கலாம்.
இவன் எர்த்க்வேக் விக்டிம். ஊரில் பாதி அழிஞ்ச காலத்தில் உயிருக்கு பயந்து தப்பி ஓடி தன்வீட்டைப் பிரிந்தவன்:(
பாவம்... அவன் வாழ்க்கை, இல்லே?
படங்கள் அழகு.
நீங்க ரஜ்ஜுவை கூட்டிட்டு போகலைன்னு தெரிஞ்சுகிட்டு தான் திரும்பி உட்கார்ந்துட்டான் போல :(
டீச்சர் அந்தக் குதிரை பிளாங்கெட் ரொம்ப அழகு. அந்த மென்மையான நிறமும் மெத்மெத் தன்மையும் அட்டகாசம். லக்கி ரஜ்ஜூ.
போட்டி இல்லாத ரூட்டுன்னா.. எந்த ஏர்லைன்சும் கொஞ்சம் திமிராத்தான் நடந்துக்குவாங்க.
பெங்களூர்ல எந்த ஹோட்டல்ல தங்கியிருந்தீங்க? பெங்களூர் போய் ரொம்ப நாளாச்சு. போகனும்.
வாங்க புதுகைத் தென்றல்.
ரசிப்புக்கு நன்றீஸ்.
அட ராமா.... இதென்ன புதுசா வேர்டு வெரிஃபிகேஷன் ஒன்னு வருதே..
வேணாமுன்னு சொன்னாலும் பேச்சைக் கேக்கலை:(
வாங்க ஜிரா.
ரஜ்ஜு பாவம். 'எர்த் க்வேக் விக்டிம்'. அதனால் கூடுதல் அன்பும் கவனிப்பும் கொடுக்கத்தானே வேணும், இல்லையா?
கன்னிங்ஹாம் ரோடுலே ஸிட்ரஸ் ஹொட்டேலில் தான் தங்கல்.
பெங்களூர் ரொம்பத்தான் மாறிக்கிடக்கு. அடையாளமே தெரியலை:(
வாங்க சசி கலா.
ரஜ்ஜுதான்ப்பா நம் வீட்டுலே எல்லோரையும் விட புத்திசாலி. என்ன அறிவுங்கறீங்க!!!!
இத்துனூண்டு தலையில் எவ்ளோ யோசனை பாருங்க:-)
ரஜ்ஜு என்கிற ராஜலட்சுமியை பற்றி அறிந்தேன். முதலில் நாய்க்குட்டியாக இருக்கும் என்று நினைத்தேன் மியாவ் மொழி என்றதும்தன் புரிந்து கொண்டேன். பழைய பதிவுகளை படித்து வருகிறேன் . புத்தாண்டு வாழ்த்துக்கள்
வாங்க முரளிதரன்.
நான் நாயாள்தான் என்றாலும் நியூஸி வந்த பின் பூனை அடிமை ஆகிட்டேன்.
இந்தக் குளிரில் நாய் வச்சுக்கிட்டால்.... பாவம் அது . வாக் கொண்டு போகாமல் நோயாளி ஆகிவிடும்:(
வாழ்த்துகளுக்கு நன்றி.
பயணம்தொடர்கிறேன்.
Post a Comment