Friday, November 28, 2014

மதுரை வாரத்தில் இன்னும் சிலர்:-)

நடந்தது என்ன?
சட்டப்பார்வை ஜெயராஜனும், அவருடைய பதிப்பாளர் திருமதி  காஞ்சனமாலா அவர்களும்.(இவர் ஜெயராஜனின் தாய் என்பது கொசுறுத் தகவல்) 
உணவுக்கூடமா உருவெடுத்த  பள்ளிக்கூட வெராந்தாவில் இருந்த தகவல்.


மாணவருக்கான  பொது அறிவுக்கேள்விகளும் பதில்களும்

நம்ம  சரிதாயணம் புகழ் பாலகணேஷ்
எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன்
பதிவர் கரந்தை ஜெயக்குமாரின் புத்தக வெளியீடு
பதிவர் தமிழ் இளங்கோவுக்கு பொன்னாடை/சால்வை  போர்த்தி, நினைவுப்பரிசு வழங்குதல்
பதிவர் ரத்தினவேலும் அவர் மனைவியும்

பதிவர் கீதாவின் புத்தக வெளியீடு
பதிவர் ஜி எம் பி  சிற்றுரை ஆற்றினார்
பதிவர் செல்வி ஷங்கரும்,  பதிவர் ஜி எம் பி அவர்களின்  மனைவி கமலாவும்.


இந்த வாரம், மதுரை வாரமாகவே அமைந்து விட்டது.  விழாவை மிகவும் சிறப்புடன் நடத்திய  திரு.சீனா & குழுவினருக்கு நம் அனைவருடைய அன்பையும் வாழ்த்துகளையும் இங்கே பதிவு செய்கின்றேன்.

வாழ்க, வாழ்க!!!

கல்யாணம் நடத்துவதைப்போல்தான் இந்தத் திருவிழாவையும் நடத்தினாங்கன்னு சொன்னேன் பாருங்க. அது ரொம்பச் சரி.  விழாவுக்கு  வருகை தந்த அனைவருக்கும்  மஞ்சப்பை கிடைச்சது:-) உள்ளே  தேங்காய் வெற்றிலை பாக்கு மட்டும் மிஸ்ஸிங்!  அப்ப என்னதான் இருந்துச்சு உள்ளே?


உலக விஞ்ஞானிகள் பன்னிருவரின் படங்களுடன் அவர்களைப் பற்றிய சிறு குறிப்புகளும்! கூடவே  ப்ளானர்  அமைச்சதும் சிறப்பு.  வருடம் முழுதும்  வச்சுக்க முடிஞ்ச, நல்ல நினைவுப் பரிசு இது!  வடிவமைச்சவருக்கு  நன்றிகளும், வாழ்த்துகளும்.

பைக்குள் பையாக இன்னொரு  சிறிய பையும் இருந்துச்சு. மெய்யாவே கல்யாண நினைவுப் பரிசாகவும் இருந்துச்சு. மணமக்கள் பெயர் நினைவில் இல்லை:(   மன்னிக்கணும்.

(பையை, பயன்படுத்தக்கூடிய  சென்னை நண்பர் ஒருவருக்குக் கொடுத்துவிட்டேன்)




PIN குறிப்பு:  வரும் திங்கள் முதல் பயணத் தொடர் ' நான்கு வாரங்களில் மூன்று மாநிலம் '  ஆரம்பமாவது   இப்படி :-)

"மார்கழியை நீயே வச்சுக்கோ.  ஐப்பசி எனக்கு!  மாதங்களில் நான் மார்கழி என்றவன்,  அந்தக் குளிரிலும் தைலக்காப்பு போட்டுக்கிட்டு, திரைமறைவில் உட்கார்ந்துக்கறானே!  ஒவ்வொரு  பயணத்திலும்  கண்ணுலே படுவானான்னு  ஏக்கம்தான்.  யோசிச்சுப் பார்த்தேன்..... மார்கழியை நீயே வச்சுக்கோ. எனக்கு ஆகாதுன்னு  ஐப்பசியைக் கையில் எடுத்தேன்."


20 comments:

said...

துளசி டீச்சர் அவர்களுக்கு வணக்கம்! மதுரையில் நடந்த நிகழ்ச்சிகளின் மூன்றாம் பகுதியையும் வெளியிட்டு அன்றைய மாநாட்டினை சிறப்பு செய்து விட்டீர்கள். நன்கு திட்டமிட்டு எல்லா காட்சிகளையும் தெளிவாகப் படமாக்கி வெளியிட்டதற்கு
நன்றி. மாநாடு நடந்த மண்டபத்தையும் சுற்றியுள்ள இடங்களையும் நுணுக்கமாக கவனித்து இருக்கிறீர்கள். (உதாரணம் T.M. சௌந்தரராஜன் நற்பணி மன்ற கல்வெட்டு)

என்னுடைய முகத்தை மீண்டும் இங்கு கண்டதும் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த படத்தையும் உங்கள் அனுமதியோடு நகல் எடுத்துக் கொள்கிறேன். நன்றி.

அடுத்து புதுக்கோட்டையில் நடைபெற இருக்கும் வலைப்பதிவர்கள் சந்திப்பினில், உங்களோடும் கோபால் சாரோடும் போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது எனது விருப்பம். இறைவன் அருள் புரிய வேண்டும்.

உங்களுடைய இந்த பதிவினையும் ” மதுரையில் வலைப்பதிவர்கள்!” என்ற எனது பதிவினில் மேற்கோளாக காட்டி இணைப்பும் (LINK) தந்துள்ளேன். நன்றி!

said...

மிகச் சிறப்பாக முழுமையாக துவக்கம் முதல்
தாம்பூலப் பை வரை அற்புதமான பதிவாக
தந்தது மிக மிக அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

said...

மதுரை பதிவர் திருவிழாவை நேரே பார்த்து விட்டேன்.

வரும் திங்கள் முதல் பயணத் தொடர் ' நான்கு வாரங்களில் மூன்று மாநிலம் ' ஆரம்பமாவது இப்படி :-)//

ஆஹா! தொடர்கிறேன்.

said...


துளசி டீச்சர் அவர்களுக்கு கில்லர்ஜி in வணக்கங்கள் விழா மண்டபத்தின் சுற்றுப்புரத்தையும் சுற்றி வந்து புகைப்படம் எடுத்தது அருமை வாழ்த்துகள் தொடர்கிறேன் நன்றி நேரமிருப்பின் எமது குடிலுக்கும் வருகைதர அன்புடன் அழைக்கிறேன்
அன்பன்
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.

said...

அடடா..! என்ன சொல்வதென்றே தெரியவில்லை... எல்லா படங்களும் அட்டகாசம்...!

said...

அட்டகாசம். அட்டகாசம்.

அடுத்தொரு தொடர் தொடங்கப் போவது இன்னும் அட்டகாசம். காத்திருக்கிறேன்.

said...

படங்கள் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. பயணத் தொடருக்கான காத்திருப்பில் நானும்....

said...

மதுரை சந்திப்புக்கு நானும் வந்தது போல் இருந்தது டீச்சர். இந்திரா செளந்தர்ராஜன் அவர்களையும் உங்க பதிவின் வழியே சந்தித்து விட்டேன்...:) நேரில் வாய்ப்பு கிடைக்கும் போது...:))

பயணத்தொடரில் நானும் உடன் வர தயாரா இருக்கேன்.

said...

நான் பயணத்தொடருக்குக் காத்திருக்கிறேன். ஆரம்பமே மதுரை ஆனதால் வெற்றிப் பயணமே. படங்களும் பரிசும் வெகு அழகு துளசி. அருமையாக நடத்தி இருக்கிறார்கள். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

said...

பதிவர் விழாவை நேரில் கண்டது போல் உணர்ந்தேன் !!! அருமையான படங்கள் . நல்ல நினைவு பரிசு .
ஐப்பசி தொடர் .... ஆவலோடு காத்துருக்கிறோம் .

said...

வாங்க தமிழ் இளங்கோ.

ரசிப்புக்கு நன்றிகள்.

புதுக்கோட்டை.... எல்லாம் 'அவன்' கைகளில்:-)

உங்கள் பதிவில் இணைப்பு கொடுத்தமைக்கு மகிழ்ச்சி.

said...

வாங்க ரமணி.

முழுமை எப்போதும் மகிழ்ச்சியையே அளிக்கும் அல்லவா!!!!

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க கோமதி அரசு.

பரிச்சயமானவர்களை சந்திக்க முடியாமல் போனது எனக்கு ஏமாற்றமே:(

தொடர், இதோ இன்னும் சில நிமிடங்களில் வெளிவரும்.

தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி.

said...

வாங்க கில்லர்ஜி.

உங்கள் குடில் அருமையாக இருக்கின்றது.

எல்லாம் நறுக்குத் தெறித்தாற்போல்!

உங்களை நேரில் சந்தித்தது மகிழ்ச்சி.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

எல்லா மாநாட்டு வேலைகளையும் இழுத்துப்போட்டுச் செய்ததற்கு, நாங்கள் அல்லவா உமக்கு நன்றி கூற வேண்டும்!

said...

வாங்க ஜிரா.

தொடர் ஆரம்பமாச்சு. ஆதரவு வேணும்!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

ரசிப்புக்கும் காத்திருப்பிற்கும் நன்றீஸ்.

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

எனக்கு ஒரு வியப்பு.... வெவ்வேற ஊர்கள் என்றாலும் எப்பவும் சதிபதிகள் இணைந்தே வர்றீங்க!!!

இதுதான் 'நான் பேச நினைப்பதெல்லாம்'.. சரியா!!!!

வருகைக்கு நன்றிப்பா.

said...

வாங்க வல்லி.

நீங்கள் எல்லாம் இருக்கும் தைரியம்தான் தொடரை நடத்தப்போகுது:-)

வாழ்த்துகளுக்கு நன்றீஸ்.

said...

வாங்க சசி கலா.

காத்திருக்கும் உங்களை ஏமாற்றப் போவதில்லையாக்கும், கேட்டோ:-)