திருவிழாவின் முதல்நாள் (அக்டோபர் 25 ) இரவு எட்டேமுக்காலுக்கு மதுரை வந்து சேர்ந்தோம். உடனே சீனா ஐயாவுக்கு ஃபோன் செய்தேன், யானை வந்த விவரம் அறிவிக்க:-) நோ ஆன்ஸர் ..... கல்யாணவீட்டு வேலைகள் தலைக்கு மேல் கிடக்கும் எனப் புரியாதவளா நான்? அடுத்த எண்ணை அழுத்தினதும் தமிழ்வாசி எடுத்தார். விவரம் சொன்னதும் சீனா ஐயாவிடம் அலைபேசியைக் கொடுத்தார். நலம். நலம். அதே ராயல் கோர்ட். நாளை காலை 9 மணி. தெப்பக்குளம் அருகில். ஓக்கே.... நோ ஒர்ரீஸ்.
போது விடிஞ்சதும் தயாராகி காலை எட்டு நாற்பதுக்குக் கிளம்பியாச். கிட்டத்தட்ட அஞ்சு கி.மீ தூரம். ட்ராஃபிக் கூடுதலா இருந்துச்சு. பதிவர் விழாவுக்கு வந்த மக்களா !!! ஜேமின் காரணம், ஞாயிற்றுக்கிழமை கோவிலுக்கு வரும் கூட்டமாம். கோபுரத்தைப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக்கிட்டு, 'அப்புறமா வரேண்டி மீனு'ன்னு மனசுக்குள் சொல்லிக்கிட்டேன். கால்மணியாச்சு தெப்பக்குளத்தாண்டை போக.
குளத்தில் தண்ணீர் குறைவு. செடிகொடிகள் மண்டி புதர்கள் காட்சி கொடுத்தன. பார்த்தே 25 வருசமாச்சு. இப்பெல்லாம் இப்படித்தான் போல. சித்திரை வரட்டும் என்ற காத்திருப்போ என்னவோ! தலையைத் திருப்பினால் கண்ணுக்கு நேர நடனகோபால நாயகி மந்திர்! கோபால்தான் கண்டுபிடிச்சார்:-)
வண்டியை உள்ளே விட்டார் நம்ம சாரதி சீனிவாசன். ஹாலுக்குள் நுழைகிறோம். முதலில் கண்ணில் பட்டவர் நம்ம செல்வி ஷங்கர். (சீனாவின் மறுபாதி) கோபால் உள்ளே போய் என் பெயரைப் பதிவு செஞ்சு, எனக்கான ஐடியை வாங்கியாந்தார். சீனா ஐயாவும் வரவேற்க வந்துட்டார். நம்ம தருமி கேமெராவும் கையுமா!
க்ளிக்க ஆரம்பிச்சவள் கை ஓயவே இல்லை:-) பெயர்மட்டுமே தெரிந்த பதிவர்களின் முகங்களைக் கண்ட மகிழ்ச்சி.
கில்லர்ஜியுடன்.... இன்னொருவர்?
பாலகணேஷ், கோவை ஆவி
கோவை ஆவி, பகவான் ஜி
பகவான் ஜி, அரசன்
சீனு, ரூபக்ராம்
ஸ்கூல் பையன்
கடைசி நேரப் பரபரப்பில் மாநாட்டுப் பொறுப்பாளர்கள், ஆடியோ, வீடியோ, மேடை ஒழுங்கு எல்லாம் பார்த்துச் சரி செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. படம் எடுக்க வசதியான இருக்கைகளில் போய் உக்கார்ந்தோம்.
ஒன்பது ஐம்பதுக்கு முதல் 'ஹலோ' வந்துச்சு மைக்கில். வந்த அனைவரையும் வரவேற்று , இன்னின்னாரை மேடைக்கு அழைச்சுக்கிட்டு இருந்தாங்க. காதில் விழுந்துச்சு நம்ம பெயர்... 'திடுக்'
அம்புட்டுதான்...கேமெரா கை மாறியது:(
தமிழ்த்தாய் வாழ்த்துகளுடன்.....
மேடை நிகழ்ச்சிகளைப் பற்றி நிறையப்பேர் எழுதிட்டாங்க. அதனால் இங்கே நான் எழுதலைப்பா.
நிகழ்ச்சி நிரலைப் பார்த்துக்கோங்க.
வசந்த மண்டபம் வலைப்பூவின் அதிபர், மகேந்திரன், ரொம்பவும் அருமையா நிகழ்ச்சிகளைத் தொகுத்து சுவைபட அருமைத் தமிழில் வழங்கிக்கிட்டே இருந்தார் முன்பாதி வரை.
எனக்கான ரெண்டு வரிகளைப் பேசிட்டு பக்கத்தில் இருந்த மதுரை சரவணனிடம் சொல்லிட்டு, நைஸா மேடையை விட்டுக் கீழேவந்துட்டேன். கையிலே கேமரா இல்லாம நடுக்கம் வர ஆரம்பிச்சதே காரணம்:-)))
அதுக்குள்ளே பேசி முடிச்சுட்டீங்களா? இனிமேல் பேச்சில்லையா? ன்னார் நம்ம தமிழ் இளங்கோ:-)
சுமார் பதினொன்னரைக்கு ஜில்லுன்னு ஜிகர்தண்டா வந்தது! என்ன ஆனாலும் சரி (!)ன்னு குடிச்சுட்டேன்:-)
மேடையில் பதிவர்களின் சுய அறிமுகம் நடந்துக்கிட்டு இருக்கும்போது , திண்டுக்கல் தனபாலன் இன்னொருவருடன் வந்து 'உங்களை தினமலர் நிருபர் பேட்டி எடுக்கணுங்கறார்' என்றார். ஓ... இலவச விளம்பரமா? எழுந்து வெளியே வந்தேன். சிலபல கேள்விகளைக் காட்டு அதுக்குண்டான பதில்களும் ஆச்சு. 'ஃபொட்டாகிராஃபர் வெளியெ போயிருக்கார். அவர் திரும்பி வந்ததும் ப்ளீஸ், இன்னொருக்கா வந்துட்டுப்போங்க மேடம் . எதுக்கும் நானே சில படங்களை எடுத்துக்கறேன்'னு செல்ஃபோனில் க்ளிக்கினார். நாம் சும்மா இருக்கலாகுமோ? பதிலுக்கு நானும் அவரைக் க்ளிக்கி வச்சேன்:-)
நிருபர்:-)
முக்காமணி போல ஆனதும், நிருபர் வந்து மீண்டும் அழைத்துப்போனார். ஃபொட்டாக்ராஃபர் வந்துட்டாராம். இந்தப் பக்கம் பாருங்க, அந்தப் பக்கம் பாருங்க. உங்க புத்தகத்தோடு போஸ் கொடுங்க. என்ன..... கைவசம் இல்லையா? பரவாயில்லை, இதோ இந்த மேஜையில் இருக்கும் புத்தகம் ஒன்னை எடுத்துக் கையில் வச்சுக்கிட்டு அதை வாசிப்பது போல் போஸ் கொடுங்க. (அதானே...அறிவு ஜீவிக்கான போஸ் வேணும் இல்லையோ!!!!) இப்படி ஒரு அஞ்சு நிமிசம் ஆட்டி வச்சாங்க.
அப்புறம் தினமலரில் வந்த படத்தில் என் 'தலை' இருந்தது:-))))
மதியம் ஒன்னேகாலுக்கு உணவு இடைவேளை. முதல் பந்தியில் இடமில்லை. அதுக்காக..? மெனு என்னன்னு கேட்டு, நமக்காகக் காத்திருக்கும் ஐட்டங்களைக் க்ளிக்கினேன். 'கடல் பயணங்கள்' சுரேஷ்குமார் வந்து சேர்ந்துக்கிட்டார். அஸ்ட்ராலியா வரை வந்தவர் அடுத்த வீட்டுக்கு வரலையேன்னு ஒரு அழைப்பைத் தந்தோம். துளசிவிலாஸ் சாப்பாட்டை அவர் பதிவுக்கு மேட்டர் ஆக்கலாமேன்னு:-)
ரெண்டாம் பந்தியில் இடம் கிடைச்சது. வயிற்றுக்குக் கேடு செய்யாத உணவு, வீட்டுச் சாப்பாடு போல. சௌராஷ்ட்ரா சமையலாம். நம்ம ஜி எம் பி ஐயாவின் குடும்பத்தினர் நம்ம பக்கத்து இலைகளில். மதுரைக்கு நேற்றே வந்தவங்க, இப்போ சாப்பாடு ஆனதும் சென்னைக்குத் திரும்பறாங்களாம். நாளை (திங்கள்) மகன் அலுவலகம் போகணுமே! ஒரு வாரம் முன்பு சிங்கத்தை, அதன் குகையில் சந்திச்சதெல்லாம் பயணப்பதிவில் வரும். இப்போ ஜஸ்ட் மதுரை மாநாட்டுக்குத்தான் முன்னுரிமை. சம்பவம் நடந்து ஏற்கெனவே நாலு வாரம் கடந்து போச்சு. லேட்டாத்தான் எழுதறேன். லேட்டஸ்ட்டா இருக்கட்டுமே:-)
மூணாம் பந்திக்கு மக்கள்ஸ் வர ஆரம்பிச்சாங்க. எப்படியும் அரைமணியாவது ஆகும். ஹொட்டேல் அறைக்குப் போய் வந்தோம். ஹாலில் சுகாதார வசதிகள் போதாது.
மாநாட்டின் இரண்டாம் பகுதி நிகழ்வாக, ஒரு குறும்படம் வெளியீடும் திரையிடலும். நம்ம பாலகணேஷ் வந்து, நம்ம கோபால், படத்தின் குறுந்தகட்டை வெளியிடணுமுன்னு கேட்டுக்கிட்டார். வேண்டாமேன்னு மறுத்தவரை அதெல்லாம் முடியாது. நீங்க வெளியிடணுமுன்னு வற்புறுத்தினதும், தயங்குனவரை, நீங்கதான் நம்மூட்டில் சதா நாளைய இயக்குனர், சினிமா எல்லாம் பார்க்கிறவர். பொருத்தமான நபரை, பாலகணேஷ் பிடிச்சுட்டாருன்னேன்:-)
என்னத்தை தேடுறாங்க????
இடதுபக்கம் மூலை திண்டுக்கல் தனபாலன், குடந்தை சரவணன், கோபால், தமிழன் கோவிந்தராஜ், பாலகணேஷ், மதுரை சரவணன்.
பிற்பகல் நிகழ்வுகளை மிகவும் அழகாக நடத்திக்கொண்டு போனவர் நம்ம 'தீபா' நாகராணி. குடந்தை சரவணனின் 'சிலநொடி சிநேகம்' பார்த்தோம். சிறப்புரை வழங்கினார் எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன். முக்கால்மணி நேரப்பேச்சு.
நிஜமா? நியூஸியில் இருந்தா வந்தீங்க???? (தீபா நாகராணி)
அதன்பின் பதிவர்களின் நூல் வெளியீடு.
கரந்தை மாமனிதர்கள் : கரந்தை ஜெயக்குமார்
ஒரு கோப்பை மனிதம் : 'தென்றல்' மு.கீதா
துளிர்விடும் விதைகள் : 'தேன் மதுரத் தமிழ்' கிரேஸ்
நல்லா எழுதுங்க, நல்லதையே எழுதுங்க : 'சட்டப்பார்வை' ஜெயராஜன்.
நாலரை மணி போல சுடச்சுட வடையும் டீயும் விநியோகம் ஆச்சு. அப்பாடா..... வலைப்பதிவர் சந்திப்பின் உயிர்நாடி நம்ம வடையல்லவோ! (போண்டா இல்லாத பதிவர் சந்திப்பு சாத்தியமே!)
இதில் நம்ம சட்டப்பார்வை ஜெயராஜனின் பதிப்பாளர் திருமதி காஞ்சனமாலா அவர்கள், புத்தகத்தை வெளியிட, முதல் பிரதியை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
'நல்லா எழுதுங்க, நல்லதையே எழுதுங்க என்பதுடன் நல்லாவும் பதிவுகளை வாசிங்க. தற்சமயம் பதினோராயிரத்துக்கும் மேற்பட்டு பதிவுகள் வருகின்றன. கூடியவரை வாசியுங்க. வாசிப்பதோடு நின்னுடாமல் நல்லா இருக்குன்னு நீங்க நினைக்கும் பதிவுகளுக்குப் பின்னூட்டம் ஒன்றையும் தட்டி விடுங்க. பதிவருக்கு பின்னூட்டமே ஊக்கம் தரும். மேலும் நல்லா எழுதத்தூண்டுவதும் அதே'ன்னு 'என் ரெண்டு பைஸா'வையும் சொல்லி வச்சேன்.
நன்றி உரை நவில, நம்ம திண்டுக்கல் தனபாலன் மைக் பிடிக்கும்போது மணி சரியா அஞ்சு, ஆறு. உரைக்குப்பின் தேசிய கீதத்துடன் மாநாடு இனிதே முடிஞ்சது.
பொறுப்பாளர்கள் தமிழ்வாசி பிரகாஷ், தமிழன் கோவிந்தராஜ், திண்டுக்கல் தனபாலன் மற்றும் நம்ம தலைவர் சீனா ஐயா எல்லோரும் பம்பரம் போல் சுத்திப் பரபரன்னு இருந்தாங்க. ஒரு திருமணம் நடத்தி முடிக்கும் அளவு பொறுப்பும் வேலைகளும். அதிலும் பொண்ணு வீட்டுக்காரங்க நிலையில்தான் இருந்தாங்க. யார் மனசும் நோகாமல் நடத்துவது சும்மா இல்லையாக்கும், கேட்டோ!
அனைத்தையும் கவனிச்சு வெற்றிகரமா ஒரு திருவிழாவை நடத்திய இவர்களுக்கு என் அன்பும் ஆசிகளும்!
PIN குறிப்பு : இன்னும் கொஞ்சம் படங்களை அடுத்து வரும் பதிவுகளில் படப்பதிவாகப் போட்டு வைக்கப் போறேன். மேடையில் சுய அறிமுகம் செஞ்சுக்கிட்டவங்களில் பலரின் பெயர்கள் நினைவில் இல்லை. அதனால் ஜஸ்ட் படங்கள் மட்டும்தான்.

40 comments:
போகாத குறைய தீத்துவைச்சிட்டிங்க.நன்றி.
அருமையான தொகுப்பு.படங்கள்..
துளசி டீச்சர் அவர்களுக்கு வணக்கம்! இன்னும் மதுரை வலைப் பதிவர்கள் சந்திப்பு பற்றிய உங்களது கட்டுரை வரவில்லையே என்று நினைத்தேன். உங்களையும் கோபால் சாரையும் மதுரையில் சந்தித்தது மிக்க மகிழ்ச்சி. நிறைய பதிவர்களோடு நிறைய நேரம் உரையாட சந்தர்ப்பம் இல்லாமல் போய்விட்டது.
நிகழ்ச்சிகளைப் பற்றிய உங்கள் பதிவும் படங்களும் நல்ல ஆவணம். அந்த மதுரை ஜிகர்தண்டாவைக் கூட அழகாக படம் பிடித்து இருக்கிறீர்கள். இப்போதும் திருச்சியில் ஜிகர்தண்டா சாப்பிடும் போதெல்லாம் எனக்கு அந்த மதுரை வலைப்பதிவர்கள்
சந்திப்பும், அந்த மதுரை ஜிகர்தண்டா ருசியும்தான் நினைவுக்கு வருகிறது.
நீங்கள் வெளியிடப் போகும் அடுத்த பதிவினையும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
உங்களுடைய இந்த பதிவினை ” மதுரையில் வலைப் பதிவர்கள்!” என்ற எனது பதிவினில் மேற்கோளாகக் காட்டி இணைப்பும் (LINK) தந்துள்ளேன். நன்றி!
படங்கள் அனைத்தும் பளிச்சென்று இருக்கின்றன மேடம்!
உங்களிடமிருந்து பதிவை எதிர்ப்பார்த்துக் கொண்டே இருந்தேன்... சிறப்பான தொகுப்பு...
படங்களைப் பற்றி சொல்ல வேண்டுமா...> சூப்பர்ப்...
நன்றி அம்மா....
அக்கா. மதுரையின் ஜோதி எப்படி இருக்கார்?
http://nadanagopalanayaki.blogspot.com/
வாங்க குமார்.
சென்னைப்பதிவர்கள் ஒரு சிலர்தான் அங்கே. வரேன்னு சொன்னவுங்க கூட வரலை. எனக்கு ரொம்ப ஏமாற்றமாப் போச்சு:(
வாங்க தமிழ் இளங்கோ.
வணக்கம். உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. நிறைய பேச நேரமில்லாமல் போச்சு:( எல்லோரும் ஒருவிதத்தில் பிஸியாக இருந்துட்டோம். குறைஞ்சபட்சம் ஒரு படம்கூட எடுத்துக்கலை, உங்கள் நினைவுக்காக. அப்புறம் அப்புறம் என்றே ஒன்றும் இயலாமல் போச்சு:(
உங்கள்பதிவில் இணைத்தமைக்கு நன்றீஸ்.
'மதுரையில் வலைப் பதிவர்கள்' நல்ல தொகுப்பு உங்கள் பதிவில். நானும் அங்கேபோய்த்தான் ஒவ்வொன்றாக வாசித்தேன்.
பயணத்தில் இணைய இணைப்பு ஒன்றும் சரிவரலை.
வாங்க அய்யாசாமி ஆறுமுகம்.
ரசிப்புக்கு நன்றி.
பலபடங்கள் சொதப்பலாத்தான் போச்சு. எடுத்த 173 இல் தேறியது ஒரு 90 இருக்கலாம்:-)
வாங்க திண்டுக்கல் தனபாலன்.
பயணம் முடிஞ்சு போனவாரம்தான் நாடு திரும்பினோம். (நவம்பர் 16)
வந்தவுடன் காலநிலை மாற்றத்தாலும், இந்தியாவில் ஓய்வின்றி ஓடியோடி கழித்த நாட்களாலும், உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது.
பதிவர் மாநாட்டில் உங்கள் பங்கு சிறப்பாக இருந்தது.
நேரில் சந்தித்தது மகிழ்ச்சி.
வாங்க குமரன் தம்பி.
மதுரையின் ஜோதிக்கென்ன... மகானுபாவர் கொடுத்து வைத்தவரல்லவா!!!!
உங்களை அங்கே நினைத்துக்கொண்டேன், உங்கள் பள்ளிக்கூடம் பார்த்ததும்.
நம்ம சாரதி சீனிவாசன், சௌராஸ்ட்ரா இனத்தவர் என்பதால் வெகுவாக ரசித்தார்.
வாங்க இராஜராஜேஸ்வரி.
ரசிப்புக்கு நன்றிப்பா.
வஞ்சனையில்லாமல் கலக்கியிருக்கீங்க. ஒவ்வொரு படமும் சும்மா நச் ன்னு இருக்கு. தொடர்கின்றேன்.
தொடர்கின்றேன்
இப்போதுதான் பதிவைப் பார்த்தேன். தொடர்பவனாக மாற்றிக் கொண்டால் உடனுக்கு உடனே பதிவு வெளியீடு தெரிந்து விடுமல்லவா. படங்கள் அனைத்தும் சூப்பர். ஒரு விதியாசமான அணுகல். வாழ்த்துக்கள்.
மாநாடுப் படங்கள் அனைத்தும் அருமை துளசி. பதிவர்கள் எல்லோரையும்,சீனா ஐயா,திருமதி செல்வி ஷங்கர் எல்லோரையும் தருமியுடன் சேர்த்துப் பார்த்ததில் மிக மகிழ்ச்சி. தம்ழ்வாசி,தனபாலன் இருவரும் பொறுப்பேற்று அழகாக நடத்திவிட்டார்கள். மேடைக்காட்சியும் சாப்பாட்டுக் கூடமும் தனி பெருமை சொன்னன.
வாங்க ஜோதிஜி.
உங்களை 'அங்கே' எதிர்பார்த்து ஏமாந்தோம் என்பதே உண்மை!
வாங்க ஜி எம்.பி ஐயா.
ஃபாலோயர்ஸ் ஆப்ஷன் வச்சுக்கலை:(
க.க.நா என்பதால் டெம்ப்ளேட்டில் 'கை' வைக்க தயக்கம்.
பொதுவாக வாரம் மூன்று (திங்கள், புதன், வெள்ளி) என்று இடுகைகள் துளசிதளத்தில் வெளியாகின்றன. எங்க மதியம், உங்கள் காலை என்பதால் தமிழ்மணத்துலே இணைப்பதோடு சரி.
உங்களுக்கும் எங்களுக்கும் இடையில் ஏழரை! (மணி நேரத்தைச் சொல்றேன்)
வாங்க வல்லி.
நீங்களெல்லாம் வந்திருந்தால் இன்னும் கொண்டாட்டமாக இருந்திருக்கும்.
அனைவரும் ஒருவருக்கொருவர் இனிமையாக பழகின தருணங்கள் அவை!
'பதிவர் குடும்பம்' என்று எப்போதும் நான் குறிப்பிடுவது மெய்யே!
நேரில் கலந்து கொண்ட உணர்வைத் தந்தது டீச்சர். படங்களுடன் சிறப்பு.
நான் திருச்சியில் வசந்த பவனில் சில மாதங்களுக்கு முன்னர் தான் ஜிகிர்தண்டாவை முதன்முறையாக ருசித்தேன்...:)
உங்கள் க்ளிக்கில் நானும் மூன்று போட்டோவில் இருப்பதைப் பார்த்து மகிழ்ச்சி ,அதை விட மகிழ்ச்சி ,நெடுந்தூரத்தில் இருந்து நீங்கள் வந்து விழாவை சிறப்பித்தீர்கள் !
உங்களை பெங்களூரிலும் மிஸ் பண்ணிட்டேன், மதுரையிலும் மிஸ் பண்ணிட்டேன்!):
அடுத்த முறை? தெரியவில்லை!
படங்கள் எல்லாமே நன்றாக இருக்கிறது.
Wecome Back to class, teacher...missing all these days.
அவ்வ்வ்வவ்... அடுத்த பதிவைப் படிச்சிட்டு என் படத்தைப் போடலையான்னு கேட்டுட்டேன்... மன்னிச்சு....
வாங்க ரோஷ்ணியம்மா.
ரசிப்புக்கு நன்றீஸ்.
என் முதல் ஜிகர்தண்டா, ஜூன் 2011. இதே மதுரையில்தான்.
அப்போ வேற ஒரு தொடர் துளசிதளத்தில் ஓடிக்கிட்டு இருந்ததால் ஜிகர்தண்டா ஸ்பெஷல் போட விட்டுப்போச்சு.
ஒருநாள் எழுதத்தான் வேணும். எடுத்த படங்களை வீணாக்கலாமா சொல்லுங்க:-))))
வாங்க பகவான் ஜி.
எப்படியோ இந்த முறை திருவிழா சமயத்துலே பயணம் அமைஞ்சு போச்சு.
எல்லாம் 'அவர்' செயல்!!!
வாங்க ரஞ்ஜனி.
அடுத்த முறை?
ஸ்ரீரங்கத்தில் வச்சுக்கலாமா?
பெருமாளைத் துணைக்குக் கூப்பிட்டு வச்சால் ஆச்சு:-)
வாங்க சிந்து.
டீச்சரைக் காணாமல் 'மிஸ்' செய்த முதல் மாணவி என்ற பெருமை உங்களுக்கே:-)
வாங்க ஸ்கூல்பையன்.
//மன்னிச்சு.......//
பேசாம பெஞ்சு மேல் ஏறி நிக்க வைக்கலாமான்னு இருக்கு:-)
Nice !! super photos !!
வாங்க சசி கலா,
Thanks
படிக்கும் போதே பரவசமாயிருக்குதே. எனக்கு உட்லண்ட்ஸ் டிரைவின் நாட்கள் நினைவுக்கு வந்துருச்சு.
அடுத்த ஆண்டு நடக்குறப்போ சொல்லுங்க டீச்சர். வர முயற்சி பண்றேன்.
விட்டுப் போன மத்த பதிவுகளையும் படிச்சுட்டு வர்ரேன் :)
அழகான விஷயங்களடக்கிய பதிவு. போட்டோக்கள் அருமை. இம்மாதிரி விசேஷங்கள் படித்துத் திருப்தி அடைய வேண்டியதுதான். நன்றி அன்புடன்
வாங்க ஜிரா.
என்ன இப்படிச் சொல்றீங்க? மதுரையில் பதிவர் மாநாடு விஷயம் தெரியவே தெரியாதா? எத்தனையோ பேர் விழா நடக்கப்போகுதுன்னு போட்டுருந்தாங்களே! நிறைய நாட்களா நீங்க தமிழ்மணம் பார்க்கலைன்னு இப்போ புரியுது.
ஆணி அவ்ளோஅதிகமா?
ஒலிம்பிக்ஸ் போட்டி முடியும் நாளன்று அடுத்தது எங்கேன்னு சொல்வாங்க பாருங்க...அதைப்போல் முடிவாகிருச்சு. அடுத்த மாநாடு , புதுக்கோட்டையில் நடக்கப்போகுது.
தேதி விவரங்கள் அறிவிப்பு வரும்வரை பொறுப்போம்:-)
வாங்க காமாட்சி.
நலம்தானே?
நானும் எங்கிருந்தாலும் வாழ்கன்னுதான் இருப்பேன். நினைச்சால் ஓடிப்போகும் தூரமா நம்மது?:(
எப்படியோ முதல்முறையாக கலந்துகொள்ளும் வாய்ப்பு கிட்டியதேன்னு மகிழ்ச்சிதான்.
இது 'நான் பெற்ற இன்பம்' வகை:-)))
தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.
வாங்க முரளிதரன்.
எனக்கும் மகிழ்ச்சியே!
புகைப்படங்கள் அனைத்தும் அருமை என்னுடன் இருப்பது எனது தங்கையின் மகன் ஃபிலிம் எடிட்டர். விவேக்
வாங்க கில்லர்ஜி.
விவேக் எந்தப் படங்களில் பணி புரிந்துள்ளார்?
பார்த்தால் திறமையான இளைஞராக இருக்கிறார்.
இனிய வாழ்த்து(க்)கள்.
ம்ம்ம் மதுரையில எல்லாரும் ஒண்ணா சந்திச்சிருக்கீங்க ,,, அது வலைப்பதிவர்கள் சந்திப்பு ன்னு சொல்லிருக்கீங்க ,, சோ ஒன்னும் பண்ண முடியாது ... ரெண்டாவது சாப்பாடு ரொம்பவே சூப்பர் ,,, மூணாவது நான் பார்த்தது காஞ்சனமாலா அவர்களின் பட்டு புடவை அப்படியே நான் வைத்திருக்கிறேன்...எனது சடங்கு புடவை ......ம்ம்ம் ரொம்ப சந்தோசம்.
Post a Comment