எழுநூத்திச்சொச்சத்தில் இருந்தப்ப, எண்ணிக்கையைத் தவறவிட்டேன்:( திரும்பிப்போய் நின்னு எண்ணலாமுன்னா ஒரு சோம்பல். போகட்டும், எனக்கும் வேணாம் உங்களுக்கும் வேணாமுன்னு ஒரு தொள்ளாயிரம் வச்சுக்கலாமா?
கையளவு நாடு. இதில் சின்னதும் பெருசுமா இருக்கும் ஏரிகளை ஊர்வாரியா, பகுதி வாரியாப் போட்டு வச்சுருக்கும் அரசாங்கத் தகவல் தளத்தில் தலையை நுழைச்சிருந்து எண்ணும்போதுதான்... தகராறு. அரசின் Conservation துறை, கவனமாகக் கண்காணிச்சுவரும் சமாச்சாரம் இவை. உள்ளூர் மக்களும் பொறுப்புணர்ந்து அழிவேற்படுத்தாமல்தான் நடந்துகொள்வோம். எல்லாமே நன்னீர் ஏரிகள்தான்!
குறைஞ்சபட்சம் அரை கிலோமீட்டர் நீளம் உள்ளவைகளைச் சேர்த்து எண்ணினால், (சுத்திவர இருக்கும் தீவுகளில் உள்ளவைகளைக் கணக்கில் எடுக்காமல்) எழுநூத்தி எழுபத்தியஞ்சு இருக்குன்னு தகவல் சொன்னாங்க. நியூஸி நாட்டின் மொத்தப் பரப்பளவில் ஏரிகள் பிடிச்சுக்கிட்ட அளவு 33.3 சதம்! மூணுலே ஒன்னு.
இதுலே, நாட்டிலேயே பெரிய ஏரி, வடக்குத்தீவில் இருக்கும் Lake Taupō. பரப்பளவு 623 சதுர கிலோமீட்டர்! நிலாவில் இருந்து பார்த்தால் இது தெரியுதாமே! விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் சொல்லக் கேள்வி. ஒரு பெரிய எரிமலை வெடிச்சு, அதுக்கப்புறம் உண்டாகிய ஏரியாம் அது. ஆச்சு இருபத்தி ஆறாயிரத்து ஐநூறு வருசங்களுக்கு முன்னே!
ரெண்டாவது பெருசுன்னு ஆரம்பிச்சா, அடுத்துவரும் ஒன்பது ஏரிகள், நம்ம தெற்குத்தீவில்தான். இப்ப நாம் பார்த்துக்கிட்டு இருக்கும் இந்த தெக்கப்போ ஏரிக்கு பத்தாவது ரேங்க். எம்பத்தி மூணு சதுர கிலோமீட்டர் பரப்பளவு.
குளிர்காலப் பனி மலைகள், வெயில் வரும்போது உருகி வழிஞ்சு உண்டாக்கும் ஏரிகள் எல்லாம் நம்ம தெற்குத்தீவில்தான் இருக்கு, கேட்டோ! அதுலே ஒன்னுதான் தெக்கப்போ! க்ளேஸியர்கள் உருகி வரும்போது பள்ளத்தாக்கின் அடியில் படிஞ்சு இருக்கும் கற்களின் துகள்களையும் சேர்த்துக் கொண்டுவந்து இந்த ஏரியில் ரொப்புதாம்! அதனால் ஏரிநீர் முழுசும் நீலமும் பச்சையுமா ஜாலம் காட்டுது. Turquoise Tekapo ன்னு இதுக்கு ஒரு செல்லப்பெயரும் உண்டு.
நம்ம அறை வாசலில் அன்னாசிப்பழ சைஸில் ஒரு பெரிய பைன் கோன்!
ஏரியில் ஒருவர் வாட்டர் ஸ்கீயிங் விளையாட்டில். இதெல்லாம் எங்களுக்கு ஜுஜுபின்னு காலாற நீந்தி வரும் வாத்துகள்.
கரையெல்லாம் பைன்மரக்காடுகள். கீழே உதிர்ந்து கிடக்கும் பைன்கோன்களால் யாரோ எழுதி வச்சுட்டுப் போயிருந்தாங்க. சிறுவர்களுக்கான விளையாட்டுப் பகுதியில் ஒரு யானை நின்னுக்கிட்டு இருக்கு. ஜங்கிள் (யானை) ஜிம்:-)
ஹாலிடே பார்க்கின் மற்ற கேபின் பகுதிகளில் பொது அடுக்களை, கூடங்கள் இருக்குமிடங்களில் மக்கள்ஸ் ஜாலியா வெளியே உக்காந்து சாப்பிட்டுக்கிட்டு இருந்தாங்க.
ரெண்டரை மணி போல ஊர் சுத்தக் கிளம்பினோம். சம்மர் முடிஞ்சு ரெண்டு வாரம்தான் ஆகி இருக்கு, ஆனாலும் ஒரு ச்சில்னஸ் காற்றில் இருக்கத்தான் செய்யுது. ஊருக்குள் வரும் வழியில்புதுசா முளைச்சு இருக்கும் ஷாப்பிங் ஏரியாவுக்குப்போய்ச் சேர்ந்தோம். முன்பொரு காலத்தில் இங்கொன்னும் அங்கொன்னுமா ரெண்டு மூணு டெய்ரிஷாப்களும் ஒரு பெட்ரோல் பங்குமா இருந்த இடம் இப்போ ரொம்பவே பரபரப்பான ஷாப்பிங் ஆர்கேட் ஆகி இருக்கு. வில்லேஜ் செண்ட்டராம் ! நாலைஞ்சு உணவுக் கடைகள், புதுசா அஞ்சாறு ஹொட்டேல்ஸ் அண்ட் பார்ஸ், நினைவுப்பொருட்கள், அலங்காரச் சாமான்கள், குளிர்கால உடைகள் விற்பனை இப்படிச் சில.
தபால்காரர் வச்சுக் கட்டுப்படி ஆகாதுன்னு வில்லேஜ் செண்டரில் போஸ்ட் ஆஃபீஸ் ஒன்னு வச்சு, வீடுகளுக்குண்டான தபால்பெட்டிகளை வச்சுட்டாங்க. உனக்கு லெட்டர் வருமுன்னு நினைச்சா, நீயே வந்து பார்த்துக்கோ!
இம்மாந்தூரம் வரும் டூரிஸ்டுகளுக்கு, பறந்து போய் மலைகளின் முகடுகளை தரிசிக்கவும், பனிப்பள்ளத்தாக்குகளை (க்ளேஸியர்) ரசிக்கவும் ஸீனிக் டூர் என்ற சுற்றுலா ஏற்பாடு செஞ்சுதரும் வியாபாரம் (Air Safari) , வானம் பார்த்து மகிழ Earth & Sky Astronomy Tours இப்படி நல்லாத்தான் இருக்கு.
ஏரியை ஒட்டி இருக்கும் ஒரு மலையின் மேல் ஒரு வான ஆராய்ச்சிக்கூடம் இருக்கு. இதை நம்ம கேண்டர்பரி யுனிவர்ஸிடியின் வானசாஸ்த்திரப் பிரிவு நடத்துது. நியூஸியிலேயே பெரிய டெலஸ்கோப் வச்சுருக்காங்க. ட்வைலைட் என்ற அந்திசாயும் நேரம் இதுக்குண்டான டூருக்கு, நம்மை அவர்களே வண்டியில் கூட்டிப்போய், மலை முகட்டில் இருந்து ஏரி, ஊர் என்ற சுற்றுப்புறங்களை காமிச்சு ரசிக்க வச்சு, இருள்சூழ்ந்து நக்ஷத்திரக் கூட்டங்கள் வர ஆரம்பிச்சதும் அங்கிருக்கும் பெரியதும், சின்னதுகளுமா இருக்கும் டெலஸ்கோப் மூலமா அவைகளைக் காமிச்சுக்கொடுத்து, நமக்கான விண்வெளி அறிவைக் கொஞ்சம் மேம்படுத்தி, அங்கே இருக்கும் கேஃபேயில் ராச்சாப்பாடும் போட்டு கீழே கொண்டு வந்து விடுவாங்க. இதுக்கு ஆளுக்கு 135 டாலர் கட்டணம். நாங்க மூணு பேருன்னா நானூத்தி அஞ்சு ஆகிருதே:( ஐய்ய.....புளித்த பழம் என்று விட்டுட்டோம்!
கம்யூனிட்டிக்கான ஓப்பன்நைட் வைக்கும்போது ஆளுக்கு 20 டாலர்தான். ச்சான்ஸ் கிடைக்கணும் என்றிருந்தால் அப்ப கிடைச்சுட்டுப்போகட்டுமே!
ஒரு கடையில் எனக்கு ஒரு குளிர்கால ஜாக்கெட் காத்திருந்துச்சு:-) கோபால் மனம் நோகவேணாமேன்னு வாங்கிக்கிட்டேன்! அப்படியே ஏரியின் இன்னொரு கரைப்பக்கம் போய்ச் சேர்ந்தோம்.
டூரிஸ்ட் வண்டிகள் ஏராளமா நின்னுக்கிட்டு இருக்கு. எங்கே பார்த்தாலும் மனித வெள்ளம்!
தொடரும்..........:-)
15 comments:
அன்னாசிப்பழ சைஸில் ஒரு பெரிய பைன் கோன்! aஆச்சரியப்படுத்தியது.. எடுத்து வந்து கலர்கலராக வண்ணம் தீட்டி அழகுபடுத்தி ஷோகேஸில் வைக்கலாம்..
ஊட்டிக்குப்போனால் எடுத்துவந்து விதவித உருவங்கள் செய்துவைப்போம்..
வாங்க இராஜராஜேஸ்வரி.
அன்னாசிப்பழம் நம்மதில்லையே:(
நம்ம வீட்டுலேயே ஒரு பைன் மரம் இருக்கு. இது கொஞ்சம் ஸ்பெஷல்வகை. ஜாப்பனீஸ் நீடில் பைன்.
நம்ம கப்புவின் ஃபேவரிட் இந்த மரத்தடிதான். நம்மவீட்டு எவர்க்ரீன் கிறிஸ்மஸ் ட்ரீ!
இதுலே இருந்து விழும் கோன்களைச் சேகரிச்சு வச்சுருக்கேன்.
போன மாசம்தான் ஒரு மூணு மட்டும் எடுத்து ஆண்டீக் கோல்ட் நிறம் ஸ்ப்ரே செஞ்சு பார்த்தேன். நல்லா வந்துருக்கு.
இனிமேல்தான் மற்ற நிறங்களை வாங்கிக்கணும்.ஸேலுக்காகக் காத்திருக்கேன்:-)
மீன் வளர்க்கும் உருண்டை ஜாடி (கண்ணாடி)யில் போட்டு வைக்கும் எண்ணம்.
என்னென்ன உருவம் செய்வீர்கள்? பதிவு போட்டால் நாங்களும் பார்ப்போமே!
கோபாலுக்காக வாங்கின ஜாக்கெட் நல்லா இருக்கு. பெண்கை பெண்டட்டும் சூப்பர். ஏரி இத்தனை பெருசா. சரிதான். போட்டில் போகவில்லையாப்பா. பைன் கோன் இவ்வளவு பெரிசா.விலைக்குக் கொடுக்கமாட்டாங்களா.நீங்க வர்ணம் அடிச்சதும் படமெடுத்துப் போடுவீங்களாம்.
ஆஹா ஏரிக்கரை ஓரம்.....
மூன்றாவது பகுதிக்கு Direct Entry! முதல் இரண்டு பகுதிகளும் படிக்க வேண்டும். :)
படங்கள் வழக்கம் போல அருமை.
ஏரிக்கரை உண்மையிலே கொள்ளை அழகு ..!
புகை படங்கள் பாக்கும்போது குளிர்ச்சி .,
உங்கள் ஊரின் சுத்தம் பொறாமை கொள்ள செய்கிறது ...
செங்கற்பட்டு மாவட்டத்துக்கு ஏரி மாவட்டம்னே பேரு. இன்னைக்கு ஏரியெல்லாம் ஏரியாவாயாச்சு. ஆனா நியூசிலாந்துல ஏரிப்பராமரிப்பு நல்லபடி நடப்பது மகிழ்ச்சி.
குழந்தையும் தெய்வமும் மட்டுமல்ல... இயற்கையும் கூட கொண்டாடும் இடத்தில்தான்.
எவ்ளோ பெரிய பைன் கோன். அடேங்கப்பா! இயற்கைச் சாந்துகளைப் பூசி வைக்கலாம்.
என்னது... அவங்கவங்க வந்து கடுதாசி வந்திருக்கான்னு பாத்துக்கனுமா... சின்ன ஊர்கள்ள இது வாய்ப்புள்ள நடைமுறைதான்.
முன்காலத்தில் செவ்விநிதியர்களின் முக்கிய உணவாக பைன் மரக்கோன்கள் இருந்ததாகத் தெரிவிக்கிறது ஹைக்கிங் ட்ரெய்லில் உள்ள இந்தப் பலகை..பச்சைக்கோன்களை மரத்திலிருந்து பறித்துச் சென்று நெருப்பில் சுட்டு உள்ளே இருக்கும் பைன் நட்ஸ்-ஐ சாப்பிடுவார்களாம்.
வீடு கட்ட பைன் மரம், பைன் மரப்பிசினுக்கும் உபயோகம்..நல்ல உபயோகமான மரம்தான் இந்தப் பைன் மரம்!:)
அருமையான பகிர்வு
தொடருங்கள்
வாங்க வல்லி.
கோபால் ஆசைப்பட்டு எனக்காக வாங்குன ஜாக்கெட் அது!
போட் நம்ம சொந்த போட்டா இருந்தா போகலாம். கமர்ஸியல் படகு ஓட்ட அனுமதி இல்லை. ஏரியைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கும் நோக்கம் இல்லையாக்கும் கேட்டோ!
பைன்கோன் ....அதெப்படிப்பா...அவுங்க கலெக்ஷனை விலைக்குக் கேட்பது?
வாங்க வெங்கட் நாகராஜ்.
வருகைக்கும் உங்கள் ரசனைக்கும் நன்றீஸ்.
வாங்க ஆனந்த்.
ரொம்பநாளைக்கு ரொம்பநாளு!
நலமா?
கூட்டம் குறைவு என்பதால் குப்பைகளும் இல்லை. அதோடு இது நம்ம இடம் நாம்தான் சுத்தமா வச்சுக்கணும் என்ற உணர்வும் சிவிக் சென்ஸும் இருக்கே!
வாங்க ஜிரா.
330 பேர் வசிக்கும் ஊரில்தினம் கடுதாசி எத்தனைபேருக்கு வரப்போகுது.
இப்பெல்லாம் பில் உள்பட ஆன்லைனில்தான். பேங்குக்கு எழுதிக்கொடுத்துட்டா அவுங்களே அடைச்சுருவாங்க அஃப்கோர்ஸ் நம்ம பணத்தில் இருந்துதான்.
இங்கெல்லாம் பொதுச்சொத்துமேல் ஒருத்தன் கை வைக்க முடியாது. சட்டம் அனைவருக்கும் ஒன்றே. அது யாராக இருந்தாலுமே!
வாங்க இராஜராஜேஸ்வரி.
கூடுதல்தகவல்களுக்கு நன்றிப்பா.
இங்கேயும் பைன் மரத்துக்குப் பயன் கூடுதலே! ஜப்பானுக்கும் மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதியும் செய்யறாங்க. மரத்தின் அனைத்து பாகங்களுக்குமே எதாவது பயன் இருக்கு.
பைன் நட்ஸ் பயங்கர விலை. கிடைக்கும் பருப்பு வகைகளில் இதுதான் அதிக விலை உள்ளது. கிலோ 70 டாலர்வரை போகுது.
நம்ம வீட்டு பைன் சாப்பிடும் வகை இல்லை:(
அடுத்த முறை பைன்கோன் வாங்கி உள்ளே பருப்பு எப்படி அமைஞ்சுருக்குன்னு பார்க்கணும். சீஸனில் பெரிய சாக்கு மூட்டை அஞ்சே டாலர்கள்தான்.
பைன் மணம் கூட நல்லாவே இருக்கும்.
வாங்க யாழ்பாவாணன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
பெரிய பைன் கோன் அழகு. ஏரிக்கரைஓரம் நாமும் சுற்றிவந்தோம்.
Post a Comment