ஈ கொல்லம் இத்தரயும் வைகிப்போயல்லோ! மாவேலி, சட்னு பதில் சொன்னார். என்ன துளசி.... இப்படிக் கேட்டுட்டே? என் காலத்தில் பரசுராம க்ஷேத்ரமா இருந்தப்ப, மலையாளிகள் அங்கே மட்டும்தானே இருந்தார்கள். அதனால் ஓணதிவசம், ஒரு நடை வந்து எல்லோரையும் பார்த்துப்போக எளுப்பமாயிருந்நு. இப்போ சரிக்கும் பறஞ்ஞால்..... ஆர்ட்டிக் முதல் அண்டார்ட்டிக் வரை பரவிக்கிடக்கும் மலையாளிகளைக் கண்டு வரான்.... எத்ர நேரம் வேண்டி வருமுன்னு உனக்குத் தெரியாதா?
ஓக்கே, தம்புரானே! லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வர்றது இப்படித்தானா? ஆஹா..:-)
எங்கூரில் ஓணம்விழாவை, முந்தாநேத்து சனிக்கிழமை செப்டம்பர் 13 தான் கொண்டாட முடிஞ்சது. போன சனிக்கிழமைதான் ஓணம் பண்டிகை என்றாலும் அன்றைக்குப் பல்வேறு காரணங்களால் ஒரு வாரம் கழிச்சு ஆய்க்கோட்டேன்னு முடிவெடுத்தோம். ஹால் கிடைக்கலை என்பதைவிட, அன்றைக்குத்தான் நம்ம இண்டியன் சோஸியல் & கல்ச்சுரல் க்ளப், அவுங்க மிட்விண்ட்டர் திருவிழாவை வச்சுருந்தாங்க. கிறைஸ்ட்சர்ச் கேரளா அசோஸியேஷன் மக்களும் இந்தியர்களில்லையோ? நாம்தானே இங்கும் அங்குமாய்ப்போகவேண்டி இருக்கு.
அந்த இண்டியன் க்ளப்பை ஆரம்பிச்சது நம்ம கோபால்தான் என்பது புதியவர்களுக்கான தகவல்:-) ஆரம்பிச்சப்போது உலக இந்தியர்கள் க்ளப்பாக இருந்தது, ஒவ்வொரு ஆட்சியும் மாறமாற குஜராத்தி க்ளப், ஃபிஜி இண்டியர் க்ளப் இப்படி பலவேசம் கட்டுன பிறகு இப்போ கடந்த மூணு வருசமா பஞ்சாபி க்ளப்பாகி வருது. அதுவும் இந்த வருசம் 97 சதமானம் அஸ்லி பஞ்சாபி! நல்லதுக்கில்லே:( எப்போ மறுபடி உலக இந்தியர் க்ளப்பா ஆகப்போகுதோ? புலம்பல் கச்சேரியை பின்னொருநாளில் வச்சுக்கலா. இப்போ... நம்ம மாவேலித் தம்புரானை இன்னும் காக்க வைக்கவேணாம், கேட்டோ!
இந்த முறை நம்ம விழாவை, நமக்கு மட்டுமில்லாமல் கிறைஸ்ட்சர்ச் மாநகர மக்களுக்கான விழாவாக செய்தோம். அவுங்களுக்கும் நம்ம பாரம்பரிய ஓண சத்ய சாப்பிட ஒரு ச்சான்ஸ் கொடுக்கலாமேன்னுதான். பொதுவா, நாங்கள் , விழாவுக்கு முதல்நாள் இரவு ஹாலுக்குப்போய் சமையலுக்குண்டான எல்லா ஏற்பாடுகளையும் செய்வோம். வீடுகளில் தனிப்பட்ட முறையில் சமைச்சுக்கொண்டு வரும் சில ஐட்டங்களைத் தவிர்த்து,முக்கால் சமையல் முதல்நாளிரவே முடிச்சுருவோம். பெரியகூட்டமா வந்து காய்கறிகள் நறுக்குவதும், பூக்களம் ஒருக்குவது, ஹால் அலங்காரம் என்று பரபரப்பா வேலைகள் நடக்கும். கூடியிருந்து குளிர்ந்தேலோதான்.
நடுவில் இருப்பவர்தான் செஃப் பினய்
இந்த முறை சமையல் பொறுப்பை ஏற்றுநடத்த ஒரு செஃப் கிடைச்சார். அவருடைய உதவியாளர்கள் ரெண்டு பேர் இருந்தாங்க என்பதால் தனிப்பட்ட சமையல் வேணாமுன்னு முடிவாச்சு. எனக்கு எப்பப் பார்த்தாலும் ரசம்தான். இதிலிருந்து விடுதலை வேணுமுன்னு மனசு ஏங்குனது நிஜம். வேற எதாவது கிடைச்சால் கொள்ளாமுன்னு இருந்தேன். 120 நபர்களுக்கு ரசம் செய்வது பிரச்சனை இல்லை. அதை கொட்டிக் கவிழ்க்காமல் வீட்டில் இருந்து ஹாலுக்குக் கொண்டுபோவது, ஒரு சவால்!
சமையல் அவுங்க மூணுபேர் செய்வாங்கன்னாலும் காய்கறிகள் நறுக்கிக் கொடுக்க எங்க உதவி தேவைன்னதால் முதல்நாள் போய் உதவிட்டு வந்தாங்க பலர். அப்படியே பூக்களம், அலங்கார வேலைகள் எல்லாமும் ஆச்சு. எனக்குக் கொஞ்சம் உடல்நலமில்லை என்பதால் நானும் கோபாலும் போகலை:(
நம்ம எக்ஸ்டெண்டட் ஃபேமிலி!
மறுநாள் விழாவுக்குப்போய்ச் சேர்ந்தோம். அருமையான பூக்களம். எப்பவும் இதுக்குப் பொறுப்பேற்று நடத்துபவர், வேற ஊருக்கு இடம் பெயர்ந்துட்டார். ஆனால் புதுசா வந்துருக்கும் இளைஞர் படை ஜோரா அலங்கரிச்சுட்டாங்க. மேடைக்கு முன்னாலும் இந்த வருச அலங்காரங்கள் சூப்பர். முதல்முறையா ஓணத்தப்பன் கூட இருந்தார்!
வழக்கம்போல் ஒரு மணி லேட்டா விழா ஆரம்பிச்சு நடனம், பாட்டு, ஓண விழா விவரம் சொல்லும் மேடைப்பேச்சு இப்படி நடந்துக்கிட்டு இருந்த சமயம், மாவேலி வந்தார். அஞ்சு நிமிட் கழிச்சு சீஃப் கெஸ்ட் (உள்ளூர் பார்லிமெண்ட் அங்கம்) வந்து சேர்ந்தாங்க. இன்னும் அஞ்சு நாளில் எங்க நியூஸி பொதுத்தேர்தல் நடக்கப்போகுது. எல்லா அரசியல்வியாதிகளும் தலைக்கு மேல் வேலை இருக்குன்னு பயங்கர பிஸி. ஆனாலும் இப்படி ஒரு மாபெரும் மக்கள் கூட்டத்தையும், எங்கள் ஓட்டுகளையும் புறக்கணிக்க தைரியம் வருமா என்ன? கொஞ்சம் லேட்டாதான் வரமுடியும். ஆனாலும் கட்டாயம் வந்துருவேன்னு சொல்லி இருந்தாங்க.அதே போல வந்து விளக்கேத்தி வச்சாங்க. ஒரு மரியாதைக்கு அரைமணி நேரம் இருந்துட்டுக் கிளம்பிப்போகவும் செஞ்சாங்க.
பாரம்பரிய நடனமான திருவாதிரைக்களி, மகளிரணியின் மாடர்ன் டான்ஸ், அப்புறம் பெயரில்லாத ஒரு நடனம்( ஆடியது நாலு ஜோடித் தம்பதிகள்!)
இடைவெளியிட்டு நிரப்ப, சின்னதா ஒரு க்விஸ், அப்புறம் பார்வையாளர்களின் மலையாளமொழி ஆற்றலை பரிசோதிப்பதுன்னு சில சின்னச்சின்ன கலாட்டாக்கள். 'முண்டு ச்சளியில் புரளரது' ( வேகமா பத்து முறை சொல்லிப்பாருங்க) வடக்கருக்காக , ப்ளூபல்ப் ரெட் பல்ப் :-)
நல்ல கூட்டம். வடக்கர்களும்( இதில் சிலபல பஞ்சாபிகளும் சேர்த்தி) வெள்ளையர்களும், திராவிட மக்களும், இண்டியன் க்ளப் அங்கங்களும், ஃபிஜி இந்தியர்களுமா 200 பேருக்கும் அதிகமா இருந்தாங்க.
எல்லோரும் ஆவலுடன் காத்திருந்த ஓணசத்ய, சரிக்கும் 1.10க்கு ஆரம்பிச்சது. 21 ஐட்டங்களுடன் சாப்பாடு. ரெண்டு வகைப் பாயஸம், அடைப்ரதமனும், பால்பாயஸமுமாய். ரசம் & மோர் மட்டும் மிஸ்ஸிங்.
நம்ம நண்பர் சுரிந்தர் டாண்டன், மனைவியுடன் வந்துருந்தார்.
இவர் ஏகப்பட்ட அவார்ட் வாங்குனவர். லேட்டஸ்ட்டா வாங்குனது, மாட்சிமைதாங்கிய மஹாராணியம்மாவிடமிருந்து. MNZM (Member of the New Zealand Order of Merit), Queen's Birthday Honours, June 2014 இவர் மனைவி, சமீபத்தில் ஜஸ்டிஸ் ஆஃப் பீஸ் (J P )ஆக தெரிவு செய்யப்பட்டாங்க. இப்போ போனமாசம் முதல் நியூஸி கல்யாணங்கள் நடத்தி வைக்கும் அரசாங்கபுரோகிதர் ஆகவும். இன்னும் முதல் கல்யாணம் நடக்கலை. நடத்தி வைக்கலாமுன்னா.... யாராவது நம்ம கம்யூனிட்டியில் இந்த ஊரில் கல்யாணம் பண்ணனுமே! எல்லாம் ஊருக்குல்லே கிளம்பிப்போயிடறாங்க.
சாம்பாரையும், சாப்பாடையும் அந்நியர்கள் உண்மையாகவே ரசிச்சு ருசித்தது மனசுக்கு மகிழ்ச்சியாத்தான் இருந்தது. கோபால் ஒரு பந்திக்கு பரிமாறி சந்தோஷப்பட்டார். இவருக்கு ரொம்பப்பிடிச்ச சமாச்சாரம் பந்தி விசாரிப்பு:-)
அப்புறம் அதிகநேரம் நிக்காமல் சீக்கிரமா கிளம்பிட்டோம். க்ரூப் போட்டோதான் இந்த முறை நமக்கு மிஸ்ஸாகிப்போச்சு:( கூட்டம் அதிகம் என்பதால் நாலு பந்தி போடவேண்டியதா ஆகிருச்சு.
மகளிரணி!
மும்பை மலையாளிப் பெண் ஒருவர், புதுசா சல்வார்கமீஸ் வியாபாரம் ஆரம்பிச்சுருக்கார். அங்கே கொஞ்சம் டிஸ்ப்ளே செஞ்சுருந்தாங்க. குட்லக் சொல்லிட்டு வந்தோம்.
மத்தபடி நம்மாட்களைக் கண்டு, பேசி, உண்டு, மகிழ்ந்து விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தோம்.
வருங்கால நடனமணிகள், பாடகிகள் மேடையைப் பிடிச்சுக்கிட்டாங்க.
அனைவருக்கும் 'அடுத்த' ஓணம் பண்டிகைக்கான இனிய வாழ்த்து(க்)கள்.
7 comments:
அத்தப்பூ அசத்தல்..
பூக்களம், மாவேலி,ஷான், கண்ணாடி போடாத துளசி, முழு நீலத் தம்பதியரின் படம், ஓண சத்ய எல்லாம் வெகு பிரமாதம். நாலு தம்பதியர் ஆடினது சால்சா நடனமா. குழந்தைகள் ஸ்வீட். பஞ்சாபியர் இல்லாத இடம் ஏது. இங்கே இந்தியக் கடை ஓனரே பஞ்சாபி. 30 வருஷம் முனாடி வந்தவர் இந்த ஊர்ப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டு ஓஹோன்னு இருக்கார்.அந்த அம்மாவும் சல்வார் கமீசில் மினுமினுக்கிறார்.
வாங்க அமைதிச்சாரல்.
ரசிப்புக்கு நன்றீஸ்.
வாங்க வல்லி.
கண்ணாடி போடாத முகம் பார்க்கச் சகிக்கலைன்னு கோபால் சொல்றார். அதுக்காக ஒரு ப்ளெய்ன் க்ளாஸ், சொக்கத்தங்க ஃப்ரேமோடு செஞ்சுக்கணும்!
அது சல்ஸா நடனம் இல்லைப்பா.
நம்மூர் பஞ்சாபி பெண்ணை, இங்கத்து வெள்ளைக்காரர் கல்யாணம் கட்டி, அவுங்க மூணு முறை பக்கத்து ஊரில் மேயர் பதவியும் வகிச்சாங்க.
லிட்டில் இண்டியா என்னும் உணவகம் (நாடு பூராகிளைகள் உண்டு) அவுங்களோடதுதான்.
தலைப்பு என்னை கேட்பது போல் உள்ளது . வீட்டு கம்ப்யூட்டர் சரி இல்லாததால் உங்கள் ப்ளாக் வரவும் முடியல.
கண்ணாடி இல்லாமல் துளசி .!!நல்லாத்தான் இருக்குனு கோபால் அவர்களிடம் சொல்லவும் .
கண் சிகிச்சைக்கு பின் கண்ணாடி தேவைபடவில்லையா ?
அருமையான ஓணம் celebration :))
வாங்க சசி கலா.
கண் சிகிச்சைக்குப் பிறகு , படிக்க மட்டும் கண்ணாடி தேவையா இருக்கு.
கேரளா க்ளப், எப்பவும் எல்லா விழாக்களையும் அருமையாக் கொண்டாடுறாங்கப்பா. நல்ல ஒற்றுமை இருக்கு!
வாங்க யாழ்பாவாணன்.
வருகைக்கு நன்றி.
Post a Comment