Tuesday, September 09, 2014

மலை முகட்டில் (மினித்தொடர் கடைசிப்பகுதி)

நாலு கிமீ தூரத்தில் இருக்கும்   மவுண்ட் ஜான்  மலையேறி, அப்ஸர்வேட்டரிக்குப்போய்  பார்த்துட்டு  நம்மூரை நோக்கிப் போகலாம். நல்ல பாதை இருக்கு.  மலை முகட்டில் இருந்து பார்க்கும்போது, சுற்றுப்புறமெல்லாம் அட்டகாசமாம்!  மூச்சடைக்கும் அழகு(?)ன்னும் சொல்லிக்கலாம்.






டெலெஸ்கோப் வச்சுருக்கும்   உருண்டைக்கூரைக் கட்டிடங்கள்  ஏழெட்டு அங்கங்கே பரவலா இருக்கு.   பகல் வெளிச்சம் அடங்கியதும்,  அதன் மேற்கூரைகள் திறந்து  டெலஸ்கோப்புகள் வெளியே வரும்.  360 டிகிரியில் சுழலும் வகைகளாம்.  எந்தவிதமான செயற்கை வெளிச்சமும் இல்லாததால் வானம்  அட்டகாசமா இருக்கணும்.  நகரத்தில் நாம்  பார்க்கும் வானத்தில் எப்படியும் தெருவிளக்குகளின்  ஊடுருவல் இருக்குதானே?

ஒரு கேஃபே,  மலை ஓரத்தில் வெளியே அமர்ந்து காட்சிகள் பார்க்க  கல்லிருக்கைகள்,  ரெஸ்ட் ரூம் வசதிகள் எல்லாம் அருமையா  இருக்கு.


நம்மைப்போலவே பலரும் வேடிக்கை பார்க்க வந்திருக்காங்க. கார் பார்க்கில் ஏழெட்டு வண்டிகள். இங்கிருந்து ஒரு சின்ன ஏற்றத்தில் மேலே போகணும்.
மலைப்பாதையில் நடந்து போக நல்ல வாக்வே  (மவுண்ட் ஜான் வாக்வே)போட்டுவச்சு அங்கே  இருக்கும் மற்ற உயிர்களின் விவரங்களையும் எழுதி வச்சுருக்காங்க. ரேஞ்சரின்  வண்டின்னு நினைக்கிறேன்.  கூலி (Border Collie ) உக்கார்ந்துருக்கார்.




முகட்டில் இருந்து பார்க்கும்போது   அக்கம்பக்கம் இருக்கும் ஏரிகளும் கண்களுக்குத் தப்பாது.  லேக் அலெக்ஸாண்ட்ராவைப் பார்க்கும்போது நியூஸியின் தெற்குத்தீவைப்போல  ஒரு ஷேப்!


தெக்கப்போ ஏரியைச் சுற்றி ஊர்பரவிப் போய்க்கிட்டு  இருக்கு. இவ்ளோ கட்டிடங்கள் ஒரு காலத்தில் இல்லை.  சுற்றுலாப்பயணிகளுக்கான தங்குமிடங்கள் மட்டுமில்லாமல்,  வேலையில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டவர்கள், நகரச்சந்தடி இல்லாமல் வாழ்க்கையை அனுபவிக்க இங்கே வர ஆரம்பிச்சு இருக்காங்களாம்.

விலையைப் பொறுத்தவரை தெற்குத்தீவின் பெரிய நகரமான கிறைஸ்ட்சர்ச் (நம்மூர்) விலையேதான் அங்கேயும். என்ன ஒன்னு,  கூட்டம் இன்னும் குறைவு.  வீடு கட்ட வெறும் மனையா வாங்கினால்   விலை  எங்கூர்போலவேன்னாலும்  இடம் பெருசா இருக்கு.ஏறக்குறைய டபுள் த சைஸ்!

 நல்லமேய்ப்பர் சர்ச்சை ஒட்டித்தான் சுற்றுலாப்பயணிகள் கூட்டம்  இருக்கும் என்பதால் மற்ற  இடங்களில் அமைதியாகவே இருக்கும்.  மாலை அஞ்சு மணிக்கு சர்ச்சை மூடிடுவாங்க. அதுக்குப்பிறகு   நல்ல அமைதியேதான்! 2008 கணக்கெடுப்பு சொல்லுது அங்கே  318 பேர் வசிக்கிறாங்கன்னு. 2011 இல் அது 330 நபர்களா இருந்துருக்கு.   இப்ப அதிகமா ஆகி இருந்தாலும்  அரை ஆயிரத்துக்கும் குறைவாகத்தான் இருக்கவேணும்.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை, சுத்திவர  சதர்ன் ஆல்ப்ஸ் மலைத்தொடர்களின் காட்சி.  நியூஸியின்  அதி உயரமான மலைச்சிகரம் மவுண்ட் குக் இதுலேதான் இருக்கு.  இக்கினியூண்டு  பனிக்குவியல்  கண்ணில் பட்டது.


மலையில் இருந்து கீழே  வந்து, இன்னொருமுறை நல்ல மேய்ப்பரையும் நாயையும் பார்த்துட்டு ஊரைவிட்டோம். அக்கம்பக்கமிருக்கும் சின்னச் சின்னக்குன்றுகளில்  பனிச்சறுக்கு விளையாட்டுக்கான ஸ்கி ஏரியா இருக்கு.  ஜூலை, ஆகஸ்ட் மாசங்களில்  பனியில் சறுக்கலாம்.  ஏரிக்கான லுக் அவுட் ஏரியாவில்  டவுன் கவுன்ஸில் பைனாகுலர் வச்சுருக்கு.

Lake Tekapo Fete  திருவிழா ஒன்னு  நடக்குதாம் இன்றைக்கு. அதையும் போய் வெளியே இருந்தே எட்டிப் பார்த்துட்டுக் கிளம்பிட்டோம்.  உள்ளே போய்ப் பார்க்க 10 டாலர் டிக்கெட்.  ஆனால் அங்கே போய் பார்த்துட்டு வரலாமுன்னா, மகள்  வேணாமுன்னு சொல்லிட்டாள்.

ஃபேர்லீயில் நிற்காமல்  மதியம் ஒன்னேகாலுக்கு ஜெரால்டீன் வந்து சேர்ந்தோம். பகல் சாப்பாடு  சிப்ஸ் & பர்கர் முடிச்சுக்கிட்டு  கடைகளை ஒரு நோட்டம் விட்டுட்டுக் கிளம்பி  நேரா வீடுதான்.  மணி மாலை 4.

கடைக்குள் போன அம்மாவுக்கு வெயிட்டீஸ்! இங்கெல்லாம்  'நாற்காலி'களுக்குக் குடி தண்ணீர் வைப்பது எனக்கு ரொம்பப்பிடிச்சுருக்கு:-)


அடுத்தமுறை போக நேர்ந்தால்  ரைஸ்குக்கரையும் கொஞ்சம் அரிசியையும் கொண்டு போகணும்.  கூடவே கொஞ்சம்  சுலபமான உப்புமா சமாச்சாரம்.  (சொந்த சாஹித்யம். 'நானே 'கண்டுபிடிச்சது!)  வாணலியில் கொஞ்சம் கூடவே எண்ணெய் ஊத்தி, கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, கொஞ்சம் முந்திரி,  நிலக்கடலை, பெருங்காயம், கருவேப்பிலை எல்லாம் தாளிச்சு, பொடியாக அரிஞ்ச வெங்காயம் பச்சைமிளகாய்களை நல்ல மணம் வரும்வரை வதக்கி,  தேவையான ரவையை அதே வாணலியில் சேர்த்து வறுபட்டதும் உப்பு சேர்த்து, ஆறியதும் ஸிப்லாக் பையில்  எடுத்து வச்சுக்கணும்.  

மோட்டல்களில் இருக்கும்  கெட்டிலில் தண்ணீரைக் கொதிக்க வச்ச  ரைஸ்குக்கரில்  ஒரு பங்கு ரவை சமாச்சாரத்துக்கு  ரெண்டு பங்கு வெந்நீர் சேர்த்து குக்கரை ஆன் செஞ்சு விட்டால் பத்தே நிமிட்டில் சூடான உப்புமா ரெடி!  அரிசி உப்புமா வேணுமுன்னா..... அரிசி ரவையை இதேபோல் செஞ்சுக்கலாம்.
எதுக்கும்  ஒரு லோஃப் ரொட்டியும் ஜாமும் கைவசம் இருப்பின் நல்லது.  இன்னும்  நமக்குப்பிடிச்ச தீனிகள் சில இருந்துட்டுப்போகட்டும்.

 தெர்மக்கோல் கூலர் பாக்ஸ் இருந்தால் அதுலே தயிர், பால் கொண்டு போகலாம். இல்லைன்னா அங்கங்கே டெய்ரி, சூப்பர் மார்கெட்டில் வாங்கிக்கலாம்.  உப்பு கொண்டு போக மறக்க வேணாம். கூட ஒரு ஊறுகாய் பாட்டிலும் :-)   எல்லாம் கார் தானே சுமக்குது. பொதுவா உள்ளூரில் மூணு நாள் கார் பயணத்துக்கு இது சரிவரும். சரியா?


சின்னதோ பெருசோ.... பயணம்  உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்லது.

ஆதலினால் பயணம் செய்வீர்!


PIN குறிப்பு: மினித் தொடர் முற்றும்:-)





21 comments:

said...

சொந்த சாஹிதயம் ரொம்பவும் அருமை

said...

கூடவே எங்களையும்
கூட்டிட்டு போனதுக்குக்
கோடி நன்றி;

said...

//சின்னதோ பெருசோ.... பயணம் உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்லது.
//

உண்மைதான் அக்கா ..கண்டிப்பாக அனைவரும் day ட்ரிப்ஸ் ஆவது போயிட்டு வரணும் .மனசுக்கு ரிலாக்ஸ்டா இருக்கும் .
மினி ரைஸ் குக்கர் இருந்தா அனைத்தும் செய்யலாம் :) ..
படங்கள் பார்க்கும்போதே தெரியுது அந்த ப்ளேஸ் மூச்சடைக்கும் அழகுதான் !!
வெயிட்டிஸ் செய்யும் நாலுகாலார் அழகோ அழகு :) உங்களை பார்த்து தான் புன்முறுவல் செய்ராபோல இருக்கு :)
எனக்கும் இந்த நாலு காலார கூட ஒரு பூர்வ ஜென்ம பந்தம் இருக்கு எங்க பார்த்தாலும் பாய்ஞ்சி கட்டி பிடிச்சி அன்பை பொழிவாங்க :)
அப்புறம் ரஸ்க் கார குழம்பு /ரஸ்க் தக்காளி சட்னி காம்பினேஷன் ட்ரை செஞ்சு பாருங்க :)

said...

அருமையான படங்கள் விவரங்கள். ரைஸ் குக்கர் உப்புமா. அடுத்த ட்ரிப்புக்குள்ள பஜ்ஜி போடறவிதம் கூடவந்துவிடும்னு நினைக்கிறேன். நாற்காலார் அழகாக இருக்கிறார். பயணம் ஒரு டானிக்.

said...

பயணம் .... உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்லது!

சரியாச் சொன்னீங்க!

மலை முகட்டில் இருந்து சுட்ட காட்சிகள் ரொம்பவே அழகு!

said...


அருமையான பகிர்வு
தொடருங்கள்

said...

வெள்ளை மெத்தைகுட்டியார் மிகஅழகு. இனியபயணம். நன்றி.

பயணம் செய்வோம் மகிழ்ந்திருப்போம்.

said...

அம்மா , என்னை ஞாபகம் வச்சி நலம் விசாரிச்சிங்களே im really surprised, and happy

நான் உங்களோட எல்லா பதிவையும் படிசிடுவேன்ம்மா , ஆனா கமெண்ட் மட்டும் போடாம ஓடிடுவேன் :-)

ஓய்வுக்கு பிறகு நியுசில செட்டில் ஆயிடலாமான்னு ஒரு யோசனை கூட இருக்கு ...!

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

வயிறு வாடாமல் இருந்தால்தானே பயணம் இனிக்கும், இல்லையா?

said...

வானக விஸ்வநாத்.

கூடவே வந்ததுக்கு நானும் நன்றி சொல்லிக்கறேன்:-)

said...

வாங்க ஏஞ்சலீன்.

உண்மைதான்ப்பா. மனசுக்கு மகிழ்ச்சி முக்கியமில்லையோ!!!

பயணத்துக்குன்னே சின்ன ரைஸ் குக்கர் வச்சுருக்கேன். முந்தியெல்லாம் அண்டைநாட்டுப்பயணத்துக்கும் (அஸ்ட்ராலியா) கொண்டு போவேன்.

பெட்டியை ஸ்கேன் செய்யும்போது நீளமா இருக்கும் ஒயரைப் பார்த்துட்டு என்னமோ ஏதோன்னு மிரண்டு போவாங்க. பொட்டியைத் திறந்து காமிக்கணும். தீவிரவாதின்னு நினைக்கப்போறாங்கன்னு கோபால் கவலைப்படுவார்.

இதுக்கு வேற நேரம் அதிகமாகுதுன்னுதான் அப்புறம் கொண்டுபோவதை விட்டுட்டேன்.

ஒருநாள் காரக்குழம்பு காம்பினேஷனைத் தின்னு பார்க்கச் சொல்லணும் கோபாலிடம்.

எனக்கு காரம் ஆகறதில்லைப்பா:(

அன்கண்டிஷனல் லவ் கொடுப்பது நாற்காலிகளே!

said...

வாங்க வல்லி.

நோ பஜ்ஜி:( எதுக்குப்பா எண்ணெய்? விட்டொழிச்சாச்சு இப்பெல்லாம். பதிவர் மாநாட்டு போண்டா வடைக்கு மட்டும் விதிவிலக்கு:-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

சக பயணிக்குத் தெரியும், பயணத்தின் பெருமை :-)))))

said...

வாங்க யாழ்பாவாணன்.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க மாதேவி.

சரியாகச் சொன்னீங்க!!! வெண்பட்டு மெத்தையே தான்!

said...

வாங்க ஆனந்த்.

அதெப்படி 'யானை' நண்பர்களை மறக்கும்?

நியூஸிக்கு வந்து வசிக்கணுமுன்னா வயசு லிமிட் இருக்கே:(

நாப்பதுக்கப்புறம் முடியாது. சுற்றுலாப் பயணியா வரலாம்!

said...

அருமையான பயணம் டீச்சர்.

பதிவுல ரெண்டு விஷயங்கள் பிடிச்சது எனக்கு.

1. நாற்காலிகளுக்கு தண்ணி வெச்சத அழகாச் சொன்ன விதம்

2. அப்புறம் அந்த உப்புமா ரெசிப்பி. கண்டிப்பா இந்த மாதிரியான பயணங்கள்ள இது உதவும். இதையே பொங்கலுக்கும் முயற்சி பண்ணலாம்னு தோணுது.

said...

ver nice photos are supervery nice photos are super

said...

hi nice trip

said...

வாங்க ஜிரா.

பொங்கலுக்குச் சரிப்படுமுன்னு தோணலையே!

அதுக்கு அரிசி பருப்பு வெந்தாவுட்டுத் தானே தாளிப்பு, இல்லையோ?

said...

வாங்க சேத்துப்பட்டு பாலாஜி.

முதல் வருகை போல!

வணக்கம். நலமா?

உங்கள் ரசிப்புக்கு நன்றி.

மீண்டும் வருக.