சின்ன வயசுக்காரி....... விதவிதமான, அழகான உடைகளைப் போடுவதை விட்டுட்டு, எப்பப்பார்த்தாலும் ஒரு பட்டுப் பொடவையைக் கட்டிக்கிட்டு வந்துடறாள். அழகா, அம்சமாத்தான் இருக்கு என்றாலும், உடைகளில் ஒரு விதம் காட்டக்கூடாதா? எனக்கு ஒரே ஆத்தாமைதான். போன சென்னைப் பயணத்துலே , காக்ராச் சோளி வாங்கித்தரலாமுன்னு பார்த்தால்..... நினைச்சதுபோல் கிடைக்கலை. பட்டுப்பாவாடையும் சட்டையுமா ஒரு செட் கிடைச்சது. சட்டையோ, ஸ்லீவ்லெஸ். கலாச்சாரக் காவலர்கள் என்ன சொல்வார்களோன்ற பயம் நம்ம கோபாலுக்கு! பரவாயில்லை. உடுத்தப்போறது நியூஸியிலேதான் என்றதும் சரின்னு தலையாட்டினார். எதுக்கும் இருக்கட்டுமுன்னு ஒரு பொடவையும் கனகாம்பரக் கலரில் வாங்கினேன்.
நவராத்ரி வந்தே வந்துருச்சு. என்ன உடுத்திக்கச் சொல்லலாமுன்னு யோசனையோட அலமாரியைத் திறந்து பார்த்தால் பட்டுப்பாவாடை செட் முதல்லே கண்ணில் பட்டது. சரி. 'இதுதன்னே ஆய்க்கோட்டே'ன்னு எடுத்து வெளியில் வச்சேன்.
புடவை கட்டும்போது போட்டுக்கும் நகை நட்டுக்கள் இதுக்குச் சரிப்படாதோன்னு லேசா ஒரு தோணல். இப்பெல்லாம் மேட்ச்சிங் ஆக்ஸெஸரீஸ் முக்கியமாப் போச்சே! நகைப்பொட்டியில் தேடுனா..... ஓரளவு நல்லதாகவே கிடைச்சது. கழுத்துக்கு ஒரு சோக்கர். அப்புறம் பர்ப்பிள் நிறத்தில் (பாவாடையில் பார்டர் , மஸ்டர்ட் கலரிலும் உடல் அழுத்தமான பர்ப்பிள் கலரிலுமாக இருக்கே!) ஒரு நெக்லெஸ்ஸூம், காதுக்கான ஆட்டுக்கம்மலும் (ட்ராப்ஸ்) ஒரு செட் . சின்னப்பெண்ணுக்கு காசு மாலை வேணாமுன்னு முடிவு செஞ்சேன். மஸ்டர்ட் ப்ளவுஸில் அது எடுப்பாவும் இல்லை :( சிம்பிளா ஒரு ஒத்தைக் கல் வரிசை பதிச்ச ஒரு நெக்லஸ், போட்டுப் பார்த்தால் நல்லாவே இருக்கு. கல்லு வச்ச நெத்திச் சுட்டி வேணாமேன்னு கல் இல்லாத ப்ளெய்ன் நெத்திச் சுட்டி ஓக்கே ஆச்சு.
காலுக்கு ? வெள்ளை நிற ஷூஸ். பழசுதான். ஆரஞ்சு ஸ்ப்ரே போட்டு சுத்தம் செஞ்சதும் பளிச்!
வீட்டுலே என்னவோ நடக்குதுன்ற சந்தேகப் பார்வையோடு ரஜ்ஜூ சுத்திச் சுத்தி வந்து எட்டிப் பார்த்துக்கிட்டே இருந்தா(ள்)ன்.
உடை மாத்தி, அலங்காரம் முடிச்சுப் பளிச்ன்னு வந்து நிக்கறாள் ஜன்னு. ஓடி வந்தான் ரஜ்ஜு.
"என்ன இவளே..... புது உடுப்பா? சூப்பரா இருக்கே போ!"
"தேங்க்ஸ் ரஜ்ஜூ"
"அதென்னமோ வீட்டுலே மூணு பொண்களிருந்தாலும் அம்மாவுக்கு நீதான் எப்பவும் ஸ்பெஷல்...ஹூம்"
" இல்லையா பின்னே? நாந்தானே அம்மா சொன்ன பேச்சைக் கேட்டு நடந்துக்கறேன். அக்காவும் நீயும் அப்படியா? "
அமாவாசைக்கு சாஸ்த்திரத்துக்கு மரப்பாச்சிகளை எடுத்து வச்சுட்டு, மறுநாள் கொலுவின் முதல் நாள் என்றில்லாமல் இந்த முறை இடையில் ஒரு நாள் கூடுதலாக் கிடைச்சிருக்கு. அதான் ஜனனிக்கு முதல்லே ட்ரெஸ் பண்ணி விட்டுட்டேன். மகள், மாலையில் அப்பாவுக்கு பிறந்தநாள் பரிசுகளைக் கொண்டு வந்து கொடுத்து வாழ்த்தினாள். கொலு சமாச்சாரம் சொல்லி, நேத்து அமாவாசைன்னு ஜஸ்ட் படிக்கொரு பொம்மையை வச்சேன். இனி நாளைக் காலை மற்ற பொம்மைகளை அடுக்கணும் என்றதும், இப்ப அடுக்கினால் நான் உதவி செய்வேன் என்றாள்! நல்லதாப்போச்சுன்னு நம்ம 'தீம்' என்னன்னு சொன்னேன்:-)
விளக்கு அலங்காரம் முதற்கொண்டு, பொம்மை அடுக்க ஆனநேரம் அரைமணிதான்! இந்த முறை மகள் வச்ச கொலு!
உடனே எடுத்த படங்கள் இத்துடன்.
கும்பவாஹினிக்குப் புது அலங்காரம் செஞ்சாச்சு. நம்மூட்டு லக்ஸ்க்குத்தான் புதுப்பட்டுப்பாவடை ஒன்னு தைக்கணும்.
இன்னும் சுண்டலுக்கு ஊறவைக்கலை. தலைக்கு மேல் வேலை கிடக்கு.
இன்னொருநாள் விஸ்தாரமா எழுதினால் ஆச்சு.
அன்பு நட்புகள் அனைவரும் கொலுவுக்கு வந்து போகணுமுன்னு அன்போடு அழைக்கின்றோம்.
30 comments:
தலைப்பைப் பார்த்ததும்..நான் என்னவோ லக்ஷ்மிக்கும் சரஸ்வதிக்கும், சல்வார்காமிஸ், மிடி எல்லாம் உடுத்திவிட்டு கொலு வச்சுட்டீங்களோனு பயந்துட்டு வந்தேன். நல்லவேளை, அப்படி எதுவும் "தெய்வகுற்றம்" செய்யல நீங்க! :)
"ஜனனி"(அந்தப் பாப்பாதான்)க்கு ஒரு பின்னல் போட்டுவிட்டு இருக்கலாம். அவளுக்கு கூந்தல், 16 வயதினிலே ரஜினி "நிக் நேம்" மாதிரி இருக்கு! :)
ஜன்னு ரொம்ப்ப அழகு..
திருஷ்டி சுற்றிப்போடுங்க..
/சூப்பரா இருக்கே போ!"/
ரஜ்ஜூ சொன்னதையே சொல்லிக்கறேன்:)!
விழாக்கால வாழ்த்துகள்!
அதென்னமோ வீட்டுலே மூணு பொண்களிருந்தாலும் அம்மாவுக்கு நீதான் எப்பவும் ஸ்பெஷல்...ஹூம்//
ரஜ்ஜுவின் பொருமல் உண்மைதான்.
ஜன்னு அழகு.
திவான் மேல் வீற்றிருக்கும் யானை தலையணை அழகு.
கும்பவாஹினியும் பின் புறம் தெரியும் பொற்கோவிலும் அழகு.
அழகோ அழகு எல்லாம் அழகு!
கலர்ஃபுல் கொலு. ஒவ்வொரு வண்ணமும் மாட்சோ மாட்ச். ரஜ்ஜு ஜன்னு டயலாக் சூப்பர். அக்காக்காரி தமிழ் படிக்க மாட்டார். லக்ஸுக்கு அலங்காரம் செய்த பிறகு படம் போடுங்கப்பா. நவராத்திரி நல்வாழ்த்துகள் துளசி. ரொம்ப நாளைக்கப்புறம் ரஜ்ஜு பார்க்க சந்தோஷம்.
நவராத்திரி நல்வாழ்த்துகள்.
கொலு அழகு. அந்தப் படிகளைப் பத்தி முந்தி நீங்க பதிவு போட்டிருந்தது நினைவுக்கு வருது.
ஜன்னுவோட அலங்காரம் அழகு. சைனீஸ் ஜப்பானீஸ் உடைகள் கூட அழகாயிருக்குமே. முயற்சி செஞ்சு பாருங்க.
Superb..
I miss koki.
அலங்காரம் பிரமாதம்;
அழைத்தமைக்கு நன்றி;
கொலு சூப்பர். அந்தப் பொண்ணு உங்க பொண்ணுன்னு நினைச்சேன். எவ்ளோ பர்ஃபெக்ட் ட்ரெஸ்ஸிங்.. சூப்பர் துளசி..
திருமண நாள் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன் :)
வாங்க வருண்.
தெய்வக்குத்தம் செஞ்சாலும் செய்வேன்!!
இடும்பிக்கு எப்பவும்வழி வேறதான், இல்லையோ?
பின்னல் போட்டுவிடலாமுன்னா ஜனனிப் பாப்பாவுக்கு ஆறடிக்கூந்தல் இல்லையே:(
சீனத்தியை, தமிழத்தியா மாத்தறதுக்கு நான் பட்ட பாடு இருக்கே.... ரெண்டு பதிவு தேறும், ஆமா:-)))
வாங்க இராஜராஜேஸ்வரி.
ஜன்னுவின் அழகை ரசித்தமைக்கு நன்றி.
கொலு பிரித்தெடுக்கும்நாள் சுத்திப்போட்டால் ஆச்சு.
வாங்க ராமலக்ஷ்மி.
ஆஹா ஆஹா.....
வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.
வாங்க கோமதி அரசு.
ஒவ்வொன்றாக அழகை மொத்தமாக ரசித்த உங்களுக்கு எங்கள் நன்றி.
வாங்க வல்லி.
மகள் உதவி செஞ்சது எனக்கு ரொம்பவே மகிழ்ச்சிப்பா. குறைஞ்சபட்சம், எனக்கப்புறம் பொம்மைகளுக்கு இடம் தருவாளே!
லக்ஸ் பாவாடை இன்னும் ரெடியாகலை.
இன்னொரு குழுமத்தில் நவராத்ரி சமயம் ஊசியில் தைக்கக்கூடாதுன்னு ஒருத்தர் சொல்லி இருந்தாங்க.
இடும்பி, இப்ப என்னசெய்யலாமுன்னு யோசிக்கிறாள்!
வாங்க ஜிரா.
கொலுவை ரசித்தமைக்கு நன்றி.
ஜன்னு, நம்மவீட்டுக்கு வந்தபோது சீன உடையில்தான் வந்தாள்.
அவளுக்கு ஸல்வார் கமீஸ் போட்டு நம்மாளா ஆக்கினேன் அப்போ!
எப்போ? 1998 லே !
வாங்க சாந்தி.
நன்றீஸ்ப்பா!
வாங்க விஸ்வநாத்.
ரசனைக்கும், அழைப்பை ஏற்றமைக்கும் எங்கள் நன்றி.
வாங்க தேனே!
அவள் நம்மாத்துப்பொண்தானப்பா!!!
திருமணநாள் வாழ்த்துகளுக்கு நன்றி.
ஆச்சு 40 வருசம்:-)
லேட் பண்ணாமல் நானும் கொலு பார்க்க வந்துட்டேன். ஜன்னு பாவாடையில் மின்னுகிறாள். கோபால் ஸாரின் பிறந்த நாளுக்கும், உங்கள் கல்யாண நாளுக்கும் வாழ்த்துக்கள்!
வாங்க ரஞ்ஜனி.
சின்னக்கொலுவை ரசித்தமைக்கு நன்றி.
வாழ்த்துகளுக்கு நன்றி.
ஆ(ர்)டுநரி திருமண நாள் இருக்கட்டும்.இப்போ அறுபதாங்கல்யாணம் நடந்த திருமணநாளைத்தானே சொல்றீங்க:-)
நன்றீஸ்ப்பா.
ஜன்னு ஜம்முனு இருக்கா . நல்லா நேர்த்தியா, அழகா வைச்சிருக்கீங்க. சூப்பர்!!!!...
சூப்பர். ஜன்னுவை அப்படியே தூக்கிக்கலாம்போல அழகு கொஞ்சுகிறது.
கொண்டாட்டங்கள் அனைத்துக்கும் இனிய வாழ்த்துகள்.
கொள்ளை அழகா இருக்காளே..... :)
அழகிய கொலு.
கொலு அழகு . ரஜ்ஜு வின் பொருமல் நியாயமானது தான் . சுத்தி சுத்தி வந்து தன் ஆற்றாமையை வெளிப்படுத்திடுச்சு போல ....
சுண்டலுக்கு waiting .
வாங்க பார்வதி.
உங்கள் முதல் வருகை, மிகவும் மகிழ்ச்சி அளிக்கின்றது.
நன்றி. மீண்டும் வருக.
வாங்க மாதேவி.
கொலுவின் ஹைலைட் வழக்கம் போல் நம்ம ஜன்னுதான் !
ரசிப்புக்கு நன்றி.
வாங்க வெங்கட் நாகராஜ்.
ரசனைக்கு நன்றி.
வாங்க சசி கலா.
உண்மைதாங்க.அன்னைக்கு ரொம்பவே பொருமித் தீர்த்துடுச்சு ரஜ்ஜூ:-))))
சுண்டல், அடுத்த பதிவில்:-)
அன்புள்ள அய்யா திரு.துளசி கோபால் அவர்களுக்கு,
வணக்கம். குட்டி... பூனை ...அழகோ அழகு...வண்ணப்படங்கள் உள்ளம் கொள்ளை கொண்டன. நன்று.
எனது ‘வலைப்பூ’ பக்கம் வந்து படித்துப் பார்த்து கருத்திடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
நன்றி.
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
manavaijamestamilpandit.blogspot.in
வாங்க மணவை ஜேம்ஸ்.
முதல்வருகைக்கு நன்றி.
அழகை ரசித்தமைக்கு நன்றி.
அந்த அய்யாவை 'அம்மா'ன்னு மாத்தினால் இன்னும் நன்றாக இருக்கும்:-)
Post a Comment