Friday, September 05, 2014

நல்ல மேய்ப்பரும், நாயும்! (மினித்தொடர்: பகுதி 4)


சர்ச் ஆஃப் த  குட்ஷெப்பர்ட்  கம்பீரமா நிக்குது.   சின்னதுதான். நெருக்கியடிச்சு  உக்கார்ந்தால்  அதிகபட்சம் அம்பது பேர் அமரும் விதமா  அஞ்சு வரிசைய ரெட்டை பெஞ்சுகள். ஆல்டர் என்ற கருவறையில்  மரத்தால் ஆன ஒரு சிலுவை.  சிலுவைக்குப்பின்னே  அகலமான கண்ணாடி  ஜன்னல். அதன் வழியே தெரியும்  நீரும், மலையும் , வானும். எல்லாமே நீல வண்ணம்!  ஏற்றிவைக்கும் மெழுகுத்திரியும், நம்மைச் சுற்றி இருக்கும்  காற்றும் சேர்த்தால் பஞ்சபூத ஸ்தலம் என்றும் சொல்லிக்கலாம்.

இங்கே வந்து கல்யாணம் செஞ்சுக்க உலகின் பலபாகங்களில் இருந்தும்  மக்கள்ஸ் வர்றாங்க. புகழ் வெகுவாகப் பரவிய காரணத்தால்  வாரத்தில் புதன், சனி ரெண்டு நாட்களிலும்  இங்கே கல்யாணம் செஞ்சு வைக்கிறாங்க.  இதுக்கு  ஆல் லைனில்  'ப்ரிவெட்டிங் பாடங்கள்'  எல்லாம் நடத்தறாங்களாம்!

சர்ச்சுக்குப் பின்னம்பக்கம்  ஏரிக்கரையில் அங்கே கிடக்கும் கற்களை ஒன்னுமேலே ஒன்னா அடுக்கி வச்ச  கலைப் படைப்புகள்!  ஆரம்பிச்சு வச்ச ப்ரகஸ்பதி யாருன்னு தெரியலை!  இது(வும்) நேர்த்திக்கடனோன்னு  முன்னேறும் ஆடுகளைப்பின் தொடரும்  ஆட்டுக்கூட்டம்:-)


பஸ்ஸில் வந்திறங்கிய சுற்றுலா மக்கள்  படங்களை க்ளிக்குவதில் படு மும்முரம்.  ஜப்பானியர்கள் கூட்டம் அதிகமா இருந்துச்சு.   ஒவ்வொருவர் கையிலும் அருமையான கேமெராக்கள்!   இன்னொரு குழு, ஐரோப்பிய நாடுகள் ஒன்றில் இருந்து வந்தவர்களா இருந்தாங்க.


இந்தப் பகுதியை மெக்கன்ஸி கண்ட்ரி என்றுதான் சொல்றாங்க.  நியூஸியின் ஆட்டுச் செல்வங்கள் பல்கிப்பெருகி இருக்கும் பகுதி .  ஒவ்வொரு பண்ணையிலும் குறைஞ்சபட்சம் அம்பதாயிரம் ஆடுகள்.  அவைகளைப் பாதுகாப்பாக் கவனிச்சு  மந்தைகளைச் சிதறாமல் ஓட்டி பார்த்துக்கொள்ளும் பொறுப்பு  ஷீப் டாக் என்ற நாய்த் தொழிலாளர்களுக்குத்தான். பண்ணைகளில்  மூவர் நால்வர் என்று வச்சு வளர்ப்பாங்க.  இந்த நாய்கள் மட்டும் இல்லைன்னா... அம்புட்டுதான். உழைக்கும் வர்க்கம் இவை.

இவைகளின் மதிப்பும் அருமையும் போற்றப்படவேண்டிய குணாம்சங்களும்  சொல்லி மாளாது.   இவைகளின் சேவையைப் பாராட்டும் வகையில் ஏரிக்கரையில்  ஒரு ஷீப் டாக் சிலை வச்சுருக்காங்க. லண்டன் நகரில் இருந்து  வந்த சிலை.வெண்கல வார்ப்பு.  பார்க்கும்போதே அதன் கம்பீரம்  புரியும்!இப்பத்துத் தலைமுறை இளசுகளுக்கு இதன் மகத்துவம் தெரிஞ்சுக்குமளவுக்கு ,அறிவு குறைச்சல் என்று எனக்குத் தோணுச்சு. காரணம் ?  நாய் நிற்கும்  பாறை மேடையில்  இதுகளும் ஏறிப்போறதும்,  நாய் சவாரி செய்வதும், அதையே நண்பர்களை விட்டுப் படம் எடுத்துக்குவதுமா  ரகளை பண்ணிக்கிட்டு  இருந்தாங்க:(

இந்தப் பகுதியில் நாயும் சர்ச்சும்தான் முக்கியம்.  அரை மணி நேரம் போதும் இவைகளை அனுபவிக்க.  மணி நாலாகப்போகுது.அறைக்குத் திரும்பினோம்.  சூடா ஒரு காஃபி குடிக்கலாம்.  நமக்கு எங்கே போனாலும் அடுப்புகள் வேறே தவிர தொழில் ஒன்னுதான்.   ஆச்சு.  கண்முன் தெரியும் ஏரிக்கு இன்னொரு நடை  போகலாம். ஏதோ ஒரு  புதரில்  ஆரஞ்சு, மஞ்சள் நிறப்பழங்கள்  ஏராளம்.  பறவைகள் சட்டையே செய்யாமல் இருப்பதால்.... இது 'தின்னத் தகுந்தவை அல்ல'ன்னு புரிஞ்சது.
தண்ணீருக்குப்பக்கமா உக்கார்ந்து தியானம் செய்யலாம்.  ச்சும்மா  ஒன்னும் பேசாம  அமைதியா  இருத்தல், இப்போதைய தியானம்.  ச்சும்மா இருப்பதே சுகம்! குட்டிக்குட்டி  அலைகள் (!) வந்து கரை தொடும் ஒலியை ரசிக்கும்போதே.... வாத்துக்கூட்டங்கள்  நம்மைத்தேடி வந்து  ஹலோ சொல்லிட்டுப்போனது. நிச்சிந்தையான வாழ்க்கையை அனுபவிக்கும்  மகிழ்ச்சி அவற்றின் முகத்தில் இருந்தாப்லெ எனக்குத் தோணுச்சு.
திடீர்னு கூட்டமாப் பறப்பதும், மீண்டும் கூட்டமா வந்து நமக்கு முன்னால் தண்ணீரில் லேண்ட் ஆவதுமா கொஞ்சநேரம் வித்தை காமிச்சதுகள்:-)

எட்டுமணிவரை சூரிய வெளிச்சம் இருந்தது. மாலையும் இரவும் சந்திக்கும் வேளையில்  ஏரித்தண்ணீர்  நீலமடிச்சுக்கிடக்கு!  

அப்புறமாக் கிளம்பி கிராமத்துக்கு(!)  ராச்சாப்பாடு தேடிப் போனோம்.  நமக்கேத்தமாதிரி ஒன்னும்கிடைக்கலையேன்னு,  ஒரு பீட்ஸா  கடைக்குள் நுழைஞ்சோம்.  Specialist in Gourmet Pizza .  மூணு பேருக்கு வேணுமேன்னு  பெரிய அளவு ஒன்னு  ஆர்டர் செஞ்சு , சுட்டு முடிச்சதும்  வாங்கிக்கிட்டு அறைக்குத் திரும்பினோம்.

பெரிய சைஸ் என்றாலும்  தேசலா, நம்ம  அடைத்தோசை கனத்தில் தான் இருக்கு.  இதுக்குப்போய் முப்பது டாலர் என்பது ரொம்பவே அநியாயம்:(  டூரிஸ்டுகளைக் கொள்ளையடிப்பதில்  இது  முதலில் நிக்குது.  சாப்பிட்டு முடிச்ச  ஒன்னரை மணி நேரத்திலேயே  பசி வந்து  குடைய ஆரம்பிச்சது. கால் வயிறு பீட்ஸா,  அதுக்குப் பத்தலை:(   நல்லவேளையா நம்ம ஈஸ்ட்டர் பன், மஃப்பின் எல்லாம் துணைக்கு  இருந்ததால் தப்பிச்சோம்.

உறக்கம்வரும்வரை வெராந்தாவில் இருந்து  அமைதியை ரசிச்சுக்கிட்டு இருந்தோம் நானும் கோபாலும். மகள்  டிவியிலும், ஸ்மார்ட் ஃபோனிலும் பிஸி.

பொழுது விடிஞ்சு பார்த்தால்  ஏரியில் மாற்றம் ஒன்னும் இல்லை. நேத்துப் பார்த்தாற்போலவே!

ஒரு காஃபி போட்டுக் குடிச்சுட்டு, சட்னு நாங்கள்  குளிச்சு ரெடியாகி  மகளை எழுப்பிட்டு  வாக் போனோம்.  நாம் திரும்பி வருவதற்குள் அவள் ரெடியாகட்டும்.  மணி எட்டுதான். இன்னைக்கும் சூரியனைக் கண்ணுலே காணோம்.  மேகமூட்டம்தான்.  நல்லவேளையா மழை இல்லை.   நடக்கும்போது   ரெண்டு மூணு பேரை வழியில் பார்த்ததோடு சரி. ஞாயிறு என்பதால் யாரும்  சோம்பலை விட மெனெக்கெடலை போல.


காலை நேரமே ஒரு அழகாத்தான் இருக்கு.  அங்கே இருந்த ட்ராக்டரை ஓட்டிப் பார்த்தேன்.  களைப்பே தெரியலை:-)

ஒன்பதரைக்கு  அறைக்குத் திரும்பினோம்.  மகள்  ரெடி.  தீனிகளால் ஆன  ப்ரேக்  ஃபாஸ்ட்.  சாமான்களை வண்டியில் கொண்டுவந்து போட்டதும்  கிளம்பிட்டோம்.  பத்தேகால் ஆகி இருந்துச்சு.   பத்தரைக்கு  செக்கவுட் டைம்.

தொடரும்............:-)


பொழுது விடிஞ்சால்  ஓணம் பண்டிகை.  நண்பர்கள் அனைவருக்கும்  இனிய ஓணம் ஆஸம்சகள் !  நம்ம கேரளா க்ளப்பில் அடுத்தவாரம்தான்  கொண்டாடுகின்றோம்.


17 comments:

said...

அழகான பயணம்.

said...

கடவுள் என்னும் முதலாளி
கண்டெடுத்த தொழிலாளி விவசாயி விவசாயின்னு பாடுனீங்களா டீச்சர்? :)

சும்மா இருக்குறது சுகம் மட்டுமல்ல. தவமும் தான். சும்மா இரு சொல்லறன்னுதான் அருணகிரிக்கு முருகன் செஞ்ச உபதேசமே.

ஏரி அழகு. அதிலும் நீலம் படர்ந்த புகைப்படங்கள் மிகமிக அழகு.

முப்பது டாலருக்குப் பிட்சா வாங்கியும் பத்தலைன்னா அது எவ்ளோ சிறுசா இருந்திருக்கனும். அடடா!

said...

படங்கள் எல்லாம் அழகு துளசி அக்கா !
நீங்க சொன்ன அந்த வெண்கல சிலை மாதிரி ஒரு குட்டி மாடல் இங்கே நேற்று பார்த்தேன் ..விலை ! 80 பவுண்ட்
பூண்டின் ஒரு பல்லு அளவுதான் அப்போ அந்த ஷீப் டாக் மதிப்பு நிறைய இருக்கும் !.இந்த கோயில் சினிமா படங்களில் (ஹிந்தி )பார்த்த நினைவு வருது ..நான் இப்பெல்லாம் வெளில ட்ராவல்னா ரெண்டு பாக்கட் ரஸ்க் வாங்கி வச்சிப்பேன் :)
சும்மாவும் சாப்பிடலாம் இல்லை கெட்சப் தொட்டும் சாப்பிடலாம் ...
அப்புறம் ஒரு பக்கத்தில் சக்கரம் டயர் இல்லாம கூட நீங்க ஒட்டியிருக்கீங்க அக்கா !!உண்மையில் நீங்க சகலகலா வல்லி :) ஹா ஹா :) எல்லா படத்திலும் எனக்கு ரொம்ப பிடிச்சது நீங்க வண்டியோட்டுற படம்தான்

said...

பீட்சா பத்து டாலருக்குமேல கிடையாது. அதில் எனக்கு ஒரே ஒரு பீஸ் போதும். உங்க ஊர்ல கொள்ளைமா. படங்கள் ஜோர். பத்மநாபனை நினைச்சுப் படுத்துக் கொண்டீர்களோ. ட்ராக்டர் ஓட்டல் ஜோர்.காலவலி இல்லாம ஏறினீங்களா. சர்ச் ரொம்ப அழகு.அமைதியா இருக்கு.

said...

ஒவ்வொரு படமும் அழகு கொஞ்சுது . அருமையான இடம் துளசி . இந்த மாதிரி இடங்களில் சும்மா இருப்பது சுகமே . பகிர்ந்தமைக்கு நன்றி .

said...

இயற்கை எழில் கொஞ்சும் இடம்..... படங்கள் மூலம் பார்க்கும்போதே பரவசமாக இருக்கிறதே! நேரில் பார்த்த உங்களுக்கு எப்படி இருந்திருக்கும் என யோசிக்கிறேன்......

பயணம் செல்லும் போது உணவுப் பிரச்சனை தான் தலையாய ஒன்று பலருக்கும்.... :)

said...

புகைப்படங்களும் பதிவும் அருமை!!

said...

அன்புள்ள துளசி,

உங்களுக்கு ஓர் விருது பரிந்துரைத்திருக்கிறேன். உங்களுக்கு இதெல்லாம் தேவையே இல்லை. எனக்காக தயவு செய்து, வந்து பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகிறேன். இணைப்பு இதோ:

http://wp.me/p244Wx-HR

நன்றி,
அன்புடன்,
ரஞ்சனி

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

ரசனைக்கு நன்றிகள்.

said...

வாங்க ஜிரா.

இயற்கை அழகில்தானே இறைவன் இருக்கிறான்,இல்லையோ????

பீட்ஸா பார்க்கப்பெருசுன்னாலும் ஒரே தேசல். ரெண்டே வாய்க்குத்தான் வரும்:9

said...

வாங்க ஏஞ்சலீன்.

டயரை கழட்டி காத்தடிக்க வச்சுருந்தேன்:-))))

முந்தி நிறைய இந்தியன் சினிமா ஷூட்டிங் நியூஸியில் நடக்கும். யார் வந்தாலும் ஒரே லொகேஷந்தான். இந்த ஏரி, க்வீன்ஸ்டவுன், எங்கூர் ஷாப்பிங் சென்டர்ஸ்.

இன்னும் நல்லதெல்லாம் இருந்தாலும் கண்ணில் படவே படாது அவுங்களுக்கு!

இன்னிக்கு போட்ட இடுகையில் தீனி சமாச்சாரம் ஒன்னும் சொல்லியிருக்கேன்ப்பா.

ரஸ்க் & டொமாட்டோ சாஸ் காம்பினேஷன் இதுவரை தின்னு பார்க்கலையே. செஞ்சுருவோம்.

யூரோப்பில் குட்டிமாடல்கள் விலை எக்கச்சக்கம்தான்ப்பா. நம்ம வீட்டுலே ஒரு Mannequin Piss ப்ருசெல்ஸ் போனபோது வாங்குனதுகூட விலை அதிகம்தான்ப்பா.

said...

வாங்க வல்லி.

இங்கே நம்மூரில் ஆறு டாலருக்கு அருமையான பீட்ஸா கிடைக்குது. ரெண்டு பேர் தாராளமாத் தின்னலாம்.

அமைதியே ஒரு பேரழகா இருக்குப்பா அந்த ஏரிக்கரையில்!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

பிரச்சனை இங்கே உணவுன்னால்.... இந்தியாவில் வேறொரு சமாச்சாரத்துக்கு:(

என்னன்னு சொல்ல?

உள்ளூர் பயணமுன்னா உணவை சமாளிச்சுக்கலாம். காரில் எல்லாத்தையும் தூக்கிப்போட்டால் ஆச்சு:-)

said...

வாங்க மனோ சாமிநாதன்.

ரசிப்புக்கு நன்றீஸ்.

said...

வாங்க சசி கலா.

அழகும் அமைதியும் சேர்ந்து ஏகாந்தமா இருக்க ஆசைதான்.

ஆனாலும் ரெண்டு நாளைக்குமேல் தாங்காது கேட்டோ:-))))

said...

வாங்க ரஞ்ஜனி.

விரு(ந்)து வழங்கி, தங்கள் மனதில் இடம் கொடுத்தமைக்கு நன்றீஸ்ப்பா.

said...

நீலஏரியும் அமைதியும் அழகு.

இயற்கையை ரசித்துக்கொண்டே இருக்கலாம்.