Wednesday, September 24, 2014

பத்து முடிந்து பதினொன்று தொடங்குகிறது.



அன்பு நட்புகளுக்கு, 

துளசி டீச்சர் எழுதிக்கொள்வது.  

நீங்கள் அனைவரும் நலம்தானே?  

உங்கள் அபிமான(? !!) துளசிதளம் தன்னுடைய பத்தாண்டு பயணத்தை முடித்து பதினொன்றாம் ஆண்டில் காலெடுத்து வைத்துள்ளது.  நீங்கள்  இதுவரை அளித்த அன்பும் ஆதரவும் இனி வரும் ஆண்டுகளிலும்  முன்பு போலவே தொடர வேண்டும் என்று எம் பெருமாளை வேண்டுகின்றேன்.

இப்படிக்கு ,
உங்கள் டீச்சர்,
துளசி.

கடிதம் எழுதிக் கனகாலமாச்சேன்னு எழுதிப் பார்த்தேன்.  சரியா வரலை. அதுவும்   எழுத்துக்குன்னு ஒரு ஸ்டைல் இருக்கு பாருங்க  அந்த மொழி இப்பெல்லாம்  உண்மைக்குமே வரமாட்டேங்குது:(  பத்து வருசம் 'பேசிப்பேசி' உங்களையெல்லாம் படுத்துனதுக்கு  இப்படி ஆகும் போல:-))

இன்றைக்கு நம்ம கோபாலின் பிறந்தநாளும் கூட. அதான் துளசி(தளத்தை)யும்  கோபாலையும் பிரிக்கமுடியாமல்  வச்சுட்டேனே:-)

நம்ம வல்லியம்மா, அன்பின் மிகுதியால் முகநூலில் நம்ம பொறந்தநாளை கடந்த ரெண்டு நாளாக் கொண்டாடிக்கிட்டு இருக்காங்க. இந்த அன்புக்கு நான் என்ன கைமாறு செய்யமுடியும், சொல்லுங்க?

இந்த நட்பும் அன்பும் எல்லாம் இணையமும், தமிழும், தமிழ்மணமும் கொடுத்த கொடையல்லவோ!!!

தன்னுடைய பிறந்தநாளுக்கு  'அங்கே' வாழ்த்திய அனைவருக்கும் கோபால் தன் இனிய நன்றியையும் அன்பையும்  என் மூலம் தெரிவித்துக் கொள்கின்றாராம்.

வாசக அன்பர்கள்  அனைவருக்கும்  என் இதயம் கனிந்த நன்றிகள்.






41 comments:

said...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் துளசிதளத்துக்கும் கோபால் சாருக்கும். இது என்னது? பிறந்தநாளும் அதுவுமா, கோபால் சார் ஜடாமுடி தரிசனம்?

பத்தாண்டுகளாக துளியும் ஆர்வம் குன்றாமல் சுவாரசியமாக வெவ்வேறு தலைப்புகளில் பல்சுவை அனுபவங்களையும் தொகுத்தளிக்கும் உங்கள் எழுத்துப்பணி இனியும் ஆர்வம் குன்றாது இனிதே தொடரட்டும் டீச்சர். உடல்நலத்திலும் கவனமெடுத்துக் கொள்ளுங்கள்.

வாசகர்களோடு கைகோர்த்து நடக்கும் உங்களுடைய எழுத்துப்பாணியை சில முறை முயற்சி செய்திருக்கிறேன். பலன் பூஜ்யம்தான். எல்லோருக்கும் எளிதில் கைவருவதில்லை இதுபோன்ற சுவாரசிய எழுத்துநடை. எனவே இனிதே தொடர இனிய வாழ்த்துகள்.

said...

Great! மீண்டும் இங்கும் இனிய நல்வாழ்த்துகள்:)!

said...

அவருக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா...

said...

மனம் நிறைந்த வாழ்த்துகள்..

said...

தன்னுடைய பத்தாண்டு பயணத்தை முடித்து பதினொன்றாம் ஆண்டில் காலெடுத்து வைத்துள்ள துளசிதளத்திற்கும் அதனை போஷிக்கும் திரு கோபால் அவர்களுக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.!

said...

நல்வாழ்த்துக்கள்

said...

நல்வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்

said...

இருவருக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...!

சாருக்கு எனது வணக்கங்கள்..!

said...

பத்து ஆண்டுகள் முடிந்து பதினோராவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் “துளசி தளம்” வலைத் தளத்திற்கும் அதனைத் திறம்பட நடத்திச் செல்லும் துளசி டீச்சருக்கும் வாழ்த்துக்கள். உங்கள் வலைத் தளத்தை நான் தொடர்ந்து பத்து ஆண்டுகள் படித்தேன் என்று சொல்ல முடியாவிட்டாலும், பல சுவாரஸ்யமான பழைய பதிவுகளுக்கு சென்று படித்து இருக்கிறேன். அதே போல உங்கள் பதிவுகளை நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாசிப்பவன். எனது ஒரே குறை, தொடர்ந்து சிலசமயம் கருத்துரைகள் தர முடியாமல் போவதுதான். உங்களிடமிருந்து பயணக் கட்டுரைகளை வண்ணப் படங்களுடன் எப்படி சுவாரஸ்யமாக இயல்பாக விவரிப்பது என்பதனைத் தெரிந்து கொண்டேன்.


இன்று பிறந்தநாள் கொண்டாடும் கோபால் சாருக்கு இனிய நல் வாழ்த்துக்கள்! சார் மீண்டும் ஒரு குழந்தையாக மாறி சுட்டித்தனம் செய்கிறார்.

பிற்ந்தநாள் – இன்று
பிறந்தநாள் – நாம்
பிள்ளைகள் போல
தொல்லைகள் எல்லாம்
மறந்தநாள்
HAPPY BIRTHDAY TO YOU!


said...

அருமை; வணங்குகிறேன்;

said...

அன்பு கோபால் அண்ணாவுக்கும், துளசிதளத்துக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

அடடா..அந்தக் கூந்தல்தான்.. செம செம ;)

said...

இங்கேயும் சொல்லி கொள்கிறேன் வாழ்த்துக்களை.
கோபால் சாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

உங்கள் தளத்திற்கும் வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்!
வாழ்க நலமுடன்!

said...

வாழ்த்துக்கள்மா கோபால் சாருக்கும் சொல்லிடுங்க கங்காரு வணக்கம்.

நாங்க பின்னால வர்ரோம் நீங்க முன்னால போங்க :-)

said...

கோபால் கண்ணனா மாறின அதிசயம் தான் என்ன.அன்பு துளசி பத்தாண்டுகள் மாபெரும் சுவையான பயணம் எங்களையும் அழைத்துக் கொண்டு சிரிக்கவைத்து,யோசிக்க வைத்து ,சிலசமயம் உருகவைத்து,பெருமாள்களையெல்லாம் காணவைத்து இப்படி ஒரு வைத்தமாநிதியாக உங்கள் தளம் இருக்குப்பா.எல்லா விதத்திலும் நன்றி சொல்லணும். நன்றிமா. வாத்துகளும் வாழ்த்துகளும்.

said...

வாங்க கீத மஞ்சரி.

அருமையான பின்னூட்டம்! இத்தனை அன்புக்கு என்ன தவம் செய்தேன்!!!!

மனம் நிறைந்த நன்றிகள்.

துளசியானந்தமயி தொடங்கப்போகும் ஆசிரமத்துக்கு, சரியான அலங்காரத்தைத் தேடும்முயற்சியில் இருக்கார் கோபால். இந்த ஜடாமுடி அநேகமா ஓக்கே ஆகலாம்:-)

said...

வாங்க ராமலக்ஷ்மி.


வாழ்த்துகளுக்கு, மனம் நிறைந்த நன்றி.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

வாழ்த்துகளுக்கு, மனம் நிறைந்த நன்றி.

said...

வாங்க கீதா,

வாழ்த்துகளுக்கு, மனம் நிறைந்த நன்றி.

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

வாழ்த்துகளுக்கு, எங்கள் மனம் நிறைந்த நன்றி.

said...

வாங்க ராஜேஷ் சுப்பு.

வாழ்த்துகளுக்கு, மனம் நிறைந்த நன்றி.

said...

வாங்க ராஜு தினகரன்.

வாழ்த்துகளுக்கு, மனம் நிறைந்த நன்றி.

said...

வாங்க ஆனந்த்.

நன்றி. தன் நன்றியைத் தெரிவிக்கச் சொன்னார் நம்ம கோபால்.

said...

வாங்க தமிழ் இளங்கோ.

ரசனையுடன் இருக்கும் இனிய பின்னூட்டத்துக்கு எங்கள் மனம் நிறைந்த நன்றி.

இன்னும் நன்றாக எழுதவேண்டும் என்ற உணர்வு மிகுந்துள்ளது.

மீண்டும் நன்றிகள்.

said...

வாங்க விஸ்வநாத்.

அன்பும் ஆசிகளும் !

said...

வாங்க ரிஷான்.

வாழ்த்துகளுக்கு நன்றி.

கூந்தல் அட்டகாசமாப் பொருந்துகிறது!

அவரே போடச்சொல்லித் தெரிவு செய்த படம் இது:-)

said...

வாங்க கோமதி அரசு.


இத்தனை அன்பு கிடைக்க நாங்கள் என்ன தவம் செய்தோம்!!!!

மனம் நிறைந்த நன்றிகள்.

said...

வாங்க பிரபா.


முன்னேர் போன வழியில் பின்னேர்!

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றீஸ்.

said...

வாங்க வல்லி.

நன்றி சொல்லக்கூட நாவெழாமல் திக்குமுக்காடிப் போயிருக்கேன்!

யம்மாடி........... வைத்தமாநிதி!!!!!!

என்னமாச் சொல்லிட்டேடா கண்ணா!

said...

துளசிதளத்திற்கும், துளசியின் கோபாலுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
பத்து ஆண்டுகளாக சுவாரஸ்யம் குறையாமல் எத்தனை எத்தனை விஷயங்களை எழுதி வருகிறீர்கள்! உண்மையில் பெரிய சாதனை தான். மேலும் மேலும் சாதிக்க வாழ்த்துக்கள்!

உங்கள் திருமண நாள் என்று தவறாக எழுதிவிட்டேன். மன்னிக்க!

said...

பத்தாண்டு நீடித்து நூறாண்டு வாழ என் பிரார்த்தனைகள் டீச்சர்.

ஆனாலும் அவரை நீங்க எந்தளவு படுத்தியிருந்தா அவர் சாமியார் வேஷம் பொருந்துதான்னு மேக்கப் டெஸ்ட் பாக்கிற அளவு போயிருப்பார்!!!! :-D :-D :-D

said...

வாங்க ரஞ்ஜனி.

வாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த நன்றி.

//உங்கள் திருமண நாள் என்று தவறாக எழுதிவிட்டேன். மன்னிக்க!//

நோ ஒர்ரீஸ்ப்பா. எல்லா நாளும் திருமணநாள் போலதான் எனக்கு:-)))

said...

வாங்க ஹுஸைனம்மா.

என்ன இப்படி சொல்லிப்புட்டீங்க? ரிட்டயர் லைஃபில் உருப்படியா வருமானத்துக்கு ஏற்பாடு செஞ்சுக்கிட்டு இருக்கறாரேன்னு நான் சந்தோஷப்பட்டுக்கில்லே இருக்கேன்!

படுத்தலுக்கெல்லாம் அசரமாட்டார். புளியமரம் ஏறியே வருசம் நாப்பது ஆச்சே:-)

பிரார்த்தனைகளுக்கு நன்றி.

said...

மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள் - கோபால் சாருக்கும், துளசிதளத்திற்கும்......

தொடர்ந்து ஸ்வாரசியமான பல விஷயங்களை அளித்து படிப்பவர்களை உற்சாகப்படுத்தும் உங்களுக்கு ஒரு பூங்கொத்து!

நீங்க பத்திலிருந்து பதினொன்று!
நான் ஐந்திலிருந்து ஆறு!:)

அதான் நேற்றைய பதிவான “ஆறு”

said...

நல்வாழ்த்துக்கள்!

தொடரட்டும் இனிய பயணம்.

said...

பத்தாண்டுகள் நிறைந்து பதினோராம் ஆண்டில் அடிஎடுத்து வைக்கும் துளசிதளம் எனக்கு தந்த அனுபவங்கள் நிறைய நிறைய . பல பதிவுகளை படித்து கண்ணில் நீர் வர சிரித்து இருக்கிறேன் (திருப்பதி அனுபவம் , உங்களின் பள்ளிகால அனுபவங்கள் ) .
கஷ்ட்டங்கள் கண்டு கலங்காமல் எப்படி எதிர்கொள்வது என தெரிந்து கொண்டேன் .
பல பல அனுபவங்கள், பயண விவரங்கள் , கோவில்கள் என்றுஎங்களுக்கு சுவாரசியம் குறையாமல் அளித்த எங்கள் துளசிதளம் பதிவர் துளசி க்கும், அவரின் அன்பு கணவர் கோபால் அவர்களுக்கும் , அவர்களின் அன்பு மகள் மதுமிதாவிற்கும் எங்கள் குடும்பத்தாரின் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் .

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

முதலில் உங்க ஆறுக்கான வாழ்த்துகளைச் சொல்லிக்கறேன். நல்லா இருங்க.

பூங்கொத்துக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

said...

வாங்க மாதேவி.

தொடர்ந்த ஆதரவுக்கு என் மனம் நிறைந்த நன்றி.

said...

வாங்க சசி கலா.

ரசனைக்கு நன்றிகள்.

வாழ்க்கை முழுசும் அனுபவங்களே! அனுபவங்களின் தொகுப்புதான் வாழ்க்கையே!

உங்கள் நட்பு கிடைத்ததில் மகிழ்ச்சி.

வாழ்த்துகளுக்கு என் மனம் நிறைந்த நன்றீஸ்!

said...

நல்வாழ்த்துக்கள் அம்மா.

said...

வாங்க தனிமரம்.

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் டீச்சர். மாயவன் வடமதுரை யமுனைத் துறைத் தூயவன் அருளால் நலமோடும் வளமோடும் வாழ்க வாழ்க என்று வாழ்த்துகிறேன்.

இன்னைக்கு நேத்தாப் படிக்கிறோம் ஒங்க பதிவுகளை. எவ்வளவு எழுதியும் இன்னும் அலுக்காமப் படிக்கிறோமே. அது தொடரட்டும்.