Wednesday, June 04, 2014

கோபாலபுரம் விஸிட்!

பொழுது விடிஞ்சதும் இன்னும் எத்தனைநாள் இங்கே இருக்கப்போறோம்னு மனசு கணக்குப் போட்டது. எண்ணி ஆறே நாட்கள். முதலில் கண்ணாடியைச் சரி செஞ்சுக்கணும். கடைகள் பத்து மணிக்குத்தான் திறப்பாங்க என்று நினைச்சதால், ஸ்ரீ வேணுகோபாலனைத் தரிசனம் செஞ்சுக்கிட்டு வந்துடலாமேன்னு கிளம்பினோம். கிளம்பி ஒரு அஞ்சு நிமிசத்தில், இவர் கடைக்குப் போன் போட்டுப் பார்க்கிறேன்னார். அட! கடை திறந்துருக்காம். சட்னு வண்டியைத் திருப்பச்சொல்லி கடைக்குப்போயிட்டோம். இது நம்ம தி. நகர் ராகவேந்த்ரா மடத்தின் கோவிலுக்கு அடுத்தது.

 கண்ணாடியை வாங்கிப் பார்த்தவர், உள்ளே கொண்டு போய், ரெண்டாம் நிமிசம் திருப்பிக் கொண்டுவந்து கொடுத்தார்! ஃப்ரேமை சரி செஞ்சுட்டாங்க. வில்லாதி வில்லர்கள்! வந்ததுதான் வந்தோம், பக்கத்து மடத்தில் ஒரு நிமிட் கண்ணனைப் பார்த்துட்டு போயிடலாம். வழக்கம்போல் அழகா நிக்கறான், கையில் குழலோடு! நல்லா இருடா. நான் கோபாலைப் பார்க்கப்போறேன்னு சொல்லிட்டு கோபாலபுரம் பறந்தோம்.

 மார்கழி மாசம் காலை ஒன்பதுக்குக் கோவிலை மூடிருவாங்க. அதான் இந்தப் பயணத்தின் ஆரம்பத்தில், வருசக் கடைசி (2013 டிசம்பர் 31 )நாள் போய் மூடுன கோவிலைப் பார்த்துட்டு வந்தோமே:( இன்றைக்கு(ம்) விடக்கூடாதுன்னு தான்...... ஒன்பதடிக்கப் பத்து நிமிசம் கோவிலுக்குள்ளே போயிட்டோம். அதுக்குள்ளே கோபுரவாசல் கதவுகளில் ஒன்னு மூடிக்கிடக்கு.


 சின்னக்கோவில்தான். ஆனால் அழகோ அழகு! கருவறையில் ஸ்ரீ வேணுகோபால ஸ்வாமி, பின்புலத்தில் பசு நின்னுருக்க, குழல் ஊதிக்கிட்டு இருக்கார். உத்துப் பார்த்தேன். கைகள் நாலு!!! சதுர்புஜம். பின் கைகள் சக்கரம், சங்கு ஏந்தி இருக்கின்றன. முன் கைகள் வாசிப்புக்கு. பிரகாரம் முழுசும் சின்னச்சின்னதா சந்நிதிகள். சட்னு கைகளில் எடுத்து விளையாடலாம் போல குட்டியான சிலைகள்.

 பெருமாள் கோவில் என்றாலும், காஞ்சி ஏகாம்பரேஸ்வரர், காமாக்ஷி அம்மன், நந்தி இருக்காங்க. அந்தப் பக்கம் மரத்தடியில் ஒரு புள்ளையார். அவருக்கு அடுத்ததா முருகன், தன் துணைவி &இணைவியுடன்! .

ஆதிசங்கரருக்கும் ஒரு இடம். ராமர் கூட்டம் ஹனுமனோடு ஒரு சந்நிதியில். இன்னொரு வராந்தா போலுள்ள இடத்தில் மஹாவிஷ்ணு, லக்ஷ்மிநரசிம்ஹன், லக்ஷ்மிவராஹமூர்த்தி ன்னு சின்னச் சிலைகளும் அய்யப்பனும்!

 இன்னும் விஷ்ணுதுர்கை, இச்சா சக்தி, ஞான சக்தி, க்ரியா சக்தின்னு முப்பெரும் சக்திகள், தக்ஷிணாமூர்த்தி!!! போதாக்குறைக்கு நவக்ரஹங்கள் வேற!!!!

 அடடா.... எல்லோரும் ஒருசேர வந்துருக்காங்களேன்னு அதிசயம்தான்:-)

 இந்தக் கோவிலால்தான் இந்தப்பகுதிக்கு கோபாலபுரம் என்ற பெயரே வந்துருக்கு. கோவிலுக்கு வயசு 94!!!! 1920 வது வருசம் தான் கோவிலின் ஆரம்பம். கோவிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களும் தனியார் கோவில் கமிட்டி வசம்.

 மார்கழி தவிர, மற்ற மாதங்களில் காலை அஞ்சரை முதல் பத்து, மாலை அஞ்சு முதல் ஒன்பது. மார்கழி மாசத்தில் காலை நாலரை முதல் ஒன்பது. மாலை அஞ்சு முதல் எட்டு. இவைதான் கோவில் திறந்திருக்கும் நேரங்கள். ஆஃபீஸ் டைமில் சாமிக்கு வேற வேலை இருக்கோ! அவரும் ஆஃபீஸ் போயிட்டு டாண்னு அஞ்சு மணிக்கு வந்திருவார். நமக்கும் காலை பத்துமணிக்குப்பின் வெயிலில் அலைய வேணாம்.

 ஒரு ஹிந்துப் பண்டிகை விடாமல் கோவிலில் கொண்டாடறாங்க. அதான் எல்லா சாமிகளும் ஒன்னாவே இருக்கே! மார்கழி உற்சவத்தையும் விடுவதில்லையாம்!

 மனம் நிறைஞ்ச தரிசனம். இன்னிக்கு வேற ஏதோ வேலையாக் கோவிலுள்ளே என்னமோ செஞ்சுக்கிட்டு இருக்காங்க. நமக்கு அடிச்சது ச்சான்ஸ். யாரும் யாரையும் விரட்டலை. நின்னு நிதானமா ஒவ்வொரு சந்நிதியா தரிசனம் ஆச்சு. உள்ளே படம் எடுக்க அனுமதி இல்லை என்றதால் வெளியே வந்து கோபுரத்தைக் க்ளிக்கிட்டு அப்படியே தலையைத் திருப்பினால்......... முன்னால் ஒரு வெள்ளை மாளிகை. அதுதான் திமுக தலைவர்/முன்னாள் முதலமைச்சர் வீடாம். கிளிக்கிட்டு வண்டியில் ஏறி உக்கார்ந்தோம். கையைக் காட்டியபடி பறந்து வந்தார் செக்யூரிட்டி. வீட்டைப் படம் எடுக்கக்கூடாதாம். ஓக்கேன்னேன். ஆசுபத்திரியாகப் போவது இந்த வீடுதானே? 

சின்னதா அழகான மூணுநிலைக் கோபுரம். பெருமாள் கோவில் திருமண் சின்னம் இல்லாமல் சிவன் கோவில் போல 'ஓம்' இருக்கு! ஓம் ஓம் !


மேலே: சுட்டது.


விரும்பியோ விரும்பாமலோ தினம் தினம் கோபுரதரிசனம் கிடைக்குது பாருங்க, அவருக்கு! அதான் பெருமாளின் அனுக்ரஹத்தால் நீண்ட ஆயுள் கிடைச்சுருக்கு. நேத்து பொறந்த நாளாமே! நல்லா இருக்கட்டும். இன்னும் பத்து வருசம் பல்லைக் கடிச்சுக்கிட்டு இருந்தால் ஆயுசு நூறு!

 அங்கிருந்து கிளம்பி, உயிர்த்தோழி வீட்டில் இருக்கும் 'எனக்கு' ஒரு வணக்கம் போட்டுட்டு கபாலியை தரிசிக்கப் போனோம். தோழி ஊரிலில்லை:( தோட்டம், சுத்தமான பராமரிப்பில்!

 மயிலை திருக்குளம் பரவாயில்லைன்னு சுத்தமா இருக்கு. தெப்பத் திருவிழா வருதாம். பெரிய ட்ரம்களைக் கயிறுகளாலும் சவுக்குமரக் கட்டைகளாலும் பிணைத்து தெப்பம் கட்ட ஆரம்பிச்சு இருக்காங்க. இது ஒன்னும் சுலபமான வேலை இல்லையாக்கும். சரியாக் கட்டலைன்னா...சாமிக்குக் கஷ்டம்:(














மணி மதியம் பனிரெண்டேகால்.  கயிலையாம் மயிலைக் கோவிலை மூடிட்டாங்க. பலமுறை வந்துருந்தாலும் ஆனாலும் இந்தக் கதவு இன்றுதான் கண்ணில் பட்டது. அழகா இருக்கே!!!


சரவணபவனில் போய் லஞ்சை முடிச்சுக்கிட்டு நிதானமா கிரி ட்ரேடர்ஸ்க்குப் போனோம். சின்னதா ஒரு பர்ச்சேஸ். சாமி புத்தகங்கள்.

 அறைக்கு வந்து கொஞ்சநேரம் ஓய்வு. இன்னிக்கு மாலை ஒரு விசேஷ நிகழ்ச்சி இருக்கு. வாங்க எல்லோருமாப் போய் அரங்கை நிறைப்போம்:-))))

 தொடரும்...........:-)

18 comments:

said...

அனைத்தும் அழகு அம்மா...

said...

your photos talk half of the story... so nice..

said...

துளசி மேடம்,

மஞ்சத்துண்டு நாத்திகம் பேசுவதெல்லாம் அரசியலுக்காக்கும் , அடிப்படையில் அவங்க குடும்பம் வைணவ குடும்பம் தான் , உள்ளுக்குள்ள பெருமால் பாசம் ஓடியிருக்கும் அதான் கோவில் பக்கத்திலே அப்பவே பிளான் போட்டு வீடு வாங்கியிருப்பார் :-))

நல்ல வேளை ஆட்சியில இருக்கும் போது வீட்டை படம் எடுக்கலை எடுத்திருந்தா, கேமராவ புடுங்கி இருப்பாங்க அவ்வ்.

# மயிலாப்பூர் குளம் கேட் அருகில் சுத்தமாக இருக்கும் சுத்தி வர நடந்துப்போனால் " காலைக்கடன்" கழிவுகள் தான் காலைப்பதம் பார்க்கும் ,இப்ப நிலவரம் மாறிடுச்சா என்னனு தெரியலை அவ்வ்.

மயிலை டேங்க் பஸ் ஸ்டாப் அருகிலேயே ஒரு சூசுக்கடை இருக்கும், அப்போலாம் 5 ரூபாக்கே ஃப்ரூட் மிக்சர்னு ஒரு பழக்கலவை சூசு கிடைக்கும், சென்னையில் பல இடத்தில் ஃப்ரூட் மிக்சர் கிடைச்சாலும் ,மயிலாப்பூர் டேஸ்ட் வராது அவ்வ்.

இப்போ பகுத்தறிவு கொஞ்சம் வளந்து போனதால அந்த மாரி ஃப்ரூட் மிக்சர்லாம் "unhealthy" னு யோசிக்க ஆரம்பிச்சுட்டேன் :-))

said...

நல்ல விசிட். தைரியம் தான். இவ்வளவு வருஷமாக மைலாப்பூரில் இருந்தும் அங்கே போனதில்லை. துளசியம்மாவுக்கு வந்தனம்.துளசியை வணங்கிடும் துளசிக்கு நன்றிகள். செங்கல்களும் அம்மியும் கூட அப்படியே இருக்கு. மணநாள் நல்வாழ்த்துகளசி. நீங்களும் கோபாலும் இணைபிரியாமல் ஆரோக்கியத்துடன் நன்றாக இருக்கணும்.

said...

வில்லாதி வில்லர்கள்? எப்படி சென்னை, பாத்தீங்களா?

said...

நாங்கள் ஒருமுறை சென்றபோது கோவில் பூட்டி விட்டார்கள். அதற்கு ஏதோ காரணம் கூட சொன்னார்கள். சிவன் கோவில், பெருமாள் கோவில், மதிய உணவு என்று ஏதோ... 'பாஸ்' தான் கேட்டுக் கொண்டிருந்தார்.

said...

கோபாலபுரத்துக் கோமானைத் தரிசிச்சிருக்கீங்க. புண்ணியம் ஆயிரம் லட்சமாய்ப் பெருகி கோடிக்கோடியாய்ச் சேரட்டும்.

ஆண்டவன் அருள் எல்லாருக்கும் பொது. கும்பிட்டா என்ன.. கும்பிடாட்டி என்ன. ஏதோ புண்ணியம். நல்லாருக்காரு. நல்லா இருக்கட்டும்.

மயிலைக் குளம் பக்கத்துல போய்ப் பாத்ததே இல்ல. பலமுறை அந்தப் பக்கமா போயிருக்கேன். ஆனா நின்னு கொளம் எப்படியிருக்கும்னு பாத்ததில்லை. வெளியூர் போனாத்தான் எதையும் விசித்திரமா ரசிச்சுப் பாப்போம் போல. :)

said...

கோபாலபுரம் கோவில்.... போய் பாக்கணு ம் .

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

ரசனைக்கு நன்றிகள்.

said...

வாங்க காற்றில் எந்தன் கீதம்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

மீண்டும் வருக!

said...

வானக வவ்வால்.

நல்லவேளை, கோவில் அவரைவிட வயசில் மூத்தது! அதுவும் அவர் அங்கே வருமுன் ரொம்ப நல்லா உறுதிப்பட்டு இருக்கு. பிழைச்சதுன்னு வச்சுக்குங்க:-)

மயிலைக் குளம் சுற்றி நிறைய பொட்டிக் கடைகள் வந்துருக்கே.... அப்பவுமா யக்கியா இருக்கு!!

பயணத்தில் எதையும் தைரியமா சாப்பிடமாட்டேன். கண்ணால்மட்டும் க்ளிக் க்ளிக் க்ளிக்:-)

ஸோ நோ ஜூஸ்.

said...

வாங்க வல்லி.

செங்கலும் அம்மியும் பி ஆர். வாங்கி பல வருசங்களாச்சேப்பா:-)

மணநாள் சிறப்புப் பதிவுக்கும் இனிய வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றிப்பா.

முடிஞ்சால் ஒரு முறை ஸ்ரீ வேணுகோபாலனைத் தரிச்னம் செய்யுங்க. அழகு அழகு!

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

உண்மையில் அன்றைக்கு அசந்துதான் போயிட்டேன்! ரெண்டே நிமிசமுன்னா ரெண்டே நிமிசம்தான்!

said...

வாங்க ஸ்ரீராம்.

கோவில் நேரம் மற்ற கோவில்களைப் போல் இல்லை என்பதால் காலையில் சுருக்கப் போகணும்.

said...

வாங்க ஜிரா.

உள்ளூர் சமாச்சாரமுன்னால்... அப்புறம் அப்புறம் என்றே தள்ளிப்போட்டுடறோம்,இல்லை:(

வேண்டுவது வேண்டாமை இலன், அவன்.

அருள் பொதுவா பொழிஞ்சால் தேவலை. ஆனால்.... பலசமயம் ஆறாகப் பெருகுது பாருங்க. அவரவர் கால்வாய் வெட்டிக்கறாங்க:-)

said...

வாங்க சசி கலா.

நேரம் கிடைக்குபோது ஒருமுறை போய் வாங்க. பார்க்கவேண்டிய கோவில்தான் அது!

கோவில் நேரம் முக்கியம், கேட்டோ:-)

said...

கோபாலபுரம் - அவர் வீட்டின் அருகிலேயே ஒரு நண்பர் குடியிருந்தார். அப்போது போனதுண்டு பல இன்னல்களுடன்! :)

கோவில் சென்றதில்லை.

படங்களும் தகவல்களும் அருமை.

said...

தர்சனம் பெற்றோம்.