Thursday, June 05, 2014

40


தமிழ் சினிமா க்ளைமாக்ஸ் சண்டை அண்ட் கொடுமைக் காட்சிகளுக்காக எப்படி ரூம் போட்டு யோசிப்பாங்களோ.... எனக்குத் தெரியாது. ஆனால்  எனக்கென்னவோ சின்னச் சின்னச் சின்ன கொடுமைகள் செய்வது கைவந்த கலையாக இருக்கு. எல்லாம் தானாய் வருதே!

ஜஸ்ட் கொஞ்சம் திரும்பிப் பார்த்தால்  ஹாஹா எத்தனை வகை!!!!   ஆனாலும்  ஆள் அசருவாரா? ஊஹூம்.....  ஆம்பளை அழக்கூடாதுன்னு சொல்லி வளர்க்கும் சமுதாயம் அல்லவா நம்மது. ஆனால் அதையும் மீறி  ஓசைப்படாமல் கண்ணீர் விடும்போது எனக்கு(ம்) கொஞ்சம் கஷ்டமாத்தான் போயிருது.  எத்தனையோ வகைவகையான விவசாயக்  கண்டு பிடிப்புகள் இருக்குன்னாலும்,  நறுக்கும்போது கண்ணீர் வராத வெங்காயத்தைக் கண்டுபிடிக்காதவர்களை கொஞ்சம் சத்தமாவே வையத்தோணுது!


அதுக்காக ரொம்பவே கல் நெஞ்சுக்காரின்னு  நினைச்சுடாதீங்க. இந்த வெங்காய சமாச்சாரமெல்லாம்  இப்போ ஒரு  நாலு மாசமாத்தான்.  நாப்பது வருசக் கஷ்டத்தை நினைச்சு யாருக்கும் தெரியாமல் அழ நானே ஒரு வாய்ப்பு கொடுத்துருக்கேன் பாருங்க!!!!


ஆமாம்.... ரூபி என்றால்  மாணிக்கம் என்றும் கெம்புக் கல் என்றும் தமிழில் சொல்றாங்களாமே!  மாணிக்கம் சிகப்பாவா இருக்கும்?  கூகுளார் இப்படி கலர் காமிக்கிறார். குழப்பம் தீர்ந்தால்தான்  ஒட்டியாணத்துக்கு ஆர்டர் தரமுடியும்:-)


இப்ப எதுக்கு ரூபி?  40 வருசமாச்சுல்லே, கண்ணாலங்கட்டி, அதுக்குத்தான். வெள்ளைக்காரன்  ரூபி ரூபின்னு சொல்லிக்கிட்டே இருக்கானே!


இனி உள்ள காலத்தையும்  இதே மகிழ்வுடன், அதிகமாக் கஷ்டமில்லாமல் கழிக்க  எம் பெருமாள்  அருள் செய்வார் என்ற நம்பிக்கையுடன், காதல் கணவருக்கு  நன்றி சொல்லிக்கறேன்.

இன்றைய ஸ்பெஷல்?

எங்கூர் ஸ்வாமிநாராயணன் கோவிலுக்குப் போய்  சாமிக்கு நன்றி சொல்லிட்டு மஹாராஜா போகணும், மகளுடன்.

அனைவரின் அன்பையும் வேண்டி,

துளசி.28 comments:

said...

He.. he..

Many more happy returns of the day :-)

said...

இனிய திருமண நாள் வாழ்த்துகள் மேடம்..ஸார் கிட்டயும் சொல்லிடுங்க!

said...

இனிய திருமண நல்வாழ்த்துக்கள் அம்மா...

said...

பல்லாண்டுகள் தொடர வாழ்த்துகள்

said...

இருவருக்கும் இனிய மணநாள் வாழ்த்துகள்!

said...

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண் தோள் மணிவண்ணன் சேவடி செவ்வித் திருக்காப்பிட்டு நீங்கள் எல்லா நலத்தோடும் வளத்தோடும் வாழ்க. வாழ்க.

வாழ்த்த வயசு தேவைன்னு சிலர் சொல்வாங்க. மனசு இருந்தாப் போதுங்குறது என் கருத்து. அதான் வாழ்த்தியாச்சு. :)

said...

எங்கூர் ஸ்வாமிநாராயணன் கோவிலுக்குப் போய் சாமிக்கு நன்றி சொல்லிட்டு மஹாராஜா போகணும், மகளுடன்.//

மஹாராஜாவா?

said...

வாழ்த்துகள், வாழ்த்துகள், இன்று போல் என்றும் வாழ வாழ்த்துகள்.

said...

அன்பின் டீச்சருக்கும், கோபால் அண்ணாவுக்கும்,

இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் !

வெங்காயம் வெட்டும்போது தலைக்கு ஹெல்மட் போட்டுக்க சொல்லுங்க டீச்சர். அல்லது வாயில பபள்கம் மெல்லலாம். கண்ணீரே வராது. :)

ரூபி என்பது சிவப்பு நிற மாணிக்கக் கல். விலையுயர்ந்தது. சிவப்பென்றால் இரத்தச் சிவப்பு. இம் மாணிக்க வகைகளில் நீலம், சிவப்பு, பிங்க், மஞ்சள், பச்சை என நிறங்களுண்டு. நீலமும், சிவப்பும் விலையுயர்ந்தவை. இலங்கையில் நதிகளில் காணப்படுகின்றன. அக் கற்களையெடுத்து பட்டை தீட்டி நகைகளில் பதிப்பார்கள். அழகாக இருக்கும்.

எப்பொழுது இருவரும் இலங்கை வருகிறீர்கள்?

said...

நாற்பதா? வாழ்த்துக்கள் மேடம்....

said...

HAPPY ANNIVERSARY AKKAA AND GOPAL ANNAA .


ரூபி கலர் ..டார்க் சிவப்பும் டார்க் பிங்கும் சேர்ந்த மாதிரி இருக்கும்..

No confusion :) ..திக் ரோஸ் CONCENTRATED எசன்ஸ் கலர் மாதிரின்னு நினைக்கிறேன் ..உடனே வாங்கிடுங்க ஒட்டியாணம் :)

said...

சிவப்பு மாணிக்கம்னு வச்சுக்குங்க.
மனமார்ந்த வாழ்த்துக்கள்.

said...

வாங்க சாந்தி.

வாழ்த்துகளுக்கு நன்றி.

உங்களுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை இங்கே(யும்) சொல்லிக்கறேன்.

said...

வாங்க ஸ்ரீராம்.

வாழ்த்துகளுக்கு நன்றி.

ஸார் கிட்டே சொல்லவேண்டியதே இல்லை. என் பதிவுகளைப் படிக்காவிட்டாலும், பின்னூட்டங்களை எல்லாம் படிச்சுருவார் இந்த பின்னூட்டப் ப்ரேமி :-)))

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க தருமி.

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

said...

வாங்க ராமலக்ஷ்மி.வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிப்பா!

said...

வாங்க ஜிரா.

ரொம்பச்சரி. வயசெல்லாம் எதுக்கு? மனசுதான் வேணும் வாழ்த்த என்பதில் எனக்கு முழு உடன்பாடு உண்டு.

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி

said...

வாங்க டி பி ஆர் ஜோ!

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

அந்த மஹாராஜா..... இங்கே நம்மூரில் இருக்கும் இண்டியன் ரெஸ்ட்டாரண்டில் ஒன்னு.

இதுவரை போகலையேன்னு அங்கே போக முடிவு செஞ்சோம்.

இந்திய மாணவர்கள் அங்கே வேலை செய்யறாங்க.

நமக்கு சாப்பாடு விளம்பியவர், நாங்கள் கிளம்புமுன், எனக்கும் தமிழ் தெரியுமுன்னு சொல்லி என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்:-)

ஆனால் அவர் ஆந்திர... இல்லை இல்லை சீமாந்திராவாடு.

அப்ப தமிழ்?

நம்ம சென்னை எஸ் ஆர் எம்மில் அஞ்சு வருசம் எஞ்சிநீயரிங் படிச்சுக் குப்பை கொட்டி இருக்கார்:-)

என்னைவிட நல்லாவே தமிழ் பேசினார் என்பது கூடுதல் மகிழ்ச்சி:-)))

said...

வாங்க கீதா.

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

நம்ம வல்லியம்மா, தனிப்பதிவே போட்டுருக்காங்க.

இந்த அன்புக்கு நான் அடிமை!

said...

வாங்க ரிஷான்,

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி!

இதுக்காக ஹெல்மெட் வேற வீண் செலவா?

காசை மிச்சம் செஞ்சால்தானே ஒட்டியாணத்துக்கு செலவுக்காகும்:-)

ஆற்றிலே கொட்டிக்கிடக்குன்னா... அள்ளிக்க வந்துக்கிட்டே இருக்கோம்.

கிரீடம் முதக்கொண்டு பூரா செட் செஞ்சுக்கணும், அம்மன் அலங்காரத்துக்குப்பொருத்தமாக!

said...

வாங்க ஸ்கூல் பையன்.

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி!

சின்னப்பசங்க சொல்லும் வாழ்த்துகள் அமிர்தம் எங்களுக்கு!

said...

வாங்க ஏஞ்சலீன்.

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

நீங்க சொல்லும் கலர் பார்த்தால் என்னிடம் ஏற்கெனவே ரெண்டு மூணு இருக்கேப்பா!

இதை எப்படி உங்க அண்ணனுக்குத் தெரியாமல் ஒளிச்சு வைப்பதுன்னு இப்போ யோசனை!

ஆனா... அதெல்லாம் சின்ன பெண்டண்ட்டுகள்தான். ஒட்டியாணம் இல்லை என்பதே ஆறுதல்.

வாங்கிடலாம், வாங்கிடலாம்....

said...

வாங்க அப்பாதுரை.

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

சிகப்பு மாணிக்கம்... கேக்கவே ஜில்லுன்னு இருக்கே!!!

said...

உங்களுக்கும் கோபால் சாருக்கும் என் மனங்கனிவான இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் டீச்சர். நிறைவான ஆரோக்கியத்துடனும் மகிழ்வுடனும் நீடூழி வாழ வாழ்த்துக்கள்.

said...

வாங்க கீத மஞ்சரி.

உங்கள் அன்பான இனிய நல்வாழ்த்துகளுக்கு, எங்கள் மனம் நிறைந்த நன்றிப்பா.

said...

எங்களுடைய வாழ்த்துகளும்.....

said...

இனிய திருமண நல்வாழ்த்துக்கள். வாழ்க நலமுடன்.