கண் திறந்த உடன் மனசில் ஸ்டார்ட் ஆச்சு கவுண்ட் டௌன். மூணே நாட்கள். அதில் புறப்படும் நாளைக் கணக்கில் வச்சுக்க முடியாது. உண்மையான லாஸ்ட் மினிட் சமாச்சாரங்களுக்கு மட்டுமே அன்று முன்னுரிமை இல்லையோ?
நேத்து புத்தகவிழாவில் இருந்து திரும்பிவரும்போதே... பதிவர்குடும்ப அண்ணனுக்கு ஃபோன் போட்டு, ஆத்துலே யாராவது இருக்கேளா இல்லையான்னு கேட்டேன்:-) அண்ணி பதறிப்போயிட்டாங்க என் குரலைக் கேட்டு! இருக்கேன் இருக்கேன்.......
வீடு மாறி இருப்பதால் புது விலாசம் தேடிப்போக ஒரு பத்து நிமிசம் பிந்திப்போயிருந்தது. அதுக்குள்ளெ அண்ணன், பத்துமுறை வாசலுக்கும் பால்கனிக்குமா நடந்தாச்சு. அண்ணி என்னன்னா..... வாசலுக்கும் வெளிப்புற கேட்டுக்குமா மாடிப்படிகள் இறங்கி ஏறின்னு ஒரு பத்துமுறை ஓட்டம். ஆஹா...அதான் அண்ணி உடம்பு என்னில் பாதி!!!
வந்து பதினெட்டு நாளாச்சு, இப்பதான் நேரம் கிடைச்சதான்னு ஒரு அதட்டல் போட்டார் அண்ணன். காசி, அயோத்யா வென்று வர நாள் ஆகாதான்னு பம்மினேன்! அண்ணன் இப்பெல்லாம் பதிவு எழுதுவதே இல்லை. வாசிப்பே போதுமுன்னுஆகிப்போச்சாம். இடைக்கிடை கணினித் தகராறு, மின் தடை,உடல்நலக்குறைவு இப்படி ஏகப்பட்ட காரணங்கள். இப்படியெல்லாம் சொல்லிக்கிட்டாலும்.... பேரக்குழந்தையும் தாத்தாவுமா நேரம் போயிருதாம்! ஆஹா.... இதுதான் உண்மை:-))))
ஆனாலும் மே மாதம் 2006 எழுத ஆரம்பிச்சு ரெண்டேகால் வருசத்துக்குத் தாக்குப்பிடிச்சு நின்னுருக்கார். 2008 யாரிவர்? எல்லாம் நம்ம சிவஞானம்ஜிதான். கோபாலகிருஷ்ணன் மேல் கொள்ளை ஆசை:-))) சிஜியின் எக்ஸ்க்ளூஸிவ் இங்கே!
வெளியே போக ரெடியா இருக்கும் அலங்காரத்தில் அண்ணி. வீட்டுலே விசேஷம். துணி எடுக்கணும். மருமகளும், மகனும் ஏற்கெனவே கடைக்குப் போயிட்டாங்க. அவுங்க செலக்ட் பண்ணி முடிக்குமுன் இவுங்க போய் கூடச் சேர்ந்துக்கறதா ப்ளான். என்னால் எல்லாம் கெட்டது:( விவரத்தை ஃபோனில் சொல்லி இருக்கக்கூடாதா? நாளைக்கு வந்துருப்பேனே....
"சரியாப்போச்சு. நாளைக்கு உனக்கு நேரமில்லாமப் போயிட்டா? துணிக்கடை ஓடியாப் போகப்போது? "
இதுக்கிடையில் நம் வரவை மருமகளுக்கு செல்லில் தெரிவிக்க, அவுங்களும் நாளைக்கு வாங்கலாமுன்னு கடையில் இருந்து , வீட்டுக்கு அவசர அவசரமாத் திரும்புனாங்க.
இந்த அன்பை நினைச்சு மனம் நெகிழ்ந்துதான் போச்சு. எப்படி ஒரு குடும்பம் முழுசும் எனக்கு லட்டாட்டம் கிடைச்சிருக்குன்னு ...... உணர்ச்சி வசப்பட்டது உண்மை.
என்ன விசேஷமாம்? நாடறிந்த பெரிய அரசியல் தலைவரின் தம்பிக்குக் கல்யாணம். பொண்ணு நம்ம அண்ணியின் தம்பி மகள். பரபரப்புக்குக் கேட்பானேன்!!!
பதிவுலகம், நிஜ உலகம் என்று எல்லாக் கதைகளிலும் புகுந்து புறப்பட்டோம். நேரம் போனதே தெரியலை! வல்லியம்மாவைப் பற்றி அதிகம் விசாரிச்சார். எனக்குத் தெரிஞ்சதைச் சொன்னேன். மனம் கனத்துத்தான் போச்சு:(
இவர் வீட்டுக்கு எதிரிலும் ஒரு கோவில் இருக்கு!!! நாங்க கிளம்பி வரும்போது, கோவில் மூடி இருந்ததால் எட்டிப் பார்க்கமுடியலை.
நெவர் மைண்ட். நெக்ஸ்ட் டைம்:-)
நேற்று பார்க்கவேண்டியவர்கள் பட்டியலில் இன்னும் ஒரு முக்கியமானவரைக் கூட்டம் காரணம், விட்டு வச்சுருந்தோம்.
மீன் தொட்டியில் பொங்கல் வாழ்த்து:-)
வெங்கடநாராயணா சாலைக்குப் போகலாமேன்னு ஒரு தோணல். நேற்றைய அலங்காரங்கள் மிச்சம்மீதியா இருந்தையும் பார்த்துக்கிட்டோம். கூட்டம் அவ்வளவா இல்லை. துவாதசி தரிசனமும் ஆச்சு.
கோபாலுக்கு இந்தியப் பயணத்தில் தவறாமல் செஞ்சுக்கும் ஒரு காரியம் இருக்கும் எப்பவுமே! முடி வெட்டிக்கணுமாம். பாண்டிபஸாரில் ஒரு சலூனுக்குள் (பார்லர்னு சொல்லணுமோ!) நுழைந்தார். நான் கொஞ்சம் வேடிக்கைன்னு ஒரு ஃபேன்ஸி ஸ்டோருக்குள் நுழைஞ்சேன்.
கடைக்காரர் குமார் சின்ன வயசு இளைஞர். உள்ளே வந்து பாருங்க ஆண்ட்டின்னு உபசரிப்பு. தங்கம் விக்கிற விலையில் பெரிய பெரிய குடை ஜிமிக்கிகள் மலிவாகவே இருக்கு. எல்லாம் மண் சமாச்சாரம்! இவருடைய ரூம் மேட்டும்(பார்வை இல்லாதவர்) இவருமாச் சேர்ந்து வடிவமைச்ச மண் நகைகள். நெக்லேஸ், பதக்கம் வகைகள் எல்லாம் அட்டகாசமா இருக்கு!
நான் தோழியுடன் சேர்ந்து 'கோலம்' நடத்திய காலத்தில் வெள்ளையர் மார்கெட்டைப் பிடிக்கலாமேன்னு கொஞ்சம் டெர்ரகோட்டா கழுத்தணிகள் வாங்கி வந்தேன். சென்னையில் இருந்துதான். அதெல்லாம் சுமாராத்தான் இருந்துச்சுன்னு இப்ப இந்த நகைகளைப் பார்த்தால்தான் தெரிஞ்சது. கடைசியில் அதெல்லாம் ஒன்னுமே விலை போகலை. தோழியின் மகளுக்கு எல்லாத்தையும் கொடுத்துட்டோம். அவுங்களும் கூடப்படிக்கும் தோழிகளின் பர்த்டே கிஃப்ட்டுக்காச்சுன்னு சந்தோஷமா எடுத்து வச்சுக்கிட்டாங்க:-))))
இப்பெல்லாம் உள்ளூர் கல்லூரிப்பெண்களுக்கும் இதுலே ஆர்வம் வந்துருக்காம். நம்ம கலா மாஸ்ட்டர் கூட அவுங்க நடனப்பள்ளி மாணவிகளுக்கு சிபாரிசு செய்யறாங்களாம். மெள்ள மெள்ள இந்த வியாபாரம் சூடு பிடிக்குதுன்னார். நகை விஷயத்தில் மக்களின் ருசி மாறிவருவது நல்லதுதான் என்றாலும் தங்க நகைக் கடைகளில் கூட்டம் குறையலையே!!!
நம்ம பிக் பஸார் இருக்கு பாருங்க, அதுக்கு எதிர்வாடையில் இந்தக் கடை இருக்கு. க்ளிப், வளையல், அது இதுன்னு ஏராளமாக் கொட்டித்தான் வச்சுருக்கு அத்தனூண்டு சின்னக் கடையில். நானும் கொஞ்சம் 'கண்டதை' வாங்கிக்கிட்டு வியாபாரம் விருத்தியாகட்டும் அடுத்த முறை சொந்தக் கடையில் வந்து வாங்கறேன்னு ஆசிகள் வழங்கிட்டு வந்தேன்.
நம்மூட்டு ஜன்னுவுக்கு (ஜனனி) ஒரு புடவை வாங்கிக்கலாமுன்னு அவளுக்குண்டான கடையைத் தேடிப்போனோம். நல்லதா காக்ரா ச்சோளி ஆப்ட்டது. கூடவே ஒரு புடவையும் வாங்கினேன். மூணு வயசு குழந்தைன்னு சொல்லி வாங்கிக்கரதுதான். அவளும் நவராத்ரிக்கு நல்லதா உடுத்திக்கணுமா இல்லையா? ரெண்டே ரெண்டு புடவைதான் இத்தனை வருசத்தில் வாங்கி இருக்கு. பாவம், அவளுக்கும் நம்மை விட்டா வேற யார் இருக்கா சொல்லுங்கோ?
சென்னை சில்க்ஸ்ஸில் சாமிக்கான வஸ்த்திரங்கள் (பாவாடை, வேஷ்டிகள், ) பொன்னி ஸ்டோரில் பூஜை அறை அலங்கார விளக்குகள் இப்படி கொஞ்சம் பர்ச்சேஸ் ஆச்சு. நல்லாக் கவனிச்சுக்குங்க... இதெல்லாம் எனக்கில்லையாக்கும் கேட்டோ!
அப்படியே பகல் சாப்பாடு சரவணபவனில்(வெங்கடநாராயணா சாலை கிளை) ஆச்சு. கொஞ்சமா இனிப்பு வாங்கிக்கிட்டேன். நம்மை சந்திக்க வாசகர் ஒருவர் அறைக்கு வருவாங்க இன்னும்கொஞ்ச நேரத்தில். சமீபகால வாசகி. பின்னூட்டம் கூட போடுவாங்கதான்.
பொங்கல் விழாவை முன்னிட்டு தை அறுசுவை விருந்து ஸ்பெஷலா போடப்போறாங்களாம் சரவணபவனில். நாம் இருக்கமாட்டோமேன்னு இருந்துச்சு:(
சொன்ன நேரத்தில் வாசகி குடும்பம் வந்தாங்க. கதைகள்பேசி களித்திருந்தோம். அவர்களைக் கேக்காமல் படம் போடுவது முறை இல்லை என்பதால் நோ படம் ப்ளீஸ்!
பதிவர் சந்திப்பும் வாசகர் சந்திப்பும் அருமையோ அருமை. இப்படி ஒன் டு ஒன் கூட நல்லாத்தான் இருக்கு:-))))
தொடரும்........:-)
12 comments:
படங்கள்லாம் கலக்கல். ஜன்னுக்குலாம் ட்ரெஸ் வாங்க முடியுது. ராஜிக்கு ஒரு புடவை எடுத்துக் கொடுக்கனும்ன்னு தோணுதாம்மா உங்களுக்கு!?
சிவஞானம்ஜியைச் சந்திச்சிருக்கீங்க. சூப்பர். பழைய வலைப்பதிவர்களையெல்லாம் பாத்து எவ்வளவு நாளாச்சு.
வெங்கட்நாராயணா ரோட்டுல சனிக்கிழமை நுழையவே முடியாது. அவ்வளவு கூட்டம் அம்மும்.
ஜன்னுவுக்கு அலங்காரம் அருமையோ அருமை. உங்க கைவண்ணமா? ஜிமிக்கி செட் கூட இருக்கே. சின்னத வளையல்கள், காசுமாலை, ஒட்டியானம். கொடுத்து வெச்ச ஜன்னு. :)
சிஜி தான் என்ன கம்பீரம். புதுவீட்டுக்குப் போயிட்டாங்களா. அவர் விசாரிப்புக்கு மிக நன்றிப்பா துளசி. ஆஹக் கூடி சரவணபவன் சேஃப்னு சொல்லிட்டீங்க. கண்ணாடி வளையல்கள் வாங்கலியா. இந்தப் புதுக்கடை நானும் போய் வந்தேன். யாருக்கும் பிடிக்குமோ பிடிக்காதோ என்று விட்டு விட்டேன்.
ஜன்னு அழகி ஜொலிக்கிறால் செல்லமா. ஜிகே மாதிரியே இங்க ஒரு பூனை பார்த்தேன் பா.
சிறந்த கருத்துப் பகிர்வு
visit: http://ypvn.0hna.com/
இனி வியாபாரம் விருத்தியாகி விடும் அம்மா...
பதிவை படித்தாலே உங்கள் பயணத்தின் மகிழ்ச்சி தெரிகிறது மேடம்.
இனிய சந்திப்புகள்.
ஜன்னுவை மீண்டும்கண்டதில் மகிழ்ச்சி.
ஜன்னு அலங்காரமும், நகைகள் விஷயமும் சுவாரஸ்யம்.
வாசகர் சந்திப்பு பற்றி நீங்கள் பதிவில் mention பண்ணினதை கணவரிடம் சொன்னதும் மிகவும் சந்தோஷப்பட்டு போனார் . மீண்டும் அந்த நாளை அசை போட்டோம் .இனிமை யான நாள் :)
அந்த டெரகொட்டா ஜிமிக்கி என் மகளுக்கும் அவளின் தோழியருக்கும் வாங்கி அனுப்பி வைத்தேன் . ஏக வரவேற்ப்பு :)). உண்மையிலே வெகு அழகாக இருக்கின்றன . ஜனனியின் சேலை அவளுக்கு வெகு பாந்தம் .
இனிமையான சந்திப்பு....
டெரகோட்டா தோடுகள் அழகாக இருக்கிறது. அடுத்த பயணத்தில் வாங்கிட வேண்டியது தான்!
இங்கே பெருந்துறை (ஈரோடு வழியில்) கிடா விருந்து என்றொரு உணவகம் உண்டு. அத்தனை விதமான கறிகள். 290 ரூபாய். வீட்டு முறைப்படி என்றார்கள். அம்மையாரிடம் கேட்டேன். அவர் தான் சுத்த சைவமாச்சே. குழந்தைகளை கூட்டிக் கொண்டு போய்வருகின்றேன் என்று. இன்று வரையிலும் போக முடியல.
Post a Comment