ராஜாராணி கொழுக்கட்டையை இன்றைய ஸ்பெஷலா வாங்கிக்கணும். ரவா தோசை, ஸ்பெஷல் தோசைன்னு தோசைவகைகளும் வேற என்ன ஐட்டம் பிடிக்குதோ அதை ஆளாளுக்கு வாங்கிக்கணும் என்றுதான் முடிவு. கோபால் மட்டும் சவுத் இண்டியன் தாலி(!) வாங்கிக்கிட்டார்.நான் தச்சுமம்மு. பெரிய கூட்டமா இருக்குமுன்னு மனக்கோட்டை கட்டுனது லேசாச் சரிஞ்சு போச்சு. பதிவர்களும் எழுத்தாளர்களுமா ஐவர் கூட்டணி, இவர்கள் குடும்ப அங்கங்கள் என்று பத்தரை டிக்கெட்தான்:-)
அறுபதாங்கல்யாணத்தில் இருந்து நாங்கள் அறைக்குத் திரும்பிய கால்மணியில் சிங்கை ஜெயந்தி வந்தாங்க. அப்புறம் கனியும் லக்ஷ்மியும். கவிதாயினி மதுமிதாவும் மகளும், அலைகள் அருணாவும் கணவரும்,நம்ம அண்ணனும் அண்ணியும் என்று க்ராண்ட் ஸ்வீட் ரெஸ்ட்டாரண்டை கலங்கடிச்சோம்:-)) இதுலே சிலர் வைகுண்ட ஏகாதசிவிரதமாம்! போச்சுடா.... அவுங்களுக்காக நானே சாப்பிடவேண்டியதாப் போச்சு!!! நாம் தங்கியுள்ள இடத்தில் இருந்து பொடிநடையில் அஞ்சு நிமிட் தூரத்தில் இது இருப்பது நமக்கு நல்ல வசதியா இருக்கு.
சாப்பாடு முடிச்சு அறைக்குத் திரும்பினதும்தான் சிலருக்கு மறந்து போன வேலைகள் நினைவுக்கு வந்ததாம்! அடுத்த விருந்தில் கலந்துக்காம'எஸ்' ஆனாங்க. நாங்க அஞ்சரைப்பேர் கிளம்பி ஒய் எம் சி ஏ. போனோம்.
அமிஞ்சிக்கரையில் வழக்கமா நடக்கும் புத்தகத்திருவிழா இப்போ சில வருசங்களா இங்கே இடம் மாறி இருக்கு. இங்கே இந்த இடத்துக்குப் போவது எனக்கு முதல் முறை. பார்க்கிங் ரொம்ப தூரம் என்பதால் பாதிவழியிலேயே இறங்கிக்கிட்டோம். நம்ம சீனிவாசன் போய் பார்க் பண்ணிக்கறேன்னு சொல்லிட்டார்.
வலதுபக்கம் திரும்பி அம்பு அடையாளமிட்ட பாதையில் நடக்கறோம். கம்பி வேலிக்கு அந்தாண்டை என்னமோ பள்ளிக்கூட விழா நடக்குது. கலை நிகழ்ச்சி! பள்ளிகளுக்குள் போட்டி நிகழ்ச்சியாம். விதவிதமான உடுப்புகளில் பசங்க.
கரகம் தலையில் ஏந்திய சிறுமிகள். இன்னும் கிராம நடனத்துக்கு அலங்கரிச்சு தயாராக இருக்கும் சிறுவர், சிறுமிகள் என்று எல்லோரும் வரிசையில் உக்கார்ந்துருக்காங்க.
பெற்றோர்கள் கூட்டம் பிள்ளைகளை அலங்கரிச்சுக்கிட்டு இருக்க.... அடடா... அங்கே போய் பார்க்கலாமான்னு மனசு ஆசைப்பட்டது உண்மை.
சும்மாக்கிட மனசே! இப்ப நாம் 'இலக்கிய வியாதிகள்'. புத்தக விழா பார்க்க வந்துருக்கோம். நினைவிருக்கட்டுமுன்னு எச்சரித்தேன்:-)
நாலு வருசத்தில் விலைவாசி ரெண்டு மடங்காக ஆகிப்போச்சு! இப்ப திருவிழா டிக்கெட் பத்து ரூ. பிரச்சனை இல்லை. ஏற்பாடுகள் தரமா அமையணுமுன்னால் பணமும்வேண்டித்தானேஇருக்கு, இல்லையோ?
இன்னும் வந்து இறங்கி இருக்கும் விளம்பரங்களை வச்சு அலங்கரிக்கலை:(
ஏழுநூறு அரங்குகள், அஞ்சு லட்சம் தலைப்புகள், பத்து லட்சம் பார்வையாளர்கள், இருபது லட்சம் வாசகர்கள்! ஓ பார்வையாளர்களையும் வாசகர்களையும் தனித்தனியாப் பிரிச்சாச்சா??எப்படி? புத்தகத் திருவிழாவில் புத்தகமொன்னுமே வாங்காமல் கைவீசிக்கிட்டுக் கிளம்பினவங்க பார்வையாளர்கள் கணக்கிலே வர்றாங்கபோல:-))
புது இடத்துக்குள்ளே நுழைஞ்சோம். கொஞ்சம் விசாலமாத்தான் இருக்கு. கால்வீசி நடக்கமுடியுதே! 2 லேன் ட்ராஃபிக் !!! ரெண்டு பக்கமும் அருமையான 'கடைகள்'
முதலில் ஒரு சுத்து சும்மாப் பார்த்துட்டு அப்புறம் வேண்டியவைகளை வாங்கிக்கலாம் என்றுதான் ஆரம்பிச்சது. ஆனாலுமெப்படியோ சந்தியா வாசலுக்கு முதலில் வந்திருந்தோம். பதிவுலக நண்பர்கள் கூட்டம் (நியூஸிக் கணக்கு) தான் முதலில் நம் கண்ணில் பட்டார்கள். என்னை திடீர்னு இங்கேபார்த்த வியப்பு அக்கண்களில்:-)
நலம் விசாரிப்புக்குப்பின் சந்தியாவில் புத்தக வெளியீடு! கவிதாயினி மதுமிதாவின் தொகுப்பு 'பருவம்' வெளியிடும் அதிர்ஷ்டம் எனக்குக் கிடைச்சது! அதான் ஃபாரீன் டெலிகேட்ன்னு எக்ஸ்ட்ரா குவாலிஃபிகேஷன் இருக்கே:-))) நம்ம கட்டுரையும் இதுலே இடம்பிடிக்க வேண்டியது. அப்போ சிலபல குடும்ப சமாச்சாரத்தால் அச்சுக்குக்குப் போகுமுன் அனுப்ப முடியலை:( அதான் ஆறுதல் பரிசாக இப்போ!!!
முதல் பிரதியை மதுவின் மகளும் ரெண்டாம் பிரதியை பதிவர் லக்ஷ்மி பாலகிருஷ்ணனும் பெற்றுக்கொண்டனர்.
விழாவை முடிச்சு வெளியில் வந்தால் 'வணக்கம் மேடம்' என்கிறார் ஒருவர். கோபாலைப் பார்த்ததும் துளசி மேடம் வரலையான்னு கேட்டாராம்! அவ்ளோ கூட்டத்தில் எப்படி கோபாலைக் கண்டுக்கிட்டார்? துளசிதளத்தின் நெடுநாள் வாசகராம். சைலண்ட் ரீடர்! ஆஹா.... படம் போடுவதில் பயன் உண்டு!!! இதுவரை நாலுபேர் இவரைவச்சு என்னைக் கண்டு பிடிச்சுருக்காங்க!
இந்தப் பயணத்துலேயே சென்னை வந்து இறங்கி, பெட்டிகளுக்காகக் காத்திருக்கும்போது , நம்மாளிடம், நீங்க துளசி மேடத்தின் கோபால்தானேன்னு ஒரு பெண் கேட்டதும் இவர் கொஞ்சம் ஆடிப் போயிட்டார். அவர் நான் இருக்கும் திக்கைத் திரும்பிப் பார்க்க, அவுங்க நேரா என்னிடம் வந்து நலம் விசாரிக்க ஆரம்பிச்சுட்டாங்க. எப்படி? எப்படி? படம், படம்:-)))
அருள் நம்பியிடம், 'இப்படி ஓசைப்படாமல் வந்து போனால் நல்லாவா இருக்கு. அப்பப்ப அடையாளம் வச்சுட்டுப் போகப்டாதா'ன்னேன். பூ வைக்கும் இடத்தில் பொன் !!! சரின்னார்:-)
குழந்தைக்கு ரொம்ப போரடிச்சுப் போயிருக்கு. குட்டிக் கால்களுக்குக் களைப்பு. வாட் அ லாங் டே:( அம்மாவும் கனியுமா கிளம்பிப் போனாங்க. இப்ப நாங்க நாலு பேர்தான்.
அடுத்த தெருவில் இன்னொரு புத்தக வெளியீடுன்னு 'அசரீரி' காதில் விழுந்துச்சு. விழுந்தடிச்சு விலாசம் கண்டுபிடிச்சு ஓடினோம். டிஸ்கவரி புக் பேலஸ் . போய்ச் சேருமுன் வெளியீடு முடிஞ்சு ஆசிரியர் வெளியில் நண்பர்களுடன்! அறிமுகமும் வாழ்த்துகளும் ஆச்சு. என்ன அறிமுகம் ஸ்பெஷலா? வாசகரும் பதிவருமா இங்கேயும் அங்கேயுமுன்னு அநேகமா தினமும் வலைவழி சந்திக்கிறோமே!
படம் முடிஞ்ச மகிழ்ச்சியில் நம்ம இயக்குனர் கேபிளார்:-)
அடுத்த விநாடி கவிதாயினிக்கு செல் கால். வீட்டிக்கு உறவினர் ஏதோமுக்கிய வேலையாக வந்துக்கிட்டு இருக்காங்க..... ஓடு ஓடுன்னு ஓடிப் போகலாச்சு. இப்ப நாமிருவர் மட்டுமே:(
நிவேதிதா புத்தகப் பூங்காவில் நம்ம எஸ்.ஷங்கரநாராயணன் இருந்தார். முந்தாநாளே மகனுடைய கல்யாண அழைப்பிதழைக் கையில் கொடுத்திருந்தார். இன்னொரு நினைவூட்டல். மறந்துடாதேம்மா ஃபிப்ரவரி ஒன்பது. அதுவரை இருந்துட்டுபோகும்படியா ஏற்பாடு செஞ்சுக்கோயேன்......... எனக்கும் ஆசைதான். ஆனால் நடக்கற காரியமா?
அந்த ஸ்டாலில் இருந்து சில புத்தகங்கள் வாங்கினேன். அப்புறம் கொஞ்சம் அங்கே இங்கேன்னு திரிஞ்சு வேடிக்கை பார்த்ததோடு சரி. எதோ ஒரு உந்துதலில் காலச்சுவடில் ஒரு அசோகமித்திரன். கிழக்கில் இன்னொரு அசோக மித்திரன், உயிர்மையில் ஒரு எஸ்.ரா. ஞானபாநுவில் அமெரிக்காப் பயணம் வாங்கணுமுன்னு போனால் அது இன்னும் ரெண்டுநாள் செல்லுமாம். ஞாநியைக் காணோம். விசாரிச்சால்..... உடம்பு சரி இல்லைன்னு வருவது குறைச்சலாம்:( கண்ணில் பட்ட நகர்வலம் வாங்கிக்கிட்டேன்.
சரவணாபவன் காம்போ ஐட்டம்போல ஞாநி சில காம்போக்கள் போட்டு வச்சுருக்கார்!!!
சுஜாதாதான் இன்னும் ஹாட் கேக்ஸ் ஆக இருக்கார்!
ஏழு நூறில் சமையல், ஆன்மீகம் , அறிவு (என்ஸைக்ளோபீடியா வகைகள்) எல்லாம் ஏராளம். அதான் வலை இருக்கே. இது எதுக்குன்னுதான் இருக்கு கலியில் வாழ்க்கை!
அதுபாருங்க..... நியூஸியில் இருக்கும்போது பதிவுலகில் வரும் புத்தக விமரிசனங்களைப் பார்த்துட்டு, அது வாங்கணும், இது வாங்கணும் என்று ஆசை ஆசையா பட்டியல் போட்டு வைப்பேன். ஊருக்குப்போகும்போது அதென்னவோ எப்பவும் கண்ணில் படாது ஒளிஞ்சுக்கும் இந்தப் பட்டியல்:(
நமக்குத் தெரியாதா என்ற மமதையோடு புத்தகக் கடைக்குப்போய் அநேகமாக மனசில் இருப்பவைகளில் பாதி வாங்க இயலும். பதிப்பகம் என்ன ஏதுன்னு நினைவில் இருக்காது என்பது வேற விஷயம். மேலும் புத்தகக் கடைகளில் (எடுத்துக்காட்டாக ... நியூ புக்லேண்ட்ஸ் திநகரில்) அலமாரிகளுக்கிடையில் நடந்து, கண் நட்டு ஒரு மாதிரியா வாங்கிக்க முடியும்.
ஆனால்.... புத்தகத் திருவிழான்னால்..... யூ நீட் மோர் டீடெய்ல்ஸ். ஒவ்வொரு பதிப்பகமும் எங்கெ இருக்குன்னு தேடிப்போய்ப் பிடிப்பது கொஞ்சம் கஷ்டமாத்தான் போயிருது. இந்த பத்து சதமானத்துக்குக்காக மெனெக்கெட முடியலை...... பேசாம கடையில் பார்த்துக்கலாமுன்னு இருக்கவேண்டி இருக்கு:(
போதுமுன்னு கிளம்பி வெளியில் வரும் சமயம் எழுத்தாளர் ராமச்சந்திரன் உஷா உள்ளே நுழையறாங்க. 'வரேன் வரேன்'னு இவ்ளோ தாமதமா? தனிக்காட்டு ராணியாக சுற்றுங்கோன்னு ஆசி வழங்கினேன். அப்பதான் விழியனும் வந்தார். ஹை அண்ட் பை ஆச்சு.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூடுதலாக் கொடுக்கும் 20 கிலோவுக்குண்டான புத்தகங்கள் இல்லாமலேயே நம்ம பெட்டிகள் வழக்கம்போல் ஓவர் வெயிட்:(
என்னதான் வாங்குனோமுன்னு பார்த்தால் இவைதான். அதிலும் கடைசி நாலு நமக்குக் கிடைச்ச அன்பளிப்புகள்:-)
நெவர்மைண்ட். இனி பட்டியலை கண்முன்னால் ஒட்டி வச்சுக்கணும் என்று இப்போதைய முடிவு.
டாலர் நகரம் - ஜோதிஜி
நகர்வலம் - ஞாநி
மழைமான் - எஸ் ரா.
1945இல் இப்படியெல்லாம் இருந்தது.... அசோகமித்திரன்
மானசரோவர் - அசோகமித்திரன்
நிலவொளியில் பனித்துளிகள் - துரை. நந்தகுமார்
லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன் - வா. மணிகண்டன்
கடவுளின் காலடிச் சத்தம் - எஸ்.ஷங்கரநாராயணன்
இருவாட்சி - பொங்கல் சிறப்பு வெளியீடு
சாமியாட்டம் - எஸ்.பாலபாரதி
ஆட்டிசம் சில புரிதல்கள் - எஸ்.பாலபாரதி
பருவம் - தென்றலும் தீயும் தோய்ந்த நாட்கள் - தொகுப்பு மதுமிதா
நகரத்தின் கதை - சித்ரா ரமேஷ்
மணி ஆறரை. திருவிழாவில் இப்ப கூட்டம் அதிகமா இருக்கு. 'சாப்பிடவாங்க'வில் பாதிக்கூட்டம்! கார் பார்க்கிங் வரை ரொம்ப தூரம் நடக்கணுமேன்னு நினைச்சால் நம்ம சீனிவாசன் கண்முன் தோன்றி, இதுக்குப்பின்னேதான் பார்க்கிங் என்றுகூட்டிப்போனார். நிமிச நடை!!!
புத்தகம் வாங்கறோமோ இல்லையோ, புத்தகக் காடுகளுக்குள் பயணம் போய் வருவதும் நல்லாத்தான் இருக்கு:-)
இத்தனை சந்தடியிலும் பிள்ளையின் உலகில் ஒரு அம்மா!!
இன்னொரு பதிவர் சந்திப்புக்கு போறோம் இப்போ.
தொடரும்..........:-))))

12 comments:
உடன் புத்தககக்கண்காட்சியில் உலவியது
போன்று படங்களுடன் பதிவு அருமை
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
வாங்க ரமணி.
வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.
புத்தகக் கண்காட்சி விவரங்கள் தாமதமாக வந்தாலும் எப்பவுமே சுவாரஸ்யம்.
இவர் வராரு அவர் வராருன்னு கிட்டத்தட்ட பத்து நாள் அங்க வந்திருந்தேன், வா.ம. உட்பட பல பதிவர்களையும் எழுத்தாளர்களையும் சந்தித்தாயிற்று. நீங்க எப்போ வர்றீங்கன்னு சொல்லியிருந்தீங்கன்னா உங்களையும் சந்திச்சிருக்கலாம் மேடம்...
அருமை. இவ்வளவு பேரையும் பார்த்தது ரொம்ப சந்தோஷம் துளசி. ஏயப்பா எவ்வளவு புத்தகங்கள். மது புத்தக வெளியீடு உங்க கையாலா. அமோகம். அக்காதான் இன்னும் வரவில்லை. வரட்டும்.உங்களைக் கண்டு வரவேற்க ஏர்போர்ட்டுக்கே ஆள் வந்தாச்சா:)))) நன்றாக இருக்கணும் துளசி. அப்படி இப்படின்னு நல்ல ரவுண்ட் அப். இந்த உற்சாகம் மட்டும் என்றும் ஒளிவிடவேண்டும். அப்போதான் என்னை மாதிரி ஜீவிகளுக்கு அமிர்தம் கிடைக்கும்.நன்றி மா.
வாங்க ஸ்ரீராம்.
இல்லையா பின்னே? இது நமக்கே நமக்கான திருவிழா இல்லையோ!!!!
வாங்க ஸ்கூல் பையன்.
பத்து நாளா!!!! வாவ்! அவ்ளோ பாக்கியம் எனக்கில்லை:(
எப்போ வருவேன், எப்படி வருவேன்னு எனக்கே தெரியாதே! ஆனால் கண்டிப்பா ஒருநாளாவது வருவேன் என்று மட்டும் தெரியும்:-))))
வாங்க வல்லி.
ரவுண்ட் அப் நல்லாத்தான் இருந்துச்சுன்னாலும், நெருங்கியவர்களை ரொம்பவே மிஸ் செஞ்சேனேப்பா:(
இந்தப்பயணம் கொஞ்சம் ஹெக்டிக்காத்தான் போயிருச்சு. நெவர் மைண்ட்ன்னு நினைச்சுக்கிட்டேன். இதுதான் எங்க கிவி ஆட்டிட்யூட் கேட்டோ:-)
"புத்தகத் திருவிழாவில் கவனிக்கவேண்டியவை!" பற்றிய
தொகுப்பை வரவேற்கிறேன்.
சிறந்த பகிர்வு!
visit: http://ypvn.0hna.com/
புத்தகக் காடுகளுக்குள் பயணம் போய் வருவதும் சுகமானது.
நெய்வேலி புத்தகச் சந்தைக்கும், சென்னை புத்தகச் சந்தைக்கும் போக வேண்டும் என்பது பல நாள் ஆவல்..... ஆனால் ஒரு முறை கூட அந்த சமயத்தில் போக முடிவதில்லை! :(
அடுத்த வருடம்....
தங்களை புத்தகக்கண்காட்சியில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி... பைசா செலவில்லாமல் எல்லா இடங்களையும் சுற்றிக்காட்டுவதற்கு நன்றி... :)
Post a Comment