Friday, October 25, 2013

எலியும் கிலியும் !

 கண்ணெதிரில் ஆடாமல் அசையாமல் இருக்கும் எலியைப் பிடிக்க முடியலையேன்னு  பூனைக்கு மகா வருத்தம்.  தட்டிக்கொட்டி  டிங்கரிங் வேலைகளும் மராமத்தும் நடந்து கொண்டிருந்தாலும்  பழைய வண்டி எப்பவும் அதே வேகத்தில் ஓடமுடியாதில்லையா?

கொஞ்சநாளா மெஷினின் பாகங்கள் எல்லாம் ஒன்னொன்னா மக்கர் செய்ய ஆரம்பிச்சுருக்கு. அந்த வரிசையில் இப்போ ஒரு வாரமா சுட்டுவிரல்.   ஆளைக் காமிக்கவே முடியலையாக்கும் கேட்டோ!

கணினி மௌஸைக் கையில் பிடிக்கவோ,  க்ளிக் பண்ணவோமுடிவதில்லை. ரைட் க்ளிக் எப்போதுமேவா பயன்? ஊஹூம்........

இப்பதான் நடுவிரலுக்குப் புது ரோல் கொடுத்துப் பழக்கிக்கிட்டு இருக்கேன். கொஞ்சநாள் செல்லலாம் அதுக்குப் பாடம் படிக்க. அதுக்கும்தானே வயசாச்சு இல்லையோ?  கேன்னாட் டீச் நியூ ட்ரிக்ஸ் டு அன் ஓல்ட் டாக்:-)

அதுவரை?  வாசிக்கலாமே! படித்ததில் பிடித்ததுன்னு  நிறைய எழுதலாம். ஆனால்  கிலி பிடிச்சுக்கிடக்கே!

அன்பு எழுதிவரும் இமயமலைப் பயணம் இதுவரை வந்த ஆறு பகுதிகளையும் வாசித்தேன். (ஒரு சில எழுத்துப்பிழைகளை பொருட்படுத்த வேண்டியதில்லை) நன்றாக எழுதுகிறார்.  சாருவுடன் போன பயணம் இது என்பதையும் குறிப்பிடத்தான் வேணும்.

நம்ம பதிவர்களின் விடுபட்ட பதிவுகள் பலவற்றையும் பார்த்தேன்.படித்தேன் அண்ட்  ரசித்தேன். ஆனால் யாருக்கும் பின்னூட்டமிடலை. கை துருதுருன்னாலும் கைவலி  வேற இருக்கே! அதென்ன வலி குடியிருக்குமிடம்  ஒரு ஒற்றைவிரல்?  மஹா ஆச்சரியமான விஷயம்........

துளசிதளத்தில் ஒரு நாலைஞ்சு இடுகைகளுக்குப் பதிலொன்னும் போடலை இதுவரை.  காரணம் விரல் வலி. வாசகர் வட்டம் மன்னிக்கணும் ப்ளீஸ்.

கை வலி என்பதால் வீட்டு வேலையில் இப்போ முக்கால் வாசி நம்ம கோபாலுக்கு. சமையல் அல்மோஸ்ட்  கத்துக்கிட்டார்னு நினைக்கிறேன்.
கொஞ்சம் மேலாகப் பார்த்தால் இடாலியக் குடும்பங்களுக்கும் இந்தியக் குடும்பங்களுக்கும் ஏகப்பட்ட ஒற்றுமை.(No wonder Sonia well settled in Indai)  The fortunate pilgrim  வாசிச்சுக்கிட்டு இருக்கேன். Mario Puzo .  என்ன ஒரு ரைட்டர்ப்பா! அந்தக் காலத்தில் Khartoum தலை இல்லாம  கனவில் வந்து பயமுறுத்தி இருக்கு:-)

சன் டிவியில் விருந்தினர் பக்கத்தில் நம்ம பா ராவைப் பார்த்தேன்.  கையில் மின்னும் புது மோதிரம் ஷிர்டி சாய்பாபா உருவம் பதித்ததாம்!
ஊர் விவகாரங்கள் ஏகப்பட்டவை பாக்கி நிக்குது.  ஒருநாள் நிதானமாகப் பார்க்கலாம்.

மற்றபடி  எல்லோருக்கும் அன்பும் நன்றியும். உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

என்னுடைய வியப்பெல்லாம்,  எப்படி ஒருவிரலுக்கு மட்டும் இவ்ளோ வயசாகி இருக்கு? !!!!!

என்றும் அன்புடன்,
டீச்சர்.



21 comments:

said...

என்னுடைய வியப்பெல்லாம், எப்படி ஒருவிரலுக்கு மட்டும் இவ்ளோ வயசாகி இருக்கு? !!!!!

அதுதானே எப்படி?

said...

RSI, known as repetitive stress injury or Repetitive strain injury.

http://www.medicalnewstoday.com/articles/176443.php

Not a bad site to have look at it.

கேமாராவை அதிகமா கிளிக் பண்ணினதால் இருக்குமோ! நீங்கள் அதிகம் படம் போடுவதால் அப்படி சொன்னேன். இது சும்மா! பல காரணங்கள் இருக்கும்.

said...

எதற்கும் விரல்களை கவனமாக கண்காணித்துக் கொள்ளவும்... பதிவுகள் எல்லாம் அப்புறம்...

said...

அடடா..... போதிய அளவு ஓய்வெடுத்துக் கொண்டு புத்துணர்வோடு திரும்பி வாருங்கள்....

said...

இது கணினி கொடுத்த வரம் அம்மணி.
டென்னிஸ் எல்போன்னு சொல்வாங்க இல்லையா.
இருந்தாலும் அங்கே ஏதாவது ரத்தம் கட்டி இருக்கான்னு பாக்கணும். நல்ல தவிட்டு ஒத்தடம் கொடுக்கலாம்.அரிசியோ ஏதாவது தானியத்தை வறுத்து ஒரு வேஷ்டித் துணியில் முடிந்து விரல் மேல் வைத்துப் பாருங்கள்.
இதுக்கென்னெ மசாஜ் பையெல்லாம் கூடப் பார்த்திருக்கேன்.உங்க சைனாக்காரன் கடையில் கேட்டால் கிடைக்கலாம். சீக்க்கிரம் சரியாகட்டும். வலியிருந்தும் பதிவு செய்ததற்குப் பாராட்டுகள்.

said...

என்னுடைய வியப்பெல்லாம், எப்படி ஒருவிரலுக்கு மட்டும் இவ்ளோ வயசாகி இருக்கு? !!!!!

அதுதானே ..! எல்லா விரல்களுக்கும் அதே வயதுதானே ஆகிறது ..!

said...

Take care, blog later! :)

said...

விரைவில் குணமடைய வேண்டுகிறேன் .

said...

குணமாகி விடும். கட்டாய ஓய்வு கொடுங்கள் விரலுக்கு. இதே போல வலதுகையின் நடு மூன்று விரல்களிலும் வலி இருந்தது 3 மாதங்களுக்கு. கணினி நேரம், டைப்பிங் குறைத்த பிறகே சரியானது.

said...

நன்றாக ஓய்வு எடுத்துக் கொண்டு வாங்க டீச்சர். கோபால் சாரின் ரெசிப்பிக்களையும் கொஞ்சம் பதிவுல போடுங்க...:))

said...

விரல்களுக்கு உள்ள பயிற்சி செய்யுங்கள்.
ஒய்வு எடுத்துக் கொண்டால் சரியாகி விடும்.
கோபால் சார் சமையலில் தேர்ச்சி பெற்றுவருவது மகிழ்ச்சி.

said...

take good care Thulasi. physiotherapy try panneengalaa.
missing your comments .
pc some problem. sorry for english .

said...

உடல்நலனைக் கவனித்துக்கொள்ளுங்கள் டீச்சர். அந்த ஒற்றை விரலுக்கு மட்டும் (கணினியிலும் காமிராவிலும்) அதிகமாக வேலை கொடுத்ததால் கோபித்துக்கொண்டு வேலைநிறுத்தம் செய்கிறதோ?

said...

ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளவும். அன்பு எழுதிய கட்டுரையின் இணைப்பு கொடுத்து இருக்கலாமே?

said...

விரைவில் நலமடைந்து வருக. முருகனருள் முன்னிற்கும்.

said...

Get well soon.

said...

Teacher, readymade part-16 ku apparam ezhudhalaiya enna???!! illa adhu thaan mudiva?! adhuvum illanna enaku thaan naduvula konjam pakkatha kaanoma?? onume puriyalaiye!!!!!!

said...

ஒருதரம் ஃபிஸியோதிரபிகாரர்களிடம் எந்தவிதமாக விரலுக்கு பயிற்சி என்று கேட்டுக்கொள்ளுங்கள்.அதேமாதிரி செய்யுங்கள். வலி ஓடிப்போய்விடும்.இது ஸிம்பிளான வழி

said...

நலம் விசாரித்துப் பின்னூட்டிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

நண்பர் நம்பள்கி சொன்னது போல இது RSI பிரச்சனையாகவும் இருக்கக்கூடும். அவர் அனுப்பிய சுட்டி பயனுள்ளதாக இருந்தது. நன்றி.

ஒரு வார ஓய்வுக்குப்பின் கொஞ்சம் வலி குறைந்துள்ளது. வீட்டு வைத்தியமாக டைகர்பாம் மெடிக்கேட்டட் ஜெல் ப்ளாஸ்டர் வாங்கிப்போட்டு, தண்ணீரில் நனையாமல் இருக்க அதுக்கு ஒரு ப்ளாஸ்டிக் உறை (கையுறையில் இருந்து கட் பண்ணியது)யும் இவை எல்லாம் அசிங்கமாத் தெரியாமல் இருக்க நெட்பால் பாஸ்கெட் பால் ப்ளேயர்ஸ் பயன்படுத்தும் விரல் சப்போர்ட் ஒன்னும் போட்டதில் கைவிரல் பார்ப்பதற்கு தவில் வித்வானின் கைவிரல் போல் இருக்கு. ஒருவேளை தவில் வாசிக்கக்கூட வருமுன்னு நினைக்கிறேன். எங்கியாவது கிடைக்குமான்னு பார்க்கணும்.

சுட்டுவிரலுக்கு அடுத்த விரலைக் கொஞ்சம் பழக்கியாச்சு. இன்னும் கொஞ்ச நேரத்தில் ஒரு பதிவு போடப்போறேன்.

இனி கொஞ்சநாளைக்கு வாரம் ஒன்னு:-)

சிரங்குப் பிடிச்சவர் கைமட்டுமா சும்மா இருக்காது? கணினி பிடிச்சவர் கையும்தான் இல்லையோ:-))))

said...

கவனம் எடுத்துக்கொள்ளுங்கள்.கைக்கு ஓய்வு வேண்டும்.

said...

உங்களுடைய இந்த பதிவை வலைச்சரத்தில் பகிர்ந்திருக்கேன்

http://blogintamil.blogspot.co.uk/2014/05/blog-post.html