Wednesday, October 09, 2013

நாய் பிடிச்சுருப்பா............ (சிங்கைப்பயணம் 7 )

Fusion  எங்கெல்லாமிருக்கலாம்? ஐய்ய..... எங்கெங்க முடியுமோ அங்கெல்லாம் இல்லையோ?  கோமளாஸ் ஃப்யூஷன் ஃபைன் டைனிங் ரெஸ்ட்டாரண்டுக்குள் நுழைஞ்சோம். அப்பர் டிக்ஸன் ரோடில் இருக்கு. நாம் வழக்கமா(!!) போகும் கோமளவிலாஸுக்குப் பக்கத்துத் தெருதான்.  எங்க கூட நம்ம கஸ்தூரி  இருக்காங்க.

நம்ம வீட்டுப் பூஜைபுனஸ்காரங்கள் செஞ்சு வைக்கும் லேடி பண்டிட் இவுங்க:-) இன்னும் கொஞ்சம் இவுங்களைப்பத்தித் தெரிஞ்சுக்கணுமுன்னா இங்கே பாருங்க. ஒருத்தரையும் விட்டுவைக்கமாட்டேனாக்கும்:-))))


ஆக்லாந்துக்கு இடம் மாறிப்போனவங்க  அப்படியே சிங்கைக்குத் திரும்பிட்டாங்க.  மச்சினர் வீட்டுலே இருந்த மாமியார் (90+) இப்போ இவுங்க பொறுப்பில். ஆனாலும்  நமக்கு கஸ்தூரியின் தொடர்பு இதுவரை தொடர்ந்துகொண்டுதான் இருக்கு(டச் வுட்!) சனிக்கிழமை  அவுங்களுக்கு ஃபோன் செஞ்சு வந்திருக்கும் விவரம் சொல்லி சந்திக்க நேரம் கேட்டுருந்தேன்.  ஒருநாள் சமையலில் இருந்து ரெஸ்ட் கிடைக்கட்டுமேன்னு  எங்களோடு சாப்பிடச் சொல்லி அழைப்பு.  இன்னிக்கு லஞ்சுக்கு வரேன்னு சொல்லி இருந்தாங்க. நாங்களும்  கோவில் போய்வந்து  அவுங்களுக்காக வெயிட்டிங்.  12 வரைக்கும் ஆளைக் காணோமேன்னு  ஃபோன் செஞ்சால்,  கஸ்தூரியின் ரங்க்ஸ் எடுத்துப் பேசறார்.  பேரக்குழந்தைக்கு பேபி ஸிட்டிங் ட்யூட்டி அவருக்காம். கஸ்தூரி மட்டும் நம்மைச் சந்திக்க வந்துக்கிட்டே இருக்காங்களாம். 'இந்நேரம் வந்துருக்கணுமே'ன்னார்.  ஃபோனை வச்ச அஞ்சாம் நிமிசம் வந்துட்டேன்னு  லாபியில் இருந்து  கூப்பிட்டாங்க.

இப்ப சிலவருசங்களா,  ஹொட்டேல்களிலிருக்கும்  லிஃப்ட்கள்,  கார்டு போட்டால்தான் வேலை செய்யுது. ரொம்ப நல்ல விஷயம். நான் கீழேபோய் அவுங்களை நம்ம அறைக்குக் கூட்டி வந்தேன். விட்டுப்போன சமாச்சாரங்களைப் பேசிக்கிட்டு இருந்தோம்.  ஒருமணி ஆனதும் அறையைக் காலி செஞ்சு, பொட்டிகளை எல்லாம் இழுத்துக்கிட்டுப்போய் கீழே concierge service டெஸ்க்கில் ஒப்படைச்சோம்.

நம்மைப்போலவே அன்றைக்குக் கிளம்பும் ஹொட்டேல் கெஸ்ட்டுகள் கூட்டம் நிறைஞ்சுருக்கு.  டூர் க்ரூப் போல.  மனவாடுகள்.  ஒவ்வொருத்தர்  கையிலும் ஒரு 32 இஞ்ச்  எல் இ டி  டிவி.  ஒரு டிவியைத் தூக்கிப் பார்த்தேன். கனமே இல்லை!  சிங்கையில் விலை மலிவுன்னு சொன்னார்  டிவிக்காரர்.

நாங்கள் பொடி நடையில் சாப்பிடக்கிளம்பி  அப்பர் டிக்ஸன் தெரு கோமளாஸுக்கு வந்துருந்தோம். 1947 இல் ஆரம்பிச்ச கோமளவிலாஸ் காலத்துக்கு ஏற்றபடி மாறிக்கிட்டே இருக்கு.  (இப்பெல்லாம் வட இந்திய சாப்பாடும், சீனச் சாப்பாடும் சென்னையில் கூட பெருகிப்போச்சு பாருங்க:(  சவுத் இண்டியன் சாப்பாடுன்னு கேட்டாலே நம்மை ஒருமாதிரியில்லே பார்க்கறாங்க நம் சிங்காரச்சென்னையில்!)

கோமளவிலாஸின் ஓனர்  இறந்தபின் அவருடை ரெண்டு மகன்களும் வியாபாரத்தைத் தொடர்ந்து நடத்துனாங்க, வெவ்வேற ஸ்டைலில்.  பெரியவர், பாரம்பரிய வகையைத் தொடரும்போது, இளையவர்  ஃபாஸ்ட்  ஃபுட்,  ஃப்யூஷன்  ஃபைன் டைனிங் இப்படி  ஆரம்பிச்சார்.  இருக்கும் இடம் இந்தியர்கள் மேயும் இடமாக அமைஞ்சுட்டதால் எல்லா விதமானதும் ஓஹோன்னு  நடக்குது. பழைய ஒரிஜனல் கடையை ஒட்டியே ஒரு முட்டாய்க்கடையும் இருக்கு. யாராவது கவனிச்சீங்களா?    அங்கிருந்துதான் நமக்குத் தேவையான முறுக்கு சீடை தட்டை வகைகள், இனிப்புகள் எல்லாம் சப்ளை ஆகுது. எப்படியும் ரெண்டு மாசத்துக்கு ஒருமுறை வருது.  நம்மாள் போகும்போது லிஸ்ட் மட்டும் சொன்னால் போதும்:-)


 எனக்கு சவுத் இண்டியன் சாப்பாடுன்னதும் கோபாலும் எனக்கும்னார். கஸ்தூரி வட இந்திய வகை வாங்கிக்கிட்டாங்க. ருசி ஒன்னே போல இருந்தாலும் பரிமாறும் அமைப்பு(மட்டும்) வேற மாதிரி. மலிவான  த்ரோ அவே ப்ளாஸ்டிக்  கிண்ணங்கள் இல்லை. ( ஒருவேளை அதுதான் மேலோ?  திருப்பி பயன்படுத்தமாட்டாங்க என்பதே ஒரு ஆறுதல் இல்லையோ? )   ஃப்யூஷன் என்பதால்  விலை கொஞ்சம் அதிகம்.  கூட்டம் அவ்ளவா இருக்காதுன்னு நினைச்சால்.......  ஊஹூம்.

பேசிக்கிட்டே சாப்பிட்டு, சாப்பிட்டுக்கிட்டே பேசின்னு  ஒருமணி நேரம் ஓடியே போச்சு. அங்கிருந்து கிளம்பி பஃபெல்லோ ரோடு வழியா பொடிநடை போட்டு , லிட்டில் இண்டியா எம் ஆர் டி ஸ்டேஷனுக்கு வந்து  கஸ்தூரிக்கு பை பை சொல்லிட்டு நாங்க டெக்கா ஷாப்பிங் செண்டருக்குள் நுழைஞ்சோம். மணி மூணுதான் ஆகுது. ஒரு அஞ்சு மணிக்கு டாக்ஸி பிடிக்கலாம் ஏர்ப்போர்ட் போக.

டெக்கான்னு சொல்வதன் பொருள் மூங்கில் புதர்கள்.  ஒரு காலத்துலேஇந்தப் பகுதியில்  ரோச்சர் (Rocher  Canal Road) கெனாலை ஒட்டி நிறைய மூங்கில் குத்துகள்தான் இருந்துச்சாம். அப்ப இங்கே செராங்கூன் சாலை ஆரம்பிக்கும் இடத்தில் (இடதுபக்கம்)  ஒரு பெரிய வெட் மார்கெட் இருந்துருக்கு. அப்போ கேகே (Kandang Kerbau )மார்கெட் என்று பெயர்.  மலேய்ச் சொல். பொருள்: எருமை கிடை என்பதாம். buffalo pens. எருமைக் கொட்டாய்ன்னு வச்சுக்கலாம். 1920 ஆம் ஆண்டுவரை எருமைகளை மேலே அனுப்பும் ஸ்லாட்டர் ஹௌஸ்  இதுதான். ( அட! இதையொட்டி இருக்கும்  தெருதான் பஃபெல்லொ ரோடு! பெயர்க் காரணம் இப்போ புரிஞ்சு போச்சே!!!)  இறைச்சி விக்கறதுக்குன்னு  ஒரு மார்கெட் கட்டியது 1915 லே. அப்புறம் இங்கேயே மீன், கோழின்னு  மார்கெட்  பெருசானதும்  எருமை வெட்டு வேற இடத்துக்கு மாறியிருக்கு.  மார்கெட் பெருசானதும் இங்கேயே பச்சைக் காய்கறிகள், பழங்கள், பலசரக்குக் கடைன்னு  விரிவாகிப்போய்  நல்லாதான் நடந்துச்சு.

1985லே முதல்முறையா சிங்கப்பூர் போயிருக்கோம்.   செராங்கூன் ரோடு  முழுசும்  ரெண்டு பக்கமும் திறந்த சாக்கடைக் கால்வாய். .  அந்த ஏரியாவிலேயே சுமாரான ஹொட்டேல் 'ப்ராட்வே ஹொட்டேல்'தான்.  நம்ம அறையிலே இருந்து பார்த்தால்.....  அக்கம்பக்கம்  பூராவும் ஓடு வேய்ஞ்ச  இருப்பிடங்கள். ஐய்ய.... இதுவா சிங்கப்பூருன்னு இருந்துச்சு.  இப்ப முஸ்தஃபா கடை இருக்குமிடத்தில்  வேற  பெயர்களில்  சிலகடைகள். அதிலொன்னு கல்யாணசுந்தரம் எலெக்ட்ரானிக்ஸ் கடைன்னு நினைவு.

செராங்கூன் சாலை ஆரம்பத்தில்  'புகிட் டிமா மார்கெட்'.  அதுக்குப் பக்கத்தில்தான்  ஒரு கட்டணக் கழிப்பறை.  இருபத்தியஞ்சு சதம் கொடுத்துட்டு பயன்படுத்திக்கலாம்.  காசு கொடுத்ததும் கொஞ்சூண்டு டாய்லெட் பேப்பர் கிழிச்சுக் கொடுப்பாங்க. அப்ப  எதுத்தாப்லே  டெக்கா செண்டர் மால்   என்ற ஒன்று  இல்லவே இல்லை. 2003 லேதான்  இது கட்டப்பட்டது.  ஆச்சு பத்து வருசம்.

இந்த இருபத்தியெட்டு வருசங்களில் செராங்கூன் ரோடு  மாறிக்கிட்டே வந்துருக்கு. எல்லாம் நல்ல மாற்றங்களே!   முஸ்தாஃபா ஒரு ஹொட்டேல்கூட  நடத்துனாங்க.  இப்ப  அது இல்லை.  மொத்த இடத்தையும் விரிவுபடுத்தி  பிரமாண்டமான  கடையா மாத்தியிருக்காங்க இப்போ. நகைக்குன்னு ஒரு தனிக் கட்டிடம் கூட வந்தாச்சு.  1973 வது வருசம்  வெறும் 900 சதுர அடியில் ஆரம்பிச்ச கடை இப்போ  தரைத்தளம் மட்டும் நாப்பதாயிரம் சதுர அடி. அஞ்சு மாடிகள் வேற .1862 பணியாட்கள்,  மூணு லட்சம்  வகையில்  பொருட்கள் .  725 மில்லியன் டாலர்  யாவாரம்!




டெக்கா ஷாப்பிங் செண்டருக்கு இப்போ வேற பெயர்.The Verge.  குட்டி இந்தியாவின்  முதல் மாடர்ன் ஷாப்பிங் மால் இதுதான். எப்ப சிங்கப்பூர் போனாலும்  இதுக்குள்ளே போய் ஒரு சுத்தாவது சுத்திட்டு வருவோம்.  அடித்தளத்தில் இருக்கும் ஒரு சூப்பர் மார்கெட் என் ஃபேவரிட். அங்கே மல்லிப்பூ (உதிரியாக) கிடைக்கும்.  வாங்கிக் கோர்த்துக்குவேன்.


பழவகைகள் அருமையா வெட்டி வச்சுருப்பாங்க. கூலர் செக்‌ஷனில்  இப்போப் பார்த்தால் வெங்காயம், பூண்டு எல்லாம் உரிச்சு அழகான பொதிகளாய் இருக்கு. விலையும் மலிவே!   பூச்செடிகள் விற்பனைப்பகுதியில்  நான் ரொம்பநாளாத் தேடிக்கிட்டு இருக்கும் டெவில்'ஸ் ஐவி. (நம்ம வீட்டுச் செடிகளை குடித்தனக்காரர்கள் சாகடிச்சுட்டாங்க:( அப்புறம் உள்ளுரில் தேடிக்கிட்டே இருக்கேன். ஊஹூம்....)

 போனால் கிடைக்காதுன்னு பலாப்பழம் கொஞ்சம் வாங்கிக்கிட்டோம். நேரா கோமளவிலாஸ் முட்டாய்க்கடை அடுத்த ஸ்டாப். நொறுக்குத் தீனிகள் வாங்கும்போது கண்ணில் பட்டது  இருட்டுக்கடை அல்வாவும் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் பால்கோவாவும். இருட்டு மட்டும் ஒரிஜனலான்னு ஒரு சந்தேகம். கடைக்காரம்மா ,  நான் கேரண்டீ தரேன்னு சொல்றாங்க. நல்லா இல்லேன்னா அடுத்தமுறை போகும்போது தாளிக்கலாம். அவுங்களையும்  பலவருசமாப் பார்த்துக்கிட்டுத்தானே இருக்கோம்.

 ஸ்ரீவி போனபோதும்கூட பால்கோவாவைக் கண்ணால் தின்னதோடு சரி. எல்லாம் ஒரு பயம்தான்.  பயணத்தில் கவனமா இருக்கணுமே!  இப்ப இன்னும் கொஞ்ச நேரத்தில்  கிளம்பிருவோம். நாளைக்கு வீடு. அதனால் தைரியமா ஒரு பால்கோவா (100 கிராம்) பொட்டலம் வாங்கிக்கிட்டேன்.

ஒரு பூக்கடையில்  கொஞ்சம் மல்லிகைப்பூ.  இந்த பயணத்தில் இது கடைசி.  நாளைக்கு ஊரில் இறங்குமுன் மறக்காம  எடுத்துக் களைஞ்சுறணும்.
 லிட்டில் இண்டியா ஆர்கேட் கடைகள்.

நாலரை ஆச்சு. கொஞ்சம் சீக்கிரமாக் கிளம்பி அங்கே போய் ரெஸ்ட் எடுக்கலாம்.  பொழுதன்னிக்கும்  ஷாப்பிங் (!) என்ன வேண்டி இருக்கு என்றார் கோபால்.  அவர் பயம் அவருக்கு:-)

விமானநிலையம் வந்து சேர்ந்தப்ப  நாலு அம்பத்தியொன்னு!  ட்ராஃபிக் ரொம்ப இல்லைன்னு 'லீ' சந்தோஷப்பட்டார்:-)

டிக்ளேர் பண்ண வேண்டிய ஐட்டங்களை  எல்லாம் கேபின் பேகில் எடுத்து வச்சுட்டு மற்ற பெட்டிகளை இன்னொருக்கா அடுக்கினார் கோபால். நம்மவருக்கு இந்த பெட்டி அடுக்கல் ரொம்பப்பிடிச்ச  சமாச்சாரம்:-)   எப்படியோ மகிழ்ச்சியா இருந்தாச்  சரி :-)))

ஏற்கெனவே  நெட்டில் புக் பண்ணிவச்ச ஸீட்டை மாத்தி  மூணு பேர் அமரும் ஸீட்டை மாற்றி வாங்கினார் கோபால். நடு இருக்கை காலி என்பதால் தூங்க இடம் கிடைக்குமாம்.

செக்கின் செஞ்சுட்டுச் சும்மாக் கொஞ்ச நேரம் வேடிக்கை. அப்புறம்  பலாச் சுளைகளைத் தின்னு முடிச்சோம். பழம் தின்னு கொட்டை போட்டாச்சுக் குப்பைக்கூடையில். இன்னும் கொஞ்சம்  வேடிக்கை. அப்புறம் ஒரு கப்புச்சீனோ.

மகள் கேட்ட 'MAC' brand   சமாச்சரத்துக்கான தேடல். அது  வேறொரு டெர்மினலில்  இருக்கு. அதனால் என்ன? ரயில்தான் இருக்கே! அங்கே போனால்..... நமக்கானது மட்டும்  ஸ்டாக் இல்லை!

திரும்ப நம்ம டெர்மினலுக்கு வந்தோம்.  அப்பதான்  நம்ம  ஃப்ளைட் ரீஷெட்யூல் பண்ணி இருப்பதாக  டிவி மானிட்டரில்  அறிவிப்பு. இன்னும் ஒரு மணி நேரம் தாமதமாகக் கிளம்புமாம். எதுக்குன்னு சொல்லக்கூடாதா?  குறைஞ்சபட்சம் நம்ம கேட்டுக்குண்டான  லவுஞ்சிலாவது  எழுதி ஒட்டி இருக்கலாம்.  தெரிஞ்சிருந்தா  எதாவது சாப்பிடக் கொண்டுவந்துருக்கலாம். அதான் கேபின் பேகில் தீனி இருக்கேன்றார் கோபால்.அட!  ஆமாம்லெ.  பையைத் திறந்தால் ஆண்டாள் . மில்க் சமாச்சாரம் இங்கே நியூஸியில் கொண்டுவரத்தடை உண்டு. Mad Cow  பயம்தான்.

பால்கோவாவில் பாதியை முழுங்கிட்டு மீதிப் பொட்டலத்தைக் கைப்பையில் வச்சேன்.  ஒருமணி நேரம்  கழிச்சு  விமானம் ஏறும்போது  நம்ம  கையில் SIA நோட்டீஸ்  ஒன்னு  கொடுத்தாங்க. கிறைஸ்ட்சர்ச்சில்  ஒரே  fog. அதனால் விமானம் தரையிறங்கக் கஷ்டம் என்பதால்  ஒரு மணி தாமதமாகப் புறப்படுவதற்கு வருந்துகிறார்களாம்.  ஆமாம்..... பொல்லாத வருத்தம்.  இதை முதலிலேயே சொல்லி இருந்தால்  இன்னும் நிதானமா வேடிக்கை பார்த்திருப்பேனில்லையோ?

ஃப்ளைட் உள்ளே  போய் உக்கார்ந்தால் இன்னொரு அதிர்ச்சி.  என் பக்கம் ஜன்னலைக் காணோம். யாரோ எடுத்துட்டாங்க!!!!!!!.  அதான் இந்த வரிசை காலியா இருந்துருக்கு.  நல்லதாப்போச்சு. தூங்கலாமுன்னு சொல்றார் இவர். நறநற..........



நல்ல தூக்கம்முடிஞ்சு,  போது விடிஞ்சால் ப்ரேக்ஃபாஸ்ட் வருது.  யாராவது  இந்த ஏர்லைன்ஸ்க்குச் சொல்லப்டாதோ?  எண்ணெய் வழியும் குல்ச்சாவும்  உருளைக்கிழங்குக் கறியும்  காலை  உணவா?  அடப்போங்கப்பா........  முந்தியெல்லாம் இட்லி, வடை, உப்புமான்னு  வரும். இப்போ இதுவும் வடக்கா மாறிப்போயிருக்கு:(

வேணாமுன்னு ஒதுக்கி வச்சுட்டு  சீப்பை எடுக்க கைப்பையைத் திறந்தால்...........  நம்ம பால்கோவா!  நல்லவேளை இப்பவாவது  கண்ணில் பட்டதேன்னு  விழுங்கினோம். தலையில் இருக்கும் பூவை மறக்காமல் எடுத்துக் குப்பையில் போட்டேன். அபராதம் 200 டாலர்.

தரை தொட்ட விமானத்தில் இருந்து ஏர்ப்ரிட்ஜில் காலை வைக்கும்போது நம்மையெல்லாம் இடிச்சுத் தள்ளிக்கிட்டு முன்னால் ஓடிய பொடியன், 'மம்மி தண்ட் லக்ரஹா ஹை'ன்னு  அலறினான்.  குல்ச்சாவைத் தின்னுமா?  டூரிஸ்ட் போல! இப்பத்தான் ஜூன், இன்னும் மூணுநாலு மாசத்துக்குத் தண்டே தண்டுதான்:-)


பெட்டிகளுக்காகக் காத்திருந்தபோது   ஏர்ப்போர்ட் மோப்பநாய்  ரோந்து வந்தது.  அப்படியே என்பக்கம் வந்து நின்னு  துப்பட்டாவைத் தொட்டது.  அதற்குள் நாயாளர் பொண்ணு நம்மிடம் வந்துட்டாங்க.   தூரத்தில் நின்னு பொட்டிகளை எடுத்துக்கிட்டு இருந்த கோபால், என்ன ஆச்சோன்னு ஓடி வர்றார். எக்ஸ்க்யூஸ் மீ. உங்க ஹேண்ட் பேகைப் பார்க்கணும்.  பார்த்துக்குங்கன்னு  கொடுத்தேன்.  உள்ளே  சந்தேகப்படும் வஸ்து ஒன்னும் இல்லை.  ஆனாலும் நாய் பிடிச்சுட்டதால்  எல்லாப்பொட்டிகளையும் திறந்து காமிக்கத்தான் வேணும். அந்த வரிசையில் போனோம்.  ஒரு பையை மட்டும் திறந்த MAF  அதிகாரி,  வேறெதாவது  டிக்ளேர் செய்யணுமான்னார்.  தீனிப்பை மட்டும்தான்னு  காமிச்சதும் ஓக்கேன்னு க்ளியர்  ஆச்சு.

நல்ல பால்கோவாதான் போல.  நாய்க்கு  ரொம்பப் பிடிச்சிருச்சு:-)  ஸ்மார்ட் நாய். வெல் டன்.

ரெண்டு வாரங்களில்  நம்ம மூணு நாட்டுப் பயணம்  இப்படியாக முடிஞ்சது. கூட வந்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றீஸ்.

பயணம் உள்ளத்திற்கும் உடலுக்கும் நல்லது.
ஆதலால் பயணம் செய்வீர்!


முற்றும்..:-))))))




31 comments:

said...

நாய்க்கு ஒரு துளி பால்கோவா தந்திருக்கலாமே! கோபால் அப்பாவுக்கு பெட்டி அடுக்க பிடிக்குதுன்னா எங்க வீட்டுக்கு அனுப்புங்க. ஏன்னா, பெட்டி அடுக்குறதுன்னா எனக்கு அலர்ஜி!!

said...

//பயணம் உள்ளத்திற்கும் உடலுக்கும் நல்லது.//

உள்ளத்திற்கு சரி. உடலுக்கு ஒத்துக்கோணுமே? (80 வயசு)

said...

// நம்மவருக்கு இந்த பெட்டி அடுக்கல் ரொம்பப்பிடிச்ச சமாச்சாரம்:-) எப்படியோ மகிழ்ச்சியா இருந்தாச் சரி :-)))//
:)))))))))
பயணம் செய்யாமலே எல்லா அனுபவமும் கிடைக்கப்பெற்றோம் . மனசும் நிறைந்து குளிர்ந்தது . நன்றிகள் பல துளசிக்கு .

அடுத்து .......

said...

// நம்மவருக்கு இந்த பெட்டி அடுக்கல் ரொம்பப்பிடிச்ச சமாச்சாரம்:-) எப்படியோ மகிழ்ச்சியா இருந்தாச் சரி :-)))//
:)))))))))
பயணம் செய்யாமலே எல்லா அனுபவமும் கிடைக்கப்பெற்றோம் . மனசும் நிறைந்து குளிர்ந்தது . நன்றிகள் பல துளசிக்கு .

அடுத்து .......

the comment was sent by sasikala thrugh my daughter s Id .sorry for the confusion

said...

பயணம் நல்ல விதமாக முடிந்ததில் மகிழ்ச்சி டீச்சர். கூடவே வர முடிந்ததில் இரட்டிப்பு சந்தோஷம். :-)

அடுத்த பயணம் எங்கே? எப்போது? ;-)

said...

நீங்க நல்லபடியாக திரும்பி நியுஸி வந்தது எங்களுக்கும் பெரிய ஆசுவாசம்.
உட்கார்ந்த இடத்திலேயே எல்லாவற்றையும் பார்த்து, சாப்பிட்டு ரசிச்சாச்சு!
அருமையான பயணம். பத்துமலை முருகன் கண்ணிலேயே நிக்கிறார்!

said...

பால்கோவா அனுப்ப நான் ரெடி.....

said...

சிரங்கூன் சாலையை இன்னொரு முறை சுற்றிய மாதிரி இருந்தது.

said...

சிங்கைப்பயணம் சிறப்பாக இருந்தது. அனைத்து பயணங்களும் அருமையாக அமைந்ததற்கு வாழ்த்துகள் அம்மா.

said...

மனசாரச் சிங்கப்ப்பூரைப் பார்த்த திருப்தி. கஸ்தூரி அடிஷனல் போனஸ். மாறவே இல்லை. சிக்னு இருக்காங்க.
யம்மி சாப்பாடு. ஜன்னலில்லாப் பயணம். நாய் வந்து பிடிக்குது. அதுக்கும் பால்கோவா கொண்டுவந்திருக்கணும். பாவம் ஏமாந்து போய் விட்டது:)

said...

நிறைவான பயணப்பகிர்வு. கஸ்தூரி அவர்களைப் பற்றி (பழைய பகிர்வையும்) வாசித்து அசந்துபோனேன். அவர்களுக்கு அன்பான பாராட்டுகள். நோகாமல் நோன்பு கும்பிடுவது போல் உட்கார்ந்த இடத்திலிருந்தே உலகை வலம் வரும் அனுபவத்தை அளிப்பது துளசிதளத்தின் பெருமை. மிகவும் நன்றி டீச்சர்.

said...

ஆஹா! நாய்க்கும் பால்கோவா பிடிச்சிருக்கே....

பயணம்னாலே நீங்க தான் டீச்சர் ஞாபகத்துக்கு வருவீங்க...:)

said...

வணக்கம் டீச்சர்:)

மாங்கல்யம் தந்துனானே -ங்கிற சமயத்தில், மண்டபத்தில் ஆட்டோ வந்து சேருவது போல்...
சரியான நேரத்துக்கு வந்திருக்கேன்!:)

இனிய பயணம் இனிதே நிறைந்தது, விமானச் சாளரம் (ஜன்னல்) இல்லாமல்!:)

இருங்க, பழைய பதிவெல்லாம் படிச்சிட்டு வாரேன்:)
-------------

//ஒவ்வொருத்தர் கையிலும் ஒரு 32 இஞ்ச் எல் இ டி டிவி//

Take the 25000 rubees -ன்னு
மாண்புமிகு நிதியமைச்சர் பசி, சில மாதங்களுக்கு முன், இதுக்கு ஆப்பு வச்சிட்டார்:)))

said...

பயண இறுதியில் என் தோழி ஆண்டாளா?

ஆண்டாள் பால்கோவாவே சரணம்!
ச்ச்சே
ஆண்டாள் திருவடிகளே சரணம்:))
-------

கோமளா விலாஸ் எப்பமே அருமை! சுவை!
ஆனா, அதிகம்!
Plateஐக் கொஞ்சம் சிறுசு பண்ணலாமோ? எப்படித் திங்குறது அவ்ளோ?

//பழைய ஒரிஜனல் கடையை ஒட்டியே ஒரு முட்டாய்க்கடையும் இருக்கு//

yessu!
my fave அதிரசமும் அங்க தான் வாங்கினது:)
--------------

//725 மில்லியன் டாலர் யாவாரம்!//
mustafa mustafa - dont worry mustafa:)

//அடித்தளத்தில் இருக்கும் ஒரு சூப்பர் மார்கெட் என் ஃபேவரிட். அங்கே மல்லிப்பூ (உதிரியாக) கிடைக்கும். வாங்கிக் கோர்த்துக்குவேன்//

அந்த மல்லிப்பூ புகைப்படம் எங்கே?
ஆசை ஆசையாத் தேடினேனே!

//பயணம் உள்ளத்திற்கும் உடலுக்கும் நல்லது.
ஆதலால் பயணம் செய்வீர்!//

Yes, With my Murugavan!
வாடா டேய், ஊரெல்லாம் சுத்திக்கிட்டே இருப்போம்:)
Life is a Journey, There is No Destination till the last!




said...

//பயணம் உள்ளத்திற்கும் உடலுக்கும் நல்லது//

உங்கள் பயணங்களில் இன்னொரு பெரிய மகிழ்வு...
பல மொழிகளைக் கற்கலாம்!

பாருங்க, இந்தப் பதிவில் கூட Malay cholli koduthu irukeenga:)
--------

This is for Gopal Sir;
Teacher, Dont read; Close your eyes!

இரு பறவைகள்
மலை முழுவதும்
எங்கே எங்கே பறந்தன...
-ன்னு மயக்கும் ஜென்சி குரலில் இளையராஜா பாட்டு...

அதான் எனக்கு ஞாபகம் வரும், உங்க இருவரின் பயணத்தைப் பார்க்கும் போதெல்லாம்!
I always "dream" of going like this, keep on going, with most dear in the heart!

வாழ்க காதல் மயில்கள்
வாழ்க காதல் பயணம்:))

said...

ஆகா! பால்கோவா பாவம் நாயனார்.:)

இனிமையாக பயணித்தோம். நன்றி.


said...

பூச்செடிகளுக்கு கீழே இருக்கும் இனிப்பு வகைகள் உள்ள படம் (இருட்டுக்கடை அல்வா படம்...

இது மாதிரி இனிப்பு வகைகள் உள்ள இந்தியன் கடைப் பகுதிக்கு செல்லும்போது, என் மனைவியின் இடுப்பை அணைத்தபடி அப்படியே தள்ளிக்கிட்டு வெளியில் வந்துவிடுவேன்; அவர்களுக்கும் தெரியும் நான் ஏன் அப்படி செய்கிறேன் என்று! இருந்தாலும் சண்டை போட்டு வாங்கிவிடுவார்கள்.

ஏனோ தெரியவில்லை இந்த பெண்கள் இனிப்பு என்றால் ஏன் தான் இப்படி அலை பாய்கிறார்களோ?

பழிக்கு பழி: முன்பெல்லாம் நான் சிகெரட் குடிக்கும் பொது...இதே பல்லவி அவர்கள் பாடுவார்கள்; நான் நிறுத்தி விட்டதால் இப்ப என் முறை!

இனிப்பு உடம்புக்கு கெடுதல் தானே! நான் செய்வது சரி தானே! சுவர் இருந்தாத் தானே சித்திரம் எழுத முடியும்...!

said...

Plus vote 1 -போட்டுள்ளேன்!

said...

பயணம் உள்ளத்திற்கும் உடலுக்கும் நல்லது.
ஆதலால் பயணம் செய்வீர்!//
உண்மை.
நட்பை போற்றும் பதிவு.

படங்கள் எல்லாம் அழகு.

said...

வாங்க ராஜி.

அச்சச்சோ..... இந்த மோப்ப நாய்களைத் தடவிக் கொடுக்கவும் அனுமதி இல்லை.

அப்புறம் எங்கே துளி பால்கோவா?

பொட்டி அடுக்க இதோ கிளம்பி வர்றோம். கூட நான் எதுக்கு?
அப்பப்ப ஐயோ ஐயோன்னு கத்தறதுக்குத்தான்:-)))

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

நெடும்பயணம் எதுக்கு?

சிறு பயணங்கள் கூட மனதை உற்சாகப்படுத்துமே!

எம்பதெல்லாம் ஒரு வயசா????

said...

வாங்க ரம்யா அண்ட் சசி கலா.

வருகைக்கு நன்றிகள். மகிழ்ச்சிதான் வாழ்க்கையின் குறிக்கோள். நல்லா இருங்க!

said...

வாங்க ரிஷான்.

அடுத்த வெளிநாட்டுப் பயணம் இன்னும் ரெண்டு மாதங்களில்.

அதுவரை உள்ளூரில் சுத்தலாம்.

கூடவே வருவதற்கு நன்றீஸ்.

said...

வாங்க ரஞ்ஜனி.

அவர் இப்போ நம்மூட்டு பூஜை அறையிலும் நிக்கிறார்.

ௐௐௐௐௐ

ரசித்தமைக்கு நன்றிகள்.

said...

வாங்க பாபு.


அனுப்ப ரெடின்னதுக்கு நன்றி. ஆனால் நாட்டுக்குள் வர தடை இருக்கே:(

பைத்திய மாடு வியாதி பயமாம்!

பாலால் வளம் கொழிக்கும் இந்நாட்டில் பால்கோவா செய்யத் தெரியலையே:(

பவுடரா மாத்திடறாங்க:(

said...

வாங்க குமார்.

சிராங்கூன் சாலையில் பொதுவா மாற்றங்கள் ஒன்னும் அதிகமில்லை.

ஒன்னு ரெண்டு புதிய உணவகங்கள் ஒவ்வொரு முறையும்!

said...

வாங்க வேல்.

அனைத்தையும் வாசித்தமைக்கு என் நன்றிகள்.

பயணக்கதை(!!??) விருப்பம் என்றால் பல உள்நாடு அண்ட் வெளிநாடு சமாச்சாரம் நம்ம துளசிதளத்தில் இருக்கு.

நேரம் இருக்கும்போது அங்கே உலா வர்லாம்.

said...

வாங்க வல்லி.

நாய்க்கு மட்டும் கொடுத்திருந்தா.... அவ்ளோ ஏன்? கைப்பையில் மட்டும் பால்கோவா பாக்கி இருந்துருந்தா இந்நேரம் ஜெயில் அனுபவம் எழுதிக்கிட்டு இருப்பேன்:-)

said...

வாங்க கீத மஞ்சரி.

வீட்டு வேலை செய்யத்தான் உடம்பு வணங்காது. ஊர் சுத்தணுமுன்னா ரெடி.

நல்லவேளை .... நாலு திட்டு திட்ட பாட்டி இப்போ இவ்வுலகில் இல்லை.

சுத்துனா மட்டும் போதாது... அந்தக் கதையைச் சொல்லணும்,இல்லையா?

நல்ல வேளை ப்ளாக் இருக்கோ தப்பிச்சேனோ:-))))

தொடர்ந்த வருகைக்கு நன்றீஸ்ப்பா.

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

இப்பப் பயணக்கதைகள் ஏராளமானவர்களால் எழுதப்படுதேப்பா. எல்லாம் ஒவ்வொரு அனுபவம்.

அதென்னமொ பயணம் அலுப்பதில்லை எனக்கு!

தொடர்ந்த வருகைக்கு நன்றிப்பா.

said...

வாங்க கே ஆர் எஸ்.

சரியான சினிமாப்போலீஸ் நீங்க:-))))

பழையதை வாசித்து மகிழ்க என வாழ்த்துகின்றேன்.