'உங்களை இந்த வாசலில் இறக்கிவிடறேன். சுத்திப் பார்த்து முடிச்சதும் செல்லில் கூப்பிடுங்க. நான் வந்து பிக் பண்ணிக்கறேன். பார்க்கிங் ரொம்ப தூரத்துலே இருக்கு' ன்னார் நம்ம புத்ரா. எதோ நாற்சந்தி இது. நல்ல கூட்டம். ட்ராஃபிக்கும் தயங்கித் தயங்கித்தான் போகுது. மழை நின்னபாடில்லை இன்னும்:(
உபுட் அரண்மனை வாசலில் இருக்கோம். இங்கே மட்டும்தான் உள்ளே போகக் கட்டணம் ஒன்னும் இல்லை. சுத்துச்சுவருக்குள்ளே பெரிய திறந்தவெளி! முற்றமும் பெரிய பெரிய திண்ணை மண்டபங்களுமா இருக்கு. இடது பக்க முதல் மண்டபத்துலே அரண்மனைக் காவலர்கள். மழை நனையாமல் உக்கார்ந்து பார்வையாளர்களைப் பார்த்துக்கிட்டு இருக்காங்க.
சரியான வடிகால் இல்லாமல் முற்றத்தில் தண்ணீர் தேங்கி நிக்குது. கண் எதிரே ஒரு அலங்காரக் கதவு. மூடி இருக்குன்னாலும் அதுக்குப்பக்கத்தில் ரெண்டு பக்கமும் அடுத்த சுற்றுக்குப்போக வாசல்கள் உண்டு. இடது பக்க வாசல் வழியா உள்ளே நுழைஞ்சால் அங்கேயும்முற்றங்களும் தோட்டங்களும் ! நல்ல பராமரிப்பு. பிரகாரச் சுவருக்கு மேலே சின்னதாக் கோவில் விமானங்கள் போலுள்ளே தெரிஞ்சாலும் அங்கெல்லாம் போகமுடியாமல் ப்ரைவேட் ஏரியா என்ற போர்டு.
அரசகுடும்பத்தினர் இன்னும் இங்கே வசிக்கிறாங்க. எட்டாம் நூற்றாண்டில் இருந்து அரசர்களின் ஆட்சி இங்கே நடந்ததாக பனையோலைச் சுவடிகளில் எழுதுன ஆவணம் இருக்காம். அந்தக் காலங்களில் ஏகப்பட்ட சிற்றரசர்கள் சின்னச்சின்ன கிராமங்களில் அரசு நடத்தி இருந்து இருக்காங்க.
டச்சு நாட்டுக்காரர்கள் பிடியிலே இந்தோனேஷியா ஒரு நானூறு ஆண்டுகளுக்கு மேல் இருந்துருக்கு. அந்த காலக் கட்டங்களில் உள்ளூர் சிற்றரசர்களுக்கிடையில் ஏகப்பட்ட சண்டைகள் நடந்துருக்கு. சண்டை மூட்டி விட்டவர்கள் டச்சுக்காரர்கள்தானாம். பிரித்தாளும் கொள்கை நல்லாவே ஒர்க் அவுட் ஆகி இருக்குமே!
இவைகளில் இருந்து தப்பிப் பிழைச்ச அரசர்கள் அதிகமில்லை. அப்படி ஒரு அரச வம்சம் ஆண்டதுதான் இந்த உபுட். அவர்களுடைய அரண்மனைதான் இது. 1917 இல் நிலநடுக்கத்தில் அழிஞ்சு போனவைகளுக்குப் பதிலா கட்டுனவைகளே இப்போ நாம் பார்க்கும் கட்டிடங்கள் எல்லாம்!
அரண்மனைக்குள்ளேயும் போய்ப் பார்க்கலாமுன்னு எனக்குத் தெரியலை. அப்புறம் நம்ம கோவி கண்ணனின் 'காலம்' சேதி சொல்லுது அம்பதாயிரம் ரூபாய் கொடுத்தால் உள்ளேயும் பார்க்கலாமுன்னு. அடடா....தெரியாமப் போச்சே:(
ஆனால் அரண்மனை வாசியா தங்கலாம் நீங்க. பெட் அண்ட் ப்ரேக்ஃபாஸ்ட் ஸ்டைலில் ஹொட்டேல் நடத்துது அரசர் குடும்பம். அரச குடும்பத்தின் கிளைகள் பலவும் இப்ப ஹொட்டேல் பிஸினெஸில் இருக்காங்க. கிட்டத்தட்ட 11 இருக்குன்னு பட்டியல் சொல்லுது.( இதையும் இந்தியாவில் இருந்து கத்துக்கிட்டாங்க போல)
அரண்மனைத் தோட்டத்தில் இருக்கும் மா இப்போதான் பிஞ்சு விட்டுருக்கு. தரையெல்லாம் வடுக்கள். பேசாம அரசர் , அரண்மனை மாவடு ஸ்பெஷல் னுகூட ஒரு வியாபாரம் ஆரம்பிக்கலாம்.
இந்த அரண்மனை முற்றத்தில் மாலை நேரத்தில் ஒரு நாளைக்கு ஒருவிதமுன்னு தினமும் கலை நிகழ்ச்சிகளை நடத்தறாங்க. நாம் போன அன்று Legong Dance. மஹாபாரதக் கதை.
எனக்கு இந்த நிழல் பொம்மலாட்டம் பார்க்கணுமுன்னு ரொம்ப ஆசை. (Wayang Kulit . shadow puppet show)முகுந்தா..... முகுந்தா....... க்ருஷ்ணா முகுந்தா முகுந்தா வரம் தா வர ம் தா, ப்ருந்தா வனம்தா..... வனம் தா ( என்னமா எழுத்திட்டீர், ஐயா வாலி!!!) எங்கே நடக்குதுன்னு தெரியலை. ஹொட்டேலுக்குப்போய் விவரம் கிடைக்குதான்னு பார்க்கணும். அப்பதான் நினைச்சேன்...பேசாம மடிக்கணினியைக் கொண்டு போயிருக்கலாம்...ப்ச்....
அரண்மனை மண்டபத்தில் ஈரத்தோடு ஈரமா இருந்துட்டுப்போகட்டுமேன்னு பெரிய மனசு பண்ணும் நாய்!
மழை லேசா விட்டது. சரி, பார்த்தது போதுமுன்னு புத்ராவை செல்லில் கூப்பிட்ட ரெண்டாவது நிமிசம் வந்து பிக் பண்ணிட்டார். நாற்சந்தி கடைவீதிபோல ஒரே கலகல.
எங்கேயும் போகாமல் நேரா ஹொட்டேலுக்கு வந்துட்டோம். மறுநாள் எட்டு மணிக்கு புத்ராவை வரச்சொல்லிட்டு ஹொட்டேல் கார்பார்க்கைக் கடந்தால் Apa kabar? ( How are you?) என்று கரகரத்த குரல். ஆஹா.... நேத்து வாய் திறக்காமல் இருந்த மைனா நம்பர் 2 ! 'ஐ அம் ஃபைன். ஹௌ ஆர் யூ' ன்னுட்டு அறைக்குப் போனோம். அங்கே உம்மரத்தில் இருந்த கசேரகள் ஒன்னில் ஒரு பூச்ச! ம்யாவ்!!!
பூனைப்பசங்களுக்குக் கூட ஒவ்வொரு தேசத்தில் ஒரு முகம்! இது பாலினீஸ் இல்லையோ!.... கொஞ்சம் நீண்ட முகம். யார் வந்தா என்ன யார் போனா என்னன்னு நிம்மதியா உறக்கம். ஈர உடுப்பை அலசிப் போட்டுட்டு சூடா ஒரு ஷவர் எடுத்தபின்தான் கொஞ்சம் ஆசுவாசமா இருந்துச்சு. இந்த செருப்புதான் மழையில் நனைஞ்சே... ஊறிப்போன ப்ரெட் மாதிரி. அது காய்ஞ்சால் தான் நடக்க வசதிப்படும். லக்கேஜ் ரொம்ப வேணாமுன்னு ஒரு ஜோடி செருப்போட தான் வந்துருந்தேன்:(
அழைப்பு மணி என்ற ஆடம்பரம் கூட இல்லாத அறையில் நல்லவேளையா ஹேர் ட்ரையர் வச்சுருந்தாங்க. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.........கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்............
ரெண்டு காஃபி கொண்டு வரச்சொல்லிட்டு கோபாலும் குளிச்சுட்டு வந்தார். காஃபியும் வந்துச்சு. அதே ரெண்டு பெரிய ஜக். இப்படி மொடாக்குடியரா இருக்கமுடியுமோ? காஃபி குடிச்சுக்கிட்டே பேசறோம். தமிழ் பேச்சு தாலாட்டா இருக்கு போல... ஒரு அனக்கமில்லாமத் தூங்கறான்.
ரொம்ப அலைஞ்சுட்டோம். எங்கேயும் போகாமல் ஓய்வெடுக்கலாமுன்னு நினைச்சேன். நாளைக்கு இங்கிருந்து கிளம்பணும். நெல்வயலையும் கேரளவீட்டையும் விட்டுப்பிரியணுமேன்னு மனசு சோகம் பாடுது. அஞ்சரைக்குத் தூக்கம் கலைஞ்சு எழுந்து கட்டைச்சுவர் மேல் தாவி உக்கார்ந்தான்.
ராத்திரி சாப்பாட்டு? பிரச்சனை இல்லை/ அதே இந்தியன் கடைக்கு ஃபோன் போட்டால் ஆச்சு. மெனு கார்டை எடுத்து வச்சுக்கிட்டு அரைமணி நேரம் அலசி ஆராய்ஞ்சு ஏழரைக்கு கொண்டு வரச்சொல்லணுமுன்னு ஃபோன் செஞ்சால்............ சண்டே ஹாலிடே! போச்சுடா.....
தொடரும்............:-)

33 comments:
ரசித்தேன்... வாழ்த்துக்கள்...
உபுட் அரண்மனை அழகு. அங்க அரசகுடும்பம் வளக்கும் ஒரு நாய் இருந்துச்சே. பொன்னிறத்துல ஒரு வெளிநாட்டு வகை. சாதுவா வெளிய வந்து விளையாடுச்சு. நீங்களும் கோபால்சாரும் நிக்கிற கதவு வழியாத்தான் வெளிய வந்துச்சு. தொட்டுத் தடவிக் குடுத்தா பேசாம வாலாட்டுச்சு.
பூனையாரும் ரொம்ப அழகு. அந்தப் பூனைக்கு கூட துளசி டீச்சரையும் கோகியையும் பத்தித் தெரிஞ்சிருக்கு. அதுதான் உரிமை எடுத்துக்கிட்டு பழகியிருக்கு.
உங்க கைரேகை பார்த்து பலன் சொல்றேன். உலகம் சுத்துறவங்களுக்கு இருக்கிற புதன் மேட்டு ரேகை ரொம்ப பவர் புல்லா இருக்கு. இன்னும் சுத்துவீங்க அப்டின்னு கையிலேயே எழுதியிருக்கு. சுத்துங்க ,,, நல்லா சுத்துங்க.
கைரேகை பார்த்ததற்கு பீஸ் பிறவாட்டி வாங்கிக்கிறேன்!
//டச்சு நாட்டுக்காரர்கள் பிடியிலே இந்தோனேஷியா ஒரு நானூறு ஆண்டுகளுக்கு மேல் இருந்துருக்கு//
ஆகா!
டச்சுக்காரன் எந்தச் சிலையும் கடத்திட்டுப் போகலீயா, பாலியிலிருந்து? வியப்பா இருக்கே!:)
திருச்செந்தூர் உற்சவரு = சண்முகரைக் கடத்திட்டுப் போனாங்களே டச்சு மச்சான்ஸ்! அது போலப் பாலியில் ஆடலை போல?:)
//எனக்கு இந்த நிழல் பொம்மலாட்டம் பார்க்கணுமுன்னு ரொம்ப ஆசை//
Me too:)
"தோல் பாவை நிழற் கூத்து" -ன்னு தமிழ் இலக்கியம் பேசும்!
தென் தமிழகம் தேனி பக்கம், இந்தக் கூத்து, இன்னும் இருக்காம்!
ஆனா, இது வரை நான் பாத்ததே இல்ல! படிச்சதோட சரி:(
"கூத்தாட்டு" அவைக் குழாத்தற்றே -பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று!
-ன்னு ஐயன் வள்ளுவன் சொல்லுவாரு!
செல்வம், கூத்து ஆட்டும் அவையில் வரும் மக்களைப் போலவாம்! வருவதும் தெரியாது, போவதும் தெரியாது; ஆனா கூத்து முடிஞ்சிக் கண்டிப்பாப் போயீரும்:))
அறிஞர் அ.கா. பெருமாள், இந்தத் தோல்பாவை நிழற்கூத்து பற்றி, காலச் சுவட்டில் ஒரு முறை எழுதினாரு;
பாவம், ஒரிரு கலைஞர்களே, அத்தனை பாவையும் விதம் விதமா ஆட்டணுமாம்!
ஆளுக்குப் பொம்மை செய்யலாம்; அத்தனைக்கும் பொம்மை செய்ய முடியுமா? ஆளு கையில் வில்லு-ன்னா, வில்லுக்கு ஏத்தா மாதிரி, தங்கள் கை (அ) விரல்களையே விதம் விதமா மடக்கி ஆட்டணும்!
குரலும் மாத்தி மாத்திக் குடுக்கணும் போல!
இவ்வளவும் பண்ணிட்டு, வர சன்மானம் பாத்தா, தன்மானம் போயீரும்:((
//முகுந்தா முகுந்தா//
தசாவதாரமும் நிழலில் காட்டும் கூத்து-ல்ல?
என்ன செய்ய நானோ
ஓர் பாவை தான்!
உந்தன் கைகள் ஆட்டி வைக்கும்
நூல் பாவை தான்!
வாலியின் தமிழ் விளையாட்டே விளையாட்டு!
//பிருந்தா வனந்தா வனந்தா//
* பிருந்தாவனந்தா - அனந்தா -ன்னும் எடுத்துக்கலாம்!
* பிருந்தா வனம் தா(வும்) அனந்தா -ன்னும் எடுத்துக்கலாம்! பொண்ணுங்க பின்னாடித் "தாவுனவன்" தானே?:)
//இந்த செருப்புதான் மழையில் நனைஞ்சே... ஊறிப்போன ப்ரெட் மாதிரி//
(டீச்சர் போன்ற) வல்லவளுக்குச் செருப்பும் ஆயுதம்:))
Hair Dryer வச்சா உலர்த்துவாங்க?:)
பாவம், ஒங்க செருப்பில் உள்ள தொண்டர் "அடிப்பொடி"...
அடுத்து அந்த Hair Dryerஐப் பயன்படுத்தும் பக்தனின் தலையில்!:))
முருகனைச் "செருப்பும் விளக்குமாறும்" வச்சிக் கும்புடுவாரு காளமேகம்!:)
"செருப்புக்கு வீரர்களைச் சென்றுழக்கும் முருகா..
வண்டே விளக்கு மாறே"-ன்னு சிலேடையா எழுதுவாரு:)
செருப்பு = போர்; விளக்கும் ஆறு = விளக்கும் வழி!
----
இந்தப் படத்தில் கூடப் பாருங்க டீச்சர், கோயிலில் உள்ள சிங்கச் சிலைக்குக் கூட, லுங்கி போல துணி சுத்தி விட்டுருக்காங்க!
No God is Naked in Bali, Too bad:))
-------
அந்த மைனா (எ) "நாகணவாய்ப் புள்" கிட்ட, அதன் மொழியிலேயே பேசக் கூடாதா நீங்க?:)
அந்தப் பூனை தூங்கும் சொகமும்,
அதுக்குப் பக்கத்துல..
நீங்க தலை காயும் சொகமும் பாத்தவுடனே...
கோகி ஞாபகம் வந்துருச்சி! மன்னிக்க!!
//அரண்மனைத் தோட்டத்தில் இருக்கும் மா இப்போதான் பிஞ்சு விட்டுருக்கு. தரையெல்லாம் வடுக்கள்//
Haiyo! I love maa vadu:)
மாவடு பால் பட்டா, வாய்ல்ல புண்ணு வரும்; இருந்தாலும், அந்தப் புளிப்புக்காகவே கடிப்பேன்:)
அங்கேயே, கொஞ்சம் மஞ்சள் கலந்து, கல்லுப்பு கொட்டி, நல்லெண்ணைய் விட்டு, மாவடுவை மிதக்க விட்டுருக்கலாம்-ல்ல?
அரச குடும்பத்தில், ஒங்களுக்கு "ராஜ மரியாதை" கெடைச்சிருக்குமே டீச்சர்? மிஸ் பண்ணிட்டீங்க:)
மாவடு தீர்ந்தாலும் அந்த மாவடுச் சாறு... haiyo!
சத்தம் தீர்ந்தாலும், முத்தம் தீராது.. போல, அத்தனைச் சுவை!:))
எவ்வளவு பசுமைப்பா.மழைல குளிரவில்லையா!!
மொத்தமுமே அழகான ஊர் இந்த ஊராத்தான் இருக்கும். அதுக்குள்ள கிளம்பறீக்களேன்னு இருக்கு.பூனையாகப் பிறந்தால் இந்த மாதிரி ஊர்களில்தான் பிறக்கணும்:)
தேங்கிக்கிடக்கற வெள்ளத்தில் கத்திக்கப்பல் விடலாமேன்னு தோணுது.
பூச்சக்குட்டி கொள்ளாம். சடவு கூடுதல் போல, ஒறங்கட்டு :-)
முகுந்தா.. முகுந்தா.. ஹைய்யோ..
வாங்க திண்டுக்கல் தனபாலன்.
ரசித்தமைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.
வாங்க ஜிரா.
அடடா.... கப்பு நாயல்லவோ நாம் பார்த்தது! பொன்னைக் காணோமே:(
ஆமாம்... நீங்க பாலி பயணம் பற்றி எழூதினீங்களா? எப்போ போய் வந்தீங்க?
எழுதி இருந்தால் சுட்டி ப்ளீஸ்.
பூனைக்காரியை எளிதில் கண்டுக்கிச்சு போல:-)
வாங்க தருமி.
அடடா..... நல்லா சுத்திட்டீங்களே:-)))))
சைடு பிஸினெஸ் எப்போ ஆரம்பிச்சீங்க????
வாங்க கே ஆர் எஸ்.
சிலைகளைக் கொண்டு போயிருக்கலாம்தான். எனக்கு விவரம் கிடைக்கலை:(
ஆனாலும் நம்ம பக்கத்து சிலைகள் போல அம்சம் இல்லை. எல்லாம் பூத கணங்களே!
என்ன.... தேனிப்பக்கம் தோல்பாவைக் கூத்து இருக்கா?
கோபாலிடம் கேக்கணும்.புள்ளி ஃப்ரம் போடி நாயகனூர்.
ராஜஸ்தான் பொம்மலாட்ட பொம்மைகளை திரைக்குப்பின் வச்சு ஆட்டினால் எப்படி இருக்குமுன்னு யோசிக்கிறேன். ஒருத்தரேதான் ஆட்டி வைக்கிறார்.
முகுந்தா முகுந்தாவில் கூட கிடைச்ச பொருட்களை எல்லாம் வச்சுதானே ஆட்டம் காமிக்கறாங்க.எனக்குப்பிடிச்ச ஸீன் அது! அதுலே குத்து விளக்கைத் தள்ளிவிட்டுட்டு ஓடிய , கண்ணாடிக் க்ருஷ்ணன் தீ பரவியதும் பயந்து பெஞ்சுலே சாய்ஞ்சு நிக்கறது ரொம்பப்பிடிக்கும். வீணை வாசிக்கும் குழந்தை முகம் இப்படி எல்லா குழந்தைகளின் பாவமும் சூப்பர்.
வாலியின் தமிழ்... வெல்ல முடியாதது!
கே ஆர் எஸ்.
அடடா.... தொண்டர் அடிப்பொடி ஒன்னும் இல்லையாக்கும் கேட்டோ! ஹேர் ட்ரையரில் வரும் சூடு காற்றை செருப்புக்குக் காமிச்சதுதான்.
இப்போ நம்ம வீட்டுலே ரஜ்ஜு என்னும் ராஜலக்ஷ்மி இருக்கான்.
அப்பா செல்லம்:-)
http://www.youtube.com/watch?v=rbingeqJcgY
மாவடு ரசிகரே!! நன்றி நன்றி.
வாங்க வல்லி.
அந்த ஊரில் பூனைன்னா கருவாடுதான் கிடைக்கும். நியூஸியில் பூனையாப் பிறந்தால் வகைவகையான சாப்பாடும் இஷ்டம்போல் ஓய்வும்.
பேசாம நம்மூரில் பிறந்துருங்கப்பா.
வாங்க அமைதிச்சாரல்.
ரசிப்புக்கு நன்றீஸ்ப்பா.
இப்போது இங்கு நிலவும் குளிருக்கு, அங்கே மழையையும் ஜில்லிட்டிருக்கும் இடங்களையும் பார்த்தாலே உடல் நடுங்குகிறது. அழகான புகைப்படங்கள். மாவடுவைப் பார்க்கும்போது நாவூறுகிறது. சொகுசுப்பூனை விழித்தபின்னும் சொக்கிக்கொண்டிருக்கிறது. ரசனையான அனுபவங்களின் பகிர்வுக்கு நன்றி டீச்சர்.
அரண்மணை படங்களும் உங்களுக்குப் பிடித்த பூனையின் படங்களும் ரசித்தேன்.....
வார்த்தைகளிலே சதிராட்டம் வாலிக்கு கை வந்த் கலை.
வாலியை நினைவு படுத்தி ஹார்ட்டிலே வலி வந்துடும்போல..
கொஞ்சம் அந்த் காபி லே கொஞ்சம் ஊத்துங்க...
சுப்பு தாத்தா.
நியூ ஜெர்சி.
www.subbuthatha72.blogspot.com
// அடடா.... கப்பு நாயல்லவோ நாம் பார்த்தது! பொன்னைக் காணோமே:( //
அது அரசகுடும்பம் வளக்குற நாய்னு சொன்னாங்க. கதவு சரியா மூடலைன்னா வெளிய வந்துரும் போல. :)
// ஆமாம்... நீங்க பாலி பயணம் பற்றி எழூதினீங்களா? எப்போ போய் வந்தீங்க?
எழுதி இருந்தால் சுட்டி ப்ளீஸ். //
போய்வந்தது 2009ல். பதிவெல்லாம் எழுதலம்மா.
// பூனைக்காரியை எளிதில் கண்டுக்கிச்சு போல:-) //
பூனை (நூற்)கண்டு பிடிக்கும்னு ஒங்களுக்குத் தெரிஞ்சிருகுமே :)
சொகுசுப் பூனை:)!
படங்களும் பகிர்வும் அருமை.
படங்கள் பெரிதாக இருக்க ரசிக்க நன்றாகவே இருந்தது. படங்களைப் பார்த்தவுடன் நீங்க இந்த ஜில் என்ற அனுபவித்த உணர்வு ஊருக்கு வந்தும் பல நாட்கள் அப்படியே மனசுக்குள் இருந்துருக்க வேண்டுமே?
போட்டோஸ் அனைத்தும் அருமை !!
அரண்மனை படங்கள் அழகாக இருக்கின்றன.
பூனை ராஜா படு ஜோர்.
வாங்க கீத மஞ்சரி.
இந்தப் பயணமே ஒரு விண்ட்டர் எஸ்கேப்தான். நாலு மாசம் ஆளை முடக்கிப் போட்டுருதே:(
அனைத்தையும் ரசித்தமைக்கு நன்றீஸ்.
வாங்க வெங்கட் நாகராஜ்.
ரசிப்புக்கு நன்றி.
வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.
சதிராட்டம்.... சபாஷ்! சரியான சொற்பிரயோகம்!
ஒரு முழு ஜக் காஃபி உங்களுக்குத்தான்.
என்னங்க ஜிரா.
போய் வந்த இடம் பற்றி எழுதலேன்னா எப்படி? பதிவர்க்கழகு பயணம் எழுதுதல் அல்லவோ!
வாங்க ராமலக்ஷ்மி.
ரசிப்புக்கு நன்றீஸ்.
வாங்க ஜோதிஜி.
திரும்பியவுடன் விமானநிலையம் விட்டு வெளிவரும் போதே.... குளிர் கிடுக்கிப்பிடி போட்டுப் பிடிச்சுருச்சே! 30 டிகிரியில் இருந்து 2 டிகிரிக்கு சரேல்னு இறங்கிட்டோம்:(
வாங்க சசி கலா.
ரசனைக்கு நன்றி.
வாங்க மாதேவி.
பூனை ராஜாவின் அழகுக்குக் கேட்கணுமா?
நிம்மதியான வாழ்க்கைப்பா:-)
நெல்வயலையும் கேரளவீட்டையும் விட்டுப்பிரியணுமேன்னு மனசு சோகம் பாடுது. அஞ்சரைக்குத் தூக்கம் கலைஞ்சு எழுந்து கட்டைச்சுவர் மேல் தாவி உக்கார்ந்தான்.//
அழகான இயற்கை சுழல் நிறைந்த இடம். பூனையாரும் அழகு.
Post a Comment