Monday, July 15, 2013

கண்ணுக்கு(ம்) விருந்தாக ஒரு கலையழகு! (பாலி பயணத்தொடர் 13 )

318 என்ற அறைச்சாவியைக் கையில் வாங்குனதும் என் முதல் கேள்வி  லிஃப்ட் இருக்கா? இங்கே இல்லையாம்:(  அட ராமா......  சொல்லி  வாய்மூடுமுன் தரைத்தளம்தான் என்று வயிற்றில் பால் வார்த்தார் வரவேற்பாளர்.

ஸென்டானா  ரிஸார்ட்.  இந்த முறை மொத்தப் பயணத்திலும் என்ன பார்க்கப்போறோம் எங்கே தங்கப் போறோம் என்பதையெல்லாம்முழுசா கோபாலிடம் ஒப்படைச்சுட்டேன். ஹோம் ஒர்க் செஞ்சுக்கத்தோணலை. எது வருதோ அதுன்ற எண்ணம். ஆன்மீகவாதியாகிட்டேனோ என்னவோ!!!ஆடம்பரம் இல்லாத சிம்பிளான வரவேற்பு குடில். ஓடு வேய்ஞ்சுருக்கு.  ரெண்டு பக்கமும் திறந்த வெளி.  முன்னால்  சின்னக்குளம். அதில் நீந்தும் தங்க மீன்கள்.  முன் வாசலில்  கார் பார்க். இடது பக்கம் ஒரு நீச்சல் குளம். வெயில் காய சாய்மானக் கட்டில்கள், ஒரு ஊஞ்சல், நிறைய மரஞ்செடிகொடிகள் நிலத்திலும் தொட்டிகளிலுமாய்.  பத்மாஸனா சாமி மஞ்சக்குடையின் கீழ் இருக்கார் (!!)

பணியாளர் நம்மை நம்ம அறைக்கு  வழிகாட்ட, நாம் அவர் பின்னே!   வரப்பு போல் ஒரு பாதை.  கொஞ்சம் அகலமா  மூணு அடி இருக்கும் காங்க்ரீட் பாதை. வலது பக்கம்  அஞ்சடி ஆழத்தில்  நெல் வயல். இடது பக்கம்  ரெண்டு கட்டிடங்கள்.  இதுலே ரெண்டாவது  கட்டிடத்தில்  இடதுபக்க அறை நமக்கு.  அச்சு அசலா கேரள வீட்டு உம்மரம். சாரு கசேறை உண்டு கேட்டோ!  பின்னே ரெண்டு நாற்காலிகளும்  காஃபி டேபிளுமாய்  ஒரு பக்கம்.


கதவு ஜன்னல் அலங்காரம் பார்த்து அப்படியே அசந்து போயிட்டேன். தாய்லாந்து புத்தர் கோவில்களில் இப்படி அழகான கதவுகளை பார்த்து ரசிச்சது நினைவுக்கு வந்தது.  அலங்காரக்  கதவு திறந்ததும்  மயங்கி விழாத குறை!  கொசுவலை போட்ட   பெரிய கட்டில். இதுவுமே மூங்கில் தான். அறைச்சுவர்கள் எல்லாம்  பளபளக்கும்  மூங்கில் பட்டைப் பின்னல்கள்.   அடைசல் இல்லாத  அலங்கார மேசை,  படுக்கைக்கு ரெண்டு பக்கமும் ரீடிங் லேம்ப்கள் வைக்க ஸ்டூல்கள்.  ஒரு கடிகாரமும் தொலைபேசியும்.  டிவி இல்லை!!!! ஹப்பாடா.... சனியன் ஒழிஞ்சதுன்னு  நிம்மதி எனக்கு.

நல்ல பெரிய குளியலறை.  தேவையான   சோப்பு ஷாம்பூ சமாச்சாரங்கள்.  எல்லாம் ஜஸ்ட்  பேஸிக்  அண்ட் நீட்.

ரெண்டு கட்டிடமுன்னு சொன்னேன்  பாருங்க. ஒவ்வொன்னிலும்  நாலு அறைகள். மாடியில் ரெண்டு கீழே ரெண்டு. இந்தப்பகுதிக்கு  அதாவது வயல் வியூ பகுதிக்கு  எட்டு அறைகள். ஒவ்வொரு  கட்டிடத்துக்கும் தனி வழி. அருமையான பராமரிப்புள்ள அட்டகாசமான  புல்வெளியில்  நேராவும் பக்கத்துக்கொன்னாவும்  மூணாகப்பிரியும் பாதை.  நேர் பாதை மாடிப்படிக்கு.  மாடி வாசலுக்கு  வேட்டி கட்டுன ரெண்டு த்வாரபாலகர்கள்.  நம்ம அறைகளுக்குப்போகும் பாதையின் ரெண்டு பக்கமும்  அழகான மரஞ்செடி கொடிகள்.  பார்க்கப்பார்க்க மனசு நிறைஞ்சு போச்சு.


கோபாலுக்கும் கொசுவத்தி!  கேரள வாழ்க்கையை நினைச்சுக்கிட்டார் போல! சட்ன்னு லுங்கிக்கு மாறி சாரு கசேறயைப் புடிச்சுக்கிட்டார். ஓ.... காரணவர் அல்லே!!!! அதுக்குள்ளே வெல்கம்  ட்ரிங் வந்தது.  பேசாம இங்கேயே  இருந்துடலாமான்னு ....    கொஞ்சம் ஓய்வு, ஒரு ஷவர்ன்னு  முடிச்சு  ஊர் சுத்திப் பார்க்கலாமான்னு கிளம்பினோம்.  கால்வலி என்பதால் எனக்கு ஒரு சுணக்கம். வரும்போது கடைவீதி பார்த்தோமே  அங்கே ஒரு வாக் போயிட்டு வரலாமுன்னார்.  தூண்டில் வேலை செஞ்சது.

நீச்சல் குளத்தைக் கடந்து போனப்ப ஒரு கூண்டில் மைனா ஒன்னு.   கார் பார்க் கடந்து வெளியே போகுமிடத்தில் இன்னொரு கூண்டு, அதிலும் ஒரு மைனா.  நம்ம ஸெண்டானா  தெருவிலிருந்து கொஞ்சம் உள்ளே தள்ளி இருக்கு.   நல்லதுதான். கடைத்தெருவின் களேபரம்  காதுக்கு எட்டாது.


இந்த சாலையின் பெயர்  சேக்ரட் மங்கி ஃபாரஸ்ட் ரோட்.  சரிவான சாலையா இருக்கு.  வலது பக்கம் ஏத்தம் என்பதால் இடது கைப்பக்கம் போனோம்.  நாம் வந்த சாலைதான். கலைப்பொருட்கள் கொட்டிக்கிடக்கு கடைகள் எங்கும்.  யானைக்கும் பூனைக்கும் குறைவே இல்லை.


 இந்து மதம் என்றவுடன்  யோகா செண்டர்களும்  ஏராளம். வகுப்புகள் நடத்துறாங்களாம்.  கூடவே   ஆர்ட் , ஆயுர்வேதம், அக்குபஞ்சர், சமையல் வகுப்புகள்,  அந்தத் தெரப்பி இந்தத் தெரப்பி ன்னு  டூரிஸ்டுகளைக் குறி வச்சே எல்லாமும்.  மசாஜ்  இன்னொரு  தொழில்.   அரை மணிக்கு அறுபதாயிரம்தான்னு  மக்களைப் பிடிச்சுக்கிட்டுப்போக  இளம் பெண்கள்   அடிக்கொன்னா நின்னுக்கிட்டு இருக்காங்க.


எல்லாக் கடைகளின் வாசலிலும் ஒரு சாமி.ஒரு  பூ அலங்காரம் இப்படி .... கடைக்காரரின் கலாரசனை   சூப்பர், இல்லே!!!

துளஸி  தேவி  பெண்கள் என்னிடம் கேட்டப்ப,  இது என்னுடைய பார்லர்தான். எங்கிட்டேயே  கேட்டால் எப்படின்னேன்:-)இறக்கம் என்பதால் கொஞ்சம் சுலபமாவே கீழே மெயின் ரோடுக்குப் போயிட்டோம்.  கண் எதிரில்  புனிதக் குரங்குக் காடு.

உள்ளே போகக் கட்டணம் உண்டு. ஆளுக்குப் பதினைஞ்சாயிரம்.  வாசலில்  நாம் செய்யக்கூடாதவை, குரங்குகள் செய்யக்கூடியவைன்னு  தகவல்களைக் கல்லில் பொறிச்சு வச்சுருக்காங்க. போர்டு வச்சா...அதையும் குரங்கு தூக்கிட்டுப்போயிரும் போல!  இன்னொரு இடத்தில் போர்டை நல்லா ஆணி வச்சு அடிச்சுருந்தாங்க.  உள்ளே மூணு கோவில்கள் கூட இருக்காம்.

இப்பவே மணி அஞ்சே கால்.  சட்னு இருட்டிரும். அப்புறம் எங்கே  உள்ளே போய் பத்திரமாத் திரும்பி வர்றது?  மேலும் கண்ணாடி போட்டுக்காதேன்னால்....   அப்புறம் என்னத்தைப் பார்ப்பேன்?  நேத்து நல்ல ஃப்ரெண்ட்லி மங்கீஸ் பார்த்தோமே அது போதுமுன்னு  உள்ளே போகலை.

திங்கிற சாமான் எதுவும் கண்ணில் காமிக்காதேன்னுட்டு  அங்கே காட்டு வாசக்கேட் பக்கம் வாழைப்பழம் வச்சு வித்துக்கிட்டு இருக்காங்க. குரங்குகளுக்கு வாங்கிப் போடவாம்!!!

நேத்துப் பார்த்த அதே   macaque இனக் குரங்குகள்தான் இங்கேயும். நீண்ட வால்கள். இதுகள் பாட்டுக்குக் கடைவீதியில் எல்லாம் வந்து சுத்திக்கிட்டு இருக்குதுங்க. குப்பைக்கூடையைப் பார்த்தால் விடறதில்லை:(

ஹொட்டேலுக்குத் திரும்பி வரணுமுன்னா ஏத்தத்தில் ஏறணும். எனக்கோ காலு பயங்கர வலி.  டெக்ஸி எடுத்துக்கிட்டு போயிடலாமுன்னு   கேட்டால்  ஒரு லட்சம் கொடுன்றாங்க.  ஒன்வே. நாங்க சுத்திக்கிட்டுத் திரும்பி வரணும்.  வேணாம் மெள்ள நடக்கறேன்னு சொன்னேன். அதுக்குள்ளே இவர் இன்னொரு டெக்ஸிகிட்டே  நாப்பதாயிரத்துக்கு பேரம் முடிச்சுட்டார்.   எண்ணி மூணே நிமிசம்.  வந்து சேர்ந்தோம்.
 கல்லைக்கூட விட்டு வைக்காமல் க(த)லையோ க(த)லை!

ராச்சாப்பாட்டுக்கு என்ன செய்யலாமுன்னு  யோசனையோடு வரவேற்பில் நல்ல சாப்பாட்டு விவரம் விசாரிக்கலாமுன்னு போனால் அங்கே ஒரு மேஜையில்  தினசரி டூர்,  மஸாஜ்,  அது இதுன்னு  ப்ரோஷர்ஸ்  கிடந்துச்சு. என் கண்ணில் பட்டது  க்வீன்ஸ் ஆஃப் இண்டியா ஹோம் டெலிவரி மெனு.

அடிச்சக்கை. இந்திய உணவகமா?  எவ்ளோ நாளாச்சு  நல்ல சோத்தைத் தின்னு! (உண்மையைச் சொன்னால்  இன்னிக்கு மூணாவதுநாள்தான். ஆனால் ஒருநாள் உணவை ஒழி என்றாலொழியாய் என்று  அவ்வைப்பாட்டி அன்றே சொல்லிட்டாங்களே!)  அதில் இருந்த  தொலைபேசி எண்ணைக்கூப்பிட்டு  சாதம், பருப்பு, நான்,  காலிஃப்ளவர் ஆலூ கறின்னு ஆர்டர் கொடுத்தால்  இப்பவே கொண்டு வரட்டுமான்னு கேக்கறாங்க. ஐய்ய....மணி  ஆறுதான் இப்பவேவா?  ஏழரைக்குன்னு சொல்லிட்டு அறைக்குப் போகும் வழியில் காலடி வச்சேன்.

ஹலோ.....

ஹை ஹலோன்னு சொல்லிட்டுத் திரும்பினேன் . கரகரத்த குரலில் கூப்பிடுவது யாரு?

அட...மைனா! நீ பேசுவியா!!!!  தெரியாமப்போச்சே!  கொஞ்சம் நின்னு அதனுடன் கொஞ்சம் கதைச்சேன். மலாய்கூட பேசுதுப்பா!!!!

காலில் சூடா வெந்நீர் அபிஷேகம் பண்ணியதும் வலி  கொஞ்சம் குறைஞ்சது.  வீட்டு முன்புறத்தில்  மாலைக்காற்றை அனுபவிச்சபடி  நெல்வயலில் கண்ணு நட்டபடியே , மறுநாள் என்ன செய்யப்போறோமுன்னு கேட்டதுக்கு  உனக்கான ஸ்பெஷல் டே என்றார் கோபால்.  காலை எட்டரைக்கு வண்டிக்குச் சொல்லி இருக்கேன்னார்.  இது எப்ப?

நீ  ஓடி ஓடிப்போய்  நெல்வயலை க்ளிக்கிக்கிட்டு இருந்தியே அப்ப!

அப்படி எங்கே போறோம்?  யானை  ஸஃபாரி! ஹைய்யோ!!!!!

கட்டை சுவத்துக்கு மேல் ஒரு கல்லைக் கூட க்ரோஷாவால் அலங்கரிச்சு வச்சுருக்காங்க. இன்னொரு பக்கம் ஒரு குடை!

ஏழரைக்கு டான்னு சாப்பாடு வந்துருச்சு. அப்பளம், ஊறுகாய், ரைத்தான்னு  ...ஓஹோ பேஷ் பேஷ். ஒரு லட்சத்து தொன்னுத்தியஞ்சாயிரம்தான்:-) பாலியில் நாலு இடத்தில் கிளைகள் இருக்கு இதுக்கு. மனசில் குறிச்சு வச்சுக்குங்க. ஒரு நாள் தேவைப்படலாம்!

சாப்பாட்டு டைமில் ஒரு அதிதி வந்தார்.   ஏற்கெனவே சாப்பிட்டுட்டார் போல! வயிறு ஊதியே இருந்தது. ஆனாலும் பார்க்க வச்சு திங்க முடியாதுன்னு கொஞ்சம் வெறும் சோறு போட்டேன்.  பயந்து நடுங்கி தூணுக்குப்பின் போய் ஒளிஞ்சார்.

தூக்கத்திலும்கூட நாளைக்கு யானை யானை:-)

தொடரும்...:-)

26 comments:

said...

ஒரு லட்சத்து தொன்னுத்தியஞ்சாயிரம் "தான்" - மயக்கம் வருகிறது...!

என்னவொரு அழகான இடம்...! படங்கள் ஒவ்வொன்றும் அருமை... அனுமாரும் பிள்ளையாரும் மனதை மிகவும் கவர்ந்தன... வாழ்த்துக்கள்... நன்றி....

said...

//கதவு ஜன்னல் அலங்காரம் பார்த்து அப்படியே அசந்து போயிட்டேன். அலங்காரக் கதவு திறந்ததும் மயங்கி விழாத குறை! கொசுவலை போட்ட பெரிய கட்டில்.//

Sorry டீச்சர்..
முதலிரவு அறை போல ரொம்ம்ம்ம்ம்ப அழகா இருக்கு:)

அந்த கட்டில் ஓர-மூங்கில் நல்ல அழகு!
இன்பம் கட்டிலா - அவள்
தேகக் கட்டிலா
---

கட்டில் மேல் காலில் வலைகளோடு, பூச்சரமும் தொங்க விட்டுருந்தா..
Reading Lamp க்குப் பதிலாக, Candle வச்சிருந்தா.. ஹைய்ய்யோ :))

said...

அந்தப் பூ அலங்காரமும்.. இலையோடு சேர்த்து.. கொள்ளை அழகு!

தண்ணியில், வெறுமனே பூவாக் கொட்டி வச்சாத் திகட்டும்! Artificial என்ற உணர்வு வரும்!

ஆனால், இவிங்க இலைகள் பரப்பி, பூ அடுக்கியுள்ள விதம் அழகு! தாமரைக் குளமும் இலைகளோடு தானே இருக்கும்!
---

அந்தப் பொய்த்தவப் பூனையார், மாமல்லபுரச் சிற்பம் நினைவு படுத்தறாரு!:)

ஒரு மைனா மைனாக் குருவி மனசாரப் பேசுது, மாயங்கள் காட்டுது ஓய் ஓய்:)
"நாகணவாய்ப் புள்" கேள்விப்பட்டு இருக்கீயளா சங்கத் தமிழில்? சாட்சாத் இந்த மைனாவே தான்:)

said...

முல்லைக்குத் தேர் ஈந்தான் பாரி!
தவளைக்குச் சோறு ஈந்தாள் துளசி:)))

//ப்படி எங்கே போறோம்? யானை ஸஃபாரி! ஹைய்யோ!!!!!//

ஓஓஓ.. அந்தப் படம்!
துளசி மகா ராணி,
யானை மேல ஏறி வந்த
நாகரீக ராணி
- பாட்டு இங்கே தானா?:)

said...

மயங்கி போய்ட்டேன் !!! என்ன அருமையான தங்கும் இடம் . நெல்வயற்பரப்பு போட்டோ இல்லையே :(

பூனையாரின் ஆசன போஸ் சூப்பர்!! அனுமன் அழகு . கால் வலி இப்போ பரவால்லயா . Take care .

said...

few days back
viewed the video in G+ and commented too . badhil varalaiye :(

said...

ஈஸிசேர் ரொம்பப்பிடிச்சிருக்கு.

தவமாய்த்தவம் செய்பவர்கள் எல்லோருமே அழகு. இங்கியாவது யானை கிடைச்சுதே. அதுவும் நியூசிக்கு வந்துச்சா இல்லை விட்டுட்டு வந்துட்டீங்களா :-))

said...

படங்களும் அதிலுள்ள இடங்களும் அழகோ அழகு!

said...

கையை மேலே தூக்கி தவம் செய்யும் பூனையார் ரொம்பவே கவர்ந்தார்....

சிறப்பான படங்கள், ஆனந்தமான சுற்றுலா என நாங்களும் உங்க கூடவே வந்துட்டு இருக்கோம்.....


நாளைக்கு யானையில் சவாரி.... வசதியா ட்ரெஸ் பண்ணிக்கிட்டு தயாரா இருக்கேன்! :)

said...

கண்டு களித்தோம் கலையழகை.

பூ அலங்காரம் கவருகிறது.

தவக்கோலத்தில் பூனையார். அடுத்த பதிவில் ஆனையாரா:)?

said...

அட என்னது !!
எங்க ஊட்டுக்காரரு ஜெபம் பண்ணிகிட்டு இருக்கும்போது
ஃபோட்டோ புடிச்சு அதனை போட்டிருக்கீக...

எங்கன வா ?

அதாங்க...
அந்த அனுமாரைத் தான் சொன்னேன்.

இங்கன ஒரு அனுமாரைப்பார்த்தோம். நியூ ஜெர்சி பக்கத்துலே தயானந்த சரஸ்வதி பால விஹார்லே
ஹனுமான் மந்திர்.

மீனாட்சி பாட்டி.

said...

ஒவ்வொரு ஊருக்கும் போறப்போ அடுத்த பதிவுல இதப்பத்தி எழுதறத பத்தியே யோசிச்சிக்கிட்டு இருப்பீங்க போலருக்கே? எத்தன போட்டோஸ் :)

ரிலாக்ஸா டூர எஞ்சாய் பண்றீங்களா? ஆனாலும் எல்லாத்தையும் நேர்ல பாக்கறா மாதிரியே எழுதற ஒங்க ஸ்டைலே ஸ்டைலுதான்...

என்னாடாயிது இவ்வளவு நாளா காணமே பாக்கறீங்களா? இப்போ நாலஞ்சி நாளாத்தான் இந்த விடுதலை, சந்தோஷம்.... இணைய இணைப்பை மாத்திட்டேன்ல? அதான் வேகமா வந்து வேகமா படிக்க முடியுது. இனி தினமும் இல்லாட்டாலும் அப்பப்போ வருவேன் :)

said...

தங்கும் இடம் அழகு.

கீழே உள்ள பிரவுண் பூனையார்கள் எனக்குப்பிடித்தன.

அடுத்து யானை சவாரி .... வருகின்றேன்.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

பாலி போயிட்டால் லட்சத்துக்கெல்லாம் அசர முடியாது.

வெறும் ஜுஜுபியாக்கும்:-))))

அனுமார் யோகநிஷ்டையில் அழகா இருந்தார். நம்ம வீட்டுக்கு அவரை அழைச்சுக்கிட்டு வந்துருக்கலாம். சான்ஸ் போச்:(

said...

வாங்க கே ஆர் எஸ்.

எனக்குத் தோணலையேப்பா! நல்ல ஐடியா!

தேன் நிலவு ஸ்பெஷல்ன்னு ஒரு பிஸினெஸ் ஆரம்பிக்கலாமா?

இந்தியாவில் இருக்கும் காசு நடமாட்டத்துக்கு வியாபாரம் பிச்சுக்கிட்டுப் போயிறாது?

ஸென்டானாவோடு ஒரு காண்ட்ராக்ட் போட்டு எட்டு அறைகளையும் 'இன்பச் சுற்றுலா'வுக்கேகூட எடுத்துக்கலாம்.

said...

கே ஆர் எஸ்,

கன்யாகுமரியில் நாம் தங்கி இருந்த ஹொட்டேலில் வரவேற்பில் இருந்த பெரிய உருளியில் தினமும் அழகழகா மலர் அலங்காரம் செய்வார் ஒரு இளைஞர்.
http://thulasidhalam.blogspot.co.nz/2009/05/2009-21.html
ரெண்டு மூணு விதப்பூக்கள்தான் இருக்கும். ஆனாலும் அவர் கற்பனையைப் பாராட்டணும்.

இங்கேயோ.... இலைகளை வெட்டி எப்படி ஒரு டிசைன்!!!!

நல்ல பொறுமைசாலியா இருப்பாங்க போல!

said...

வாங்க சசி கலா.

நெல் வயல் அடுத்ததில் போட்டுருக்கேன்.

நாத்து நட நேரமாயிருச்சு:-)))

கால் வலி தேவலைப்பா.
விசாரிப்புக்கு நன்றீஸ்.

said...

வாங்க அமைதிச்சாரல்.

தொய்வில்லாத 'ஈஸி' சேர் இது!

யானைகளை அங்கேயே இருக்கச் சொல்லிட்டேன்:(

அதுகளுக்கு நியூஸி வர விஸா கிடைக்கலை!

said...

வாங்க ஜிரா.

கடவுள் கருணை பரிபூரணமா இருக்கும் பசுமை அங்கே! இயற்கையை அழிக்காதவரை எல்லாம் அழகே!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

மோனத்தவம் செய்யும் பூனைத்தவம் உங்களுக்கும் பிடிச்சுருக்கு என்பது கூடுதல் மகிழ்ச்சி!

அடடா.... ட்ரெஸ் பண்ணி ரெடி ஆயாச்சா!!! வாங்க யானைச் சவாரிக்கு இன்றைக்குப் போயிறலாம்:-))))

said...

வாங்க ராமலக்ஷ்மி.

கொட்டிக்கிடக்கும் கலை அழகில் ஒருதுளி நமக்கும் காணக்கிடைச்சதே!!!!

ரொம்பப் பொறுமைப்பா அந்த பூ அலங்காரம் செஞ்சவருக்கு!

அசைந்தாடி வருது யானை:-)

said...

வாங்க மீனாட்சி அக்கா.

அமெரிகாவை ஒரு கலக்கு கலக்குறீங்க போல!!!!!

எல்லாவற்றையும் உங்கபதிவின் மூலம் நானும் ரசிக்கிறேன்.

பாலவிஹார் ஹனுமன் சூப்பர்!

பிள்ளையார் பிடிக்கக் குரங்கானது எப்படிக்கா?

said...

வாங்க டி பி ஆர் ஜோ.

மிண்டு(ம்) வந்ததுக்கு இனிய வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

டூர் எஞ்சாய் பண்ணும்போது தலைப்பு மட்டும் தலைக்குள்ளே ஓடிக்கிட்டே இருக்கு:-)))))

அமாம்..... தருமி (துளசி)அம்மாவழி போயிட்டாருன்னீங்களே... அதை எப்படி எடுத்துக்கணுமுன்னு யோசனை எனக்கு:-)))))

said...

வாங்க மாதேவி.

தீவுகளுக்கே ஒரு தனி அழகு இருக்குன்றது உங்களுக்கும் தெரியுமேப்பா!!!

பூனை முடிஞ்சு இப்போ யானை:-)

said...

பூனையாரும், ஈஸி சேரும் கண்ணைக் கவர்ந்தது டீச்சர்..

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

ரசித்தமைக்கு நன்றிப்பா.