ஹைய்யோ.... என்ன அழகான தாமரைத் தடாகம்னு வியந்து நின்னபோது வேகமா வந்த கோபால் 'இருபத்தியேழரை, ரொம்ப அதிகமா இல்லை?' ன்னார். அட ராமா...... இவ்ளோவா? ரெண்டு லட்சத்து எழுபத்தியஞ்சாயிரமா? ஆளுக்கான்னேன். ஆமாவாம். சொர்கப்பறவை உண்டோன்னு கேட்டதுக்கு உண்டுன்னார், கவுண்ட்டர்காரர். அப்ப வாங்கிருங்கோன்னேன்.
Kuta விலிருந்து ஒரு 70 நிமிசப்பயணத்தில் பாலி பறவைகள் பூங்காவுக்கு வந்துருந்தோம். டிக்கெட்டைச் சரிபார்த்த பெண், பத்திரமா வச்சுக்குங்க. இதே டிக்கெட்டில் ஊர்வன வகைகள் பூங்காவையும் பார்க்கலாம் என்றார்.
உள்ளே நுழைஞ்சு நடக்கும்போதே இடதுபக்கம் ஒற்றைப்பட்டு நிக்கும் கட்டிடத்தின் அஞ்சாறு கண்ணாடி ஜன்னல்கள். எட்டிப்பார்த்தால் இறகு முளைக்கும் நிலையில் உள்ள பறவைக் குஞ்சுகள் இங்குபேட்டரில். ப்ரீடிங் ப்ரோக்ராம் சக்ஸஸ்ஃபுல் என்று சொன்னாங்க.
மரங்களும் புல்வெளிகளும் தோப்பும் துரவுமா ரெண்டு ஹெக்டேர் (சுமார் 5 ஏக்கர்) நிலப்பரப்பில் இருக்கு பூங்கா. நடைபாதையின் ஓரமாக இருக்கும் மரத்தில் கொஞ்சும் கிளிகளின் வரவேற்புக் குழு! ஹலோ சொல்லிட்டு இன்னும் நாலடி வச்சால் மயிலார்! வீட்டில் இன்னும் பூர்த்தி செய்யாமல் போட்டு வச்ச பஸிலை (puzzle)ஞாபகப்படுத்தினார். 'கொஞ்சம் அப்படியே நில்லேன். கவனமாப்பார்த்து மனசில் வச்சுக்கிட்டு ஊர் திரும்புனதும் அடுக்கி முடிக்கறேன்'னு கெஞ்சினதை சட்டைசெய்யலை.
இந்தோனேஷியப் பறவை இனங்களில் நாற்பது வகைகளை இங்கே பாதுகாத்து வச்சு வளர்க்கிறார்கள். பூங்காவில் ஒரு ஆயிரம் பறவைகள் உண்டு. 250 வகை இனங்கள். உள்ளூர் பறவைகள் மட்டுமில்லாமல் தென் அமெரிகா, ஆஃப்ரிகா, போர்னியோ, சுமத்ரா, ஜாவா, பாபுவா நியூ கினியா மழைக்காடுகள்ன்னு பல தேசத்து வகைகளும் கூடியவரை அவுங்கவுங்க சொந்த சூழலில் இருக்காங்க.
வலைக்கூரை போட்ட பிரமாண்டமான கூடாரங்கள் நாலைஞ்சு. குளமும் கரையும் மரமும் செடிகளும் பூவும்பிஞ்சுமா இருக்கும் இங்கே பறவைகள் ஜாலியா உலாத்திக்கிட்டு இருக்காங்க. மனுசப்பயம் துளியும் இல்லை!
எந்தெந்த நேரத்தில் எந்தெந்த இனங்களுக்கு சாப்பாட்டு வேளைன்னு விவரங்கள் அடங்குன பார்க் மேப் ஒன்னும் கொடுத்தாங்க. அதைக் கையில் வச்சுக்கிட்டே ஒன்னு விடாமல் சுத்திப் பார்த்துக்கலாம்.
செயற்கை நீரூற்றுகளுக்கும் பஞ்சமே இல்லை! கொக்கு நாரை காஸ்ஸோவாரி இப்படி பெரிய பறவைகள் கூட்டங்கூட்டமாக அவரவர் பகுதியில் சுதந்திரமா உலாத்திக்கிட்டே இருக்குதுகள். நாங்களும் உலாத்திக்கிட்டே ஒவ்வொன்னா ரசிச்சுக்கிட்டு இருந்தோம். அங்கங்கே கொஞ்சநேரம் கால்களுக்கு ஓய்வு கொடுக்கச் சின்னச்சின்ன குடில்கள். ஆனால் மழைக்காடுஎன்பதால் கொசு பிடுங்கி எடுத்துருது:(
பள்ளிக்கூட விடுமுறை தொடங்கிருச்சுன்னு கூடவே வந்த குட்டிப்பொண் சொன்னாள். மூணாப்புலே இருந்து நாலாப்பாம்! அங்கங்கே பறவைகளின் விவரம் அடங்கிய தகவல்பலகைகளை ஊன்றிப்பார்த்து மெள்ள எழுத்துக்கூட்டி வாசிக்கும் அழகே அழகு!
நாங்கள் பெலிக்கன் பகுதிக்கு வந்துருந்தோம். சின்னதா ஒரு ரெய்ன் ஃபாரஸ்ட் கேஃபே. ஒரு இருபது வகை ஐஸ்க்ரீம்கள் கண்ணை இழுத்தன. வேறென்ன இருக்குன்னு பார்த்தால் பனானா ஃப்ரை. வாங்கித்தான் பார்க்கலாமுன்னு ஆர்டர் செஞ்சோம். கால்மணி காத்திருப்பு. அதுவரை பெலிக்கன் நம்மை வேடிக்கை பார்க்கட்டுமேன்னு உக்கார்ந்துருந்தோம். சுடச்சுட செஞ்சு கொடுத்தாங்க. அட! இது நம்ம பழம்பொரி(ச்சது) கேரளா ஸ்பெஷல் இல்லையோ!!!! கூடவே ஆளுக்கொரு ஐஸ்க்ரீம். ஜஸ்ட் ஒரு லட்ச ரூபாயில் நம்ம லஞ்ச் முடிஞ்சது:-)
பெலிக்கனின் லஞ்ச் டைம் ஆரம்பிச்சது. பறவைப்பூங்கா பணியாளர் ஒரு தெர்மக்கோல் பொட்டி நிறைய மீன்களைக் கொண்டு வந்தார். நடந்து திரிஞ்சுக்கிட்டு இருந்த பெலிக்கன்களுக்கு ஆளை எப்படித்தான் அடையாளம் தெரிஞ்சதோ, பாய்ஞ்சு போய் குளத்தில் கூட்டம் போட்டதுகள். ஒவ்வொரு மீனா தூக்கி எறிய கேட்ச் பிடிச்சதுகள். இதுலேயும் சாமர்த்தியசாலிகள் லபக் லபக் என்று லபக்குச்சு.ஏமாந்த சோணகிரிகள் தன் வாயிலே அதுவா வந்து விழுமுன்னு வாயைத் திறந்துக்கிட்டு நின்னதுகள். மனுசனைப்போலத்தான், இல்லே?
வெப்ப மண்டலச் செடிகொடி வகைகள் ரெண்டாயிரமும் பனைவகைகளில் அம்பது தினுசுமா பச்சைப்பசேலுன்னு இருக்கு! பட்டாம்பூச்சிகளின் கூட்டம் ஏராளம்! குருவி இனங்களின் கும்மாளமும் கூச்சலும் பேஷ் பேஷ்.!
Avian Theatre என்ற மினி தியேட்டரில் பறவைகள் பற்றிய ஃபில்ம் ஷோ ஒன்னு காலை பத்து முதல் மாலை அஞ்சு வரை மணிக்கொரு முறைன்னு நடக்குது. இது 4D என்பதால் நல்லா இருக்கும் . நமக்கு நேரக்குறைவுன்னு போகலை:(
சுதந்திரப் பறவைகள் ஒருபக்கமுன்னா கூண்டுப்பறவைகள் இன்னொரு பக்கம். ஊர்வாரியாப் பிரிச்சு தனித்தனிக் கூண்டுகள். ஒரு அறையைப்போல விசாலமான பெரிய கூண்டுகள்தான் என்றாலும் அதுக்குள்ளே ஏராளமான மரஞ்செடிகள் நிறைஞ்சுருப்பதால் அங்கிருக்கும் பறவையைக் கண்டுபிடிக்கக் கண்ணாமூச்சி ஆடத்தான் வேணும். என்னைவிட கோபாலுக்குப் பார்வை கூர்மை என்றபடியால் க்ளிக்கும் பொறுப்பு அவருக்குன்னு ஒதுக்கினேன்.புள்ளி அசரலையாக்கும்:-)))
ஒவ்வொரு பறவைகளையும் கண்டுபிடிச்சுக் காட்டுவார். நானும் நம்ம கல்பட்டாரை நினைவுக்குக் கொண்டுவந்து பார்த்து மகிழ்வேன். இங்கே போய் எட்டிப் பாருங்க. பறவைப்ரேமி! இறைவன் படைப்பில்தான் எத்தனையெத்தனை வகை!!!
பெரிய சைஸ் வௌவால்கள் ஒரு இடத்தில் தொங்கிக்கிட்டு இருந்தன. பளிச்சுன்னு பகலில் அதுக்கு பேஜாரா இருந்துருக்கும்:(
பர்ட் ஆஃப் பாரடைஸ் பார்க்கணும். ஒவ்வொன்னும் எவ்ளோ அழகா இருக்குமோன்னு ஆசையோடு போனால் அங்கே நம் கண்ணில் பட்டது மஞ்சள் வாலும் ப்ரௌண் உடம்புமா ஒன்னு. அப்புறம் சிகப்பு இறக்கையுடன் ஒன்னு. இந்த வகைப்பறவைகளில் வால் இறக்கைதான் பிரமாதமாக இருக்கும். இதுக்காகவே இதை வேட்டையாடுகிறார்களாம். அழகுதான் ஆபத்து:( மொத்தம் 39 வகை பறவைகளாம் இந்த இனத்தில் மட்டும்!
இந்தச் சுட்டியில் க்ளிக்கினால் ஒரு 34 வகைகளின் படங்கள் இருக்கு.
Tim Laman அவர்களுக்கு நன்றிகள்.
முடிஞ்சால் இங்கேயும் ஒரு நாலு நிமிச வீடியோவாகப்பார்க்கலாம் முப்பத்தியொன்பதையும் பிடிச்சுருக்கார் . அன்னாருக்கு நன்றிகள்.
பறவைகளில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துள்ளவை பார்வையாளர்கள் தோளிலும் தலையிலும் உக்கார்ந்து போஸ் கொடுக்குதுகள்.
இந்தப் பூங்காவை அடுத்து இருக்கும் ரெப்டைல் பார்க் போகலாமான்னு கேட்டேன். ரெண்டுக்கும் சேர்த்துதானே இருக்கு இந்த டிக்கெட். ஊர்வன என்றதும் கோபாலுக்குக் கொஞ்சம் யோசனைதான். கமடோர் ட்ராகன்கள் இருக்குன்னு வலை வீசின்னேன். ஊஹூம்...சிக்கலை. அதான் அஸ்ட்ராலியாவில் பார்த்தோமேன்னார்.
இப்பவே மணி ரெண்டாகப்போகுது. இன்னிக்கு ராத்தங்கல் வேற ஊரில். கிளம்பிப்போனால் பொழுதோடு போய்ச்சேர்ந்து இடம் கண்டுபிடிக்க வசதியா இருக்குமாம். வாசலுக்கு வரும் வழியில் இருக்கும் நினைவுப் பொருட்கள் கடையில் நுழைஞ்சதும் இவர் முகத்தில் லேசா ஒரு பதற்றம்:-) ஜஸ்ட் விண்டோ ஷாப்பிங்தான்னு உறுதி மொழி கொடுத்தேன்! பொதுவா எல்லா இடங்களிலும் நினைவுப்பொருட்கள் கடையினூடாகத்தானே வழி வச்சுடறாங்க. இவுங்க மட்டும் விதி விலக்கா?
பூங்காவுக்குள் அனுமதிக்கட்டணம் கொஞ்சம் அதிகம் என்றாலும்கூட அழிவு நிலைக்குப்போய்க் கொண்டிருக்கும் பறவை இனங்களை பாதுகாத்து, அடுத்த தலைமுறைகளுக்குக் காண்பிக்கும் சேவையை நினைச்சால், கொடுத்த காசு செரிக்கும்தான்:-)
தொடரும்..........:-)

26 comments:
பறவைகள் அழகு. ஏமாந்த சோணகிரிப் பறவைகளைப் பற்றிய கமெண்ட் படித்து முறுவல் வந்தது. சொர்க்கப்பறவை சொக்கவைக்கிறது. மயிலாரைப் பார்த்ததும் புதிரார் நினைவு வந்தது சூப்பர்.
பள்ளிக்கூட விடுமுறை தொடங்கிருச்சுன்னு கூடவே வந்த குட்டிப்பொண் சொன்னாள். மூணாப்புலே இருந்து நாலாப்பாம்! அங்கங்கே பறவைகளின் விவரம் அடங்கிய தகவல்பலகைகளை ஊன்றிப்பார்த்து மெள்ள எழுத்துக்கூட்டி வாசிக்கும் அழகே அழகு!//
பறவைகள் பல
விதம் கண்டு களித்தேன், குட்டிப்பொண் மனம் கவர்ந்தாள்.
பாலி பயணத்தொடர் மிக அருமை.
அழகான படங்கள் டீச்சர்.
அட ரெப்டைல் பார்க் போகலையா....
நடைபாதையின் ஓரமாக இருக்கும் மரத்தில் கொஞ்சும் கிளிகளின் வரவேற்புக் குழு!
அருமையான பயணம் ..!
பறவைகள் அழகாருக்கு. முதல்ல வர்ற சிவப்புக்கிளி பிரமாதம்.
//ஊர்வன// அதானே :-)))
படங்கள் எல்லாமே அழகு. தாமரை இலை இவ்வளவு பெரிசா இருக்கே!!
வெள்ளை மயில் கண்ணை பறித்தது...
சூப்பர் ஸ்டார்ஸும் தான்..
ரெப்டைல் பார்க்கப் போனாலே எனக்கு எப்போதுமே பீதி தான்...:))
படங்களும் விவரணைகளும் மிக அருமை. முட்டாள் பறவைகள் குறித்து வாசித்த போது சிரிப்புத் தான் வந்தது. லட்ச ரூபாய்க்கு சாப்பிட்டது என்றதும் அதிர்ந்து போனேன். :)
இந்தப் பூங்காவை அடுத்து இருக்கும் ரெப்டைல் பார்க் போகலாமான்னு கேட்டேன். ரெண்டுக்கும் சேர்த்துதானே இருக்கு இந்த டிக்கெட். ஊர்வன என்றதும் கோபாலுக்குக் கொஞ்சம் யோசனைதான். கமடோர் ட்ராகன்கள் இருக்குன்னு வலை வீசின்னேன். ஊஹூம்...சிக்கலை. அதான் அஸ்ட்ராலியாவில் பார்த்தோமேன்னார்.//இதுதான் டாப் க்ளாஸ்.:) என்ன அழகான பறவைகள்பா. பெலிகன் படுஜோர். கம்பீரம். பேர்ட் ஆஃப் பாரடைஸ் சிங்கப்பூரில் நிறைய இருக்குமோ?
என்ன சொல்றது!!!! மனசு நெறஞ்சு போச்சு . நன்றி சொல்லி மாளாது துளசி . வீடியோ போட்டோ அற்புதம் . எனக்கு இப்படிப்பட்ட வகைகள் பறவைகள் இருக்கும்னே தெரியாது . இன்னிக்கு உங்களை நேர்ல பாத்து வாழ்த்த முடியலயேன்னு ரொம்ப தோணிடுச்சு . நன்றிகள் பலப்பல . My daughter Ramya and me together enjoyed the video and her comments WOW !! WOW!!! CHANCEY ILLA !!!
என்ன சொல்றது!!!! மனசு நெறஞ்சு போச்சு . நன்றி சொல்லி மாளாது துளசி . வீடியோ போட்டோ அற்புதம் . எனக்கு இப்படிப்பட்ட வகை பறவைகள் இருக்கும்னே தெரியாது . இன்னிக்கு உங்களை நேர்ல பாத்து வாழ்த்த முடியலயேன்னு ரொம்ப தோணிடுச்சு . நன்றிகள் பலப்பல . me and my daughter Ramya together watched the video . her comments wow!!! ppaaaa !!! chancey illa !!! aunty kalakkaraanga !!!
ஹைய்ய்ய்ய்ய்யோ... வெள்ளை மயில்!
வெண்மையில் பூத்த வெண் மயில்!
உலவும் பறவை Victorian Crowned Pigeon. கிளிகள் அழகு. ஆந்தை படம் சிறப்பாக உள்ளது.
தொடருங்கள்.
வாங்க கீத மஞ்சரி.
ரசித்தமைக்கு நன்றி.
மயிலார் கண்ணில் பட்டதும் பகீர்:-))))
வாங்க கோமதி அரசு.
ரசிப்புக்கு நன்றிகள்.
குழந்தைகளே அழகு! அதிலும் அடுத்தவர்கள் குழந்தை என்றால் கொள்ளை அழகு! ரசிப்பதோடு நம்ம வேலை முடிஞ்சுருது பாருங்க:)))
வாங்க வெங்கட் நாகராஜ்.
நம்மவருக்கு பிடிக்காத சமாச்சாரம் அது. அதான் கொஞ்சம் விட்டுக் கொடுத்துட்டேன்!
வாங்க இராஜராஜேஸ்வரி.
புதிய இடம் புது அனுபவம் என்று பயணங்களே அருமைதான்.
ரசிப்புக்கு நன்றி.
வாங்க அமைதிச்சாரல்.
கரெக்டாச் சொன்னீங்க..... அதே அதே:-))))
வாங்க ரோஷ்ணியம்மா.
இந்த விளிம்பு வச்ச தாமரை இலைகள் பார்க்கவே ஒரு அழகுதான் நம்மூர் தாம்பாளத்தட்டு போல.
இங்கே அளவில் சின்னவைகளே. இந்த வகையில் பத்தடி குறுக்குவிட்டமுள்ள இலைகள் கூட இருக்காம்! ப்ரமாண்டமா இருக்குமில்லே!!!!
இங்கே எங்கூர்லேயும் ஒரு தனியார் Zooவில் வெள்ளை மயில் ஒன்னு இருந்தது. அல்பீனோ!
மகளுக்கு ரெப்டைல்ஸ் பிடிக்கும். அவள் கூட வந்திருந்தால் இவரால் தப்பிக்கவே முடியாது:-))))
வாங்க நிரஞ்சன் தம்பி.
லட்ச ரூபாய் சாப்பாடெல்லாம் நமக்கு ஜுஜூபியாக்கும் கேட்டோ:-)))))
பாலி வந்தால் நாமெல்லாம் அம்பானிகளே!
ஒரு யூ எஸ் டாலருக்கு பத்தாயிரம் இந்தோனேஷிய ருப்பைய்யா!
வாங்க வல்லி.
நம்ம பாப்புவா நியூ கினி நண்பர்கள் நியூஸிக்கு இடப்பெயர்ச்சி ஆனபோது அவுங்க வீட்டுலே பாடம் பண்ண சொர்கப் பறவைகளைப் பார்த்தது முதல் நேரில் பார்க்கணும் என்று ஆவலா இருந்தேன். இப்போ கொஞ்சம் கிடைச்சது.
சிங்கையிலும் ஜூரோங் பறவைப் பூங்காவில் கொண்டுவந்து வளர்ப்பவைகளே! நேடிவ் வகை இல்லை.
அங்கே போன நூற்றாண்டில் போனதுதான். அப்புறம் போகவே இல்லை:(
டாப் க்ளாஸ் ரசனைக்கு நன்றி:-)
வாங்க சசி கலா.
ரம்யாவுக்கும் பிடிச்சுருக்குன்னது எனக்கு ரொம்பவே மகிழ்ச்சிப்பா.
பரந்த உலகில் நாம் கண்டது கடுகளவு என்பதே உண்மை!
எத்தனை கோடி படைப்புகள்!!!!
வாங்க கே ஆர் எஸ்.
முருகனுக்கு(ம்) வெள்ளை மயில் பிடிக்குமோ!!!!!
வாங்க ராமலக்ஷ்மி.
அதெப்படிங்க? அதெப்படி?
அத்தனை படங்களில்........
ஃபொட்டொராஃபர் என்பது சரியா இருக்கே!!!!
ஆந்தை.... பாலி பார்க் பக்கம் சுட்டது என்பதை எப்படீங்க கண்டுபிடிச்சீங்க!!!!
வாங்க இராஜராஜேஸ்வரி.
புது இடம் புது நாடுன்னு எப்பவும் பயணங்களே அருமை இல்லையோ!
ரசனைக்கு நன்றிகள்.
பறவைகளின் அழகைப் பார்த்தோம். அழகு துள்சிம்ம்ம்மா. இன்னும் வீடியோவைப் பார்க்கலை. 34 வகைகளைப் பார்க்கல.
///ரெண்டு லட்சத்து எழுபத்தியஞ்சாயிரமா? /// என்றால் 5. 50 ம்ம்ம்ம்ம்.
இயற்கை அழகை ரசிக்க பணமும்ம்ம்ம்ம்.
அழகிய பறவைகள். இடம் நன்றாக இருக்கின்றது.
தோளில் வந்திருக்கும் பறவையார்கள் அழகு. இங்கும் தனிப்பட்டவர் நடாத்திய ஒருஇடம் இருந்தது இப்பொழுது மூடிவிட்டார்கள். பறவைகள் வந்து தலை,கைகளில் இருக்கும்.
Post a Comment