கடைசியா எப்போப் பார்த்தேன்னே நினைவில்லை. ஆனால் கண்டதும் கண்கள் விரிஞ்சதென்னவோ உண்மை! நீலமும் வெள்ளையுமா அழகோ அழகு! இறைவன்/இயற்கை படைப்பில்தான் எத்தனையெத்தனை அற்புதங்கள்!! சங்கு புஷ்பம்! இதுக்கு மட்டும் பூன்னு சொல்லாம ஏன் புஷ்பம் என்கிறோம்?
பூவை மட்டும் ரசிச்சால் போதுமா? எங்களையும் கொஞ்சம் பாரேன்னு அவுங்க மொழியில் கீக்கீ..... கீக்கீன்னு கூப்பிட்டன காதல் பறவைகள். ஹைய்யோ!!!! இத்தனையா? வாங்குனது நாலே நாலுன்னு நினைக்கிறேன். குடும்பம் பல்கிப்பெருகி இருக்கு! ஒரு விநாடி ஒரு இடத்துலே நின்னு போஸ் கொடுக்குதுங்களா? ஊஹூம்......
வீடுகளில் இப்போ வெற்றிலை வளர்ப்பு வேற! ஹப்பாடா..... நமக்கும் சொல்ல ஒரு சங்கதி கிடைச்சுருச்சு. நானும் வெற்றிலை (கொடிக்கால்) வச்சுருக்கேன்னு சொல்லி மகிழ்ந்தேன், எட்டு இலைதான் என்பதை கவனமா மறந்துட்டு :-)
போயிட்டு வாறோமுன்னு சொல்ல அப்போ மச்சினர் வீட்டுக்குப் போயிருந்தோம். வீட்டு வாசலில் நாம் மணி ப்ளாண்டுன்னு சொல்வோம் பாருங்க அந்தக்கொடி அழகா ஒரு மரத்தைப் பிடிச்சுக்கிட்டு மேலே போகுது! இவ்ளோ நல்ல பெரிய இலைகளை ப்ரிஸ்பேனில்தான் பார்த்திருக்கேன். இந்தப் பக்கங்களில் இதுக்குப்பேரு டெவில்'ஸ் ஐவி. பணத்துக்கும் பேய் பூதத்துக்கும் ஒரு சம்பந்தம் வச்சுட்டாங்க பாருங்க!!!
செடிகளையும் பறவைகளையும் பார்க்கும்போது திடீர்னு நம்ம 'வீடு திரும்பல் மோகன் குமார் 'வீட்டுத் தோட்டம் நினைவுக்கு வந்துச்சு.
இனி நெருங்கிய தோழிகளையும் ஒரு முறை சந்திச்சுட்டுக் கிளம்பணும். வெளியே போய் சாப்பிடலாமுன்னு கூப்பிட்டேன். மனசில் இருந்தது அடையார் மண்வீடு. இன்னொரு தோழியையும் கூப்பிட்டால் அவுங்க அருணாஸ்லே சாப்பிடலாமுன்னு தீர்மானமாச் சொல்லிட்டாங்க. புது வீடு வாங்கி இருக்காங்க அவுங்க. ஆனால் வீடு இன்னும் ரெடியாகலை. அடுத்தமுறை நான் வந்தால் கண்டுபிடிக்க சௌகர்யமா இருக்கணுமேன்னு இப்பவே வீட்டைக் காமிக்கப்போறேன்னு மிரட்டுனதால் ஓக்கேன்னுட்டேன்:-)
கிளம்புமுன் 'பெரிய ஆள்'கிட்டேயும் விடை பெறணுமே எனக்கு. அனந்தபத்மநாபன் சந்நிதியில் சந்திக்கலாமுன்னு சொல்லிட்டுக் கிளம்பினேன். போகும் வழியிலேயே நம்ம நாச்சியார் வீட்டுக்குப்போய் அவுகளையும் கூட்டு சேர்த்துக்கிட்டே போனோம். அருணா'ஸ்லே சாப்பாடுன்னதும் சிங்கம் பதுங்கிட்டார்:-)
கோவிலுக்குள்ளில் நுழைஞ்சால் நிம்மதியாப் படுத்தபடி 'வா' ன்னான். 'இப்படிக்கிடந்தால் நல்லதுல்லை. பெட்ஸோர்தான் வரப்போகுது'ன்னு மிரட்டியபடி பெரிய திருவடி, புதுசா வந்துருக்கும் அன்னபூரணி, சக்ரத்தாழ்வார், தங்கத்தேர், திருப்பதி வெங்கடாசலபதி ஃபேமிலி, தஞ்சாவூர் பெயிண்டிங் கிருஷ்ணன், ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மன் எல்லோருக்கும் கும்பிடு போட்டு, நாடுவிடும் சமாச்சாரம் சொல்லிக்கிட்டே உற்சவர்கள் அறைக்குப்போனால் தாயார்களுடன் பிரமாதமான அலங்காரத்தில் அறைக்கு வெளியே வந்து காத்துக்கிட்டு இருக்கார் நம்ம பெரும் ஆள்!
என்னடா ஆச்சு? இன்னிக்கு திருவோணம் நட்சத்திரம் கூட இல்லையே.... ன்னால் எல்லாம் உனக்காகத்தான்னு சொல்லிச் சிரிக்கிறான் கள்ளன்! இரு மனசில் புடிச்சு வச்சுக்கிறேன். அடுத்த ட்ரிப்வரை தாங்கணுமேன்னு க்ளிக்கினேன். இந்தப்பக்கம் நேயுடு வெற்றிலைமாலையோடு நிக்கறார். பெரிய கோவில் இல்லைன்னாலும் எல்லாம் அம்சமா அமைஞ்சுருக்கு இங்கே! சென்னையில் எனக்கு ரொம்பப்பிடிச்ச கோவில் லிஸ்டில் இதுக்குத்தான் முதலிடம். கோவிலில் சிலபல இம்ப்ரூவ்மெண்ட் வேலைகள் நடந்துக்கிட்டு இருக்கு. நல்ல மேனேஜ்மெண்ட் அமைஞ்சது பப்பனின் பாக்கியம்!
என்ன ரொம்பநாளாக் காணோமே? ன்னு விசாரிச்சார்கள் கோவில் ஃப்ரெண்ட்ஸ். சென்னை வாழ்க்கையில் அநேகமா தினம்தினம் பார்த்த முகம், சட்னு நினைவுக்கு வந்துஇருக்கும்:-)
அதுக்குள்ளே சந்திக்கறேன்னு சொன்ன எழுத்தாளர் தோழி அலைகள் அருணா வந்துசேர்ந்தாங்க. எல்லோரையும் அறிமுகப்படுத்திட்டு மீண்டுமொருமுறை வலம் வந்து 'கிடப்பவனிடம் 'சொல்லிவிட்டுக் கிளம்பி அருணாவின் புது வீட்டுக்குப் போனோம். எப்படியும் ஒரு மூணுமாசமாவது ஆகும் போல இருக்கு வேலைகள் முடிய. நான் திடீர்னு போனாலும் எனக்கு புடவை பரிசளிக்க நல்ல சௌகரியம், நல்லி சில்க்ஸ் ரொம்பப் பக்கத்தில் இருக்கு.
எல்லோருமாக் கிளம்பி அருணாவின் (பழைய) வீட்டுக்குப் போனோம். சூப்பர் சாப்பாடு. வாழைத்தண்டு பச்சடி.... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் நல்ல காரம்!
இன்னும் கடைசி நேர வேலைகள் ரெண்டு இருக்கு. அப்புறமுன்னு தள்ளி வைக்கக் கூடாதது. அடையார் நேரு நகர் தெருக்கள் எல்லாம் சரியா இருக்கான்னு நாலைஞ்சு ரவுண்டு போய்ப் பார்த்தோம். ஒரு விலாசம் கண்டு பிடிக்கறதுக்குள்ளே தாவு தீர்ந்துடுது. இத்தனைக்கும் நாலைஞ்சு தடவை போய்வந்த இடம்தான். லேண்ட்மார்க்கா இருந்த கடையை இப்போக் காணோம்! எல்லாம் நம்ம ஹோப் ஃபவுண்டேஷன் ஆஃபீஸைத் தேடித்தான் அலைஞ்சோம். வரப்போகும் கிறிஸ்மஸ் விழாவுக்குக் குழந்தைகள் செலவுக்கு ஒரு தொகை கொடுக்கணும். நமக்குப் பரிசாக அருமையான படம் ஒன்னு எடுத்து வச்சுருந்தாங்க. கொஞ்சம் பெரிய சைஸ்னு கண்ஜாடை காமிக்கிறார் கோபால்:-) அன்புக்கு நன்றின்னு படத்தை ஒருபடம் எடுத்துக்கிட்டேன்.
Mrs. Malarvili Prabath Exec. Officer-Women & Children Programs. அவர்களுடன் சந்திப்பு. ஹோப் பள்ளிக்கூடம் ரொம்ப நல்லா நடக்குது!
அடுத்த ஸ்டாப் இன்னொரு பதிவர் வீடு. பத்து நிமிசம் NineWest நானானியோடு பேச்சு. பாவம், நாச்சியார்!! இழுத்த இழுப்புக்கு வாயைத் தொறக்காம வந்தாங்க கூடவே! முகத்தில் கொஞ்சம் களைப்பு தெரிஞ்சது. அவுங்களைக் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கவிடேன்னு கோபால் (ரகசியமா) என்னிடம் சொன்னார்.:-) கூடவே இருந்து கொடுமைகளை அனுபவிக்கறவராச்சே!
நாச்சியாரை வீட்டில் விட்டுட்டு விஷ்ராந்தி அலுவலகத்துக்குப் போனோம். நம்ம அதிர்ஷ்டம் பாருங்க. மாடியில் இருக்கும் ஃப்ளாட், கதவு பூட்டி கிடக்கு. பக்கத்து ஃப்ளாட்டுலே ஒரு மரணம். அதனால் சீக்கிரம் பூட்டிட்டாங்கன்னு துக்கத்துக்கு வந்திருந்த ஒருத்தர் சேதி சொன்னார். பேசாம ஒரு செக் எழுதி அவுங்க மெயில் பாக்ஸ்லே போட்டுடலாமேன்னு பார்த்தால் கைவசம் என்வலப் ஒன்னும் இல்லை. ஹேண்ட்பேகில் இருந்த எதோ கடை ரசீதின் பின்புறம் நம்ம விலாசமும் அமௌண்டும் குறிப்பிட்டு செக்கையும் அதுலேயே வச்சு மடிச்சு கீழ்தளத்தில் இருக்கும் மெயில்பாக்ஸ்களில் இவுங்க பெயருள்ளதைத் தேடிப்போட்டோம். க்ராஸ்டு செக் என்பதால் பரவாயில்லைன்னு நினைப்புதான்.
நேரா தி.நகர் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்.கல்யாணச் ச் சீர்வரிசைக்கு வேண்டியவைகளையெல்லாம் கூட செஞ்சு கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. குட்டிக்குட்டி ஜாங்கிரி வேணும் நமக்கு. கிடைக்கலை. கொஞ்சம் இனிப்புகளும் காரவகைகளும் வாங்கிக்கிட்டு நேரா திநகர் சரவணபவன். அங்கே மினி வகை கிடைச்சது. இன்னும் கொஞ்சம் உப்புச் சமாச்சாரங்கள். இன்னும் வேற வகை இனிப்புகள் எல்லாம் வாங்கினோம். பால் சேர்த்த இனிப்புகள் , வட இந்தியவகைகள் ஒன்னும் வாங்கிக்கலை. மேட் கௌ டிஸீஸ் பயத்தால் நியூஸியில் இவைகளை அனுமதிப்பதில்லை:(
அப்படியே கடைக்குள் நுழைஞ்சு கடைசி முறையா ஒரு காஃபி! இனிப்பு வாங்க ஆரம்பிச்சதுமே இதுதான் பயணத்தின் கடைசி ஷாப்பிங், இனி கிளம்பிருவோம் என்பது உறுதியாகிரும். என் மனசில் லேசா ஒரு சஞ்சலமும் ஆரம்பிக்கும்.
பயணங்களில் காணாமப்போகும் சமாச்சாரங்களில் ஒன்னு சாவிகள். குட்டியூண்டு சாவிகள் என்பதால் எங்கே வச்சோமுன்னு அல்லாடணும். இதுலே ஆயிரத்தெட்டு ஸிப் வச்ச அறைகள் இந்தப் பொட்டிகளுக்கு. இப்பெல்லாம் யாராவது எதையாவது நம்ம பொட்டிகளில் திணிச்சு அனுப்பிட்டால்..... என்ற பயம் வேற இருக்கே. ஜஸ்ட் ப்ளெயினா ஒரே ஓப்பனிங் இருக்கும் பெட்டிகளா விக்கக்கூடாதா? அக்கம்பக்கத்துக் கடையில் ஒரு அஞ்சாறு நம்பர் லாக்குகள் வாங்கிக்கிட்டோம். ப்ளாட்பாரப் புத்தகக் கடை, ஒன்னும் வாங்கிக்கலையான்னது. அங்கே ரெண்டு புத்தகங்கள். வெயிட் வெயிட் னு அலறின கோபாலை, வெயிட் வெயிட் இது கையிலே வச்சுக்கும் ரீடிங் மெடீரியல்ஸ்ன்னு சொல்லி சாந்தப்படுத்தினேன்:-)
ஏழுமணிக்கு அறைக்கு வந்ததும் பெரிய வண்டி மாத்தி எடுத்துக்கிட்டு எட்டரைக்குள்ளே வந்துருங்கன்னு சீனிவாசனை அனுப்பிட்டு ஃபைனல் பேக்கிங் முடிச்சுக் கீழே போய் அக்கவுண்ட் செட்டில் செஞ்சு முடிக்கும்போது சீனிவாசன் வந்துட்டார்.
ஏர்ப்போர்ட் போய்க்கிட்டு இருக்கோம். மனசுக்குள்ளே சின்னதா ஒரு ஏக்கம். இதுலே பாருங்க... நியூஸியில் இருந்து இந்தியா வரும்போது மனசு பூராவும் மகிழ்ச்சியா இருக்கும். இந்தியாவுக்குப் போகாம வேற இடங்களுக்குப் போகும்போதும் மனசுலே ஏக்கம் கலக்கம் இப்படி ஒன்னும் இருக்காது. ஹாலிடே போறோம் என்ற உணர்வு மட்டும்தான். இதே... இந்தியாவிலிருந்து கிளம்பும்போது வீட்டுக்குப் போறோம் என்ற மகிழ்ச்சி இருந்தாலும் கூடவே ஒரு ஏக்கம், ' இனி எப்போ?'ன்னு வந்துருது.
இந்தியாவிலேயே வந்து இருந்துடலாமுன்னா.... இப்போ அங்கிருக்கும் சிஸ்டத்துக்கு நான் லாயக்கில்லைன்னு ஆகிருச்சு. அதிகபட்சம் ஒரு மாசம் தாக்குப்பிடிக்கலாம். அம்புட்டுதான். நடக்கும் அட்டூழியங்களைப் பார்த்து 'எப்படா ஊருக்குப் போய்ச்சேருவோமு'ன்னு தோணிப்போகும். கிளம்பும்போது .... மறுபடி.... என்னவோ இது ஒரு மாதிரி 'லவ் அண்ட் ஹேட்' உறவு!
முக்கால் மணியில் ஏர்ப்போர்ட் வந்து சேர்ந்து ட்ராலியில் பெட்டிகளை அடுக்கிக்கொடுத்த சீனிவாசனுக்கு நன்றி சொல்லிட்டு ட்ராவல்ஸ்க்கான பில்லை செட்டில் செஞ்சுட்டு உள்ளே போனோம்.
செக்கின் செய்யும் இடத்துலேயே ஏக்கம் காலி:-)
லவுஞ்சில் போய் உக்கார்ந்ததும் மறுநாள் செய்யவேண்டியவைகளை லிஸ்ட்போட ஆரம்பிச்சார் கோபால்.
தொடரும்........:-)

51 comments:
பூ இன்னும் சொல்லலாம், புட்பம்னும் சொல்ல்லாம், டீச்சர் சொல்ற மாதிரியும் சொல்லலாம்.
தூக்கிக் கொண்டு செல்லும் மூட்டைகளைப் பார்த்தால் எனக்கு கை வலிக்குது.
இனிமையான பதிவர் சந்திப்பு...
வெற்றிலை செடி அருமை...
பயணத்தை தொடர்கிறோம்...
இந்த சென்னை விமான நிலைய கட்டுமானம் நான் வேலை செய்த பழைய கம்பெனி CCCL கட்டியது (கடைசி படம்).
இன்னிக்கு திருவோணம் நட்சத்திரம் கூட இல்லையே.... ன்னால் எல்லாம் உனக்காகத்தான்னு சொல்லிச் சிரிக்கிறான் கள்ளன்! //
துளசி இன்று திருவோணம். திருவோண நட்சத்திரத்தில் பெருமாள் தரிசனம் ஆச்சு எனக்கு நன்றி.
பக்தையின் மனம்போல் காட்சி கொடுத்துவிட்டாரா! அருமை.
நண்பர்கள் சந்திப்பு மற்றும் நல்ல காரியங்கள் செய்வது எல்லம் மனதுக்கு மகிழ்ச்சி அளிப்பது.
அடுக்கு சங்கு பூ தானே ? நீல சங்குபூ?
எங்கள் வீட்டில் தொட்டியில் வைத்து இருந்தேன். சனிபகவானுக்கு சாற்றினால் நல்லது என்பார்கள்.வெள்ளை சங்கு பூவும் இருந்தது அது மருந்தாகவும் பயன்படுத்துவார்கள்.
இப்போது தோட்டத்து கதவு இல்லை அதனால் ஆடு தின்னாத செடி தான் வைக்க முடிகிறது. அரளி. நந்தியவட்டை போன்றவை.இனிமையான நினைவுகளை விட்டுச்சென்றும் , இனிமையான நினைவுகளை எடுத்தும் போனீர்கள். அடுத்தமுறை வரும் வரை அவை நெஞ்சைவிட்டு நீங்காது.
மறந்தே போச்சு. அதனால் மீண்டும் வரவும்.
//இறைவன்/இயற்கை படைப்பில்தான் எத்தனையெத்தனை அற்புதங்கள்!!//
ஓ! இப்டி சொல்லி ‘தப்பிச்சிக்கிர்ரதா ..?’
இந்த மணி ப்ளான்ட் இருக்குதே இது எதைப் பற்றிப் படர்ந்தாலும் - மரமோ, சுவரோ - பெரிய இலைகள் வருது. ஏன்னு கேட்டுப் பார்த்தேன். இதுவரை பதிலேதும் கிடைக்கவில்லை.
//ஒரு அஞ்சாறு நம்பர் லாக்குகள் வாங்கிக்கிட்டோம்//
அட ராமா !!
நம்பரை சரியா ஞாபகம் வச்சுக்கங்க...
ஒரு உத்தி சொல்லித்தரட்டுமா?
எத்தனை பொட்டிஎடுத்துகினு போறீக. ?
நாலா ?
முதல் நம்பர் 4
அடுத்த நம்பர் 3
அடுத்த நம்பர் 2
அந்த மூணு எப்படி நினைவு வச்சுக்கறது ?
நீங்க, அவரு, பொண்ணு மூணு பேரு தானே..
ஓகே. அப்ப நம்பர் இரண்டு.
நீங்க இரண்டு பேரு தானே கூடவே இருக்கீங்க..
சரியா.....
இது புரியல்லையா ?
அட ராமா !!
சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.in
இந்தியாவை விட்டுக் கிளம்பும்போது எழும் ஏக்க உணர்வை இந்தப் பதிவில் எழுத்தாலும் உணரவைக்கிறீர்கள். அந்த உணர்வை என்னவென்று சொல்வது? தாய்வீட்டுக்கு வந்துவிட்டுக்கிளம்பும் பெண்களின் மனநிலைதான்.
கபிலர், கருவிளம் என்று சொல்வது இந்த நீல சங்குபுஷ்பத்தைதானாமே...
வழக்கம்போல் அற்புதமான படங்களோடு பதிவு அசத்தல்.
இந்தியாவிலேயே வந்து இருந்துடலாமுன்னா.... இப்போ அங்கிருக்கும் சிஸ்டத்துக்கு நான் லாயக்கில்லைன்னு ஆகிருச்சு. அதிகபட்சம் ஒரு மாசம் தாக்குப்பிடிக்கலாம். அம்புட்டுதான்//
உங்களுக்கு இப்படி. ஆனா எங்களுக்கு? என்னதான் ம்கள் வீடு என்றாலும் பேத்தியோடு நன்றாக பொழுது போகும் என்றாலும் ஒரு மாதத்திற்கு மேல் மலேஷியாவில் இருக்க முடிவதில்லையே. நம்ம ஊரு நம்ம ஊருதான்னு தோனுதே. இங்க வந்து இறங்கனதுக்கப்புறம்தான் நிம்மதியா இருக்கு. எல்லாம் இக்கறைக்கு அக்கறை பச்சைதாங்கறா மாதிரிதான்:))
//இறைவன்/இயற்கை படைப்பில்தான் எத்தனையெத்தனை அற்புதங்கள்!!//
ஓ! இப்டி சொல்லி ‘தப்பிச்சிக்கிர்ரதா ..?’//
அதான பார்த்தேன். தப்பித்தவறி கூட 'இறைவன்'னு சொல்லிரக்கூடாதே!
//அதான பார்த்தேன். தப்பித்தவறி கூட 'இறைவன்'னு சொல்லிரக்கூடாதே!//
அடக் கடவுளே ...!!
அக்கா!
உங்களைக் காண்பதில் ஆண்டனுக்கும் ஆர்வம் போல, அழகான "வெளிக்கிட்டு" (ஈழத்தில் "வெளிக்கிட்டு" என்றால் ஒருவர் உடுத்து அடுத்தவரைச் சந்திக்கவோ, பயணத்துக்கோ தயாராதலைக் குறிக்கும்) இருக்கிறார்.
பெருமாள் படம் அருமை. கண்கள் துல்லியமாக விழித்துப் பார்க்கின்றன.
வெற்றிலைக் கொடி நல்லாயிருக்கு! பக்கத்தில் ஒரு முள்முருங்கை நட்டுவிடவும்.
யாழ்ப்பாணத்தில் காங்கேசந்துறைப் பக்கம் வெற்றிலைச் செய்கை பிரசித்தம். முள்முருங்கையிலே
படரவிடுவார்கள்.
ஏங்க வைப்பதால் தான் அதைத் தாய் நாடென்கிறோம்.மீண்டும் வந்தால் போகிறது, ஏக்கம்!
பெருமாள் தர்சனம், பதிவர் சந்திப்பு, சங்குப்பூ, காதல்ஜோடிகள், வெற்றிலைக் கொடி என மனதுக்கு நிறைந்த பகிர்வு.
எம்மையும் மகிழ்வித்தது.
How are you ?
I forgot to tell you that I visit your blog regularly. Like your style of writing without hurting anyone
Thanks
Joemom
சங்குபுஷ்பம் அழகு .
இந்தியாவை விட்டுக் கிளம்பும்போது எழும் ஏக்க உணர்வை //
ஏர்போர்ட்டில் நுழையும்போதே நெஞ்சு வலிக்கிரமாதிரி இருக்கும் எனக்கு .
//வெயிட் வெயிட் னு அலறின கோபாலை, வெயிட் வெயிட்//
:))
திவ்ய (கோபாலத்) தம்பதிகள், அடிக்கடி பார்வையாலேயே பேசிக் கொள்வதைத் தொடர் முழுக்கவும் ரசிச்சேன்:)
வெற்றிலைக் கொடியின் படம் அருமை...
ஒங்க "பெரும் ஆளை", என் தோழி கோதை இப்படித் தான் சுத்திப்பாளாம்!
= சந்தன மரத்தில் வெற்றிலைக் கொடி படர்ந்தாப் போல..
= அவன் வாசம் இவளுக்கு, இவ வாசம் அவனுக்கு-ன்னு
ஸ்ரீ விஷ்ணு சித்த குல நந்தன "கல்ப வல்லீம்"
ஸ்ரீ ரங்க ராஜ ஹரி "சந்தன" யோக திருஸ்யாம்
//கோவிலுக்குள்ளில் நுழைஞ்சால் நிம்மதியாப் படுத்தபடி 'வா' ன்னான். 'இப்படிக்கிடந்தால் நல்லதுல்லை. பெட்ஸோர்தான் வரப்போகுது'ன்னு மிரட்டியபடி//
கடந்தகால் பரந்தகா விரிக்கரை குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்திருந்து பேசுவாழி கேசனே!
சென்னையில், தோழனுக்குப் புடிச்ச பெரும்-ஆள் ஆலயமும் இது தான்:)
"அரங்கத்தில் காணாததை அடையாற்றில் கண்டேன்":)
//அருணாவின் புது வீட்டுக்குப் போனோம்.
சூப்பர் சாப்பாடு. வாழைத்தண்டு பச்சடி.... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்//
நான், பெசன்ட் நகரில் (Keerthi Enclave) பாத்த அதே அருணா தான இவங்க?
இப்பவும் அப்படியே தான் இருக்காங்க:)
வாழைத்தண்டு பச்சடி one parcel to new york plz:)
//குட்டிக்குட்டி ஜாங்கிரி வேணும் நமக்கு. கிடைக்கலை//
அடடா
AAB-ல (A2B) கிடைக்குமே!
சரவண பவன் Mini Meals order பண்ணாக் கூட இதான்:)
புரசைவாக்கம்/ சேத்துப்பட்டு பக்கம் "ஸ்ரீ மித்தாய்" கடையில், இது போன்ற இனிப்புக்கள் அபாரம்;
நெய் கையில் ஒட்டா வண்ணம், அதே சமயம் மிகுந்த சுவையுடன்...
//நமக்குப் பரிசாக அருமையான படம் ஒன்னு எடுத்து வச்சுருந்தாங்க. கொஞ்சம் பெரிய சைஸ்னு கண்ஜாடை காமிக்கிறார் கோபால்:-)//
என்னாது, மறுபடியும் கண் "ஜா"டையா?
அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்?:)
பூ ,சங்கு புஷ்பம் , இனிப்பு வெற்றிலைக்கொடி ,பெருமாள் இனிப்பு மற்றும் அனைத்து திவ்ய தரிசனங்களுக்க்கும் பாராட்டுக்கள்..
குட்டி குட்டி ஜாங்கிரி அடையார் ஆனந்த பவன்ல கெடைக்குமே .அடுத்த முறை வரப்ப நான் வாங்கி வெக்கறேன் .
கண்டிப்பா மீட் பண்ணனும் .
இனிமையான நினைவுகள்.
வருடத்துக்கு ஒருமுறை தில்லியிலிருந்து வந்து போகும் போதே மனதுக்கு சங்கடமாக இருக்கும்...
சென்னை சென்றதும் கொஞ்சம் பரவாயில்லை போல் இருக்கும். அங்கிருந்து புறப்படும் போது பேசின் ப்ரிட்ஜ் தாண்டியதும் தில்லி சென்று செய்ய வேண்டியவை நினைவுகளில் மனம் அலைபாய ஆரம்பித்து விடும்...:))
பயணங்களும் அனுபவங்களும்.....
சென்னை சென்று தில்லி திரும்பும் போதே பல நினைவுகள்..... உங்களுக்கும் அதே நினைவுகள்... கொஞ்சம் அதிகமாகவே இருப்பதில் தவறில்லை......
சங்கு புஷ்பம் - இங்கே தில்லியில் சில வீடுகளில் இருக்கிறது.....
அருணாஸ்னா ஏதோ ஒரு ரெஸ்டாரன்டுனு நினைச்சேன். மண் குடிசைனு ஒரு சாப்பாட்டுக்கடையா?
விஷ்ராந்தி பத்தி ரெண்டு வரி எழுதுங்களேன்? என்ன செய்றாங்க? just curious.
சங்குப்பூனு தான் எல்லாரும் சொல்வாங்க. எங்காத்துல மட்டும் சங்குப்புஷ்பம். படம் அழகாக இருக்கிறது.
மனதை ஈர்க்கும் எழுத்து நடை...வாழ்க்கையைப் பதிவு செய்யும் விதம் என் மனதை கவர்கிறது. அழகான படங்கள்...அத்தனையையும் சேர்த்துப் படிக்கையில் இதயத்துள் இன்பம் ஊறி வருகிறது..தொடர்ந்து படிக்க வேண்டும் போல் இருக்கிறது...நேரம் கிடைக்கும் போதெல்லாம் தங்கள் வலைப் பூ தேடி வருவேன்...
The address of the temple sn't mentioned. From the word Adayar, I googled and found that it is on Gandhi Nagar Road.
என்ன இருந்தாலும் தாய் நாடு ஆச்சே! அதான் அந்த லவ் - ஹேட் உறவு.
உங்களுக்கு டாட்டா சொல்லும் எங்களுக்கும் துக்கம் தொண்டையை அடைக்குது டீச்சர்!
உங்களுடன் நிறைய கோவில்கள் (பழைய பதிவுகள் நிறைய பாக்கி இருக்கு. சீக்கிரம் படிச்சுடறேன்! பெஞ்சு மேல நிக்க வைக்காதீங்க!)
நிறைய இடங்கள் எல்லாம் சுற்றி வந்தோம்.
அடுத்த பயணத்திற்கு தயார் ஆகிறோம்!
வாங்க பழனி கந்தசாமி ஐயா.
பேராசிரியர் அதுவும் விவசாயத்துறை பேராசிரியர் சொன்னா அதுக்கு மேல் அப்பீல் உண்டா:-))))
நன்றி.
வாங்க ஜோதிஜி.
இதெல்லாம் ஜுஜுபி. நமக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கொடுப்பது ஆளுக்கு 20 + 7 கிலோதான்.
யூ எஸ் பக்கம் போகும் பயணிகள் பொட்டிகளைப் பார்த்தா மயங்கி விழுந்துருவீங்க:-)
வாங்க திண்டுக்கல் தனபாலன்.
தொடர்வதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.
வாங்க குமார்.
இப்போதைக்குக் கட்டிடம் அருமையாக இருக்கு. ஆனால் நம்ம மக்கள்ஸ் புழங்கிப்புழங்கி..... நம்ம கண்ணீரில் ரத்தம் வரவழைச்சுருவாங்க.
இன்னும் பார்க்கிங், மற்ற இடங்களில் மக்கள் நடமாட்டம் இதையெல்லாம் சரிப்படுத்தலை. ஒரு ஒழுங்கு இல்லாமக் கிடக்கு.
வாங்க கோமதி அரசு.
பயணங்களில் பதிவர் சந்திப்புகள் மனதில் தனி இடம் பிடிச்சு சிம்மாசனம் போட்டு உக்கார்ந்துக்குது.
போன ஜென்மப் புண்ணியம் கொஞ்சூண்டு இருக்கு போல!
உங்களை சந்திக்க முடிஞ்சதில் எனக்கு மகிழ்ச்சி கூடியது என்பதே உண்மை. கயிலை தரிசனம்! எனக்கு நோகாமல் கிடைச்சதே!
சங்குப்பூவுக்கு தனி மணம் உண்டா?
வாங்க வல்லி.
எனக்குதான்:-) பெருமாள் கூப்புடுவான்னு நினைக்கிறேன்:-)))
வாங்க தருமி.
இறைவன் கண்ணுக்குத் தெரியமாட்டார்.
இருந்தால்தானே தெரிவதற்குன்னு சொல்லமாட்டீர்கள்தானே?:-)))
ஆனால் இயற்கை கண் முன்னே கிடக்கு.
அதனால் உங்கள் இயற்கை எங்கள் இறைவன். கணக்கு சரியா இருக்கா?:-))))
மணி ப்ளாண்ட் ஒரு வேளை மரத்தில் இருந்து கூடுதல் நியூட்ரீஷன் எடுத்துக்குதோ என்னவோ?
வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.
புரிஞ்சு போய் ஒரே தலை சுத்தல் இப்போ!!!!
அதான் எதுக்கெடுத்தாலும் நாலு நம்பர்ன்னு இருக்கே வாழ்க்கையில்.... வீட்டு அலார்ம் செக்யூரிட்டி, ஏ டி எம் கார்டுன்னு....
அதனால் குழப்பம் இல்லாம அந்த எண்களில் ஒன்னை எல்லாப் பூட்டுகளுக்கும் வச்சுக்கிட்டால் நிம்மதி இல்லையோ?
வாங்க கீத மஞ்சரி..
கபிலர் கருவிளமுன்னு சொன்னாரா!!!!
நான் இந்தக் கருவிளம் கூவிளம் எல்லாம் தமிழ்பாடல்களில் வரும் எதோ இலக்கணமுன்னு இருந்தேனே:(
தாய்வீடு உணர்வுன்னு நீங்க சொன்னது ரொம்பச்சரி. அதே அதே!
வாங்க டி பி ஆர் ஜோ!
நான் என்ன நினைக்கிறேன்னா.... எங்கே நமக்குன்னு ஒரு வீடும், சுதந்திரமும் இருக்கோ, எங்கே யாருடைய குறுக்கீடும் இல்லாம நாம் நினைச்சதைச் செய்ய முடியுதோ( ஓ ...இது சுதந்திரத்திலே வந்துருதோ?) அங்கே வசிப்பதுதான் நிம்மதியா இருக்கு.
மகள் வீடோ மகன் வீடோ என்றாலும் கூட அது நம்ம வீடு இல்லை பாருங்க!
வாங்க யோகன் தம்பி.
இந்த மீண்டும் வருதல் என்பதுக்குக்கூட கடைசி கண்ணி நாம்தான். பிள்ளைகள் போய்வர விரும்பமாட்டார்கள்:(
முள்முருங்கை மரமா? மச்சினரிடம் சொல்லி வைக்கப்போறேன். சின்னப் பந்தலா ஒன்னு போடலாம். இங்கே நியூஸின்னால் படரும் செடிகளுக்கான அழகான சப்போர்ட் கம்பி அமைப்பு கிடைக்குது இன்னொரு நண்பர் வீட்டில் தரையிலேயே படர்ந்து வளர்ந்துருக்கு வெற்றிலை.
வாங்க மாதேவி.
எல்லாத்தையும் கண்ணில் காட்டுன பெருமாளுக்குத்தான் நன்றி சொல்லணும் நாம்!
வருகைக்கு நன்றி.
வாங்க Joemom.
ஆஹா..... ஆனால் இதுதான் முதல் பின்னூட்டமா???
வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றிகள்.
அடிக்கடி வந்து ஆதரவு தரணும்.
வாங்க ஏஞ்சலீன்.
உள்ளே நுழையும்வரைதான் இதெல்லாம். அப்புறம்?
மறுநாள் வந்து மனதில் உக்காந்துக்குதே!
வாங்க கே ஆர் எஸ்.
//அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்?:)//
கம்பர் எங்க வாழ்க்கையின் முதல் நொடிகளில் இருந்து கூடவே வந்துக்கிட்டு இருக்கார்:-))))
அதே அருணாதான். இயற்கையை மதிச்சு அப்படியே ஏற்றுக்கொண்ட தேஜஸ் அவுங்க முகத்தில் எப்போதும் ஜொலிக்கும்!
தோழருக்கும் பிடிச்ச ஆளா இவர்? பேஷ் பேஷ்.
குட்டி ஜாங்கிரி வேண்டாதபோதெல்லாம் கண்முன்னே வந்து நிக்கும். இப்போ தேவைன்னதும் ஆளைக் காணோம்:(
கிளம்பும் கடைசி நிமிஷ பர்ச்சேஸ் இப்படித்தான் படுத்துது சில சமயங்களில். போகட்டும். அதுக்கு நியூஸிக்கு ப்ளேனில் வரக்கொடுத்து வைக்கலை:-)
வாங்க இராஜராஜேஸ்வரி.
ரசனைகளுக்கும் ரசிப்புகளுக்கும் நன்றீஸ்
வாங்க சசி கலா.
வேணாதபோதெல்லாம் முன்னாலே வந்து சிரிச்சுட்டு, இப்ப வேணும் என்னும்போது காணாமப் போகலாமோ?
கண்டிப்பா மீட் பண்ணலாம்:-)
வாங்க ரோஷ்ணியம்மா.
மனசுக்குள் எப்போதும் நாளையக் கவலைதானே நமக்கு!
போய் இறங்குனதும் காத்து நிக்கும் கடமைகளை நினைச்சாலே .... எல்லாம் அடங்கிப்போகுதேப்பா:-))))
வாங்க வெங்கட் நாகராஜ்.
உண்மையைச் சொன்னால் சண்டிகர், தில்லியில் இருந்து சென்னை வரும் நேரத்தில் நியூஸியில் இருந்து சென்னை போவது எளிது.
விமான நிலையங்களில் காலநிலை சரி இல்லைன்னு காத்துக் கிடந்ததே போதும் போதுமுன்னு ஆகிருது:(
வாங்க அப்பாதுரை.
ரெஸ்ட்டாரண்ட் பேரு மண்வீடு!!!! பெயர் மட்டுமே எளிமை. விலையெல்லாம் அதிகமுன்னு ஒருத்தர் எழுதி இருந்தாரே கொஞ்சநாள் முந்தி.
ஏழையாக இருக்கவும் செலவு அதிகம் பாருங்க:( பெண்ட் ஹௌஸ் மாதிரி மாடியில் கூரை வீடுவச்சுக்கலாம்.
விஸ்ராந்தி ஒரு முதியோர் இல்லம், கூடுதல் விவரம் இந்தச் சுட்டியில் பாருங்க.
http://webspace.webring.com/people/dv/vasudevanvrv/charity/vishra.htm
வாங்க ஹமீது.
வணக்கம் முதல் வருகைக்கு நன்றி. இங்கே நம்ம தளத்தில் பயணத்தொடர்கள் (உள்நாடு & வெளிநாடு) ஏராளமா இருக்கு.
எழுத்துலகில் என் வயசு ஒன்பது. இதுவரை வெளியிட்ட இடுகைகள் வெறும் 1448தான். நேரம் கிடைக்கும்போது எட்டிப்பாருங்கள்.
வாங்க பாலா.
இங்கே எங்கள் நாட்டிலும் மின்கட்டணம் மெள்ளமெள்ள ஏறிக்கிட்டேதான் போகுது.
என்ன ஒன்னு...... இங்கே 24 மணி நேரமும் மின்சாரம் இருக்கு.
வாங்க குலசேகரன்.
தொடர்ச்சியா துளசிதளம் வந்துபோகும் வாசக நண்பர்களுக்கு அடையார் என்று சொன்னாலோ அல்லது அனந்த பத்மநாபன் என்றாலோ அவர்களுக்கு இந்தக்கோவில்தான்னு புரிஞ்சு போயிரும்.
அதனால்தான் ஒவ்வொரு இடுகையிலும் விலாசம் எழுதுவதில்லை:-)
காந்திநகர் செகண்ட் மெயின் ரோடுன்னு குறிச்சு வச்சுக்குங்க.
வருகைக்கும், கூகுளிச்சு விவரம் தெரிஞ்சுக்கிட்டதுக்கும் நன்றிகள்.
வாங்க ரஞ்ஜனி.
மெள்ளப் படிக்கலாம். நோ ஒர்ரீஸ்:-)
உங்க வாய் முகூர்த்தம் பலிக்கப் போகுது.விரைவில் இன்னொரு பயணம் வருது.
இதுவரை நான் போகாத இடம். அதனால் எதிர்பார்ப்புடன் இருக்கேன்:-)
Post a Comment