Monday, May 27, 2013

வெயிலின் அருமை குளிரில் தெரியும்!

அதிகாரபூர்வமான குளிர்காலம் ஜூன் முதல்தேதிதான் ஆரம்பிக்குது நியூஸியில். ஆனா குளிருக்கு இதெல்லாம் தெரிய வாய்ப்பில்லை. அதுக்கு வலையா, இணையமா கூகுளா? ஊருக்குமுன்னால் வந்து உக்கார்ந்துருக்கு :( இந்த வருசம், போனவருசத்தைவிட குளிர் அதிகமா இருக்குன்னு வழக்கம்போல் சொல்வது உண்மை:-)

உடலுக்கும் உள்ளத்துக்கும் குளிரைத் தாங்கும் சக்தி குறைஞ்சுருக்கு போல..... வயசாகுதுல்லெ.....

அதான் கொஞ்சநாள் குளிர்விட்டுருக்கலாமுன்னு ஒரு பயணம் போறோம்
வெயிலை நோக்கி.

 வெயிலின் அருமை குளிரில்தானே தெரியுது, இல்லீங்களா? அதுவரை துளசிதளத்தின் கண்மணிகளும் வாசகப்பெருமக்களும், நிம்மதியாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் பள்ளிக்கூடத்துக்கு லீவு விட்டுருக்கேன்.  கோடை விடுமுறை!

சிங்கிள் டீச்சர் ஸ்கூலுன்னாலே இப்படித்தாம்ப்பா:-)

மீண்டும் சந்திக்கும் வரை வணக்கம் கூறி விடைபெறுவது உங்கள் டீச்சர்:-)

அதுவரை படம் பார்க்கலாம்!






28 comments:

said...

இந்த மலர்களின் அருமையான அழகு போலவே உங்கள் பயணமும் சிறப்பாக அமைய வாழ்த்துகள் துளசிமா.

said...

பேண்ட்டே பொசுங்கிப் போற வெயில்ல இங்க நொந்து போயிருக்கற நேரத்துல குளிரைப் பத்தி எழுதிட்டிங்களே டீச்சர்.. அவ்வ்வ்வ்வ! இஞ்ச செத்த வாங்கோ... அருமையான வெயில் காத்திட்டிருக்குது!

said...

//
அதான் கொஞ்சநாள் குளிர்விட்டுருக்கலாமுன்னு ஒரு பயணம் போறோம்
வெயிலை நோக்கி.
//
டீச்சர் எங்கேன்னு சொல்லலயே? எந்த இடம்னு சொன்னா நாங்களும் குளிர் காலத்துல போய்ட்டு வருவோமே.

said...


குளிர்காலம் துவங்கிடுச்சா !! துவக்கத்திலே நல்லாத்தான் இருக்கும்.

இங்கன வெய்யில் கொளுத்துகிறது.. சாதாரணமா மாமியா தான் கொளுத்தறாக, எள்ளும் கொள்ளுமா
வெடிக்கராக அப்படின்னு நம்ம ஊரு வசனம்.

இப்ப பாருங்க.. ஒரு வாரமா சென்னைலே ஹீட் வேவ் தாங்க முடியல...

எங்கன பார்த்தாலும் தோட்டமெல்லாம் வாடிக்கிடக்குது...

நொந்து நூடுல்ஸ் இல்ல... கருவாடா காஞ்சு கிடக்கோம்லெ

ஒரு பத்து ப்ளேன்லே ஐஸ் கட்டி அனுப்பிச்சீங்க அப்படின்னா நாங்க எல்லோரும் தலைலே
வச்சுப்போம்.

சுப்பு தாத்தா.

said...

எங்க ஊரில் வெயில் அதிகம் என்பதை மறக்க வேண்டாம்...

அழகான படங்கள்... பயணம் சிறக்க வாழ்த்துக்கள்...

said...

பிங்க் அண்ட் பீச் ரெண்டும் ரொம்ப அழகா வந்திருக்குது..

பசங்க லீவு போட்டா டீச்சர்கிட்ட முறையிடுவாங்க,.. ஆனா, அந்த டீச்சரே லீவு போட்டா யாரு கிட்ட முறையிடுவோம் :-)))))))))

வெய்யிலேதான் வேணுமுன்னா இந்தியாவுக்கு வாங்களேன். அஞ்சு நிமிஷம் வெயில்ல நின்னா ஆளையே வடாம் போட்டுர்ராங்க சூர்யாக்கா :-)

said...

ஆஹா.... அடுத்த பயணமா... அதுவும் வெய்யில் நோக்கியா! இங்க வாங்களேன்.... இலவசமா நிறையவே இருக்கு!

பயணத்தொடரினை எதிர்பார்த்து......

said...

Enjoy...

said...

இங்கே கொளுத்துதே வெயில்! :)))))

said...

பூக்கள், கேமரா, உங்க கைவண்ணம் மூனும் சேர்ந்து அற்புதமான படங்களைத் தருகின்றன. சூப்பர்...........

said...

வாங்க வல்லி.

உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு என் மனமார்ந்த நன்றி.

said...

வாங்க பால கணேஷ்.

//பேண்ட்டே பொசுங்கிப் போற வெயில்ல ....//

ஹைய்யோ!!!!!! என்னமா ஒருசொற்பிரயோகம்:-)))))

டூ மச் வெயில் வேணாமே.....

said...

வாங்க சத்யப்ரியன்.

நல்லா இருக்குமுன்னு நினைச்சுப் போறோம். வந்து சொல்றேனே.... குளிருக்கு இதமா இருந்துச்சான்னு!

said...

வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.

அனுப்புன ஐஸ் கட்டி விமானமே சென்னை வெயிலில் உருகிப் போச்சாமே!!!

இங்கே குளிர் 1+ 3+ 1 ன்னு மொத்தம் அஞ்சு மாசம்.

ஆரம்பம் நல்லா இருக்குன்னு மகிழவும் முடியாது. அஞ்சு மாசம் கழிச்சும் பனிப்புயல் வரலாம். வந்துமிருக்கு:(

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஃபோர் சீஸன்ஸ் வெயில், வெயில், கடுமையான வெயில், வெயில் என்பது எனக்குத் தெரியாதா!!!!

ரசனைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிகள்.

said...

வாங்க அமைதிச்சாரல்.

பால் மாறாட்டம் எப்போ நடந்துச்சு?????

வெயில் வேணும் ஆனா அவ்ளோ வெயில் வேணாம்:-)))))

அதுவுமில்லாம இந்தியாவுக்கு சின்னப்பயணம் சரிப்படாது, கேட்டோ!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

இலவசம் இலவசம் எங்கும் இலவசம் எதிலும் இலவசம்!!!!

வெயிலும் வேணும் பதிவுக்கு மேட்டரும் வேணும்.

2 இன் 1 :-))))

said...

வாங்க குமார்.

முடிஞ்சவரை எஞ்சாய்தான்.

நன்றீஸ்.

said...

வாங்க கீதா.

இங்கே நடுக்குதே குளிர்!!!!

said...

வாங்க ஜயதேவ் தாஸ்.

நன்றீஸ் நன்றீஸ்.

said...

வெயிலின் கொடுமையை பத்தி பதிவு போட்டிருக்கேன். நீங்க அதோட அருமை பத்தி பதிவு போட்டிருக்கீங்க.

லீவா ஜாலின்னு கொண்டாட முடியாது. பசங்களுக்கு ஸ்கூல் திறக்கும்போது எங்களுக்கு லீவு விட்டுட்டீங்களே டீச்சர்.

சரி நீங்க லீவு விட்டாத்தான் எங்களுக்கு நிறைய்ய புது பா(ப)டங்கள் கிடைக்கும்

said...

வாங்க புதுகைத் தென்றல்.

இந்திய வெயில் ஆளை வாட்டிருமே:-((

இங்கே இந்தியாவின் குளிர்காலம் அளவுதான் எங்களுக்கு கோடை வெப்பம்.

அதுவும் சட்னு போயி இந்த வருசம் குளிர் ஒரு மாசத்துக்கு முன்னேயே வந்து டேரா போட்டுருச்சு:(

32 + 8+ 8 ஜிபி எஸ்டி கார்ட் கொண்டு போறேன். படங்களுக்குப் போதாதா?:-)))))

said...

ஆகா! கோடை விடுமுறையா :))

குளிர்சியாக வருகின்றோம் பார்க.

said...

அழகான மலர்கள். அருமையான படங்கள்.

என்ன பெயரோ? baby ponk வண்ணத்தில் படமாக்கியிருக்கிறேன் இதை.

இனிய விடுமுறைக்கால வாழ்த்துகள்!

said...

*pink

said...

பெரிய லீவ் வேணாம் ப்பா சின்ன லீவே போதும் . குளிர்ச்ச்சியா ஒரு பதிவை எதிர்நோக்கி ஆவலோடு ...

said...

பூக்கள் அழகு. நல்லபடியாக போய் குளிர்காய்ந்துவிட்டு வாங்க டீச்சர். இப்படிக்கு, குளிரில் நடுங்கியபடிக் காத்திருக்கும் ஒரு மாணவி.

said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே http://blogintamil.blogspot.in/2013/05/blog-post_30.html) சென்று பார்க்கவும்... நன்றி...