இந்தமுறை சிங்கையில் அறை எடுக்கப்போவதில்லை. இன்னிக்கு மாலையே நியூஸி ஃப்ளைட் பிடிக்கணும். எப்பவும் ஒரு 'டே ரூம் 'புக் பண்ணிட்டு காலையில் அங்கேபோய்ச் சேர்ந்தால் ரூம் ரெடியாகலை. பத்து மணிக்குத்தான் கிடைக்கும். அதுவரை பெட்டிகளை இங்கே வச்சுட்டு நீங்க ஸ்விம்மிங்பூல் பக்கம் இருக்கும் பாத்ரூம் வசதிகளைப் பயன்படுத்திக்கலாம்னு சொல்வாங்க. ஒவ்வொரு பயணத்திலும் அவுங்களோடு சண்டைபோட்டு 'அறை' வாங்குவதற்குள் போதும்போதுமுன்னு ஆகிரும்:(
ஏர்ப்போர்ட்லேயே அம்பாஸிடர் லவுஞ்சில் போய் குளிச்சுட்டு(ஆளுக்கு 8 டாலர் சார்ஜ்) எம் ஆர் டி எடுத்து நேரா செராங்கூன் ரோடு சீனுவைப் பார்க்கப் போயாச்சு. நேத்து சென்னையிலேயே எல்லாப் பெட்டிகளையும் நியூஸிவரை செக்த்ரூ பண்ணிட்டு ஒரே ஒரு தோள்ப்பை மட்டும் கையில். அதுலேயும் சிங்கை நண்பர்களுக்குக் கொண்டு போகும் இனிப்புகளும் ஒரு செட் மாற்றுடைகளும்தான். காலை நேரம் என்பதால் ரயிலில் கூட்டம் இல்லை.
சீனுவை முதலில் கண்டுக்கணும்.அப்புறம் கோமளாஸ்னு பக்காவா ப்ளான். ஆனால் அவன் வேற மாதிரி திட்டம் போட்டு நமக்கு விருந்து வச்சுட்டான். கோவிலில் நல்ல கூட்டம். அன்னதானம் நடக்குது.உள்ளே நுழைஞ்சதும் வாங்க வாங்கன்னு சாப்பிடக் கூப்புடறாங்க. கொஞ்சம் பொறுங்க.சாமி தரிசனம் முடிச்சுக்கிட்டு வந்துடறோமுன்னு கெஞ்சவேண்டியதாப்போச்சு:-)
இப்பெல்லாம் சனிக்கிழமைகளில் கூட்டம் அம்முதாம். சனீஸ்வரனின் கொடுமைகளில் இருந்து தப்பிக்க எள் விளக்கு போட்டால் நல்லதுன்னு கருப்புத்துணியில் எள்ளை முடிஞ்சு தீபமேற்றத்தோதாக அடுக்கி வச்சுருக்காங்க. வாங்கி தீபமேற்றி சனியை மகிழ்விக்கலாம். கருப்பு மூட்டையை எடுத்துட்டால் ஜஸ்ட் எண்ணெய் விளக்கு இப்படி 2 இன் 1. கண்ட இடத்தில் கொளுத்தி வச்சு, இடத்தை மாசுபடுத்தாமல் இருக்க ஒரு இடத்தில் பெருமாள் ஓவியத்தின் திரைச்சீலையைத் தொங்கவிட்டு அடுக்குப்படிகள் அமைச்சுருக்கு நிர்வாகம்.
இன்னும் ரெண்டு தனித்தனிக் கூடாரங்களில் ஸ்ரீநிவாசனின் மூர்த்திகளை வச்சு விசேஷ பூஜைகள் நடந்துக்கிட்டு இருக்கு. இந்த முறைதான் சனிக்கிழமை காலை வேளைகளில், இந்த நேரத்துக்குச் சிங்கைச்சீனுவின் கோவிலுக்குப்போக எனக்கு அமைஞ்சுருக்கு. இதுதான் முதல்முறைன்னு நினைக்கிறேன். மத்தபடி சிங்கையில் தங்க நேரும் சனிகளில் அதிகாலை 6 மணிக்குக் கோவிலுக்குப்போயிட்டு வர்ற வழக்கம்தான். கொடிமரத்துக்கு இந்தாண்டை வெளிமண்டபத்துத் தூண்களில் கூட நம்ம தூண் என்று ஒரு இடம் புடிச்சு வச்சுருக்கேன். எப்பவும் அங்கேதான் உக்காருவோம். இந்த முறையும் தூண் நமக்காகக் காத்திருந்தது:-)
கோவிலை வலம் வந்து மூலவரைக் கும்பிட்டு நம்ம தூணருகில் கொஞ்ச நேரம் உக்கார்ந்து நடப்புகளைப் பார்த்துக் க்ளிக்கிட்டு இருந்தேன். இங்கே மூலவரைக்கூடக் கிளிக்கலாம். பிரச்சனை இல்லை. இதனால் கோவிலுக்குள்ள புனிதம்,ஐஸ்வர்யம் இதுக்கெல்லாம் குறைபாடொன்னும் இல்லை. ஒவ்வொரு முறை போகும்போதும் இன்னும் ஜ்வலிப்பாத்தான் இருக்கு கோவில். எப்போதும்போல் படு சுத்தம்.
கோவில் வளாகத்தில் இருக்கும் ஃபங்க்ஷன் ஹாலுக்கு முன்புறமும் வெயில் தாக்காமல் இருக்க நாகரிகக் கொட்டாய் போட்டுருப்பதால் பிரசாதம்(சக்கரைப்பொங்கல், வெண்பொங்கல் சுண்டல்) ஜூஸ், குடி நீர், பாயஸம்போல ஒரு சமாச்சாரம் எல்லாம் அவுங்க அடுக்கி வைக்க வைக்க மக்கள்ஸ் எடுத்து சாப்பிடச் சாப்பிடன்னு எல்லாம் அமோகம். ஜோதியில் நாங்களும் கலந்தோம். நமக்கு ப்ரேக் ஃபாஸ்ட் ஆச்சு. லஞ்சுக்கு இருந்துட்டுக்கூடப் போகலாம்:-) வெவ்வேற குழுக்களா வந்து பிரசாத விநியோகம் பண்ணிக்கிட்டே இருப்பாங்களாம். (அடடா....இது தெரியாமப்போச்சே!)
பெருமாள் இதையெல்லாம் கண்டுக்காம 'நின்னமேனி'க்கு இருக்கார். அவருக்கு இன்னொரு கும்பிடு போட்டு தேங்க்ஸ் சொல்லிட்டுக் கிளம்பினோம். கோவிலுக்குப் பக்கம் இருக்கும் ஃபேர்ரர் பார்க் ஸ்டேஷன் . வந்து போக நல்ல வசதி.
ரொம்ப நெருங்கிய நண்பர்களில் மூன்று பேரை (மட்டும்) இந்த முறை சந்திச்சுட்டு திரும்பி ஏர்ப்போர்ட்டுக்கு மாலை ஆறரைக்குள் ஓடணும். ரெண்டு தோழிகள் புது வீடு வாங்கி இருக்காங்க. முதல்முறையாகப் புது வீட்டுக்குப் போறோம். புது ஏரியா என்பதால் ரெண்டு மூணு முறை செல்லில் கூப்பிட்டு வழியைத் தெரிஞ்சுக்கிட்டோம்.
முதல் விஸிட் எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் வீட்டுக்கு. வீடு அருமையா பளபளன்னு இருக்கு. ஒரு மணி நேரம் போல இருந்து விட்டுப்போன கதைகளை அளந்துக்கிட்டு இருந்தோம். பகல் சாப்பாட்டுக்கு நிக்கலைன்னு அவுங்களுக்கு கொஞ்சம் வருத்தம்தான். சாமி வயிறு நிறைய போட்டு அனுப்பிட்டாருன்னு சொன்னேன்.
அங்கிருந்து கிளம்புபோது மழை! சிங்கப்பூரில் நாள் தவறினாலும் மழை வரத் தவறாது. எல்லாம் சட் சட்னு வந்துட்டு ஓடிப்போயிரும். சுருக்கமாச் சொன்னா எங்கூர் நிலநடுக்கம் போல! தினம் குறைஞ்சது மூணு. சின்ன ஆட்டம்தான். நடுக்கம் அளக்கப் புதுக் கருவிகளும் வந்தாச்சு. தனியா வலைப்பக்கம் போட்டுருக்கு அரசு. காலையில் இமெயில் செக் பண்ணுவது போல இதையும் ஒரு முறை பார்த்துக்கும் பழக்கம் எங்களுக்கு. உண்மையைச் சொன்னால் (நில)நடுக்கம் இல்லேன்னா நாங்கள் நடுங்கிருவோம். அன்றிலிருந்து இன்று வரை 13 376 ஆகி இருக்குன்னா பாருங்க.
ஜெயந்தி வீட்டில் இருந்து கிளம்பி ஒரு டாக்ஸி எடுத்துக்கலாமுன்னா..... அரைமணி நேரமா நின்னும் ஒன்னும் அகப்படலை. சமீபகாலமா சிங்கையில் கவனிச்ச ஒன்னு இது. வாடகைக்கார்களின் எண்ணிக்கை குறைஞ்சு போச்சா இல்லை செராங்கூன் ரோடு , விமானநிலையம் இப்படி எப்பவுமே பிஸியா இருக்கும் பக்கங்களில் மட்டும் இவுங்க சுத்தறாங்களா? ஒருவேளை பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட் அருமையா அமைஞ்சுட்டதால் டாக்ஸிக்காரர்களுக்கு வருமானம் குறைஞ்சு போய்.... வேற வேலைக்குப் போயிட்டாங்களா?
காருக்குக் காத்திருந்து கண்கள் பூத்தபின் பஸ் ஒன்னு பிடிச்சு ஒரு எம் ஆர் டி ஸ்டேஷன் போய் அங்கிருந்து சிங்கை எழுத்தாளர் சித்ரா ரமேஷ் வீட்டிற்கு ரயிலில் போனோம். வரும் விவரம் சொன்னதும் ஸ்டேஷனுக்கு வந்து கூப்பிட்டுப் போனார் ரமேஷ். இவுங்க ரெண்டு பேருமே எழுதுவாங்க. மரத்தடி கால நண்பர்கள். ரமேஷ் ஏனோ இப்பெல்லாம் எழுதுவதில்லை:(
சித்ரா உள்ளூர் பத்திரிகையில் சிங்கப்பூர் சரித்திரம் தொடர் எழுதிக்கிட்டு இருக்காங்க இப்போ. சிங்கை எழுத்தாளர் சங்கத்தின் முக்கிய அங்கம் நம்ம சித்ரா.
அஞ்சு நிமிஷ ட்ரைவ்தான் வீட்டுக்கு. நான் இப்போதான் முதல்முறையா வர்றேன். உண்மையைச் சொன்னால் கோபால்தான் நம்ம வீட்டுலே அதிகம் பயணிக்கிறவர். அவர் பயணக்கதை எழுதக்கூடாதான்னு நான் நினைப்பேன். எப்பேர்ப்பட்ட இடமானாலும் ஒரே ஒரு வரியில் சொல்லிருவார்:-) கோபாலுக்குச் சிங்கை வழியாகவே அநேகமா நிறைய பயணங்கள் அமைஞ்சுருது. அவர் ஏற்கனவே சிலமுறைகள் சித்ரா ரமேஷின் புது வீட்டுக்குப் போயிருக்கார். அருமையான வீடு. சிங்கையில் அடுக்குமாடிகள்தானே எங்கே பார்த்தாலும்! இவுங்க கட்டிடத்துக்குப் பக்கத்தில் அரைவட்டத்தில் அழகான பழைய கட்டிடங்கள் சில அட்டகாசமா இருக்கு! தரைத்தளத்தில் இருந்து பார்த்தால் இந்த அழகு கண்ணில் பட்டுருக்காது!
பால்கனியில் குட்டியா ஒரு தோட்டம்! அடிச்சுப்பிடிச்சு அந்தக்கூடத்தில் நானும் இருக்கேன்:-)
ஊர்க்கதைகளையெல்லாம் பேசி நிதானமா சாப்பிட்டுக்கிட்டு இருந்தபோதே 'காலம்' கோவி கண்ணன் , நண்பர் வெற்றிக்கதிரவனோடு வந்துட்டார் எங்களைக் கடத்திப்போக:-) அவர்களையும் சாப்பிடச்சொன்னால்..... லஞ்சு முடிச்சாச்சுன்னாங்க. எல்லோருமாச் சேர்ந்து பதிவர் மாநாடு ஒன்னு நடத்தி முடிச்சதும் கண்ணனோடு கிளம்பினோம்.
பழையபடி வாடகைக்கார் கிடைப்பதில் தாமதம். பஸ் ஸ்டாப் வரை போகலாமுன்னு நடந்து நடந்தே பாதி தூரம் போயிருந்தோம். பேச்சு சுவாரஸியத்தில் களைப்பு தெரியலை. கண்ணன் இன்னும் மெலிஞ்சு போயிட்டார். அதனால் நடையில் வேகம் இருந்துச்சு. முயலும் ஆமையுமாப் போனபோது வாடகைக்கார் கிடைச்சுருச்சு. நாலு நிமிசத்தில் வீடு.
கண்ணனின் அழகிய குடும்பம் பார்த்து மகிழ்ச்சி அடைந்தோம். சிவ செங்கதிர் வளர்ந்துருந்தார். ஆறுமாசக் குழந்தையா இருந்தப்போ பார்த்தது. இப்போ 25 மாசம்! பேசும் கண்கள்! அப்படியே கிருஷ்! (சுவரில் யசோதாவும் கிருஷ்ஷுமாய் ஒரு அழகான ஓவியம்) மகளும் வளர்ந்துவிட்டாள். தம்பிப்பயலைக் கண் போல் பார்த்துக்கும் குணம்!
ஏன்தான் 'காலம்' இப்படிப் பறக்குதோன்னு நினைச்சேன். பேச்சு இன்னும் முடியலை. தொடரும் போட்டுட்டுக் கிளம்ப வேண்டியதாப் போச்சு. வாரவிடுமுறை என்பதால் நண்பர்கள் அனைவரையும் பார்க்க முடிஞ்ச திருப்தி எங்களுக்கு.
விமானநிலையம் போக மறுபடி வாடகைக்கார் கிடைப்பதில் சுணக்கம். நாங்களே போயிருவோமுன்னா கேட்டால்தானே? கண்ணனும் வெற்றிக்கதிரவனும் கூடவே வண்டியில் ஏறுனதும், செங்கதிருக்கு அழுகை. அப்பா கூடப்போனால் நல்லா இருக்குமே! அம்மா வேடிக்கை காமிச்சு ஏமாற்றி உள்ளே கொண்டு போயிட்டாங்க:(
விமானநிலையத்தில் நாங்க எல்லோருமா ஒரு பத்து நிமிசம் 'பேச்சு எங்கள் மூச்சு 'என்ற நம் தேசிய குணத்தைக் கடைப்பிடிச்சுட்டு அங்கே தரை முழுசும் வரைஞ்சு வச்சுருக்கும் 3D படத்தையும் ரசிச்சுட்டு நண்பர்களுக்கு டாடா பிர்லா சொல்லிட்டு உள்ளே போனோம்.
தொடரும்.............:-)

47 comments:
ரசித்தேன்.
92, சிங்கப்பூரில் 1 மாதம், இருந்தேன்.
செரங்கூன் வீதியில் தங்கியதால் இவ்வாலயத்துக்கு நினைக்கும் போதெல்லாம் செல்வேன். பிரசாதத்துக்குக் குறைவேயில்லை.
சிங்கை மக்களும் பழக இனியவர்கள்.
சிங்கை இப்போ நிறைய மாறியிருக்கும்.
கோவியை சந்தித்தீர்களா? மகிழ்ச்சி.
வாங்க பழனி கந்தசாமி ஐயா.
ரசிப்புக்கு நன்றி.
வாங்க யோகன் தம்பி.
அடடா..... பதிவில் சேர்த்த கோவியாரின் படங்களை காக்கா ஊஷ்.... ஆகிப்போச்சே!!!
மீண்டும் இணைத்துள்ளேன் பாருங்கள்.
கதிரு சூப்பரு!!!
பாத்அண்களும் பதிவும் அருமை நண்பரே
ஆஹா.... சிங்கையிலும் பதிவர் சந்திப்பா....
நல்லது... நடத்துங்க......
கோவி அண்ணாவுக்கும், அண்ணிக்கும் வணக்கம்!
பல ஆண்டுகள் கழிச்சி, பதிவு மூலமாப் பாத்துக்கிட்டேன், "துளசி" புண்ணியத்தால்:)
இவன் தான் சிவச் செங்கதிரா?
Good boy; ஓட்டம் காட்டியே அப்பாவை இளைக்கப் பண்ணி இருக்கான்:)
இவன் அக்கா எப்படி இருக்கா?:)
இனிய சந்திப்புகள். படங்களும் பகிர்வும் அருமை.
எழுத்தாளர் ஜெயந்தி சங்கருக்கும் வணக்கம்:)
அந்த வட்ட வடிவ வீடுகள், அழகோ அழகு!
சுத்தியும் Concrete Jungle, நடுவில் சிவப்பு மரம் மாதிரி பூத்துக் குலுங்குது அந்த வீடு;
----
//பால்கனியில் குட்டியா ஒரு தோட்டம்! அடிச்சுப்பிடிச்சு அந்தக்கூடத்தில் நானும் இருக்கேன்:-)//
குட்டித் தோட்டம்-ன்னாலே மனசுல ஒரு கிளுகிளுப்பு;
ஏழைக்கு இருக்குற ஒரே பெண் கைக்குழந்தை மாதிரி Feeling; விழுந்து விழுந்து, பாத்துக்கத் தோனும்;
----
//இப்பெல்லாம் சனிக்கிழமைகளில் கூட்டம் அம்முதாம்.
சனீஸ்வரனின் கொடுமைகளில் இருந்து தப்பிக்க எள் விளக்கு போட்டால்...//
அடங் கொப்புரானே!
பொதுவா, பெருமாள் கோயில்-ல நவக்கிரகம் வைக்காததன் காரணமே...
= யாரும் தாங்கள் செஞ்ச வினைகளை மீறிச் சலுகை பெற்று விட முடியாது;
= தைரியாமாச் செஞ்ச வினைகளுக்கு, அதே தைரியமா அனுபவிக்கணும்/ பலனை ஏற்றுக் கொள்ளணும் என்பது தானே!
அதுக்கும் மக்கள் "shortcut" போட்டு, அவருக்கே அல்வா விளக்கு (I mean எள்ளு விளக்கு) காட்டுறாங்களா? பேஷ் பேஷ்:)
இறைவனை மீறிய கிரக பலன் ஏதுமில்லை!
நாள் என் செய்யும்?
வினை தான் என் செய்யும்?
எனை நாடி வந்த கோள் என் செய்யும்?
வினையேன், அழுதால் உனைப் பெறலாமே!
'பேச்சு எங்கள் மூச்சு 'என்ற நம் தேசிய குணத்தைக் கடைப்பிடிச்சுட்டு அங்கே தரை முழுசும் வரைஞ்சு வச்சுருக்கும் 3D படத்தையும் ரசிச்சுட்டு நண்பர்களுக்கு டாடா பிர்லா சொல்லிட்டு உள்ளே போனோம்.
இனிய பயணம்....!
அந்தக் "குட்டித் தோட்டம்" படத்தைப் பாத்துக்கிட்டே இருக்கேன்...
Very Nice; They put the plant pots on small steps..
இட நெருக்கடியான அமைப்பில், இப்படி அமைச்சா, ஒன்னோட ஒன்னு முட்டாமல், எல்லாச் செடிக்கும் போதிய சூரிய வெளிச்சம் கெடைக்கும்;
கூடவே, வீட்டின் பின்பக்கப் "பச்சை", நல்லா உசரமாத் தெரியும்; கண்ணுக்கு அழகு!
இப்படி ஒரு தோட்டம் வச்சி, அதுக்கு நடுவுல முருகன் சிலை வைக்கணும்-ன்னு ரொம்ப நாளா ஆசை...
(கீழ் வானம் சிவக்கும் படத்தில் கூட இப்படி வரும்)
யார் வீடு அது? Hats off!
சிங்கப்பூர் பெருமாள் கோவில் தரிசனம்
செய்து வைத்தமைக்கு நன்றி துளசி.
பதிவர் சந்திப்பு பகிர்வு இனிமை.
பயணமும் சந்திப்புகளும் இனிமை.. சிங்கைச்சீனு தந்த சர்க்கரைப்பொங்கலைப்போல் :-)
அருமை அருமை அருமை. தோட்டம் அருமை துளசி அருமை. பின்னூட்டங்கள் அருமை .சீனு அருமை.
சாப்பாடு அருமை.நானும் சிங்கப்பூருக்குப் போகப் போறேன்:)
கோவி கண்ணன்,கதிர்,வெற்றிக்கதிரவன் பார்த்தேன்.
நண்பர்கள் குழாம் அருமை.
அதுவும் 3 டி ஓவியம் சூப்பர் பா.
இனிய சந்திப்புக்கள்... படங்கள் ஒவ்வொன்றும் அழகு... அருமை...
Dear Thulasi,
Your way of narrating the events, really very nice.
Nalina
sorry to write in your post.
KRS, What happened to you? I missed your Thiruppavai posts this time.
Are you ok?
Nalina
விகடன் மணியன் பயணக்கட்டுரைகளுக்கும் மேல் சிறந்த எழுத்து டீச்சர்!காரணம் மணியனுக்கெல்லாம் பின்னூட்ட பூஸ்ட் கிடையாதே:)
எந்தவொரு விஷயத்தையும் வெகுசுவாரசியமாகப் பதியும் எழுத்துநடை உங்களுக்கே உரியது. இதில் பயண அனுபவமும் பதிவர் சந்திப்பும் சேர்ந்தால் இன்னும் இன்னும் சுவாரசியம்.
\\சண்டை போட்டு அறை வாங்குவதற்குள்\\
\\அடிச்சுப்பிடிச்சு அந்தக்கூடத்தில் நானும்\\
\\'பேச்சு எங்கள் மூச்சு 'என்ற நம் தேசிய குணத்தைக் கடைப்பிடிச்சுட்டு\\
அசத்தலான எழுத்து. அற்புதமான படங்கள்! தங்கள் தயவால் சிங்கைப் பெருமாள் தரிசனமும் கிடைக்கப்பெற்றோம். நன்றி டீச்சர்.
அக்கா!
இப்போது கோவி கண்ணன், மகன் படங்கள் தெரிகின்றன.
செங்கதிர் அழகா 'போஸ்' கொடுக்கிறார்.
மிக்க நன்றி
அடுத்தது எங்கே..? நேரா நியூசிலாந்தா...? அது எப்படி மேடம்/சார்..படங்கள்லாம் இத்தினி தத்ரூபமா இருக்கு..? கூடவே யாரும் போட்டோக்ராபர் வர்ராங்களா..?
வாங்க கவியாழி கண்ணதாசன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.
வாங்க வெங்கட் நாகராஜ்.
உலகம் முழுசும் தமிழும் பதிவர்களும் இருக்கும்வரை எங்கே போனாலும் பதிவர் மாநாடுதான், இல்லையோ:-)))
வாங்க கே ஆர் எஸ்.
துளசி பெருமாளுக்குப் பிரியமானவள்:-)
கதிரு சூப்பரு. அக்காவை ரொம்ப பொறுப்புள்ளவர்களா மாத்திட்டாரு:-)
வாங்க ராமலக்ஷ்மி.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா.
கே ஆர் எஸ்,
அந்த சிகப்பு ஓடு போட்ட அரைவட்ட வீடுகள் எனக்கும் ரொம்பவே பிடிச்சுப்போச்சு.
குட்டித்தோட்டம் இருப்பது சித்ரா ரமேஷ் வீடு. அரைவட்டமும் அவுங்க வீட்டு அறை ஜன்னலின் வழியாகப் பார்த்தவையே!
பக்தர்களின் பிடுங்கல் தாங்காம ஒன்னுரெண்டு பெருமாள் கோவில்களில் நவகிரகங்களுக்கு அனுமதி கொடுத்துருக்கார் நம்ம பெரும் ஆள். மதுரை கூடலழகர் இவற்றில் ஒன்று.
இந்த முறையும் முருகன் சிலை வாங்க முயற்சித்தும் அமையலையே:( அதுக்கு பதிலா நம்ம சண்டிகர் முருகன் புடவைகள் (எனக்கும் மகளுக்கும்) வேட்டி , அங்கவஸ்திரம், பொன்னாடை எல்லாம் சீர்வரிசையா அனுப்பி வச்சுருந்தார். அதே மஞ்சப்பை:-)
வாங்க இராஜராஜேஸ்வரி.
பயணத்தை ரசிச்சதுக்கு நன்றிகள்.
வாங்க கோமதி அரசு.
சிங்கைக் கோவில்களில் படம் எடுக்க எந்த ஒரு தடையும் இல்லை. ஆனால் நமக்குத்தான் மூலவரை க்ளிக்கும்போது மனசுலே கொஞ்சூண்டு தயக்கம்!
மிரட்டி மிரட்டி நம்மை இப்படிப் பழக்கிட்டாங்க பாருங்க தமிழகக் கோவில்களில்:-)))
வாங்க அமைதிச்சாரல்.
சரியாச் சொன்னீங்க! இனிப்பு அளவா இருந்துச்சு பொங்கலில்:-)
வாங்க வல்லி.
நானும் சீனுவிடம் மனு போட்டுட்டு வந்தேன், நீங்க சிங்கை வரணும். கோவிலில் சந்திப்பு வைக்கணுமுன்னு.
வாங்க திண்டுக்கல் தனபாலன்.
தொடர்ந்து தரும் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
வாங்க நளினா.
முதல் பின்னூட்ட வருகையா இங்கே?
ஆஹா..... டேங்கீஸ்.
நானும் நம்ம கே ஆர் எஸ். ரொம்பநாளா எழுதலையேன்னுதான் இருக்கேன்:(
வேலையில் கொஞ்சம் பிஸின்னு நினைச்சுக்க வேண்டியதுதான் இல்லையா?
வாங்க ராஜநடராஜன்.
நம்ம மணியன் கணினி காலத்துக்கு முன்னே பிறந்து தமிழ்மணம் காலத்துக்கு முன்னேயே போயிட்டார். நேரம் சரி இல்லைன்னு சொல்லணும். கொஞ்சம் நிதானமா பொறந்துருக்கக் கூடாதோ?
வாங்க கீத மஞ்சரி.
உலகெங்கும் நாமே! இப்ப ரொம்பவே சின்னதாப் போயிருச்சாமே... அந்த உலகம்:-)
வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றிகள்.
வாங்க யோகன் தம்பி.
கதிரின் கண்கள் பேசுவதைப் பாருங்கள்:-)
வாங்க ஹமீது.
கூடவே ஃபொட்டாக்ராஃபர் கொண்டு போக நான் மணியனா?
தமக்குத்தாமேன்னு இருப்பதுதான். பயணங்களில் ஒரு நாலாயிரம் படம் எடுத்தால் அதில் ஒரு நூறாவது தேறிடும்தானே?
இப்போதான் கோபாலை ஊக்குவித்துக் கொண்டிருக்கிறேன் படங்கள் எடுக்க. அப்பதானே படங்களில் நான் இடம்பெற முடியும். மனிதர் தேறிக்கிட்டு வர்றார்:-)
இப்படிக்கு,
துளசி டீச்சர்.
பெருமாள் கோவிலில் செட் இப்ப புதுசா முளைத்திருக்கும் போல. சிங்கப்பூரில் மழை எத்தனை முறை பெய்தாலும் முடிந்த பிறகு அந்த சுவடே தெரியாது. பல முறை ஆச்சரியப்பட்டுள்ளேன்.
சிங்கை பெருமாள் தர்சனம் கிடைத்தது. சந்திப்புகள் கண்டு ஆனந்தம்.
நளினா, டீச்சர்
//What happened to you?//
:)
Something happened
Murugan's design may "look" bad, but "feed" only good;
அடடா, இதென்ன பொது விசாரிப்பு, அதுவும் டீச்சர் பதிவில்?
எதுவாயினும் நன்றி..
//I missed your Thiruppavai posts this time//
நான் வெறுமனே நிழல் நிலவு தான்; நேரடியா, ஆழ்வாள் கோதை (எ) சூரியனையே நண்பன் ஆக்கிக்குங்க:)
உங்களை மீண்டும் மீண்டும் சந்திப்பது மிக்க மகிழ்ச்சியாக, நிறைவாக இருக்கிறது, சிங்கைப் பக்கமாக சென்றால் கண்டிப்பாக அழைக்கவும்.
நாமெல்லாம் சொந்தம் ஆகிட்டோம்
எனக்கும் மலேஷியா போகும்போதெல்லாம் பக்கத்திலிருக்கும் சிங்கை சென்று வர ஆசைதான். ஆனால் ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு தடங்கல். இங்கிருந்தே விசா எடுத்துச் சென்றும் இதுவரை அந்த பயணம் கைகூடவில்லை. அடுத்த முறையாவது பலிக்கிறதா என்று பார்க்க வேண்டும். என் மனைவி, மகள் மருமகனோடு இரண்டு முறை சென்று வந்துவிட்டாள். ஆனால் எனக்குத்தான் தள்ளிக்கொண்டே போகிறது. உங்கள் பதிவை படிக்கும்போது அந்த நினைப்புத்தான்.எப்போதும் போலவே உங்கள் கூடவே எங்களையும் அழைத்துச் செல்வது போலிருந்தது உங்கள் பாணி!
இதுவரை இந்தியாவை விட்டு எங்கும் சென்றதில்லை. அதனாலோ என்னவோ நீங்கள் இணைக்கும் படங்களை அதிக நேரம் பார்க்கிறேன். அரை வட்ட கட்டடங்களும், குட்டி தோட்டமும், 3D படங்களும் சூப்பர்!
வாங்க ஜோதிஜி.
தேவைக்கு ஏற்ப கோவிலில் செட்ஸ் போன்ற சந்நிதிகள் பெருகி இருப்பதால் மக்கள் ஒரே இடத்தில் குவிஞ்சு கூட்டம் போடாம இருக்கமுடியுதே!!!
மழைநீர் வடிகால்களில் ஒன்னும் அடைச்சுக்காமச் சுத்தமா இருந்தால் எவ்ளோ தண்ணீர் வந்தாலும் சாலைகள் பளிச்தான்.
அதுவும் இங்கே தண்ணீர்க்கஷ்டம் இருப்பதால் எல்லாமே சேகரம் ஆகி பூங்காக்களுக்குப் போயிருது. அது இன்னொரு பளிச் அண்ட் பச்சைப்பசேல்!!!
வாங்க மாதேவி.
நம்ம சிங்கைச் சீனு எப்பவும் காட்சிக்கு எளியவனா இருக்கார். மக்கள் கஷ்டப்படாமல் தரிசனம் செஞ்சு, அவரை வணங்கி வாழ்த்திட்டுப் போறாங்க.
ரெண்டு செகண்டுலே பக்தர்களை இழுத்துத் தள்ளிவிடும் சமாச்சாரமெல்லாம் அறவே இல்லை.
அதுதான் விசேஷம்.
வாங்க கோவியாரே!
//நாமெல்லாம் சொந்தம் ஆகிட்டோம்//
இது சத்தியமான உண்மை.
விரைவில் சந்திப்போம்!
வாங்க டி பி ஆர் ஜோ.
அதான்..... அததுக்கு ஒரு நேரம் வரணும்.
நான்கூட ஒருமுறை கே எல் போயிட்டு வந்தேன்.
கோபால் அடிக்கடி மலேசியப் பயணம் என்று போனாலும் Johor Bahru வைத் தாண்டுனதில்லை!!!!
சிங்கையில் தங்கிக்கிட்டே தினம் அங்கே போயிட்டு வந்துருவார்.
வாங்க ரஞ்ஜனி.
உண்மையைச் சொன்னால் இந்தியாவில் இல்லாத அழகா? ஒவ்வொன்னா பார்த்து முடிக்க நம்ம ஆயுள் போதாது.
என்ன..... சுற்றுலாத்துறை இன்னும் கவனம் செலுத்தினால் நாட்டையே சொர்க்கமா மாற்றமுடியும்.
ஆனால்.... அரசும் மக்களும் ஒத்துழைக்கணுமே:(
Post a Comment