Monday, May 13, 2013

டென் கமாண்ட்மெண்ட்ஸ்!

நான் நினைச்சுக்கூடப்பார்க்கலை எனக்கொரு பத்துக் கட்டளைகள் கிடைக்குமுன்னு!! சூரியன் எட்டிப் பார்க்கிறான். வீணாக்கவேணாமுன்னு அகில உலக அன்னையர் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியா இன்னிக்கு மார்கெட் போயிருந்தோம். பகல் சமையலுக்கு வீட்டில்  விடுமுறை.  அப்பாவும் மகளுமா என்னை வெளியில் சாப்பிடக்கூப்பிட்டுப் போறேன்னு சொல்லி இருந்தாங்க.

ஒரு  இடத்தில்   succulents வகை Echeveria  செடி ஒன்னு கிடைச்சது. இது மார்கெட் என்பதால்  பேரம் பேசலாம்.  எட்டை ஆறுக்குக் கேட்டு பிறகு ஏழுக்கு முடிவாச்சு:-)  ரொம்பவே ஆரோக்கியமா இருக்கு செடி. அதை  வச்சுருக்கும்  பாட் கூட  க்ளேஸ்ட் வகை. அதிலும் காக்டெஸ் படம் போட்டுருக்கு. ஆனால் பளிச்ன்னு இல்லை:-(

சட்னு பார்த்தால்ப்ளாஸ்டிக் செடி போலவே இருக்கு.  ஒரு இதழ்  கொஞ்சம் உடைஞ்சுருந்ததால் ரியல் என்ற உண்மை புரிஞ்சது.  ரொம்பவே திக்கான இதழ்கள் என்பதால் கவனமாக் கொண்டு போகணும். ஸ்நாப் ஆகிரும் அபாயம் இருக்கு. இடுப்பிலே வச்சுக்கிட்டேன்.


இன்னொரு இடத்துலே ஒரு ப்ரேயர் ப்ளாண்ட் கிடைச்சது.  இதுக்கு இன்னொரு பெயர் டென் கமாண்ட்மெண்ட்ஸ்!!!  பத்து சொல்லி எட்டு:-)  இதன் இலைகள்  இரவில்  கைகள் கூப்பிக் கும்பிடுவதுபோல் ஆகுமாம். ஒளி குறைவால் இப்படி ஏற்படுமுன்னு அப்புறம் வலையில் பார்த்துத் தெரிஞ்சுக்கிட்டேன்.

எப்படிக் கும்பிடுதுன்னு சிலர் யூ ட்யூபில் போட்டுருக்காங்க.



வட அமெரிக்காவைச் சேர்ந்ததாம் இது.  இலைகளில் பட்டை பட்டையா  இலை போல ஒரு டிஸைன். முக்கால் வாசிகளில் பத்து பட்டை. இதுதான் டென் கமாண்ட்மெண்ட்ஸ் போல!  காலத்துக்கேற்றபடி இது  14, 16 கமாண்ட்மெண்ட்ஸாகவும் வந்துருக்கு. இதன் தாவரப் பெயர் Marantaceae. நிறைய வகைகள் உண்டு. சின்னதா பூவும் வரும். ஆனால் அதுக்கு ஆயுள் கம்மி.



மதர்ஸ் டே கிஃப்ட் போதுமுன்னு  வீட்டிலே கொண்டு வந்து வச்சேன்.  மகளும் வீடு வந்தாள். புதுசா வீட்டுலே எதாவது வந்தால் அது என்னன்னு தெரிஞ்சுக்காட்டி ரஜ்ஜுவுக்கு தலை வெடிச்சுடும். ஆராய்ஞ்சு பார்த்துட்டு அடச்சீன்னான்:-))))



மணி பனிரெண்டே முக்கால். சாப்பிடக் கிளம்பினோம்.  போற இடம் வேற புதுசு. தேடணும்.

இருக்கைக்கு  புக் பண்ண  ஃபோன் செஞ்சப்ப காலை 11.30 இடம் இருக்குன்னாங்க.  ஆனா.... நமக்கு வயித்துலே இடம் இருக்கணுமில்லையா?  ரெண்டுங்கெட்டான் நேரமா இருக்கேன்னு வேற டைம் கொடுங்கன்னால் ஒன்னே கால்  இருக்குன்னாங்க.  ரெண்டரை வரை நமக்கான நேரம்.

இது ஒரு பஃபே ரெஸ்ட்டாரண்ட். எப்படியும் நமக்கு  எதாவது கிடைச்சுருமுன்னு நம்பிக்கை.  ரெட்வுட் ஹொட்டேலின்  ஒரு பகுதியா Sequoia 88 என்ற பெயரில் நடக்குது.  இந்தப்பெயர் என்னன்னு கொஞ்சூண்டுஆராய்ஞ்சதில்  Sequoyah (1767–1843), inventor of the Cherokee syllabary என்று  ஒரு தகவல்.  ஓக்கே... ஒரு சரித்திரத்தோடு தொடர்பு ஏற்பட்டுப்போச்சு நமக்கு:-)


இன்னொரு பொருள் என்று பார்த்தால்  செக்கோயான்னு ஒரு வகை மரங்கள் இருக்காம். சைப்ரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவை. இதுக்குப் பொதுவான பெயர்  coast redwood, California redwood, and giant redwood. ஓக்கே ஓக்கே ஓக்கே...... ரெட்வுட் ஹொட்டேல் என்ற பெயர்க்காரணமும், செக்கோயா ரெஸ்ட்டாரண்ட் பெயர்க் காரணமும் புரிஞ்சே போச்:-))))

இந்த ரெட்வுட் ஹொட்டேல் எங்கூரின் மிகப்பழைய ஹொட்டேல்களில் ஒன்னு. வயசு நூத்துக்கும் மேலே.

ஒன்னு பத்துக்குப் போய்ச் சேர்ந்தோம்.  கவுண்ட்டர் முன்னால் பெரிய க்யூ!  கையிலே காசு வாயிலே தோசை என்பது இவுங்க பாலிஸி! மதர்ஸ் டே ன்னு கூட்டம் அம்முது.  வரிசையில் நின்னு பணம் கட்டிட்டு வந்தார் கோபால். நாங்கள்  உள்ளே போனதும் உக்காரவைக்கப்பட்டோம். இதுக்கே  நேரமாகிருச்சு. 30 நிமிச  டிலே:(

கிவி ஃபேர், ஏஷியன்  டிஷ்ஷஸ், ஹாட் வெஜ்ஜீஸ், ஸூப்,  ஸாலட் பார் டிஸ்ஸர்ட்ஸ் இப்படி ஆறு வகையிலே  ஏராளமான ஐட்டம்ஸ் இருக்கு. ஒருபட்டர் சிக்கன்கூட கண்ணில் பட்டது. பயங்கரக்கூட்டம்.  நாலுபேருக்கு மேல் உள்ள  அளவெல்லாம் இல்லை.  டைனிங் ஹால்முழுசும் ஃபுல் ஆகிருச்சு.  அடுத்த விங்கிலும் இன்னொரு டைனிங் ஏரியா இருக்கு. அங்கேயும் கூட்டமோ கூட்டம்.

ஃபேமிலி ரெஸ்ட்டாரண்ட் , விலை (யும்) மலிவு என்பதால் உள்ளூரில் ஓரளவு புகழ் பெற்று இருக்கு போல. புக்கிங் செய்யும்போது  ஒன்னேகால் மணி நேரம்  ஒருவருக்கு ஒதுக்குனா அதுக்குள்ளே சாப்பிட்டு முடிச்சுடணுமா?  எக்ஸாம் ஹாலைப்போல  ஸ்டாப் ஈட்டிங், புட் டௌன் யுவர்  ஃபோர்க்ன்னு சொல்வாங்களோ:-))))







சாப்பாடு நல்லாதான் இருந்துச்சு.  டிஸ்ஸர்ட்லே ஸ்வீட் ரைஸ் ஒன்னு,  அக்காரவடிசில் போல!!!

நாங்கள் கிளம்பும்போது ரெண்டே முக்கால். அப்பவும் இன்னொரு கூட்டம் சாப்புட வந்தாங்க. நாலு வரை லஞ்ச் டைம்  என்பதால் அவுங்களுக்கு(ம்) ஒன்னேகால் மணி நேரம்:-)


அங்கிருந்த வெள்ளைச்சிங்கம்!

அனைவருக்கும்  அன்னையர் தின வாழ்த்து(க்)கள்.






40 comments:

said...

நான் 1980 வாக்கிலே ஊர் ஊரா சுத்திட்டு இருந்தபோது
இந்த மாதிரி ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் லே அப்பாயின்ட்மென்ட்
டைம் வாங்கிகிட்டு போயிருக்கென். தனியா இல்ல. ஒரு டீமா போவோம்.

அவங்க ஒரு டேபிளுக்கு 45 நிமிசம் தான் டைம். ஆனா ஒரு சௌகரியம்.
எக்ஸ்டென்ட் பண்ணிக்கலாம்.
வேறு யாரும் வல்லேன்னாலும் ப்ரச்னை இருக்காது.

ஆனா, எக்ஸாம் மாதிரி டைம் இஸ் அப் அப்படின்னு சொல்லும்பொழுது தான்
ஏகத்துக்கு பசி எடுக்க ஆரம்பிக்கும்.

அது சரி, அமெரிக்காவிலே, தின்னு முடிக்கமுடியலேன்னா, மிச்சத்தை
பொட்டலமா பார்சல் செஞ்சு தர்றாக. அங்கன அது மாதிரி இருக்குதா ?

சுப்பு ரத்தினம்.

said...

டென் கமாண்ட்மெண்ட்ஸ் சூப்பர்...!

முடிவில் படங்கள் பசியே போய் விட்டது... ஹிஹி...

அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்...

said...

கோகியின் இடத்தை ரஜ்ஜு இட்டு நிரப்பறான்.

சாப்பாடு செலக்ஷன் செய்யற இடத்துல அந்த அட்டென்ஷன் போர்டு எதுக்கு?.

said...

இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள் துளசியம்மா.

said...

ரசித்தேன்.

said...

அன்னையர்தின வாழ்த்துகள் துல்சிமா.
என்ன என்ன சாப்பிட்டீங்கனு சொல்லக் கூடாதா. நானும் ருசிச்சிருப்பேனே;)
ரஜ்ஜு நல்லாதான் மோப்பம் பாக்கறான்.
ம்னசெ நிறைஞ்சு போச்சு. எப்பவும் இந்த சந்தோஷம் நிலைக்கட்டும்ப்பா.

said...

டென் கமாண்ட்மெண்ட்ஸ் பூவும் தொட்டியும் அழகு.அதை பார்க்கும் ரஜ்ஜுவும் அழகு.
அன்னையர் தின வாழ்த்துக்கள்.

said...

இனிய அன்னையர் தின வாழ்த்து(க்)கள்.

said...

டென் கமாண்ட்மெண்ட்ஸ் ..ரொம்ப அழகா இருக்குக்கா ..
ரஜ்ஜு இஸ் எ keen observer :))

உண்மையில் அத்தனை சாப்பாட்டு வகையை பார்த்ததுமே பசியே போயிட்டது அக்கா .
உலகமே அன்னையர் தினம் கொண்டாடுது ..இங்கே பிரிட்டன் மட்டும் ஏப்ரலில் கொண்டாடி முடிஞ்சு .
அன்னையர் தின வாழ்த்துகள் உங்களுக்கும்

said...

எல்லா படங்களுக்கும் லைக் போடணும்போல இருக்கு. ஆமா எப்போ இங்கே லைக் ஆப்ஷன் வருமாம்... ரஜ்ஜு ரெண்டு செடிக்கும் பகக்த்துல போயி அழகு.

அகில உலக அன்னையர் தின கொண்டாட்டம் சமையல் இல்லாமல் ச்ச்சோ நைஸ் :)

said...

அன்னையர் தின வாழ்த்துக்கள் துளசி அம்மா. நல்ல சாப்பாடு.

சுப்பு ரத்தினம், பஃபே முறையில் பார்ஸல் இல்லை.

said...

அன்னையர் தின வாழ்த்துக்கள். எங்களையும் கூடவே கூட்டிப் போய் உங்க ஊரு சாப்பாடு வாங்கிக் கொடுத்ததற்கு நன்றி!
பத்து கட்டளைகளை ரஜ்ஜு மோப்பம் பிடிப்பது அழகு!

said...

கடந்த ரெண்டு மூணு பதிவுல பிபி யை எகிற வைக்குறீங்க. நாயமா?

said...

Late ...இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்!
பூ செடிகள் இலங்கையில் எனது பூந்தோட்டத்தை நினைவு படுத்தியது. அத்தனையும் வைத்திருந்தேன்.
வேதா. இலங்காதிலகம்.

said...

/டென் கமாண்ட்மெண்ட்ஸ்/ நல்ல அறிமுகம்.

புதுவரவை ரஜ்ஜூ ரசித்த விதத்தை சொன்ன விதம் சூப்பர்:)!

இனிய கொண்டாட்டம்.

அன்னையர் தின வாழ்த்துகள்!

said...

வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.

நோ பார்ஸல். ஆல் யூ கேன் ஈட் ஹௌ மச்சோ தட் மச்:-)

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

செடியின் அழகைவிட அதன் பெயரால் கவரப்பட்டேன்! ப்ரேயர் ப்ளாண்ட்!!!

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க அமைதிச்சாரல்.

உண்மைதான்.இன்னும் சொல்லப்போனால் கப்பு, கோகியைவிட டூ டிமாண்டிங் ரஜ்ஜூ!

நாலு ப்ராண்ட் களில் 16 வகை சாப்பாடு இவனுக்கு! இவ்ளோ அதிர்ஷ்டம் கோகிக்கு இல்லை:(

அது என்ன அட்டென்ஷன் என்றால், ஃபேமிலி ரெஸ்ட்டாரண்டு என்பதால் குழந்தைகளும் அலௌடு. சூடா இருக்கும் உணவை எட்டி எடுக்குபோது மேலே போட்டுக்கிட்டால் ஆபத்தாச்சே. அதான் அப்படி.....

said...

வாங்க கைலாஷி.

கயிலைப் பயணம் இது எத்தனையாவது முறை?

அன்புக்கும் வாழ்த்துகளுக்கும் இனிய நன்றிகள்.

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

ரசனைக்கு நன்றிகள்.

said...

வாங்க வல்லி.

அன்புக்கும் ஆசிகளுக்கும் நன்றிப்பா.

டிஸ்ஸர்ட் வகைகள் ரெண்டு வாட்டி:-)

மதர்ஸ் டே ஸ்பெஷல்:-))))

said...

வாங்க கோமதி அரசு.

அந்தத் தொட்டி இதுக்கு அளவு கம்மி. சும்மா வச்சுப் பார்த்தேன்.

ஆனால் தொட்டி அழகுதான் இல்லை? அதான் நீலம் சிகப்பு, பச்சைன்னு மூணு வாங்கி வச்சுருக்கேன். பொருத்தமான செடி கிடைக்காமலா போய் விடும் என்ற அசாத்திய நம்பிக்கைதான்:-)

வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் எங்கள் இனிய வாழ்த்துகள்.

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

வாழ்த்துகளுக்கு நன்றி.

உங்களுக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.

said...

தாமதமான வாழ்த்துக்கள்.

ஒண்னேகால் மணிநேரத்துல சாப்பிட்டு முடிக்கணுமா??? ரொம்ப ஸ்லோவா சாப்பிடறவங்க என்ன செய்வாங்க!!!!

பரிசு உங்களுக்கு பிடிச்ச விதத்துல கிடைச்சிருக்கு நல்லா இருக்கு.

said...

அன்னையர் தின வாழ்த்துக்கள் துளசி !!!


கண்ணுக்கும் விருந்து செடி , சாப்பாடுன்னு .
ரஜ்ஜூ க்கு ஏன் அடச்சீனு ஆயிடுச்சு .

said...

ப்ரேயர் பிளான்ட் உங்க வீட்ல கும்பிட்டதா . போட்டோ இருந்தaa போடுங்க ப்ளீஸ்

said...

Teacher,
Its been long time I said hi to you..I am in need of some help..Long time back you posted about natural treatment one of your friend's mom took in Mylapore..My friend's mom got affected with Cancer..she is looking for those types. Can you please give me that link.
Thanks
Joemom

said...

புது வரவுகளுக்கு வாழ்த்துகள்.

அன்னையர் தின விருந்தையும் பெற்றுக்கொண்டோம். இனிய வாழ்த்துகள்.

said...

வாங்க ஏஞ்சலீன்.

அட! ஏப்ரலா?

எல்லோருக்கும் முன்னோடியா இருக்கீங்கன்னு மகிழ்ச்சி அடையலாமே.

எல்லா நாடுகளும் அவுங்கவுங்க சௌகரியத்தைப் பார்த்துதான் விழா கொண்டாடுறாங்க இல்லையா?

மாட்சிமைதாங்கிய மஹாராணி ஏப்ரலில் பிறந்தாலும் நாங்க ஜூனில்தான் கொண்டாடுவோம்!

ரஜ்ஜுவின் குணாதியங்களைக் கவனிச்சுக்கிட்டு இருக்கேன். பெரிய ஆளாத்தான் இருப்பான் போல!

சாப்பாட்டு வகை பார்க்கத்தான் அழகு. அதுலே நமக்குத் தோதானது நாலைஞ்சு வகை மட்டுமே:(

அதாவது இருக்கேன்னு மகிழ்ச்சிதான்.

உண்மையைச் சொன்னால்...... எல்லோருமாச் சேர்ந்து வெளியே போறோம். சாப்பிடும் சாக்கில் கொஞ்சநேரம் ஒன்னா இருக்கோம் என்பதே மனசுக்கு மகிழ்ச்சி.

said...

வாங்க கவிதாயினி.

லைக் லைக் போடணுமுன்னு சொல்வதே எனக்கு லைக்:-))))

ஒருவேளை சமைக்கலைன்னா..... ?

ராத்திரி புவ்வாவுக்கு சமைக்கவேணாமா? அதுக்கும் சுலப வழி ஒன்னு வச்சுருக்கேன். பகல் சாப்பாடு அநேகவகை என்பதால் ராத்திரிக்கு சிம்பிள். ஒன்லி வெஸ்டர்ன்!

said...

வாங்க அமர பாரதி.

வாழ்த்துகளுக்கு நன்றி.

சின்னவயசு மக்களா இருந்தால் ஒரு கட்டு கட்டலாம்:-))))

said...

வாங்க ரஞ்சனி.

உங்களுக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.

எங்கூர் சாப்பாடு எப்பவுமே கண் நிறைஞ்சு இருக்கும்:-)))))

ரஜ்ஜு கொஞ்சம் அழகுதான், இல்லை?

said...

வாங்க ஜோதிஜி.

ஆஹா..... அப்படியா???

அப்ப இனி வரப்போகும் பதிவுகளுக்கு(ம்) பிபி எகிறாம இருக்கணுமே.......

இன்னும் கொஞ்சம் அருமையான படங்கள் கைவசம் இருக்கு:-)

said...

வாங்க வினோத்.

உங்க பதிவை கோபாலுக்கு அனுப்பி இருக்கேன். அவர்தான் நம்ம வீட்டில் மின்சார சம்பந்தமான வேலையில் இருக்கார்.

பார்க்கலாம் அவருடைய கருத்துக்கள் என்னவென்று.

said...

வாங்க வேதா.

எதுவும் லேட் கிடையாத்உ. வருசம் பூராவும் அன்னையர் தினமே!!!!

உங்களுக்கும் எங்கள் வாழ்த்து(க்)கள்.

நாடு மாறிப்போகும்போது செடிகளை விட்டுவிட்டுப்போவது எவ்ளோ வலி மனசுக்குன்னு எனக்கு நல்லாப் புரியுது. என்ன செய்வது? வேற வழி? :((((

said...

வாங்க ராமலக்ஷ்மி.

இதுக்கு ஏனிப்படிப் பெயர் வச்சாங்கன்னு யோசிக்கிறேன்.

இது நம்மூர்ச்செடின்னா என்ன பெயர் வச்சுருப்போம்? பகவத்கீதைன்னா?

ரஜ்ஜு வீட்டிலே அட்டகாசம் பண்ணிக்கிட்டு இருக்கான்:-))))

said...

வாங்க புதுகைத் தென்றல்.

தாமதமே கிடையாது. எல்லா நாட்களும் நம் நாட்களே:-))))

ஒன்னேகால்மணி என்பதெல்லாம் ஒரு பேச்சுக்குத்தான். ஜஸ்ட் அ கைட் லைன். மெதுவாச் சாப்பிடும் மக்களை விரட்டுவதில்லை.

பொதுவா ஒரு மணி நேரம் தாராளமாப் போதும்தான்.

said...

வாங்க சசி கலா.

விளையாட்டுச் சாமானா இருக்குமோன்னு நினைச்சுக் கிட்டே வந்து பார்த்தான். வெறும் செடின்னதும் சீன்னு ஆகிருச்சு:-))))

படம்தானே? போட்டுறலாம், நான் செடியை வணங்குவது போல்:-)))))

இருட்டுலே வச்சுட்டு ஒரு நாள் ஓசைப்படாமப்போய் பார்க்கணும் அந்தச் செடியை. கும்பிடுதான்னு கண்டு பிடிக்கலாம்!!!!

வாழ்த்துகளுக்கு நன்றிப்பா. ஸேம் டு யூ

said...

வாங்க மாதேவி.

விருந்தை ரசிச்சதுக்கு நன்றி.

உங்க்ளுக்கும் எங்கள் வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க ஜோ மாம்.

சென்னை கச்சேரி ரோட்டில் இருக்கும்,
வெங்கட்ரமணா ஆயுர்வேத ஆஸ்பத்திரிக்கு ஒருநடை போய்ப் பார்க்கச் சொல்லுங்க.

முதலில் வேண்டியது மனோ தைரியம்.

மனசு சமாதானமா இருக்க பிடிச்ச இசை, படம்,புத்தகம் இப்படி எதாவது வச்சுக்கணும்.

ஒரு நெருங்கிய தோழி (மருத்துவர்) சொன்னவைகளை இங்கே போடறேன். பலருக்கும் பயன் தரும்.

வலி இல்லாம இருக்க:

அதிகமா தண்ணீர் குடிக்கனும். அதுவே உடம்பில இருக்கிற சேரப்போற சில டாக்சின் வெளியேத்தும். சாப்பாடில நிறய மஞ்சல் சேருங்க, நிறைய க்ரீன் டீ குடிக்க சொல்லுங்க. க்ரீன் ட்ட், மஞ்சள் இரண்டும்க்கும் கான்சர் குறைக்க, வலி குறைக்க சக்தி இருக்கு.மனசில ச்ட்ரெஸ் நிறைய இருந்தா சில செரோடோனின் சுரந்து அது வலி அதிகமாக்கும். எனவே நிறைய பாட்டு கேக்க சொல்லுங்க, ரேவா சொல்றமாதிரி ஸ்லோகம், இல்லையான சில கதாகாலட்சேபம் கேக்கலாம்.

சின்ன சின்ன யோகா எக்சர்சைஸ் பண்ண சொல்லுங்க ( சூரிய நமஸ்காரம் மாதிரி). தினமும் மெதுவா நடந்தாலும் சாயங்காலம் ஒரு 15 நிமிஷம் நடக்க சொல்லுங்க.கொஞ்சம் கொஞ்சமா லிம்ஃப் நோடெல்லாம் வலிக்க ஆரம்பிக்கும். அதனால கையை உயர்த்தி கீழ இறக்கிறமாதிரி ஒரு 15 தடவை 3 ரிபீட் செய்ய சொல்லுங்க. ( டோடல் 45 தடவை)

கொழுப்பு கொறைவா இருக்கனும். கொழுப்பு கெட்ட ஈஸ்ட்ரோஜன் அளவை கொறைக்கும். ஆனா ஆலிவ் ஆயில் சேர்க்கலாம்.காஃபி, டீ ( க்ரீன் டீ தவிர்த்து), பொரிச்ச உணவு, ஆரஞ்சு பழம் ( 2 மேல கூடவே கூடாது) தவிர்க்கனும்.

பச்சை காய்கறிகள் கேரட், கேரட் ஜூஸ், பழ ஜூஸ் சாப்பிடலாம். அமில பழங்கள் ( ஆரஞ், ஸ்ட்ராபெரி, பைன் ஆப்பிள், மாதுளை தவிர்க்கனும். இனிப்பான பழ்னக்கள் வாழை, ரெய்சின், சப் அமில பழங்கள்ஆப்ரிகாட் செர்ரி, ப்ரூன்,மாம்பழம், பீச், திராட்சை சாப்பிடலாம்.

ரொம்பநேரம் வெந்நீரில குளிக்க வேணாம். எல்லா லோஷன் தூக்கி போடுங்க. நிறைய தண்ணீர் குடிக்கனும். அப்புறம் வீட்டுக்குள்ள ஷூ போட்டு வரவேணாம். அதே மாதிரி குளிக்க கூட அம்மாவுக்கௌ கடலைமாவும் மஞ்சளும் கலந்து கொடுங்க சோப் வேணாம். இதெல்லாம் டக்சின் அளவை குறைக்கும்.

இது எல்லாத்தையும் விட மனசுல சந்தோஷமா இருக்கனும். அதுவே நியோரோ இம்யூனை அதிகரிக்கும், உடம்பு நல்லா சுகமாகும்.

சில நேட்சுரல் ஆண்டி டிப்ரசண்ட்:

மெடிடேஷன், பிடிச்ச பாட்டு கேக்கறடு. காலோஞ்சி ஆயில் கொஞ்சமா சாப்பிடறது, துளசி. வைட்டமின் மாத்திரை வாங்கி அவங்களுக்கு அதை வைட்டமின் சொல்லாம இது டாட்டட் எழுதி தந்தது சாப்பிட்டா கான்சர் குணமாகுனு சொல்லி தினமும் தரலாம். பிலேசிபோ எஃபக்ட் இந்த மாதிரி தன்னம்பிக்கை அதிகம் தரும்.