Monday, April 29, 2013

கொஞ்சம் அக்கம்பக்கம் பார்க்கலாம்:-)


" போனவாரமே உங்களைப் பார்த்தேன். உங்ககிட்டே வந்து பேச ஆசையா இருந்தது.வேணாம் அவுங்க பிஸியா  இருக்காங்கன்னு தடுத்துட்டார். (வீட்டுவீட்டுக்கு இப்படி ஒருத்தர் இருப்பாரே!) தினம்  நாங்க ப்ரேக்ஃபாஸ்ட்க்கு வரும் சமயம்  நீங்க கிளம்பிப் போய்க்கிட்டு இருப்பீங்க.   எங்கே மகளை காணோம்?  எப்பவும் மூணு பேரா வருவீங்க? எங்கே இருக்கீங்க?  அடிக்கடி வருவீங்களா? எப்பவும் இங்கேதான் தங்குவீங்களா?  சொந்த ஊர்  எது? சென்னைதானா?"

சபாஷ்! சரியான போட்டி:-) என்னை வாயைத் திறக்கவிடாம படபடன்னு  வார்த்தைகள் வந்து விழுது!  ஆஹா....வல்லாளுக்கு வல்லாள்,  வையகத்தில் உண்டு!!!!

" இங்கேயா தங்கி இருக்கீங்க? போனவாரம் உங்களைப் பார்க்கலையே:( எந்த ஊர்?"

' மெல்பர்ன்! ஆஸி!'    இன்னொரு அதிர்ச்சி.  அட! நம்ம பக்கத்தூரு மக்கள்ஸ்.

"அம்மாவும் பொண்ணுமா  பட்டுபுடவையில் அன்னிக்கு  ரொம்ப நல்லா இருந்தீங்க. கல்யாணத்துக்கு போனீங்களா?"

"ஆமாம். அன்னிக்குதான் எங்களுக்குக் கல்யாணம்!"

அரண்டு போன  முகத்தை ரசிச்சேன்.  'அறுபதாங் கல்யாண'முன்னு குறுக்கே பாய்ஞ்சார் கோபால்:-)

அவுங்களுக்கும் சென்னைதான் சொந்த ஊர் என்றாலும் 'வசதிகளை' முன்னிட்டு கெஸ்ட் ஹவுஸில் தங்குவாங்களாம்.  ஸேம் ப்ளட்:-)

'சுருக்கமா' ஒரு அரைமணி நேரம் பேச்சில் போனது. நம்ம தொழில் எழுத்துன்னதும் இன்னுமொரு அதிர்ச்சி அவுங்களுக்கு:-)  விடமுடியுமா? நம்ம வாசகர் வட்டத்துலே சேர்த்துவிட்டேன்!

நம்ம சீனிவாசனை வீட்டுக்குப்போயிட்டு வரச்சொல்லி இருந்தோம்.  அவர் திரும்பி வந்தவுடன் தி நகர் ரவுண்டு கிளம்பினோம். பயணங்களில் செக்கு மாடு போலத்தான்  போன இடங்களுக்கே போகவேண்டியதாப் போகுது.  தைக்கக் கொடுத்துருக்கும்  உடைகளை வாங்கிக்கணும். மங்கேஷ் தெருவுக்குப்போய்  சீனிவாசன்  ஆசாரி செஞ்சு வச்சுருக்கும் மோதிரத்தையும் வாங்கிக்கணும். தோழி வீட்டுக்கு ஒரு எட்டு.  இன்றைக்கு இதோடு சரின்னு திட்டம்.

1994 லே அண்ணன் மகள் கல்யாணத்துக்குப் போயிருக்கோம். அன்னிக்குன்னு பார்த்து ப்ளைட் லேட்.  எல்லா ஃபார்மாலிட்டியும் முடிஞ்சு  வீடுப்போய்ச் சேரும்போதே ராத்திரி மணி 12. அண்ணன் வீடு அப்போ அண்ணாநகரில் :-) . பொழுது விடிஞ்சதும் பந்தக்கால்.  நிகழ்ச்சி முடிஞ்சதும் பத்து மணிக்கு மற்ற பூஜைகள் ஆரம்பம்.  எதுக்கும் நிக்க நமக்கு நேரமில்லை.  வீட்டுலே புடவைகள் எடுத்து வச்சுருந்தாலும் அதுக்கு  ப்ளவுஸ் தைச்சுக்கணும் உடனடியா! மகளுக்குப் பட்டுப்பாவாடைகள் வேற எடுத்து உடனடியா தைச்சு வாங்கணும்.

ஏழுமாடி சரவணா ஸ்டோர்ஸ், போத்தி'ஸ், சென்னை  ஸில்க்ஸ் எல்லாம் அப்போ கிடையாது. நல்லி, அதை விட்டா குமரன் சில்க்ஸ் !  குமரனுக்கு ரெண்டு கடைகள்!   பர்ச்சேஸ் முடிஞ்சது.  வெளியூர்வாசின்னு நெத்தியில் எழுதி இருந்ததைப் படிச்ச  கடைப்பையன் ஒருவர், 'உடனே தச்சுக்கொடுக்க இங்கெ ஒரு டைலர் இருக்காரு. வாங்க , நான் இடம் காமிக்கிறேன்'னு ஒரு ஆட்டோ புடிச்சாந்து நம்மைக் கூட்டிக்கிட்டுப் போனார்.  கிட்டேதான். பனகல் பார்க்குக்கு எதுத்த பக்கம் . ராம்ஸ் பஸார்.

அங்கே ஏகப்பட்ட டெய்லர்ஸ் இருக்காங்க. பையன் கொண்டு போய் விட்ட  கடையில்  இருந்தவர்  மறுநாளே  தர்றதாச் சொன்னார். அளவு  கொடுத்துட்டு  வந்தோம். மறுநாள்  மாலை ரிஸப்ஷன். கிளம்பிக் கல்யாண மண்டபம்  போகும்போதே  டெய்லர் கடைக்குப்போய்  உடைகளை வாங்கிக்கிட்டோம்.  மகளுடைய  சட்டையில்  கொஞ்சம் குழறுபடி.  கோபால் எடுத்துக்கிட்டு ஓடினார். மீண்டும் சீர்படுத்தியெடுத்துக்கிட்டு  நல்லவேளையா ரிஸப்ஷன் ஆரம்பிக்கும் முன்  வந்து சேர்ந்துட்டார்.

அதுக்குப்பிறகு  இன்னொரு பயணத்தில்  இன்னொரு கடையில் துணிகளை வாங்கியதும்  தைக்கக்கொடுக்க விசாரிச்சதில் இன்னொரு இடத்தைக் காமிச்சாங்க. அங்கே போனால்  அதே டெய்லர் இருக்கார்.  பெயர் மொஹம்மத் முஸ்தாஃபா.  இதுக்குப்பிறகு அவர் எங்கே கடை போடறாரோ அங்கே போய் கொடுக்கும்படியா ஒரு வழக்கம் ஏற்பட்டுப்போச்சு. அவரும் விடாம பனகல் பார்க்கைச் சுத்தியேதான் கடைகளை மாற்றிக்கிட்டே இருக்கார்.  இப்ப வியாபாரம் ரொம்பவே பெருகி இருக்கு.  இடம் பழைய ராம்ஸ் பஸாரேதான்! 


ஒரே ஒரு சின்னக் கஷ்டம்தான் நமக்கு.  பொய் ஒன்னு சொல்லணும். ஆபத்தில்லாத பொய் என்பதால் நானே என்னை மன்னிச்சுக்குவேன்.  துணிகளைத் தைக்கக் கொடுத்துட்டு  உண்மையில் ஊருக்குக் கிளம்பும் நாளுக்கு ஒரு நாள் முன்னதான  தேதியில்  கிளம்பறேன் என்று சொல்ல ஆரம்பிச்சேன்.  உண்மை விளம்பியா இருந்த காலக்கட்டத்தில்  கடைசி நிமிசம் வரை   இதோ அதோன்னு  லேட் பண்ணி பேஜாராப் போயிருக்கு. அட்ரஸ் கொடுங்கம்மா. பையன்கிட்டே கொடுத்தனுப்பறேன்னு சொல்லி ஒரு பயணத்தில்  ஊருக்குக் கிளம்பும் நாள், காலையில்  ஆறுமணிக்குப் பையன் வந்தார்!

ஆனால் ஒன்னு சொல்லணும்,  ஒருதடவையாக் கொண்டுபோய்க் கொடுக்காம  பயணத்தில்  தினசரி ஊர் சுற்றும்போது , நல்லதாக் கண்ணில் படும் துணிகளை வாங்கிக்கிட்டே இருப்பேன்.  பாவம் கோபால். போதும் போதுமுன்னு  அலறுவார்.  இனிமேல் கொடுத்தால் டெய்லருக்குத் தைக்க நேரம் இருக்காதுன்னெல்லாம் சொல்லி பயமுறுத்துவார். பாவம்:-)))  நம்ம முஸ்தஃபா மாஸ்டர் அதெல்லாம்  பொருட்படுத்தாமத் தைச்சுக் கொடுத்துருவார். சிலசமயம் கோபால் தனியா  பயணம் செஞ்சாலும்  நம்ம கடையில்  எங்களுக்கான துணிகளைத் தைக்கக்கொடுத்து வாங்கியாந்துருவார்.   எங்கள் அளவுகளை  எழுதி வாங்கியாந்துருக்கேன்.  அதைக் கொடுத்தனுப்பினால் போதும்.

அவர் தைப்பது நமக்கும்  இந்த 19 வருசமாப் பிடிச்சுப்போச்சுன்னும்  வச்சுக்கலாம். நானே ஒரு தைய்யல்காரிதான் என்றாலும்  இங்கே கொண்டு வந்து தைச்சுக்க இப்பெல்லாம் சோம்பல் அதிகம். மேலும் இங்கே ஒரு மேட்சிங் கலர் நூல்கண்டு வாங்கும் விலையில் சென்னையில் உடையே தைச்சுக்கிட்டு வந்துடலாம்,பாருங்க.

 சிட்டி டெய்லர், ஃபேஷன் டெய்லர், க்ளாஸிக் டெய்லர்ஸ்ன்னு  பல பெயர்கள் எல்லாம் மாறி இப்போதைக்கு 'ஷிபி டெய்லர் லேடீஸ் ஸ்பெஷலிஸ்ட்'  என்ற பெயரில் கடை இருக்கு.  கடை எண் 8, ராம்ஸ் பஸார். பிரகாசம் ரோடு தி. நகர்.  இந்த பிரகாசம்ரோடுக்கு வர்றதுதான் கொஞ்சம் ட்ரிக்கியா இருக்கும்.  ஏழுமாடி  சரவணா ஸ்டோர் தாண்டியதும்  ரைட்லே பிரியும்  ரோடு. அந்த குறிப்பிட்ட இடம்  மட்டும் ஒன்வே என்பதால்  முதலில்  ட்ரைவர்களுக்குக் குழப்பம் வந்துரும்! பனகல் பார்க்கின் காம்பவுண்ட் சுவரை ஒட்டியே  இருக்கும் ரோடுதான் இது.  காம்பவுண்டு சுவர் முடிஞ்சதும் இது ஜி என் செட்டி ரோடில் போய்ச் சேர்ந்துருது. பாவம்  (அந்த)பிரகாசம்:(

வழக்கம் போலவே தைச்சு முடிச்சதையெல்லாம் அயர்ன் செய்ய அனுப்பி இருக்கேன். இன்னும் ஒரு மணி நேரத்தில் வந்துருமுன்னு  சொன்னார்:-)

மோதிரம் ரெடியா இருந்துச்சு. நல்லாவே செஞ்சுருக்கார். நன்றி சொல்லிட்டு,அங்கிருந்து  மயிலை சரவணபவன்.  கடைசி முறையா வெங்காய பஜ்ஜி.  அடுத்து  விஸிட் தோழி வீடு.  மீண்டும்  டெய்லர் கடை.     எட்டு மணிக்கெல்லாம்  அறைக்கு வந்து  பேக்கிங் ஆரம்பிச்சோம்.

ஆங்...    சொல்ல மறந்துட்டேனே......... கிராண்ட் ஸ்வீட்ஸ் வேணுமுன்னா இனி அடையாருக்கு  ஓட வேணாம்.  செயின் ஸ்டோர்ஸ் போல  மயிலை, அண்ணாநகர் . தி.நகர்ன்னு  ஒன்பது  கிளைகள் உருவாகி இருக்கு.    தி நகரில்   டாக்டர் நாயர் ரோடில் ஒரு கிளை திறந்துருக்காங்க,  கீழேயும் மாடியுமா இருக்கு.  கீழே  இனிப்பு காரம் விற்பனை. அஞ்சாறு இருக்கைகள் போட்டு வச்சுருக்காங்க.


மாடியில்  ரெஸ்ட்டாரண்ட்.   அதுக்கும் மேல் இன்னொரு மாடியில்  ஃபங்கஷன்  ஹால். நூறு பேர்வரை  கொள்ளுமிடம்.  விழாவுக்கு  ஹால் வாடகை கிடையாது.  சாப்பாடெல்லாம் கீழே இருந்து வரவழைச்சுக்கணும்.  குறைஞ்சது 100 பேருக்கான உணவுவகைகளை ஆர்டர் செஞ்சுறனுமாம். மேனேஜர்  ஸ்ரீதர்  மாடிக்கு அழைச்சுக்கிட்டுப்போய்  எல்லாம் விளக்கினார்.ரெஸ்டாரண்டில்  தாலி மீல்ஸ் ரெண்டு வகையாக் கிடைக்குது. நார்த் அண்ட் சௌத் இண்டியன் வகைகள். இது இல்லாம , மற்ற உணவு வகைகள் எல்லாமே  சமைச்சுப்போடறாங்க:-) இப்போதைக்கு நல்ல சுத்தமான இடமாகவும்  பார்க்க நீட்டாகவுமிருக்கு. இப்படியே மெயிண்டெய்ன் ஆனா மகிழ்ச்சியே!  நம்ம கெஸ்ட் ஹவுஸுக்கு சமீபத்தில்  இருப்பதால் நாங்களும் ஒரு நாலுமுறை போயிட்டோம்.

100 மீட்டர் நடக்க சோம்பலா இருந்தால்   ஒரு  ஏழெட்டு மீட்டரில்  Suswaad  என்றொரு  உணவுக்கடை. அங்கேயே சாப்பிடும் வசதி இருந்தாலும்..... வீட்டுக்கு வாங்கிப் போகும் மக்கள்தான் நிறைய.  சாயங்காலமாப்போனால் புட்டு கிடைக்குது. நல்ல மிருதுவா தொண்டையை அடைச்சுக்காம அட்டகாசமா இருக்கு.  இங்கே சுவை சூப்பர்னு சொல்லணும். வீட்டுச் சாப்பாடு மாதிரியே!  வயித்துக்கும்கேடு வரலை.  மாலை வேளைகளில் சப்பாத்தி, பருப்பு விசேஷம்.  பிள்ளையார் சதுர்த்தியன்னிக்கு  கொழுக்கட்டை வாங்கிக்கலாமுன்னு போனால்   பயங்கரக்கூட்டம்.  வீட்டுலே சாமி கும்பிட நைவேத்யங்களை  இங்கே இருந்து வாங்கிப்போகும்  கும்பல் அது!  செல்ஃபோனில் தங்ஸ் போடும்  ஆர்டர் படி இங்கே ஆர்டர் கொடுத்துக்கிட்டு இருந்தார் ஒருத்தர். '

 "வடை இன்னும் பத்து நிமிசமாகுமாம் இருந்து வாங்கவா? "

ஹைய்யோ!!!  லைஃப்  எவ்ளோ ஈஸி பாருங்க. பேசாம இந்தியாவுக்கு வந்துறலாமா?

தொடரும்.......:-)


37 comments:

said...

ஹைய்யோ!!! லைஃப் எவ்ளோ ஈஸி பாருங்க. பேசாம இந்தியாவுக்கு வந்துறலாமா?

எங்கு சுற்றியும் ரங்கனைச்சேவிக்க மனம் ஏங்குவது மாதிரி - எங்கே எத்தனை வசதிகள் கிடைத்தாலும் இந்தியா வரலாமா என்று மனம் ஏங்குவதை தவிர்க்கமுடிவதில்லை ..

என் மகன் '"சொர்க்கத்தில் கொண்டுபோய் சகல வசதிகளுடனும் வாழவைத்தாலும் எங்க வீட்டுக்குப் போகணும் என்று பாட ஆரம்பித்துவிடுவீர்களே " - என கிண்டல் செய்வார் ..

said...

வந்துறலாம் தான். ஆனால் நமக்கெல்லாம் நொட்டுச் சொல்ற புத்தி. க்ரான்ட் ஸ்வீட்ஸும் பிடிக்காது; கிருஷ்ணா ஸ்வீட்ஸும் பிடிக்காது. சுயம்பாகம் தான் பிடிக்கும். :)))))

said...

//வல்லாளுக்கு வல்லாள், வையகத்தில் உண்டு//

வை-அகமா? "வாய்"அகமா?:)

//"அன்னிக்குதான் எங்களுக்குக் கல்யாணம்!" அரண்டு போன முகத்தை ரசிச்சேன்//

என்னவொரு ரசிப்பு:) நித்ய கல்யாணி டீச்சருக்கு:)

//நம்ம தொழில் எழுத்து//

பாரதிக்கே, "நமக்குத் தொழில் கவிதை"
ஆனா, இதைப் பொண்ணு பாக்கும் போது அவரு சொல்லலையாம்:)

said...

லைஃப் தானே...? ரொம்ப ரொம்ப ஈஸி... சீக்கிரம் வந்துடுங்க...!

said...

//இனிமேல் கொடுத்தால் டெய்லருக்குத் தைக்க நேரம் இருக்காதுன்னெல்லாம் சொல்லி பயமுறுத்துவார். பாவம்:-)))
நம்ம முஸ்தஃபா மாஸ்டர் அதெல்லாம் பொருட்படுத்தாமத் தைச்சுக் கொடுத்துருவார்//

முஸ்தபா முஸ்தபா Dont Worry முஸ்தபா,
டீச்சர் நம் தோழன் முஸ்தபா:)

//கிராண்ட் ஸ்வீட்ஸ் வேணுமுன்னா இனி அடையாருக்கு ஓட வேணாம். செயின் ஸ்டோர்ஸ் போல மயிலை, அண்ணாநகர் . தி.நகர்ன்னு ஒன்பது கிளைகள்//

அடையாற்றிலேயே ரெண்டு-மூனு கடை!
= "பாகப் பிரிவினை"

//Suswaad...
சாயங்காலமாப்போனால் புட்டு கிடைக்குது. நல்ல மிருதுவா தொண்டையை அடைச்சுக்காம அட்டகாசமா இருக்கு//

புட்டுக்கும் பேருக்கும் சம்பந்தமே இல்லையே!
பிட்டுக்கு டின் சுமந்த கதையா ஆயீரும் போல இருக்கே, முருகா!:)

டீச்சர்,
எல்லாப் புட்டும் புட்டல்ல - என்முருகன்
செந்தூர்ப் புட்டே புட்டு

திருச்செந்தூர் புட்டமுது சாப்பிட்டுப் பாத்துட்டுச் சொல்லுங்க!

said...

//ஹைய்யோ!!! லைஃப் எவ்ளோ ஈஸி பாருங்க. பேசாம இந்தியாவுக்கு வந்துறலாமா?//

:)
அருமை!

//மோதிரம் ரெடியா இருந்துச்சு//

கணையாழி ரொம்ப அழகு! வாழ்த்துக்கள் மணமக்களே!:)

மஞ்சள் மோதிரம் பார்த்ததும், என்னமோ வேற சில நினைவுகள் வந்து விட்டன;
ஆயில்யம் நட்சத்திர நிற மோதிரம், அது இன்னும் வாங்கிக் குடுக்காமயே இருக்கேன், ஒரு உற்ற தோழமைக்கு!

said...

//பேசாம இந்தியாவுக்கு வந்துறலாமா?
//

இப்படி கேக்குறவுக எல்லாம் வரமாட்டாகன்னு எங்களுக்குத் தெரியாதா ...??!!

said...


அக்கம் பக்கம் மிக அருமை.

ஹைய்யோ!!! லைஃப் எவ்ளோ ஈஸி பாருங்க. பேசாம இந்தியாவுக்கு வந்துறலாமா?//
வந்தால் எல்லோரும் மகிழ்வோம்.

எந் நாடு என்றாலும் நம் நாட்டுக்கு ஈடு ஆகுமா!said...

எங்க சுச்வாத் ஆக்கும். எவ்வளவு தீபாவளி,ஸ்ரீஜயந்தி பட்சணம் அப்பா வாங்கிவந்திருப்பார்:)
இப்பவும் அங்க கிடைக்கிற வேப்பிலைக் கட்டி மாதிரி வேற எங்கயும் கிடைக்காது. வெங்கட்ராமன் தெரு மறக்கமுடியாத தெரு.:)
டெய்லருக்கு நல்ல விளம்பரம் கிடைச்சது இனி நானும் அங்க போய்த் தைத்துக்கொள்ளலாமா. உங்க பேரைச் சொல்லி இரண்டு நாட்கள்ள வாங்க முடியுமான்னு பார்க்கிறேன்;)
சரியான ரவுண்ட் அப்.நன்றிப்பா.அந்த க்ராண்ட் ஸ்வீட்ஸ் பத்தி சொன்னதுக்கு. ஹால்+சாப்பாடு சின்ன கூடுதல்களுக்கு ஏற்பாடு செய்யலாமே.வயிற்றுக்கு ஒத்துக்கணும்.வந்துடுங்க . நாங்க எல்லாம் இருக்கோம் இல்லையா!!!!

said...

ஹைய்யோ!!! லைஃப் எவ்ளோ ஈஸி பாருங்க. பேசாம இந்தியாவுக்கு வந்துறலாமா?// ரசித்தேன்.

said...

/பேசாம இந்தியாவுக்கு வந்துறலாமா?
//

இப்படிதான் சொல்லி பதிவுகள் எழுதிகிட்டே இருப்போம்ல

said...

எஞ்சாய்.....

இந்தியா சீக்கிரமே வரணும்னு தோணிடுச்சா டீச்சர்....

said...

//அரண்டு போன முகத்தை ரசிச்சேன். 'அறுபதாங் கல்யாண'முன்னு குறுக்கே பாய்ஞ்சார் கோபால்:-)//
ஏங்க இப்டி ...... :)))))))))யோசிக்காம கெளம்பி வாங்க . அதுவும் மெட்ராஸ் க்கே வந்துடலாம் . பாருங்க ...
grand ஸ்வீட்ஸ் மட்டும் இல்ல ரத்னா கபே கூட அங்கங்க கிளைகள் .

said...

கடைசியில் ஒரு கேள்வி கேட்டிருங்க பாருங்க....வர ஐடியா இருக்கிறவங்க பல முறை யோசிக்கனும்.

said...

வரணும்... வரணும்... இங்கயே வர முடிஞ்சாலும் சரி, இல்லாட்டி அடிக்கடி இந்தியாவுக்கு வரணும். அந்தக் கணையாழி ரொம்ப ரசிக்க வெச்சுது.

said...

வாங்க வாங்க.....

என்ன இருந்தாலும் நம்ம நாடு போல வருமா...:)

கோவையில் இருந்தவரை பக்கத்துல ஒரு அக்கா அழகா தைத்துக் கொடுத்துடுவாங்க...

வெள்ளிக்கிழமை பொண்ணு பார்த்துட்டு, ஞாயிற்றுக்கிழமை நடக்கும் நிச்சயத்தார்த்த புடவைக்கு ப்ளவுஸ் மாமியார் கொடுத்துட்டு போனாங்க. சனிக்கிழமை காலையில் கொடுத்து மாலையில் அந்த அக்கா தைத்துக் கொடுத்துட்டாங்க...:)

திருமணமான பின்னும் இரண்டு வருடம் வரை வரும் போதெல்லாம் அந்த அக்கா தைத்துக் கொடுத்துடுவாங்க...

2004ல் இருந்து மாமியார் தான் தைத்துக் கொடுக்கறாங்க...:)

வெங்காய பஜ்ஜிய காட்டி ஆசைய கிளப்பி விட்டுட்டீங்களே டீச்சர்...

said...

இங்கே வரக்கூடிய எண்ணமே இல்லையா? கடைசி வரைக்கும் அங்கே தானா?

said...

இது உங்களுக்கே நியாயமாப்படுதா? சாப்பாடு டிபன் தட்டு மட்டும் தனியா அம்போன்னு இருக்கு?
எங்க "நம்ம ஆளு?"

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

//எங்கு சுற்றியும் ரங்கனைச்சேவிக்க மனம் ஏங்குவது மாதிரி - எங்கே எத்தனை வசதிகள் கிடைத்தாலும் இந்தியா வரலாமா என்று மனம் ஏங்குவதை தவிர்க்கமுடிவதில்லை//


ரொம்பச் சரியாச் சொன்னீங்க. ஆனால் எனக்கு 'எங்கவீடு' இங்கேதானே இருக்கு:(

said...

வாங்க கீதா.

இங்கே ஆன்னா ஊன்னா உங்க பேச்சுதான் நம்ம வீட்டுலே! பாருங்க அவுங்க ஸ்ரீரங்கம் போயிருக்காங்கன்னு புலம்புவேன்.

சுயம்பாகம் செஞ்சு அலுத்துப்போச்சு எனக்கு:( அதே சமயம் வெளிச்சாப்பாடும் அதிகம் ஆகாது:(

said...

வாங்க கே ஆர் எஸ்.

வாய் மட்டுமா? நாக்கும் நீளம்தான் போங்க:-)

நானும் தொழிலைப் பத்தி என் கல்யாணத்தின்போது சொல்லலையாக்கும்:-)))))

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

நாடு சரியாகட்டும் ஊழல்போனதும் இதோன்னு கிளம்பிருவேன்.

said...

கே ஆர் எஸ்.

'அவன்' அமிர்தமே கொடுத்தாலும் தின்ன யோசனைதான் பயணத்துலே:(

கோவில் பிரசாதம் சாப்பிட மனோதிடம் வேணும்!

said...

கே ஆரெஸ்,

அது ஆயில்யத்துக்கா? அச்சச்சோ.... அனுஷத்துக்குப் போட்டுட்டேனே!!!

32 வருசத்துக்கு முன்னால் பெண்களூரில் வாங்கிப் போட்டது அது. கல் நல்ல கல்லுன்னு நம்ம ஆசாரி சொன்னார். அசலு!

said...

வாங்க தருமி.

என் தலைமுறையோடு இந்தக்கேள்வி போயிரும். செடியா என்ன? இது மரம். மீண்டும் பறிச்சு நட்டால் பிழைக்காது என்பதே உண்மை:(

said...

வாங்க கோமதி அரசு.

ஆசை(மட்டும்தான்) இருக்கு தாசில் பண்ண:-))

அதான் தினமும் படுக்கையில் விழுந்ததும் பொழுது புலரும் வேளை வரை இந்தியாதான்:-))))

said...

வாங்க வல்லி.

அதெப்படிப்பா வெங்கட்ராமனை மறக்க முடியும்:-)))))

சுஸ்வாத் சுத்தமா இருக்குப்பா. அதுவே ரொம்ப சந்தோஷம். எல்லாம் சின்னப் பொண்ணுகளா பாய்ஞ்சு பாய்ஞ்சு வேலை செய்யறாங்க. இத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கிடைச்சுருக்கு பாருங்க. அதுவே புண்ணியம்.

said...

வாங்க மாதேவி.

ஆசை வந்தவுடன் அதன் தலையில் ஓங்கி ஒரு அடி! பேசாம அடங்கிரும்:-)

said...

வாங்க அவர்கள் உண்மைகள்.

பெயருக்கு ஏற்றார்போல்தான்.

சொன்னது அத்தனையும் உண்மைகளே!!!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

மனசுலே தோணுவதோடு சரி. செயல்படுத்த முடியாதுன்னு ரெண்டரை வருச பரிசோதனையில் தெரிஞ்சு போச்சே:(

said...

வாங்க சசி கலா.

வாங்க வாங்கன்னு வாய் நிறையக் கூப்புடறீங்க. மகிழ்ச்சியே!

ஆனால் வீட்டு வாடகை....ஐயோ

சமாளிக்க முடியாதுப்பா:(

said...

வாங்க குமார்.

பல வருசங்களா, பல முறைகள் யோசிச்சாச்சு. 32 வருச இடைவெளி ஆயிருச்சே:(

வந்து போக முடிஞ்சால் போதும் என்ற நிலைதான் இப்போதைக்கு.

said...

வாங்க பால கணேஷ்.

ரெண்டாவதாச் சொன்னீங்க பாருங்க அது உத்தமம். வந்துபோக உடல்நலம் நல்லா இருக்கணும் என்பதே பிரார்த்தனை!

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

எத்தனை பேருக்கு மாமியார் தைச்சுத் தரும் பாக்கியம் கிடைச்சுருக்குன்னு பாருங்க. நீங்க உண்மையில் அதிர்ஷ்டசாலிப்பா.

வெங்காயபஜ்ஜி கோபாலின் ஃபேவரிட்.
குண்டுகுண்டா நல்லா இருக்குல்லே?

said...

வாங்க ஜோதிஜி.

கரெக்டாச் சொல்லிட்டீங்க!

'கடைசி வரை' இங்கே தான் இருக்க விருப்பம்.

டீஸண்ட் எக்ஸிட் வேணும் என்ற ஆசைதான்.

ஆண்டவன் அருளணும்.

said...

வாங்க நம்பள்கி.

ஆளைக் கட் பண்ணிட்டேன், படத்தில் மட்டும்தான்:-)))

said...

//அது ஆயில்யத்துக்கா? அச்சச்சோ.... அனுஷத்துக்குப் போட்டுட்டேனே!!!//

No worries teacher:)
Yellow Sapphire = அனுஷத்துக்கும் அஃதே, திருவாதிரைக்குக் கூட அஃதே...

கோபால் சாருக்குச் சுத்தி போடுங்க:)
அந்த மோதிர அழகில் மயங்கி விட்டேன்:)