காலையில் இருந்து நூறு முறை கேட்டுட்டார். இதென்ன பிரமாதம்? எனக்கு ஆயிரம் வேலை இருக்குன்னேன்:-)
இன்றும் நாளையும் கோபாலுக்கு இங்கே ஒரு ட்ரெயினிங் ப்ரோக்ராம். இதே ஹொட்டேலில் வேறொரு ஹாலில். காலையில் ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிடக் கீழே ரெஸ்ட்டாரண்ட் போனப்ப, இந்தப் பயிற்சிக்காக இவரோட கம்பெனியில் இருந்து இன்னும் ரெண்டு பேர் வந்து கலந்துக்கப்போறாங்கன்னு சொல்லி இருந்தவர்களில் ஒருவரைச் சந்தித்தோம். இவர் ஆக்லாந்தில் இருந்து வந்துருக்கார். இன்னொருத்தார் நம்மூர்காரர். பனிப்பொழிவு காரணம் விமானநிலையத்தை மூடிட்டாங்களாம். ஃப்ளைட் இல்லைன்னு தகவல் அனுப்பிட்டார்.
ஐயோ.... அப்ப மகள் இன்னிக்கு வேலைக்கு எப்படிப் போவாளோன்னு அவளைக் கூப்பிட்டால் இன்னும் சாலைகள் பனியில் மூழ்கி இருப்பதால் போக்குவரத்து கூடாதுன்னு அறிவிப்பு வந்துக்கிட்டு இருக்காம். அடப் பாவமே! பேசாம நம்மகூடவே இருந்துருக்கலாம்...........
மாலை அஞ்சு மணிக்கு வந்துருவேன்னு சொல்லிட்டு கோபால் கிளம்ப நானும் கொஞ்ச நேரம் வலை மேய்ஞ்சுட்டு மெயில்கள் பார்த்துட்டு ஜூட் விட்டேன். சென்ட்ரல் ரயில் நிலையம் மேம்பாலத்தில் இருந்து தெரிஞ்சது. இதுவரை போகாத தெருவுக்குள் நுழைஞ்சேன். நகரமையத்துலே கட்டங்கட்டமா குறுக்கவும் நெடுக்கவும் போகும் தெருக்களில் காணாமப்போக ச்சான்ஸே இல்லை! க்ரீக் தெரு!
ஆன் தெரு முனையில் செயிண்ட் ஆன்ட்ரூஸ் யுனைட்டிங் சர்ச்ன்னு ஒன்னு கம்பீரமா நிக்குது. நம்மூர் புள்ளையார் கோவில்கள் போலத்தான் இந்தப் பக்கங்களில் சர்ச்சுகள். முக்குக்கு முக்கு தப்பாது.
ஒரு பூக்கடையில் நுழைஞ்சு, இதே பூச்செடிகள் நம்மூரில் பாதிவிலை என்றதும் மனசுக்குத் திருப்தியா இருந்துச்சு. அடுத்து இருந்த ஒரு ஷாப்பிங் ஆர்கேடுக்குள் போனால் பிக் டபிள்யூ னு ஒரு டிபார்ட்மெர்ண்ட் ஸ்டோர்ஸ். இங்கே கம்பி மத்தாப்பு விற்பனைக்கு இருக்கு! பரவாயில்லையே ஆஸியில் எப்பவும் கிடைக்குதேன்னு கொஞ்சம் பொறாமை!
எங்க நியூஸியில் வருசத்துலே நவம்பர் ஒன்னு முதல் நவம்பர் அஞ்சு மாலை 6 மணி வரை மட்டுமே பட்டாஸ் விற்பனை. அதுவும் கை ஃபாக்ஸ் புண்ணீயம் கட்டிக்கிட்டார். இவர்தான் இங்கிலாந்தின் நரகாசுரன். இவரைப்பற்றித் தெரிஞ்சுக்க விருப்பம் இருந்தால் இங்கே பாருங்க. நம்ம வீடுதான். தாராளமா வந்து பாருங்க.
எங்கூர்லே இன்னொரு பெரிய கொடுமை பட்டாஸ் வாங்க 18 வயசு ஆகி இருக்கணும்! No sale of Fireworks if you are under 18.
இந்த க்ரீக் தெருவின் குறுக்கா குவீன்தெரு வருது. அந்த மூலையில் மெக் ஆர்தர் ம்யூஸியம் ஒன்னு உண்டு. . இந்த ஜெனரல் டக்ளஸ் மெக் ஆர்தர் , சுப்ரீம் கமாண்டரா ரெண்டாவது உலகப்போரில் பணியாற்றினவர். இறுதி வெற்றிக்குத் திட்டம் போட்டவர் என்ற பெயரும் பெருமையும் அடைஞ்சவர். அவர் நினைவாத்தான் இந்த ம்யூஸியத்துக்குப் பெயர் வச்சுருக்காங்க.
இப்போதைய ஸ்பெஷலா ப்ரிஸ்பேன் அட் வார் (Brisbane at War)காட்சிக்கு வச்சுருக்காங்க நுழைவுக் கட்டணம் வெறும் அஞ்சு டாலர்கள்தான். சனிக்கிழமையும் திறந்திருக்கும் என்பதால் கோபாலோடு வரணுமுன்னு இருந்துட்டேன்.
நகர நடமாட்டத்தை வேடிக்கை பார்த்தபடி போஸ்ட் ஆஃபீஸ் கட்டிடத்தைக் கடந்து போனேன். இதுவும் பழையகாலக்கட்டிடம்தான். பெரிய தூண்களோடு கம்பீரமா நிக்குது. இந்த கட்டிடம் 1872 செப்டம்பரில் தபால் ஆஃபீஸா இயங்க ஆரம்பிச்சது. குவீன் தெரு மாலில் ரெண்டு வரிசைக் கடைகளுக்கும் இடைப்பட்ட வெளியில் எப்பவும் எதாவது நடந்துக்கிட்டே இருக்கு. இதுதான் இங்கத்து செண்ட்டர் கோர்ட்:-) .
ஹாலிடே ஸ்பெஷல் டீல் என்று ஹொட்டேல் விளம்பரத்துக்காக படுக்கை ஒன்னு போட்டு வச்சுருக்காங்க. தொட்டடுத்து உள்ளூர் பொலீஸ், சமூகத்துக்கு குறிப்பா இளைய சமூகத்துக்கு சாலை விதிகள், பாதுகாப்பு முறைகள் சொல்லிக்கொடுக்க என்ன சேவையெல்லாம் செய்யறோமுன்னு ட்ராஃபிக் சைன்ஸ் எல்லாம் வச்சு சன்கார்ப் இன்ஷூரன்ஸ் கம்பெனியுடன் சேர்ந்து ஒரு விழிப்புணர்வு கூட்டம் நடத்திக்கிட்டு இருக்காங்க. Rotary Youth Driver Awareness. (RYDA) உள்ளுர் டிவி ஒரு ஆஃபீஸரை பேட்டி எடுக்குது. என்னதான் அதிகாரமுள்ள ஆட்கள் என்றாலும் டிவி கேமெரா முன்னால் நிக்க வச்சு மைக்கை முன்னால் நீட்டுனா ஒரு தயக்கம் வந்துருதுன்னு நெர்வஸா பேட்டிகொடுத்துக்கிட்டு இருந்தவரைப் பார்த்தால் புரிஞ்சது!
உண்மைதானே.... நம்ம கல்யாண வீடுகளில் பாருங்க ஜாலியா அரட்டை அடைச்சுக்கிட்டு இருப்போம். வீடியோ கேமெராவின் ஒளிவெள்ளம் நம்ம முகத்தில் விழுந்ததும் சட்னு ஒரு சைலன்ஸ் வந்துரும். முகத்தை எப்படி வச்சுக்கறது, தலைமுடி எல்லாம் கலைஞ்சு பேய் போல இருக்கோமா? பொட்டு நேரா இருக்கான்னு ...... ரொம்ப கான்ஸியஸாப் போயிருது இல்லே?
போற வர்ற கூட்டம் சில நொடிகள் நிற்பதோடுசரி. சட்டை செய்யாம போய்க்கிட்டே இருக்காங்க. டிவியில் வரும்போது பார்த்துக்கலாமுன்னு இருப்பாங்க போல:-)
மாலின் நடுப்பகுதிக்கு வந்துருந்தேன். ஆண்டீக் நகைக்கடை கண்ணில் பட்டது. அந்த பெண்டண்ட் வித்துப்போச்சான்னு பார்க்கப்போனேன். கண்முழிச்சு சிரிச்சது என்னைப் பார்த்து. இன்றைய விற்பனைப்பெண்கள் புதுசா இருந்தாங்க. அது என்ன விலைக்கு வருமுன்னு கேட்டதுக்கு உள்ளே கொண்டு போன பெண் உடனே திரும்பி வந்து கேஷா இல்லை கார்டான்னு கேட்டாங்க. கேஷ் என்றதும் உள்ளெ போய் வந்தப்ப என் மனக்கணக்கில் இருக்கும் விலைக்கு ஒரு டாலர் மலிவு! டீல் ஓக்கே:-)))))
கிடைக்கணும் என்பது கிடைக்காமல் போகாது என்பது இதுதான்.
Myer centre கட்டிடத்துக்குள்ளே போய் கடைகளை வேடிக்கை பார்த்தப்ப அங்கேயும் ஒரு ஆண்ட்டீக் கடை கண்ணில் பட்டது. நம்மூரில் காதுலே இருக்கும் குரும்பி எடுக்க குட்டியூண்டு கரண்டி ஒன்னு அந்தக் காலச் சாவிக்கொத்தில் இணைச்சு வச்சுருப்பாங்க யாருக்காவது நினைவிருக்கா? அது போல ஒன்னும் பல்குத்தும் குச்சியும் சேர்த்து 9 காரட் தங்கத்துலே செஞ்சது 550 டாலருக்குப் போட்டுருக்காங்க.
பகல் சாப்பாட்டுக்கு எலிஸபெத் தெருவில் இருக்கும் கோவிந்தாஸ்க்கு போனேன். இந்த செண்டர்க்கு நேரெதிரில்தான் இருக்கு. வெறும் பருப்பு சாதம், தொட்டுக்க ரெண்டு பகோடா வாங்கிக்கிட்டேன். அன்லிமிட்டட் மீல்ஸ் ஆல் யூ கேன் ஈட் என்று 12.90க்குக் கிடைக்குது. அதெல்லாம் தின்ன எனக்கு வயிறு இல்லை. ஆனால் அநேக வெள்ளையர்கள் முக்கியமாக இளைஞர்கள் ஒரு கட்டு கட்டிக்கிட்டிக்கிட்டு இருந்தாங்க. மற்ற உணவுக்கடைகளைவிட இது மலிவு. அதிகமா மசாலா சேர்க்காத இந்த இந்திய உணவு பிடிச்சுப்போச்சு போல!
கடந்த முறைகளில் பார்க்க ஆசைப்பட்டு பார்க்காமல் போன ஒரு இடத்தை நோக்கி நடையைக் கட்டினேன். க்வீன்தெரு மாலில் இருந்து மூணே ப்ளாக். ப்ரிஸ்பேன் பொட்டானிக் கார்டன். நாப்பத்தியொன்பது ஏக்கர் பரப்பில் ப்ரிஸ்பேன் நதியை ஒட்டியே இருக்கு.
1828 இல் ஸ்தாபிதம்! இந்த இடம் தோட்டம் வைக்கப் பொருத்தமா இருக்குமுன்னு தேர்ந்தெடுத்தவர் அந்தக்கால தாவரஇயல் நிபுணர் சார்லச் ஃப்ரேஸர். இந்த நகரம் உருவாகி அப்போ மூணே வருசம் ஆகி இருந்துச்சு. ஒரு பக்கம் நதி, இன்னொரு பக்கம் பார்லிமெண்ட் கட்டிடமுன்னு அமைஞ்சிருந்துச்சு.
1855 ஆம் ஆண்டு இந்தப்பெரிய தோட்டத்தின் ஒரு பகுதியை பொட்டானிக் ரிஸர்வ் ஆக்கி இதுக்குப் பொறுப்பாளராக வால்டர் ஹில் என்பவரை நியமிச்சாங்க. இவர் 26 வருசம் (1881வரை) இந்தப்பொறுப்பில் இருந்து பராமரிச்சு இருக்கார். வேறு எங்கிருந்தோ கொண்டு வந்த புதுப்புதுச் செடிகளும் பரிசோதனை முறை வளர்ப்புமா இவர் காலத்தில் இருந்துருக்கு. இப்போ இருக்கும் பல மூத்த மரங்கள் அவர் கைவண்ணம்தானாம்.
இந்தத் தோட்டத்தை மூடுவதே இல்லை. 24 மணி நேரமும் திறந்தேதான் இருக்கு. உள்ளே நடைபாதைகள் முழுசும் இரவில் மின் விளக்குகளோடு ஜெகஜோதியா ஜொலிப்பதால்.... அந்த நேரங்களில் கூட மனித நடமாட்டம் இங்கே இருக்கு.
மொத்தத் தோட்டத்தையும் நமக்குச் சுத்திக் காமிக்க நாளுக்கு ரெண்டு முறை காலை 11 மணிக்கும் பகல் 1 மணிக்கும் இலவச கைடட் டூர் உண்டு.. அரைமணி நேரம் லேட்டா வந்துட்டோம். பரவாயில்லை. வாங்க என்னோடு. உள்ளே போய்ப் பார்க்கலாம்
தொடரும்.....:-)

மேலே இருப்பது சுட்ட படம்

23 comments:
மனக்கணக்கில் இருக்கும் விலைக்கு ஒரு டாலர் மலிவு! டீல் ஓக்கே:-)))))
கிடைக்கணும் என்பது கிடைக்காமல் போகாது
பெண்டன்ட்டுக்கு அதிர்ஷ்ட்டம்..
பாருங்க உங்க கைகே வந்தடைந்தது ...
//வாங்க என்னோடு. உள்ளே போய்ப் பார்க்கலாம்//
தோ வந்துட்டேன்....
இனிய பயணம்... சுவையான கட்டுரை. தொடரட்டும்....
படங்களும், பயணமும் அருமை...
/கிடைக்கணும் என்பது கிடைக்காமல் போகாது என்பது இதுதான்./
அதானே:)! நல்லாருக்கு. எனக்கான பதிலில் மூச்சு விடலையே இதுபத்தி. சஸ்பென்ஸா வச்சிட்டீங்க:)!
1945 லே இரண்டாவது உங்க மகா யுத்தம் முடிஞ்சு போச்சுன்னு எங்க ஸ்கூல்ல ரெண்டு நாள் லீவு விட்டாங்க. அப்போ நான் ஆறாவது அதாவது பர்ஸட் பார்ம் படித்துக்கோண்டிருந்தேன்.
நான எவ்வளவு பெரிய ஆள்னு (கிழவன்னு) இப்பவாவது தெரிஞ்சுக்கோங்க.
பெண்டெண்ட் வாங்கிட்டீங்களா என்ன?.. அதுல உங்க பேர் எழுதியிருக்கும்போது மத்தவங்க கிட்ட அது போகுமோ :-)
காக்டஸ் வகைகள் கலர்ஃபுல்லா ரொம்ப அருமையா இருக்கு. எங்கூர் ஹைப்பர் சிட்டியிலும் இப்பல்லாம் வர ஆரம்பிச்சுருக்கு இவைகள்.
கிடைக்கணும் என்பது கிடைக்காமல் போகாது என்பது இதுதான்.//
உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்கிறபோது கிடைக்காமல் போகுமா!
வாங்க இராஜராஜேஸ்வரி.
இப்பதான் 'ஞானம்' வரத்தொடங்கி ரொம்ப எதிர்பார்ப்பு இல்லாமல் இருக்கப் பழகிட்டேன்.
கிடைக்கணுமுன்னு இருந்தால் கிடைக்கட்டும்:-)(பின்னூட்டம் உட்பட)
வாங்க வெங்கட் நாகராஜ்.
நாளைக்கு தோட்டத்துக்குள்ளே போறோம். நல்ல வாக்கிங் ஷூ போட்டுக்குங்க:-))))
வாங்க சங்கவி.
உங்கள் ரசிப்புக்கு என் நன்றிகள்.
வாங்க ராமலக்ஷ்மி.
ஓப்பன் செட்டிங்ஸ் என்பதால் படம் எடுக்கும்போது பளிச்சுன்னு இல்லை.
துளசிதளம் மொக்கையா இருக்குன்னு சொல்லிடப்போறாங்கன்னு அப்பப்ப ஒரு சின்ன சஸ்பென்ஸ் வச்சுக்கறேன், ப்ளீஸ்:-))))
வாங்க பழனி.கந்தசாமி ஐயா.
அதான் 1935 ஜனனம் என்று அறிமுகத்துலே சொல்லிட்டீங்களே!
சொன்னாலும் சொல்லாட்டாலும் பெரிய ஆள்தான் நீங்க!
நட்சத்திர வரவால் பதிவு ஜொலிக்கிறது. நன்றிகள்.
வாங்க அமைதிச்சாரல்.
என்னை நம்பி இருக்கேன்னு காத்துக்கிடந்ததைக் கைவிட முடியலைப்பா:-))))))
இந்தியாவில் பெரிய ஊர்களில் இப்போ எல்லாமே கிடைக்குது என்பது மகிழ்ச்சிதான். இங்கிருந்து எதுவும் வாங்கிக்கிட்டுப்போக வேணாம் பாருங்க:-))))
வாங்க கோமதி அரசு.
கோபால் மனசு சமாதானமாகட்டுமேன்னு வாங்கிக்கிட்டேன்:-)))))
டீச்சர்
நலமா?
அந்த பிக் W ஸ்டோர் என்ன walmarta ?
அப்புறம் எப்படி இப்படி சலிக்காம எல்லா இடத்த பத்தியும் பொறுப்பா குறிப்பு எடுத்துட்டு வந்து தரீங்க?எனக்கு ஒரு இடம் பார்த்துட்டு வீட்டுக்கு வரதுகுளர பாதி தகவல் மறந்துடுது.சிம்ப்லி superb
சர்ச்சிலிருந்து கார்டன்வரை வந்துவிட்டோம்.:)
நானும் பயணத்தில் சேர்ந்து கொண்டேன்......அருமையான பயணம்......தொடர வாழ்த்துக்கள்....நன்றி..
ஹா ஹா !!துளசி சிரிச்சு சிரிச்சு வயத்தை வலிச்சது நீங்க அனுப்பின பழைய பதிவுகளை படிச்சு!! மகர் ஜோதி பிரமாதம் :)))))))))))))))) கோபால்கிட்டே இருந்து பையை வாங்கி ஒரு ஓரமா வை. பாவம் அதைத் தூக்கிக்கிட்டே எல்லாப் படத்துலேயும் போஸ் கொடுக்கறார்."ஹா ஹா இங்கேயும் அப்பாவுக்கு தப்பாமல் பிள்ளை!!!
மெதுவா ஒன்னொன்னா படிக்கிறேன் . இந்த புதுசுகள் படிக்க ரொம்ப காலம் ஆகும் போல இருக்கேப்பா!
வாங்க விஜி.
இன்னும் எங்கூருக்கு வால்மார்ட் வரலை. அதுக்கு ஈடான கடைகள் பலதும் இங்கிருக்கு.
பிக் டபிள்யூலே ஃபர்னிச்சர் எல்லாம் பார்த்த நினைவில்லை. ஒருவேளை புறநகர் கடைகளில் இருக்குமோ என்னவோ? நிறைய இடம் வேணுமே!
வாங்க மாதேவி.
கூடவே வர்றதுக்கு நன்றிப்பா.
வாங்க வல்லத்தான்.
முதல் வருகை போல இருக்கே! வணக்கம். நலமா?
தொடர்ந்து வரணுமுன்னு கேட்டுக்கறேன்.
வருகைக்கு நன்றிகள்.
வாங்க ஜயஸ்ரீ.
புதுசு கிடக்கு ஏகப்படவை. நிதானமாப் பாருங்க.
வருகைக்கு நன்றிகள்.
பயணமும் படங்களும் அருமை
Post a Comment