Wednesday, July 11, 2012

ஓம்...புலிச்சாமிகளே நமஹ......! (ப்ரிஸ்பேன் பயணம் 13)

புலிக் கோவிலில் ஒன்பதுபேர் இருக்காங்கன்னு சேதி. பரபரன்னு நடந்து போகும்போதே நம்ம பசங்களைப் பார்த்தேன். காலை பத்தரைக்குப் பார்வையாளர்களை சந்திச்ச பிறகு பகல் மூணுமணிக்கு மீண்டும் பார்வையாளர் சந்திப்பு. இருக்கும் இடைவேளையில் கொஞ்சம் ஓய்வு, சாப்பாடு கூடவே கொஞ்சம் பயிற்சின்னு பிஸி லைஃப்தான். பாகர் சொல்வதைக் கவனத்தோடு கேட்டுக்கிட்டு இருந்தாங்க. சந்திப்பு நடக்குமிடம் வெறிச்சோடிக் கிடக்கு. அதெல்லாம் பங்ச்சுவலா இருப்போம்., நீ கவலைப்படாதேன்ற பார்வை:-)


சிங்க வாசலில் நுழைந்தோம். வாலில்லா சிங்கங்கள். அங்கோர் what(?) சிங்கங்கள்தான் இன்ஸ்பிரேஷனாம். ஆனால்... புலிக்கோவிலுக்கு சிங்கவாசலான்னு இருந்துச்சு எனக்கு.

 புலிகள் விற்கும் கடையை ஒரு பார்வை பார்த்து, மகள் ஒரு புலி வாங்கினாள். வெள்ளைப் புலிக்குட்டி.அஞ்சாறு மீட்டர் உயரம் இருக்கும் கண்ணாடிச்சுவர்களுக்கு முன்னால் கேலரி போல இருக்கை அமைப்பு. யாரும் காணோமேன்னு நல்ல இடமாப் பார்த்து உக்கார்ந்தோம். ரெண்டே நிமிசத்தில் மக்கள் கூட்டம் வந்து இருக்க இடமில்லாமல் முன்னால் தரையில் எல்லாம் உக்கார்ந்துட்டாங்க. நீலநிற நீர்நிலையில் கண்ணு நட்டு இருந்தோம். மூங்கில் புதர்களைக் கடந்து புலியார் வந்தார். அவருடைய நாலு நண்பர்கள்/காப்பாளர்களில் ஒருவர்  கையில் சின்னதா ஒரு 300 மில்லி பால் கார்ட்டன். அதுலே இருந்து சொட்டுச்சொட்டா வரும் பாலை நக்கிக்குடிக்க ஆர்வமா இருந்தார்.

 அப்பப்பார்த்து என் கெமெரா பேட்டரி மண்டையைப் போட்டுச்சு:( அதுக்காக உங்களை விட்டுடமுடியுமா? ஒரு சமயம் ட்ரீம் வொர்ல்ட் புலித்தீவுக்குப் போயிருந்தோம். அங்கே இப்படித்தான் ஒருத்தரை மேடைக்குக் கூட்டிவந்து பால் புகட்டுனாங்க:-) புலியின் குணாம்சங்கள் உடலமைப்பு எல்லாம் விளக்கும்போது அவரும் மேடையில் இருக்கணுமே! அதுக்கு சொட்டுப்பால்தான் தூண்டில். என்னதான் வளர்ந்து இப்போ பெரிய ஆளாகிட்டாலும் பால்ருசி மறக்கமுடியறதில்லை போல! 
 அப்போ எடுத்த படங்கள் இவை.

 தனியா ஒரு பெரிய தீவு. சுற்றிலும் நல்ல அகலமான,ஆழமான அகழி. நாம் அகழிக்கு இந்தப்பக்கம் இருந்து அவர்களைப் பார்க்கலாம். மொஹான் (மோஹன்) சீடா (சீதா) டாஜ் (தாஜ்) சல்ட்டான் (சுல்தான்) என்ற நால்வர் . இவுங்க குழுவில். மோஹன்தான் அப்ப வயசில் பெரியவர். புலித்தீவின் அரசர்! பெங்கால் டைகர். வெள்ளை நிறம். உடம்பில் கொஞ்சம் சாம்பல்கலர் பட்டைக்கோடு. ஏழுவயசு. மற்ற மூணுபேருக்கும் மூணு. வயசு. மோஹன்தான் இவுங்க அப்பா. 17 வருசம் புலித்தீவில் அரசாண்ட மோஹன் போனமாசம் (ஜூன் 20, 2012) சாமிகிட்டே போயிட்டார்:(
மோஹன்

 இங்கே குழந்தைகளை மூணு நாலு வாரம் ஆனதுமே கழுத்துப்பட்டி மாட்டி லீஷ் போட்டு ட்ரீம் வொர்ல்ட் பார்க்க வரும் பொது ஜனங்க நடமாடும் இடங்களில் எல்லாம் கூட்டிக்கிட்டு வருவாங்க. அதுகளும் மனுச வாசனைக்குப் பழகிடும். அந்த நாட்களில் பார்வையாளர்கள் கூட்டம் அம்முமாம். நாம் போனப்பச் சின்னக்குழந்தைகள் ஒன்னும் இல்லை.

 இந்த வருசம்தான் 2012 மார்ச்சில் பாரு, ரவின்னு ரெண்டு பிள்ளைகள் பிறந்துருக்கு. ஜயான்னு கூட ஒரு நாலுவயசு பொண்ணு இருக்காள். என்னதான் வீட்டு மிருகம்போல பழக்குனாலும்..... காப்பாளர்கள் கவனமா இருக்கணும். சொல்ல முடியாதுல்லே மூட் எப்ப மாறுமுன்னு!

 அஸ்ட்ராலியா ஜூவில் ஒன்பது புலிகள். ரெண்டு வகை. சார்லி, மைகா, சுனிதா என்று மூணு பெங்கால் டைகர்ஸ். ஒருதாய் வயித்துப்பிள்ளைகள். வயசு இப்போ அஞ்சு. அடுத்தவாரம் (ஜூலை18 2012) அஞ்சாவது பொறந்தநாள்.

 சுமித்ரன் டைகர்ஸ் ஒரு ஆறுபேர் இருக்காங்க. ஜுமா, ரானு சிங்கா மூணுபேருக்கும் வயசு எட்டரை, இதுலே சிங்கா மட்டும் பொண்ணு. அப்புறம் நாலரை வயசில் மனேகி, கைட்லின், பாஷில் மூணு பேர். இதுலே பாஷில் பையன், இதுகளும் ஒருதாய் வயித்துப் பிள்ளைகளே!

 மனேகி, கைட்லின், பாஷில் மூணு பேரும் இந்தோனேஷியாவில் பொறந்தவங்க. அஸ்ட்ராலியா ஜூவில் இருந்து போய் அந்தப்பிள்ளைகள் பிறந்தவுடன் கூடவே இருந்து பழக்கி வளர்த்தெடுத்த கேர் கிவர்ஸ் புள்ளைகளுக்கு மூணுமாசம் ஆனதும் இங்கே கூட்டியாந்துட்டாங்க.

 ரொம்பவே இணக்கமா இருக்காங்கன்னு ஒரே புகழாரம் சூட்டிக்கிட்டே இருந்தார் மைக் பிடிச்சவர். ஒருத்தன் மட்டும் நம்மைப் பார்க்க வந்துட்டு, நண்பர் வச்சுருக்கும் பால் கார்ட்டன் மேலேயே கண்ணா இருந்தான்.

 சன்ஷைன் கோஸ்ட் சுற்றுலாவுக்கு ஜுமா உதவி செஞ்சுருக்கு! பொதுவா இந்தப் பக்கங்களில் (ஆஸி அண்ட் நியூஸி) பஸ்ஸில் கூட்டமே இருக்கறதில்லை. அதுக்காக நஷ்டத்துலேயே எப்பவும் ஓட்ட முடியுதா? அப்பப்பப் புதுசா எதாவது செஞ்சு பஸ் பயணிகளை ஊக்குவிப்பாங்க. ஒரு சமயம் 9+ இலவசம் என்று ஒரு திட்டம். திங்கள் முதல் ஞாயிறுவரை பஸ்ஸில் பயணம் செய்றவங்க, ஒன்பது முறை தனித்தனிப் பயணம் செஞ்சுருந்தால் அதுக்கப்புறம் அந்த வாரம் செய்யும் எல்லாப் பயணங்களுக்கும் டிக்கெட் எடுக்க வேணாம். அதுக்குன்னு ஒரு கார்ட் வாங்கிக்கிட்டால் அது ஒன்பதுமுறை கணக்கு வச்சுக்குது.

 எனக்கொரு ஃப்ரீ லிஃப்ட் ப்ளீஸ்:-)))))  ஜூமா


சுற்றுலாப் பயணிகளுக்கு இது ரொம்ப வசதி. எல்லாரும் கார் வாடகைக்கு எடுத்துக்கவேணாம். எப்படியும் பஸ்ஸில் அங்கே இங்கேன்னு போய்ச் சுத்திப் பார்ப்பாங்கதானே?

 பெங்கால் புலிகள் கொஞ்சம் பெரிய சைஸு. சுமித்ரன் வகை கொஞ்சம் சின்னது. நம்ம கப்பு அண்ட் ஜிகே (கோகி) போலன்னு வச்சுக்கலாம். புலிகளும் கேட் ஃபேமிலிதானே;-)))))))))))))))

 ட்ரீம் வொர்ல்ட் போல திறந்தவெளியில் இல்லாம இங்கே கண்ணாடிச் சுவருக்குப் பின்னேதான் புலிகள் நடமாட்டம். அதனால் எடுத்த படங்களில் பார்வையாளர் கேலரி பிரதிபலிப்பு கூடுதலா இருக்கு. மகளின் கெமெராவில் எடுத்த படங்களைக் கொஞ்சம் கடன்வாங்கிக்கிட்டேன்.:-)

 குளிர்காலம் என்றபடியால் தண்ணிக்குள்ளே இறங்கப்பிடிக்காமல் ஒரு மரத்துலே பாய்ஞ்சு ஏறிக் காமிச்சார் புலியார். ஒவ்வொருத்தனுக்கும் ஒரு மரம் இருக்காம். தன்னுடைய மரத்துலே தாவி ஏறி நகத்தை நல்லா கூர்மையாக்கி வச்சுக்குவான்கள். தடிமனான ஒரு கயிறு போட்டு ஒரு ஆறேழு மீட்டருக்கு மரத்தைச் சுத்திவச்சுருக்காங்க.

எங்க கோகி கூட உடல் ஆரோக்கியமா இருந்த நாட்களில் மரத்துலே தாவி ஏறி நகத்தைவச்சுக் கீறி, தன்னுடைய மரமுன்னு அடையாள இனிஷியல் போட்டு வைப்பான்:(


16 comments:

said...

பாந்தவ்கர் காட்டில் எங்களுக்கு ஆட்டம் காட்டிய புலிகள் இங்கே காண முடிந்தது. :))

எங்கூர் மிருகக்காட்சி சாலையிலும் இரண்டு வெள்ளைப் புலிகள்.... அங்கேயும் இங்கேயும் நடந்துட்டே இருக்கும்... :)))

படிப்பவர்கள் நேரில் பார்த்தது போன்ற எண்ணம் வரவைக்கும் உங்கள் எழுத்து!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

புலிகள் படம் இணைக்கும்போது உண்மைக்குமே உங்களை நினைச்சேன்:-)

வருது வருதுன்னு அங்கே வராமப்போச்சே!

said...

ஐயோ சொக்கா... என்னைத் தவிர எல்லாரும் அழகழகா படம் எடுத்துப் போடறாங்களே... புலி படமும் மற்றப் படங்களும் அருமை. பிரிஸ்பேன் பயணத்தில லேட்டாச் சேர்ந்திருக்கேன் நான். வரும் நாட்கள்ல விட்டுப் போனதைல்லாம் படிச்சுடறேன். தொடர்கிறேன் உங்களுடன்.

said...

இவுங்க குழுவில். மோஹன்தான் அப்ப வயசில் பெரியவர். புலித்தீவின் அரசர்! பெங்கால் டைகர். வெள்ளை நிறம். உடம்பில் கொஞ்சம் சாம்பல்கலர் பட்டைக்கோடு. ஏழுவயசு. மற்ற மூணுபேருக்கும் மூணு. வயசு. மோஹன்தான் இவுங்க அப்பா. 17 வருசம் புலித்தீவில் அரசாண்ட மோஹன் போனமாசம் (ஜூன் 20, 2012) சாமிகிட்டே போயிட்டார்:(//

மோஹன் அழகில் எல்லோரையும் மயக்கிய மோஹன் இப்போது இல்லையா வருத்தமாய் இருக்கிறது.

பால் ருசிக்கு சுற்றிக் கொண்டு இருக்கும் புலிகள் அழகு.

said...

//எங்க கோகி கூட உடல் ஆரோக்கியமா இருந்த நாட்களில் மரத்துலே தாவி ஏறி நகத்தைவச்சுக் கீறி, தன்னுடைய மரமுன்னு அடையாள இனிஷியல் போட்டு வைப்பான்:(// இந்த வரிகளில் தெரிகிறது உங்கள் அன்பு.

அன்புடன்,
எழிலரசி

said...

எங்கே போனாலும் பசங்கள் உங்க கண்ணில் பட்டுவிடுவார்கள் நீங்களும் அவர்களை விடுவதாக இல்லை :)))

said...

சொட்டுப் பால் குடிக்க எம்புகிற புலி என்னா உசரம்? உடலமைப்பை விளக்க நல்ல தூண்டில்தான்.

மோஹன் அமைதியான கம்பீரம்.

இப்போ slr-ல் அந்தப் பிரச்சனை இல்லாவிட்டாலும் முக்கியமான நிகழ்வின் பாதியில் பேட்டரி தீர்ந்து போற அனுபவம் முன்னர் எனக்கும் பலமுறை நடந்திருக்கு. சமீபத்தில் மோகன் குமார் டெல்லி பயணத்தில் கடைபிடித்தது நல்ல ஐடியா. சார்ஜ் செய்த இன்னொரு பேட்டரி கைவசம் வைத்துக் கொள்வது.

said...

ஜூமா ஃப்ரீ லிப்ட் கேக்கும் காட்சி ச்சும்மா அருமையா இருக்கு :-)

said...

படங்கள் ரொம்ப அருமை. அதுவுல் அந்த லிஃப்ட் கேட்கும் போட்டோ சூப்பர்.

said...

வாங்க பால கணேஷ்.

பயணம் இன்னும் முடியவில்லை:-)

லேட்டஸ்ட்டா வந்தாலும் ஓக்கே!

said...

வாங்க கோமதி அரசு.

நாக்கு ருசிக்கு அடிமைதான், இல்லையோ!!!!!

அது யாராக இருந்தாலும்........:-)

said...

வாங்க எழிலரசி.

நம்ம வீட்டில் பசங்க பெயரைச் சொல்லாம நாள் கடந்ததா நினைவில்லை:(

தமிழ் பேசத்தெரியலையே தவிர தமிழ் பேச்செல்லாம் புரியும் அவர்களுக்கு!

said...

வாங்க மாதேவி.

கண்ணில் படாமல் ஒளிஞ்சுக்கும் சைஸா என்ன:-))))))

said...

வாங்க ராமலக்ஷ்மி.

இந்தக்கெமெராவைத்தவிர மற்றவைகளுக்கு ஸ்பேர் பேட்டரி கைவசம் இருக்கு. இதுதான் இப்போதைக்குக் கடைசி அடிஷன். ஸ்பேர் வாங்கிக்கணும், ட்யூட்டி ஃப்ரீயில் பார்க்கலாமுன்னு நாள் கடந்து போயிருச்சு.

கடைசியில் ஆஸியில் விசாரிச்சால் 65 ( எங்க காசு 78) அதை வாங்கினாலும் ஒரு ஏழெட்டுமணி நேரம் ஆகுமே முதல் சார்ஜ் செஞ்சு முடிக்க.

ஒவ்வொரு ப்ராண்ட்க்கும் தனித்தனி பேட்டரின்னு சுண்டைக்காய் கால்பணம் சுமைகூலி முக்காப்பணமுன்னு போகுதே:-))))

வலையில் தேடுனப்ப ஆக்லாந்தில் 38க்கு தர்றாங்களாம். விசாரிக்கணும்.

said...

வாங்க அமைதிச்சாரல்.

சுவையான படங்களைச் சுட்டுக்கலாமுன்னு சொன்னாங்க:-)

said...

வாங்க புதுகைத் தென்றல்.

ஜூமா ரொம்பவே ஃபேமஸ் ஆகிருச்சு:-)

அஸ்ட்ராலியா ஜூவில் சுட்ட படம் இது:-)