Monday, July 23, 2012

தங்கக்கரைக்கு ஒரு சடங்கின் நிமித்தம்...... (ப்ரிஸ்பேன் பயணம் 18)

ஒரு சடங்கு, சம்பிரதாயத்தை அனுசரிச்சு  Gகோல்ட் Cகோஸ்ட் ஸர்ஃபர்ஸ் பாரடைஸ் என்ற கடற்கரைத்தலத்துக்கு காலையில் கிளம்பிப்போறோம். ப்ரிஸ்பேன் நகரில் இருந்து தெற்கே போகும் பசிஃபிக் மோட்டர்வேயில் போனால் 81 கிலோமீட்டர் தூரத்தில் வந்துரும். நிறுத்தாமப் போய்க்கிட்டே இருந்தீங்கன்னா 920 கிலோ மீட்டரில் சிட்னியே வந்துரும்.

 இந்த ஹைவேயில் வேகக்கட்டுப்பாட்டை இப்போ குறைச்சுருக்காங்க. மணிக்கு 80 கிமீதான் அதிகப்பட்சம். சாலையின் ரெண்டு பக்கமும் மறைப்பு வச்சு அதுக்குள்ளே பஸ் பாதை ஒன்னு தனியாப்போட்டு வச்சுருக்காங்க. எந்த இடையூறும் இல்லாம எக்ஸ்ப்ரெஸ் வேகத்துலே பஸ்கள் ஓடிக்கிட்டு இருக்கு. இன்னும் சொன்னால்.... காரில் போவதைவிட சீக்கிரமா நகருக்குள்ளே வந்துடலாமாம். பீன்லே என்ற ஊரைக் கடக்கும்போது எனக்கு ஒரு தனி மகிழ்ச்சி. அதென்னமோ எனக்கு இந்தப்பெயர் ரொம்பவே பிடிச்சுப்போயிருந்துச்சு முதல்முறையா இங்கே வந்த போதே!

 மனசெல்லாம் மகள்மீதே இருந்துச்சு. நேத்து ராத்திரி ஊர்ப்போய்ச் சேர்ந்த விவரம் சொல்ல டெக்ஸ்ட் கொடுத்துருந்தாள். அங்கே பனி விழ ஆரம்பிச்சுருக்கு. வீட்டுக்குப்போய்ச் சேரும்போதே கொஞ்சம் அதிகமாவே இருக்குன்னாள். காலையில் பார்த்தால் ஊர் முழுக்க பனி பெய்து சாலைகள் எல்லாமே மூடிக்கிடக்கு. இன்னும் விடாமல் பெய்வதால் ஊர் முழுசுக்கும் லீவுதான். யாரும் வீட்டைவிட்டு வரவேணாமுன்னு அறிவிப்பு ரேடியோவிலும் டிவியிலும் வந்துக்கிட்டே இருக்குன்னு சொல்லி சில படங்களையும் அனுப்பி இருந்தாள், ஜுபிடர் (மகளின் செல்ல ம்யாவ்) வெளியில் போக முடியலையேன்னு ஜன்னல் வழியா வேடிக்கை பார்க்குது.



அடடா.... இப்படின்னு தெரிஞ்சுருந்தால் நேத்து மகளை அனுப்பி இருக்கவேணாமேன்னு இருந்ததென்னவோ நிஜம். 




 ஒருமணி நேரத்தில் ஊருக்குள்ளே நுழைஞ்சவங்களை ஒரு பெரிய ஃபெர்ரிவீல் வரவேற்றது. போன முறை இது இல்லை. அப்போதைக்கும் இப்போதைக்கும் உள்ள ஆறு வித்தியாசங்களைக் கவனிக்கணும்போல! சைக்கிள்களுக்குன்னே ஒரு கடை முளைச்சுருந்துச்சு.

 போனமுறை இருந்ததைவிட புதுசுபுதுசா ஏகப்பட்ட அடுக்கு மாடிகள் . கொஞ்சம் விட்டால் வானத்தைத் துளைச்சுக்கிட்டுப்போயிருமோ என்னவோ!

 பீச் ரோடை இன்னும் கொஞ்சம் அழகாக்கி வச்சு நடைபாதையெல்லாம் அட்டகாசமாப்போட்டுருக்காங்க. கார்களை நிறுத்த அங்கங்கே ஏகப்பட்ட பார்க்கிங். இந்த பீச்சை வச்சுத்தான் ஊருக்குள் பணவரவு என்பதால் டவுன் கவுன்சில் ஓயாம எதாவது செஞ்சுக்கிட்டே இருக்கு.

 கடலில் குளிக்கிறவங்களுக்கு எதாவது ஆபத்து வந்துட்டால் காப்பாற்ற லைஃப் சேவிங் என்ற முறையில் அங்கங்கே மாடங்கள் அமைச்சு உச்சாணியில் உக்கார்ந்து கவனிச்சுக்கிட்டே இருக்காங்க லைஃப் கார்ட்ஸ். நாங்க வண்டியை நிறுத்துனது 35 ஆம் எண் உள்ள மாடத்தின் முன்னால். நமக்கும் வண்டியை எங்கே நிறுத்தினோமுன்னு  அடையாளம் வச்சுக்கலாம்.

 இன்னும் எண்ணிக்கை மேலே மேலே போய்க்கிட்டே இருக்கு. மொத்தம் 39 மாடங்கள் இப்போதைக்கு! சுற்றுலா வரும் மக்களுக்கு ஆபத்து ஒன்னும் வந்துடக்கூடாது என்பதில் கூடுதல் கவனம்தான் இதெல்லாம். இதைத்தவிர ஹெலிக்காப்ட்டர் ஒன்னு கடலுக்கு மேலே சுத்திவர, கடலில் ரெண்டு பெரிய படகுகள் கண்காணிப்பா உலாத்துது!

 சாஸ்த்திரத்துக்குத் தண்ணீரில் போய் கால் நனைச்சார் கோபால். அவருக்கு உண்மையில் தண்ணியில் நடப்பது பிடிக்கும். நான்தான் ஈரக்காலுக்கும் காலோர ஈர உடைக்கும் ஒட்டும் மண்ணுக்கும் பயந்து தண்ணியில் இறங்க மாட்டேன். வெய்யில் உறைக்க உறைக்க .குப்புறப்படுத்த 'அழகிகள்' 'சூரியக்குளியல் எடுத்துக்கிட்டு ரொம்ப ஆர்வமா கையில் உள்ள நாவலில் மூழ்கி இருந்தனர்.


 ஃபெஸ்டிவல் என்ற பெயரில் கூட்டம் சேர்க்க ஒரு இசைக்குழு பாடிக்கிட்டு இருந்துச்சு. எதிரே ஆடியன்ஸ்........ சுத்தம்:( அவுங்களுக்கே போரடிச்சுச் சீக்கிரம் கடையைக் கட்டிட்டாங்க.

ஷாப்பிங் மால் கலகலப்பா இருக்கு. சுற்றுலாப்பயணிகளுக்கான சமாச்சாரங்கள் நிறைய. ப்லீவ் மீ இப்பெல்லாம் எவ்ரி திங் கோஸ் க்ளோபல் என்றதால் பலநாட்டு அம்யூஸ்மெண்ட்களும் ஒரே இடத்தில் கிடைச்சுருது. ரிப்ளீஸ் ப்லீவ் இட் ஆர் நாட் உள்பட:-)))) மாலுக்குப் போகும் வழியில் நல்லா இருக்கும் சாலைகளை மீண்டும் புதுப்பிச்சுக்கிட்டு இருக்காங்க. நல்ல டி ஷர்ட்ஸ் எல்லாம் ரெண்டு டாலருக்குக் கிடைச்சது. நகை(!!!) ஆக்ஸஸெரீஸ் கடையில் அழகழகான பெண்டண்ட்கள், ப்ரேஸ்லெட்ஸ் எல்லாம் அஞ்சு டாலர்கள்தான்! மகளுக்கு சில வாங்கினேன். 


 David jones, Myers இது ரெண்டும் ரொம்பவே பழமையான கடைகள், சகலமும் கிடைக்கும். அஸ்ட்ராலியா முழுசும் கிளைகள் பரப்பி நிக்குது. இங்கே ஃபிங்கர்கார்ட் தேடும் சாக்கில் அவைகளுக்குள்ளே நுழைஞ்சு நோட்டம் விட்டால் மென்ஸ் பிஸினெஸ் ஷர்ட்ஸ் எல்லாம் பிரிஸ்பேன் குவீன்தெரு மாலில் இருக்கும் இதே கடைகளை விட விலை மலிவு. போகட்டும் கோபாலுக்கும் ஒரு ஷாப்பிங் செஞ்சுக்கும் திருப்தி இருக்கட்டுமே:-)

காஷ்மீர் என்ற பெயரில் ஒரு இந்தியக்கடை.


 இதெல்லாம் மெழுகில் செஞ்ச சமாச்சாரங்கள்

சூப்பர்மார்கெட் போய் ஒரு குடிதண்ணீர் பாட்டில் மட்டும் வாங்கிக்கிட்டோம். காலையில் நம்ம ஹொட்டேல் ரெஸ்ட்ட்டாரண்டிலேயே ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சு ஒரு கப்புசீனோவையும் உள்ளே தள்ளுனதில் இப்போ அவ்வளவா பசி இல்லை.

 பார்க்கிங் காசு போட திரும்பவும் கடற்கரைக்கு வந்தோம். காலார இன்னுமொரு நடை. இன்னைக்கு புதன் கிழமைன்னதும் சாயந்திரம் இங்கே நடக்கும் வென்ஸ்டே மார்கெட் நினைவுக்கு வந்தது. மாலை அஞ்சுமணி வரை காத்திருக்கும் எண்ணம் நமக்கு இல்லை.

 பீச் ரோடு நெடுக அங்கங்கே பார்பிக்யூ செஞ்சுக்க வசதியா கேஸ் ஹாட்ப்ளேட்ஸ் வச்சுருக்காங்க.காசு போட்டால் அடுப்பெரியும். பக்கத்துலே உக்கார்ந்து சாப்பிட அருமையான இருக்கைகள். இங்கேயும் நல்லா இருக்கும் இருக்கைகளுக்கே வார்னிஷ் அடிச்சு பராமரிப்புப்பணி செஞ்சுக்கிட்டு இருக்கு ஒரு தொழிலாளர் குழு. ஸ்டீல் கைப்பிடித் தடுப்புகளில் படியும் கடல்காத்து உப்பைப் படிய விடாமல் உடனுக்குடன் சுத்தம் செய்வதால் என்னமோ இப்போ புதுசா பொருத்தியதைப்போல மின்னுது இந்தக் கம்பிகள்கூட! போனமுறை வந்தப்ப இந்த ஆக்கித் தின்னும் வசதிகள் ஒன்னும் இருக்கலை! நடைபாதை ஓரக் கம்பித்தடுப்புகளும் முந்தி இல்லை. எல்லாமே புதுசு.

 அதுவும் ஆச்சே அஞ்சு வருசம். அப்போ இருந்த நிலை இதுலே:-)))) 


அருமையான ரெஸ்ட் ரூம்ஸ் அங்கங்கே கட்டிவச்சுருக்காங்க. எல்லா இடமும் குப்பை கூளமில்லாமல் பளிச்ன்னு இருக்கு. கடற்கரை மணலும் தங்க நிறத்தில் மின்னி இது கோல்ட் கோஸ்ட்தான்னு சொல்லுது. இந்த மணலையுமே வேறெங்கோ இருந்து கொண்டுவந்துதான் இங்கே நிரப்பறாங்க. கால் புதையப் புதைய மண்ணில் நடப்பது  ஒரு தனி சுகம்! 

 கார்ப் பயணங்களில் சிறுதீனி கொஞ்சம் கையோடு கொண்டுபோவது பழக்கம் என்றபடியால் கொஞ்சம் கேக், பிஸ்கெட்ஸ், சிப்ஸ் , பழங்கள் எல்லாம் வண்டியில் இருக்கு. அதையே கொஞ்சம் உள்ளே தள்ளிட்டு பகல் ஒரு மணி ஆனபோது கிளம்பி பீச் ரோடிலேயே போய் பஸிஃபிக் ஃபேர் போனோம். இதுவும் ஒரு சடங்குதான் :-)))) நாலரை கிலோமீட்டர்தான். Gold Coast Highway பிடிச்சுப்போனால் Broad Beach கிட்டே இருக்கு இந்த ஷாப்பிங் செண்ட்டர்.

 யானையார் இருக்குமிடம் தேடித்தேடி நிறைய அலைஞ்சுட்டேன். எங்கேபோய் ஒளிஞ்சாரோன்னு கடைசியில் செண்டர் மேனேஜ்மெண்ட் பிரிவில் விசாரிச்சால் யானையைத் தூக்கிட்டாங்களாம்:( எப்போ? அது ஆச்சே ரெண்டு வருசம்! அஞ்சு வருச இடைவெளியில் இங்கும் மாற்றங்கள் நிறைய வந்தாச்சு.


  அப்போ.இங்கே!


ஸ்பெஷாலிட்டி ஷாப்ஸ்க்கு குறைவில்லை!

 கொஞ்சம் சுத்தியடிச்சுட்டு மூணரைமணியாச்சேன்னு கிள்ம்பி ப்ரிஸ்பேன் நகரை நோக்கி வண்டியை விரட்டுனோம். இன்னிக்கு மாலை அஞ்சு மணிக்குக் காரைத் திருப்பிக் கொடுத்துடலாமுன்னு திட்டம். அதேபோல செஞ்சுட்டு, எலிஸபெத் தெருவில் இருந்து பொடிநடையில் அறைக்கு வந்து சேர்ந்தோம். அப்பாடா.... சல்லியம் தீர்ந்துச்சு. இன்னும் சில நாட்கள் சிட்டிக்குள்ளேயேதான் இருக்கப்போறோம். எதுக்கு கார்?

 ராச்சாப்பாட்டுக்கு கீழே போக சோம்பல்பட்டு ரூம்சர்வீஸ் எடுத்தால்..... எனக்கு ஆர்டர் செஞ்சுக்கிட்ட ச்சிக்பீஸ் வெஜிடபிள் யக்:(
 அஞ்சு ஸ்டாருக்கு பதிலா இங்கே நாலரைதான் இருப்பதன் காரணம் புரிஞ்சது.

24 மணி நேரத்துக்கு 29 டாலர் என்ற ரேட்டில் வலைத் தொடர்பு ஒன்னு வாங்கி வலை மேய ஆரம்பிச்சேன், பசியை மறக்க!!!!

 தொடரும்.....................:-)


27 comments:

said...

பீச்சுன்னு இருந்தா சுண்டல், முறுக்கு எல்லாம் விக்கனும். தள்ளுவண்டியில் மெளகாபஜ்ஜி, பேல்பூரி, எல்லாம் விக்கனும். மீன் பொரிச்சு விக்கனும்.

இதெல்லாம் இல்லாம என்ன பீச். :)

அப்புறம் அங்கங்க படகுகள். படகு மறைவில் காதலர்கள். அவங்களை வேடிக்கை பாக்க ஒரு கூட்டம். தொந்தரவு பண்ண ஒரு கூட்டம்.

இந்த மாதிரி வசதியெல்லாம் அவுஸ்திரேலியாவுல அரசாங்கம் செஞ்சு குடுக்காது போல. :)

இன்னும் நல்ல ஐடியா எதுன்னா.. பீச்சோரம் கோயில் கட்டுனா.. நல்லா கல்லா கட்டலாம். பீச் மேரியம்மன். சேண்ட் லேண்ட் ஜீசஸ்னு சர்ச்சுகளைக் கட்டி விட்டா எப்படியெல்லாம் அள்ளலாம். இதெல்லாமா சொல்லிக் குடுக்கனும்.. ஹம்ம்ம்..

said...

படங்களும் பகிர்வும் வெகு சுவாரசியமா இருக்கு. நன்றி

said...

ஜிலோன்னு இருக்குது பீச். குதிரை சவாரி வசதி இருந்தா எவ்ளோ நல்லாருக்கும்.

said...

சட்டை தொங்குற கடைகளை பார்க்கும் போது தொழில் ஞாபகம் வருது. நீங்க தான் சட்டையே செய்ய மாட்டுறீங்களே?

said...

mm

said...

அப்பா என்னவொரு அழகு... சுத்தம்...

பீச்சுன்னா இப்படி இருக்கணும். நம்மூர்லயும் இருக்கே நாற்றத்தோட... :(

said...

கார் நிறுத்தம் அழகாக இருக்கு. இங்கு சென்னையில் என் அலுவலகத்தில் காரை நிறுத்திவிட்டு பக்கத்து சீட்டு வழியாகத்தான் வெளியே வரவேண்டும், சில புண்ணியவான்கள் கார் நிறுத்தும் அழகு இங்கு.வரிசையில் நிற்கும் போது நம் மீது மற்றவர் இடித்துக்கொண்டு நின்றால் தான் அவர்களுக்கு தூக்கம் வரும் போல் இருக்கு அது போல காரையும் நிறுத்தித்தொலைக்கிறார்கள்.

said...

G.Ragavan said...//

பீச்சோரம் கோயில் கட்டுனா.. நல்லா கல்லா கட்டலாம். பீச் மேரியம்மன். சேண்ட் லேண்ட் ஜீசஸ்னு சர்ச்சுகளைக் கட்டி விட்டா எப்படியெல்லாம் அள்ளலாம். இதெல்லாமா சொல்லிக் குடுக்கனும்.. ஹம்ம்ம்.

நானும் மகனிடம் இதையே தான் சென்னேன்..

திருச்செந்தூர் மாதிரி ஒரு கோவில் கட்டாமல் விட்டு வைத்திருக்க்கிறார்களே!

அரசுக்கு ஆலோசனை சொல்ல சரியான ஆள் இல்லை போல் !!!

said...

வாங்க ஜீரா.

அதானே... நம்ம பக்கம் வந்து ட்ரெய்னிங் எடுக்க வைக்கணும்.

பொழைக்கத்தெரியாத சிட்டிக் கவுன்ஸில்.

சுத்தம் சோறு போடும். அது போடும் சோறே போதுமுன்னு நினைச்சுக்கிட்டு மாய்ஞ்சு மாய்ஞ்சு ஊரை, அதுவும் கடற்கரைப்பகுதிகளைச் சுத்தம் செஞ்சுக்கிட்டே இருக்கு:(

said...

வாங்க லக்ஷ்மி.

நீங்க கோவான்னா நான் கோல்ட் கோஸ்ட்:-))))

ஆகக்கூடி பீச் பீச்!

said...

வாங்க அமைதிச்சாரல்.

கூட்டமெல்லாம் பாரிலும், உணவுக்கடைகளிலும் இருந்துச்சு. லஞ்ச் டைம் பாருங்க.

said...

வாங்க ஜோதிஜி.

இதுக்கெல்லாம் தனி ஏஜெண்டுகள் இருக்காங்களே.

சட்டை செய்யலாமுன்னு பார்த்து வாங்குன சாம்பிள்ஸ் ஒன்னும் சரிவரலை ஒரு காலத்தில்.

கடை வச்ச அனுபவமும் எனக்கு இருக்கே!

said...

வாங்க வெங்கட்.

சுத்தமா வச்சுக்க இவ்ளோ பிடிவாதம் பிடிச்ச சனம்!

பகலில்தான் பீச்சுக்கு மக்கள்ஸ் வருகை. நம்மூர்போல மாலை/இரவுகளில் காத்து வாங்கும் ஆசை இல்லை இங்கே!

மணலில் உக்கார்ந்து தின்னே ஆகணும் என்ற எண்ணம் இல்லை பாருங்க.

said...

வாங்க குமார்.

கீறல் விழாத, அடிபட்டு நசுங்காத வண்டிகளை தேடுனாலும் கிடைப்பதில்லை இந்தியாவில்.

கதவைத் திறக்க இடமே இல்லாமல் பார்க் பண்ணிட்டுப்போயிருவாங்க:(

அடுத்தவனைப்பத்திக் கவலைப்பட முடியாமல் அப்படி ஒரு பிஸி.

அவுங்க வண்டியை அவுங்களே எடுக்கக் கஷ்டப்படமாட்டாங்களா?

என்னவோ போங்க:(

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

காசு பண்ணத்தெரியாத பயலுகளை என்னன்னு சொல்றது:-)))))

said...

மகளின் செல்லச் செல்வம் வேடிக்கை பார்த்து அமர்ந்திருப்பது அழகு. முதல் ஸ்கை ஸ்கேரப்பர் படம் அருமையா இருக்கு.

said...

அழகிய பீச்.

பனியைப் பார்த்தபடி இருக்கும் மியாவர் அழகு.

said...

//ஸ்பெஷாலிட்டி ஷாப்ஸ்க்கு குறைவில்லை!//

இமேஜெல்லாம் பற்றி கவலையே படாமல் அந்த மாதிரி கடைங்க படம் கூட போட்டு இருக்கிங்க, வெர்ரி குட், ஒரு எழுத்தாளருக்கு விருப்பு வெறுப்புகள் இருக்கக் கூடாதுங்கிறது உங்களைப் படிப்பவர்கள் புரிந்து கொள்ளக் கூடும், வெல் டன்.

said...

superb photos nice post

said...

அழகிய படங்களுடன் இனிய அனுபவ பகிர்வு...

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை...

உங்களின் தளம் வலைச்சரத்தில் இன்று மதுரை சொக்கன் அவர்களால் அறிமுகப்படுத்தி உள்ளது...
வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/07/2.html) சென்று பார்க்கவும். நன்றி ஐயா !

said...

இப்படிக்கூட பீச் இருக்குமா.அருமையான படங்கள். அதுவும்ன் அந்த ஸ்கை ஸ்க்ரேப்பரும்
பெண்டந்த் கடையும் வெகு அழகு.
பாக்கா முடியாதவங்களை எல்லாம் உங்க பதிவில பார்த்ததில் திருப்தி:0)

said...

வாங்க ராமலக்ஷ்மி.

செல்லம் இருட்டில் இருந்தாலும் அழகுதான்:-))))

ரசிப்புக்கு நன்றிகள்.

said...

வாங்க மாதேவி.

உங்க பீச்சும் அழகுதான். அதென்னவோ எனக்கு கடல் பார்க்க ரொம்பப்பிடிக்கும்! சான்ஸ் கிடைச்சா விடமாட்டேன்:-)

மியாவர் நன்றின்னார்:-))))

said...

வாங்க கோவியாரே.

இதைக் கவனிக்காமத்தான் மக்கள் தொகை வீங்கிக் கிடக்கு நம்ம நாட்டுலே! ஒருவகையில் பார்த்தால் இந்த வீக்கம்தான் ஊழலுக்கு முதல் காரணம்.

இப்படிக் கூட்டத்தில் முண்டியடிச்சு வேலை நடத்திக்கணுமுன்னா எல்லோராலும் முடியுமா? பணத்தை காமிச்சா வழி தானாவே கிடைக்குதே:(

கட்டுப்படுத்தி இருந்தால் நல்லா இருந்துருக்குமே என்ற ஆத்தாமைதான் 'அந்த'படம்!

said...

வாங்க அருள்.

ரசிப்புக்கு நன்றிகள்.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

முதல் வருகைக்கு மனமார்ந்த நன்றிகள்.

வலைச்சரம் தகவலுக்கும் நன்றி.

said...

வாங்க வல்லி.

எவ்வளோ அருமையான பீச் நம்ம சென்னையில்! ஆனால் சுத்தமா வச்சுக்கத் தெரியலையேப்பா:(

உங்க திருப்தியே எங்கள் மகிழ்ச்சி:-))))