Friday, July 06, 2012

பல்லைப் பல்லைக் காட்டுறார்:-) (ப்ரிஸ்பேன் பயணம் 11)

டெர்ரர்ரா ஒரு ம்யூஸிக். தோ..... வரார். வரார் வந்துக்கிட்டே இருக்கார்..... கையில் மைக் வச்சுக்கிட்டு எதிரில் இருக்கும் காவாய்த் தண்ணீரையே முறைச்சுப் பார்க்கும் இளைஞருடன் நாங்களும் சேர்ந்து தண்ணீர் இருக்கும் பக்கம் உத்து உத்துப் பார்க்கிறோம். தூரத்தில் ஒரு கருப்புக்கோடு. மெள்ளமெள்ள கிட்டக்க வந்து கரை ஏறுச்சு ஒரு முதலைப் பாப்பா:-)





எல்லா ஜனங்களுக்கும் மனசுலே இருந்த பயம் கலந்த உணர்வு மறைந்து சிரிப்பான சிரிப்பு. சூழலின் கனம் குறைஞ்சே போச்சு. க்ரோக்கோஸியத்துலே உக்கார்ந்துருக்கோம். ரோமாபுரியின் கொலோஸியத்துலே அம்பதாயிரம் பேர் இருந்து மனிதனுக்கும் சிங்கத்துக்கும் நடக்கும் சண்டை(?)யைப் பார்ப்பாங்களாம்! இங்கே அஞ்சாயிரம் பேர் இருந்து மனிதனும் க்ரோக்கடைலுக்கும் இருக்கும் நட்பைப் பார்க்கலாம். க்ரோக்கோவை கொலாஸியத்தில் வச்சதால் இது க்ரோக்கோஸியம் ஆச்சு:-)
சிகப்பு வயிறு இருக்கும் கருப்புப் பாம்பு ஒன்னு வந்து ஒரு இளைஞரைக் கடிச்சதும்(?) ரெண்டு பேருமே மயங்கி விழுந்தாங்க. ஸ்ட்ரெச்சரும் கையுமா ஓடோடிவந்தவர்கள் பாம்பைக் காப்பாத்த தூக்கிட்டு ஓடுனாங்க:-) இன்னொரு கரும்பாம்பு தண்ணீரில் விட்டவுடன் ஜாலியா நீந்திக்கிட்டே போயிருச்சு.

 குரல் கொடுத்தவுடன் ஜ_பிரு ஒன்னு வந்து அழகா நின்னு போஸ் கொடுத்துட்டு இறக்கைகளை விரிச்சு ஆடிட்டுப்போச்சு.

கருப்புநிறப் பருந்து ஒன்னு வந்து பார்வையாளர்(?!) நீட்டுன பத்துடாலரை வாங்கிக்கிட்டு போய் கீப்பர் கையில் உக்கார்ந்துச்சு.


 அப்புறமா பெரிய முதலையார் வந்தார். எல்லோருக்கும் பல்லை எண்ணிக்கோன்னு வாயைத் திறந்து காமிச்சார்.







விலங்குகளோடும் பறவைகளோடும் சேர்ந்து ஷோ நடத்த பயிற்சி அதிகம் வேணும். முதலில் அவைகளுடன் நட்பு ஏற்படுத்தி நம்மேல் உள்ள நம்பிக்கையை வளர்த்தெடுக்கவே சிலசமயம் ரெண்டு வருசம் கூட ஆகலாம். பொறுமை பொறுமை பொறுமை. இது இல்லேன்னா அம்புட்டுதான்! இங்கே நிறைய இளைஞர்கள் இருக்காங்க. ஷோ நடத்தத் தனிப்பயிற்சி செய்யும் அதே சமயம் இதுகளைப் பராமரிக்கும் குழுவுக்கும் வெவ்வேற பயிற்சி கொடுக்கணும்.

 பராமரிக்கும் நபர் கொடுத்தால்தான் இரை எடுப்பேன்னு சொல்லும் விலங்குகளும் உண்டு. அப்படி ஒரு பிணைப்பு மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் உண்டாயிருது.


முதலை சொன்ன பேச்சைக் கேட்டது:-) கையில் உள்ள இறைச்சித் துண்டு மேல் ஒரு கண் இருந்துக்கிட்டே இருக்கு! பசிதான் எல்லாத்தையும் ஆட்டுவிக்குதோ? இதைச் செஞ்சால் உனக்கு சாப்பாடு. வேலை முடிஞ்சால் கூலி! 

நெடுநாள் வாழும் ஜீவன்கள் இவை. சிலது 140 வயசுவரைக்கும்கூட இருந்துருக்கு. ஒரு சமயம் முதலை வேட்டைக்காரர்களிடம் இருந்து ஒருத்தனைக் காப்பாத்தினாங்க ஸ்டீவும் அவருடைய அப்பாவும். நல்ல அடிபட்டுத் தவிச்சுக்கிட்டு இருந்துச்சாம். ரெண்டு குண்டுகள் ஒன்னு வாலிலும் ஒன்னு இடது கண்ணிலும் பாய்ஞ்சு இருக்கு:( இவன் ஒரு நல்லதண்ணீரில் வசிக்கும் வகை. ஃப்ரெஷ்வாட்டர் பொதுவா இந்த ரகம் அவ்வளோ கொடுமையானது இல்லையாம். இறைச்சிக்காகவும் தோலுக்காகவும் இதுகளை மனுசன் வேட்டை ஆடிக்கிட்டு இருக்கான். இவனுக்கு அப்பவே 100 வயசு ஆகி இருந்துச்சு. ஃப்ரெஷி என்னும் பெயர் வச்சு காப்பாத்தி வச்சதில் இன்னும் நாப்பது வருசம் இங்கே அஸ்ட்ராலியா ஜூவில் ஒரு கண் பார்வை இல்லாமல் வாழ்ந்தான். ஃப்ரெஷி மேலே போய் இப்போ 2 வருசமாச்சு:(

இங்கே இப்ப ஒன்னு Acco என்று பெயர். 77 வயசுக்காரன். உப்புத்தண்ணீர் வகை. 16 அடி நீளம். 1000 கிலோ எடை! இப்போதைக்கு இவன்தான் இங்கே மூத்தோர். ரொம்ப அறிவுன்னு பாராட்டு வாங்கியவன்:-)

இவனுக்கு ஒரு பார்ட்னர் இருக்காள். 50 வயசுக்காரி. அவள் பெயர் Connie. ஒன்பதரை அடி நீளமானவள். கொடி இடையாள். வெறும் 150 கிலோ தாஜ்மஹல்:-) பாருங்க பொண்ணுன்னா எடை அளவு இம்புட்டுதான் இருக்கணுமுன்னு அவர்கள் உலகிலும் ஒரு நிர்பந்தம் போல:(

 உப்புத்தண்ணீரில் வாழும் வகை, நல்ல தண்ணீரில் வாழும் வகை, சதுப்பு நிலத்தில் வாழும் வகைன்னு வகைவகையா இருக்கு. அலிகேட்டர் என்று சொல்வதும் முதலை இனத்தில் ஒரு வகைதான். பார்த்தவுடன் அது எதுன்னு சட்னு புரிஞ்சுக்கலாம். எப்படி? பல்லைக் காட்டுனா அது முதலை. அதாவது வாயை மூடி வச்சுருக்கும்போதும் பல்லைக் காட்டுனா அது முதலை:-)

 முதலை இனங்களுக்கு தோலில் வியர்வைச் சுரப்பிகள் இல்லாததால் உடம்பு சூட்டைப் போக்கிக்க அப்பப்ப வாயைத் திறந்தபடியே வச்சுக்குதுங்க. சில சமயம் திறந்த வாயோடு தூங்கிரும்! எதாவது உணவு அகஸ்மாத்தா வந்து விழட்டுமே............ அதிகப்படி சூடான உடம்பில் கண்ணின் வழியா சில வியர்வைத் துளிகள் வரும்.  இது முதலைக் கண்ணீர் :-)

 கருத்தரிச்ச அஞ்சாறு வாரங்களில் பெண் முதலை கொஞ்சம் தண்ணீர் இல்லாத இடமாப் பார்த்து முட்டைகள் போடும். ஒரே சமயத்தில் அம்பது அறுவது முட்டைகள். ஒரு எம்பது நாட்களில் குட்டிகள் பொரிஞ்சுருது. அய்ய....... வதவதன்னு குடும்பம் பெருகுனால் எப்படி?

முதலைப்பண்ணை வச்சுருப்பவர்களுக்கு நல்ல லாபம்தான். எண்பதுகளில் சிங்கையில் ஒரு முறை ஜுரோங் பறவைகள் பார்க் போயிட்டு அப்படியே பக்கத்தில் இருக்கும் க்ரோக்கடைல் பாரடைஸ் போய் வந்தோம். நுழைவு வாயில் தாண்டி உள்ளே நடக்கும்போது தலையைத் தூக்கிப்பார்த்தால்..... தலைக்கு மேல் முதலைகள் கிடக்கு. மாடியில் கண்ணாடித்தரையில் இருக்குதுங்க. கண்ணாடி உடைஞ்சால் நம்ம கதின்னு கலங்கிப்போனது நிஜம். அங்கேயும் ஒரு ஷோ நடத்துனாங்க. முதலைகளுடன் சில சீனர்கள்(??) மல்யுத்தமெல்லாம் செஞ்சாங்க. பாவம் அதன்மேலே உருண்டு விழுந்து கட்டிப்பிடிச்சு அதன் வாயை பிடிச்சு இழுத்துத் திறந்தெல்லாம் காமிச்சாங்க:( அப்ப எடுத்த படம் இது.

 இப்போ இதையும் அந்தப் பறவைகள் பூங்காவையும் மூடிட்டாங்கன்னு கேள்வி. சிங்கப்பூர் மக்கள்ஸ் விவரம் சொல்லுங்க.

 அஸ்ட்ராலியா ஜூவில் நிறைய முதலைகளை பராமரிச்சாலும் எல்லாத்துக்கும் புழங்க தாராளமா இடம் விட்டுவச்சுருக்காங்க. இங்கே வெறும் பராமரிப்புதான்.பண்ணை கிடையாது!

ஒருமுறை சென்னையில் மகாபலிபுரம் போய் வரும் வழியில் முதலைப்பண்ணை இருக்குன்னு போய் எட்டிப்பார்த்துட்டு ஐயோன்னு விக்கிச்சு நின்னுட்டேன். நகரவும் இடம் இல்லை. ஒன்னுமேலே ஒன்னாக் கிடக்குதுங்க. மூச்சுமுட்டாம இருந்தாலே பாக்கியம்தான்:(

 ஷோ முடிஞ்சதும் நாங்களும் கிளம்பி பகல் உணவுக்கு எதாச்சும் கிடைக்குதான்னு தேடிக்கிட்டே முகப்புக் கட்டிட மாடிக்குப் போனோம். ஒரு ஃபுட் கோர்ட் இருக்கு. முதலைகளைப் பார்த்தபடியே சாப்பிடும் விதத்தில்  இருக்கைகள் போட்டு வச்சுருக்காங்க. நல்லவேளை இது மாடி:-))))


தொடரும்.............;-)

29 comments:

said...

’முதலைக் கண்ணீர்’ உட்பட நிறைய்ய விவரங்கள் அறிந்து கொண்டோம்.

கொடி இடையாள் 150 கிலோ எடை என்றால் தாஜ்மகாலேதான்:). 77 வயது சீனியர் ஆயிரம் கிலோவா? அல்லது ஒரு பூஜ்யம் கூடிப் போச்சா?

/ சென்னையில் மகாபலிபுரம் போய் வரும் வழியில் முதலைப்பண்ணை /

சிலவருடம் முன்னர் போயிருக்கிறேன். இப்படிதான் நகர இடமில்லாமல் கிடந்தன:(. அருகிலேயே இன்னொரு அகழி ஏற்பாடு செய்யலாம் அவர்கள்.

said...

வாங்க ராமலக்ஷ்மி.

பூஜ்ஜியத்தைக் கூட்டவில்லை!!!!!

அவர் பெரியவர். ஒருமுறை கடிச்சால் ஆயிரம் முறை கடிச்சமாதிரி:-))))

said...

புகை படங்களு ம் அதுக்கு உங்க காமன்டரியும் செம சுவாரஸ்யம்

said...

//ஒரு ஃபுட் கோர்ட் இருக்கு. //

முதலைல் கறி உண்டா?!

said...

அதானே:)! டீச்சர் பதிவில் பூஜ்யம் கூட வாய்ப்பேயில்லையென்றாலும் ஒரு சந்தேகம். ஆச்சரியமான விஷயம்தான் ஆயிரம் கிலோ. நன்றி மேடம்.

said...

முதலைக்கண்ணீர்ங்கறது வெறுமே வியர்வை மட்டுமல்ல,.. அதோட உடம்புல இருக்கற அதிகப்படியான உப்பையும் அப்படித்தான் வெளியேத்தும். நாய்க்கும் உடம்பில் வியர்வைச் சுரப்பிகள் கிடையாது. அதோட உடம்பின் சூட்டை தணிக்கறதுக்காகத்தான் நாக்கைத் தொங்கப்போட்டுக்கிட்டு இருக்கும்.

முதலை இரையெடுக்கும் காட்சிகளைப் பார்க்கறப்ப ஜிலீர்ன்னு இருக்கு :-)

said...

அந்த சிகப்பு வயறு கருப்பு பாம்பு கடிச்சத நெசமா?
என்னகேனமோ முதலையும் ,பாம்பும் அறவே பிடிக்காது.ஆனாலும் உங்கள் புகைப்படங்கள் அழகாக உள்ளது,நேரில் பார்ப்பதை விட புகைபடத்தில் பார்க்கும் போது முதலை நல்லா இருக்குது.

said...

ஆன்ட்டி
www .oviyaonline .blogspot .in -> இது என்னோட புது ப்ளாக்,இப்ப தான் எழுத ஆரம்பிச்சு இருக்கேன்,பார்த்துட்டு அனுபவசாலி ன்றதால உங்க கிட்ட அட்வைஸ் எதிர்பார்கிறேன் . innum எப்படி மேம்படுதராதுன்னு சொல்லுங்க ஆன்டி.

said...

முட்டை பொறியும் நேரத்தில் சரியாக எப்படி படம் எடுத்தீர்கள்? படங்களும் கட்டுரையும் அருமை.

said...

முதலையைப் பாத்துட்டே சாப்பிடறதா? அப்ப அங்க வாந்தி எடுக்கறதுக்கு எடம் வச்சிருக்காங்களா?

said...

/ஒரு ஃபுட் கோர்ட் இருக்கு. முதலைகளைப் பார்த்தபடியே சாப்பிடும் விதத்தில்./
சாப்பிட முடிந்ததா அங்கே????:)

said...

முட்டையிலிருந்து பண்ணைவரை பார்த்தாகிவிட்டது.

said...

முதலை கண்ணீர் பாக்க வந்தாச்!

எப்டிப்பா, இத்தனை தகவல்களை , நேர்த்தியாக எழுதி, வாசகர்களை , மீண்டும் படிக்க வைக்கிறீங்க?
எவ்வளவோ சேதிகளை, எளிமையா சொல்லிட்டீங்க.
உங்க பதிவுகளை படிப்பது, ஒரு சுவையான அனுபவம் !

பிரிஸ்பேன் சுற்றுலா துறை, உங்களுக்கு கடமை பட்டுள்ளனர்.

said...

விபரங்கள் அனைத்தும் சுவாரஸ்யம்! முதலையைப் பார்க்க கொஞ்சம் பயமாகத்தான் இருக்கு!

said...

முதலை பற்றி அறிய தகவலுக்கு மிக்க நன்றி....!

said...

வாங்க மோகன் குமார்.

ரசிப்புக்கு நன்றி.

said...

வாங்க தருமி.

அந்த ஃபுட்கோர்ட்டில் இல்லைன்னுதான் நினைக்கிறேன். வளர்க்கும் இடத்தில் கசாப்பு கூடாதே;-)

said...

ஆயிரமும் கிடைச்சது.
நன்றி ராமலக்ஷ்மி.

said...

வாங்க அமைதிச்சாரல்.

சொன்னது கரீக்ட்டு! போனஸ் மார்க் 10:-)

said...

வாங்க விஜி.

புகைப்பட பாம்பும் முதலையும் கடிக்கவே கடிக்காதுன்னு சத்தியம் செய்யறேன்ப்பா:-))))

உங்க அதிர்ஷ்டம் அடுத்த பதிவும் பெயர் சொல்லாதவைகளே:-))))

வரேன் உங்க வீட்டுக்கு. இன்னும் கொஞ்ச நேரத்தில் ஊர்ந்து வந்துருவேன் கேட்டோ!

said...

வாங்க எக்ஸ்பேட் குரு.

நமக்காக அங்கே நிறைய தகவல்களும் படங்களும் எடுத்து வச்சுருக்காங்களே!

இந்த zoo வெறும் கண்காட்சியா இல்லாம Conservation and Education வகையில் செயல்படுது.
ஆர்வம் இருந்தால் நிறைய கற்றுக்கொள்ளலாம்.

said...

வாங்க பழனி.கந்தசாமி ஐயா.

வாஷ் பேஸின் ரெஸ்ட்ரூம்ஸில் இருக்கு:-))

நாம் மாடியில் இருந்து பார்க்கும்போது பெரிய செயற்கை நீர்நிலைகள் பக்கத்தில் ஒன்னோ ரெண்டோ முதலைகள் ஓய்வாப் படுத்து இருக்கும் காட்சிகள்தான் தெரியும்.

கூட்டமா இருக்கும் படம் வேற இடத்தில் உள்ளது.

said...

வாங்க அன்புடன் அருணா.

முதலைக்கறி சப்ளை இல்லாதவரை மாடியில் இருந்து சாப்பிட முடியுமே!

said...

வாங்க மாதேவி.

பார்வைக்கு நன்றிப்பா.

said...

வாங்க வெற்றிமகள்.

யாருக்காவது பயன்படட்டுமேன்னுதான் கொஞ்சம் விரிவாச் சொல்லிக்கிட்டே போறேன்.

நம்மைச்சுற்றி எத்தனையெத்தனை ஜீவராசிகள் என்ற மலைப்புதான்!

said...

வாங்க மனோ.

வருகைக்கு நன்றிகள். பாதுகாப்பான தூரத்தில் இருந்து பார்க்கும்போது சுவாரஸியம்தான்:-)))))

said...

வாங்க நாஞ்சில் மனோ.

அரிய தகவலை அறிந்து கொண்டதற்கு நன்றிகள்.

said...

முதலைகளைப் பார்க்கும்போது ஸ்டீவ் இர்வின் நினைவுக்கு வந்துபோனார். பார்த்தால் அடுத்தப் பத்தியிலேயே அவரைப் பற்றியப் பகிர்வு. டீச்சரின் கண்களுக்கும் கவனத்துக்கும் எதுவுமே தப்பாதா? இத்தனை அற்புதமான தகவல்களை என்னால் நேரில் போனால்கூட தெரிந்திருக்க இயலாது. அழகான படங்களுக்கும், சுவையான எழுத்துக்கும் பாராட்டுகள் மேடம்.

said...

வாங்க கீதமஞ்சரி.

மொதல் ஐடியா அப்பாவோடதுன்னாலும் நல்லா விரிவுபடுத்தி நாடு முழுசும் பாராட்டும் வகையில் செஞ்சது ஸ்டீவ்தான். ஒவ்வொரு இடத்திலும் அவரோட டச் ! அவரை நினைக்காமல் இருக்க முடியுமோ?

பாராட்டுகளுக்கு நன்றி.