திருவருட்செல்வர் படத்தில் 'மன்னவன் வந்தானடி' பாட்டுலே சிவாஜி கணேசன் போட்டுருந்த உடை யாருக்காவது நினைவிருக்கா? அய்யன் போட்டுருக்கும் உடை(?) பின்பக்கத்தில் இருந்து பார்க்கும்போது ...... முன்பக்கமும் அப்படியேதான். ஒருவேளை அந்தக் கால மன்னர்களின் உடை இப்படித்தான் இருந்திருக்கும் போல!
படகை விட்டிறங்கிச் சிலையை நோக்கிப்போனோம். பத்து யானைகள் புடைசூழ ஒரே கம்பீரமான அலங்கார மண்டபம் ஒன்றில் நுழைவு வாயில். அறத்தின் மேல் பொருளும் இன்பமுமாக நிற்கிறார் அய்யன். 38 அடி உயரமான மேடை. அதன்மேல் 95 அடி உயரச் சிலை. ஆக மொத்தம் 133 அடிகள். திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்களைக் குறிப்பிடும்விதமாக இவ்விதம் வடிவமைத்துச் செய்தவர் கணபதி ஸ்தபதி அவர்கள். அலங்கார மண்டபத்தினுள்ளில் 140 படிகள் ஏறி அய்யன் திருவடிகளைக் காணலாம்.
மண்டபத்தில் திருக்குறள்கள் மொத்தமும் (1330) சலவைக்கற்களில் பதிக்கப்பட்டுள்ளன. ( ஒரு அதிகாரத்துக்குப் பத்து என்ற கணக்கில் அறத்துப்பால் 38, பொருட்பால் 70 காமத்துப்பால் 25 அதிகாரங்கள்)
ஸ்ரவணபெலகுலா மலையில் நிற்கும் கோமட்டீஸ்வரர் சிலை என்ற நினைப்பில் வட இந்தியப் பயணிகள் எல்லாரும் அய்யனின் பாதங்களில் தலைவைத்து வணங்குகிறார்கள். அச்சச்சோ...... தமிழ்க்காரன் காலில் விழுந்தாச்சே......... போகட்டும் எல்லா மங்களமும் உண்டாகுக. கொஞ்சம் குங்குமம் மட்டும் கொண்டு போயிருந்தால் ஏகப்பட்ட வசூல்வேட்டை நடத்தி இருக்கலாம்.
சாமியே இல்லைன்னு சொல்லும் கட்சியின் தலைவரின் முயற்சியால் உருவான 'சாமி' இவர். வருங்காலச் சந்ததிகளுக்கு விரிவான விவரம் தரணுமே என்ற ஆதங்கத்தில் சிலை வைக்கச் சட்டசபையில் முடிவு எடுத்தது முதல் திறப்புவிழாவரை கல்வெட்டில் தட்டிவச்சாச்சு. இந்த எழுத்துக்களைச் செதுக்கியவர் பெயர் கூட ஒரு மூலையில் (அங்கவஸ்த்திரத்தின் கோடியில் இருக்கும் சரிகை மாதிரி: சொற்கள் உபயம்.கிரேஸிக்கு நன்றி) இருக்கே தவிர ஏழாயிரம் டன் கருங்கல்லைப் பயன்படுத்தி, ஐந்நூறு சிற்பக்கலைஞர்களுடன் சேர்ந்து 7500 பகுதிகளாச் செஞ்சு அவைகளை இணைச்சு இந்த பிரமாண்டத்தை உருவாக்கின கணபதி ஸ்தபதியைப் பற்றி பேச்சுமூச்சு இல்லை. இதுக்குண்டான கருங்கல்லையெல்லாம் சிறுதாமூர், அம்பாசமுத்திரம், பட்டுமலைக்குப்பம் என்ற இடங்களில் இருந்து கொண்டுவந்தாங்களாம்.
(இந்த விவரங்களெல்லாம் ஏதோ எனக்காகவே சொல்றதுபோல ரெண்டு நாள் கழிச்சு வந்த தினசரியில் ( The Hindu 27/2/2009 Friday Review) வெளிவந்துச்சு.
ஹொட்டேல் அறைகளுக்கு வரும் தினசரி. இல்லேன்னா தவறவிட்டிருப்பேன்)
இவருக்கு பத்ம பூஷன் விருது இந்த ஆண்டு கிடைச்சிருக்கு. இப்போ இவருக்கு 81 வயசாகுது. 1961 முதல் 1988 வரை 27 ஆண்டுகள் மாமல்லபுரச் சிற்பக்கல்லூரி முதல்வரா இருந்துருக்கார். தெருவோரம் கூரைக்கொட்டாயில் சிற்பம் செதுக்கிக்கிட்டு இருந்த நிலை மாறி சிற்பக்கல்லூரியில் சேர்ந்து படித்துப் பட்டம் வாங்கலாம் என்ற அளவுக்கு இந்தக் கலைக்கு மாற்றங்கள் வந்துருக்கு.
சென்னையில் இருக்கும் வள்ளுவர் கோட்டத்தின் ரதமும் இவர் வடிவமைச்சு உண்டாக்குனதுதான். தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் நிர்வாகக் கட்டிடமும், லைப்ரெரியும் இவர் கை வண்ணமே. புது டில்லி சுவாமிமலை முருகன் கோயில் உள்பட உலகம் முழுசும் அறுநூறுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் கோவில் நிர்மாணம்.
நாலாப்பக்கமும் காத்தடிக்கும் நிலையில் இவ்வளோ உயரச் சிலையில் தலை நிக்குமா?ன்னு அய்யன் தலையைப் பத்தி ஐயம் எழுப்புனவங்களுக்கு இவர் சொன்ன பதில் 'அலையும் மலையும் இருக்கும் வரையில் சிலையும் அதன் தலையும் நிற்கும். அப்படி இல்லேன்னா என் தலையை எடுத்துருங்க'ன்னாராம். இவருக்கும் அடுக்கு மொழி வந்துருச்சு:-)))))
இதுவரைச் சிற்பக்கலைகளைப் பற்றி நாற்பது புத்தகம் எழுதிட்டார். இப்போ நாப்பத்தியொன்னாவதா ஒரு புதுப் புத்தகம் எழுதிக்கிட்டு இருக்காராம். மேலும் சிற்பக்கலை மன்னனான 'மயன்' என்ற தேவதச்சனுக்கு ஒரு கோவிலும் மாமல்லபுரத்தில் கட்டிக்கிட்டு இருக்காராம். ஆடித்திரிஞ்ச கால் மட்டுமா சும்மா இருக்காது? கோவில்கள் கட்டுன கையும்தான் போல!!!
அய்யனின் பாதங்களுக்குப் பக்கத்தில் உக்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தேன். ஒவ்வொரு விரலும் நகமும் ஹைய்யோ..... பளிச்சுன்னு எத்தனை வசீகரமா இருக்கு பாருங்க! பார்வை போகும் தூரத்தில் (கரைக்கு வெறும் 200 மீட்டர்தான்) குமரி அம்மன் கோவிலுக்குப்போக சின்னதா ஒரு படிக்கட்டுகளும், படித்துறையும் இருக்கு. திரிவேணி சங்கமத்தில் மக்கள் குளிச்சுக்கிட்டு இருக்காங்க. ஒரு காலத்தில் நான் கேள்விப்பட்டது அங்கே மூணு வெவ்வேறு நிறத்தில் தண்ணீர் இருக்குமாம். நெசமாவாச் சொல்றாங்க? இப்ப அப்படி ஒன்னும் தெரியலையே! ஊனக்கண்ணுக்குத் தெரியாதோ என்னவோ!
விவேகானந்தர் பாறைக்கும் , வள்ளுவர் பாறைக்கும் நடுவில் ஒரு குட்டிப்பாறை இருக்கே அதுவழியா ஒரு பாலம் கட்டிவிட்டால் இன்னும் எளிதா இருக்குமே!
நூற்றுநாற்பது படிகள் ஏறிவந்த களைப்பில் நம்ம மக்கள்ஸ் மொட்டைமாடியில் ஓய்வெடுக்கும் மாதிரி பிள்ளைகுட்டிகளோடு தரையில் உருண்டு புரண்டுக்கிட்டு இருந்தாங்க. நாங்களும் கொஞ்ச நேரத்துலே அங்கிருந்து கிளம்பிப் படகுக்கு வந்துசேர்ந்தோம். டவுன் பஸ் மாதிரி எக்கச் சக்கக்கூட்டம். கரைக்கு வந்ததும் அறைக்குப்போகுமுன் ஒரு இளநீர். கொதிக்கும் வெயிலில் அதுவுமே உள்ளே வெதவெதன்னுதான் இருக்கு. இன்னும் கோடை ஆரம்பிக்கலைன்னு இளநீர் வியாபாரி சொன்னார்!!!!
படகுத்துறைக் கட்டிடம்
இன்னிக்குக் காலையில் ஹொட்டேலைவிட்டு வெளியே வரும்போதே, ஒருத்தர் கார் வேணுமான்னு கேட்டார். திருவனந்தபுரம், கோவளம், நாகர்கோவில் எல்லாம் சுற்றிக்காட்டுவாராம். கோவளம் எல்லாம் வேணாமுன்னதுக்கு அது என்னங்க, இப்படிச் சொல்லிட்டீங்க? அது 'பார்க்க' வேண்டிய இடமுன்னு சொன்னார். எதுக்கும் இருக்கட்டுமுன்னு அவரோட பெயரையும் செல் நம்பரையும் வாங்கி வச்சுக்கிட்டோம். அவர் பெயர் ரமேஷ் பாஸ்கர். கார் - டாடா இண்டிகா. ஏஸிக்குத் தனியாக் கூடுதல் கட்டணம். நேத்து இரவு இன்னொருத்தர்கிட்டேயும் சொல்லிட்டு வந்துருக்கோமே..... பார்க்கலாம்
பகல் சாப்பாட்டுக்கு நம்ம ரெஸ்ட்டாரண்டிலேயே தென்னிந்திய உணவு முடிச்சுக்கிட்டுக் கொஞ்ச நேரம் ஓய்வுக்குப்பிறகு நிதானமாக் குமரிமுனைக் கிளம்பினோம். சந்நிதித் தெருவழியாப் போனோம். எல்லாத்துக்கும் கோயிலைக் கடந்துதான் போகணும். கூட்டம் நிரம்பி வழிஞ்சு கலகலன்னு இருக்கு. காசிக்குப்போனால் தென்னிந்தியச் சாப்பாட்டுக்குன்னே நமக்குச் சத்திரங்கள் வச்சுருக்காமே அதே போல வடக்கர்களுக்குன்னு இங்கேயும் ராஜஸ்தானி ஜைனமதக்காரர்களுக்குன்னு சாப்பாடு விற்கும் இடம் இருக்கு.
கிழக்குப்பார்த்தக் கோவில்வாசல் மூடி வச்சுருக்கு. வருசத்தில் சில குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே திறப்பாங்களாம். கொஞ்சம் பெயிண்ட் அடிச்சு நல்லா வைக்கக்கூடாதோ? உப்புக்காற்றுப் பட்டு தோலுரிஞ்சு கிடந்துச்சு. அங்கிருந்து கோவிலைப் பார்த்தபடி நிற்கும் அய்யனைப் படம் எடுத்தோம். அவருக்கே அலுத்துப்போயிருக்குமோ என்னவோ:-))))கோவில் மதில் சுவர் முடிஞ்சுக் கொஞ்சம் வலப்பக்கம் திரும்பினா..... சோழிக் கடைகள் சோழிகளாட்டம் கொட்டிக்கிடக்கு. சின்னதா இருக்கும் வலம்புரிச் சங்கு விலை முன்னூறு ரூபாயாம். சங்குக் கடைக்காரர் சும்மா இருந்த சங்கை ஊதிக் காமிச்சார். எல்லாம் வால் முறிச்ச சங்குகளா இருக்கு. ஏற்கெனவே சில வருசங்களுக்கு முந்தி 'கிரி'யில் வாங்குனதும் இப்படித்தான். வெள்ளிப்பூண் போட வசதியா வெட்டி இருக்காம். யாரோ சொன்னாங்க..... இதுலேகூட போலிகள் வந்துருக்குன்னு. என்னத்தைன்னு கண்டோம்?
கடற்கரையில் ராஜகுமாரன், ராஜகுமாரிகள் வலம் வர்றதுக்குத் தோதா கம்பீரமான வெண் புரவி ஒன்னு கண்பட்டையுடன் காத்து நிக்குது. அடடா....குதிரையேற்றம் தெரியாதா? பக்கத்துலே ஸ்டேண்டு போட்டு வச்சுருக்காங்க.
மாங்காய் இல்லாத பீச் உண்டா? கிளிமூக்கு மாங்காய்கள், கீறிவச்சத் துண்டங்கள், குட்டிச்சாக்கில் மிளகாய்ப்பொடின்னு அனைத்து அம்சங்களுடன் பார்க்கும்போதே..... எச்சில் ஊறுது. இது நமக்கல்ல என்ற வைராக்கியத்துடன் கெமெராப் பார்வையில் புடிச்சு வச்சுக்கிட்டேன். கடலை வறுக்கும் அம்மா படுபிஸியாக இருந்தாங்க. பாப்கார்ன் பொதிகளும் விற்பனைக்கு இருக்கு. திரிவேணி சங்கம மண்டபத்திலும், தண்ணீரிலும் பயணிகள் கூட்டம்
விவேகானந்தர் நிஷ்டையில் இருக்கும் சிலையுடன் ஒரு சின்னக் கோவில் இருக்கு. ராமகிருஷ்ணா மிஷன் வச்சுருக்காங்க போல. குமரி அம்மன் கோவில் மதில் சுவரை ஒட்டி ஒரு சிறுவர் பூங்கா இருக்கு. அதென்னவோ தமிழ்நாட்டில் நான் பார்த்த பல இடங்களில் கங்காரு பொம்மையும் பெங்குவின் பொம்மையும் குப்பைக்கூடைகளாக் கிடக்கு. ஆஸியும் நியூஸியும் வெறும் குப்பைன்னு நினைப்போ?
காந்தி மண்டபம் வந்தோம். பள்ளிக்கூடப் பிள்ளைகள் நிறையப்பேர் வந்துருந்தாங்க. கடலில் கரைக்குமுன் அஸ்திக் கலசம் வச்சுருந்த இடத்தில் அக்டோபர் 2 (காந்தி பிறந்த நாள்) மட்டும் சூரியனின் ஒளி உள்ளே வரும் என்ற குறிப்புடன் கூரையில் ஒரு துவாரம் இருக்கு. மண்டபப் பராமரிப்பு நல்ல நிலையில் இருக்கு. காலணிகளை இலவசமாப் பாதுகாத்துக் கொடுக்கறாங்க. அஹிம்ஸாவாதியின் நினைவுக்குன்னு இருக்கும் இடம் என்றதால் ஆபத்து இருக்காதுன்னு ஒரு சிட்டுக்குருவி செக்யூரிட்டி விளக்கின் மேல் கூடுகட்டி வச்சுருக்கு.
அடுத்த கட்டிடம் காமராஜர் நினைவு மண்டபம். தங்கநிறமுள்ள வெண்கலச் சிலை. 'ஐயா..... நாட்டைக் கெடுத்துப் போட்டாங்கையா' ன்னு கொஞ்சம் புலம்பிவச்சேன் அவரிடம். வெளியே சுடச்சுட மிளகாய் பஜ்ஜிகள் கொதிக்கும் எண்ணெயில் குதிச்சுக்கிட்டு இருக்கு. உணவுப்பொருட்கள் விற்கும் இடங்களில் எல்லாம் வழக்கம்போல் குப்பையும் கூளமும். இன்னும் ஒரு பத்து மீட்டர் நடந்தால் ஒரு அக்வேரியம் கண்ணில் பட்டுச்சு.
நம்ம நாச்சியார் பதிவில், மீனாட்சியைப் பார்த்த நினைவில், அந்த வகை மீன்களை நேரில் பார்க்கணும் என்ற ஆவலால், 'அரவானா' இருக்கான்னு கேட்டேன். இருக்காம். வாஸ்து மீன். நல்ல காலம் பிறக்கட்டுமுன்னு ஆளுக்குப் பத்து ரூபாய் சீட்டு வாங்கிக்கிட்டு உள்ளே போய்ப் பார்த்தோம். நிறைய வகைகள் வச்சுருக்காங்க. வாஸ்தும் சரியா இருக்கு. வல்லி வீட்டு மீனாட்சியின் உடம்பிறப்புகள் இருந்தாங்க.
ஆமாம்..... அதென்ன நம்மூர் கடற்கரைங்க எல்லாம் சமாதியாவும் அஸ்தி வச்ச இடமாவுமே கிடக்கு. எங்கியாவது ஊருக்குள்ளே இதையெல்லாம் கட்டாம எதுக்கு மக்கள் புழங்கும் இடங்களில் கட்டிவிடுறாங்க? ஆனாலும் செண்ட்டியா இருக்கொமேப்பா...... இன்னும் வசதியான பாறைகள் சில பாக்கி இருக்கு இங்கே. அதையும் வருங்கால 'மன்னர்கள்' விட்டுவைக்க மாட்டாங்கன்றது நிச்சயம்.
சூரியன் மறையும் காட்சியையாவது பார்க்கணும். இன்னும் இருவது நிமிசம் இருக்கு. உதய அஸ்தமனம் பார்க்கன்னே ஒரு வியூயிங் டவர் கட்டி வச்சுருக்காங்க. கட்டணம் ஆளுக்கு மூணு ரூபாய். சுழல்பாதையில் ஏறி மேலே போகலாம். போனோம். நிறைய பாறைகள் உள்ள கடல் பகுதி. அலைகள் அப்படியே பாறைகளில் ஆவேசத்தோடு மோதி அடிச்சுத் திரும்புது. சலீர் சலீர்ன்னு இரைச்சலான இரைச்சல். இந்தக் கலாட்டாவுலே, ஒரு பாறையில் நின்னு தூண்டில் போட்டு மீன் பிடிச்சுக்கிட்டு இருந்தார் ஒருத்தர்.
மேற்கில் கண்ணு நட்டுக் காத்திருந்தோம். அடிவானத்தில் கருமேகமாப் புகை மூட்டம். எது தண்ணி எது வானம் எது மேகம், ஏது சூரியன்.......கண்ணாமூச்சி ஆட்டமாப் போச்சு. சூரியன் தண்ணீரில் இறங்காமல் மேகத்துக்குள்ளில் போயிட்டார். அப்புறம்? போனவன் போனாண்டீ......ன்னு பாடாததுதான் கொறைச்சல்(-: விளக்கு வைக்கும் நேரம். கலங்கரை விளக்கு சுத்த ஆரம்பிச்சது. இருட்டுக்கு முந்தி அறைக்குப் போகலாமுன்னு ஒரு ஆட்டோ பிடிச்சு(20 ரூபாய்)அறைக்கு வந்து சேர்ந்தோம்.
கிடைக்கும் பூக்களைவச்சுத் தினத்துக்கு ஒரு அலங்காரம் செய்யும் அரவிந்தன் இவர்தான்.
ரமேஷை செல்லில் கூப்பிட்டு மறுநாள் ஏழரைக்கு வரசொல்லியாச்சு. இட் 'ஸ் கோயிங் டுபீ அ லாங் டே டுமாரோ.
மீதிப் படங்கள் இங்கே ஆல்பத்தில்
தொடரும்.....:-)
Tuesday, May 12, 2009
கண்ணா மூச்சி ஏனடா..........(2009 பயணம் : பகுதி 23)
Posted by துளசி கோபால் at 5/12/2009 06:04:00 PM
Labels: அனுபவம், கன்யாகுமரி
Subscribe to:
Post Comments (Atom)
23 comments:
அய்யனை கிட்டே போய் பாக்காத குறைய தீத்துட்டீங்க. அவ்வளவும் அருமை.அந்த வ்யூ டவர் ஒரு காலத்தில்(30வருஷம் முன்னே)ரெஸ்டாரண்டா இருந்தது. சுத்தி கண்ணாடியால் மூடியிருக்கும். ஸ்னாக்ஸ் கொறிச்சிட்டே கடலை ரசிக்கலாம்.அய்யனின் அருமைய அந்த ஆச்சியாவது புரிஞ்சு வச்சிருக்காங்களே! சந்தோஷமா இருக்கு. நாகர்கோவில் பத்தின பதிவுக்காக துடிச்சிட்டுஇருக்கிறேன்.மிளகாய் பஜ்ஜி எச்சி ஊற வைக்குது. வசூல் வேட்டையில் பார்ட்னர் ஷிப் உண்டா?:-)))))))))
முதல்ல வர்ற ஸ்டூடண்டுக்கான பரிசா அய்யன் சிலையும் மிளகாய் பஜ்ஜியும் எடுத்துக்கலாமா?
யானய வாயக்கட்டி வச்சிட்டாங்களே, பாவமா இருக்கு. அந்த ஒற்றை பாறை ரொம்ப அழகா கவிதை போல் இருக்கு. எனக்கு ரிசர்வ் செஞ்சாச்சு. பூ அலங்காரம் மனதை மயக்குது.
இந்த பாகம் அருமையோ அருமை... எக்கச்சக்க பாடம்.. நடுவில் நிறைய ஜோக் வேற.. நாங்க அழகானகுப்பைக்கூடைன்னு நினைச்சது உங்கள்க்க்கு மட்டும் எப்படி தனியா தெரிஞ்சுருக்கு பாருங்க.. :)
உங்களுக்குன்னு நியூஸ் பேப்பரில் விசயம் வர அளவுக்கு உங்கள் சக்தி இருக்கு . பகவதிகூப்பிடறா .. பேப்பரில நியூஸ் வருது.. ஆகா..கா
அருமையான விவரிப்பு, பதிவு.
உள்ளூரில் இருக்கும் எங்களுக்கு கலை பொக்கிஷங்களின் அருமை டேரிஇவது இல்லை, வெளிநாட்டில் இருப்பதால் உங்களுக்கு அதன் அருமை, மதிப்பு நன்கு தெரிகிறது.
குப்பன்_யாஹூ
அன்பு துளசி ,மீனாட்சியையும் நினைவு வச்சுக்கிட்டது துளசி டச்
படங்கள் சூப்ப்படர்,. கணபதி ஸ்தபதியை நீங்க்களாவது கண்டுக்கிட்டீங்க்களே.
காமராஜரும் அப்படியீ. அந்தபூ அலங்க்காரம் ரொம்ப நல்லா இருந்ததுப்பா.
மிச்ச படங்க்களையும் பார்த்துவிட்டு வரன்.
கடலை விதவிதமா எடுத்துருக்கறீங்க டீச்சர்..ஆர்ப்பரிப்பும் அமைதியும் மனசை அள்ளுது.அய்யனும் பிரமாண்டமா இருக்கார்.நேரில் போயிருந்தா கூட இவ்வளவு ரசிச்சிருக்க முடியுமானு தோணுது..டீச்சர்னா டீச்சர் தான்.
// கடற்கரையில் ராஜகுமாரன், ராஜகுமாரிகள் வலம் வர்றதுக்குத் தோதா கம்பீரமான வெண் புரவி ஒன்னு கண்பட்டையுடன் காத்து நிக்குது//
அடடே ! மேடம் துளசி கோபால் புரவி மேல பவனி வர்ற காட்சி தெரியறதே !
அந்தக்காலத்துலே எடுத்தது போல இருக்கு. அதான் ப்ளாக் அன்ட் வைட்.
http://www.youtube.com/watch?v=XBVatR5B0fc
மீ.பா.
பெஸ்ட் ஆஃப் தி 2009 பயணம் தொடர் பதிவுகள்!
செம கலகல டீச்சர்! :)
//'மன்னவன் வந்தானடி' பாட்டுலே சிவாஜி கணேசன் போட்டுருந்த உடை யாருக்காவது நினைவிருக்கா? அய்யன் போட்டுருக்கும் உடை(?)//
எங்க டீச்சர் கண்ணே கண்ணு! :)
வேட்டி தான் என்றாலும், அதன் முன் பகுதியான கீழ்பாச்சு, சரிகையால் வளைந்து வளைந்து, ஒரு sideஆகத் தொங்கும்! அப்படியே நடந்து வரும் போது, ஜிலு ஜிலு-ன்னு மினுக்கி, ஒரு கம்பீரத்தைத் கொடுக்கும்!
மேல் சாத்து, கீழ்ச் சாத்து, உள் சாத்து-ன்னு இன்றும் திருமலையில் மூலவருக்கு இப்படித் தான் கட்டி வுடறாங்க!
ஒரே வேறுபாடு, ஐயனுக்கு மூனு சாத்துகளும் இருக்கு! திருமலையில் மேல்சாத்து, உள்சாத்து தான்! கீழ்ச் சாத்து கிடையாது! அதனால் ஐயனைப் போல அவருக்கு ஜிலுஜிலு இல்லை! :)
அதை நோட் பண்ணிச் சொன்ன உங்களுக்கு பெருமாள் ஒரு ஷொட்டு கொடுக்கச் சொன்னாரு! கொடுத்துட்டேன்! :))
//வட இந்தியப் பயணிகள் எல்லாரும் அய்யனின் பாதங்களில் தலைவைத்து வணங்குகிறார்கள். அச்சச்சோ...... தமிழ்க்காரன் காலில் விழுந்தாச்சே.........//
ஹா ஹா ஹா!
தாளை வணங்காத் தலை? :))
//கொஞ்சம் குங்குமம் மட்டும் கொண்டு போயிருந்தால் ஏகப்பட்ட வசூல்வேட்டை நடத்தி இருக்கலாம்//
ஹிஹி! ஹேண்ட்பேக்கில் பவுடர் இருந்தா திருநீறு-ன்னு குடுத்து இருக்கலாமே டீச்சர்? சான்ஸை மிஸ் பண்ணீட்டீங்களே! :))
//சாமியே இல்லைன்னு சொல்லும் கட்சியின் தலைவரின் முயற்சியால் உருவான 'சாமி' இவர்//
:)
//வருங்காலச் சந்ததிகளுக்கு விரிவான விவரம் தரணுமே என்ற ஆதங்கத்தில் சிலை வைக்கச் சட்டசபையில் முடிவு எடுத்தது முதல் திறப்புவிழாவரை கல்வெட்டில் தட்டிவச்சாச்சு//
கோயிலில் ட்யூப் லைட்டின் மீது வெளிச்சமே வராத அளவுக்கு தன் பெயரைப் போட்டுக் கொள்ளும் சில ஆத்திகர்களின் டெக்னிக் போலவே இருக்கே?
ஹிஹி! இந்த மாதிரி விஷயத்தில் எல்லாம் ஆத்திகமாவது? நாத்திகமாவது?
//ஆடித்திரிஞ்ச கால் மட்டுமா சும்மா இருக்காது? கோவில்கள் கட்டுன கையும்தான் போல!!//
பதிவு போடும் கையும் தான்! :)
கணபதி ஸ்தபதி பற்றி விரிவாக எடுத்துச் சொன்னமைக்கு நன்றி டீச்சர்!
கிட்டத்தட்ட இவர் முதல்வர் கலைஞரின் ஆஸ்தான ஸ்தபதி! இன்று நாம் பார்க்கும் கண்ணகிக்கு கல்லில் முதலில் வடிவம் கொடுத்தவரும் இவரே! பூம்புகாரும் இவர் கைவண்ணமே!
சிலப்பதிகார வர்ணனையைப் படிச்சிப் படிச்சியே தோரண வாயில் மாதிரி செஞ்சாராம்!
இலக்கியம், ஆகமம், சிற்பம்-ன்னு மூனுமே தெரிஞ்சி செய்யும் போது கல்லுக்கு எப்படி உயிர் வருது பார்த்தீங்களா?
//மாங்காய் இல்லாத பீச் உண்டா? கிளிமூக்கு மாங்காய்கள், கீறிவச்சத் துண்டங்கள், குட்டிச்சாக்கில் மிளகாய்ப்பொடின்னு...//
சப்..சப்...சப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்
எனக்கு ரொம்பப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப் பிடிக்கும்! :)
சென்னையில் பாலா, தேசிகன் எல்லாரையும் மீட்டிய போது, சாப்பிட என்ன வேணும்-ன்னு சொல்லு கேஆரெஸ், வாங்கித் தாரோம்-ன்னு சொன்னாங்க! நான் கேட்டது...கீறி வைச்ச கிளி மூக்கு மாங்காய்ப் பத்தை தான்! நூறு ரூபாய்க்கு! :))
ஹைய்யோ..அந்தப் ஃபோட்டோவுல மலை மலையாக் குவிச்சி வச்சிருக்கும் வேர்க்கடலை, வறுகடலை, பட்டாணி....வாவ்! ஒரு முப்பது பொட்டலம் பார்சேல் டு நியூயார்க்!
//அஹிம்ஸாவாதியின் நினைவுக்குன்னு இருக்கும் இடம் என்றதால் ஆபத்து இருக்காதுன்னு ஒரு சிட்டுக்குருவி செக்யூரிட்டி விளக்கின் மேல் கூடுகட்டி வச்சுருக்கு//
டீச்சர் கண்ணே கண்ணு-ன்னு எத்தனை வாட்டி சொல்லுறதாம்? :) கண்ணு பட்டுறப் போவுது! :)
படங்களும் பதிவும் அருமை...நானும் சில அய்யனை எடுத்துக்கிட்டேன் ;))
வாங்க ஐம்கூல்.
//அந்த வ்யூ டவர் ஒரு காலத்தில்(30வருஷம் முன்னே)ரெஸ்டாரண்டா இருந்தது. சுத்தி கண்ணாடியால் மூடியிருக்கும்.//
ஹைய்யோ..... நினைச்சுப் பார்த்தாலே இனிக்குதே. அப்புறம் ஏன் எடுத்துட்டாங்க? ஒன்னுமில்லாத இடத்துலே எல்லாம் ரிவால்விங் ரெஸ்டாரண்ட், ஹில் வியூ, ஸீ வியூன்னு வச்சு இங்கே கொள்ளை அடிக்குறாங்களே.
நம்மூர்க் கூட்டத்துக்கு நல்லாதானே போயிருக்கும். அப்புறம் ஏன்.....?
எல்லா மிளகாய் பஜ்ஜியும் உங்களுக்குத்தான். பார்த்து..... அப்புறம்.... பிடுங்கிடப்போகுது!!!!
யானை வாயைக் கட்டுனதா? அப்புரம் அது கோயிலுன்னு நினைச்சுக்கிட்டுக் காசுக்குக் கையை நீட்டிட்டா?
வாங்க கயலு.
எதிர்பார்க்காம இப்படி எல்லாம் நடந்தா...மனசே ஜில்லிட்டுப் போகுதுப்பா.
எல்லாம் 'அவன்'செயல்!
வாங்க குப்பன் யாஹூ.
ஊர் உண்டான சமயம், எல்லை அளந்த இடமெல்லாம் ஹிஸ்ட்டாரிக் ப்ளேஸ் என்ற போர்டு போட்டு வச்சுருக்கும் நாடு நான் இருப்பது.
ஒரு 169 வருசச் சரித்திரத்தைக் கொண்டாடும்போது ஆயிரக்கணக்கான வருடப் பழமைகளைப் பார்க்க நேரிட்டால் அருமையா இருப்பதில் என்ன வியப்பு!!!
வாங்க வல்லி.
அதென்னவோப்பா பதிவர்கள் நினைவு அப்பப்ப வந்துக்கிட்டே இருக்கு சம்பந்தப்பட்டவைகளைப் பார்க்கும்போதெல்லாம்:-))))
படங்கள் க்வாலிட்டி சுமாராத்தான் இருக்கும். கண்டுக்காதீங்க.
வாங்க சிந்து.
கடலை போட முடியாமத்தான் கடலை எடுத்துட்டேன்:-)))))
வாங்க மீனாட்சி அக்கா.
நானும் கோபாலும் இப்படிப் போனதை மறந்தே போயிட்டேன். என்ன ஒன்னு கெமெரா எங்க முன்னாலே நீட்டிக்கிட்டு இருந்துச்சு அப்ப. டைரெக்டர் வேற இருந்தாரா, அதான் அங்கே உங்க ரெண்டு பேரைப் பார்த்தப்பக் கை ஆட்ட முடியாமப் போச்சு!!!!
வாங்க கே ஆர் எஸ்.
நீங்க வந்தாத்தான் வகுப்புக்கே கலை/களை ரெண்டும் கட்டுது:-))))
நம்மாளைவிட அய்யனுக்கு 'சாத்து' கூடுதலா!!!! பேஷ் பேஷ்
பவுடர் எல்லாம் 'வச்சுக்கறதில்லை'ப்பா. அதை நினைச்சு வருத்தப்பட'வச்சுட்டீங்க' இப்ப.
பூம்புகாரும் இவர் கைவண்ணம்தான்னு எழுத நினைச்சு விட்டுப்போச்சு. எடுத்துச் சொன்னதுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி. ஆனாலும் முன்னொரு காலத்துலே பார்த்த பூம்புகார் பிடிச்ச அளவுக்கு இப்போப் பார்த்தது ...... சுமார்தான்.
மாதவி சிலை கை விரல் நீளம், நகம் எல்லாம் பார்த்து ஒரு மயக்கத்தில் நானே இருந்தேன்னா..... கோவலனைப் பத்திச் சொல்லணுமா? கிட்டப்போக விடாமல் தோட்டத்து முற்றத்துலே பூட்டிவச்சுட்டாங்க.....
கண்ணுன்னு டீச்சரைச் சுத்தி வெளியே வீசாமல் இருந்தால் சரி:-))))
வாங்க கோபி.
எல்லாத்தையும் எடுத்துக்கிட்டாலும் குறைவொன்றுமில்லை தான்:-)))
Post a Comment