பாம்புக்கதைகள் எத்தனை கேட்டுருக்கோம்! அதுலே இருந்துதானே பாம்புன்னா ஒரு பயம் நடுக்கம் எல்லாம் வந்துருது! பாம்பு பயம் போகணுமா? பேசாம நாகத்துக்குன்னே இருக்கும் கோயிலுக்கு ஒரு நடை போயிட்டு வாங்களேன். நம்ம கோபாலுக்கும் பாம்புன்னாக் கொஞ்சம்....... அதான் நாங்களும் ஒரு நடை..... நான் சும்மாக் கூட ஒரு துணையாத்தான் போனேன்:-))))
நாகராஜா கோவில் இருக்குமிடம் நாகர்கோவில். கன்யாகுமரி மாவட்டத்தின் தலைநகர் என்ற பெருமையும் இருக்கு. கொஞ்சம் பெரிய ஊர்தான். பசுமை மாவட்டத்துக்கேத்தாப்புலெ எங்கெங்கு காணினும் பசுமைகளே. மெயின் ரோடில் இருந்து கொஞ்சம் உள்ளெ தள்ளுனாப்புலே கோவில் வளாகம். பின்னால் இருக்கும் தெருவழியாப் போனதால் கண்ணுக்கு முன்னால் தெரியும் கோவில்கதவுகள் மூடியிருக்கு, வலது பக்கம்போய் இடது திரும்புனா பிரமாண்டமான நீளத் திண்ணைகளுடன் கோவில். ஒரேதாக் கேரள சம்பிரதாயமுன்னும் சொல்லமுடியாம என்னவோ வித்தியாசமான அமைப்பு.
ரெண்டு நிலை மாடம். முகப்பில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதரா மகாவிஷ்ணு, ரெண்டு பக்கங்களில் சக்கரம் சங்குடன் காட்சி தர்றார். உள் முற்றத்தில் ஜொலிக்கும் கொடிமரம். உள்ளே நுழைஞ்சால் அனந்தகிருஷ்ணன் சந்நிதி. 'கிருஷ்ணா நீ இங்கேயா இருக்கே? நாகராஜா கோயில்னு நினைச்சு வந்தேனே! அப்போ அனந்தன் எங்கே?'ன்னு கேட்டதுக்கு 'இடம்கொடுத்துருக்கேன்'னு இடப்பக்கம் கை காட்டுனாப்பலெ ஒரு தோணல்.
இடப்பக்கம் நடந்தால் 'நான்கூட இங்கிருக்கேன் கவனின்னு மனக்குரல். சிவன் இருக்கார். 'பேசாமச் சிவனேன்னு இரும்'னுக் கொஞ்சம் அதட்டிச் சொல்லிட்டு அவரைத் தாண்டுனதும் தர்னேந்திரன், பத்மாவதி என்ற ஜோடி துவாரநாகர்கள் ரெண்டுபேர் மிரட்டலா ஜொலிக்க உள்ளே புகுந்து போனால் நாகராஜா. மேற்கூரை ஓலையா இருக்கு. கீழே புத்து இருக்காம். அந்த மண்ணைத்தான் துளி எடுத்துப் பிரசாதமுன்னு தந்தாங்க. இவருக்குன்னு அஞ்சுதலை நாகம் சுதைச்சிற்பமாப் பதிச்சத் தனிப் பிரதான வாசல். அதுலே வெளியே வந்தோம். இப்பப் புரிஞ்சுபோச்சு. இவருக்குக் கோவிலை எக்ஸ்டெஷன் செஞ்சு இடம் குடுத்தாற்போல் ஒரு தோற்றம். இவருக்கு முன்னால்தான் கோவில் குளமும் இருக்கு. சின்னதா அளவான அழகான செவ்வகமா இருக்கும் சுத்தமான குளம்.
சிவன்கோவில்களில் நந்தி சிலைகளை மதில்சுவர்மேல் வரிசையா வச்சுருப்பாங்க பாருங்க அதே போல இங்கே மதில் சுவருலேயும், குளத்துக்கானச் சுத்துச்சுவரிலும் வரிசையா நாகர்கள். கோவில் வளாகத்தில் பெரிய அரசமரம். மேடைஎல்லாம் போட்டு சுத்திவர நாகர்கள் அமர்ந்திருக்க அட்டகாசமா இருக்கு. எல்லாருக்கும் மஞ்சள் பூச்சு வேற.
கோவிலின் தலப்புராணத்தைப் பார்த்தோமுன்னா......அநேகமா எல்லா ஊருலேயும் சொல்றதுமாதிரிதான். ஒரு காடான இடத்துலே புல்வெட்டப்போச்சு ஒரு பொண்ணு. புல் அறுக்கும் அரிவாள் ஒரு இடத்துலே பட்டதும் குபுகுபுன்னு ரத்தம் வந்தவுடன் பயந்துபோய் ஊருக்குள்ளே வந்து விசயத்தைச் சொல்லுச்சு. ஆளுகெல்லாம் ஓடுனாங்க. ரத்தம் வந்த இடத்துலே பார்த்தால் ஒரு அஞ்சுதலை நாகம். தலையிலே வெட்டுப்பட்டுக்கிடக்கு. இதுக்கு அங்கிருந்த எல்லாருமே சாட்சி. அடடா....... நாகத்துக்கு இப்படி ஆயிப்போச்சே. 'அப்பா நாகராஜா, எங்களை மன்னிச்சுரு. ஏதோ தெரியாமப் பிழை நடந்துபோச்சு. உனக்குக் கோவில் கட்டிக் கும்பிடுறோமு'ன்னு சொல்லி அந்த இடத்துலே கட்டுன கோவில்தான் இது.
இன்னொரு கதையில் ஒரு ராஜாவுக்குத் தொழுநோயோ, தோல்நோயோ வந்துருச்சாம். அவர் ஆவணிமாசத்தில் ஒரு ஞாயித்துக்கிழமையன்னிக்கு இங்கே வந்து நாகரைக் கும்பிட்டதும் ரோகம் போயே போயிந்தி. இட்ஸ் கான். காயப் ஹோகயா''. அதுக்கப்புறம் அவர் குடும்பத்தோடு எல்லா வருசமும் ஆவணி மாசத்தில் ஒவ்வொரு ஞாயிறும் வந்து கும்பிட்டுப்போனாராம் அவர் வாழ்ந்திருந்த நாள் வரை. ராஜாவுக்கு ஆவணி ஞாயிறுன்னா எங்களுக்கு மட்டும் இல்லையான்னு மக்கள் ஆவணி ஞாயிறைப் பிடிச்சுக்கிட்டு இப்ப அதுவே ஒரு திருவிழா ரேஞ்சுக்குப் போயிருக்கு. பாம்பு பயம் போக, தோல்நோய் குணமாக இப்படி எல்லாத்துக்கும் நிவாரணி ஆவணி ஞாயிறு!!!
அந்தக் காலமனுசங்களுக்குக் கற்பனை வளம் கொஞ்சம் கம்மியோன்னு எனக்குப் பலசமயம் சந்தேகம் வந்துரும். கோவில் சிலைகளைப் பொறுத்தவரை அதுவும் சுயம்புன்னு சொல்றாங்க பாருங்க அதெல்லாம் பூமியில் புதைஞ்சுதான் இருக்கும். ஒரு பசு தினமும் அங்கே போய் தானாவே பாலைப்பொழிஞ்சு அபிஷேகம் செஞ்சுச்சு, இல்லே, அங்கே தோண்டுனப்பக் கல்லில் அடிவிழுந்து ரத்தம் வந்துச்சு இப்படித்தான் முக்கால்வாசிக் கதைகள். அப்படியும் இல்லைன்னா, சாமி பலரின் கனவில் ஒரே சமயத்தில் வந்து கோவில் கட்டச் சொல்லும். 'வேண்டுவது வேண்டாமை இலன்' இல்லையோ சாமி என்பது!!!!! ஹ்ஹூம்.....ஆனா ஒரு விஷயம் கவனிக்கணும். புகழ் பெருகப்பெருகப் பண நடமாட்டமும் கூடுதலாகி செல்வம் கொழிச்சுக் கோவிலை வச்சு ஊர் மக்கள் பிழைக்க வழி கிடைச்சு ஊரே நல்லா ஆயிருது பாருங்க.
ஒவ்வொரு மாசமும் ஆயில்யம் நட்சத்திரம் வரும் நாளும் இங்கே விசேஷமா இருக்குமாம். பொதுவாக் கேரளக்கோயில்களில் ஆயில்யம் நாளுக்குன்னு விசேஷம் உண்டான்னு தெரிஞ்சவங்க யாராவது சொல்லுங்க.
கோயிலுக்குள் நிறைய நாகப்பாம்புகள் இருக்குன்னும் இதுவரை அவைகளால் எந்த ஆபத்தும் வரலைன்னும் சொல்றாங்க. நல்ல சேதிதான். பாம்புகள் தங்கி வசிக்கணுமுன்னே கோயில் கூரையும் ஓலைகளால் கட்டப்படுதாம். வருசாவருசம் ஆடிமாசம் புதுக்கூரை போடும் பணியைச் செய்யறவங்க, இங்கே வழக்கமாத் தினசரி கோயில் பூஜை செய்யும் நம்பூதிரிகளும் போத்திகளும்தானாம். வெளியாட்கள் பாம்பைப் பார்த்துப் பயந்துருவாங்கல்லே?
நாகங்களுக்குக் கோவில் கட்டுன ஊரானதால், ஊருக்கும் நாகர்கோவில் என்ற பெயர் நிலைச்சுருச்சு. இந்தக் கோயிலில் சமணர்களின் சாமிகளான தீர்த்தங்கரர்களின் சிலைகளை மண்டபங்களில் செதுக்கி வச்சுருக்கு. அதனால் இந்தக் கோவில் சமணர்களின் கோவிலா இருந்துருக்கலாமோன்னு ஒரு பெரிய ஆராய்ச்சியே நடந்துருக்கு. ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படிச்சப்ப, 'நெசமாவாச் சொல்றாங்க?'ன்னு ஆச்சரியம் வந்ததென்னமோ உண்மை. ஆனா ஏகப்பட்டக் கல்வெட்டுக்கள், குறிப்புகள் எல்லாம் தேடிப்பிடிச்சுதான் ஆராய்ச்சி நடந்துருக்கு. படிச்சவுங்க சொன்னாச் சரியாத்தான் இருக்கும்.
நீங்களும் இங்கே இந்தச் சுட்டியில் படிச்சுப் பார்த்து முடிவுக்கு வாங்க.
தொடரும்..............:-))))))
Thursday, May 28, 2009
நாதர் முடி மேலிருக்கும் நல்ல பாம்பே .........(2009 பயணம் : பகுதி 30)
Posted by துளசி கோபால் at 5/28/2009 05:33:00 PM
Labels: அனுபவம், நாகராஜா, நாகர்கோவில்
Subscribe to:
Post Comments (Atom)
29 comments:
ஒவ்வொரு பதிவுலும் உங்கள் மறுபாதியின் ஒரு படம் போடனும் என்று ஏதாவது பிளாக் வாஸ்தா? :-))
இவ்வளவெல்லாம் உள்ளே போய் சுற்ற முடியுமா? என்று தெரியலை ஆனாலும் உங்கள் புண்ணியத்தில் படம் பார்க்க முடிகிறதே!நன்றி.
ஒரே குளிருது துளசி.
நமக்குப் பயா கூடுது.
உங்க கண்ணில ஒருத்தரும் நடமாடலியே???:)
ஆயில்யம்னா ப்ராபல்யம் அப்படீனு கேட்டிருக்கிறேன்.
அதென்னவோ. யார் கண்டா.
கொஞ்சம் மூக்கு கண்ல சல்தோஷம். அப்புறம் படங்களைப் பார்க்கறேன்.
//புகழ் பெருகப்பெருகப் பண நடமாட்டமும் கூடுதலாகி செல்வம் கொழிச்சுக் கோவிலை வச்சு ஊர் மக்கள் பிழைக்க வழி கிடைச்சு ஊரே நல்லா ஆயிருது பாருங்க.//
என்னைப் பொறுத்தவரை கோயில்களால் ஏற்படும் மிகப் பெரிய நன்மை இது.
எங்க நாகராஜண்ணனை பாத்துட்டு வந்தீங்களா? சௌக்கியமா இருக்காரா?
//இவருக்குன்னு அஞ்சுதலை நாகம் சுதைச்சிற்பமாப் பதிச்சத் தனிப் பிரதான வாசல். அதுலே வெளியே வந்தோம். இப்பப் புரிஞ்சுபோச்சு. இவருக்குக் கோவிலை எக்ஸ்டெஷன் செஞ்சு இடம் குடுத்தாற்போல் ஒரு தோற்றம். இவருக்கு முன்னால்தான் கோவில் குளமும் இருக்கு//.
வாசலில் ரெண்டு பெரிய நாகர்கள் காவலா இருக்காங்களே, அந்த பிரதான வாசல் வழியாதான் உள்ளே போகணும்.முதலில் அண்ணனை பாத்துட்டு அப்புறம்தான் பிரதட்சிணமாக வரும்போது சிவன், கிருஷ்ணன் , பிள்ளையார் , அப்படியே உள்பிரகாரம் எல்லாம் சுத்திட்டு அனந்தகிருஷ்ணன் சன்னிதி வழியா வெளியே வரணும்.எக்ஸ்டென்சன் அவருதான் மத்தவுங்களுக்கு கொடுத்திருக்கார்.
புத்துமண் பிரசாதம் ஆறுமாசம் வெள்ளையா இருக்கும் ,ஆறுமாசம் கறுப்பா இருக்கும். கண்கூடா பாத்திருக்கோம்.
//ஒவ்வொரு மாசமும் ஆயில்யம் நட்சத்திரம் வரும் நாளும் இங்கே விசேஷமா இருக்குமாம். பொதுவாக் கேரளக்கோயில்களில் ஆயில்யம் நாளுக்குன்னு விசேஷம் உண்டா//
இது கேரளா உருவான கதையோட தொடர்புள்ளது. பரசுராமர் தனக்குன்னு ஒரு நாடு உண்டாக்கவேண்டி கடலில் கோடரியை வீசி எறிஞ்சார். கோடரி விழுந்த இடம் வரை கடல் உள்வாங்கி நிலம் வெளியே வந்தது.இதை எதிர்பாக்காத கடலில் இருந்த பாம்புகள்ளாம் துடிதுடிச்சு உயிரை விட்டன. வருத்தப்பட்ட பரசுராமர்,அவங்க ஆத்மா அமைதியடைய வேண்டி அதுங்களை கும்பிடுவதாக வாக்கு கொடுத்தார்.அதனால்தான் பாம்புகளின் தலைவனான ஆதிஷேசனின் ஜென்ம நட்சத்திரமான ஆயில்யத்தில் பால் பாயசம் நிவேதனம் செஞ்சு பூஜை எல்லாம் செய்வாங்க. அன்னிக்கு ஆயில்ய நட்சத்திரத்துக்காரங்க அவுங்க பேர்ல கட்டாயம் பூஜை செய்வாங்க.
//நாகராஜா கோவில் இருக்குமிடம் நாகர்கோவில். கன்யாகுமரி மாவட்டத்தின் தலைநகர் என்ற பெருமையும் இருக்கு. கொஞ்சம் பெரிய ஊர்தான். பசுமை மாவட்டத்துக்கேத்தாப்புலெ எங்கெங்கு காணினும் பசுமைகளே.//
கொஞ்சம் இல்லை, ரொம்ப பெரிய ஊர்ங்க அது.கல்லா இருந்த காவலர் இப்போ பொன்னார் மேனியனா ஜொலிக்கிறாரே. விவரமா எழுதறீங்க,படம்லாம் காட்டுறீங்க, மிக்க நன்றி.
தில்லி யில் இருக்கும் கேரளக்கோயிலிலும் கூட.. ஆயில்ய தினத்தில் மஞ்சள் அபிசேகம் விசேசமா நாகருக்கு ஆகும்..
இங்க சுத்தி, அங்க சுத்தி .... எங்க ஊருக்கும் ( மாமியார் ஊரு ) வந்த்ட்டீங்க ...ரொம்ப நன்றி , படங்களும், அதை பற்றிய விளக்கங்களும்
//இவ்வளவெல்லாம் உள்ளே போய் சுற்ற முடியுமா? என்று தெரியலை ஆனாலும் உங்கள் புண்ணியத்தில் படம் பார்க்க முடிகிறதே!நன்றி.//
ரிப்பிட்டேய்ய்ய்ய் !
:)
//கேரளக்கோயில்களில் ஆயில்யம் நாளுக்குன்னு விசேஷம் உண்டான்னு தெரிஞ்சவங்க யாராவது சொல்லுங்க.//
ஆமாம்ப்பா யாராச்சும் பதில் சொல்லுங்க !
அப்படியே ஆயில்யன் பேர் உள்ளவங்களுக்கும் எதாச்சும் ஸ்பெஷல் இருக்கான்னு சொல்லுங்கப்பா புண்ணியமா போகும் ...! :)))))
//கேரளக்கோயில்களில் ஆயில்யம் நாளுக்குன்னு விசேஷம் உண்டான்னு தெரிஞ்சவங்க யாராவது சொல்லுங்க.//
கேரள கோவில்களில் நாகர்கள் பெரும்பாலும் தென்மேற்கு மூலையில் இருப்பார்கள். ஆயில்ய நட்சத்திரம் விசேடம்தான். குறையுள்ளவர்கள் இராகு/கேதுவை அமைதிப்படுத்த (தோஷப்ரீதி)இந்நாளில் பூசை செய்வார்கள்.
வணக்கம் அக்கா நாகர்கோவில் அனுசியை பத்தின சேதிகள் சூப்பர். வித்யசயமான நடை. நாளைக்கி கூடல் அழகர் பெருமாள் கோவில் ப்ரும்மோற்சவம் ஆரம்பம். கொடி ஏற்றம் நாளைக்கி காலை 10 மணிக்கு. பதிவுலக அன்பர்கள் எல்லோரும் வந்துருங்க !!!!!
wow faboulous.
thnaks for nagercoil photos, Hope you would post more pics & write ups about nagercoiul town, streets, bazars.
எல்லாமே புதுசாக இருக்கு...பார்க்க பார்க்க படிக்க படிக்க..;)
கோயில் கொஞ்சம் தமிழ்நாடு டைப்லயும் இருக்கு. கொஞ்சம் கேரளா டைப்லயும் இருக்கு
வாங்க குமார்.
//மறுபாதியின் படம்...//
டூர் ஸ்பான்ஸார் செஞ்சவரைக் காமிக்கும் ஸ்லைட் போடணும்தானே!!!
வாங்க வல்லி.
நடமாட்டம் நிறையவே இருந்துச்சு. ஆனா.... எல்லாம் மக்கள்ப்பா.
வாங்க SUREஷ்.
மக்களுக்காகத்தானே சாமி:-))))
வாங்க ஐம்கூல்..
அடடா...... இவர் தான் அவுங்களுக்கு இடம் கொடுத்துட்டாரா?
தனக்குன்னு ரொம்பக் கொஞ்சமாவச்சுக்கிட்டு பிறருக்கு தாராளமாக் கொடுக்க மனசு வேணும் பாருங்க.
முக்கியப் புள்ளிகள் இந்த குணத்தைக் கத்துக்கிட்டா எவ்வளோ நல்லா இருக்கும் இல்லே?
ஐம்கூல்,
ஆயில்யம் விளக்கம் பிரமாதம். நன்றிப்பா.
நம்ம ஆயில்யனுக்கும் பதில் சொல்லியாச்சு:-)))))
வாங்க கயலு.
உங்கவீட்டுக்கு ரொம்பப் பக்கமா இருக்கு. அடிக்கடி போவீங்கதானே?
கொடுத்துவச்ச மனுசிப்பா நீங்க:-))))
வாங்க அது ஒரு கனாக்காலம்.
மாமியா ஊர்மேலே அம்புட்டுப் பாசமா:-))))
ஆனா ஊர் நல்ல ஊர்ப்பா.
வாங்க ஆயில்யன்.
ஐம்கூல் ரொம்பக் கூலா விளக்கம் சொல்லிட்டாங்க. பாருங்க!
வாங்க மணியன்.
ராகு & கேதுவுக்கா?
அட! இது தோணலை பாருங்க!!
விவரத்துக்கு நன்றிங்க.
வாங்க அருண்மொழி.
ஆஹா......பிரம்மோத்ஸ்வம் பதிவு படங்களோடு போட்ட்டுருங்க. நாங்க இருக்குமிடத்தில் இருந்தே சேவிச்சுக்குவோம்.
வாங்க குப்பன் யாஹூ.
உங்க ஊர் இதுதானே!!!
மறுநாள் நம்ம ஜெ.மோ. வைப் பார்க்கணுமுன்னு முன்னே ஏற்பாடு இருந்துச்சு. அப்போ ஊருக்குள்ளே போகலாமுன்னு திட்டம். அரைநாள் ஒதுக்கி இருந்தேன்.
கடைசியில் அவர் ஆஸி விஸாவுக்காக சென்னைக்கு அவசரமாப் போகவேண்டியதாப் போச்சு.
சந்திப்பு கேன்ஸல்.
இன்னொருக்காப் பார்த்துக்கலாம் அவரையும் ஊரையும்னு இப்போ விட்டுவச்சுருக்கேன்:-))))
வாங்க கோபி.
தொடர்ந்து வாங்க. வரலைன்னா......
வாங்க சின்ன அம்மிணி.
கோயில் சமணக்கோயிலா இருக்கலாமுன்னு சொல்றதைப் படிச்சீங்களா?
Post a Comment