Thursday, May 07, 2009

பாட்டுச் சத்தம் கேட்டதைய்யா........பாட்டுச் 'சத்தம் சத்தம்' .....(2009 பயணம் : பகுதி 21)

மேற்குத் தொடர்ச்சி மலையை ஓரக் கண்ணால் பார்த்தவாறே பறந்துக்கிட்டு இருக்கோம் புது ஹைவேஸ் சாலையில். வள்ளியூர் வந்தால் மெயின் ரோடில் கடையும் கண்ணியுமா ஜேஜேன்னு இருக்கு. கொஞ்சம் பழங்கள் வாங்கிக்கிட்டா நல்லதுன்னு வண்டியை நிறுத்துனோம். ஆப்பிள்களையெல்லாம் வலைப்பையில் பிடிச்சுவச்சுத் தூக்கி(ல்) தொங்க விட்டுருந்தாங்க. திராட்சை சீஸன் போல. ஆனால்...... பார்க்க ஃப்ரெஷா இல்லை. கோபால்தான் போய் என்னவோ வாங்கினார். நான் கொஞ்சம் சப்போட்டா வாங்கிடச் சொன்னேன். இதையெல்லாம் பார்த்து எத்தனை நாளாச்சுன்னு இந்தப் பக்கம் திரும்புனா ஐயோ.....நெசமாவே பார்த்து நாளான பொருள்தான் இந்தப் பனங்கிழங்குகள். பழங்களைவிடக் கூடுதல் ஃப்ரெஷாக் குவிஞ்சு கிடக்கு. வித்துக்கிட்டு இருந்த அம்மாவும் பார்க்கவே அருமையான அம்மாவா இருந்தாங்க. 'ஆக்க இடமில்லை அம்மா'ன்னு சொல்லிட்டு அவுங்க அனுமதியோடு ரெண்டு படம் புடிச்சுக்கிட்டேன்.

ஒத்தைக் கண்ணனா ஒரு காற்றாலை நிக்குது. கேமெராவை எடுக்கும்போது உலகநாதன் சொன்னார், 'இன்னும் எக்கச்சக்கமா வரும் பாருங்க'. சத்தியமான உண்மை. கூட்டம் கூட்டமா அனக்கமில்லாம நிக்குதே. காத்துலே சுத்தறதைப் பார்க்கணுமுன்னு ஆசையா இருக்கு. (இங்கே நியூஸியில் ஒரு காற்றாலை வச்சப்பக் கொஞ்சதூரத்துலே இருந்த பண்ணையின் சொந்தக் காரர்கள் இதோட சத்தம் பெருசாக் கேக்குது அதை எடுத்தே ஆகணுமுன்னு புகார் கொடுத்தாங்க. இத்தனைக்கும் ரெண்டுக்கும் இடவெளி ஒரு கிலோமீட்டருக்கும் அதிகமாவே இருந்துச்சு. கடைசியில் காற்றாலையை எடுத்துட்டாங்க) எவ்வளவு சத்தம் வருமுன்னு தெரிஞ்சக்கலாமுன்னு பார்த்தால் அசைவேனாங்குதுகள். காத்தே இல்லைன்னார் கோபால். நம்ம வண்டிதான் காத்தாப் பறந்துச்சு. புது ரோடு அட்டகாசமா இருக்கே.
'ஆரல்வாய்மொழி'ன்னு ஒரு கைகாட்டி பார்த்த நினைவு. எவ்வளோ அழகான பெயர் இல்லை? ராஜாஸ் டெண்டல் காலேஜ் ஹாஸ்பிட்டல் கண்ணுலே விழுந்துச்சு. கட்டிட முகப்பா இப்படி மும்மதமும் சம்மதமுன்னு இருக்கு! இந்தப் பெயர் எப்பவோ பத்திரிக்கைகளில் அடிபட்டுச்சேன்னு விசாரிச்சேன். கேஸ் நடக்குதுன்னு தெரிஞ்சது.


அஞ்சுகிராமம் கடைத்தெரு

அஞ்சுகிராமம் வழியாப் பறந்துக்கிட்டு இருக்கோம். கடைவீதி கலகலன்னு இருக்கு. கண்சிமிட்டும் நேரத்தில் கடந்தோம். இதோ வந்துருச்சு விவேகானந்தர் கேந்திரம். வண்டி போய் நின்ன இடம் ஹொட்டேல் ஸீவ்யூ.
பார்க்கிங்கிலே காரைவிட்டு இறங்குனா...ஹைய்யோ..... கண்ணெதிரில் திருவள்ளுவரும் விவேகானந்தர் நினைவு மண்டபமும். முதல்வரவேற்பே இப்படி இருக்குமுன்னு நான் எதிர்பார்க்கலை. மசமசன்னு இருட்டும் நேரம்.
(கன்யாகுமரிக்கு ஒரு நாப்பது வருசம் முன்னாலே வந்துருக்கேன். அப்ப இதெல்லாம் இல்லவே இல்லை)
ஸீ வ்யூவில் எல்லாம் இளைஞர்களா (மிஞ்சிப்போனா இருபத்தியொன்னு, இருபத்திரெண்டு இருந்தா அதிகம்) இருக்காங்க. ஒருத்தர் பெரிய உருளியில் பூக்களை அலங்கரிச்சுக்கிட்டு இருக்கார். ஜில்லுன்னு செவன் அப் கொண்டுவந்து கொடுத்தாங்க. வரண்ட தொண்டைக்கு இதமா இருந்துச்சு.
கடலைப் பார்க்கணுமா தெருவைப் பார்க்கணுமான்னு வரவேற்பில் கேக்கறாங்க. ரெண்டுக்கும் என்ன வித்தியாசமாம்? ஆயிரம் ரூபாய். முதலில் ரெண்டையும் காமிங்க. அப்புறமாச் சொல்றோமுன்னு மாடிக்குப்போய்ப் பார்த்தோம். தெருவிலே என்ன அற்புதம் கிடக்கு? பேசாமக் கடலையே பார்க்கலாமுன்னு சொன்னேன். ஆயிரமுன்னு சொன்ன கோபாலை..... டாலர்லே பாருங்க. சின்ன எண்ணிக்கையா இருக்குமுன்னு ஒரே போடாப் போட்டேன். நாலு நாள் தங்கப்போறதால் டிஸ்கவுண்டு வேணுமுன்னு கேட்டு இருபத்தியஞ்சு சதம் கழிவு கிடைச்சது.

அறைக்குப் போனதும் ஜன்னல் திரையை விலக்குனா பளிச் என்ற விளக்கலங்காரத்தில் அய்யனும் (விவேக்) ஆனந்தனும். களைப்பைப் போக்க காஃபிக்குச் சொன்னதும் கொண்டுவந்த பணியாளர், காலையில் சூரிய உதயம் பார்க்கணுமாம்மா? ஆறேகாலுக்குக் காஃபி கொண்டுவந்து எழுப்பி விடறேன். குடிச்சுட்டு மாடியில் போய் பாருங்கன்னார். ஆறரைக்கு வருவானாம் சூரியன்.

இன்னிக்கு ரொம்பவே சுத்தியாச்சு. நாலுநாள் ரிலாக்ஸா இருக்கப்போறேன். கோவிலுக்கு நாளைக்குக் காலையில் போகலாமுன்னு இவர் டிவி போட்டுக்கிட்டு படுக்கையில் சாஞ்சுட்டார். போயிட்டுப்போகுது போன்னு நானும் இருட்டுலே மினுங்கும் கடற்புரக் காட்சிகளைப் பார்த்துக்கிட்டு இருந்தேன். ஒரு மணிநேரம் இப்படிப் போயிருக்கும், திடீர்னு இவர் எழுந்து, 'தூக்கம் கண்ணை இழுக்குது....போய் எதாவது சாப்பிட்டு வந்துறலாமு'ன்னு சொன்னதும் கொஞ்சம் ஃப்ரெஷப் பண்ணிக்கிட்டுக் கீழே போனோம்.
கடைத்தெரு
ஹொட்டேல் ரெஸ்ட்டாரண்டுக்குப் போகாம வெளியே எப்படி இருக்கு, என்ன கிடைக்குமுன்னு பார்த்துக்கலாமுன்னு ஹொட்டேல் இடதுபக்கம் ஒரு பத்து மீட்டர் தூரத்தில் இடப்பக்கம் இருக்கும் ஒரு தெரு(சந்நதித்தெரு?)வுக்குள் நுழைஞ்சோம். பலதரப்பட்டக் கடைகள். பூ, சங்கு, சோழி, நாட்டுமருந்து, துணிமணி, கைவினைப்பொருட்கள் இப்படி........ வேடிக்கைப் பார்த்துக்கிட்டே போனப்பச் சரவணா என்ற பெயரில் ஒரு உணவகம். பார்க்கக் கொஞ்சம் சுத்தமாவே இருந்துச்சுன்னு நுழைஞ்சுட்டோம். முன் ஜாக்கிரதையா நான் ஒரு தோசை & சக்கரை. முடிச்சுட்டு வெளியே வந்து இன்னும் ஒரு ரெண்டு நிமிஷம் நடந்தா..... கோயில் வாசலில் நிக்கிறோம். பகவதி க்ஷேத்ரமுன்னு எழுதி இருக்கு.

வந்தது வந்துட்டோம் உள்ளே போய்க் கும்பிட்டால் ஆச்சு. கிழக்கு பார்த்த வாசலில் நுழைஞ்சு இடது பக்கம் போனால் நமக்கு இடப்புறம் மூணு இல்லை நாலு மீட்டர் உயரம் வரும் கதவுகள். மூடிக்கிடக்கு. வலப்பக்கம் தலையைத் திருப்பினால், கொஞ்ச தூரத்தில் உள்புறமா ரெண்டு வாசல் கடந்துச் சின்னப் பொண்ணாக் கன்யாகுமாரி நிற்கிறாள். சாமி சந்நிதிக்குப் போனால் குங்குமம், பன்னீர் வச்சுப் பூஜைப்பொருட்கள் விக்கறாங்க. அதையும் வாங்கிக்கிட்டோம். சந்தனக்காப்பில் குமரியம்மன். சாமி தரிசனம் முடிஞ்சு வரிசையாப் போய், கர்ப்பக்கிரகத்தின் முன்னால் நின்ற போத்தியிடம் குங்குமப் பிரசாதம் வாங்கியாச்சு. துளிச் சந்தனத்தை இலையில் வச்சுப் பூஜைப்பொருட்கள் கொடுத்த ஆட்களுக்கு மட்டும் தர்றாங்க. இதென்னடா.... கோபாலுக்குக் கொடுக்கலைன்னு கேட்டேன். அங்கே கர்ப்பக்கிரகம் முன்பு ரெண்டுபெஞ்சு ஒட்டுனாப்போல இருக்கு. அதுலே இடப்பக்கம் இருந்ததுலே,(ஒரு பெஞ்சைக் காமிச்சு) அந்தப் பொருட்களை வைக்கணுமாம். இவர் வலப்பக்கம் வச்சுட்டாராம்.
அதனாலே என்ன? ஒரு பெஞ்சுலே வச்சாரா இல்லையான்னு கேட்டேன். லேசான முறைப்போடு சந்தனம் கிடைச்சது. உள்ப்பிரகாரம் வலம் வந்தோம். மக்கள், கையில் இருக்கும் எக்ஸ்ட்ரா குங்குமத்தால் கர்ப்பக்கிரகத்தின் வெளிச்சுவர் முழுக்க அபிஷேகம் பண்ணிவச்சுருக்காங்க.

நம்மூர்க் கோவில்களில் எத்தனை இடத்தில் 'கோவில் பிரசாதங்களைச் சுவற்றில் தடவவேண்டாம். ஆலயத்தைத் தூய்மைப் பேணவும்'ன்னு அறிவிப்புப் பலகை வச்சாலும், அது மக்கள்ஸ் கண்ணுலே பட்டாலும் அதனால் ஒரு பயனும் இல்லை. பேசாம, சாமி முன்னாலே இருக்கும் பெஞ்சில் ஒரு கிண்ணத்தில் குங்குமம் விபூதி வச்சுட்டால் வேணுங்கறவங்க ஒரு துளி எடுத்துப்பாங்க இல்லையா? ( ஃபிஜித் தீவில் நம்ம கோவில்களில் இந்த மாதிரி இருக்கு. தீபாராதனைத் தட்டுகூட ஒவ்வொருவருக்கா நீட்டப்படாது. குருக்கள் கற்பூராரத்தித் தட்டை சாமிக்குக் காமிச்சுட்டு அப்படியே மக்கள் பக்கம் திரும்பி உயர்த்திக் காமிப்பார். எல்லோரும் இருந்த இடத்தில் இருந்தே கை உயர்த்தி மானசீகமா தொட்டுக் கண்ணில் ஒத்திக்கறதுதான்.) இப்படி இருந்தாத் தட்டு வருமானம் போச்சேன்னு மனம் உடைஞ்சுறாதா? ஞாயம்தான். பேசாம பக்கத்துலே ஒரு தட்டை வச்சுட்டா ஆச்சு. அதுலே கொஞ்சம் காசையும் போட்டுவைக்கணும். அப்பத்தான் மக்கள்ஸ்க்கு அதுலே காசு(ம்) போடணுமுன்னு தெரியும்:-)))))


சின்னக்கோவில்தான். இருட்டுலே சரியாப் பார்க்க முடியாது. பகல்வெளிச்சத்தில் பார்த்துக்கலாமுன்னு சின்னதா ஒரு நாலடி இருந்த வாசலில் குனிஞ்சு நுழைஞ்சு வெளிப்பிரகாரம் வந்தோம். அப்போ அங்கே எதிரில் இருந்த ரெண்டுபேர், 'என்ன வெளியே போறீங்க? அர்த்தஜாமப்பூஜை நடக்கப்போகுது உள்ளே'ன்னு சொல்றதுக்கும் கணகணன்னு பூஜை மணி ஒலிக்கவும் சரியா இருந்துச்சு. அச்சச்சோ....சுத்திக்கிட்டு உள்ளே போகணுமா என்னன்னு வந்த வழியிலே மீண்டும் குனிஞ்சு உள்ளே போயிட்டோம். சரியா சாமிக்கு முன்னாலே கம்பிப்பக்கம் ரெண்டாளுக்கும் இடம் ஏதோ ஒதுக்கிவச்ச மாதிரி காத்துருக்கு! மற்ற கூட்டமெல்லாம் சாமிக்கு நேரா இருக்கும் மண்டபத்தில். தீபாராதனையை கண்ணுநட்டுப் பார்த்தேன். தீபஒளியில் மூக்குத்தி அப்படியே மின்னித் திளங்குது!!!!! ஆஹா............ பகவதீ..... இதுக்குத்தான் நாளைக்கு வரலாமுன்னு நினைச்சுக் கிடந்தவங்களை இன்னிக்கே கூப்ட்டியா? உடம்பு கொஞ்சம் சிலிர்த்துப் போச்சு........ வெளியே வரும்போது பேசவே நா எழும்பலை.

கோவில் மண்டபத்தில் இருந்து இடதுகைப் பக்கம் பிரியும் தெரு கொஞ்சம் உசரமா இருக்குன்னு ஏறிப்போக நாலைஞ்சு படிகள். அதுவழியாப் போகலாமுன்னு நினைச்சுப் படியேறினோம். படிகள் முடியும் இடத்தில் சங்கு, சோழிகளால் செஞ்சச் சின்னச் சின்னப் பொருட்களை ஒரு அட்டைப்பெட்டியில் அடுக்கி வச்சு ஒருத்தர் வித்துக்கிட்டு இருந்தார். அவரைக்கடந்து நாங்க போயிட்டோம். ஒரு நிமிச நடைக்குப்பின்னர்தான்....
இந்தத் தெரு எங்கேபோய்ச் சேருமுன்னு தெரியாம இருட்டுலே போகணுமான்னு ஞானோதயம் ஏற்பட்டுத் திரும்பி வந்தவழியே வந்தப்பப் பேச்சு, 'நிறைய மக்கள் மலையாளம் பேசறாங்க. போத்திகள் உள்ளக் கேரள பாணிக் கோயில் வேற. எப்படி இது தமிழ்நாட்டுலே?'ன்னு போனப்ப.... அம்பத்தாறுலே இது மெட்ராஸ் கவர்மெண்டுலே சேர்ந்துருச்சுன்னு ஒரு குரல் வருது. சரியா அப்பப் படிக்கட்டுக்கிட்ட வந்துருக்கோம். குரல்வந்த திக்கை நோக்கினால் சங்கு பொம்மை விக்கறவர். சரித்திரக்குறிப்புச் சொல்றாரேன்னு அங்கே நின்னு கொஞ்சம் பேச்சுக் கொடுத்தோம். சுவாரசியமான நபர். பேச்சு மும்முரத்தில் நாங்களும் அந்தப் படிக்கட்டிலே உக்கார்ந்தாச்சு.

சிவகாமிநாதனுடன் கோபால்

திருவிதாங்கூர், கொச்சி, சமஸ்தானங்கள் ஒன்னாச் சேர்ந்து 'கேரளா'ன்னு புதுசா ஒரு ஸ்டேட் உதயமானதும் இதே ஆயிரத்துத் தொளாயிரத்து 4 அம்பத்தியாறுலேதான். இதைத்தான் 'கேரளாப் பிறவி'ன்னு வருசாவருசம் கொண்டாடுறாங்க. நிறையப்பேர் தமிழ்ப் பேசும் மக்களா இருந்த காரணத்தினால் கன்யாகுமரி தமிழ்நாட்டோடு சேர்ந்ததும் அப்போதான்.


பெயர் சிவகாமிநாதன். பிள்ளைகள் எல்லாம் பெருசாகி இப்ப அவுங்கவுங்க பொழைப்பு நடக்குது. இவர்தான் கைகால் செயலா உள்ள அளவும் வேலை செய்யணுமுன்னுச் சின்ன வியாபாரமாப் பொம்மைகளை வாங்கிவித்துக்கிட்டு இருக்கார். 'எனக்கும் மனைவிக்கும் இதுலே கிடைப்பதே போதும். ரொம்பவும் எளிய வாழ்க்கை. சின்ன வயசுலே குடும்பத்தைக் காப்பாத்தவும் புள்ளைங்களை வளர்த்துப் படிக்கவைக்கவும் கஷ்டப்பட்டேன். அதுக்காகப் பிள்ளைகள் கிட்டே இருந்து இப்போக் காசுபணம் எதிர்பார்க்கக்கூடாது. பெத்தவங்க கடமை, அவுங்களை வளர்த்துவிடணும். நாமாதானே பெத்தோமு'ன்னார். சொன்னது ரொம்பச் சரின்னு ஆமோதிச்சேன். வாழ்க்கைப் பாடங்கள் எங்கெருந்தெல்லாம் கிடைக்குது பாருங்க!

பழைய கதைகளைச் சொல்ல ஆரம்பிச்சா யாராலே நிறுத்தமுடியுது? 'நான் பொறந்த கதையைச் சொல்லவா? வளர்ந்த கதையைச் சொல்லவா? இப்போ வாழ்ந்துக்கிட்டு இருக்கும் கதையைச் சொல்லவா? 'ன்னு விக்ரமாதித்தன் கதையில் வரும் பதுமைகள் கேக்குது பாருங்க அதேதான் ஒவ்வொரு மனுச மனசுக்குள்ளும்...... நேரமாகுது, போகலாமுன்னு புறப்பட்டோம். ஒரு இடத்துலே ரெண்டு கணினி இருப்பதைப் பார்த்ததும் நாம் திரும்பிப்போகவேண்டிய ரயில் ரிஸர்வேஷன் கன்ஃபர்ம் ஆச்சான்னு பார்க்கலாமுன்னு கடைக்குள்ளே போனோம். கோயில் மண்டபத்தூண்கள் தெரியுது. கடையா மாத்தியிருக்காங்க. அப்படீன்னா..... இவ்வளோ தூரம்வரை நீண்ட மண்டபங்களாவா அந்தக் காலத்துலே .... அடடா......

கடையை நிர்வகிக்கும் பெண் உள்ளூர் சுற்றுலாவுக்குப் போகணுமுன்னாச் சொல்லுங்கன்னாங்க. போகணும். ரெண்டு இல்லை மூணு நாளுக்கு கார் ஒன்னு வேணுமுன்னு சொன்னதும், அப்படி ஏற்பாடு ஒன்னும் இல்லைங்க. கேட்டுச் சொல்றேன்னு செல் நம்பரை குறிச்சுவச்சுக்கிட்டாங்க. வலையில் ரயில்வே பக்கம் போனா...நமக்கு ரெயில் டிக்கெட் இன்னும் கன்ஃபர்ம் ஆச்சா இல்லையான்னு ஒன்னுமே சொல்லமாட்டேங்குது. என்னடா இது ஒரு புது சோதனை? எத்தனை நாளாச்சு பதிவு செஞ்சுன்னு புலம்பிக்கிட்டே அறைக்கு வந்து கட்டையைக் கிடத்துனோம்.

நல்ல தூக்கம்....... திடீர்னு தூக்கிப்போட்டாப்புலெப் பாட்டுச் சத்தம் கேக்குது. கண்ணைத் திறக்கவே முடியலை........பயங்கர இரைச்சலாக் காதுக்குள் வந்து அறையும் பாட்டு.

தொடரும்................:-)

29 comments:

said...

டீச்சர் இந்த பயணப் பாடத்திலே பெயில் தான், நான் இந்த பாகத்தை தவிர எதையும் படிக்கவே இல்லை

said...

அந்த பேக்கரி விளம்பரம் உள்ள சுவருக்கு வெளி பூச்சு செய்ய காசு இல்லை போல் இருக்கு! வெய்யில் காலத்தில் எப்படி தான் உள்ளே இருக்கிறார்களோ?
கன்யாக்குமரி போக வேண்டிய லிஸ்டில் இருக்கு ஆனா நேரம் தான் சரியாக அமைகிறது.மாலை வேளையில் எடுத்த படம் அருமை.

said...

வடுவூர்குமார் க்கு மட்டும் இந்த கட்டிடவிசயமே கண்ணுல படுது பாருங்க.. நார்த்ல எக்கச்சக்கமா இது மாதிரி பார்க்கலாம் வெளிப்பூச்சே கிடையாது. வீட்டு முன்பக்கம் மட்டும் பூசி இருப்பாங்க.. :)

நீங்க பகவதி தரிசனம் பாத்த காட்சி படிச்சு எனக்கே புல்லரிச்சுப்போச்சு..
லக்கி தான் . ஆனா எனக்கு படிச்சு முடிச்சதும் காசியில் மறைச்சாப்பல எங்கள உக்காரவச்சது ஏனோன்னு மனசுக்குள்ள சாமிய ஒரு கேள்வி கேட்டுகிட்டேன்..( இப்படி கேள்வி கேக்கறதாலயா இருக்குமோ)

said...

அன்பு துளசி, ஜன்னல் காட்சி அமிர்தம்.
கன்னியகுமாரி கூப்பிட்டு அல்லவோ தடிசனம் கொடுத்திருக்க.
ஒவ்வொரு பயணத்திலியும் ஒவ்வொருத்தர் குரு மாதிரி வந்து கருத்து சொல்றாங்க உங்களுக்கு..
சரவணா தோசை ஒத்துக்கிட்டதா.

படங்கள் எல்லாம் அருமை. கேட்டுக் கேட்டு உங்களுக்கே அலுத்து இருக்கும்.:)

said...

டீச்சர்,நானும் கொஞ்சம் பிஸியா இருக்கதால ரீடரில் படிச்சிட்டு ஒரே ஓட்டமா ஓடிப் போய்டுறேன்.. (நல்லவேளை பெயில் லிஸ்ட்டில் வடுவூர் குமார் உள்ளிட்ட நிறைய ஆளுங்க இருக்காங்க..சேர்ந்துக்கலாம்.. ;-D)

அப்புறம் அஞ்சு கிராமம் பக்கத்துல ஒரு 7 கி.மீ தள்ளி தான் தங்கமணி ஊரு இருக்கு.. அஞ்சு கிராமத்தில் இருந்து டவுன் பஸ்ஸில் போய்.. அதுக்கு அப்புறம் 2 கி.மீ நடக்கனும்.. ;-)))
நம்ம ஊரில் இருந்து அங்க போய் சேருவதற்குள் போதும்.. போதும்ன்னு ஆயிடும்.. :)

said...

செங்கமங்கலான நேரத்தில் திருவள்ளூவரும், விவேகானந்தரும் அருமையாக தெரிகிறார்கள்.

//அதுலே கொஞ்சம் காசையும் போட்டுவைக்கணும். அப்பத்தான் மக்கள்ஸ்க்கு அதுலே காசு(ம்) போடணுமுன்னு தெரியும்:-))))) //

ஐடியால்லாம் கலக்குறீங்களே.. :))

said...

ஒரு நாள் பயணம் கூட எனக்கு சலிப்பை தருது..ஆனா நீங்க பாதி தமிழ் நாட்டையையே சுத்திட்டீங்க...டீச்சர்னா டீச்சர் தான்.

said...

\\ வாழ்க்கைப் பாடங்கள் எங்கெருந்தெல்லாம் கிடைக்குது பாருங்க!
\\

இந்த மாதிரி பயணங்களில் பெரிய பரிசே இந்த மாதிரி பாடங்கள் தான் ;)

said...

தமிழ்நாட்டிலேயே மிகவும் அழகான ஊரான நாகர்கோவில் உள்ளே போக வில்லையா அதுவும், வடிவீஸ்வரம் அக்ரஹாரம், ஒழுகினசேரி கிராமம், நாகராஜா கோயில் திடல் இவை எல்லாம், ஏழு கண்டங்களிலும் காண முடியாது அழகு.
.

இவை முன்பு பக்கிங்காம் அரண்மனை, அல்லது வாஷிங்க்டன் அல்லது மெல்போன் எல்லாம் கால் தூசி.

said...

// சின்ன வயசுலே குடும்பத்தைக் காப்பாத்தவும் புள்ளைங்களை வளர்த்துப் படிக்கவைக்கவும் கஷ்டப்பட்டேன். அதுக்காகப் பிள்ளைகள் கிட்டே இருந்து இப்போக் காசுபணம் எதிர்பார்க்கக்கூடாது. பெத்தவங்க கடமை, அவுங்களை வளர்த்துவிடணும். நாமாதானே பெத்தோமு'ன்னார். சொன்னது ரொம்பச் சரின்னு ஆமோதிச்சேன். வாழ்க்கைப் பாடங்கள் எங்கெருந்தெல்லாம் கிடைக்குது பாருங்க!//


இந்த‌ கால‌த்து குழ‌ந்தைக‌ கிட்டே இன்னும் ஜாக்கிர‌தையா இருக்க‌ணும்.
எதையாவது எதிர்பார்த்து ஏமாந்து போனால் வாழ்க்கையில் வெறுப்பு தான் தோன்றும்.
அதனாலே தான் கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதேன்னு கீதைலே கிருஷ்ணன்
சொன்னாப்போல.

தன் ஓய்வூதியத்தை (retirement benefits )அத்தனையும் தன் பிள்ளைகளிடம் கொடுத்துவிட்டு, அன்றாட ஒரு வாய்
சோற்றுக்கு பரிதவிக்கும் பெற்றோர்களை என்ன சொல்ல ? நாம தானே பெத்தோம்னு சொல்லிபுட்டு,
கையிலே இருந்த காசெல்லாம் கொடுத்துவிட்டு, பிறகு பரிதவிக்கும் வயதான் பெற்றோர்கள் பலர்
இன்று முதியோர் இல்லங்களில் இருக்கிறார்கள்.

என்ன பாடமோ ?

மீனாட்சி பாட்டி.
ஸ்டாம்ஃபோர்டு, கனெக்டிகெட்.

said...

//தமிழ் பிரியன் said...
நம்ம ஊரில் இருந்து அங்க போய் சேருவதற்குள் போதும்.. போதும்ன்னு ஆயிடும்.. :)//

ஏதோ அங்க இருந்தவங்களாச்சும் அண்ணியாக சம்மதிச்சாங்களேன்னு நினைச்சு சந்தோஷப்பட்டுகோங்கண்ணே இல்லாங்காட்ட்டி நீங்க எல்லைகடந்து கடல் கடந்துதான் போய் எங்கயாச்சும் புடிச்சுட்டு வரணும் !

ஹய்யோ ஹய்யோ!
மாமியார் வூடாம் அதான் நக்கலு பண்ணிட்டு போயிருக்காரு!

said...

//ஆயிரமுன்னு சொன்ன கோபாலை..... டாலர்லே பாருங்க. சின்ன எண்ணிக்கையா இருக்குமுன்னு ஒரே போடாப் போட்டேன். //


:))

அதுக்கு பிறகு கோபால் சார் “டோண்ட் டாக் பாலோ மீ” ஸ்டைல்லத்தான் வந்திருப்பார்ங்கன்னு நாங்களே நினைச்சுக்கிட்டோம் டீச்சர் :)))

said...

/கோபிநாத் said...
\\ வாழ்க்கைப் பாடங்கள் எங்கெருந்தெல்லாம் கிடைக்குது பாருங்க!
\\

இந்த மாதிரி பயணங்களில் பெரிய பரிசே இந்த மாதிரி பாடங்கள் தான் ;)

5/08/2009 9:47 PM
//

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்! :))

said...

//பார்க்கிங்கிலே காரைவிட்டு இறங்குனா...ஹைய்யோ..... கண்ணெதிரில் திருவள்ளுவரும் விவேகானந்தர் நினைவு மண்டபமும். //

படங்கள் அருமை டீச்சர்..
புகைப்பட கலையும் சேர்த்து உங்ககிட்ட பாடம் படிக்கணும்..

said...

டீச்சர்

அன்னையர் தின வாழ்த்துகள்

said...

வாங்க நசரேயன்.

நிதானமாப் படிச்சுட்டு வாங்க. நம்ம மக்கள்ஸ் நிறைய அரியர்ஸ் வச்சுருக்காங்க:-))))

said...

வாங்க குமார்.

இந்தமாதிரி வெளிப்பூச்சு செய்யாத வீடுகள் கேரளக் கிராமங்களில் அதிகம் இருக்கு. காசு வந்தாச் செய்யலாமுன்னு ஒரு காத்திருப்புதான்.

ஆனா..... இங்கே நியூஸி, ஆஸ்தராலியாவில் செங்கல் வெளியே தெரிவது ஃபேஷன். அதுக்குன்னு தனியா எக்ஸ்டீரியர் ப்ரிக்ஸ் கிடைக்குது.

said...

வாங்க கயலு.

எல்லாம் தூண்டில்காரனுக்கு மிதப்பு மேலே கண்ணு வகைதான்:-))))

கோபாலுக்கும் எலெக்ட்ரிக் ஒயர்கள் கனெக்ஷன் இதுலே எல்லாம் கண்ணு தானாவே போகும்.

said...

வாங்க வல்லி.

ரெண்டுபக்க நீளச் சுவத்துக்கு இடையில் அறையின் முழு அகலத்துக்கும் ஜன்னல்தான் இருக்கு. அதனால் மறைக்காத வ்யூ. கம்பிகளும் கிடையாது.

said...

வாங்க தமிழ் பிரியன்.

மாமியார் வீடு மருமகனுக்குச் சுகமான இடமாச்சே:-))) போறதுக்குச் சலிச்சுக்கிட்டா எப்படி?

'பார்யா வீட்டில் பரம சுகம்' படம் கண்டோ?

said...

வாங்க மதுரையம்பதி.

நிறைய ஐடியாஸ் வச்சுருக்கேன். பேசாம நம்ம மத வழிபாடுகளை எல்லாம் கொஞ்சம் மாற்றி அமைக்கலாமுன்னு யோசனை.

புது 'கல்ட்' ஆரம்பிச்சுறவா?

said...

வாங்க கோபி.

சரியாச் சொன்னீங்க.

பாடம், பாடமே!

said...

வாங்க குப்பன் யாஹூ.

நாலு நாள் கேம்ப். போகாம இருந்துருப்பேனா?

விஸ்தாரமான மேல்விவரங்கள் பதிவுகளில் வரும்:-)

said...

வாங்க மீனாட்சி அக்கா.

'நமக்குப்பிறகு'தான் பசங்களுக்குன்னு கண்டிப்பா முடிவு எடுக்கணும்.

இங்கேதான் பல பெற்றோர்கள் தப்பு செஞ்சுடறாங்க.

பிள்ளைகளுக்குக் கல்வி அறிவு கிடைக்க உதவுவதோடு பெற்றோர் கடமை முடிஞ்சுருது. அவனவன் தன் புத்தியை வச்சுப் பிழைப்பைத் தேடிக்கணும்.

said...

வாங்க ஆயில்யன்.

'ஜஸ்ட் ஃபாலோ மீ' இல்லேன்னா 35 வருசம் தாக்கு பிடிச்சிருக்க முடியுமா?

இது ரெண்டு பேருக்கும்தான் வெவ்வேறு சந்தர்ப்பங்களில்:-)))))

said...

வாங்க தீப்பெட்டி.


நானே புதுக் கெமெராவுக்கு அடிபோட்டுக்கிட்டு இருக்கேன். இதுலே நீங்க வேற:-))))

உங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்து(க்)கள். தாயுமானவர்கள் நிறையப்பேர் இருக்காங்க.

said...

வாங்க சிந்து.

பயணிக்கப் பயமா? சரியாப் போச்சு போங்க!!!

said...

கொசுவத்திய பத்த வச்சு என்னய ஊருக்கு போக வச்சிட்டீங்களே டீச்சர். போயிட்டுவந்து பாத்தா-நான் நினெச்ச எல்லாத்தயும் பத்தி எழுதியிருக்கீங்க.வள்ளியூர் கரும்புச்சாறு கடைகளை தவிர:-(. நீங்க முப்பந்தல் வழியா போயிருந்தா வாசல்ல புதுசா வச்சிருக்குற பிரம்மாண்டமான அம்மன் சிலய பாத்திருக்கலாம்.கொஞ்ச வருசம் முந்தி கன்னியாகுமரிக்கு முந்தி வாரம் தோறும் போவோம் .கொசு வத்தி புகை கண்ணு கலங்க வைக்குது.கோபால் அண்ணா ஏன் இப்பிடி முறைக்கிறார். கடைய வாங்கி கேட்டுட்டீங்களா:-)))

said...

வாங்க ஐம்கூல்.

அம்மன் சிலையா? அடடா......

மதுரை அழகர் கோயில் சாலையில் ஒரு அம்மன் பார்த்திருக்கேன். ரோஸ் கலர் அடிச்சு வச்சுருக்காங்க.

வெயில் தாங்காமத்தான் கோபால் இப்படி ஆயிட்டார்(-: