Thursday, February 24, 2005

உதவிக் கரம் நீட்டுங்க ப்ளீஸ்!!!

காசு வேணாங்க!!!! இது ஒரு வேண்டுகோள்!!! உங்களுக்கெல்லாம்....

நம்ம தமிழ்ச் சங்கத்துலே சின்னப்புள்ளைங்களுக்காக ஒரு தமிழ்ப் பள்ளி ஆரம்பிச்சு வருசம் 10 ஆச்சுது.


எல்லா வெளிநாடுகளிலும் இருக்கற வழக்கப்படி வாரம் ஒரு நாள்( ஞாயிற்றுக்கிழமை மத்தியானம் உள்ளூர்
பாடசாலையில் ஒரு வகுப்பை வாடகைக்கு எடுத்திருக்கோம்!) பள்ளிக்கூடம் நடக்குது.

இப்ப தேவை என்னன்னா, பிள்ளைங்களுக்காக கதைப் புஸ்தகங்கள் வாங்கக் கொஞ்சம் காசு வச்சிருக்கோம்.
என்னென்ன புத்தகங்கள், எங்கெங்கே வாங்கலாம்ன்னு ஒரு தெளிவும் இல்லே!

தமிழ் மொழியிலே பல, இங்கிலீஷ்லே சில( நம்ம கதைங்களை ஆங்கிலத்துலே சொல்றது)வேணும்!

சுண்டைக்காய் கால்பணம், சுமை கூலி முக்காப் பணமுன்னு சொல்றதுபோல தபால் செலவு புத்தகங்களின்
மதிப்பைப் போல பலமடங்கு ஆகிடுது!

நல்ல தரமான, விலையிலும் சகாயமான சிறுவர்/சிறுமிக்கான புத்தகங்கள் கிடைக்கிற விவரம் தருவீங்களா?
நம்ம பத்ரியின்,'கிழக்குப் பதிப்பகம்' எதாவது இந்தமாதிரி வெளியிட்டிருக்காங்களா?

பத்ரி மற்றும் நண்பர்கள் கொஞ்சம் சொல்லுங்களேன் ப்ளீஸ்!!!

5 comments:

said...

அன்புள்ள துளசி,
வணக்கம்.
குழந்தைகளுக்குக் கணினி மூலம் தமிழ் கற்பிப்பதற்கு பல குறுந்தட்டுக்களும், இணையதளங்களும் இருக்கின்றன.உயிர்ப்பூட்டப்பட்டவை (animated) என்பதால் நவீன உலகக் குழந்தைகளுக்கு அவை நூல்களை விட சுவையானதாக இருக்கும். குறுந்தகடுகளாக இருப்பதால் அஞ்சல் வழி பெறவும், ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்லவும் எளிதாக இருக்கும். விலையும் கூட நூல்களை விட குறைவாகத்தான் இருக்கிறது என நினைக்கிறேன். ஒரு குறுந்தகடு சுமார் 100 (இந்திய) ரூபாய்கள் இருக்கும்.

கீழ்க்கண்ட முகவரிகளுக்கு சென்று பாருங்கள்:

பஞ்சதந்திரம் போன்ற கதைகளுக்கும், மழலைப்பாடல்களுக்கும் காண்க:
http://tamilsoftware.biz/itproducts/ptitle.asp?cat=Kids
தமிழ் கற்க:
http://tamilsoftware.biz/itproducts/ptitle.asp?cat=Tamil%20Tutor
பொதுவான தகவல்களுக்கு
http://tamilsoftware.biz/

தமிழ் கற்க மிகச் சிறந்த இணைய தளம் ஒன்று பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. எழுத்துக்களை எழுதக் கற்கும் அரிச்சுவடி நிலையிலிருந்து அட்வான்ஸ்ட் நிலைவரை கற்கலாம்.திரைப்படப் பாடல்களைக் கூட கற்பிக்க பயன்படுத்துவதால் குழந்தைகள் இங்கு தமிழ் கற்பதை விரும்பும்.

அதன் இணையதள முகவரி:
http://ccat.sas.upenn.edu/plc/tamilweb/tamil.html

ஆங்கிலம் வழி தமிழ் கற்க, அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த இரண்டாம் தலைமுறைத் தமிழரான செந்தில்குமார் சேரன் என்பவர் பாடங்களை PDF கோப்புக்களாக இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறார். பயிற்சிக்குக் கதைகளையும் பயன்படுத்துகிறார். அவற்றை இங்கே காணலாம்:
http://www.learntamil.com/

முத்துநெடுமாறனின் தந்தையும் மலேசியாவின் மூத்த கவிஞர்களில் ஒருவருமான முரசு நெடுமாறன், தொலைக்காட்சி போல வீடியோ காட்சிகள் மூலம் பேச்சுத்தமிழ் கற்பிக்க ஒளிக் குறு வட்டுக்கள் (VCD) வெளியிட்டிருக்கிறார். அவரையும் தொடர்பு கொள்ளலாம்.

தமிழ்நாட்டிலிருந்து ஏதேனும் குறுந்தகடுகள் தேவைப்பட்டால் எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள். வாங்கி அனுப்பி வைக்கிறேன்.
அன்புடன்,
மாலன்

said...

அன்புள்ள மாலன்,

விவரமான கடிதம் அனுப்பியதற்கு நன்றி. நீங்கள் குறிப்பிட்டிருந்த விவரங்களை, இங்கே நம் தமிழ்ப் பள்ளியின்
பொறுப்பாளருக்கு அனுப்பியிருக்கின்றேன்.

தகவலுக்கு மிகவும் நன்றி.

என்றும் அன்புடன்,
துளசி.

said...

துளசி,

எங்க ஊரில் தமிழ்ப் பள்ளி நடத்தும் ஒரு நண்பரிடம் கேட்டேன். அவர் இந்த இணைய தளங்களை அனுப்பினார்.

http://www.tamilnool.com
http://www.4to40.com/discoverindia/books.asp?searchwords=Tamil&counter=10
http://www.4to40.com/discoverindia/books.asp?look=Tamil
http://www.worldlanguage.com/Products/43782.htm

மேலும் நீங்க சிங்கப்பூரில் இருப்பவர்களிடம் கேடுப் பாருங்கள். சிங்கப்பூர் பள்ளிகளில் தமிழ் பாட மொழியாக இருப்பதால், கட்டாயம் தமிழ்க் கதை புத்தகங்கள் அங்கே கிடைக்கும்.

தாரா.

said...

Dear Tulsi,
I can find out and get information and may be buy books and send. But, I will need more details like the
1) type of books
2) age group
3) number of books
and any possible info. Please kindly send a detailed mail to me. I will be willing to do my bit.
love, J

said...

அன்புள்ள செளந்தர்,

தகவலுக்கு மிகவும் நன்றி. பொள்ளாச்சி நசன் அவர்களை மின்னஞ்சலில் தொடர்பு கொள்வேன்.

அன்பு ஜெயந்தி,

இப்போது நடக்கும் தமிழ் வகுப்புகளில் சிங்கப்பூர் பாடத்திட்டமும், புத்தகங்களுமே பயன்படுத்துகின்றோம்.
சிடி கவுன்சிலில் 'நாமெல்லாம் எத்னிக் க்ரூப்' ஆனதால் தமிழ்ப் பள்ளிக்கென்று ஒரு தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.
பிள்ளைகளுக்குக் கதைப் புத்தகங்கள் வாங்கலாம் என்றதால்தான் உங்கள் அனைவரிடமும் உதவி கேட்டேன்.
பிள்ளைகளின் வயது 5 முதல் 10 வரைதான்!

ஏற்கெனவே கோபால் கிங்கையிலிருந்து பல கதைப் புத்தகங்கள் போன முறை வாங்கிவந்திருந்தார்.
நேரில் வாங்குவதால் தபால் செலவு இல்லாமல் இதுவரை பலமுறை வாங்கிவந்துள்ளார்.
இப்போதும் கொஞ்சம் நர்ஸரி ரைம்( தமிழ்)புத்தகங்களுக்கும், சி.டி.க்களுக்கும் ஏற்பாடு செய்துள்ளார்கள்.
அவை சென்னையிலிருந்து வருகின்றன.

தமிழாசிரியரிடம் விவரம் கேட்டுவிட்டு மடல் எழுதுவேன்.

என்றும் அன்புடன்,
துளசி.