தம்பிங்களே, தங்கைகளே!!
எல்லோரும் எப்படி இருக்கீங்க? வீக் எண்ட் ஆச்சே, எல்லோரும் 'குஜாலா'த்தான் இருப்பீங்கன்னு
நம்பிக்கிட்டு இருக்கேன்.
இங்கே இந்த அக்கா வீடு மாறிக்கிட்டு இருக்கேன். ஒரே வீட்டுலே பதினேழு வருஷம் இருந்து, வேர் விட்டு
இருக்கேன். அதுவும் சல்லி வேர் இல்லை, ஆணி வேர்!!!!
அதைப் பிடுங்கி வேற இடத்துலே வைக்கறது எவ்வளவு கஷ்டம்ன்னு இப்பத்தான் புரியுது! நல்ல வேளை
அந்த வீடு இங்கிருந்து 2 கிலோ மீட்டர் தூரம்தான்!
நாங்க பூனாவிலே இருக்கறப்ப 6 மாசத்துக்கு ஒருதடவை வீடு மாறிடுவோம்! ச்சும்மா ஒரு 2 மணி நேரம்
போதும் மூட்டையைக் கட்ட! அப்படிப்பட்ட வீடு மாத்தற 'எக்ஸ்பெர்ட்'இப்ப பேய் முழி முழிச்சுக்கிட்டு,
எதை எடுக்கறது, எதை விடுறதுன்னு தெரியாம ராவணன் போல 'கலங்கி' நிக்கறேன்!
'ரூத்லெஸ்'ஸாக இரு!' இது மறுபாதியின் கட்டளை! ஐய்யோ, செத்தேன்!
இந்த வேலை ஒரு மாசமாவே மெல்ல நடந்துக்கிட்டு இருந்தது. ஆனா எல்லாத்துக்கும் ஒரு நேரம் வந்துருமில்லே.
இப்ப, இன்னைக்குத்தான் முடிச்சே ஆகணும்ன்ற நிலமை!
'இதெல்லாம் ச்சும்மா ஒரு பேச்சுக்குத்தான். அப்பத்தானே நீ ஜரூரா வேலையை ஆரம்பிப்பே' இப்படியெல்லாம்
சொல்லி என் மனசாட்சி அது ஓரமா உக்காந்து உசுப்பிவிட்டுகிட்டு இருக்கு!( சரி, புலம்பாதேன்னு தலையிலே
குட்டு வைக்குது பாருங்க! யாரா? சரியாப் போச்சு, மனசாட்சிதான்!)
அங்கே போய் ஒரு விதமா 'செட்டில் 'ஆன கையோடு வந்துடறேன். அதுவரை ( என்ன, ஒரு வாரம் ஆகுமா?)
லீவு தரும்படி தாழ்மையுடன்(!) கேட்டுக் கொ(ல்)ள்கின்றேன்!
Sunday, February 13, 2005
லீவு லெட்டர்!!!!
Posted by துளசி கோபால் at 2/13/2005 10:40:00 AM
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
அந்த செடி, மரங்களையும் எடுத்துட்டு போறீங்கதானே...
வாழ்த்துக்கள். புது வீட்டுக்குப் போன உடனே இன்னும் நிறைய எழுதுங்க...
துளசி இதையும் பாருங்கோ.
புதுமனை புகும் அக்காவிற்கு வாழ்த்துக்கள். ட்ரீட் எங்கேங்க்கா..?
Post a Comment