பத்தினிப்பெண்கள் அதிகம் உள்ள நாடு கனடான்னு ஒருத்தர் போன மாசம் மங்கையர் மலரில் திருவாய்
மலர்ந்திருக்கிறார்.(இப்பத்தான் படிச்சேன்)
எப்படிக் கண்டுபிடிச்சாராம்? வாநிலை அறிக்கை வாசிக்கும் பெண்மணி, 'இந்த நாளில், இந்த நேரத்தில்
மழை பெய்யும்'ன்னா பெஞ்சிருதாம்! ( என்ன சொல்ல வராங்க?)
இந்தமாதிரி அபத்தங்களையெல்லாம் போடற பத்திரிக்கை(அ)தர்மத்தைச் சொல்லணும். தலையிலே அடிச்சுக்க
ரெண்டு கைகள் பத்தாது! இன்னும் ரெண்டு மூணு இருந்தாத் தேவலை!!
இதைப் படிச்சவுடனே எரிச்சலா வந்தது. அதான் உங்ககிட்டே சொல்லிட்டேன். இனி உங்க பாடு!
Friday, February 04, 2005
இன்னும் சில கைகள் வேணுமே!!
Posted by துளசி கோபால் at 2/04/2005 01:47:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
யக்கோவ்!
மங்கையர் மலர் படிக்கல. யார் சொன்ன மங்கையர் மலர்ல இதைப் பத்தி? இந்த குப்பை மேட்டரெல்லாம் அது போடுதாக்கும். கட்டாயமா படிக்கனுமா?
விஜய்,
ஸ்ரீகாந்த் சொன்னதுன்னு பேரும் ஃபோட்டோவும் இருக்கு! இது மட்டுமா இன்னும் என்னென்னவோ
சொல்லியிருக்காங்க. மங்கையர் மலர் முழுசும் எப்பவும் ஒரே வெளிநாட்டுக்கு விசிட் பண்ண அப்பா அம்மாங்க
கதைதான்! இதைப் படிக்கற உள்ளூர் ஜனங்களுக்கு எப்படியாவது பசங்களை படிக்க வச்சு அமெரிக்கா
அனுப்பணுமுன்னு தோணாதா? ( எல்லாம் ஓசியிலே கிடைச்சது தான்)
மனிதன்,
வானிலையை இந்த பத்திரிக்கையிலே 'வாநிலை'ன்னு போட்டிருக்கு. அதை அப்படியே எடுத்துப் போட்டேன்.
கொஞ்சம் அந்த 'பத்தினிப் பெண்களை' ஆகஸ்ட்டிலருந்து, டிசம்பர் வரைக்கும் தமிழ்நாட்டுல இருக்க சொல்லுங்க. நாங்க வேணும்னா, சிஎம்க்கும் மனுப்போட்டு, விசாவுக்கு ஏற்பாடு பண்ணறோம். ஆனா, கண்டிசனை இப்பவே சொல்லிப்புடறேன்.
விசா வாங்கி தருவோம். மழை வரலைனா 'மிசா' மாதிரி உள்ளே தான். ஒகேவா.
அவுங்கெல்லாம் கனடாவுலே இருக்கறதாலே நம்ம மதிகிட்டே சொல்லி,அந்தப் பெண்களை தமிழ்நாட்டுக்கு
அனுப்பிரலாம்.
//விசா வாங்கி தருவோம். மழை வரலைனா 'மிசா' மாதிரி உள்ளே தான். ஒகேவா.// நாஆஅராஆஅயணா...! (நாரதர் சொல்வது மாதிரி உச்ச்சரிக்கவும்:-))
ஆஹா... நானே அப்படிப்பட்ட பெண்கள் எங்கேப்பா இருக்காங்க. இங்க இருக்கிற வரண்ட இடங்களுக்கு கூட்டிட்டுப் போகலாம்னு பார்த்துட்டு இருக்கேன். இங்கே - கனடாதான்.
;)
Post a Comment