Sunday, January 30, 2005

யார், யார், யார், அவர் யாரோ?

பின்னூட்டம் போடறதாலே என்னென்ன பயன் இருக்குன்னு உங்களுக்கெல்லாம் தெரியும்தானே?
ஆனா, இன்னோரு புதுப் பயனும் இப்ப கிடைச்சிருக்கு!


நான் போனவாரம் நம்ம மதியோட பதிவுக்கு ஒரு பின்னூட்டம் போட்டேன். அதைப் படிச்சிட்டு ஒருத்தர்
'ஆஹா.. நீங்க நியூஸிலாந்துலேயா இருக்கீங்க?'ன்னு ஒரு மெயில் போட்டார்.

இணய நண்பர்கள் சந்திப்பு, கலந்துரையாடல்ன்னு பெத்த பேர்களிலே அப்பப்ப ஏதாவது படிக்கும்போது
நமக்கு இதெல்லாம் வாய்க்கலையே மனசு நொந்து போய் இருப்பேன்!

சரி, ஆனது ஆகட்டும். தனிநபர் மகாநாடு நடத்திட்டாப் போச்சுன்னும் மனசைத் தேத்திக்குவேன். இந்த
நிலையில்தான் அந்த 'மெயில்' வந்துச்சு!

உடனே மறுபடி போட்டுட்டேன், நியூஸியிலே அவர் எந்த ஊர்லே இருக்காருன்னு தெரிஞ்சுக்கலேன்னா
தலை வெடிச்சுடதா?

என்ன ஆச்சர்யம்! அவர் நான் இருக்கர அதே ஊர்லேதான் இருக்கறாராம். அடிச் சக்கை! கட்டாயம்
இணைய நண்பர்கள் சந்திப்பு நடத்திப்புடணும்!

அவருக்கு என்னோட தொலைபேசி எண்ணையும் தெரிவிச்சேன். அதுக்கு பதில் போடறார், அவர்கிட்டே
ஏற்கெனவே இந்த நம்பர் இருக்காம். இங்கெ 'மால்'லே சந்திச்ச ஒரு நபர் கொடுத்தாங்களாம்!
(புகழ்பெற்ற ஆளொட நம்பர் எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கறதுலே என்ன ஆச்சரியம்? ச்சும்மா....)

நேற்றைக்கு ஃபோன் செஞ்சிட்டு, வீட்டுக்கு வந்தார். சொந்த ஊர் 'மேட்டூர் அணை'யாம்! இந்த ஊருக்கு
வந்து 4 மாசமாச்சாம்.

தமிழ்மணம், மரத்தடி இங்கெல்லாம் போய் படிக்கறாராம். ஆனா பின்னூட்டம்ன்னு ஒண்ணு போட்டதே இல்லையாம்!

ச்சும்மா இருப்பேனா? பின்னூட்டத்துக்கு என்ன சக்தி, ஏன் பின்னூட்டம் கொடுக்கறது அவசியம், பிடிச்சிருக்கறதைப்
பிடிச்சிருக்குன்னு சொல்ல என் தயங்கணும் என்றெல்லாம் ஒரு லெக்சர் கொடுத்தேன்.( பாவம், மாட்டிக்கிட்டார்!)

ஆனா, இன்னைக்கு ஒரு நியூஸ்! நிஜமாகவே நம்ம வலைப்பதிவாளர்களில் ஒருவர் நியூஸி வராராம்! வேற ஊர்தான்,
இருந்தாலும் இணய நண்பர்கள் மாநாடுக் கனவு நிறைவேற ஒரு ச்சான்ஸ் இருக்குல்லே!

அவர் யாருன்னு மட்டும் கேட்டுறாதீங்க. அவரோட அனுமதி கிடைச்சா அவர் பேரைப் போடறேன். சரியா?

3 comments:

said...

அட! சந்தோஷமான விஷயம் துளசி! ரொம்ப சந்தோஷமா இருக்கு. அவரையும் அப்படியே வலைப்பதிவுகளுக்கு இழுத்துட்டு வந்திருங்களேன்?

மேட்டூர் அணைக் காரருக்கு இங்கயே ஒரு விண்ணப்பம் போட்டுர்ரேன். சாரே நீங்களும் ஒரு வலைப்பதிவு தொடங்கிருங்களேன். ஏதாவது உதவி வேணும்னா கேளுங்க. எழுத விஷயம் இல்லைன்னு மட்டும் சொல்லிடாதீங்க. துளசிக்காவே சொல்லுவாங்க எத்தனை விஷயம் இருக்குன்னு. உதாரணமா, மேட்டூர் அணை பத்திப் பேசலாம் நீங்க. உடன மேட்டூர் அணை ஏரியால வேலை செஞ்ச ஆசாத் ஆண்ணாச்சி துணைக்கு வருவார். சுஜாதா எழுதின கதை பத்திப் பேசுறதுக்கு இகாரஸ் பிரகாஷ், சுரேஷ் கண்ணன்னு கொஞ்சப் பேர் வருவாங்க. உங்க வலைப்பதிவு களை கட்டிரும். என்ன நாஞ்சொல்லுறது?

துளசிக்கா, நான் சொல்லுறது சரிதானே?

பி.கு.: தனிமடல் போடணும் போடணும்னு பார்க்கிறேன் துளசிக்கா. ஆனா, கூடப்பிறந்த இந்தச் சோம்பேறித்தனம் தடுக்குது. கூடின சீக்கிரம் முயற்சி பண்றேன். ;)

அன்புடன்,
மதி

said...

//அவர் யாருன்னு மட்டும் கேட்டுறாதீங்க. அவரோட அனுமதி கிடைச்சா அவர் பேரைப் போடறேன். சரியா?//

:D enakkuth theriyumae :D \:d/

said...

அன்புள்ள மதி,

மேட்டூர் அணைக்காரரே 'கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட ஆளுதான். கொஞ்ச நாளுலே நம்ம ஜோதியிலே
கலந்துருவாருன்னு நினைக்கிறேன்.

முடிஞ்சப்ப தனி மடல் போடுங்க!

என்றும் அன்புடன்,
துளசி.