Thursday, January 27, 2005

ராசாவூட்டுக் கல்யாணம்!!!!!

தம்பிக்குக் கல்யாணம்!!!

இன்னைக்கு நம்ம தம்பி ராஜாவுக்குக் கல்யாணம்.இந்த ரெண்டுவாரமா இதே நினைப்புத்தான்! கல்யாண
வீட்டு 'சாங்கியங்கள்' என்னென்ன நடந்திருக்கும் என்று நினைச்சுப் பாக்கறதுலேகூட ஒரு சுகம் இருக்கு!



கல்யாணப்பொண்ணு வீட்டுலேயும், அவுங்க வீட்டு வழக்கப்படி நலுங்கு, கணபதி பூஜைன்னு பலதும்
நடந்துக்கிட்டு இருக்கும். எல்லாம் ஆச்சு. இன்னைக்குத் தாலி கட்டு!

இந்திய நேரம் 7.30 முதல் 9 மணிவரை முகூர்த்த நேரம்! அப்ப இங்கே எங்களுக்கு மத்தியானம் 3 மணி!
கல்யாணத்துக்கு நேர்லே போக முடியலைதான். ஆனா இங்கிருந்தே வாழ்த்தலாமே! அதைத்தான் நான்
செஞ்சுக்கிட்டு இருக்கேன். அதுவும் எப்படி?

நம்ம வீட்டுலே இன்னைக்குச் சமையல் வடை, பாயாசத்தோட! ( கல்யாண விருந்தை 'மிஸ்'
செய்யறோமேன்னு இருக்கற தவிப்புக்கு ஒரு ஆறுதல்)

ராஜாவுக்கும், கோமதிக்கும் எங்கள் அன்பான திருமண வாழ்த்துக்கள்!!!

'இல்லறம் நல்லறமா அமையணும்'ன்னு ஆண்டவனை முழுமனசோடு வேண்டுகின்றோம்!

நல்லா இருங்க!!!!!



3 comments:

said...

இல்லறம் நல்லறமாக மட்டுமல்ல, "ஜில்"லறமாகவும் இருக்கவேண்டும் என்று நானும் வேண்டிக் கொள்கிறேன் துளசியக்கா...

said...

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.

துளசியக்கா,
ராஜா பேரை சொல்லி நல்லா.... சாப்பிடுங்கோ:)

said...

சுந்தர், அன்பு & மூர்த்தி,

நம்ம வாழ்த்துக்கள் எல்லாம் வீண் போகாது!

ராஜாவும் கோமதியும் எப்பவும் சிரிச்சுக்கிட்டே இருக்கணும்!