Sunday, January 23, 2005

ராத்து பாக்கி.... பாத்து பாக்கி....

எண்பதுகளின் ஆரம்பத்தில் சில( பல)ஆண்களின் கனவுக்கன்னியாக இருந்த பர்வீன் பாபி இறந்துவிட்டதாக
இன்றையச் செய்தி! அதுவும் எப்படி? யாருக்குமே தெரியாமல்!



மூன்று நாட்களாக வாசலில் கதவருகேக் கிடந்த தினசரிகளும், பால் பாக்கெட்டும் எப்படியோ
பிறரின்( குறைந்த பட்சம் ஒருவரின்)கவனத்தைக் கவர்ந்ததால், அவர் போலிஸுக்குத் தெரிவித்ததின்
பேரில், அவர் வீட்டில் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது!

அன்றைய இளவயது ஆண்களின் கனவு (ஜொள்ளு) நாயகிக்கு முடிவு நேர்ந்தவிதம் ஏனோ மனசுக்குக்
கஷ்டமாக இருக்கிறது!


அவர் பல படங்களில் நடித்திருந்தாலும், அவரது மறைவு பற்றி அறிந்தவுடன் நினைவுக்கு வந்தது
'ராத்து பாக்கி.....பாத்து பாக்கி... என்ற பாடல்தான்!'நமக்ஹலால்' என்னும் திரைப்படத்தில்
அமீதாப், சசி கபூர் இவர்களுடன் பர்வீன் பாபி நடித்தது.

கொஞ்ச நாட்களுக்கு முன்பு ஏதோ ஒரு சினிமாப் பத்திரிக்கையில் பர்வீன் பாபியின் புகைப் படத்தைக்
காண நேர்ந்தது! எப்படி இருந்த ஆள் எப்படி ஆயாச்சு என்று எண்ணியதும் நினைவுக்கு வந்து தொலைத்தது!

அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும்!

0 comments: