Saturday, January 29, 2005

தனியே தன்னந்தனியே!!

எந்த வித விளம்பரமோ ஆர்ப்பாட்டமோ, பெரிய நடிகர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களோ இல்லாமல்
ஒரு நல்ல திரைப்படம் தனியா, தன்னந்தனியா வந்திருக்கு! சினிமாவோட பேரே இதாங்க, தனியே தன்னந்தனியே!
தமிழ் சினிமா விமர்சனம் வரும் தளங்களில்கூட இந்தப் படம் வந்ததுக்கான அடையாளம், பேர், பேச்சு மூச்சு?
ஊஹூம். ஒண்ணுமில்லே! 'கப் சுப்!'



டைரக்டர் பேர் முனீர் அஹமது. திரைக்கதையும் இவர்தான்!

கதை என்னன்னா, ஆமா இப்ப வர்ற படங்களிலே கதை எங்கேன்னுதானே தேடிப்பாக்க வேண்டியிருக்கு!
பெரிய நடிகர்கள்ன்னு சொல்லிக்கிறவங்களும், அவுங்கவுங்க ஒரு தனி 'தீம்' வச்சிக்கிட்டு அதுலெயே
இப்படியும் அப்படியுமா மாத்தி மாத்தி படம் பண்ணிக்கிட்டு இருக்காங்க!

சரி, இந்தப்படத்துக்கு வருவோம். கதை ஒரு எளிமையான கிராமத்துக் காதல்(!) கதை. டிஷ்யூம் டிஷ்யூம்
சண்டையெல்லாம் கிடையாது.

கதாநாயகி நம்ம விஜயலட்சுமி. படம்பூரா அழகான அருமையான உடைகளிலே வராங்க! பாட்டு சீன்களிலே
மட்டும் மாடர்ன்(!)ட்ரெஸ். அதுவுமே நல்ல டீஸெண்ட்டாத்தான் இருக்கு! நல்ல அழகான பொண்ணு!

பசுமையான கிராமத்துக் காட்சிகள் எல்லாம் நல்லாவே இருக்கு!

வடிவேலு, வெடிவேலுவா தனியெ காமெடி ட்ராக் செய்றார். அதுவுமே பரவாயில்லை!
( நான் இப்படிச் சொல்லாம நல்ல வெடிச்சிரிப்புன்னு சொல்லியிருக்கணுமோ?)

கதாநாயகன் அஜய்குமார் அப்படின்னு போட்டாங்க. ஆரம்பத்துலேயே டைட்டில் ஒண்ணுமே இல்லாமப் போச்சா,
நான் கதாநாயகன் எண்ட்ரியானவுடனே இவர்தான் முனீர் அஹமதுன்னு நினைச்சுட்டேன்!

வளவளன்னு இழுக்காமக் கச்சிதமா ஒண்ணேமுக்கால் மணிநேரத்துலெ படம் முடிஞ்சிடுது! 'சிக்'குன்னு இருக்கு!

ஆனா வீணை கம்பெனிதான் அநியாயத்துக்கு 'ட்ரைய்லர்'களாப் போட்டு வச்சிடறாங்க.....

ரொம்ப நாளுக்குப் பிறகு அமைதியான ஒரு படம் பார்த்த உணர்வு.

5 comments:

said...

இப்படி ஒரு படம் கேள்விப்படவேயில்லையே... நன்றி துளசி, தகவல் தந்தமைக்காக.

said...

ஹலோ அக்கா... இதென்ன திரைப்படமா அல்லது தூக்கத்துல வந்த கனவா!? கேள்விப்பட்டமாதிரியே இல்ல....:)

said...

ரொம்ப ச்சின்ன பட்ஜெட் படம் போல இருக்கு. அதான் ரொம்ப விளம்பரமெ இல்லை!
( ஆனா இதுலே ஒரு யானையும் நடிக்குதே!)

அப்புறம் 'வீணை வீடியோ ரிலீஸ்'ன்னு தப்பாச் சொல்லிட்டேன். இது 'எஸ்.பி.எஸ் க்ளாசிக்'ரிலீஸ்.

ஒருவேளை பெரிய ஊர்களிலே வாங்கி, தியேட்டர்களிலே ரிலீஸ் செய்ய யாரும் கிடைக்காம வெறும் வீடியோ ரிலீஸ்
செஞ்சிருக்கலாமோ?

அன்பு,

முழிச்சுக்கிட்டேதான் இந்தப் படம் பார்த்தேன்!

'காதல் எங்கள் தேசீய கீதம்'ன்னு இன்னோரு படம் வந்திருக்கு. யாருக்காவது தெரியுமா? இதையும்
நான் பார்த்துட்டேன்!

வசந்தன், அன்பு
உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி!

said...

துளசி உங்க புண்ணியத்திலே கதை படிக்கக் கிடைக்கிறது.
ஆனா நிஜமா இப்படிக் கேள்விப் படாத பேரு,ஆக்டர் ஆச்சரியமா இருக்கு.
அன்பு எங்கேனு ஒரு படம் வந்ததே தெரியுமா?
சுகம் எங்கே?
இப்படி கேள்விக்குறிகளா படங்கள்.
அன்பு,சுகம் எல்லாம் கண்டுபிடிச்சாங்களோ? என்னவோ.

said...

வல்லி,

//அன்பு,சுகம் எல்லாம் கண்டுபிடிச்சாங்களோ?//

இன்னும் இல்லைன்னு நினைக்கிறேன் :-))))

சுரங்கத்தில் இருந்து வெளிவந்த பதிவுக்குப் பின்னூட்டம் வர்றது கொஞ்சம் !!!!!!!!