காலை லோட்டஸ் ப்ரேக்ஃபாஸ்டில் வடகறி !
பகல் ரெண்டுவரை எல்லாமே (புது ) வழக்கம்போல ! ஆனால் இன்றைய விசேஷம், நம்ம சாந்தா ஆயுர்வேத மருத்துவமனையில் மகளிர்தினக் கொண்டாட்டம் ! வாசலில் ரோஜாவுடன் வரவேற்பு. சிலபல ஆயுர்வேத மருந்து மாத்திரைகளை வச்சு விளக்கம் சொன்னதோடு, இலவச மாத்திரை மருந்து விநியோகமும் !
இதையெல்லாம் ச்சும்மா உக்கார்ந்துருக்கும் நேரத்தில் பார்த்து அனுபவிச்சதோடு, இலவசங்களைக் கைப்பற்றி வச்சுருந்தார் நம்மவர் !
இன்றைக்குத் தம்பி அனந்து, நம்மை சந்திக்க வர்றதாச் சொல்லியிருக்கார். ஒரு மாசமா இதோ அதோன்னு போனாலும் நேரங்கள் சரியா அமையலை. நம்மவருக்கும் இன்றைக்குப் பல் சிகிச்சைக்குப் போக வேணும். அவுங்களும் இதே நேரத்துக்குத்தான் வரச் சொல்லி இருக்காங்க.
கோபாலையும் சந்திக்கணுமுன்னாக் கொஞ்சம் சீக்கிரம் வாங்கன்னு அனந்துக்குச் சேதி அனுப்பினேன். இவர் நம்முடைய துளசிதளத்தின் வாசகர். ஆரம்பித்த நாள் முதல் இன்னும் தொடர்ந்து வந்துக்கிட்டுத்தான் இருக்கார். வலை தந்த உறவுகளின்படி இவர் நமக்குத்தம்பி. ஒடம்பிறந்தாளைப் பார்க்க வர்ற மாதிரிதான் எப்பவும் 'சீர்' கொண்டு வர்றார்.
கோபால் கிளம்பிப்போனதும்.... நாங்க வீட்டுக் கதைகளையெல்லாம் பேசிக்கிட்டு இருந்தோம். மகர் ஸி ஏ முடிச்சுட்டார். கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருந்தது.
பல்வேலை முடிச்சு நம்மவர் திரும்பினதும், கிளம்பி நம்ம காப்பிக்கடையில் ஒரு டீ குடிச்சுட்டு, நங்கைநல்லூருக்குப் போனோம்.
தினமும் ஷாப்பிங் லிஸ்ட் வந்துக்கிட்டே இருக்கு. முடிஞ்சவரை வாங்கிறனும். நம்ம காலத்துக்குப்பின் இந்தியப் பயணம் வருவாளா என்பதே சந்தேகம்தான். இல்லையோ ! இன்றைய ஷாப்பிங் ரெடிமேட் புடவை. நம்ம பேட்டை(தி நகரில்) கடைகளில் தேடிப்பார்த்தும் கிடைக்கலை. வலையில் தேடினால் இடம் காமிச்சது. போய்ச் சேர்ந்தோம். ஸ்ரீ சாய் ஸில்க்ஸ், 20, மூணாவது மெயின் ரோடு, தில்லைகங்கா நகர், நங்கநல்லூர், சென்னை.
இந்தியாவின் முதல் கடையாம், இப்படி ரெடிமேட் புடவை தயாரிப்பில். மடிஸார் உட்பட எல்லா வகைகளும்.
எக்கச்சக்கமா தைச்சு வச்சுருக்காங்க. நாம் அளவு சொன்னாலும், நாமே புடவை வாங்கிப்போய்க் கொடுத்தாலும் தைச்சே கொடுக்கறாங்க. ஆனால் இதுக்கெல்லாம் நமக்கு நேரம் இல்லை. மகளும் எப்பவாவதுதான் புடவை உடுத்திக்கறாள் , என் உதவி வேணும் என்பதால்.... ரெடிமேட் கிடைச்சால் தானே உடுத்திக்கலாம்தானே !
ஏறக்கொறைய நம்மவர் உயரம் இருக்கிறாள் என்பதால் நம்மவரையே அளவுக்காக நிறுத்தினேன்.ஹாஹா..... வாங்கியது ஒரே ஒரு புடவைதான். சரிவந்தால் அடுத்த பயணத்தில் ரெண்டொ மூணோ வாங்கிப்போகலாம்.
கடை ஓனர், வந்து பேசிப் பரிச்சயப்படுத்திக்கிட்டாங்க. அவுங்க உடுத்தி இருப்பதும் ரெடிமேட் ஸாரிதானாம். அழகா இருக்கு. உடம்பும் கொஞ்சம் ஒல்லி என்பதால் கச்சிதமாப் பொருந்தி இருக்குதான்.
அவுங்க கடை விளம்பரத்துக்காக யூ ட்யூபில் போட ஒரு வீடியோ க்ளிப் எடுத்துக்கவான்னு கேட்டுட்டு, நம் அனுமதியோடு ஒன்னு ஆச்சு. நம்மவர் ச்சும்மாப் பார்த்துக்கிட்டு நிக்கறாரேன்னு நம்ம செல்லிலும் அதை எடுக்கச் சொன்னேன்.
https://www.facebook.com/reel/781508421076771
கடையில் நல்ல கூட்டம். புடவை கட்டிக்கத்தெரியாத இப்பத்து சின்ன வயசுப் பெண்கள், இப்படியாவது புடவை உடுத்திக்கணும் னு நினைக்கறதுகூட ஒரு மகிழ்ச்சியான விஷயம்தான். புடவைக்கு இருக்கும் மவுசு எப்பவுமே போகாது ! அந்த தொழிலும் நசிக்காது என்பதே பெருசு இல்லையா !!!!
அடுத்த விஸிட் நம்ம ஆஞ்சு..... கோவிலுக்குள் நுழைய முடியாத அளவில் பயங்கரக்கூட்டம் & நெரிசல். கோவில் வாசலுக்கு எதிரில் தெருவுக்கு அந்தாண்டை நின்னு ஆஞ்சுவை தரிசனம் செஞ்சுக்கிட்டோம். படம் எடுக்கும்போது, பின்னாலிருந்து யாரோ..... படம் எடுக்கக்கூடாதுன்னார். அது சரி. ஆனால் கோவிலுக்குள்ளில் இல்லையோ, அந்த விதி ? தெருவிலுமா ?
அப்பப் பார்த்து மகளிடமிருந்து இன்னொரு லிஸ்ட். சலோ.... கைராசின்னு போய் சில உடைகள் ஆச்சு. ராத்திரியில் பாண்டிபஸார் நல்லா ஜிலுஜிலுன்னு இருக்கு ! எதிர்வாடையில் இருக்கும் கீதா கஃபேவில் நமக்கு டின்னர் !
ஹெல்த் & க்ளோவில் எனக்கொரு சின்ன ஷாப்பிங். ஸ்நேஹா.... ஓடிவந்து நலம் விசாரிச்சாங்க.
வாசலில் கொஞ்சம் பூ. நம்ம குழந்தைக்குத்தான் ! என் ஃபேவ் பூ இல்லையோ !!!

0 comments:
Post a Comment